<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 26 2026 03:50:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260926T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="26092026-TRY-05" position.sequence="05" ex-ref="26092026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதர்! திராவிட இயக்கம் என்றால் ‘எஃகுக் கோட்டை!’ </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">செயின்ட் ஜார்ஜ் கோட்டை வேண்டுமானால் மற்றவர்களுக்குச் சென்றிருக்கலாம்! எஃகுக் கோட்டையான</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="97">திராவிட கொள்கைக் கோட்டையை யாராலும் அசைக்க முடியாது! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் – மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னின்று நடத்திய   ‘நெருப்பாற்றில் நீந்திய காலம்’ கருத்தரங்கில் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுச்சியுரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, செப். 26 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில், “நெருப்­பாற்­றில் நீந்­திய காலம்’’  எனும் தலைப்­பில் மாவட்­டச் செய­லா­ள­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. நிகழ்ச்சி ஏற்­பாட்­டில் நடை­பெற்ற மாபெ­ரும் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு எழுச்­சி­யு­ரை­யாற்­றிய திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள், ‘‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை வேண்­டு­மா­னால், வேறு யாரி­ட­மா­வது போய்ச் சேர்ந்­தி­ருக்­க­லாம்; ஆனால் திரா­விட இயக்க கொள்­கைக் கோட்­டையை யாரா­லும்  அசைத்­துக் கூடப் பார்க்க முடி­யாது!’’ என உறு­தி­ப­டக் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில், சென்னை – எழும்­பூர் தெற்­குப் பகு­தி­யில் உள்ள பெரி­யார் திட­லில், 18.9.2026 வெள்­ளிக்­கி­ழமை மாலை மாபெரும் கருத்தரங்கம், சென்னை கிழக்கு மாவட்­டச் செய­லா­ளர் பி.கே.சேகர்­பாபு முன்­னி­லை­யில், எழும்­பூர் தெற்­குப் பகு­திச் செய­லா­ளர் வி.சுதா­கர் தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“நெருப்­பாற்­றில் நீந்­திய காலம்” எனும் தலைப்­பில் மிசாக் காலக் கொடு­மை­களை விளக்­கும் இம்­மா­பெ­ரும் கருத்­த­ரங்­கில், திரா­வி­டர் கழ­கத் தலை­வர் ஆசி­ரி­யர் கி. வீர­மணி, கழ­க  துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் திருச்சி என். சிவா எம்.பி., தமிழ் தேசிய விடு­தலை இயக்­கப் பொதுச்­செ­ய­லா­ளர் தோழர் தியாகு ஆகி­யோர் சிறப்­பு­ரை­ யாற்­றி­னர். இந்­நி­கழ்ச்­சி­யில், திரா­வி­டர் கழ­கத் தலை­வர் ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தந்தை பெரி­யார் திட­லிலே நடை­பெ­றும் இந்­தச் சிறப்­பான நிகழ்ச்­சிக்­கான ஏற்­பா­டு­களை மிகச் சிறப்­பா­கச் செய்­தி­ருக்­கி­ற­வர் சென்னை கிழக்கு மாவட்­ட­ஆற்­றல்­மிகு செய­லா­ளர் சேகர்­பாபு அவர்­கள். அவர் எதைச் செய்­தா­லும் விரை­வா­க­வும் வேக­மா­க­வும் செய்­வார். அவ­ருக்கு உறு­து­ணை­யாக இந்த மேடை­யிலே இருப்­ப­வர்­கள் பலர் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சிறை பறவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு சில­வற்றை எழுச்சி பெறச் சொன்­ன­வர் அரு­மைத் தோழர் தியாகு அவர்­கள். அவர் ஒரு ‘சிறைப் பறவை’. பற­வை­கூட கொஞ்­சம் கூட்­டுக்­கு ­வெ­ளியே போகும். ஆனால், இந்­தப் பறவை கூட்­டுக்­குள் இருந்­த­வர் அல்ல, கூண்­டுக்­குள் இருந்­த­வர். கூண்டு வேறு, கூடு வேறு. தானே கட்­டிக்­கொண்டு சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­குப் பெயர் கூடு; ஆனால் கூண்டு என்­பது அடைக்­கப்­ப­டு­வது. ஆனால் அதெல்­லாம் சாதா­ர­ணம் என்று, 15 ஆண்­டு­கள்­சி­றை­யில் இருந்­த­வர் தியாகு அவர்­கள்! அவர் பெய­ரி­லேயே ‘தியா­கம்’ இருக்­கி­றது; அப்­ப­டிப்­பட்­ட­வர் அரு­மை­யான உரை­யாற்­றி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­போல, ‘மிசா’­வில், ஒரு எளிய மாண­வ­னாக, இளை­ஞ­னா­கத்­தான் நான்­க­லந்­து­கொண்­டேன். ஆனால், இவ்­வ­ளவு அடக்­கு­மு­றைக்­குப் பிற­கும் இந்த இயக்­கம் அழிந்­து­வி­ட­வில்லை; அகில இந்­திய அள­விலே ஒரு பெயர் அறி­யப்­பட்­டி­ருக்­கி­றது என்று சொன்­னால், அது­தான் திருச்சி சிவா என்று சொல்­லும்’­மிசா’ என்­ப­தா­கும். அது­வும் இரண்­டெ­ழுத்­து­தான், இது­வும் இரண்­டெ­ழுத்­து­தான். ‘சிவா’ என்­ப­தும் அவ்­வ­ள­வு­தான், ‘மிசா’ என்­ப­தும் அவ்­வ­ள­வு­தான். ஆனால் அதற்­குப் பிறகு அவர் வளர்ந்­தி­ருக்­கி­றார்; மிசா­வுக்­குப் பிறகு தி.மு.க. வளர்ந்­த­தைப் போல, திரா­விட இயக்­கம் வளர்ந்­த­தைப் போல. எனவே,மேடை­யில் இருக்­கி­ற­அப்­ப­டிப்­பட்ட அனைத்து அரு­மைத் தோழர்­க­ளுக்­கும் என்­னு­டைய உளப்­பூர்­வ­மான வணக்­கம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லோ­ரும் பேசிக்­கொண்­டி­ருக்­கி­ற­போது விந்­தை­யோடு எனக்­குச் சில உணர்­வு­க­ளும் நினை­வு­க­ளும் வந்­தன. ஏனென்­றால் தாய்­மார்­கள், சகோ­த­ரி­கள், 50 வய­துக்­குக் குறை­வாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள், அதைத் தாண்­டி­ய­வர்­ கள் பலர் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்­கெல்­லாம் இது விசித்­தி­ர­மாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">துண்­டுச்­சீட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1976 ஜன­வரி 30–ஆம் தேதி பேசி­விட்டு, 31 ஆம் தேதி இங்கே வரு­கி­றோம்.திண்­டி­வ­னத்­திலே திரா­வி­டர் கழ­கப் பொதுக்­கூட்­டம். அன்னை மணி­யம்­மை­யார் அவர்­க­ளும் நானும், திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யின் சாத­னை­கள், கலை­ஞ­ரின் செயல்­கள் எல்­லாம் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றோம். அது முடிந்த உடனே எங்­க­ளுக்கு ஒரு துண்­டுச் சீட்டு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதில், “சென்­னை’­வி­டு­தலை’ அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து தொலை­பே­சி­யில் உங்­க­ளுக்கு சொல்­லச் சொல்லி ஒரு தக­வல் வந்­தி­ருக்­கி­றது. அம்மா அவர்­க­ளுக்­கும் உங்­க­ளுக்­கும் இதைப் பகிர்ந்­து­கொள்­கி­றோம். தி.மு.க. ஆட்சி மாலை 6 மணிக்­கெல்­லாம் கலைக்­கப்­பட்­டு­விட்­ட­து”­என்று அந்­தச் சீட்­டில்­தோ­ழர்­கள் எழு­திக் கொடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மிசா­வுக்கு முன் கலை­ஞர் அவர்­க­ளு­டைய கடைசி உரை­யாக, இங்கே பக்­கத்­தில் இருக்­கிற செயிண்ட் பீட்ஸ் பள்­ளிக்­கூ­டத்­தில்­தான் உரை­யாற்­று­கி­றார். அதில் அழ­கா­கச் சொன்­னார், “என்­னு­டைய ஆட்சி கலைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. வீட்­டிற்­குப் போனால் எந்­தப் பாது­கா­வ­ல­ரும் மற்­ற­வர்­க­ளும் இல்லை”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்னை மணி­யம்­மை­யார் அவர்­கள், “எந்­தக் கார­ணத்­தைக் கொண்­டும் யாரும் பதற்­றப்­ப­டா­தீர்­கள்; இதை எதிர்­கொள்­வோம்” என்று அறி­வுரை சொல்­லி­விட்­டுக் கூட்­டத்தை முடித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அன்­றைய கடைசி உணவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூட்­டம் முடித்து இரவு வந்­தோம். நடுச்­சா­லை­யில் உண­வ­ருந்­து­வது எங்­க­ளுக்கு வழக்­க­மா­னது. வேனை நிறுத்­தி­விட்டு, அன்னை மணி­யம்­மை­யார் அவர்­கள் உணவு பரி­மா­றி­னார்­கள். அது­தான் அன்­றைய கடைசி உணவு. இட்லி சாப்­பிட்­டு­விட்டு இங்கே சென்­னைக்கு வந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘திட­லில்’ அன்­னை­யார் அவர்­களை விட்­டு­விட்டு நான் வீட்­டிற்­குப் போவது வழக்­கம்.நாங்­கள் எதிர்­பா­ராத ஒரு காட்சி அங்கே காத்­தி­ருந்­தது. என்ன காட்சி என்­றால், இன்­றைக்கு எப்­ப­டித் திரா­விட முன்­னேற்­றக் கழ­கக் கூட்­டம் என்று சொன்ன உடனே கொடி­கள் மிகப்­பெ­ரிய அள­விற்கு அணி­வ­குத்­தி­ருக்­கி­றதோ, அது­போல கொடி­க­ளுக்­குப் பதி­லாக அவ்­வ­ள­வும் காக்­கிச் சட்­டை­யி­னர், உள்­துறை அதி­கா­ரி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காந்தி இர்­வின் சாலை பாலத்­தி­லி­ருந்து இந்­தத் திடல் முழு­வ­துமே உள்ளேநுழைந்­தால் ஏதோ தேடப்­ப­டக்­கூ­டிய கைதி­யைப் பிடிப்­ப­தற்கு ஆயத்­த­மாக இருப்­பது மாதிரி துப்­பாக்கி, லத்தி எல்­லாம் வரி­சை­யாக நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன. இன்­றைக்­குத் திட­லில் இவ்­வ­ளவு வச­தி­யான அமைப்­பு­கள் உள்­ளன. அன்றுஅம்மா அவர்­க­ளை­அ­வர்­க­ளு­டைய அறை­யில் விட்­டு­விட்டு, “அம்மா, நிலை­மை­யைப் பார்த்­தீர்­களா? வரு­கி­றோம்” என்று சொன்­னோம். அது­வ­ரை­யில் அங்கேகாத்­தி­ருந்­தார்­கள் காவல் அதி­கா­ரி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘விடு­தலை’ ஆசி­ரி­யர் என்ற முறை­யிலே எனக்­குப் புரி­யும். அந்­தக்­கட்­ட­டத்­தில் வந்து உள்ளே உட்­கார்ந்த உடனே, ஒரு தலைமை அதி­காரி வந்து ஆங்­கி­லத்­திலே சொன்­னார். “We are come for the unpleasant job” என்று சொன்­னார். அதா­வது, “நாங்­கள் விரும்­பத்­த­காத ஒரு பணி­யைச் செய்­கி­றோம்” என்­றார்­கள். பழைய ஆட்­சி­யில் யார் என்று தெரி­யாத புதிய அதி­கா­ரி­கள் ஆறு பேர் அங்கே சுற்­றித் திரிந்­தார்­கள். பெரி­யார் திட­லின் சுற்­றுச் சுவர் வரை இருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நான் சொல்­வதை விட நீதி­ப­தியே அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­றைக்கு இரவு 2 மணிக்கு உடனே எங்­க­ளைக் கைது செய்து போலீஸ் கமி­ஷ­னர் அலு­வ­ல­கத்­திற்கு அனுப்­பி­னார்­கள். அதற்­குப் பிறகு அங்கே என்ன நடந்­தது, சிறைச்­சா­லை ­யில் எப்­படி நடந்­தது என்­ப­தை­யெல்­லாம் நாங்­கள் சொல்­வதை விட, ஒரு அறிக்­கையே தலை­சி­றந்த நீதி­ப­தி­யி ­னால் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. அது­தான் ‘விசா­ர­ணைக் கமி­ஷன் அறிக்கை’. அதா­வது, உச்­ச­நீ­தி­மன்ற ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யான ஜஸ்­டிஸ் ஷா என்­ப­வர் கொடுத்த அறிக்கை பொது­வா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், எங்­கே­யும் இல்­லாத ஒரு கொடுமை சென்­னைச் சிறைச்­சா­லை­ யிலே அரங்­கேற்­றப்­பட்­டது. எல்­லோ­ரை­யும் மிரு­கத்­த­ன­மாக அடித்­தார்­கள், கொடு­மை­யாக நடத்­தி­னார்­கள், கீழ்த்­த­ர­மாக நடத்­தி­னார்­கள், வன்­மத்­தோடு நடத்­தி­னார்­கள். ஒரு ஆண்­டுக்­குப் பிற­கு­தான் வெளிச்­சத்­தைப் பார்த்­தோம், வெளி உல­கத்­தைப் பார்த்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­றைக்கு நாங்­கள் நினைக்­க ­வில்லை, 50 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்­படி ஒரு கூட்­டம் வரும் என்­றும், அதற்கு முன்­னாலே போய் பேசும் நிலை வரும் என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உண்­மையை கூறும் கூட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்மை என்­ன­வென்றே தெரி­யா­மல், பதவி கிடைத்­து­விட்­டது என்ற கார­ணத்­தி­னாலே தலை­தூக்கி ஆடக்­கூ­டிய சில­ருக்­குப் புத்தி கற்­பிக்­கக்­கூ­டிய அள­விற்கு உண்­மை­க­ளைத் தோலு­ரித்­துக் காட்­டு­கின்ற கூட்­ட­மாக இந்­தக் கூட்­டம் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் கேட்­டால், 50 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் நடந்­த­தைப் பற்­றிப் பேசு­ப­வர்­க­ளுக்கு... எங்­க­ளுக்­கா­வ­து­வ­ய­தி­ருக்­கி­றது; பேசக்­கூ­டிய சிலர் அப்­போது இரண்டு வய­துக் குழந்­தை­யாக இருந்­தி­ருப்­பார்­களா என்று தெரி­யாது. வர­லாற்றை வய­தா­ன­வர்­கள்­தான் பேச வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை; இரண்டு வய­துக் குழந்­தை­யாக இருந்­த­வர் கூட இன்­றைக்­குப் பேச­லாம், அதில் தவ­றும் இல்லை. ஆனால் பக்­கு­வ­மா­கப் பேச வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தி.மு.க. மெழுகு அல்ல இரும்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதோ தாய்­மார்­கள் பாதி­ய­ள­விற்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள். பாரா­ளு­மன்­றத்­தில் இன்­னும் உங்­க­ளுக்கு மூன்­றில் ஒரு பங்கு கிடைக்­க­வில்லை; ஆனால் இங்­கு­தான் 50% மேல் நீங்­கள் ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கி­றீர்­கள். அப்­ப­டிப்­பட்ட தாய்­மார்­க­ளா­கிய உங்­க­ளுக்கு ஒன்­றைச் சொல்ல வேண்­டும் என்று சொன்­னால், இந்த இயக்­கம் மெழுகு அல்ல. மெழுகு என்­றால் உரு­கும்; ஆனால் இது இரும்பு! இரும்­பில் நெருப்­பைப் போட்­டால் பக்­கு­வ­மா­கி­றது என்று அர்த்­தம். ஓங்­கிச் சம்­மட்­டி­யில் அடித்­தால் இன்­னும் அதற்­கு­ரிய கருவி தயா­ரா­கி­றது என்று அர்த்­தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எத்­தனை சம்­மட்டி அடி­கள் வந்­தா­லும் தாங்­க­லாம். ஆனால் பொய்­யு­ரை­கள், அது­வும் திட்­ட­மிட்ட பொய்­யு­ரை­கள், உள்­நோக்­கத்­தோடு சொல்­லப்­ப­டும் பொய்­யு­ரை­கள் என்­றால் அதை எவ­ரும் ஏற்­கக்­கூ­டாது. எனக்­கெல்­லாம் ரொம்ப வருத்­தம் என்­ன­வென்­றால், பேசு­வ­தில் எனக்கு மகிழ்ச்­சி­யில்லை. ஏனென்­றால் தகு­தி­யுள்­ள­வர்­க­ளுக்­குப் பதில் சொல்­ல­லாம்; தகு­தி­யில்­லா­த­வர்­க­ளுக்கு எல்­லாம் பதில் சொல்­லக்­கூ­டிய அள­விற்கு இந்த ஜன­நா­ய­கம் கொண்­டு­வந்­து­விட்­டதே என்று நினைக்­கும்­போது வெட்­கப்­ப­டு­கி­றோம், வேதனை அடை­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கரும்பு மனி­த­ரா­க­வும் இரும்பு மனி­த­ரா­க­வும் இருப்­பார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய இன்­றைய ஒப்­பற்­றத் தலை­வர் இரும்பு மனி­த­ரா­க­வும் இருப்­பார், கரும்பு மனி­த­ரா­க­வும் இருப்­பார். கரும்­புக்­குத் தேவை­யா­ன­வர்­க­ளுக்­குக் கரும்­பாக, இரும்­புக்­குத் தேவை­யா­ன­வர்­க­ளுக்கு இரும்­பாக இருப்­பார். இவ­ருக்­குப் பெயர்­தான் ஸ்டாலின், மறந்­து­வி­டா­தீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­பேர்ப்­பட்ட ஒரு அற்­பு­த­மான சூழ்­நி­லை­யிலே, இன்­றைக்கு அவ­ரைப் பார்த்து ஏதோ ஊதித் தள்ளி விடு­வ­தைப் போலப் பேசு­கி­றீர்­கள். அவ­ரைப் பாது­காத்­துக் கையைப் பிடித்­துக் கொட்­ட­டிச் சிறை­யிலே அடித்­த­வு­டனே, ரத்­தம் ஒழுக ஒழுக... இரவு 1 மணி அல்­லது 2 மணி இருக்­கும், மணி தெரி­யாது. கார­ணம் எங்­க­ளுக்கு எது­வும் தெரி­யாது. மங்­கள் விளக்கு; படுத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். ஒரு சிறிய 8 அடி கொட்­டடி, 6பேருக்கு மேலே வரி­சை­யாக இருக்­கி­றோம். 8 பேருக்­கும் சேர்ந்து ஒரு மண்­பானை.தாய்­மார்­களே, நினைத்­துப் பாருங்­கள்! இதை­யெல்­லாம் சந்­தித்­தோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மனி­த­னாச்சே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு ஏதோ பெரிய ஆடம்­ப­ர­மான வச­தி­கள் இருக்­கி­றது என்று நினைக்­கா­தீர்­கள். அங்கே 8 பேர் இருக்­கும்­போது... வெட்­கத்தை விட்­டுச் சொல்­லு­கி­றேன், அறி­யா­த­வர்­கள் எல்­லாம் ஏதோ விலை போன­வர்­கள் போல பேசு­கி­றீர்­களே, அவர்­க­ளுக்கு நாங்­கள் சொல்­லு­கி­றோம். இரண்டு நாளைக்கு எங்­க­ளுக்­குப் பழக்­கமே இல்லை. கார­ணம் என்ன தெரி­யுமா? இன்­னொ­ரு­வ­ருக்கு முன்­னால் நாம எப்­ப­டிச் சிறு­நீர் கழிக்க முடி­யும்? மிரு­க­மாக இருந்­தால் கழிக்­க­லாம், மனி­த­னாச்சே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேறு வழி­யில்­லா­மல் அந்­தப் பானை­யில் போய் இருக்க வேண்­டும். 6 பேரில் 5 பேர் நாங்­கள் வெளிப்­பக்­க­மா­கத் திரும்­பிக்­கொள்­வோம். அறைக்­குள்ளே 24 மணி நேர­மும் பூட்டி வைத்­தி­ருப்­பார்­கள், வெளியே விட­மாட்­டார் ­கள். அப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ்­நி­லை­யிலே, உள்ளே வந்து அடித்­துப் போட்டு, ஒரு­மைப்­ப­டுத்தி, கொச்­சை­யான வார்த்­தை­க­ளால் திட்­டி­னார்­கள். அதை­யெல்­லாம் இந்த அவை­யிலே சொல்ல நான் விரும்­ப­வில்லை. இஸ்­மா­யில் கமி­ஷன் அறிக்கை அதைப் பதிவு செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு நாள், அடித்த களைப்­பி­னாலே நாங்­கள் இயல்­பா­கத் தூங்­கி­விட்­டோம். தூங்கி விழித்­த­வு­டனே வரி­சை­யாக இருக்­கி­றோம், பிடித்து உள்ளே தள்­ளி­ய­வு­டனே, கால் இடறி என் மேலே­தான் வந்து விழுந்­தார்.அவர் ஓர் இளை­ஞர். அன்­றைக்கு 22 வயது இருக்­கும். கொஞ்­சம் அதிர்ந்­து­போய், “யார்?” என்று கேட்­டேன். “நான் ஸ்டாலின், ஸ்டாலின்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நாங்­கள் மனி­த­நே­யம் உள்­ள­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2–3 மாதங்­க­ளுக்கு முன்­னால்­தான் திரு­ம­ணம் செய்­து­கொண்ட ஓர் இளை­ஞர். அர­சி­ய­லில்­நா­மெல்­லாம் கொஞ்­சம் அனு­ப­வம் உள்­ள­வர்­கள்; புதிய இளை­ஞர் தயா­ரா­கி­றாரே, இவர் மன­நிலை எப்­படி இருக்­கும்? இது­மா­திரி ஒரு கசப்­பான அனு­ப­வத்­தைப் பார்க்­கி­றாரே என்று நினைத்த நேரத்­திலே, அப்­போது நான் மனம் சங்­க­டப்­பட்­டோம். ஏனென்­றால் நாங்­கள் மனி­த­நே­யம் உள்­ள­வர்­கள், சுய­ம­ரி­யா­தைக்­கா­ரர்­கள். அடுத்­த­வ­ரு­டைய துன்­பத்­திலே இன்­பம் காணக்­கூ­டி­ய­வர்­கள் அல்ல; We are not sadists!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“தம்பி, தைரி­ய­மாக இருங்­கள்” என்று சொன்­னேன். “இது­தான் உங்­க­ளுக்கு முதல் அனு­ப­வம்” என்று கையைப் பிடித்­தேன். கையைப் பிடித்து அவ­ரைக் காப்­பாற்­றக்­கூ­டிய அள­விற்­குத் தழு­வித் துடைத்து விட்­டோம். அவர் மாம­னி­தர் என்­ப­தற்கு அடை­யா­ளம், அன்­றும், இன்­றும், என்­றும் அந்த நன்­றியை அவர் மறப்­ப­தில்லை. கொள்கை ரீதி­யாக எங்­க­ளுக்கு ரத்த பாசத்தை விடக் கொள்­கைப் பாசம் கெட்­டி­யா­னது, மாற்ற முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­றைக்கு அவ­ருக்கு வயது 20 – 22; இன்­றைக்கு அவர் 72–ஐத் தாண்டி இருக்­கக்­கூ­டிய அனு­ப­வம் உள்­ள­வர். அரை நூற்­றாண்டு பொது­வாழ்க்கை அனு­ப­வம் உள்­ள­வர். சாதா­ர­ணம் அல்ல, இடை­யில் எத்­த­னையோ போராட்­டங்­களை எல்­லாம் சந்­தித்­தி­ருக்­கி­றார். அப்­ப­டிப்­பட்­ட­வர் மிசா­வுக்கே போக­வில்லை என்­றால், சினி­மா­வில் வேண்­டு­மா­னால் ‘டூப்’ உண்டு; சிறை­யில் ‘டூப்’ எல்­லாம் கிடை­யாது! ஒரு­வேளை இனி­மேல் ஆட்­சி­யில் டூப் வந்­தா­லும் வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் உயி­ரோடு வந்து அவர் கையைப் பிடித்­துக் காப்­பாற்­றி­ய­வன், மிசா­வில் போன­வன் இன்­றைக்கு வந்­தி­ருக்­கி­றேனே, இதை­வி­டப் பெரிய சாட்சி வேண்­டுமா உங்­க­ளுக்கு? எந்த இடத்­தில் கைது செய்­தார்­களோ அந்த இடத்­தில் 50 வரு­ஷத்­திற்­குப் பிறகு உங்­க­ளுக்கு முன்­னால் இத்­தனை தக­வல்­க­ளைச் சொல்­லு­கி­றோம் என்­றால், நீங்­கள் சும்மா இந்த ஜென்­சி­யை­யெல்­லாம் வைத்­துக்­கொண்டு ஆட்­டா­தீர்­கள்.வர­லாற்றை சொல்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">இந்­தப் புளுகு கந்த புரா­ணத்­தி­லும் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பி.ஜே.பி.க்கும் உங்­க­ளுக்­கும் மிக­வும் தொடர்பு இருந்­தா­லும் கூட ஒரு வேறு­பாடு இருக்­கி­றது. இந்த புளுகு மூட்­டை­கள் இருக்­கி­றார்­களே, கோய­பல்­சின் குரு­நா­தர்­க­ளுக்­குச் சொல்­கி­றோம். பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் எல்­லாம் புரா­ணத்தை வர­லா­றாக்­கு­கி­றார்­கள். ஆனால் இப்­போது வந்­தி­ருக்­கும் புதி­ய­வர்­கள், ‘மாற்­றம், மாற்­றம்’ என்று சொல்லி நாட்­டிற்கு ஏமாற்­றத்­தைக் கொடுத்­தி­ருப்­ப­வர்­கள் என்ன செய்­தி­ருக்­கி­றார்­கள் தெரி­யுமா? வர­லாற்­றையே புரா­ண­மாக்­கு­கி­றார்­கள்! புரா­ணத்தை வர­லா­றாக்­கு­வது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் வேலை. ஆனால் இங்கே வர­லாற்­றையே புரா­ண­மாக்­கு­கி­றார்­கள்.“இந்­தப் புளுகு கந்­தப் புரா­ணத்­தி­லும் இல்லை” என்று பழ­மொழி உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விசா­ர­ணைக் கமி­ஷன் அறிக்கை என்ற புத்­த­கத்­தையே இல்­லா­மல் ஆக்­கி­விட்­டார்­கள். நெருக்­கடி காலத்­தைப் பற்­றித் தெரிந்து கொள்ள வேண்­டு­மா­னால், ‘ஷா கமி­ஷன்’ அறிக்கை. அகில இந்­தி­யா­வி­லே­நெ­ருக்­கடி காலத்­தில் என்ன நடந்­தது என்று சொல்­லும் புத்­த­கத்தை, வடக்கே அன்­றைய காங்­கி­ரஸ் அரசு நூல­கங்­க­ளுக்­குக் கூடப் போகக்­கூ­டாது என்று சொல்லி அத்­த­னை­யும் எடுத்­து­விட்­டது. பிறகு நம்­மு­டைய இரா. செழி­யன் அவர்­க­ளின் முயற்­சி­யி­னாலே இந்த ஒரே ஒரு பிரதி கிடைத்­தது. அன்­றைக்கே நாங்­கள் வாங்­கிப் பத்­தி­ர­மாக வைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வர­லாற்றை மாற்ற முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் எதை வேண்­டு­மா­னா­லும் பேச­லாம், பேச்­சு­ரிமை உண்டு. பதவி நாற்­கா­லி­யில் உட்­கார்ந்­து­விட்­டால் எல்­லோ­ரும் தலை­யாட்­டு­வார்­கள் என்று நினைக்­கி­றீர்­கள். கொஞ்ச காலத்­திற்கு அப்­பு­றம் யாரும் துணைக்கு நிற்க   மாட்­டார்­கள். பத­வி­கள் வரும், போகும். ஆனால் மனி­தர்­கள் என்­ப­வர்­கள் நன்­றி­யால், உண்­மை­யால் அடக்­கப்­பட வேண்­டும். வர­லாற்றை ஒரு­போ­தும் உங்­க­ளால் திரி­பு­வா­தம் செய்­து­விட 
முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீதி­பதி இஸ்­மா­யில் அவர்­கள், ஆரம்­பத்­தி­லேயே வழக்­க­றி­ஞர் ஆவ­தற்கு முன்­னால் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சார்ந்த கதர்ச் சட்­டை­வாதி; வேறு எந்­தக் கட்­சி­யை­யும் சார்ந்­த­வர் அல்ல. அவர் தெளி­வா­கச் சொன்­னார்: “கூறப்­ப­டும் குற்­றச்­சாட்­டு­கள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை கமி­ஷன் அறிக்­கை­யும், அதன் மீது அர­சி­னு­டைய ஆணைக்கு...”என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதி­காரி ஒரு­வர் சொல்­கி­றார்: “இங்­கேயே முடிந்­தது. நீங்­கள் யாரும் வெளியே போக வேண்­டும் என்று நினைக்­கா­தீர்­கள்; வெளி­யிலே போக முடி­யாது” என்று.எங்­க­ளு­டைய குடும்ப உறுப்­பி­னர்­கள் யாரும் வர முடி­யாது; எங்கே இருக்­கி­றோம் என்று சொல்ல முடி­யாது; மிசா­வில் இருக்­கி­றோம் என்­பதே தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘வாய்ப்­பு­ளித்­ததோ, மாங்­காய் புளித்­ததோ’ என்று பேசக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு உதா­ர­ணத்­திற்கு சொல்ல வேண்­டும் என்­றால்,கைதா­கி­ஒரு மாதம், பிப்­ர­வரி 3 அண்ணா அவர்­க­ளு­டைய நினைவு நாள். ஜன­வ­ரி­யில் எங்­களை அடித்­த­தெல்­லாம் மிகப்­பெ­ரிய அள­வுக்கு என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரின் முத்­திரை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதில் கலை­ஞ­ரு­டைய சாது­ரி­யத்­தைப் பாருங்­கள்; பெரி­யா­ரு­டைய குரு­கு­லத்­தில் படித்­த­வர், அவர் எப்­ப­டிச் சாமர்த்­தி­ய­மா­கச் செய்­வார் என்­ப­தற்கு அடை­யா­ளம்.பத்­தி­ரி­கை­க­ளுக்­குச் சென்­சார்­இ­ருந்­த­தால் பெய­ரைப் போடக்­கூ­டாது! சிறைச்­சா­லை­யில் யார் யார் கைதி­யாகி உள்ளே இருக்­கி­றார்­கள் என்று யாருக்­கும் தெரி­யாது. கலை­ஞர் என்ன பண்­ணார் தெரி­யுமா? அது­தான் கலை­ஞ­ரு­டைய முத்­திரை! முர­சொ­லி­யில், பிப்­ர­வரி 3–ஆம் தேதி அண்ணா அவர்­க­ளு­டைய நினை­வி­டத்­திற்கு வர முடி­யா­த­வர்­கள், மாலை போட முடி­யா­த­வர்­கள் என்று எல்­லா­ரு­டைய பேரை­யும் போட்­டார்!அந்­தப் பட்­டி­ய­லில் இருக்­கி­றதா இல்­லையா என்று பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிட்­டி­பா­பு­வின் டைரி இருக்­கி­றதே, அது சாதா­ர­ண­மா­னது அல்ல! அந்த சிட்­டி­பாபு, மிசா காலத்­தில் தன் உயி­ரைக் கொடுத்து இந்த இயக்­கத்­தைக் காப்­பாற்­றிய ஒரு மாவீ­ரன். அதே­போல சாத்­தூ­ரிலே பால­கி­ருஷ்­ணன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வர­லாறு மன்­னிக்­காது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இயக்­கம் தாள­முத்து, நட­ரா­சன் காலத்­தி­லி­ருந்து எத்­த­னையோ பேர்­க­ளைச் சிறைச்­சா­லை­யில் சந்­தித்­தி­ருக்­கி­றது. ஆனால் இவ்­வ­ளவு கேவ­ல­மாக, சந்­தித்­த­வர்­க­ளின் உயிர்த்­தி­யா­கத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­தக்­கூ­டிய அள­விலே சொல்­லு­கி­றீர்­களே, உங்­களை வர­லாறு மன்­னிக்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏனென்­றால், ஸ்டாலி­னுக்கோ எங்­க­ளுக்கோ அதைப் பற்றி ஒன்­றும் இல்லை. நாங்­கள்’­தி­யாகி, தியாகி’ என்று சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தந்தை பெரி­யார் ஒரு பழ­மொழி சொல்­வார்: “மாமி­சம் சாப்­பி­டு­கி­ற­வன் என்­ப­த­னா­லேயே, எலும்­புத் துண்­டைக் கழுத்­திலே போட்­டுக்­கொண்டு அலைய வேண்­டிய அவ­சி­ய­மில்­லை”­என்று சொல்­வார். அது­மா­திரி நாங்­கள் ஒன்­றும் சிறை­யிலே இருந்­த­வர்­கள் என்று தியாகி பட்­டம் போட்­டுக் கொண்­டது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பின்­னர் ஏன் அதைச் சொல்­கி­றார்­கள்? இங்­கே­தான் கவ­னிக்க 
வேண்­டும். இதில் ஒவ்­வொரு இட­மும் இருக்­கி­றது, நேரம் இல்­லா­த­த­னால் நான் படிக்­க­வில்லை. இந்த அறிக்கை தேவை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடித்­தார்­கள், அடித்து உள்ளே தள்­ளி­னார்­கள். இதே ‘விடு­தலை’ மேலா­ள­ரின் முது­குத்­தண்டு வடம் பாதித்­தது. அவ­ரைத் தூக்கி அடிப்­ப­தற்கு வரு­கி­றார்­கள். முத­லில் வரி­சை­யாக இருந்த எங்­களை அடித்­தார்­கள். திரா­வி­டர் கழ­கத்­தில்11 பேர். ஒவ்­வொரு செல்­லாக வரும்­போது, ஆரம்­பம் எங்­க­ளி­டம் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் நினைக்­கவே இல்லை. ஏனென்­றால், 6 மணிக்கே எங்­களை கைது செய்து உள்ளே உணவு கொடுத்­துத் தள்­ளி­னால், உண­வுக்கு மட்­டும்­தான் கத­வைத் திறப்­பார்­கள். திறந்து உள்ளே போட்­டால், அப்­பு­றம் சட்­டப்­படி பொழுது விடிந்­தால்­தான் திறக்க வேண்­டும். ஆனால் இரவு 9 மணிக்கு வந்து,’உங்­கள் அறையை சர்ச் செய்ய வேண்­டும்’ என்­றார். ‘நாங்­கள் என்ன செய்­யப் போகி­றோம், நாம் என்ன வைத்­தி­ருந்­தோம்? எனவே சர்ச் பண்­ணட்­டும்’ என்று சொன்­னால், ‘வரி­சை­யாக உட்­கா­ருங்­கள்’ என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால்,’உட்­கா­ருங்­கள்’ என்­றெல்­லாம் வார்த்­தையே கிடை­யாது; ‘உட்­கா­ருங்­கடா’ என்று அசிங்­க­மான வார்த்­தை­கள்! வாழ்­நா­ளில் எங்­கள் நண்­பர்­கள் மத்­தி­யிலோ, எதி­ரி­கள் மத்­தி­யிலோ கூடக் கேட்­டி­ராத கொச்­சை­யான வார்த்­தை­கள்! எங்­கள் வீட்­டுப் பெண்­ம­ணி­களை இழி­வு­ப­டுத்­தக்­கூ­டிய வார்த்­தை­கள்! அவை­க­ளை­யெல்­லாம் தாங்­கிக்­கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வர­லாறு அதைச் சொல்­லும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரி­சை­யாக வந்து அடித்­தார்­கள். நாங்­கள் அதை எதிர்­பார்க்­க­வில்லை. யார் யார் எந்­தெந்த அறை­யில் இருந்­தார்­கள் என்­ப­தற்கு இங்கே மிகப்­பெ­ரிய அள­வில் குறிப்­பு­கள் இருக்­கின்­றன. யார் யார் இருந்­தார்­கள் என்று பெயர்­க­ளில் பல­முறை குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால்,’இஸ்­மா­யில் என்­றொ­ரு­வரே இல்லை’ என்று சொல்­லி­விட்­டால் என்ன செய்­வது? ‘ஸ்டாலின் என்றே ஒரு­வர் இல்லை, என்று சொல்­லக்­கூ­டிய அள­வுக்­குச் சொன்­னால், அப்­ப­டிச் சொல்­லு­கி­ற­வ­ரைப் பற்றி புளு­குணி என்று இழி­வாக நினைப்­பார்­களே தவிர, அதற்­காக ஸ்டாலினோ, வீர­ம­ணியோ ஒவ்­வொ­ரு­வர் கத­வை­யும் தட்டி, ‘நாங்­கள் சிறைக்­குப் போய்­வந்­தோம்’ என்று சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை!வர­லாறு அதைச் சொல்­லும்! அந்த வர­லாற்றை யாரா­லும் சுல­ப­மாக அழித்­து­விட முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எடுத்­துக்­காட்­டுக்­கா­கச் சொல்­கி­றேன்... இஸ்­மா­யில் ரிப்­போர்ட்­டில்50–ஆவது பக்­கத்­தில், ‘1976–ஆம் ஆண்டு மார்ச் திங்­கள் 4–ஆம் நாளிட்ட கடி­தத்தை அரசு தலை­மைச் செய­லா­ள­ருக்கு அனுப்­பி­ய­தின் கண்­கா­ணிப்­பா­ளர் நடத்தை குறித்­த­தா­கும்’ என்று சொல்­கி­றார்.இதெல்­லாம் சாதா­ர­ண­மல்ல, அர­சாங்­கத்­தின் மிகப்­பெ­ரிய ஆவ­ணங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது அர­சி­யல் கைதி­யாக போக­வில்லை என்­கி­றார்­கள். இன்­னும் சில புத்­தி­சா­லி­கள் இருக்­கி­றார்­கள், ராஜாவை மிஞ்­சும் ராஜ­வி­சு­வா­சி­க­ளாக அங்கே புதி­தாக போயி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் எங்கு சென்­றும் நிலைத்­ததே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தக் கடி­தத்­தில் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது: “அர­சி­யல் கைதி­யாக சிறை­யில் இருந்த தன் மகன் மு.க. ஸ்டாலினை திரு. மு. கரு­ணா­நிதி 1976–ஆம் ஆண்டு மார்ச் திங்­கள் 3–ஆம் நாள் அன்று 12.40–க்கு”, மணி உட்­பட, தேதி உட்­பட இவ்­வ­ள­வும் 
பதி­வாகி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அஞ்­சா­நெஞ்­சன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் என்­றால், அசை­யாத, அஞ்­சா­நெஞ்­சன்! கார­ணம், ஈரோட்­டுப் பள்­ளிக்­கூ­டத்­தில் படித்­த­வர்! பெரி­யா­ரின் நெஞ்சுரம், அண்­ணா­வின் கனிவு, அவ­ரு­டைய இயல்­பா­னது. அத­னால் மிகத் தெளி­வாக அவை­யெல்­லாம் பொறுத்­துக்­கொண்டு இங்கே கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போ­து­தான் எங்­க­ளுக்கு நேர்­கா­ணல். குடும்ப விஷ­யங்­கள் பற்றி பேசிக்­கொண்­டி­ருக்­கை­யில், சிறைச்­
சா­லை­யில் தி.மு.க.வைச் சேர்ந்த அர­சி­யல் கைதி­க­ளாக உள்ள தன் மக­னி­டம் கேட்­டார். அர­சி­யல் கைதி­கள் சிறைச்­சா­லைக்­குள் அடிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்று வதந்தி நில­வு­கி­ற­து­என்று கேட்­டார்.அங்கே எப்­படி பதில் சொல்ல முடி­யும்? ஏனென்­றால் அங்கே என்ன நடக்­கி­றது என்று தெரி­யாது. அப்­ப­டிப்­பட்ட ஒரு கொடு­மை­யான சூழ்­நி­லை­ யிலே இருக்க முடி­யுமா? ‘எல்­லாம் நன்­றாக இருக்­கி­றது’.அனை­வ­ரும் வீட்­டில் அப்­ப­டித்­தானே சொல்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உங்­களை காப்­பாற்ற 
ஆள் தேவைப்­ப­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘உண்­மை’யை என்­றைக்­கும் நீங்­கள் களப்­ப­லி­யாக்­கி­விட முடி­யாது! இன்­ன­மும் நாங்­கள் உயி­ரோடு இருக்­கி­றோம்! இஸ்­மா­யில் கமி­ஷன் ஆதா­ரப்­ பூ­ரா­மாக இருக்­கி­றது. 94 நெருங்­கப்­போ­கிற இந்த வய­தில் கூட நினை­ 
வாற்­றல் தவ­றா­மல் இருக்­கி­றோம்! எங்­க­ளு­டைய நினை­வாற்­ற­லுக்கு நாங்­களே நன்றி செலுத்­திக்­கொள்ள வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னும் ஆயி­ரம் மிசாக்­களை இந்த திரா­விட இயக்­கம் பெற்­றா­லும், நெருப்­பாற்­றில் நீந்­தி­னா­லும், இந்த இயக்­கம் வள­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, ஸ்டாலின் என்­றால் இரும்பு மனி­தன் என்று பெயர்! திரா­விட இயக்­கம் என்­றால் எஃகுக் கோட்டை என்று அர்த்­தம்! அந்­தக் கோட்டை வேண்­டு­மா­னால் மற்­ற­வர்­க­ளுக்­குப் போய் சேர்ந்­தி­ருக்­க­லாம்; எஃகுக் கோட்டை, கொள்­கைக் கோட்­டையை ஒரு­போ­தும் உங்­க­ளால் அசைக்க முடி­யாது! அசைக்க முயற்­சித்­தால் நீங்­கள் அதி­லேயே சிக்­கிக்­கொள்­வீர்­கள்; உங்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்கு ஆள் தேவைப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு திரா­வி­டர் கழக தலை­வர் கி.வீர­மணி உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>