<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,728,958,1185" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 28 2026 14:54:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260929T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="29092026-CBE-07" position.sequence="07" ex-ref="29092026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">ஜெம் வீரமணி வழக்கில் 70 நாட்கள்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">குற்றவாளியை கைது செய்யாமல் பாதுகாத்தது யார்? இடைப்பட்ட காலத்தில் நடந்த பேரம் என்ன?   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">‘டம்மி’ முதலமைச்சருக்கு தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, செப்.29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜெம் வீர­மணி வழக்­கில் 70 நாட்­கள் குற்­ற­வா­ளியை கைது செய்­யா­மல் பாது­காத்­தது யார்? இடைப்­பட்ட காலத்­தில் நடந்த பேரம் என்ன? என்று ‘டம்மி’ முத­ல­மைச்­ச­ருக்கு தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு கேள்வி எழுப்­பி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஐ.டி.விங்­கின் வலை­த­ளப்­ப­திவு வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜெம் கிரா­னைட் வீர­ம­ணி­யின் போக்சோ வழக்­கில், நீதி­மன்­றம் தலை­யில் குட்­டிய பிற­கு­தான் தவெக அர­சுக்கு ஞானோ­த­யம் வந்­ததா? “நாங்­கள் தான் நட­வ­டிக்கை எடுத்­தோம்” என்று மார்­தட்­டும் டம்மி முதல்­வரை நோக்­கிச் சில நேர­டி­யான கேள்­வி­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மே 10-ம் தேதியே த.வெ.க. அரசு பொறுப்­பேற்­று­விட்­டது. ஜூன் 19 அன்று ஜெம் வீர­மணி வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, வழக்­கின் முடிப்பு அறிக்­கையை (FAD Report), “மேல்­வி­சா­ரணை தேவை” என்று கூறித் திரும்­பப் பெற அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞ­ருக்கு (PP) தவெக அரசு ஏன் உத்­த­ர­வி­ட­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜூன் 19 அன்று, உங்­கள் காவல் துறை, வழக்கை முடித்து வைப்­ப­தாக கோரி­யதை ஏற்க மறுத்த சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி, அதைத் தூக்­கி­ யெ­றிந்­து­விட்டு மேல்­வி­சா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குற்­ற­வா­ளிக்கு எதி­ரான வீடியோ ஆதா­ரங்­கள் மிகத் தெளி­வாக இருந்­தும், நீதி­மன்­றம் குட்டு வைத்த ஜூன் 19 அன்றே வீர­ம­ணியை உடனே கைது செய்­யா­மல் தடுத்து நிறுத்­தி­யது யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜூன் 19 முதல் ஜூலை 20 வரை உங்­கள் ஆட்­சி­யில் இந்த வழக்­கில் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை. இதன் மர்­மம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜூலை 20-ம் தேதி நடந்த அடுத்த விசா­ர­ணை­யின் போதும் நீதி­மன்­றத்­தில் ஆஜ­ராகி, “விசா­ரணை இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது” என்று இழுத்­த­டித்­தது உங்­கள் காவல் துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜூன் 19-ல் நீதி­பதி உத்­த­ர­விட்ட பிற­கும், ஆகஸ்ட் 29 வரை குற்­ற­வா­ளி ­யைக் கைது செய்­யா­மல் 70 நாட்­க­ளா­கப் பாது­காத்­தது யார்? இடைப்­பட்ட காலத்­தில் நடந்த பேரம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்­டிய காவல் துறை­யைக் கையில் வைத்­தி­ருக்­கும் உள்­துறை அமைச்­சர் வேறு யாரு­மல்ல, இதே ‘டம்மி’ முத­ல­மைச்­சர் விஜய்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­ப­டி­யா­னால், ஒரு பாலி­யல் குற்­ற­வா­ளி­யைக் காப்­பாற்ற முத­ல­மைச்­சரே உத்­த­ர­விட்­டாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீதி­மன்­றம் குட்டு வைத்து, வேறு வழி­யில்­லா­மல் ஆகஸ்ட் இறு­தி­யில் கைது செய்­து­விட்டு, இப்­போது ஏதோ நீங்­களே கண்­டு­பி­டித்­துத் தண்­டித்­த­தைப் போல இடைத்­தேர்­தல் மேடை­யில் ‘கிரெ­டிட்’ திருட உங்­க­ளுக்கு வெட்­க­மாக இல்­லையா மிஸ்­டர் விஜய்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வழக்­கையே வரப்­போ­கும் இடைத்­தேர்­த­லுக்கு ஒரு மலி­வான Political Toolkit ஆகப் பயன்­ப­டுத்­திப் பொய் பிரச்­சா­ரம் செய்ய உங்­க­ளுக்கு மன­சாட்­சியே இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு போக்சோ வழக்­கில் நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வால் நடக்­கும் விசா­ர­ணை­யைத் தன் சாத­னை­யா­கக் காட்­டிக்­கொண்டு, தேர்­தல் ஆதா­யத்­திற்­கா ­கப் பெண்­க­ளின் பாது­காப்­பைப் பண­யம் வைக்­கும் அள­விற்­குத் தவெக ஆட்சி எவ்­வ­ளவு கேவ­ல­மான நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது என்­ப­தைத் தமிழ்­நாடு மக்­கள் பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தி.மு.க. ஐ.டி.விங்­கின் வலை­த­ளப்­ப­தி­வில் கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>