<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,442,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 26 2026 03:53:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260926T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26092026-VLR-04" position.sequence="04" ex-ref="26092026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">ஜனநாயகத்திற்கு கட்டப்பட்ட சமாதி:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="60">தேர்தல் ஆணையத்தின் வரலாறு காணாத வாக்குத் திருட்டு மோசடி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup901007_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="16.5">ஜ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ன­நா­ய­கத்­தில் மக்­கள் அளித்த தீர்ப்­பு­கள் மாற்­றப்­பட்ட வர­லாறு உண்டு. ஆனால், ஜன­நா­ய­கமே திரு­டப்­பட்ட ஒரு வர­லாற்று கொடு­மை­யைத்­தான் இன்று இந்த நாடே பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சர்­வா­தி­கார நாடு­க­ளில் தேர்­தல்­கள் முடக்­கப்­ப­டு­வது வழக்­க­மா­னது. ஆனால், ஜன­நா­ய­கம் நடை­மு­றை­யில் இருக்­கும்­போதே, தேர்­தல்­களை முற்­றி­லும் அர்த்­த­மி­ழக்­கச் செய்­யும் மாபெ­ரும் மோசடி இங்கு அரங்­கே­றி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு நாட்­டில் ஜன­நா­ய­கம் உயிர்ப்­பு­டன் இருக்­கி­றது என்­ப­தற்கு இரண்டு அடிப்­படை அஸ்­தி­வா­ரங்­கள் உள்­ளன:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1. அடிப்­படை உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் அர­சி­யல் சாச­னம் (Constitution).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">2. மக்­கள் தங்­க­ளது ஆட்­சி­யா­ளர்­க­ளைத்தேர்ந்­தெ­டுக்­கும் வாக்­கு­ரிமை (Right to Vote).
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த இரண்­டில் எது ஒன்று வீழ்ச்­சி­ ய­டைந்­தா­லும், அந்த நாட்டை “ஜன­நா­யக நாடு” என்று அழைப்­பது முற்­றி­லும் அர்த்­த­மற்­ற­தா­கி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏற்­கெ­னவே, ஒன்­றிய பாஜக அர­சி­னால் நமது அர­சி­யல் சாச­னம் கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு ஆளாகி வரு­கி­றது. அர­சி­யல் சாச­னம் வழங்­கிய உரி­மை­க­ளை­யும் சட்­டப்­பூர்­வ­மான பாது­காப்­பு­க­ளை­யும் பல்­வேறு வழி­க­ளில் மீறி வரு­வ­து­டன், அதன் அடித்­த­ளங்­க­ளையே தகர்க்­கும் முயற்­சி­க­ளும் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது, மக்­க­ளின் வாக்­கு­ரிமை அடிப்­ப­டை­யில் அர­சி­யல் அதி­கா­ரம் தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டும் என்ற ஜன­நா­ய­கத்­தின் முதன்மை கோட்­பாட்­டின் மீதே, பாஜக அரசு தேர்­தல் ஆணை­யத்­தின் (Election Commission) மூல­மாக ஒரு ‘சர்­ஜி­கல் ஸ்டிரைக்’கை (Surgical Strike) நிகழ்த்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சிறப்­புத் தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தப் பணி (Special Intensive Revision – SIR) என்ற பெய­ரில், பீகா­ரில் ஜூன் 2025–ல் தொடங்­கப்­பட்ட இந்த நட­வ­டிக்கை, 30 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் வரைவு வாக்­கா­ளர் பட்­டி­யல்­க­ளி­லி­ருந்து 13 கோடிக்­கும் அதி­க­மான பெயர்­களை நீக்­கி­யுள்­ளது. இது நாட்­டின் மொத்த வாக்­கா­ளர்­க­ளில் சுமார் 14 சத­வீ­த­மா­கும். இந்த சிறப்பு வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தப் பணி­யின் மூல­மா­கத்­தான், பாஜ­கவை கடு­மை­யாக எதிர்க்­கும் பல மாநி­லக் கட்­சி­க­ளும் அதன் தலை­வர்­க­ளும் திட்­ட­மிட்டு வீழ்த்­தப் 
பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் ஆணை­யர்­க­ளின் எதிர்ப்­பும் மூடி மறைக்­கப்­பட்ட உண்­மை­க­ளும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ (Indian Express) நாளி­த­ழின் செய்­தி­யா­ளர் ரித்­திகா சோப்ரா சில தினங்­க­ளுக்கு முன்பு வெளி­யிட்ட 
கட்­டுரை, நாடு முழு­தும் பெரும் பூகம்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த 10 மாதங்­க­ளில் தேர்­தல் ஆணை­யத்­தின் 14 முடி­வு­க­ளுக்கு, தேர்­தல் ஆணை­யர்­கள் சுக்­பீர் சிங் சாந்து மற்­றும் விவேக் ஜோஷி ஆகி­யோர் கடு­மை­யான ஆட்­சே­பனை தெரி­வித்­த­னர். ஆனால், அதை மீறி தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் எதேச்­ச­தி­கா­ர­மா­கச் செயல்­பட்டு, கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பறிக்­கும் செயல்­களை மேற்­கொண்­டார் என்­ப­து­தான் அந்­தக் கட்­டு­ரை­யின் சாராம்­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதில் இடம்­பெற்­றுள்ள முக்­கி­ய­மான இரண்டு மோச­டி­களை பார்ப்­போம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">1. படி­வம் 6 மோசடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த ஜூலை மாதத்­தில், புதிய வாக்­கா­ளர்­க­ளுக்­கான ‘படி­வம் 6’–ல் (Form 6) எஸ்.ஐ.ஆர் (SIR) தொடர்­பான கேள்வி ஒன்று புதி­தா­கச் சேர்க்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விண்­ணப்­ப­தா­ர­ரின் பெயர் அல்­லது அவ­ரது பெற்­றோர், தாத்தா, பாட்டி ஆகி­யோ­ரின் பெயர் கடந்த எஸ்.ஐ.ஆர் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருந்­ததா என்­பது குறித்த தக­வல்­கள் கோரப்­பட்­டன. அவ்­வாறு இருந்­தால், சம்­பந்­தப்­பட்ட சட்­டப்­பே­ர­வைத் தொகுதி, வாக்­குச்­சா­வடி மற்­றும் வரிசை எண் போன்ற விவ­ரங்­களை வழங்க வேண்­டும் என இணை­ய­வழி விண்­ணப்ப நடை­முறை குறிப்­பிட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரு­பத்­தைந்து ஆண்­டு­க­ளுக்கு முந்­தையை இந்­தத் தக­வல்­கள் எல்­லாம் சாதா­ரண மக்­க­ளி­டம் எத்­தனை பேரி­டம் இருக்­கும்? இல்­லாத ஒன்­றைக் கேட்­ப­தன் மூலம் இலட்­ச­க­ணக்­கா­னோர் வாக்­கு­ரி­மையை பறித்­தார்­கள். இது குடி­யு­ரிமை திருத்­தச் சட்ட அம­லாக்­கத்­தின் ஒரு கொடூ­ர­மான 
முன்­னோட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தத் தக­வல்­க­ளைத் தர முடி­யாத கார­ணத்­தால், ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் லட்­சக்­க­ணக்­கா­னோர் வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­னர். அல்­லது அவர்­களை நீக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே திட்­ட­மிட்­டுக் கொண்­டு­வ­ரப்­பட்ட சதி இது. “சட்­டத்­தைத் திருத்­தா­மல் இத­னைச் செய்ய முடி­யாது” என்று மே மாதத்­தில் இரு ஆணை­யர்­க­ளும் கூறி­யி­ருந்த போதி­லும், அந்த மாற்­றம் எதேச்­ச­தி­கா­ர­மா­கச் செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">2. மேல்­மு­றை­யீட்டு வாய்ப்பு எனும் நாட­கம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாக்­க­ளர் பட்­டி­ய­லில் பெயர் நீக்­கப் 
பட்­டா­லும் ஆவ­ணங்­க­ளு­டன் மேல் முறை­யீடு செய்து சேர்த்­துக்­கொள்­ள­லாம் எனக் 
கூ­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கோவா:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உள்­ளூர் அதி­கா­ரி­க­ளால் 97 வாக்­கா­ளர்­கள் தகு­தி­யு­டை­ய­வர்­க­ளா­கக் கண்­ட­றி­யப்­பட்­டும், அவர்­க­ளின் பெயர்­கள் மையப்­ப­டுத்­தப்­பட்ட மென்­பொ­ரு­ளில் (Centralized Software) சேர்க்­கப் ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">மேற்கு வங்­கம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எஸ்.ஐ.ஆர் நட­வ­டிக்­கை­யின் கீழ் 60.06 லட்­சம் வாக்­கா­ளர்­க­ளின் தக­வல்­க­ளில் முரண்­பாடு உள்­ள­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது. இது தொடர்­பான மேல்­மு­றை­யீட்­டில், 27.16 லட்­சம் பேரை நீக்க நடு­வர் மன்­றம் உத்­த­ர­விட்­டது. இவர்­க­ளில் 22.21 லட்­சம் பேர் பெயர்­களை மீண்­டும் சேர்க்­கக் கோரி மேல்­மு­றை­யீடு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">டெல்லி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">டெல்லி எஸ்.ஐ.ஆரில் 47.56 லட்­சம் வாக்­கா­ளர்­கள் வரை­வுப் பட்­டி­ய­லில் இடம்­பெ­ற­வில்லை. 31.63 லட்­சம் பேருக்கு முரண்­பாடு உள்­ள­தாக நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. “இது இயந்­தி­ரத்­த­ன­மாக வழங்­கப்­பட்­டதா?” என உச்ச நீதி­மன்­றமே (Supreme Court) கேள்வி எழுப்­பி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மென்­பொ­ருளை உள்­ளூர் அதி­கா­ரி­க­ளால் அணுக முடி­யாத நிலை மற்­றும் வாக்­கா­ளர் பட்­டி­ய­லைத் தயா­ரிக்­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் மென்­பொ­ரு­ளின் மீதான ‘மையப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பாடு’ குறித்­தும் இரு ஆணை­யர்­க­ளும் கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­த­னர்.அதா­வது எங்கோ இருக்­கும் ஒரு மையப் 
படுத்­தப்­பட்ட அமைப்பு இலட்­ச­க­ணக்­கான இந்­தி­யர்­க­ளின் வாக்­கு­ரி­மையை  போகிற போக்­கில் வெட்­டித் தள்­ளி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">3. தமிழ்­நாட்­டில் நடந்த வாக்கு நீக்­கக் கூத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்­டில் 96 லட்­சம் வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்ட பிறகு, திமுக எடுத்த கடும் முயற்­சி­யின் கார­ண­மாக அது 74 லட்­ச­மா­கக் குறைக்­கப்­பட்­டது. ஆயி­னும், உள்­ளூர் தேர்­தல் அதி­கா­ரி­கள் வழியே சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங் களை மீறி, ஒன்­றிய அர­சின்மையப்­ப­டுத்­தப்­பட்ட அமைப்­பி­னால் வாக்­கா­ளர்பட்­டி­யல் முறை­கே­டா­கத் தயா­ரிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீக்­கப்­பட்ட 74 லட்­சம் வாக்­கா­ளர்­க­ளில் குறைந்­த­பட்­சம் தகுதி வாய்ந்த 30 லட்­சம் பேரா­வது ஆவ­ணங்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்டோ, கொடுக்­கப்­பட்ட குறைந்த அவ­கா­சத்­தில் மேல்­மு­றை­யீடு செய்ய முடி­யா­மலோ அல்­லது மேல்­மு­றை­யீட்­டின் சிக்­க­லான வழி­மு­றை­க­ளைப் பின்­பற்ற முடி­யா­மலோ தங்­க­ளது வாக்­கு­ரி­மையை இழந்­தி­ருக்­கக் கூடும். இது­தான் நாடு முழு­தும் நில­வும் சூழல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நாடு தழு­விய எதிர்ப்பு அலை:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க அல்­லாத கட்­சி­கள் நாடு முழுக்க இந்த விவ­கா­ரத்­தில் கடும் கண்­டங்­களை தெரி­வித்து வரு­கின்­ற­னர். இந்த சிறப்பு வாக்­கா­ளர் திருத்த மோச­டி­யால் பயன் பெற்ற தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் விஜய் மற்­றும் ஆந்­திர முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு நாயுடு ஆகி­யோர் மட்­டும் வாயைத் திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சிறப்பு வாக்­க­ளர் திருத்­த­திற்கு எதி­ராக தொடந்து போராடி வரும் தி.மு.க தலை­வர் இந்த மோச­டிக்கு எதி­ராக தன் கடும் கண்­ட­னங்­களை தெரி­வித்­தி­ருக்­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி’­யின் நிறு
­வ­னர் அபி­ஜீத் தீப்கே இது­பற்­றிப் பேசு­கை­யில்:”2024 தேர்­த­லில் பா.ஜ.க. பெரும்­பான்மை பெறத் தவறி 240 இடங்­க­ளுக்­குச் சுருங்­கி­ய­போதே அவர்­க­ளுக்­குப் பயம் தொற்­றிக் கொண்­டது. நாட்­டின் மன­நிலை மாறு­ வ­தை­யும், மாநி­லக் கட்­சி­கள் வலிமை பெறு­ 
வ­தை­யும் அவர்­கள் உணர்ந்­த­னர். அதன் 
பின்­னரே, ஒன்­றி­ணைந்து கள­மி­றங்­கிய எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் வரி­சை­யா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் ஒரு­வர் பின் ஒரு­வ­ராக வீழ்த்­தப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேற்கு வங்­கத்­தில் மம்தா பானர்ஜி தொகு­தி­யில் 50,000 வாக்­கு­கள் நீக்­கப்­பட்­டன. அங்கு மம்தா பானர்ஜி 15,000 வாக்­கு­கள்வித்­தி­யா­சத்­தில் தோல்­வி­ய­டைந்­தார். தமிழ்­நாட்­டில் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் தொகு­தி­யி­லி­ருந்து 1 லட்­சம் வாக்­கு­கள் நீக்­கப்­பட்­டன. அங்கு ஸ்டாலின் 8,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் தோல்­வி­ய­டைந்­தார். டெல்­லி­யில் கெஜ்­ரி­வால் தொகு­தி­யி­லி­ருந்து 40,000 வாக்­கு­கள் நீக்­கப்­பட்­டன; அங்கு அவர் 5,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் தோல்­வி­ய­டை­கி­றார். அதே­போல், கேர­ளா­வில் பின­ராயி விஜ­ய­னும் இந்த வாக்கு நீக்க நட­வ­டிக்­கை­யால் மீண்­டும் ஆட்­சி­யைக் கைப்­பற்ற முடி­ய­வில்லை. மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பின­ராயி விஜ­யன் ஆகி­யோர் தோற்­றது தற்­செ­ய­லா­னது அல்ல. அதற்­குப் பின்­னால் பெரிய சதி உள்­ளது. எதிர்க்­கட்­சி­ க­ளின் பலத்­தைக் குறைப்­ப­து­தான் இந்த எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­யின் முக்­கிய 
நோக்­கம்” என்று கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சிவ­சேனா கட்­சித் தலை­வர் உத்­தவ் தாக்­கரே மற்­றும் சமாஜ்­வாடி கட்­சித் தலை­வர் 
அகி­லேஷ் யாதவ் ஆகி­யோர் தமிழ்­நாடு, மேற்கு வங்­கம், மகா­ராஷ்­டி­ரா­வில் மறு­தேர்­தல் நடத்த வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">ராகுல் காந்­தி­யின் இரட்டை வேடம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி இந்த விவ­கா­ரம் பற்­றிப் பேசு­கை­யில், “ஹரி­யானா, சத்­தீஸ்­கர், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் ஆட்­சி­கள் மாறு­வது வழக்­க­மான ஒன்­றாக இருந்த நிலை­யில், சமீ­பத்­திய தேர்­தல்­க­ளில் மட்­டும் ‘ஆட்சி எதிர்ப்பு அலை’ (Anti–Incumbency) என்­பது திடீ­ரெ­னக் காணா­மல் போய்­விட்­டது” என்று கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் தமிழ்­நாடு, கேரளா, மேற்கு வங்­கத்­தில் சிறப்பு வாக்­கா­ளர் திருத்­தத்­தில் நடந்த ஜன­நா­ய­கப் படு­கொலை பற்றி அவர் எந்த வார்த்­தை­யும் பேச­வில்லை. கார­ணம், திமுக தலை­வர் தேசி­யத் தலை­வ­ராக அடை­யா­ளம் பெறு­வதை ராகுல் காந்­தி­யால் சகிக்க முடி­யா­த­தால், விஜய்­யி­டம் ஓடோ­டிச் சென்று சேர்ந்­து­கொண்­டார். மம்தா பானர்­ஜி­யும், பின­ராயி விஜ­ய­னும், அர­விந்த் கெஜ்­ரி­வா­லும் மாநில அர­சி­ய­லில் காங்­கி­ர­ஸின் எதி­ரி­கள்; எனவே அவர்­கள் தேர்­தல் ஆணை­யத்­தின் தில்­லு­முல்­லு­க­ளால் தோற்­ப­தில் அவ­ருக்கு எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">த.வெ.க வென்­றது எப்­படி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எல்லா தேர்­தல் கணிப்­பு­க­ளை­யும் மீறி, இப்­ப­டித்­தான் தேர்­தல் ஆணை­யத்­தின் துணை­யு­டன் த.வெ.க (தமி­ழக வெற்றி 
கழ­கம்) தமி­ழ­கத்­தில் வென்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தான் நேர­டி­யா­கக் களத்­தில் இருக்­கும் மாநி­லங்­க­ளில், பாஜக சூழ்ச்­சி­யி­னால் அங்­கி­ருக்­கும் தனக்கு எதி­ரான கட்­சி­க­ளை­யும் தலை­வர்­க­ளை­யும் வீழ்த்­தி­யது. தான் நேர­டி­யா­கக் களத்­தில் இல்­லாத தமிழ்­நாட்­டில், தனது நிழ­லாக விஜய்யை முன்­னி­றுத்தி வென்று, இன்று தன் ஆட்­சியை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">யாரா­லும் நம்ப முடி­யாத த.வெ.க–வின் வெற்­றி­யின் ரக­சி­யம் இப்­போது தெளி­வா­கி­விட்­டது. “த.வெ.க எனும் கிளி­யின் உயிர், இப்­போது தேர்­தல் ஆணை­யர் எனும் மந்­தி­ர­வா­தி­யின் கையில் இருக்­கி­றது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">கள்­ளப் பூனைக்கு மணி கட்­டு­வது யார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. ஒன்­றி­யத்­தில் ஆட்­சிக்கு வந்த பிறகு, தேர்­தல் ஆணை­யம் முற்­றி­லு­மாக பா.ஜ.­க.­வின் அடி­யா­ளா­கச் செயல்­பட்டு 
வரு­வது குறித்து எத்­த­னையோ குற்­றச் 
சாட்­டு­கள் எழுந்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•	மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­திர (EVM) மோச­டிப் புகார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•	பா.ஜ.­க.­வின் விருப்­பங்­க­ளுக்கு ஏற்ப பிற கட்­சி­க­ளின் பிள­வு­க­ளைக் கையா­ளு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•	பா.ஜ.­க.­விற்­குச் சாத­க­மான தேதி­க­ளில் மாநி­லத் தேர்­தல் தேதி­களை அறி­வித்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•	கட்­சித் தாவல் தடைச் சட்­டத்­தைப் பா.ஜ.­க.­வின் நலன்­க­ளுக்கு ஏற்ப பயன் 
ப­டுத்­து­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•	ஒப்­பு­கைச் சீட்­டு­க­ளுக்­கும் (VVPAT) பதி­வான வாக்­கு­க­ளுக்­கும் இடை­யி­லான வித்­தி­யா­சம் குறித்த புகார்­களை 
கண்­டு­கொள்­ளா­மல் இருப்­பது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•	வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருக்­கும் எண்­ணிக்­கையை விட அதிக வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றது குறித்த புகார்­க­ளுக்கு செவி சாய்­கா­தது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">•	கடைசி நேரத்­தில் திடீ­ரென வாக்­குப் ப­திவு சத­வீ­தம் அதி­க­ரிப்­பது  என தேர்­தல் ஆணை­யத்­தின் மீதான குற்­றச் சாட்­டு­கள் கொஞ்­ச­நஞ்­ச­மல்ல. ஆனால், தேர்­தல் ஆணை­யம் எதற்­கும் செவி­சாய்க்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாறாக, ஒன்­றிய அரசு தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரைப் பாது­காக்­கும் சட்­டத்­தை­யும் கொண்­டு­வந்­தது. இச்­சட்­டத்­தின் மிக முக்­கி­ய­மான அம்­சங்­க­ளில் ஒன்று பிரிவு 16 (Section 16) ஆகும். இதன்­படி, தற்­போ­தைய அல்­லது முன்­னாள் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மற்­றும் தேர்­தல் ஆணை­யர்­கள், தங்­க­ளது அதி­கா­ரப்­பூர்­வப் பணி­க­ளைச் செய்­யும்­போது எடுத்த முடி­வு­கள், பேசிய வார்த்­தை­கள் அல்­லது செய்த செயல்­க­ளுக்­காக அவர்­கள் மீது எந்­த­வொரு நீதி­மன்­ற­மும் சிவில் (Civil) அல்­லது கிரி­மி­னல் (Criminal) வழக்­கு­க­ளைத் தொட­ரவோ அல்­லது 
நடத்­தவோ முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மட்­டு­மல்­லா­மல், 2023–ஆம் ஆண்டு மார்ச் மாதம், உச்ச நீதி­மன்­றத்­தின் 5 நீதி­ப­தி­கள் கொண்ட அர­சி­ய­ல­மைப்பு அமர்வு, “தேர்­தல் ஆணை­யர்­க­ளைத் தேர்வு செய்­யும் குழு­வில் பிர­த­மர், மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர், இந்­தி­யத் தலைமை நீதி­பதி (Chief Justice of India – CJI) ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட வேண்­டும்” என உத்­த­ர­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், ஒன்­றிய அரசு உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பைத் தொடர்ந்து, நாடா­ளு­மன்­றத்­தில் “தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மற்­றும் பிற தேர்­தல் ஆணை­யர்­கள் (நிய­ம­னம், சேவை நிபந்­த­னை­கள் மற்­றும் பத­விக்­கா­லம்) சட்­டம், 2023” என்ற புதிய சட்­டத்­தைக் கொண்­டு­வந்து நிறை­வேற்­றி­யது. இந்­தச் சட்­டத்­தின்­படி, தேர்­வுக் குழு­வி­லி­ருந்து தலைமை நீதி­பதி (CJI) நீக்­கப்­பட்­டார். அவ­ருக்­குப் பதி­லா­கப் பிர­த­மர் பரிந்­து­ரைக்­கும் ஒரு மத்­திய கேபி­னட் அமைச்­சர் (Cabinet Minister) குழு­வில் சேர்க்­கப்­பட்­டார். இதற்கு எதி­ரான வழக்­கில் இரு நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு மாறு­பட்ட தீர்ப்­பினை வழங்­கி­ய­தால், இப்­போது இவ்­வ­ழக்கு தலைமை நீதி­ப­தி­யின் பார்­வைக்­குச் சென்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாக்­குத் திருட்­டுப் பூனை­யான தேர்­தல் ஆணை­யத்­திற்கு, ஜன­நா­யக சக்­தி­க­ளின் மாபெ­ரும் போராட்­டமே இறு­தி­யாக மணி 
கட்­டும்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>