<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,67,958,1057" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 26 2026 14:52:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260927T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="27092026-TRY-05" position.sequence="05" ex-ref="27092026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="58">மக்களாட்சியை மரணக்குழியில் தள்ளிய தேர்தல் ஆணையம்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="57">அன்றே எச்சரித்த ஜனநாயகக் காவலர் மு.க.ஸ்டாலின்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup901516_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ந்­தி­யக் குடி­மக்­க­ளின் வலி­மை­யான அதி­கா­ரம் வாக்­கு­ரிமை. ஐந்­தாண்­டு­க­ளுக்கு ஒரு முறை ஒவ்­வொரு இந்­தி­ய­னும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய ஜன­நா­யக ஆயு­தம் அது.  மக்­கள் நினைத்­தால் எந்தஒரு கட்­சி­யை­யும் அதி­கா­ரத்­தில் உட்­கார வைக்க முடி­யும். அதே மக்­கள் நினைத்­தால், எந்­தக் கட்­சி­யை­யும் அதி­கா­ரத்­தி­லி­ருந்து கீழே இறக்க முடி­யும். இது­தான் ஜன­நா­ய­கத்­தின் அடிப்­படை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேர்­தல் மூல­மாக வழங்­கப்­ப­டும் இந்த ஜன­நா­யக அதி­கா­ரத்தை முறைப்­ப­டி­யும் பார­பட்­ச­மற்ற வகை­யி­லும் நிறை­வேற்ற வேண்­டிய கட­மை­யும் பொறுப்­பும் இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யத்­திற்­கு­ரி­யது. அத­னால்­தான், தேர்­தல் ஆணை­யம் தற்­சார்பு அதி­கா­ரம் கொண்ட அமைப்­பா­கச் செயல்­ப­டு­கி­றது. இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தில் ஒரு தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரும், இரண்டு தேர்­தல் ஆணை­யர்­க­ளும்இருப்­பார்­கள். எந்த ஒரு முக்­கிய முடி­வாக இருந்­தா­லும் இந்த மூவ­ரும் ஒரு­மித்த கருத்­து­டன் சேர்ந்து எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இன்று நடப்­பதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அன்றே கணித்த தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யத் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர்ஞானேஷ்­கு­மார் தன்­னிச்­சை­யா­க­வும் தான்­தோன்­றித்­த­ன­மா­க­வும் ‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்­ப­டும் சிறப்பு வாக்­கா­ளர் சீராய்­வுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார் என்று மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளான சுக்­பீர் சிங் சந்து மற்­றும் விவேக் ஜோஷி ஆகி­யோர் தெரி­வித்­துள்ள குற்­றச்­சாட்­டு­கள் டெல்­லி­யி­லி­ருந்து வெளி­யா­கும் ‘தி இண்­டி­யன் எக்ஸ்­பி­ரஸ்‘ நாளேட்­டில் 23.9.2026 அன்று ரித்­திகா சோப்ரா எழு­திய செய்­திக் கட்­டுரை வாயி­லாக அம்­ப­ல­மாகி, நாடு முழு­வ­தும் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­தல் உள்­பட பல மாநி­லங்­க­ளின் தேர்­தல்­க­ளி­லும் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­யால் இலட்­சக்­க­ணக்­கான பேர் வாக்­கு­ரி­மையை இழந்­த­னர். இத­னால், தேர்­தல் முடி­வு­க­ளி­லும் எதிர்­பா­ராத மோச­மான மாற்­றங்­கள் ஏற்­பட்­டன. எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கையை, தேர்­த­லுக்கு மிக நெருக்­க­மாக இந்­திய தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­த­போதே, அந்த நடை­மு­றையை எதிர்த்து ஒலித்த குரல்­க­ளில் முதன்­மை­ யா­னது. ஜன­நா­ய­கக் காவ­ல­ரான கழ­கத் தலை­வர் திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் குர­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பீஹார் மாநி­லத்­தில் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­பாக எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தன் விளை­வாக முஸ்­லிம்­கள், பெண்­கள், தலித் மக்­கள், ஏழை­கள் உள்­ளிட்­டோ­ரின் வாக்­கு­கள் பறி­போ­யின. இந்த வாக்­கு­கள் பா.ஜ.க. கூட்­ட­ணிக்கு எதி­ரான வாக்­கு­க­ளா­கத் தேர்­த­லில் பதி­வா­கும் என்­ப­தா­லேயே, ஒன்­றிய பா.ஜ.க. அர­சால் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ராக நிய­மிக்­கப்­பட்ட ஞானேஷ்­கு­மார் வேக வேக­மாக எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு அவர்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பறித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யக் குடி­யு­ரிமை அல்­லா­த­வர்­க­ளான பங்­க­ளா­தேஷ் நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் பீஹார், மேற்­கு­வங்­கம் போன்ற மாநி­லங்­க­ளில் அதி­க­ள­வில் இருப்­ப­தால் சிறப்பு வாக்­கா­ளர் சீர­மைப்பு நட­வ­டிக்கை விரைந்து மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தேர்­தல் ஆணை ­யத்­தின் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“தேர்­தல் ஆணை­யம் என்­பது வாக்­கு­ரி­மையை உறுதி செய்ய வேண்­டிய அமைப்பே தவிர, குடி­யு­ரி­மையை ஆராய்­வ­தற்­கான அதி­கா­ரம் கொண்ட அமைப்­பல்ல என்­ப­தை­யும், 18 வயது நிரம்­பிய ஆண்-­பெண் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கும் வாக்­கு­ரி­மையை வழங்­கு­வ­து­தான் தேர்­தல் ஆணை­யத்­தின் பணி. வாக்­கு­ரி­மை­யைப் பறிப்­ப­தல்ல” என்­பதை உரத்­துச் சொன்ன இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். 2025ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் எஸ்.ஐ.ஆரின் உள்­நோக்­கம் குறித்த தனது கண்­டன அறிக்­கையை கழ­கத் தலை­வர் அவர்­கள் வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஜன­நா­யக ஆயு­த­மான வாக்­கு­ரி­மை­யைப் பறிக்­கும் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்கை தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் சிறப்பு விவா­தம் நடத்த வலி­யு­றுத்தி, 2025 ஆகஸ்ட் 1ஆம் நாள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் எம்.பி.க்களும் மற்ற எதிர்க்­கட்சி எம்.பி.க்களும் மக்­க­ளவை சபா­நா­ய­க­ருக்கு கோரிக்கை விடுத்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர். 2025 ஆகஸ்ட் 27ஆம் நாள் பீஹார் தலை­ந­கர் பாட்­னா­வில் நடை­பெற்ற ‘வாக்­கா­ளர் உரி­மைப் பேர­ணி’­யில் நேரில் கலந்து கொண்டு, தேர்­தல் ஆணை­யத்­தின் நட­வ­டிக்­கை­க­ளுக்­குக் கண்­ட­னத்­தைத் தெரி­வித்­த­வர் கழ­கத் தலை­வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேர்­தல் ஆணை­யத்­தின் கண்­மூ­டித்­த­ன­மான செயல்­பா­டு­க­ளால் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் பெரும் குழப்­பம் ஏற்­பட்­டது. இலட்­சக்­க­ணக்­கா­ன­வர்­கள் வாக்­க­ளிக்க முடி­யாத நிலை­யில், தேர்­தலை நடத்­தி­னார்­கள். பீஹார் மாநி­லத்­தில் பா.ஜ.க. கூட்­டணி அரசு அமைந்­தது. நினைத்­த­வர்­க­ளின் விருப் ­பத்தை நிறை­வேற்­றிய களிப்­பில், தமிழ்­நாடு உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் சட்­ட­மன்­றத் தேர்­தல் நெருங்கிவந்த நிலை­யில், சிறப்பு வாக்­கா­ளர் சீர்­தி­ருத்­தம் எனும் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது தேர்­தல் ஆணை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தமி­ழர்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைக் காத்­திட களம் கண்ட கழ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">குடி­மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பறிக்­கும் ஜன­நா­யக விரோ­தச் செயலை எதிர்க்­கும் வகை­யில் 2025 அக்­டோ­பர் 10ஆம் நாள் அண்ணா அறி­வா­ல­யத்­தில் தோழ­மைக் கட்­சித் தலை­வர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார் தமிழ்­நாடு முத­ல­மைச் ­ச­ராக இருந்த கழ­கத் தலை­வர் அவர்­கள். மழைக்­கா­ல­மான நவம்­பர் மாதத்­தில் மக்­களை அவ­திக்­குள்­ளாக்­கும் வகை­யில் எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கையை தேர்­தல் ஆணை­யம் மேற்­கொள்­வ­தில் உள்ள உள்­நோக்­கம் உள்­ளிட்ட பல­வற்­றை­யும் இந்த ஆலோ­ச­னைக் கூட்­டம் விவா­தித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அத­னைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு நவம்­பர் 2ஆம் நாள் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரான கழ­கத் தலை­வர் தலை­மை­யில் எஸ்.ஐ.ஆர். குறித்த அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் நடை­பெற்­றது. அர­சி­யல் காழ்ப்­பு­ணர்­வின் கார­ண­மாக த.வெ.க. உள்­ளிட்ட கட்­சி­கள் இந்­தக் கூட்­டத்­தைப் புறக்­க­ணித்­தா­லும், ஜன­நா­ய­கத்­தில் உண்­மை­யான நம்­பிக்­கை­யுள்ள கட்­சி­கள் பங்­கேற்­றன. கூட்­டத்­தில் நடை­பெற்ற ஆலோ­ச­னை­க­ளுக்­குப் பிறகு, “ஜன­நா­யக விரோ­த -­சட்­ட­வி­ரோத எஸ்.ஐ.ஆர் முயற்­சி­க­ளைத் தேர்­தல் ஆணை­யம் நிறுத்தி வைக்க வேண்­டும். இல்­லை­யென்­றால் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் அனைத்­துக் கட்­சி­கள் சார்­பில் வழக்கு தாக்­கல் செய்­யப்­ப­டும்” என்ற தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தி.மு.க.வின் ஜன­நா­ய­கக் குரல் டெல்லி முதல் தமிழ்­நாடு வரை சில­ருக்குக் கசந்­தது. ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம்’ என்­பது ஒவ்­வொரு தேர்­த­லின் போதும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­து­தானே, தி.மு.க இதை ஏன் எதிர்க்­கி­றது என சில கட்­சி­கள் கேள்வி எழுப்­பின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்­தின்­போது, தேர்­தல் பணி அலு­வ­லர்­கள் வீடு வீடா­கச் சென்று, வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உள்­ள­வர்­கள் அவர்­க­ளின் முக­வ­ரி­யில் இருக்­கி­றார்­களா? மாறி­விட்­டார்­களா? இறந்­த­வர்­கள் யார்? எனக்கண்­ட­றிந்து அதன்­படி திருத்­தம் செய்­வார்­கள். 18 வயது நிரம்­பிய புதிய வாக்­கா­ளர்­க­ளைப் பட்­டி­ய­லில் இணைப்­ப­தற்­கான வழி­மு­றை­களை மேற்­கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எஸ்.ஐ.ஆர். என்­பது முற்­றி­லும் மாறு­பட்ட நட­வ­டிக்கை.  தேர்­த­லுக்கு முன்­பாக, தமிழ்­நாட்­டில் ஒட்­டு­மொத்த வாக்­கா­ளர்­கள் பெயர்­க­ளும் நீக்­கப்­பட்­டு­விட்­டன. அதா­வது, அத்­தனை பேரும் வாக்­கு­ரி­மை­யற்ற குடி­மக்­க­ளா  க்­கப்­பட்­ட­னர். 18 வய­துக்கு மேற்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளின் இருப்பை நிரூ ­பித்து, பெயரைச் சேர்க்க வேண்­டிய வகை­யில் படி­வத்தை நிரப்­பித் தர வேண்­டிய நிலைமை உரு­வா­னது. தேர்­தல் ஆணை­யம் தனது பணியை வாக்­கா­ளர்­க­ளின் மேல் திணித்­தது. “வாக்­கு­ரி­மை­யைக் காப்­பாற்­று­வதே பெரும்­பாடு” என்ற நெருக்­க­டிக்­குள்­ளாக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்தை தி.மு.க. எதிர்க்­க­வில்லை, எஸ்.ஐ.ஆர். என்ற பெய­ரில் வாக்­கு­ரி­மை­யைப் பறிப்­ப­தைத்­தான் எதிர்க்­கி­றோம் என்­பதை பொது­மக்­க­ளுக்கு விளக்­கி­டும் வகை­யில்2025 நவம்­பர் 9ஆம் நாள் கழ­கத் தலை­வர் அவர்­கள் காணொலி வெளி­யிட்டு தெளி­வு­ப­டுத்­தி­னார். நவம்­பர் 11 அன்று அனைத்து மாவட்­டத் தலை­ந­க­ரங்­க­ளி­லும் கண்­டன ஆர்ப்­பாட்­ட­மும் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தகு­தி­யுள்ள ஒரு வாக்­கா­ள­ரின் வாக்­கு­ரி­மை­யும் பறி­போ­கா­மல் பாது­காப்­ப­தற்­காக கழ­கத்­தின் சார்­பில் பொது­மக்­க­ளுக்­கான சந்­தே­கங்­க­ளைத் தீர்க்­க­வும், வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் பெயர் இடம்­பெ­று­வதை உறுதி செய்­ய­வும் 080654 20020 என்ற உதவி எண்­ணை­யும் வழங்­கி­னார். தமிழ்­நாட்டு மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யக் காப்­பாற்­று­வ­தற்­காக தி.மு.க.வின் சார்­பில் ‘வார் ரூம்’ அமைக்­கப்­பட்டு, 234 தொகு­தி­க­ளில் ஏறத்­தாழ 70ஆயி­ரம் வாக்­குச்­சா­வ­டி­க­ளும் கண்­கா­ணிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தி.மு.க.வின் சட்­டப்­போ­ராட்­டத்­தால் கிடைத்த உரிமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைக் காப்­பாற்­றும் வகை­யில், தி.மு.க. அமைப்­புச் செய­லா­ளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்­கள் கழ­கத்­தின் சார்­பில் எஸ்.ஐ.ஆருக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­தார். ஜன­நா­ய­கத்­தில் நம்­பிக்­கை­யுள்ள கட்­சி­க­ளும், அமைப்­பு­க­ளும் வழக்­கு­கள் தொடர்ந்­தன. வழக்கு விசா­ர­ணை­யில், தி.மு.க தரப்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்ட வாதங்­க­ளின் அடிப்­ப­டை­யில், எஸ்.ஐ.ஆர். பணி­க­ளின்­போது ஆதார் அட்­டையை ஆவ­ண­மாக ஏற்­றுக் கொள்ள அனு­ம­தித்­த­னர் நீதி­ப­தி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பீஹா­ரில் ஆதார் அட்­டையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என நிரா­க­ரித்­தி­ருந்­தது இந்­திய தேர்­தல் ஆணை­யம். நாட்­டில் எல்­லா­வற்­றுக்­கும் ஆதாரை ஆதா­ர­மா­கக் கொள்­ளும் நிலை­யில், வாக்­கு­ரி­மை­யைத் தக்க வைக்க ஆதார் அட்­டையை ஏன் ஆவ­ண­மாக ஏற்க மறுக்­கி­றது தேர்­தல் ஆணை­யம் என்­ப­து­தான் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தி.மு.க. தரப்­பின் வாதம். அந்த வாதத்­தில் உள்ள நியா­யத்தை உணர்ந்து, உச்­ச­நீ­தி­மன்­றம் அளித்த உத்­த­ர­வி­னால், இந்­தியா முழு­வ­தும் வாக்­கா­ளர்­கள் தங்­கள் ஆதார் அட்­டையை ஆவ­ண­மா­கக் காட்­டு­வ­தற்கு வழி பிறந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“எஸ்.ஐ.ஆர். என்­பது வாக்­கு­ரி­மை­யைப் பறிப்­ப­தற்­காக இந்­திய தேர்­தல் ஆணை­யம் மேற்­கொள்­கின்ற மோச­டி­யான செயல்­பாடு” என்­பதை அப்­போதே எச்­ச­ரித்­த­வர் கழ­கத் தலை­வர் அவர்­கள். அதை தேர்­தல் ஆணை­யத்­தின் இரு ஆணை­யர்­க­ளும் இப்­போது வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதை ஊட­கங்­கள் அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தாம­த­மாக அம்­ப­ல­மா­கும் 
மோச­டி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">18 வய­துக்கு மேற்­பட்ட வாக்­கா­ளர்­கள் தங்­கள் பெயரை வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இடம்­பெ­று­வதை உறுதி செய்­வ­தற்­கான படி­வம் 6-ல் வாக்­கா­ள­ரின் பெற்­றோர்-­தாத்­தா-­பாட்டி உள்­ளிட்­ட­வர்­கள் முந்­தைய எஸ்.ஐ. ஆரின் போது எந்த வாக்­குச்­சா­வ­டி­யில் வாக்­க­ளித்­தார்­கள் என்­பது போன்ற  சிக்­க­லான கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டி­ருந்­தது குறித்து தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரி­டம் தேர்­தல் ஆணை­யர்­கள் சுக்­பீர் சிங் சந்­து­வும், விவேக் ஜோஷி­யும் தங்­கள் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். “அர­சின் சார்­பில் உரிய முறை­யில் சட்­டத் திருத்­தம் மேற்­கொள்­ளா­மல் இப்­ப­டிச் செய்­வது சட்­ட­வி­ரோ­தம்” என்­பதை சுட்­டிக்­காட்­டி­ யும் அதனை அலட்­சி­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­போ­லவே, தொகுதி வாரி­யாக வாக்­கா­ளர் பட்­டி­யலை சரி­பார்க்­கக்­கூ­டிய தேர்­தல் பதிவு அலு­வ­லர்­க­ளுக்கு, உரி­ய­ஆன்­லைன் சாஃப்ட்­வேர் வச­தியை செய்து தரா­மல், தலை­மைத் தேர்­தல் ஆணை­யத்­தின் மையப்­ப­டுத்­தப்­பட்ட சாஃப்ட்­வேர் மூலம் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால், வாக்­கா­ளர் பட்­டி­ய­லின் உண்­மைத்­தன்மை உறுதி செய்­யப்­பட முடி­யா­மல் இருப்­ப­தை­யும் ஆணை­யர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். அதை­யும் புறக்­க­ணித் ­துள்­ளார் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார். 10 மாதங்­க­ளில் 14 முறை இரு ஆணை­யர்­க­ளும் தங்­கள் அதி­ருப்­தியை வெளி­யிட்­டும் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் எதை­யும் கேட்­க­வில்லை என்­ப­து­தான் முதன்­மைக் குற்­றச்­சாட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தேர்­தல் ஆணை­யமா? பா.ஜ.க அலு­வ­ல­கமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்­கான தேர்­வுக் குழு­வில் பிர­த­மர், எதிர்க்­கட்­சித் தலை­வர் ஆகி­யோ­ரு­டன் உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யும் இடம்­பெ­ற­வேண்­டும் என்­கிற உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் 5 நீதி­ப­தி­கள் அடங்­கிய அர­சி­யல் சாசன அமர்வு அளித்த தீர்ப்­புக்கு மாற்­றாக, 2023ல் சட்­டத்­தி­ருத்­தம் செய்­யப்­பட்டு, தலைமை நீதி­ப­திக்­குப் பதில், ஒன்­றிய அமைச்­சர் இருந்­தால் போதும் என்ற நிலையை உரு­வாக்கி, மூவர் குழு­வில் பிர­த­மர்-­அ­வ­ரது அமைச்­ச­ர­வை­யில் உள்­ள­வர் ஆகிய இரு­வர் என்­கிற பெரும்­பான்­மையை முன்­வைத்து, குடி­ய­ர­சுத் தலை­வ­ரால் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ராக்­கப்­பட்­ட­வர்­தான் ஞானேஷ்­கு­மார். “பத­வி­யேற்­றது முதலே, பா.ஜ.க.வின் அலு­வ­ல­க­மாக தேர்­தல் ஆணை­யத்தை மாற்­றி­விட்­டார்” என்ற புகார்­கள் கிளம்­பின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முன்­ளாள் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் எஸ்.ஒய்.குரேஷி, முன்­னாள் தேர்­தல் ஆணை­ய­ரும் ஒரு பக்க சார்­பா­கச் செயல்­பட விரும்­பா­மல் பதவி வில­கி­ய­வ­ரு­மான அசோக் லவஸா உள்­ளிட்­டோர், “இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் முடி­வு­கள் ஒரு­மித்த கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­ப­ட­வேண்­டும்” என்­ப­தை­யும், “இரு ஆணை­யர்­க­ளின் ஆட்­சே­பங்­க­ளை­யும் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரின் முடி­வு­க­ளை­யும் பொது­வெ­ளி­யில் வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம்” என்­றும் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பல கோடி வாக்­கா­ளர்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­யைப் பறித்த தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் பதவி விலக வேண்­டும் என்ற குரல் கழ­கத் தலை­வ­ரில் தொடங்கி பல தலை­வர்­க­ளி­ட­மி­ருந்­தும் வெளிப்­ப­டு­கி­றது. ஞானேஷ்­கு­மாரை கைது செய்ய வேண்­டும்என்­கிற குரல்­க­ளும் கேட்­கின்­றன. எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­ளின் உள்­நோக்­கத்தை அன்றே உணர்ந்து எச்­ச­ரித்­தார் ஜன­நா­ய­கக் காவ­ல­ரான நம் கழ­கத் தலை­வர். இன்று அது கசப்­பான உண்­மை­யா­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>