<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,718,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 27 2026 03:41:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260927T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="27092026-CHN-08" position.sequence="08" ex-ref="27092026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">நாடு முழுவதும் 28, 29, 30ம் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்த எதிரொலி!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">அனைத்து வங்கிகளும் இன்று இயங்கும் என அறிவிப்பு! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup906855_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, செப்.27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி நாடு முழு­வ­தும் வங்கி ஊழி­யர்­கள் வரும் 28, 29, 30ம் தேதி என 3 நாட்­கள் ஸ்டிரைக்­கில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இதன் எதி­ரொ­லி­யாக இன்று (ஞாயிற்­றுக்­கி­ழமை) அனைத்து வங்­கி­க­ளும் இயங்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வங்­கி­கள் தக­வல் அனுப்பி வரு­கி­றது. அதே நேரத்­தில் ஸ்டிரைக் அன்று ஏ.டி.எம்.களுக்­கான சேவை கட்­ட­ணம் ரத்­தா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வங்கி வேலை நாட்­களை 5 ஆக குறைக்க வேண்­டும், ஊக்­கத்­தொ­கை­களை சம­மாக வழங்க வேண்­டும் உள்­ளிட்ட கோரிக்­கையை வலி­யு­றுத்தி நாடு முழு­வ­தும் உள்ள தேசிய வங்­கி­க­ளின் அலு­வ­லர், ஊழி­யர் சங்­கங்­க­ளின் கூட்டு நட­வ­டிக்கை குழு சார்­பில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட முடிவு செய்­துள்­ள­னர். இந்த வேலை நிறுத்த போராட்­டத்­தில் இந்­தியா முழு­வ­தும் ஒரு லட்­சம் வங்­கிக் கிளை­க­ளில் பணி­யாற்­றும் 8 லட்­சம் ஊழி­யர்­கள், அதி­கா­ரி­கள்பங்­கேற்க உள்­ள­னர். தமி­ழ­கத்தை பொறுத்­த­வரை 18,000 வங்கி கிளை­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. இதில் பணி­யாற்­றும்60,000 பேர் போராட்­டத்­தில் பங்­கேற்க உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாதத்­தின் கடைசி 3 நாட்­கள் வேலை நிறுத்­தத்தை அறி­வித்­துள்ள நிலை­யில் அத­னைச் சார்ந்த சனி, ஞாயிறு அரசு விடு­முறை நாட்­க­ளாக இருப்­ப­தால் 5 நாட்­கள் வங்­கி­கள் மூடப்­ப­டும் நிலை உரு­வா­னது. 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வங்­கி­கள் தொடர்ந்து செயல்­ப­டா­மல் போனால் மிகப்­பெ­ரிய அள­வில் பாதிப்பு ஏற்­ப­டும் நிலை ஏற்­பட்­டது. அதா­வது நாடு முழு­வ­தும் உள்ள வங்­கி­களை சார்ந்­துள்ள வர்த்­தக பணி­கள், காசோலை பரி­மாற்­றங்­கள், அன்­னிய செலா­வணி உள்­ளிட்ட பல்­லா­யி­ரம் கோடி மதிப்­பி­லான பரி­வர்த்­த­னை­கள் முடங்­கும் நிலைஏற்­பட வாய்ப்பு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அத­னைக் கருத்­தில் கொண்டு மத்­திய நிதித்­துறை வங்கி ஊழி­யர்­க­ளின் வேலை நிறுத்­தத்­திற்கு 
முந்­தைய இன்று (ஞாயிற்­றுக்­கி­ழமை) அனைத்து வங்­கி­க­ளும் செயல்­ப­டும் என்று மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. அதன்­படி நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை வங்­கி­கள் வழக்­கம் போல செயல்­பட உள்­ளது. இந்த விவ­கா­ரத்­தில் பொதுத்­துறை வங்­கி­க­ளும் வாடிக்­கை­யா­ளர்­களை உஷார்­ப­டுத்தி குறுந்­த­க­வல்­களை அனுப்பி வரு­கின்­றன. அதில், அன்­பார்ந்த வாடிக்­கை­யா­ளர்­களே, செப்­டம்­பர் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வங்கி வேலை நிறுத்­தம் நடை­பெ­று­வ­தை­யொட்டி, உங்­கள் வங்கி சேவை­க­ளுக்­காக வங்கி கிளை­கள் செப்­டம்­பர் 27ம் தேதி(நாளை) ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று வழக்­கம் போல் செயல்­ப­டும்” என்ற வாச­கம் இடம் பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதே போன்று, வேலை நிறுத்­தத்­துக்கு முன்பு அத்­தி­யா­வ­சிய வங்கி பரி­வர்த்­த­னை­களை முடித்­துக்­கொ ள்­ளு­மாறு வங்­கி­க­ளும், வாடிக்­கை­யா­ளர்­களை அறி­வு­றுத்தி உள்­ளன. மேலும் பண தேவை­க­ளுக்கு தங்­கள் வங்­கி­க­ளின் ஏடி­எம் மையங்­கள் மற்­றும் இன்­டர்­நெட் பேங்­கிங், யு.பி.ஐ. உள்­ளிட்­ட­வற்றை பயன்­ப­டுத்­து­மா­றும் கேட்­டுக்­கொண்­டுள்­ளன. இந்த விவ­கா­ரத்­தில் பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்­தியா உள்­பட பல்­வேறு பொதுத்­துறை வங்­கி­க­ளும், தனி­யார் வங்­கி­க­ளும் தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களை உஷார்­ப­டுத்தி குறுந்­த­க­வல்­களை அனுப்பி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிலை­யில், ஸ்டிரைக் அறி­விக்­கப்­பட்ட 3 நாட்­க­ளும் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்ட வங்­கி­க­ளில் சேவை­கள் முற்­றி­லும் முடங்­கும் நிலை உள்­ளது. இதை­ய­டுத்து, வரும் திங்­கள் முதல் புதன் கிழமை வரை எவ்­வித கட்­ட­ண­மும் இல்­லா­மல் ஏடி­எம் சேவை வழங்­கப்­ப­டும் என பொதுத்­துறை வங்­கி­கள் அறி­வித்­துள்­ளன. வாடிக்­கை­யா­ளர்­கள் கணக்கு வைத்து இருக்­கும் ஏடி­எம்­மில் மாதத்­திற்கு 5 முறை­யும், பிற வங்­கி­க­ளின் ஏடி­எம்­க­ளில் மாதத்­திற்கு 3 முறை­யும் கட்­ட­ண­மின்றி பணம் எடுக்­க­லாம். அதற்கு மேல் ஏடி­எம்­மில் பணம் எடுத்­தால் ஒரு பரி­வர்த்­த­னைக்கு 23 ரூபாய் வரை கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், வங்கி ஊழி­யர்­கள் வேலை நிறுத்­தம் நடை­பெ­றும் இந்த மூன்று நாட்­க­ளில் இந்த சேவைக் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டாது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பெரும்­பா­லான வங்­கி­க­ளு­டன் உள்ள ஏடி­எம்­க­ளில் வங்கி ஊழி­யர்­கள் தான் பணத்தை நிரப்­பு­வார்­கள். அவர்­கள் ஸ்டிரைக்­கில் ஈடு­ப­டு­வ­தால் ஏடி­எம்­க­ளில் பணம் நிரப்­பு­தல் பணி­கள் பாதிக்­கப்­ப­டும். இத­னால், ஏடி­எம்­கள் இயங்­குமா? என்ற சந்­தே­க­மும் ஏற்­பட்­டுள்­ளது. சென்­னையை பொறுத்­த­வரை ஒரு நாள் வங்கி விடு­முறை என்­றாலே பெரும்­பா­லான ஏடி­எம்­க­ளில் மாலை 5 மணிக்கு மேல் பணம் இல்லை என்ற போர்­டு­களே காண­மு­டி­கி­றது. இந்த நிலை­யில் தொடர் விடு­முறை வரு­கி­றது. இத­னால் உட­னுக்­கு­டன் ஏடி­எம்­கள் பணம் தீரும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே, ஏடி­எம்­க­ளில் உட­னுக்­கு­டன் பணத்தை நிரப்ப நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வாடிக்­கை­யா­ளர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆலோசனைக்கூட்டம் செயலாளர் டாக்டர் அ.சுபேர்கான் தலைமையில் மதுராந்தகம் ஷாலோம் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் மாநில துணைச் செயலாளர்கள் நூருல்லா, ராபர்ட் (e) ராஜதுரை,  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் நூருல் அமீன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் ஆல்பர்ட், விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைப்பாளர் அன்சாரி, சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.டி.அப்துல் ரகுமான், திருவள்ளூர் மத்திய மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சையத்சாவளி, மாவட்ட தலைவர், ஷேக் தாவுத், அமான், மாவட்ட துணை அமைப்பாளர்கள் அனீபா, எஸ்.கே.நசீர், அசோக் மேஷாக், சுபேர்அகமது, முகமது  பாருக், இம்ரான்  வேளச்சேரி நசீம் மற்றும் சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் பல்வேறு சிறுபான்மையின அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>