<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,349,725,1218" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 27 2026 22:32:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260928T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="28092026-MDU-08" position.sequence="08" ex-ref="28092026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">தக­வல் அறி­யும் உரிமை மூலம் சட்­டம் – ஒழுங்கு விவ­ரங்­க­ளைப் பெறு­வ­தற்கு விலக்கு அளிப்­பதா?</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சத்­து­ண­வுத் திட்­டத்­தில் முட்டை வழங்­கு­வது திட்­ட­மிட்­டுத் தவிர்க்­கப்­ப­டு­கி­றதா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்கை</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, செப்.28–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி. வீர­மணி விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து, மாண­வர்­க­ளைப் பள்­ளி­யில் பெரு­ம­ள­வில் சேர்ப்­ப­தற்­கா­க­வும், ஏழை – எளிய மாண­வர்­க­ளுக்கு அடிப்­ப­டைத் தேவை­யான உணவு கிடைப்­பதை உறு­தி­செய்­ய­வும், நீதிக்­கட்­சி­யின் தோற்­று­நர்­க­ளில் ஒரு­வ­ரான சர். பிட்டி. தியா­க­ரா­யர் அவர்­கள், சென்னை மாந­க­ராட்­சி­யின் தலை­வ­ராக இருந்த போது, 1920 ஆம் ஆண்டு செப்­டம்­பர் 16 அன்று நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில், ஆயி­ரம் விளக்­குப் பகு­தி­யில் இருந்த பள்­ளி­யில் காலை உண­வுத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இத்­திட்­டத்­தில் பின்­னர் மேலும் நான்கு பள்­ளி­கள் இணைக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அந்த அய்ந்து பள்­ளி­க­ளி­லும் மாண­வர் சேர்க்­கை­யில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பிரிட்­டிஷ் அரசு அனு­மதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மறுத்­த­தால்...</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1923 இல் 811 ஆக இருந்த மொத்த மாண­வர் எண்­ணிக்கை 1925 இல் 1,671 ஆக உயர்ந்­தது. இருப்­பி­னும், தொடக்­கக் கல்வி நிதி­யி­லி­ருந்து மாண­வர்­க­ளுக்கு மதிய உணவு வழங்­கு­வ­தற்­கான செலவை மேற்­கொள்ள பிரிட்­டிஷ் அரசு அனு­மதி மறுத்­த­தால், 1925 ஆம் ஆண்டு ஏப்­ரல் ஒன்­றாம் தேதி­யு­டன் இத்­திட்­டம் முடி­வுக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மதிய உண­வுத் திட்­டத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அறி­மு­கப்­ப­டுத்­திய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கல்வி வள்­ளல் காம­ரா­ஜர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதன் பின்­னர், குலக்­கல்­வித் திட்­டத்­தைக் கொண்டு வந்த ராஜா­ஜியை ஒழித்து, தந்தை பெரி­யா­ரால் முத­ல­மைச்­ச­ராக்­கப்­பட்டு, ராஜாஜி மூடிய 6,000 பள்­ளிக் கூடங்­க­ளைத் திறந்­தது  மட்­டு­மல்­லா­மல், மேலும் 6,000 பள்­ளி­க­ளைத் திறந்த கார­ணத்­தால், கல்வி வள்­ளல் என்று போற்­றப்­பட்ட காம­ரா­ஜர், 1957 ஆம் ஆண்­டில், அப்­போ­தைய சென்னை மாநி­லம் முழுக்க, மதிய உண­வுத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.  கல்­வி­யா­ள­ரும், பெரி­யார் நெறி­யா­ள­ரு­மான நெ.து.சுந்­த­ர­வ­டி­வேலு அவர்­கள் கல்­வித் துறைப் பொறுப்­பா­ள­ராக இருந்து இத­னைச் செயல்­ப­டுத்­தி­னார். அதற்­குப் பெரி­தும் தனி­யா­ரின் உத­வி­க­ளையே அரசு நாடி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர் 1982 இல், அப்­போ­தைய முத­ல­மைச்­சர் எம். ஜி. ஆர். அர­சின் நிதி­யி­லேயே தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளுக்­குச் சத்­து­ண­வுத் திட்­டத்தை அறி­வித்து, அதே ஆண்டு ஜூலை ஒன்­றாம் தேதி, திருச்சி மாவட்­டம் பாப்­பாக்­கு­றிச்­சி­யில் உள்ள ஒரு பள்­ளி­யில் தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முட்டை, வாழைப்­ப­ழம் வழங்­கி­னார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘சத்­து­ணவு என்­பது திட்­டத்­தின் பெய­ரில் மட்­டும் இருந்­தால் போதாது’ என்று கரு­திய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள், 1989 ஆம் ஆண்­டில், சத்­து­ண­வில் இரு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை முட்டை வழங்க வகை செய்­தார். பின்­னர் மீண்­டும் ஆட்­சிக்கு வந்த சூழ­லில், 1998 முதல் வாரத்­திற்கு ஒரு­முறை முட்டை வழங்க ஆணை­யிட்­டார். அடுத்து ஆட்­சிக்கு வந்­த­போது 2007 ஆம் ஆண்­டில், வாரத்­தில் மூன்று நாட்­கள் முட்டை வழங்­கப்­பட்­டது.  அடுத்த ஆண்டு, வாரத்­தின் அய்ந்து நாட்­க­ளும் முட்டை வழங்­க­வும், அதி­லும் பேதம் பாரா­மல், முட்டை சாப்­பி­டும் பழக்­க­மில்­லாத மாண­வர்­க­ளுக்­காக வாழைப்­ப­ழம் வழங்­க­வும் வகை செய்­தார் கலை­ஞர். பின்­னர் ஜெய­ல­லிதா அம்­மை­யார் ஆட்­சிக் காலத்­தில் கலவை சோறு­கள் வழங்க வகை செய்­யப்­பட்­டது. இவை­யெல்­லாம் மதிய உண­வுக்­கான திட்­டங்­கள் (Mid–Day Meals).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">காலை உணவு வழங்­கிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘திரா­விட மாடல்’ 
முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், பள்­ளிக்கு வரும் இக் காலக் குழந்­தை­கள், பெரி­தும் காலை உணவு அருந்­தா­மல் வரு­வ­தால், அவர்­கள் சோர்­வா­கவே இருப்­பதை அறிந்து, முதல் முறை­யாக ஒன்று முதல் அய்ந்­தாம் வகுப்பு வரை பயி­லும் அர­சுப் பள்­ளிக் குழந்­தை­க­ளுக்­குக் காலை உணவு வழங்­கும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர் சமூ­க­நீ­திக்­கான சரித்­திர நாய­கர் ‘திரா­விட மாடல்’ முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா லின் அவர்­க­ளா­வார்­கள். அத் திட்­டத்­திற்­குப் பெயர் சூட்­டும் போது­கூட, பொது­வான அள­வில் ‘முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம்’ என்றே பெயர் சூட்டி ­னார். பின்­னர் அதனை அரசு உதவி பெறும் பள்­ளி­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தி­யது தி.மு.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போது, ஆளும் த.வெ.க. அரசு எட்­டாம் வகுப்பு வரை இதனை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது, வர­வேற்­கத்­தக்­கது. மேலும், இத் திட்­டத்­திற்­குக் ‘காம­ரா­சர் காலை உண­வுத் திட்­டம்’ என்று பெயர் மாற்­றி­யுள்­ளது. காலை உண­வுத் திட்­டம் என்­பதை முதன் 
மு­த­லில் அறி­மு­கப்
­­ப­டுத்­தி­ய­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்­தான் என்­ப­தைப் பெயர் மாற்­றங்­க­ளால் மறைத்­து­­வி­ட ­மு­டி­யாது. காலத்­தால் அது நிலைத்து நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முட்டை வழங்­கு­வது திட்­ட­மிட்­டுத் தவிர்க்­கப்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே நேரத்­தில் திருச்சி, கரூர், நாமக்­கல், ஈரோடு, சேலம், நெல்லை, நாகப்­பட்­டி­னம் உள்­ளிட்ட பல மாவட்­டங்­க­ளில் கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை அன்று சத்­து­ண­வில் முட்டை வழங்­கப்­ப­ட­வில்லை. அர­சுப் பள்­ளி­க­ளில் கடந்த 15 ஆண்­டு­க­ளில் இப்­ப­டி­யொரு நிகழ்வு நடந்­த­தில்லை என்­கி­றார்­கள் ஆசி­ரி­யப் பெரு­மக்­கள். முட்டை வழங்­க­லில் தட்­டுப்­பாடா?இல்லை முட்டை வழங்­கு­வது திட்­ட­மிட்­டுத் தவிர்க்­கப்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏற்­கெ­னவே ‘அ­க்ஷ­யப் பாத்ரா’ என்­னும் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­கி­றோம் என்று சொல்லி, இஸ்­கான் அமைப்பு பூண்டு, வெங்­கா­யம் இல்­லாத ‘சைவ’ உணவை வழங்­கு­கி­றோம் என்று நுழைந்­த­போது, கடும் எதிர்ப்பை நாம் தெரி­வித்­தோம். பின்­னர் அத் திட்­டம் ரத்து செய்­யப்­பட்­டது. அத்­த­கைய முயற்­சி­கள் பின்­ன­ணி­யில் இருக்­கின்­ற­னவா என்­னும் சந்­தே­கம் பொது­வா­ன­வர்­க­ளுக்கு எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கடு­மை­யான நட­வ­டிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எடுக்க வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு அர­சின் பள்­ளிக் கல்­வித் துறை உட­ன­டி­யாக இது குறித்து விளக்­கம் அளிக்க வேண்­டும். இத்­த­கைய சூழல் ஒரு போதும் தொட­ரக் கூடாது. பள்­ளிக் குழந்­தை­க­ளின் உணவு விவ­கா­ரத்­தில் குழப்­பமோ, சிக்­கலோ, தடங்­கலோ இருப்­பதை அனு­ம­திக்க முடி­யாது. இதற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் யார் என்­பதை அரசு வெளிப்­ப­டுத்தி, உரிய கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தக­வல் பெறும் உரி­மைச் சட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தங்­கள் நாட்­டில் என்ன நடக்­கி­றது, அர­சில் என்ன நடக்­கி­றது என்­ப­தைக் குடி­மக்­கள் அறிந்­து­கொள்­ளும் உரி­மையை வழங்­கி­யது 2005 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­ட­மா­கும். காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான அய்க்­கிய முற்­போக்­குக் கூட்­டணி அர­சின் சாத­னை­க­ளுள் முக்­கி­ய­மா­னது இது. பல்­வேறு முக்­கி­ய­மான தக­வல்­க­ளைப் பொது­வெ­ளிக்­குக் கொண்­டு­வந்­த­தில் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­திற்­குப் பெரும் பங்கு உண்டு. ஆனால், அதன் வீரி­யத்­தைக் குறைக்­கும் வகை­யில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து, பல துறை­களை அதி­லி­ருந்து விடு­வித்­து­விட்­டது. கண்­ட­னத்­திற்­கு­ரி­ய­தா­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போது, தமிழ்­நாடு அர­சும் அத்­த­கைய வழி­மு­றை­யைப் பின்­பற்­றத் தொடங்­கி­யி­ருப்­பது கண்­ட­னத்­திற்­கு­ரி­ய­தா­கும். தமிழ்­நாடு அர­சின் பொதுத்­து­றை­யின் கீழ் இயங்­கும் பொது சட்­டம் – ஒழுங்­குத் துறைக்­குத் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தில் (RTI) இருந்து முழு விலக்கு அளித்து பிறப்­பிக்­கப்­பட்­
­டுள்ள அர­சாணை இன்று (27.9.2026) அர­சி­த­ழில் வெளி­யா­கி­யுள்­ளது அதிர்ச்­சிக்­கு­ரி­யது. “தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டம், 2005 இன் பிரிவு 24 (4)–இல் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளைச் செயல்­ப­டுத்தி, தமிழ்­நாடு ஆளு­நர், தமிழ்­நாடு அர­சால் நிறு­வப்­பட்ட உளவு மற்­றும் பாது­காப்பு அமைப்­பான பொதுத் துறை (சட்­டம்மற்­றும் ஒழுங்கு) பிரிவை, மேற்­படி சட்­டத்­திற்கு பொருந்­தாத அமைப்­பாக இதன் மூலம் அறி­விக்­கி­றார்” என்று அர­சா­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தக­வல் அறி­யும் உரி­மையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு அர­சாணை மறுக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெளிப்­ப­டை­யான நிர்­வா­கம் (Transparent Govern ment) வழங்­கு­வோம் என்று பிரச்­சா­ரம் செய்த த.வெ.க., ஆட்­சிக்கு வந்த பின், மிக முக்­கி­ய­மான சட்­டம் மற்­றும் ஒழுங்­குத் துறைக்கே திரை­யிட்டு மறைக்க முயற்­சிப்­பது ஏன்? நாட்­டின் சட்­டம் – ஒழுங்கு பெரும் கீழி­றக்­கத்­துக்­குச் சென்று கொண்­டி­ருக்­கும் நிலை­யில், அத­னைச் சரி செய்து நிர்­வா­கத்­தைச் சீர்­செய்­வதை விடுத்து, அத் தக­வல்­கள் வெளி­யில் தெரிந்­து­வி­டக் கூடாது என்­ப­தில் கவ­னம் செலுத்­து­வது சரி­யா­ன­தல்ல. மனித உரிமை ஆணை­யத்­தின் குறிப்­பு­கள், துப்­பாக்­கிச் சூடு குறித்த ஆணைய அறிக்­கை­கள், காவல் மர­ணங்­கள் உள்­ளிட்ட பல முக்­கி­ய­மான பிரச்­சி­னை­கள் குறித்து, தக­வல் அறி­யும் உரி­மையை இந்த அர­சாணை மறுக்
­­கி­றது.சட்­டம் ஒழுங்­குச் சீர்­கேட்டை ஒழிப்­ப­தற்­குத் தான் அரசு வேண்­டுமே தவிர, ஒளித்து வைப்­ப­தற்கு அல்ல. உட­ன­டி­யாக இந்த அர­சாணை திரும்­பப் பெறப்­பட வேண்­டும். இந்த உரி­மை­கள் பறிக்­கப்­ப­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அனைத்­துக் கட்­சி­க­ளின் கடும் எதிர்ப்­பைத் தொடர்ந்து, தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தில் (RTI) இருந்து சட்­டம் – ஒழுங்­குப் பிரச்­சி­னைக்கு முழு விலக்கு அளித்து பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள 
அர­சா­ணையை தமிழ்­நாடு த.வெ.க. அரசு 6 மணி­நே­ரத்­தில் திரும்­பப் பெற்­றுள்­ள­தா­கச் செய்தி வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முக்­கி­ய­மான பிரச்­சினை­ களில் இப்­படி ஆழம் பார்ப்­ப­தும், யாரும் எதிர்க்­க­வில்லை என்­றால் அப்­ப­டியே தொடர்­வ­தும் ஓர் அர­சுக்கு அழ­கல்ல.  ஆட்சி அமைந்­தது முதலே இப்­படி பல அறி­விப்­பு­க­ளும், அர­சா­ணை­க­ளும் வெளி­வந்து, பின்­னர் திரும்­பப் பெறப்­ப­டு­வது தொடர்­கி­றது. இது யாரால் ஆட்சி நடத்­தப்­ப­டு­கி­றது என்­னும் கேள்­வியை மக்­கள் மத்­தி­யில் எழுப்­பி­யுள்­ளது. இதன் பின்­னணி ­யில் இருப்­ப­வர்­கள் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெளிப்­படை நிர்­வா­கம் என்­ப­தும், மக்­க­ளுக்­கான அரசு வெறும் வார்த்தை ஜால­மாக இருக்­கக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  கி.வீர­மணி அறிக்­கை­யில் கண்­டனம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>