<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 29 2026 03:43:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260929T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="29092026-MDU-03" position.sequence="03" ex-ref="29092026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">29.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நாட்களில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா: தொகுதி</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="146">வாக்காளர்களுக்குத் துரோகம் செய்தவருக்கு தக்க பாடம் புகட்டுங்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">மதுராந்தகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame910400_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup910374_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup911252_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Speech279202_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="Speech2792021_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மது­ராந்­த­கம், செப்.29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மது­ராந்­த­கம்  சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தல் நடை­பெ­று­வ­தை­யொட்டி, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், நேற்று முன்­தி­னம் தனது தேர்­தல் பரப்­புரை செய்­தார்.  மது­ராந்­த­கத்­தில் பெருந்­தி­ர­ளா­கக் கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில் அவர் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் 
சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான 
உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய எழுச்­சி­மிக்க உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் ஒரு மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­கள் தேடித்­தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­வ­தற்­காக, உங்­களை எல்­லாம் தேடி நான் இங்கே வந்­தி­ருக்­கி­றேன்.  நேற்று முன்­தி­னம் தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத்­தொ­குதி பிரச்­சா­ரத்­துக்­குச் சென்­றி­ருந்­தேன். நான் 100 சத­வி­கி­தம் அடித்­துச் சொல்­கி­றேன், உறுதியாகச் சொல்­கி­றேன். தாரா­பு­ரத்­தி­லும் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், நம்­மு­டைய உத­ய­சூ­ரி­யன் சின்­னம் வெற்­றிப்­பெ­றப் போவது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் உங்­க­ளி­டத்­தில் பணி­வோடு 
கேட்­டுக்­கொள்­ளும் வேண்­டு­கோ­ளெல்­லாம் தாரா­பு­ரம் தொகு­தி­யில் பெறு­கின்ற 
வெற்­றியை விட அதி­க­மான வாக்கு வித்தி­ யாசத்­தில், மது­ராந்­த­கத்­தில் மிகப்­பெ­ரிய 
வெற்­றியை பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு 
நீங்­கள் தேடித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">செப்­டம்­பர்,  27– மிகப்­பெ­ரிய வடு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு செப்­டம்­பர் 27. சென்ற வரு­டம் இதே செப்­டம்­பர் மாதம் 27–ஆம் தேதி என்ன நடந்­தது என்று உங்­க­ளுக்கு நான்  ஞாப­கப்­ப­டுத்த தேவை­யில்லை. இங்­குள்ள அத்­தனை பேருக்­கும் தெரி­யும். நாமெல்­லாம் மறக்­கக்­கூ­டிய சம்­ப­வம் அல்ல அது. நம் அனை­வ­ரு­டைய மன­தி­லும் நீங்­காத காயத்தை ஏற்­ப­டுத்­திய ஒரு மிகப்­பெ­ரிய வடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிரச்­சா­ரம் செய்­யப்­போ­கி­றேன் என்று சொல்லி, இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர், சென்ற வரு­டம் கரூ­ருக்கு, கிட்­டத்­தட்ட 10 மணி நேரம் தாம­த­மா­கச் சென்­றார். அங்கே இருக்­கக்­கூ­டிய மக்­க­ளுக்­குத் தண்­ணீர் கூடக் கொடுக்­கா­மல், ஒரு கழிப்­பறை வசதி கூட ஏற்­ப­டுத்­தா­மல், தாம­த­மா­கச் 
சென்­ற­த­னால் மிகப்­பெ­ரிய ஒரு மக்­கள் 
நெரி­சல் ஏற்­பட்டு, 10 குழந்­தை­கள் உள்­பட 
41 உயிர்­கள் பலி­யான நாள் சென்ற வரு­டம் செப்­டம்­பர் 27–ஆம் தேதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அன்­றைக்கு, இன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றைக்கு ஆறு­தல் தெரி­விக்­கி­றார், வருத்­தம் தெரி­விக்­கி­றார். அன்­றைக்­குத்தெரி­வித்­தாரா? ஒரு ஆறு­தல் கூடச் சொல்­லா­மல், மக்­க­ளை­யும் சந்­திக்­கா­மல், வாக­னத்­தின் மீது ஏறி நின்று கொண்டு, பாட்­டுப் பாடி­விட்டு, அவர் கண் முன்­னா­லேயே 20 பேர் இறக்­கும் போது, அங்­கி­ருந்து ஓடிப்­போய், திருச்சி விமான நிலை­யத்­திற்­குச் சென்று, அங்கே இருக்­கக்­கூ­டிய மக்­க­ளும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளும் அவ­ரைக் கேள்வி கேட்க தடுத்­த­போது அதற்­கெல்­லாம் பதில் சொல்­லா­மல் ஓடி­விட்­டார். திருச்சி விமான நிலை­யத்­திலே அழைக்­கி­றார்­கள், மக்­கள் அழைக்­கி­றார்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கேட்­கி­றார்­கள், ‘‘சார், 25 பேர் இறந்து­ விட்­டார்­களா?’’ என்று ­கேட்­கி­றார்­கள். அதற்கு பதில் சொல்ல வக்­கில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன்­பி­றகு சென்னை விமான நிலை­யத்­தில், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், பொது­மக்­கள் 
அவ­ரைத் தடுத்து நிறுத்­தி­னார்­கள், கேள்வி கேட்­டார்­கள். அதற்­குப் பதில்சொன்­னாரா? அதற்­கும் பதில் சொல்­லத் துப்­பில்லை. அன்­றைக்கு, தான்தாம­த­மாக வந்­த­தால்­தான் 41 பேர் கரூ­ரில் இறந்து போயி­ருக்­கி­றார்­கள் என்­பதை உணர்ந்­தாரா? இன்­றோடு ஒரு 
வரு­டம் ஆயிற்று. எந்­த­வி­த­மான ஒரு குற்ற உணர்ச்­சியே இல்­லா­மல்,  மன­சாட்­சியே இல்­லா­மல் ஓடிப்­போன முத­ல­மைச்­சர்­தான் இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய ஓடு­காலி முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு அவர் மக்­களை ஏமாற்றி முத­ல­மைச்­சர் ஆகி­யி­ருக்­க­லாம். ஆனால் இதை நினைத்­துப் பார்த்து, அந்த மனி­தர் ஒரு நாள் கூட நிம்­ம­தி­யா­கத் தூங்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த இரண்டு வரு­ட­மாக எங்கு சென்­றா­லும் அவர் தொடர்ந்து சொல்­வது, மக்­கள் மன­தில் ஆழ­மா­கப் பதிய வைத்­தி­ருப்­பது என்ன தெரி­யுமா? அவர் சொல்­வார். `ஓம் சக்தி பரா­சக்தி’ என்று சொல்லி நம்­மைத் திட்­டு­வார். அப்­போது அவர் எதிர்க்­கட்­சி­யாக இருந்­தார்,நாம் ஆளுங்­கட்­சி­யாக இருந்­தோம். அப்­போதுஅவர் சொல்­வ­தை­யெல்­லாம் நாம் கேட்­டுக்­கொண்டு இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது நமக்கு ஒரு வாய்ப்­புக் கிடைத்­தி­ருக்­கி­றது. இப்­போது நாம் திருப்­பிச் சொல்­வோமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">``ஓம் காளி, ஜெய்­காளி! ஓம் காளி ஜெய்­காளி! ஓடு­காலி டி.வி.கே’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">``ஓம் காளி ஜெய்­காளி! ஓடு­காலி டி.வி.கே’’ என்று சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இனி­மேல் நாம் ஒவ்­வொரு கூட்­டத்­தி­லும்,ஒவ்­வொரு பிரச்­சா­ரக் கூட்­டத்­தி­லும் மக்­க­ளைச்சந்­திக்­கும் போது இதைத் தொடர்ந்து சொல்ல வேண்­டும். மக்­கள் மன­தில் பதிய வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இயற்­கை­யாக வந்த இடைத்­தேர்­தலா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சரி, நான் ஒன்று கேட்­கி­றேன். இன்­றைக்கு இரண்டு தொகு­தி­க­ளில் இடைத்­தேர்­தல் நடக்­கி­றது. இது ஏன் நடக்­கி­றது என்று நீங்­க 
­ளெல்­லாம் யோசித்­துப் பார்த்­தீர்­களா? இது இயற்­கை­யாக வந்த இடைத்­தேர்­தலா? இந்த இடைத்­தேர்­தல் வரு­வ­தற்கு கார­ண­மா­ன­வர் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்ற ஏப்­ரல் 23–ஆம் தேதி தேர்­தல் நடந்­தது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி பெறும்  என்று நாம் நினைத்­தோம், வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம். ஆனால், ஒரு கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு குறைந்­தது 118 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வெற்­றி­பெற வேண்­டும். ஆனால், இங்கு இருக்­கக்­கூ­டிய இந்த ‘கர­காட்ட கோஷ்டி கட்சி’, 118 இடங்­கள் வெற்றி பெற்­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர்­கள் வெற்றி பெற்­றது வெறும் 107 இடங்­கள்­தான். அவர்­க­ளுக்கு அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இந்த ஆட்சி தி.மு.க போட்ட பிச்சை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு நடக்­கக்­கூ­டிய இந்த ஆட்சி நாம் போட்ட பிச்­சை­யில் நடக்­கி­றது. ஏன் நான் பிச்சை என்று சொல்­கி­றேன் என்­றால், நம்­மோடு கூட்­டணி வைத்­துக்­கொண்டு, நம் தலை­வர் பெய­ரைச் சொல்லி, நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­யைச் சொல்லி, வாக்­குக் கேட்டு, மக்­க­ளைச் 
சந்­தித்து, வாக்­கு­கள் வாங்கி, அவர்­க­ளு­டைய ஆத­ர­வில் இன்­றைக்கு இந்த ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது. அத­னால்­தான் 
மீண்­டும் சொல்­கி­றேன், இந்த ஆட்சி தி.மு.க போட்ட பிச்சை, இந்த ஓடு­காலி ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் முடி­வு­கள் வந்த பிறகு முத­ல­மைச்­ச­ராக என்­னென்ன முயற்­சி­கள் எல்­லாம் எடுத்­தார் என்று உங்­க­ளுக்கே தெரி­யும்.ஒவ்­வொரு கட்சி தலை­வர் வீட்­டுக்­கும் சோஃபாஅனுப்­பி­னார். சோஃபாவை நம் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்­கெல்­லாம் அனுப்­பி­னார். சோஃபா­விற்­குள் என்ன இருக்­கி­றது என்று நான் சொல்­ல­வில்லை, சோஃபா அனுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை என்ன செய்­தார்? இரண்­டா­கப் பிளந்து, அதில் இருக்­கக்­கூ­டிய ஒரு சில தலை­வர்­களை மட்­டும் சென்று பார்த்து, அவர்­களுக்கு மட்­டும் சோஃபா கொடுத்து, அவர்­களு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒரு  15 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை மட்­டும் தூக்­கி­னார். இவர் நம்­மைச் சொல்­வார்.  அதா­வது, தி.மு.க என்ன செய்­தார்­கள் என்­றால், ஓட்­டுக்­குப் பணம் கொடுத்­து­விட்­டார்­கள், வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணம் கொடுத்­து­விட்­டார்­கள் என்று நம் மீது பொய் சொன்­னார், பொய்க் குற்­றச்­சாட்டு சொன்­னார். ஆனால், இவர் புதிய தொழில்­நுட்­பத்­தில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரையே தூக்­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­தான் இவர்­கள் கொண்டு வந்த 
மாற்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைத் தூக்­கி­னால் மட்­டும் பர­வா­யில்லை, இப்­போது கட்­சி­யையே இரண்­டாக உடைத்து, அதில் ஒரு குழுவை இவர் வாங்­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான் இன்­றைக்கு இந்த மது­ராந்­த­கம் இடைத்­தேர்­தல் நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வாக்­கா­ளர்­க­ளுக்கு துரோ­கம் செய்­து­விட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மீண்­டும் போட்­டி­யி­டு­கி­றார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மது­ராந்­த­கத்­தில் வெற்றி பெற்­றது அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சேர்ந்த ஒரு வேட்­பா­ளர். அவரை இந்­தத் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கி­றார்­கள். மே 11–ஆம் தேதி  சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பத­விப் பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்­டார்­கள். மே 11–ஆம் தேதி நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு. மே 12–ஆம் தேதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பதவி ஏற்பு. மே 25–ஆம் தேதி என 12 நாட்­க­ளில், தேர்­தல் வர­லாற்­றி­லேயே முதல் முறை­யாக இவர்­கள் பத­வியை ராஜி­னாமா செய்­து­விட்டு, நீங்­கள் கொடுத்த வாக்­கு­களை உதா­சீ­னப்­ப­டுத்­தி­விட்டு, உங்­க­ளுக்குஒரு மிகப்­பெ­ரிய துரோ­கத்­தைச் செய்­து­விட்டு, இன்­றைக்கு கட்சி மாறி, மீண்­டும் இன்­னொரு கட்­சிக்­குச் சென்று, அங்கே சீட்டு வாங்கி, மீண்­டும் உங்­க­ளி­டத்­தில் வாக்­குக் கேட்டு வந்­தி­ருக்­கி­றார்­கள். மது­ராந்­த­கம் தொகுதி மக்­கள் மீண்­டும் ஏமாந்­து­வி­டு­வார்­கள் என்று வாக்­குக் கேட்டு வரு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு தக்­கப் பாடம் புகட்­டுங்­கள். எவ்­வ­ளவு திமிர் இருந்­தால், எவ்­வ­ளவு கொழுப்பு இருந்­தால், மீண்­டும் உங்­க­ளி­டத்­தில் வாக்­குக் கேட்டு வரு­வார்­கள்? ஆனால் நான் கேள்­விப்­ப­டு­கி­றேன்.  தாரா­பு­ரத்­தி­லும் சரி, இங்கே மது­ராந்­த­கத்­தி­லும் சரி, எங்கு சென்­றா­லும் ஆளுங்­கட்­சி­யின் வேட்­பா­ளர்­க­ளைத் தொகுதி மக்­கள் தெரு­விற்­குள்­ளேயே விடு­வ­தில்லை. எல்லா இடங்­க­ளி­லும் கேள்வி கேட்­கத் தொடங்­கி­விட்­டார்­கள். எல்லா இடங்­க­ளி­லும் விரட்டி விரட்டி அடிக்­கத் தொடங்­கி­யி­ருக்­கிறார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அன்­புச் சகோ­த­ரர் பரந்­தா­மன்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வரு­கின்ற 6–ஆம் தேதி நீங்­கள், நம்­மு­டைய வெற்றி வேட்­பா­ளர் பரந்­தா­ம­னுக்கு வாக்­க­ளி­யுங்­கள். நல்ல வேட்­பா­ள­ராக உங்­க­ளி­டத்­தில் தலை­வர் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார். சகோ­த­ரர் பரந்­தா­ம­னைப் பற்றி நான் உங்­க­ளி­டத்­தில் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை. நன்கு படித்த வேட்­பா­ளர், வழக்­க­றி­ஞர், ஒரு பண்­பான வேட்­பா­ளர், கொண்ட கொள்­கை­யில் உறு­தி­யாக இருக்­கக்­கூ­டிய, எந்த நிலைமை வந்­தா­லும் உறு­தி­யாக நிற்­கக்­கூ­டிய வேட்­பா­ளர். தேர்­த­லுக்­குத் தேர்­தல் கொள்­கையை மாற்­றிக்­கொள்­கின்ற பச்­சோந்தி வேட்­பா­ளர் கிடை­யாது நம்­மு­டைய பரந்­தா­மன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரைப் பற்றி இன்­னொரு செய்தி உங்­கள் எல்­லா­ருக்­கும் தெரிந்­தி­ருக்­கும். தொலைக்காட்­சி­க­ளில் அவ­ரு­டைய பேட்­டி­க­ளைப் பார்த்­தீர்­கள் என்­றாலே ஆளுங்­கட்­சி­யையே அலற அலற ஓட விட்­ட­வர்­தான் பரந்­தா­மன் அவர்­கள். அப்­ப­டிப்­பட்ட அன்­புச் சகோ­த­ரர் பரந்­தா­மன் அவர்­களை உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் நீங்­கள் ஜெயிக்க வைத்து, எனக்­குத் துணை­யாக, உங்­கள் குர­லாக, தி.மு.க–வி­னு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, மது­ராந்­த­கம் சட்­ட­ மன்ற உறுப்­பி­ன­ராக நீங்­கள் தய­வு­செய்து சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்பவேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது சட்­ட­மன்­றம் எப்­படி நடக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். நான் உங்­க­ளுக்­குச் சொல்­லத் தேவை­யில்லை, எல்­லா­ருமே தொலைக்­காட்­சி­யில் நேர­லை­யா­கப் பார்த்­தி­ருப்­பீர்­கள். நான் இன்­னொன்று கேட்­கி­றேன். இரண்டு நாட்­க­ளுக்கு முன்­னால் மது­ராந்­த­கத்­திற்கு வந்து நம்­மு­டைய `ஓடு­காலி முத­ல­மைச்­சர்’ அவர்­கள் பேசி­னார். இல்லை, கத்­தி­னார், யாரா­வது பார்த்­தீர்­களா? யாரா­வது பார்க்­க­வில்லை என்­றால் கவ­லைப்­ப­டா­தீர்­கள். ஏனென்­றால் மீண்­டும் இரண்டு நாட்­கள் கழித்து வந்து அதே­தான் பேசு­வார். எது­வும் புதி­தா­கப் பேச மாட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பட்­டப் பெயர் சொன்­னால்­தான் தெரி­யும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் மது­ராந்­த­கத்­தில் தேர்­தல் பிரச்­சா­ரம் என்று கிட்­டத்­தட்ட 30 நிமி­டங்­கள் பேசி­னார். ஒலி­பெ­ருக்­கி­யில் கத்து கத்­தென்று கத்­தி­னார். அந்த 30 நிமி­டங்­க­ளில் 34 முறை``தி.மு.க, தி.மு.க, தி.மு.க, தி.மு.க,தி.மு.க’’ என்­றார். நம் பிரச்­சா­ரத்தை அவர் செய்­கி­றார். நாம் கூட இத்­தனை முறை தி.மு.க.,தி.மு.க. என்று சொல்­ல­மாட்­டோம்.அதில் ஒரு­முறை ஆங்­கி­லத்­தில் `டி.எம்.கே.’ என்­றார். இப்­படி ஒரு முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிறகு அங்கே இருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­க­ளைப் பற்றி உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஒவ்­வொரு அமைச்­ச­ருக்­கும் பெயர் சொன்­னால் தெரி­யாது, பட்­டப் பெயர் இருக்­கி­றது. பட்­டப் பெயர் சொன்­னால்­தான் தெரி­யும். `ட்ரோன் கேமரா அமைச்­சர் பிரபு’, `முறுக்கு அமைச்­சர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரீல்ஸ் அமைச்­சர், `சங்கி அமைச்­சர்’, `உருட்­டுக்­கட்டை அமைச்­சர்’, `பவு­டர்அமைச்­சர்’, பிளாக் டிக்­கெட்­அ­மைச்­சர், `திருட்டுலாட்­டரி அமைச்­சர்’. இந்த லட்­ச­ணத்­தில்­தான் இன்­றைக்கு இந்த அமைச்­ச­ரவை அமைந்­தி­ருக்­கி­றது. இவர்­க­ளுக்­கெல்­லாம் கேப்­டன்­தான் ஓர் அமைச்­சர். அமைச்­சர்­கள் எல்­லாம் இப்­படி இருக்­கி­றார்­கள். சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கத்­து­வது தெரி­யுமா உங்­க­ளுக்கு? சென்ற முறை நான் தாரா­பு­ரத்­தில் பேசிய போதே தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று சொல்­கி­றார். ``முத­ல­மைச்­சர் அவர்­களே, எங்­க­ளுக்கு கார் இல்லை, கார் கொடுத்­து­விட்­டீர்­கள். வேலை இல்லை, வேலை வாங்­கிக் கொடுத்­து­விட்­டீர்­கள். வீடு இல்லை, வீடு கொடுத்­து­விட்­டீர்­கள். எனக்கு இப்­போது சமீ­பத்­தில் காதல் தோல்வி ஆகி­விட்­டது, அது­வும் நீங்­களே ஏற்­பாடு செய்ய வேண்­டும்.”  என்­கிறார்.  அவ­ரும் சிரித்­துக்­கொண்டே செய்­கி­றேன் என்­கி­றார்.  நானும் நினைத்­தேன் இது­போல மக்­க­ளுக்கு புது திட்­டங்­கள் கொடுப்­பார் என்று.  இது­தான் நாம் கேட்ட மாற்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று பேசு­கி­றார். ``நாங்­கள் முத­ல­மைச்­ச­ருக்­குப் பின்­னால் அமர்ந்­தி­ருக்­கி­றோம். முத­ல­மைச்­ச­ரு­டைய முகம் தெரி­ய­வில்லை. அத­னால் எங்­க­ளுக்­கெல்­லாம் முத­ல­மைச்­ச­ரு­டைய முகம் தெரிய வேண்­டும் என்­கி­றார்.  முத­ல­மைச்­சர் அப்­ப­டியே எழுந்து பேசி கிழித்­து­வி­டு­வார் அல்­லவா? அவர் பேசு­வ­தை­யெல்­லாம் நாங்­கள் கேட்க வேண்­டும், பார்க்க வேண்­டும். முத­ல­மைச்­ச­ரு­டைய முகம் தெரி­கின்ற மாதிரி எங்­க­ளுக்­குத் தொலைக்­காட்சி வைத்­துக் கொடுங்­கள், எல்.இ.டி. தொலைக்­காட்சி எங்­கள் எல்­லா­ருக்­கும் வைத்­துக் கொடுங்­கள்” என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் சொன்­னேன்.`எங்­க­ளால் இங்கே முன்­னால் அமர்ந்து சகித்­துக் கொள்ள முடி­ய­வில்லை. இது மிகப்­பெ­ரிய ஒரு கொடு­மை­யின் உச்­ச­மாக இருக்­கி­றது. எங்­க­ளால் முடி­ய­ வில்லை, நாங்­க­ளெல்­லாம் எழுந்து சென்­று ­வி­டு­கி­றோம். நீங்­க­ளெல்­லாம் வந்து எங்­கள் இருக்­கை­யில் அமர்ந்துகொள்­ளுங்­கள்’’ என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">எம்.எல்.ஏ.க்கள் பாட்­டுப் பாடு­கி­றார்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவை­யில் பொது­வா­கக் கேள்வி கேட்­டால் பதில் சொல்­வார்­கள். ஆனால், இப்­போது இங்கே பார்த்­தீர்­கள் என்­றால், சட்­ட­ச­பை­யில் எல்­லா­ருமே பாட்­டுப் பாடு­கி­றார்­கள். அமைச்­சர்­கள் பாட்­டுப் பாடு­கி­றார்­கள், அனைத்து சட்­ட ­மன்ற உறுப்­பி­னர்­க­ளும்பாட்­டுப் பாடு­கி­றார்­கள்.இதைச் சென்று சபா­நா­ய­க­ரி­டம் சொன்­னால்அவ­ரும் பாட்­டுப் பாடு­கி­றார். நான் சட்­ட­ச­பை­யி­லேயே சொல்­லி­விட்­டேன். ‘‘சபா­ நா­ய­கர் அவர்­களே, எங்­க­ளுக்­குச் சந்­தே­க­மாக இருக்­கி­றது. நாங்­கள் சட்­ட­ச­பைக்­குத்­தான் வரு­கி­றோமா அல்­லது சூப்­பர் சிங்­கர் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோமா?” என்று சபா­நா­ய­க­ரி­டமே சொல்­லி­விட்­டேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>