<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,33,958,1268" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 26 2026 03:56:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260926T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26092026-VLR-07" position.sequence="07" ex-ref="26092026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">26.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமா­ரின் தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­கள்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">இந்­திய நாட்­டின் ஜன­நா­ய­கத்­துக்­கும் குடி­ய­ர­சுக்­கும் ஆபத்து!  </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி எச்­ச­ரிக்கை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup890079_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup890083_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="veeramani_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Premalatha_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="Gowthamasigama_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, செப். 26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி விடுத்­து ள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யத் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் மீது, மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளும் புகார் தெரி­வித்­துள்­ள­னர். தேர்­தல் ஆணை­யத்­திற்­குள் நடந்­து­வ­ரும் பிரச்­சி­னை­கள் குறித்து நேற்று முன்தினம் (23.9.2026) ஆங்­கில நாளே­டான ‘தி இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ வெளிக் கொண்­டு­வந்­துள்ள செய்­தி­கள் நாட்­டையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் படி, தேர்­தல் ஆணை­யம் என்­பது சுயேட்­சை­யான அமைப்­பா­கும். ஒரே ஒரு தேர்­தல் ஆணை­யர் மட்­டுமே இருந்த சூழ­லில், 1989 ஆம் ஆண்டு மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் என்ற அமைப்பு தோற்­று­விக்­கப்­பட்டு, இரண்­டரை மாதங்­கள் மட்­டுமே இருந்­தது. பின்­னர், 1993 அக்­டோ­பர் முதல் மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் என்­ப­தும், அதில், ஒரு­வர் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் என்­ப­து­மான நடை­முறை உரு­வாக்­கப்­பட்­டது. ஒரு­வரே தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுப்­ப­தற்­குப் பதி­லாக, நாட்­டின் மிக முக்­கி­ய­மான இந்­தப் பொறுப்­பில், கூட்­டுப் பொறுப்­பும், கூட்டு அறி­வும் (Collective Wisdom) இருப்­பது நல்­லது என்ற நோக்­கத்­திற்­கா­கவே, இந்த மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் என்ற முறை உரு­வாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யர்­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­பது தொடர்­பான  ‘அனூப் பரன்­வால் எ. இந்­திய ஒன்­றிய அரசு’ வழக்­கில் தேர்­தல் ஆணை­யர் சார்­பற்­ற­வ­ராக இருக்க வேண்­டும் என்ற நோக்­கில், 2023 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் அய்ந்து நீதி­ப­தி­கள் அடங்­கிய அமர்வு தீர்ப்பு வழங்­கி­யது. அதில் பிர­த­மர், எதிர்க்­கட்­சித் தலை­வர், இந்­தி­யத் தலைமை நீதி­பதி அடங்­கிய மூவர் குழு தேர்­தல் ஆணை­யர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து குடி­ய­ர­சுத் தலை­வர் மூலம் நிய­மிக்­க­லாம் என்று கூறி­ய­து­டன், நாடா­ளு­மன்­றம் இதற்­கான தனிச் சட்­டத்தை இயற்­றும் வரை இந்த ஆணை இருக்­கும் என்று கூறி­யது. ஆனால், அதே ஆண்­டின் இறு­தி­யில், தேர்­தல் ஆணை­ய­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் குழு­வில் இந்­தி­யத் தலைமை நீதி­ப­திக்­குப் பதி­லாக, ஓர் ஒன்­றிய அமைச்­சர் இடம்­பெ­றும்­வ­கை­யில் சட்­டத்தை வடி­வ­மைத்து நிறை­வேற்­றி­யது ஒன்­றிய பா.ஜ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதன் மூலம், நடு­நி­லைமை ஏற்­ப­டு­வ­தற்கு மாறாக, மூவ­ரில் இரு­வர் (பிர­த­மர், ஒன்­றிய அமைச்­சர்) ஆளுங்­கட்சி சார்­பா­ன­வர்­க­ளா­க­வும், ஒரு­வர் மட்­டுமே மாற்று அணி­யி­ன­ரா­க­வும் (எதிர்க்­கட்­சித் தலை­வர்) இருக்­கும் வகை­யில் இந்­தச் சட்­டம் உரு­வாக்­கப்­பட்­டது. நாடா­ளு­மன்­றத்­தின் இந்­தச் சட்­டம், உச்­ச­நீ­தி­மன்­றத் தீர்ப்­புக்கு மாறா­னது என்று கூறி தொடுக்­கப்­பட்ட வழக்கு (ஜெயா தாக்­கூர் எ. இந்­திய ஒன்­றிய அரசு) உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடை­பெற்று வந்த நிலை­யில், இரு நீதி­ப­தி­க­ளின் மாறு­பட்ட முடி­வு­கள் கார­ண­மாக, அவ்­வ­ழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட அமர்­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. (அது­கு­றித்து பிறகு தனி­யாக அறிக்கை வெளி­வ­ரும்).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஞானேஷ்­கு­மா­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">செயல்­பா­டு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேற்­சொன்ன 2023 ஆம் ஆண்டு சட்­டத்­தின் படி நிய­மிக்­கப்­பட்­ட­வர்­
கள் தான் தற்­போது உள்ள தேர்­தல் ஆணை­யர்­கள் மூவ­ரும். அவர்­க­ளில் டாக்­டர் சுக்­விர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகி­யோர் 2024 மார்ச் 15 அன்­றும், மற்­றொரு தேர்­தல் ஆணை­யர் டாக்­டர் விவேக் ஜோஷி 2025 பிப்­ர­வரி 19 அன்று நிய­மிக்­கப்­பட்­ட­து­டன், அன்றே ஞானேஷ் குமார் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரா­க­வும் பதவி உயர்வு பெற்­றார். (ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதி­கா­ரி­க­ளான சந்­து­வும், ஞானேஷ் குமா­ரும் 2024 இல் தேர்­தல் ஆணை­யர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டும்­
போதே காங்­கி­ரஸ் கட்சி எதிர்ப்பு தெரி­வித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவர்­க­ளில், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மட்­டும் தன்­னிச்­சை­யா­கச் செயல்­ப­டு­வ­தும், முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்ட கடந்த பல மாதங்­க­ளில் தேர்­தல் ஆணை­யத்­தின் கூட்­டமே கூட்­டப்­ப­டா­ மல் தவிர்க்­கப்­பட்­ட­தும், மற்ற இரு­வ­ரின் கருத்­து­கள் அறி­யப்­ப­டா­மலே முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தும் இப்­போது வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கேபி­னெட் செய­லா­ள­ருக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இரு ஆணை­யர்­க­ளின் கடி­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இது தொடர்­பாக டாக்­டர் சுக்­வீர் சிங் சந்­து­வும், டாக்­டர் விவேக் ஜோஷி­யும் தனித்­த­னி­யாக, இந்­தி­யா­வின் தலை­மைச் செய­லா­ள­ரான கேபி­னெட் செய­லா­ள­ருக்­குக் கடி­தம் எழு­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புதிய வாக்­கா­ளர்­க­ளைச் சேர்ப்­பது, பெயர்­களை நீக்­கு­வது உள்­ளிட்ட பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் குறித்து தங்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று அவர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். புதிய வாக்­கா­ளர்­கள் மீதான நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­தவை என்­றும், சட்­ட­வி­ரோ­த­மா­னவை என்­றும் அவர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நாடு முழு­வ­தும் 13 கோடி வாக்­கா­ளர்­களை நீக்­கம் செய்­துள்ள எஸ்.அய்.ஆரை நடை­மு­றைப்­ப­டுத்­தும் முடிவு குறித்து கேள்­வி­கள் எழுந்­துள்­ளன. (பா.ஜ.க. மூத்த தலை­வர்  எல்.கே.அத்­வானி, ஒன்­றிய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர், மேனாள் குடி­ய­ர­சுத் துணைத் தலை­வர் ஜெக­தீப் தன்­கர் ஆகி­யோ­ரின் வாக்­கு­களே எஸ்.அய்.ஆரால் கேள்­விக்­குள்­ளாகி உள்­ளன!)  எஸ்.அய்.ஆர் எனப்­ப­டும் ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர மறு ஆய்வை’ நாடு முழு­வ­தும் அமல்­ப­டுத்­தும் பணி மூன்று ஆணை­யர்­க­ளின் மேற்­பார்­வை­யி­லும் நடை­பெற்று வரு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது. ஆனால், தங்­க­ளுக்­குத் தெரி­யா­மலே எடுக்­கப்­பட்ட முடி­வு­கள், பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­கள் குறித்து, கடந்த 10 மாதங்­க­ளில் குறைந்­தது 14 முறை­யா­வது சந்து மற்­றும் ஜோஷி ஆகி­யோர் அதி­கா­ரப்­பூர்­வ­மா­கத் தங்­கள் ஆட்­சே­ப­னை­யைப் பதிவு செய்­துள்­ள­னர் என்று தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. அதில் ஒரே நாளில் இரு­வ­ரு­மாக நான்கு முறை தங்­கள் மறுப்­பைப் பதிவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எனி­னும், இவை எது­வும் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­ப­டா­மல், தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரின் முடிவு மட்­டுமே செயல்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­ற­தென்­றால், நாட்­டின் தன்­னிச்­சை­யான அதி­கா­ரம் படைத்த, நடு­நி­லை­மை­யில் நின்று செய­லாற்ற வேண்­டிய ஓர் ஆணை­யத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்த அதி­கார வரம்பு மீறல், அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட மீறல் என்­பது சாதா­ர­ண­மா­னதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மூன்று தேர்­தல் ஆணை­யர்­கள் இருக்­கி­றார்­கள் என்­றால், அவர்­க­ளில் எது பெரும்­பான்­மையோ அது தானே இறுதி செய்­யப்­ப­டும். நீதி­மன்­றங்­க­ளி­லும் இது தானே நடை­முறை! உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யா­கவே இருந்­தா­லும், அவர் இடம்­பெற்­றி­ருக்­கும் ஓர் அமர்­வில் பெரும்­பான்­மைத் தீர்ப்பு அவ­ரது தீர்ப்­புக்கு மாறாக இருந்­தா­லும், பெரும்­பான்மை நீதி­ப­தி­க­ளின் தீர்ப்பு தானே உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் முடி­வாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆனால், தேர்­தல் ஆணை­யப் பிரச்­சி­னை­யில் இவற்­றுக்கு மாறாக, தலை­மைத் தேர்­தல் ஆணை­யரே, தனக்கு இல்­லாத அதி­கா­ரங்­களை எடுத்து வைத்­துக் கொண்டு, பிற தேர்­தல் ஆணை­யர்­க­ளின் கருத்­து­களை, மறுப்­பைப் புறக்­க­ணித்­துள்­ளார் என்­றால், நாடு நீதி­யின் போக்­கில் தான் செல்­கி­றதா? சட்­டப்­ப­டி­தான் நடக்­கி­றதா என்ற மிக முக்­கி­ய­மான கேள்வி வெடிக்­கி­றதே! இரண்டு ஆணை­யர்­க­ளின் எழுத்­துப்­பூர்­வ­மான அறி­வு­றுத்­த­லுக்கு முர­ணா­கத் தேர்­தல் ஆணை­யம் செயல்­பட்­ட­தா­க­வும், அதன் நட­வ­டிக்கை ‘‘அதி­கார வரம்­புக்கு அப்­பாற்­பட்­ட­தும், சட்­ட­வி­ரோ­த­மா­ன­து­மான’’ ஒன்று என்­றும் டாக்­டர் சந்து, தனது கடி­தம் ஒன்­றில் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஞானேஷ் குமார் தலை­மைத் தேர்­தல் அதி­கா­ரி­யாக இருக்­கும்­போது தான் இத்­தனை மாநி­லத் தேர்­தல்­கள் நடை­பெற்­றுள்­ளன என்­றால், அவற்­றின் நம்­ப­கத்­தன்மை கேள்­விக்­கு­ரி­ய­தல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">வாக்­கா­ளர் பட்­டி­ய­லைத் தயா­ரிக்­கும் அதி­கா­ரம் அந்­தந்த தொகு­தி­க­ளில் உள்ள தேர்­தல் பதிவு அதி­கா­ரிக்கு (ERO) மட்­டுமே உரி­யது. இந்த அதி­கா­ரம் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளது – ஓரி­டத்­தில் குவிக்­கப்­ப­ட­ வில்லை என்­ப­து­தான், வாக்­கா­ளர் பட்­டி­யல் முறை­கேடு குறித்த ஒவ்­வொரு அர­சி­யல் குற்­றச்­சாட்­டுக்­கும் எதி­ராக ஆணை­யத்­தின் வாத­மாக இருந்­து­வந்­தது. ஆனால், இப்­போது  இணை­யத்­தில் அப் பட்­டி­யலை அணு­கு­வ­தி­லேயே அவர்­க­ளுக்கு அதி­கா­ரம் குறைக்­கப்­ பட்டு, தேர்­தல் ஆணை­யத்­தின் தக­வல்­தொ­ழில்­நுட்­பப் பிரி­வுக்­குக் கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது; அதி­கா­ரம் ‘டில்­லி­யில்’ குவிக்­கப்­பட்­டுள்­ளது என்று தேர்­தல் ஆணை­யர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">விரி­வாக விசா­ரிக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">வேண்­டி­யது அவ­சி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">வாக்­கா­ளர் மென்­பொ­ரு­ளின் நம்­ப­கத்­தன்மை குறித்த கவ­லை­களை தேர்­தல் ஆணை­யர்­களே எழுப்­பி­யி­ருப்­பது, எதிர்க்­கட்­சி­கள் இத்­த­னைக் கால­மாக எழுப்­பி­வ­ரும் பிரச்­சினை எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்­பதை எடுத்­துக் காட்­டு­கி­றது. இப்­போது வெளி­வந்­தி­ருப்­பது கூட பனிப்­பா­றை­யின் ஒரு முனை (Tip of the Iceberg) மட்­டுமே! இன்­னும் தேர்­தல் ஆணை­யத்­தின் அதி­கா­ரக் குவிப்­பி­னா­லும், சார்பு நட­வ­டிக்­கை­க­ளா­லும் எத்­த­கைய சிக்­கல்­கள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை விரி­வாக விசா­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கடும் குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­கி­யுள்ள தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் தானா­கப் பதவி வில­கு­வதே நியா­யம் ஆகும். அதற்கு அனை­வ­ரும் வலி­யு­றுத்­த ­வேண்­டும். குடி­ய­ர­சுத் தலை­வர் தலை­யிட்டு, உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வேண்­டும். பின்­ன­ணி­யில் இருந்து இவரை இயக்­கு­ப­வர்­கள் யார் என்­பது வெளிக்­கொண்டு வரப்­ப­ட­வேண்­டும். இது மிக­வும் அவ­ச­ர­மான கால­கட்­டம்! நாட்­டின் ஜன­நா­ய­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள மிகப் பெரிய ஆபத்­துக்கு அடிப்­ப­டை­யான முறை­கே­டு­கள் வெளிச்­சத்­திற்கு வரத் தொடங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேலும் ஒரு செய்­தியை இந்த நேரத்­தில் சுட்­டிக்­கா ட்­டு­வது இன்­றி­ய­மை­யா­த­தா­கும். 2023 ஆம் ஆண்டு தேர்­தல் ஆணை­யர்­கள் நிய­ம­னச் சட்­டத்­தில், ‘பணிக் காலத்­தில் தேர்­தல் ஆணை­யர்­கள், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஆகி­யோர் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, பிற்­கா­லத்­தில் அவர்­கள் மீது வழக்­குத் தொடுக்க முடி­யாத’ அள­வுக்­குச் சட்­டத்­தைத் திருத்­தி­யுள்­ள­னர். இதன்­மூ­லம், தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­களை முன்­னெச்­ச­ரிக்­கை­யா­கச் செய்­து­கொண்டு, அதன்­பி­ற­கு­தான் முறை­கே­டு­கள் திட்­ட­மிட்­டுச் செய்­யப்­பட்­டுள்­ளன என்று சந்­தே­கிப்­ப­தற்கு முகாந்­தி­ரங்­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஓர­ணி­யில் நின்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">களம் காணு­வது அவ­சி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஏற்­கெ­னவே ஓட்­டுத் திருட்டு, வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம், வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­கள் மீதான நம்­ப­கத் தன்மை இன்மை என்ற பிரச்­சி­னை­ க­ளு­டன், தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரின் அதி­கார அத்­து­மீ­ற­லும் வெளி­வந்­துள்­ளது.  நாட்­டில் நடந்து வரும் அத்­தனை அநீ­தி­க­ளும், பாசி­சப் போக்­கும் இந்­தத் தேர்­தல்­கள் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு ஆட்­சி­யில் உள்ள ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்ற சூழ­லில், அத்­தனை ஆபத்­து­க­ளுக்­கும் அடிப்­படை, இக் கால­கட்­டத்­தில் நடந்த தேர்­தல்­களே – அதில் நிகழ்ந்­தி­ருக்க வாய்ப்­புள்ள முறை­கே­டு­ களே! நாட்­டின் ஜன­நா­ய­கமே கேள்­விக் குறி­யாகி, இந்­தி­யக் குடி­ய­ர­சுக்கே ஆபத்து நேர்ந்­துள்ள இந்­தச் சூழ­லில், அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளும்,  முன்­னாள், இந்­நாள் மாநில முத­ல­மைச்­சர்­க­ளும், ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்­கை­யுள்ள அமைப்­பு­க­ளும், சமூக ஆர்­வ­லர்­க­ளும், ஊட­கங்­க­ளும் இப் பிரச்­சி­னை­யில் ஓர­ணி­யில் நின்று களம் காணு­வது அவ­சி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தட்­டாஞ்­சா­வடி சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தலில் போட்­டி­யி­டும்   வேட்­பா­ளர் கு.சேது (எ) சேது­செல்­வத்திற்கு  உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு விழுப்­பு­ரம் தெற்கு மாவட்ட தி.மு.க விற்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள 
பூத் எண் - 14 கம்­ப­ளி­சாமி மடம் வீதி (ஆனந்­த­பு­ரம்) பகு­தி­க­ளில் கழக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் – 
முன்­னாள் அமைச்­சர் முனை­வர் க.பொன்­முடி   வீதி வீதி­யாக வாக்­கு­களை சேக­ரித்­தார். உடன்   
இரா.சிவா,  டாக்­டர் பொன்.கௌத­ம­சி­கா­மணி,  அனி­பால் கென்­னடி,  ம.ஜெயச்­சந்­தி­ரன்,  காடு­வெட்டி ஏழு­மலை,   க.மும்­மூர்த்தி, கல்­பட்டு வி.இராஜா, RP.முரு­கன்,  கலைச்­செல்வி, சங்­கீத அரசி,   சிவக்­கு­மார்,   வீர­ரா­க­வன்,  ஆவின். தண்­ட­பாணி, ஆறு.சங்­கர், NRC.கரு­ணா­க­ரன் மற்­றும் கழக நிர்­வா­கி­கள் 
உட­னி­ருந்­தார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>