<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,957,653" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 26 2026 16:17:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260927T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="27092026-MDU-04" position.sequence="04" ex-ref="27092026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">“மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">கங்கையே சூதகமானால் எங்கே போவது?”</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup903229_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஜ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ன­நா­யக ஆட்­சி­முறை என்­பது பெரும்­பான்மை மக்­க­ளின் எண்­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில், ஆட்­சியை உரு­வாக்­கும் முறை­யா­கும். ஆம்! பெரும்­பான்மை மக்­கள் எண்­ணங்­க­ளின் பிர­தி­ப­லிப்­புத்­தான் மக்­க­ளாட்­சி­யா­கும் (Democratic Government). ஜன­நா­யக ஆட்­சி­முறையை ஏற்­றுக்­கொண்ட எந்­த­வொரு நாடா­னா­லும், மக்­க­ளின் ஆட்­சி­மு­றைக்­கான எண்­ணங்­களைதீர்­மா­னிப்­பது தேர்­தல் முறை­தான். குறிப்­பாக, இந்­திய அர­சி­யல் சட்­டம் (Constitution of India) ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­மை­யால், ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நாடா­ளு­மன்­றத்­திற்­கும், மாநில சட்­ட­மன்­றங்­க­ளுக்­கும் தேர்­தல்­கள்­மூ­லம் மக்­க­ளின் பெரும்­பான்மை அடிப்­ப­டை­யில் ஒன்­றி­யத்­தி­லும், மாநி­லங்­க­ளி­லும் ஆட்­சி­கள் அமை­யும் தேர்­தல்­கள்­மூ­லம் மக்­க­ளின் பெரும்­பான்­மையை நடு­நிலை­யோடு தீர்­மா­னிக்­கும் தன்­னிச்­சை­யான (Independent Body) நிறு­வ­ன­மாக இந்­திய அர­சி­யல் சட்­டத்­தில் தேர்­தல் ஆணை­யம் (Election Commission vide Article 324 of the Constitution) உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தேர்­தல் ஆணை­யம் அர­சி­யல் சட்­டத்­தின் அங்­கீ­கா­ரம் பெற்ற சுதந்­தி­ர­மான நிறு­வ­ன­மா­கும். இன்­றைய நில­வ­ரப்­படி தேர்­தல் ஆணை­யத்­தில் மூன்று உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளில் ஒரு­வர் ஆணை­யத்­தின் தலை­வர், மற்­றைய இரு­வர் உறுப்­பி­னர்­கள். அர­சி­யல் 
சட்­டம் வகுத்­துள்ள விதி­க­ளின்­படி இன்­றைய தேர்­தல் ஆணை­யத்­தின் தலைமை தேர்­தல் ஆணை­ய­ராக ஞானேஷ்­கு­மார் அவர்­க­ளும் ஆணை­ யத்­தின் உறுப்­பி­னர்­க­ளாக சுக்­பீர்­சந்து அவர்­களும் விவேக்­ஜோசி அவர்­க­ளும் பொறுப்­பில் உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் ஆணை­யத்­தி­னு­டைய பணி­கள் இந்­திய அர­சி­யல் சட்­டம் 324வது பிரி­வின்­படி, தேர்­தல்­களை நடத்­து­வ­தும் அதன் நட­வ­டிக்­கை­களை மேற்­பார்­வை­யி­டு­தல் (Superintendence), வழி­காட்­டு­தல் (Direction), கட்­டுப்­ப­டுத்­து­தல் (Control) ஆகிய பணி­க­ளா­கும். தேர்­தல் ஆணை­யத்­தி­னு­டைய தலை­வர் இந்­தப் பணி­க­ளில் ஆர்­வ­மும், அக்­க­றை­யும் எடுத்­துக் கொள்­வ­தை­விட சிறப்­புத் தீவிர திருத்­தத்­தில் (Special Intensive Revision) தீவிர கவ­னம் எடுத்­துக்­கொண்டு சிறப்­புத் தீவிர திட்­டப் பணி­களை மேற்­கொண்­டார். இந்­தப் பணி­கள் நேர்­மை­யாக நடை­பெ­ற­வில்லை என­வும், உண்­மை­யான வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும், பல்­வேறு புகார்­கள் எதிர்க்­கட்­சி­கள் ஆட்­சி­யி­லி­ருக்­கும் மாநி­லங்­க­ளில் எழுப்­பப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்­தச் சிறப்­புத் தீவிர திருத்­தம் தேர்­தல் நடை­பெ­று­வ­தற்கு ஓரிரு மாதங்­க­ளுக்கு முன்­பாக நடத்­தப்­பட்­ட­மை­யால் பல்­வேறு குள­று­ப­டி­கள் மற்­றும் குறை­பா­டு­களை அவ்­வ­போது தொடர்­பு­டைய மாநி­லங்­க­ளில் எடுத்­துச்­சொல்­லி­யும், தேர்­தல் ஆணை­யம் அத்­த­கைய பரிந்­து­ரை­க­ளைப்­பற்றி கிஞ்­சிற்­றும் பரி­சீ­லனை செய்­யா­மல் தன்­னிச்­சை­யா­கவே முடி­வு­களை மேற்­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­தில் தேர்­தல் நடை­பெற்ற மாநி­லங்­க­ளி­லி­ருந்து அர­சி­யல் கட்­சி­யின் தலை­வர்­கள், சிறப்­புத் தீவிர திருத்த திட்­டம் அர­சி­யல் கார­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஒரு­த­லை­பட்­ச­மாக நடை­பெற்­றி­ருக்­கி­றது என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்­கள்.எனி­னும், தேர்­தல் ஆணை­யம் இது­பற்றி அக்­கறை எடுத்­துக்­கொள்­ளா­மல் தன்­னிச்­சை­யா­கவே முடி­வு­களை தொடர்ந்து மேற்­கொண்­டது. தேர்­தல் ஆணை­யத்­தின் தலைமை ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் தன்­னிச்­சை­யாக மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளுக்கு தெரி­யா­ம­லேயே திட்­ட­மிட்டு முடி­வு­களை மேற்­கொண்­டார் என்ற அதிர்ச்­சி­த­ரும் செய்­தி­யினை மற்­றைய இரு ஆணை­ யர்­க­ளான சுக்­பீர்­சிங்­சந்து அவர்­க­ளும், விவேக்­ஜோசி அவர்­க­ளும் தற்­பொ­ழுது தெரி­வித்த செய்­தி­கள் அனைத்து ஆங்­கில/தமி­ழே­டு­க­ளில் வெளி­வந்து நாட்டு மக்­க­ளி­டையே பதற்­றத்­தை­யும் அச்­சத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­ய­தோடு, தேர்­தல் ஆணை­யத்­தின்  செயல்­பா­டு­க­ளும்,  நம்­ப­கத்­தன்­மை­யும் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­குமார்மேற்­கொண்ட முடி­வு­கள் மற்­றைய இரு ஆணை­யா­ள­ருக்­கும் தெரி­யா­ம­லேயே எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் என்ற நிலை­யி­லும், மற்­றைய இரு ஆணை­யா­ள­ருக்­கும் தலைமை தேர்­தல் ஆணை­யர் எடுத்த முடி­வு­கள் தொடர்­பான எந்த விப­ர­மும்  தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று அந்த ஆணை­யத்­தின் உறுப்­பி­னர்­களே வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­துள்ள நிலை­யில், தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் எப்­படி நேர்­மை­யான முடி­வு­களை எடுத்­தி­ருக்க முடி­யும் என்ற ஆழ­மான ஐயப்­பாடு நாட்டு மக்­க­ளி­டை­யே­யும், அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளி­டை­யே­யும் வினா­வை­யும் வியப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­ருக்­கி­றது. தலைமை தேர்­தல் ஆணை­யர் தன்­னிச்­சை­யான ரக­சிய முடி­வு­கள் மேற்­கொள்­வ­தற்கு அவ­ரு­டைய அர­சி­யல் சார்பு நிலைப்­பா­டு­தான் கார­ண­மாக இருக்க முடி­யும் என்ற அனு­மா­னத்­திற்­கு­தான் அனை­வ­ரும் வர­மு­டி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­குமா­ரின் இத்­த­கைய ஒரு­த­லைப்­பட்­ச­மான முடி­வு­க­ளின் கார­ண­மாக இது­வரை நடந்­து­மு­டிந்த தேர்­தல்­களின் முடி­வு­கள் கேள்­விக்­கு­றி­யா­கின்­றன? இத்­த­கைய நிலை­மையை உரு­வாக்­கிய தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் நட­வ­டிக்கை என்­பது தேச­வி­ரோ­த­செ­யல் என்­ப­தில் மாற்­றுக்­கருத்­திற்கு இட­மில்லை. இந்­திய ஜன­நா­ய­கத்­தின்­மீது அசைக்க முடி­யாத அக்­க­றை­யும் நம்­பிக்­கை­யும் கொண்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­ டைய தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரி­னு­டைய திரை­ம­றைவு நட­வ­டிக்­கை­க­ளும், தேர்­தல் ஆணை­யத்­தின் மற்­றைய இரண்டு உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­களை பகிர்ந்து கொள்­ளா­மல் இருட்­ட­டிப்­புச் செய்த அவ­ரின் போக்­கும், நியா­ய­மான தேர்­தல் நடை­மு­றை­களை சித­ற­டித்து ஒரு­த­லை­பட்­ச­மான முடி­வு­ க­ளுக்கு வழி­வ­குக்­கும் என்ற நிலை­யில் தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் ராஜி­னாமா செய்ய வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­ருப்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தா­கும். தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் முன்­மொ­ழிந்­த­தைத் தொடர்ந்து ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்கை கொண்ட பல்­வேறு அர­சி­யல் கட்­சி­க­ளும் தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் ராஜி­னா­மாவை தொடர்ந்து வழி­மொ­ழிந்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, இரு­பால் இளை­ஞர்­க­ளால் வழி­ந­டத்­தப்­ப­டும் “கரப்­பான் ஜன­தாக் கட்­சி­யின்” (CJP)  தலை­வர்­க­ளும், தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் ராஜி­னா­மாவை வலி­யு­றுத்­து­வ­தோடு அவர் மீண்­டும் தொடர்ந்­தால், நாங்­கள் போராட்­டத்தை தொடங்க வேண்­டிய கட்­டாய சூழ்­நிலை உரு­வா­கு­மென எச்­ச­ரிக்கை மணி­ய­டித்­துள்­ளார்­கள். எனவே, வேலியே பயிரை மேய­வ­தைப் போல தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் இத்­த­கைய ஜன­நா­ய­கத்தை உரு­கு­லைக்­கும் நட­வ­டிக்­கைக்கு கார­ண­மென கரு­தப்­பட்ட தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் தன் பொறுப்பை கால­தா­ம­தப்­ப­டுத்­தா­மல், ராஜி­னாமா செய்ய வேண்­டும் என்­பதே அனைத்து தரப்­பி­ன­ரின் எதிர்­பார்ப்­பா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தென்­த­மி­ழ­கத்­தின் தேசி­யத் தலை­வ­ரான மறைந்த பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் அவர்­கள் “தியாக வாழ்க்­கையே தேசிய வாழ்க்கை” என வாழ்ந்து காட்­டி­ய­வர் என்­பதை நாட­றி­யும். அப்­ப­டிப்­பட்ட தேசி­யத் தலை­வர் இந்­தி­ய­நாடு விடு­த­லைப்­பெற்ற பின்­னர் ஜன­நா­யக அர­சி­னு­டைய அங்­கங்­க­ளாக கரு­தப்­ப­டு­கின்ற நிர்­வாக அமைப்­பு­கள் எப்­படி நேர்­மை­யாக செயல்­பட வேண்­டும் என்­பதை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில், என்­றும் உயிர்ப்­போடு வழி­காட்­டும் இந்­தக் கருத்­தினை தெரி­வித்­துள்­ளார்­கள். இந்த ஜன­நா­யக நிறு­வ­னங்­கள் சீர்­கு­லைந்­து­போ­கு­ மே­யா­னால், ஜன­நா­ய­கம் திசை­மாறி சர்­வா­தி­கா­ரத்தை நோக்­கிச் சென்­று­வி­டும் என்­றக் கருத்தை வலி­யு­றுத்­தும் வகை­யில் அவர் சொன்ன அற்­பு­த­மான வரி­கள்­தான்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“மங்கை சூத­க­மா­னால் கங்­கை­யிலே மூழ்­க­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கங்­கையே சூத­க­மா­னால் எங்கே போவது என்­ப­தா­கும்”
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பசும்­பொன் திரு­ம­க­னா­ரின் இந்­தக் கேள்வி இன்­றைய நாட்டு மக்­க­ளுக்கு வெளிச்­சத்­தை­யும், விழிப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் ஐய­மில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எழுங்­கள்! விழி­யுங்­கள்!! இல்­லை­யென்­றால் எப்­போ­தும் வீழ்ந்து கிடப்­பீர்­கள்!!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">என்ற  எழுச்­சி­யூட்­டும் வர­லாறு திரும்­பட்­டும்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>