<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,534,958,1211" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 03:45:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260930T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="30092026-MDU-03" position.sequence="03" ex-ref="30092026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பெயர் தி.மு.க.</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="37">கனிமொழி இராஜாத்தி கருணாநிதி எம்.பி.பேச்சு...</lang>
	<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="37">முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனவே அன்­புத் தம்பி விஜய் அவர்­களே, தூய சக்தி என்று சொல்­லும் தகு­தியை நீங்­கள் எப்­போதோ இழந்­து­விட்­டீர்­கள். ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பே வரி ஏய்ப்பு (IT case) வழக்­கில் சிக்­கி­ய­வர் நீங்­கள்; உங்­க­ளால் எப்­ப­டித் தூய சக்­தி­யாக இருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரும்­பத் திரும்ப மேடை­யேறி தீய சக்தி, தூய சக்தி, திமுக என்று பேசும் உங்­கள் உரை­யின் ஸ்கிரிப்ட்டை மாற்­றிக்­கொள்­ளுங்­கள். கடந்த நான்கு மாதங்­க­ளாக ஒரே திரைப்­ப­டத்­தைப் பார்த்­துப் பார்த்து மக்­கள் சலிப்­ப­டைந்­து­விட்­டார்­கள். ஸ்கி ரிப்ட்டை மாற்ற முடி­ய­வில்லை என்­றால், அதை எழு­து­ப­வ­ரை­யா­வது மாற்­றுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பெண்­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை, சட்­டம்  ஒ­ழுங்கு சீர்­கு­லைந்­து­விட்­டது என்று கூறி ஆட்­சிக்கு வந்­தீர்­கள். 12 மணிக்­குக் கூட உட­லெல்­லாம் நகை­களை அணிந்­து­கொண்டு நிம்­ம­தி­யாக நடந்து செல்ல முடி­யும் என்று திரைப்­ப­டத்­தில் பார்த்த அன்­புத் தம்பி விஜய்யை நம்பி மக்­கள் வாக்­க­ளித்­தார்­கள். ஆனால், ஆட்­சிப் பொறுப்­பேற்ற நான்கே மாதங்­க­ளில் 550 குற்­றங்­கள் நடந்­துள்­ளன. அதில் 200க்கும் மேற்­பட்ட கொலை­கள், 300க்கும் மேற்­பட்ட பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், 8 காவல் மர­ணங்கள் மற்­றும் 10 ஆண­வக் கொலை­கள் அடங்­கும். இது­தான் நீங்­கள் தமிழ்­நாட்டை காப்­பாற்­றும் லட்­ச­ணமா என கேட்க வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">நண்­பா, நண்­பீஸ்களுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">என்ன செய்தார் தம்பி விஜய்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­த­லுக்கு முன்­னால், நண்­பாஸ், நண்­பீஸ், வீட்­டில் அடம் பிடித்­துப் பெற்­றோ­ரி­டம் வாக்­கைப் பெற்­றுத் தாருங்­கள் என்று கேட்­கத் தெரிந்த முத­ல­மைச்­சர் தம்பி விஜய், அந்­தச் சிறு­வர்­க­ளுக்­காக என்ன செய்­தார். மது­ரை­யில் கழி­வு­நீர்க் குட்­டை­யில் 16 வயது சிறு­வன் படு­கொலை செய்­யப்­பட்­டுக் கிடந்­தான். அதற்­காக நியா­யம் கேட்ட பெற்­றோரை காவல் துறை­யி­னர் கழுத்­தில் மிதித்­துக் கைது செய்து இழுத்­துச் செல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத­ல­மைச்­சர் விஜய் பிரச்­சா­ரம் செய்த வண்­ட­லூர் அருகே 10ஆம் வகுப்பு படிக்­கும் மாற்­றுத்­தி­ற­னா­ளிச் சிறுமி பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்­டார். ஆனால், அந்த விவ­கா­ரம் வெளி­வ­ரா­மல் இருக்க அச்­சி­றுமி தேர்வு எழு­தப் பயந்து நாட­க­மா­டு­கி­றார் என்று கூறி­ய­து­தான் இந்­தத் தவெக ஆட்சி. ஒரு குழந்­தைக்கு நேர்ந்தஅவ­லத்­தைக்­கூட மறைக்க நினைக்­கும் இரக்­க­மற்ற, மனி­த­நே­ய­மற்ற ஆட்­சி­யைத்­தான் தம்பி விஜய் நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி கூறி­ய­தைப் போல, இந்த ஆட்­சி­யில் மின்­வெட்­டிற்­கும் அரி­வாள் வெட்­டிற்­கும் தான் போட்­டியே நடக்­கி­றது. நாம் கேட்­டால் ஃபியூ­ஸைப் பிடுங்­கிச் சென்­று­வி­டு­கிறார்­கள் என்ற சாக்கு போக்­குக் கூறு­கி­றார்­கள். நான்கு மாதங்­க­ளாக ஃபியூ­ஸைப் பிடுங்­கிச் செல்­ப­வர்­க­ளைக் கூடக் கண்­டு­பி­டிக்க முடி­யாத கையா­லா­காத ஆட்­சி­யா­கவே இது உள்­ளது. திமுக ஆட்­சி­யில் அண்­ணன்நேரு மின்­சா­ரத்­துறை அமைச்­ச­ராக இருந்­த­போது இப்­படி நடந்­தி­ருந்­தால் விட்­டு­ விட்­டி­ருப்­பாரா. இந்­நே­ரம் அவரை கைது செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வேலை­யில்­லாப் பட்­ட­தா­ரிக்கு மாதம் ரூ.4,000 வழங்­கப்­ப­டும் என்­றீர்­கள்; பண­மும் வர­வில்லை, தனு­ஷும் அர­சி­ய­லுக்கு வந்­து­விடுவார் போலிருக்கிறது. பெண்­க­ளுக்கு ரூ.2,500 தரு­வ­தா­கக் கூறி­ய­தும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. திமுக ஆட்­சி­யில் முறை­யாக வழங்­கப்­பட்டு வந்த முதி­யோர் உத­வித்­தொ­கை­யும் இப்­போது பல­ருக்கு நிறுத்­தப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">லண்டன் பயண நாடகம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விவ­சா­யக் கடன் ரத்து என்று அறி­வித்­தீர்­கள். ஆனால், தண்­ணீர் திறக்­கும் நேரம் தெரி­யா­மல் பயிர்­கள் காய்ந்து நிற்­கின்­றன. இவர்­களோ லண்­ட­னுக்­குச் சென்று முத­லீட்டு முகாம் நடத்­து­வ­தா­கக் கூறி நாட­க­மா­டு­கி­றார்­கள். டெல்லி நொய்­டா­வில் உள்ள நிறு­வ­னத்­தின் முத­லீட்­டைப் பெற லண்­ட­னுக்கு ஏன் செல்ல 
வேண்­டும். விஜய்க்கு டெல்­லிக்­குச் செல்ல என்ன பயம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு லட்­சத்து ஐம்­ப­தா­யி­ரம் கோடி ரூபாய் முத­லீடு ஈர்த்­தி­ருப்­ப­தா­கக் கூறு­கி­றீர்­கள்; ஆனால் ஊட­கங்­களை உள்ளே அனு­ம­திக்­க­வில்லை. கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றப்பண­மில்லை என்று கூறி­விட்டு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குக் கார்­க­ளும், ரூ.7 கோடி­யில் புதிய அலு­வ­ல­க­மும், ரூ.1,200 கோடி­யில் புதிய 
சட்­ட­மன்­றக் கட்­டி­ட­மும் எதற்­காக கட்ட முடிவு செய்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மக்­கள் அனைத்­தை­யும் கவ­னித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள். தம்பி விஜய், இந்த நாட­க­மும் ரீல்ஸ்­க­ளும் தமிழ்­நாட்­டில் ரொம்ப நாள் செல்­லு­ப­டி­யா­காது.  யார் உண்­மை­யான தீய சக்தி, யார் மக்­க­ளுக்­குத் தூர­மான சக்தி, யார் தீர்ந்­து­போன சக்தி என்­பதை மக்­கள் தெளி­வா­கப் புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். சட்­ட­மன்­றத்­தில் நான் பதில் பேசும்­போது ஓடி­வி­டா­தீர்­கள் என்று எதிர்க்­கட்­சி­க­ளைப் பார்த்­துக் கூறி­விட்டு, கேள்வி கேட்டு முடிப்­ப­தற்­குள் அவரே ஓடி­வி­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மது­ராந்­த­கத்­தில் பேசும்­போது பாஜ­க­தான் திமுக என்­கி­றார். ஆனால், தேசிய சரா­ச­ரியை விட 4.4% தமிழ்­நாட்­டின் விலை­வாசி உயர்வை 5.44% உயர்த்திசாத­னை­யாக்­கி­ய­து­தான் உங்­கள் சாதனை.மின்­வெட்டு, அரி­வாள் வெட்டு, விலை­வாசி உயர்வு இவை­தான் உங்­கள் ஆட்­சி­யில் நிகழ்ந்த சாத­னை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எங்­க­ளைப் பார்த்­துப் பாஜ­க­வின் தமிழ்­நாடு பிரிவு என்று கூறு­கி­றீர்­களே, நம்­மு­டைய தலை­வர் என்­றைக்­கா­வது பிர­த­மர் மோடி­யையோ, அமித் ஷா அவர்­களையோ, பாஜ­க­வையோ விமர்­சிக்­கத் தயங்­கி­யது கிடை­யாது.  நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­ம­ரை­யும் உள்துறை அமைச்­ச­ரை­யும் எதிர்த்­துப் போர்க்­கொடி தூக்­கி­ய­ வர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">100 நாள் வேலைத் திட்­டத்­தைச் சீர்­குலைக்­கும் சட்­டத்­தைக் கொண்டு வந்­த­போது அதை எதிர்த்­துப் பேசி­ய­து நான். அதற்கு எதி­ரா­கச் சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் கொண்டு வந்­த­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி மு.க. ஸ்டாலின். இந்த ஆண்டு மட்­டும் தமிழ்­நாட்­டிற்­கான வேலைவாய்ப்­பு­கள் 50% வரை குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதை எதிர்த்து ஒரு வார்த்­தை­யா­வது அன்­புத் தம்பி விஜய் கேட்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">பா.ஜ.க. பற்றி பேசினால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="14">அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் வன்­னி­ய­ரசு அவர்­கள் சட்­ட­மன்­றத்­தில் மோடி­யைப் பற்­றிப் பேச எழுந்­த­போது, ஐயோ, அதைப் பற்­றி­யெல்­லாம் இங்­குப் பேச­வேண்­டாம் என்று பயந்து அவைக்­குறிப்­பில் இருந்து நீக்­கிய வீரா­தி­வீ­ரர் தான் இந்த அன்­புத் தம்பி விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­றைக்கு நாடு முழு­வ­தும் தேர்­தல் ஆணை­யத்­தைப் பற்­றிப் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றது. மூன்றுதேர்­தல் ஆணை­யர்­களில் ஞானேஷ்­கு­மார் என்­ப­வர் தன்­னிச்­சை­யா­கச் செயல்­பட்டு, 13 கோடிப் பேரை வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கி­யி­ 
ருக்­கி­றார் என 14 முறை புகார்­கள் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதிமு.க.ஸ்டாலின்உட்­பட அனைத்து தலை­வர்­க­ளும் இதற்குஎதி­ரா­கப் போராடி வரும் நிலை­யில், முத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள் இதை எதிர்த்து ஒரு வார்த்­தைக்­கூட பேச­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவர்­க­ளது ஆட்­சி­யில் தமிழ்­மொழி இன்­றைக்கு மூன்­றாம் இடத்­திற்­குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது; தமிழ்த்­தாய் வாழ்த்து புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தமிழ் எனது உயிர் மூச்சு என்று கூறும் நீங்­கள் இதற்கு என்ன பதில்சொல்­லப் போகி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தலை­வர் கலை­ஞர் ஆட்­சிக் காலத்­தில்­தான் காண்­டூர் கால்­வாய் சீர­மைக்­கப்­பட்டு விவ­சா­யம் செழித்­தது; கூட்­டு­ற­வுப் பயிற்சி மையம் கொண்டு வரப்­பட்­டது. அண்­ணன் தள­ப­தி­யின் ஆட்­சி­யில் அர­சுக் கல்­லூ­ரி­கள், புற­வ­ழிச்­சா­லை­கள், பேருந்து நிலை­யங்­கள், அறி­வு­சார் மையங்­கள் அமைக்­கப்­பட்­டன. திருப்­பூ­ரின் வளர்ச்­சிக்­காக ரூ.1,400 கோடி­யும், நக­ராட்சி, பேரூ­ராட்­சி­க­ளுக்கு நூற்­றுக்­க­ணக்­கான கோடி நிதி­யும் திரா­விட முன்­னேற்­றக் கழக 
ஆட்­சி­யில் தான் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இத்­த­கைய நல்­லாட்சி மீண்­டும் மல­ர­வும், தமிழ்­நாட்டு மக்­களை இந்­தத் தீய சக்­தி­யின் ஆட்­சி­யி­லி­ருந்து காப்­பாற்­ற­வும், அன்­புத் தம்பி விஜய் அவர்­க­ளி­ட­மி­ருந்து விடு­விக்­க­வும், உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்­துச் சகோ­தரி சுகன்யா அவர்­களைப் பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்வாறு துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இராஜாத்தி கருணாநிதி அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>