<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,373,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 26 2026 03:35:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260926T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="26092026-CHN-02" position.sequence="02" ex-ref="26092026-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.97960263559774">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup880512_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேவதாசி முறையை ஆதரித்தும், அதற்கு புனிதம் கற்பித்தும் இந்தக் காலத்திலும் கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் கூட்டம் போட்டுள்ளார்கள். அந்த முறையை ஆதரித்தும் பேசி இருக்கிறார்கள்  என்றால்  இன்னும் எவ்வளவு அடிமைத்தனமான மனிதர்கள் உலவுகிறார்கள் என்று வேதனைப்படவே தோன்றுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">100 ஆண்டுகள் இவர்கள் பின்  தங்கி இருக்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டை நகர்த்த விரும்புகிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">1930 ஆம் ஆண்டு தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டத்தை டாக்டர் முத்துலட்சுமி உருவாக்கி அது சட்டமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன் அனைத்துத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தந்தை பெரியாருக்கும் அனுப்பி வைத்து, கருத்துக் கேட்கப்பட்டது. ‘இப்படி கருத்துக் கேட்பதே தவறு, உடனடியாக நிறைவேற்றுங்கள்’ என்று எழுதியவர் பெரியார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“கோயில்களில் பெண்களைப் பொட்டு கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்ய வேணுமாய் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.  இதற்காக சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி அவர்களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில்  விபசாரித்தனத்திற்குச்  செல்வாக்கும்  மதிப்பும்,  சமய சமூக முக்கிய ஸ்தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு  தள்ளமுடியாத  கெடுதியாய்  இந்த நாட்டில்  நிலைபெற்றும்விட்டது. ஒரு நாட்டில்  நாகரிகமுள்ள அரசாங்கமாகவாவது  அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ கோரும் அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த  இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்து வர ஒருகண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்” என்று ‘குடிஅரசு’ (23.3.1930) இதழில் எழுதினார் பெரியார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் உருவாக்கிய சட்டத்தை ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார். இச்சட்டம் குறித்த தனது கருத்தை சென்னை சட்டமன்றச் செயலாளருக்கு எழுதி அதையும் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார் பெரியார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘’டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமூக  சுயமரியாதையை  உத்தேசித்து  எவ்வளவோ  காலத்துக்கு  முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும்.  எனவே அம்மசோதாவை நான்  பூர்ணமாக  ஆதரிக்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டார் பெரியார். (குடிஅரசு 30.03. 1930) இச்சட்டம் நிறைவேறாமல் ஒத்தி வைக்கப்பட்டதையும் பெரியார் அப்போதே கண்டித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திராவிட இயக்கத்தின் இரும்புப் பெண்மணியாகப் போற்றப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை, டாக்டர் முத்துலட்சுமி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததே பெரியார் அவர்கள்தான்.  தமது சொந்தக் கொடுமைகளையும் தேவதாசி இனப் பெண்கள் எதிர்கொள்ளும் சித்ரவதைகளையும் வைத்து, ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற நாவலை 1936இல் எழுதி  
இராமாமிர்தம் வெளியிட்டார். இராமாமிர்தம் – டாக்டர் முத்துலட்சுமி ஆகியோர்  சந்திப்பில் உருவானதுதான் ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்.’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆரியம் சட்டமன்றத்துக்குள் ஆடிக் கொண்டு இருந்த காலத்தில் மருத்துவர் முத்துலட்சுமிக்கு வெளியில் பக்கபலமாக இருந்தது  பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கமும்தான். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பனகல் அரசர், முத்துலட்சுமிக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும் நோய்களைப் பற்றிப் படிக்க லண்டனுக்கு அனுப்பி வைத்தார். படிப்பு முடிந்து சென்னை வந்த இவரைச் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக்கினார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக்காக ‘திராவிடன்’ 
இதழ் சார்பில் வெளியான மலரில் ‘தேவதாசி ஒழிப்பு மசோதா’ தொடர்பாக நீண்ட கட்டுரை எழுதினார் டாக்டர் முத்துலட்சுமி. ‘தேசத்தில் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டு வருகிறது’ என்று அதில் குறிப்பிட்டார். தமக்குத் தரப்பட்ட வரவேற்பில் ஈரோடு உள்ளாட்சி மன்ற வரவேற்பை மறக்க முடியாது என்று குறிப்பிட்டார். ஈரோட்டில் 1930ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் டாக்டர் முத்துலட்சுமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘சங்கீதத்தாலும் நாட்டியத்தாலும் ஏற்படும் தீமை’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரையை ‘பகுத்தறிவு’ இதழ் வெளியிட்டுள்ளது. சமூகச் சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக இராஜாஜி எப்படி எல்லாம் செயல்பட்டார் என்பதைத் தமது வரலாற்றில் முத்துலட்சுமி எழுதி உள்ளார். ஓமந்தூரார் அமைச்சரவையில் சுப்பராயன் உள்துறை அமைச்சராக இருந்தபோது (1947) தான் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">டாக்டர் முத்துலட்சுமியைத் ‘தேவதாசிகுலம்’ என்று ‘சுதேசமித்திரன்’ நாளேடு எழுதியபோது, ‘சுதேசமித்திரனின் போக்கிரித்தனம்’ என்று கண்டித்தவர் பெரியார். “யார் யாருக்கு விபச்சாரத்தனம் செய்யப் பாத்தியதை உண்டு, சட்டம் உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதுதான் தேசிய பத்திரிக்கைகளின் கடமை போலும்’’ என்று பாய்ந்து முத்துலட்சுமியைக் காத்தவர் பெரியார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இவை எல்லாம் நூறு ஆண்டுக்கு முந்தைய கதை என்று கடந்து விட முடியாது. ‘அது அந்தக் காலம்’ என்று இருந்து விட முடியாது. இப்போதும் இதனைப் புதுப்பிக்க ஒரு கூட்டம் அலைகிறது. புனிதப்படுத்தத் துடிக்கிறது. படுகுழிக்கு பல்லாக்குத் தூக்குகிறது. ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் பழமைவாதம் அரிதாரம் பூசி வருகிறது.  திராவிடச் சுயமரியாதை இயக்கத்தின் பணி இன்றும், என்றும் தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>