<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 03:49:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260930T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="30092026-MDU-05" position.sequence="05" ex-ref="30092026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">30.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">அலங்கோல த.வெ.க. ஆட்சிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="111">மதுராந்தகம் தொகுதியில் உதயசூரியனை வெற்றி பெறச் செய்வீர்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">மதுராந்தகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup911630_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Mdspeech289_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கம், செப். 30 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கம்  சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தல் நடை­பெ­று­வ­தை­யொட்டி, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், நேற்று முன்­தி­னம்  தேர்­தல் பரப்­புரை செய்­தார்.  ஓரத்­தி­யில் பெருந்­தி­ர­ளா­கக் கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில் அவர் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் இவ்­வ­ளவு சிறப்­பான, எழுச்­சி­யான அன்­பான வர­வேற்பு கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். நேற்று முன்­தி­னம் தாரா­பு­ரம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லுக்­காக அங்கே பிரச்­சா­ரத்­திற்­குப் போயி­ருந்­தேன். நிச்­ச­யம் தாரா­பு­ரத்­தி­லும் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழக வெற்றி வேட்­பா­ளர் வெற்றி பெறு­வது உறுதி. அதைத் தொடர்ந்து மது­ராந்­த­கம் தொகுதி முழு­வ­தும் நம்­மு­டைய வெற்றி வேட்­பா­ளர் திரு. பரந்­தா­மன் அவர்­க­ளுக்­காக உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று தொடர்ந்து பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உத­ய­சூ­ரி­யன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உதித்­து­விட்­டான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளு­டைய உற்­சா­கத்­தை­யும், மகிழ்ச்­சி­யை­யும், ஆர­வா­ரத்­தை­யும் பார்க்­கும்­போது நிச்­ச­யம் இந்த இடைத்­தேர்­த­லில், மது­ராந்­த­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் உதிக்­கப் போவது உறுதி. உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, இந்த இடைத்­தேர்­த­லில் மது­ராந்­த­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் உதித்­து­விட்­டான் என்­கின்ற வெற்­றிச் செய்தி வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரு­கிற 6–ஆம் தேதி தாரா­பு­ரத்­தி­லும், இங்கே மது­ராந்­த­கத்­தி­லும் சட்­ட­சபை இடைத்­தேர்­தல் நடை­பெற இருக்­கி­றது. ஏற்­க­னவே இப்­போ­து­தான் தேர்­தல் முடிந்­தது உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஏப்­ரல் 23–ஆம் தேதி தேர்­தல் முடிந்­தது. இப்­போது மீண்­டும் இன்­னொரு இடைத்­தேர்­தல் வந்­தி­ருக்­கி­றது என்­றால், இந்த இடைத்­தேர்­தல் இயற்­கை­யாக வந்த இடைத்­தேர்­தலா? இந்த இடைத்­தேர்­தலை உங்­க­ளி­டத்­தில் திணித்­தது யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு முன்­னால் ஒரு சிறிய விஷ­யத்தை உங்­க­ளுக்கு நினை­வூட்ட விரும்­பு­கி­றேன். இன்­றைக்கு தேதி செப்­டம்­பர் 27. கடந்த ஆண்டு இதே செப்­டம்­பர் 27–ஆம் தேதி என்ன நடந்­தது என்று நான் உங்­க­ளுக்கு நினை­வூட்ட விரும்­ப­வில்லை. உங்­க­ளுக்கே நினை­வி­ருக்­கும், மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள். கரூ­ரில் பிரச்­சா­ரக் கூட்­டம் நடத்­து­கி­றேன் என்று கூறி ஒரு கட்­சி­யி­னு­டைய தலை­வர் கிட்­டத்­தட்ட 10 மணி நேரம் தாம­த­மா­கப் போனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உயிர்­கள் பலி– கவ­லைப்­ப­டா­மல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கிளம்­பி­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அங்கு பல ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களை, மக­ளி­ரைக் கூட்டி வைத்து, குழந்­தை­களை அடைத்து வைத்து, அவர்­களை 10 மணி நேரம் வெயி­லில் நிற்க வைத்து, குடிக்­கத் தண்­ணீர் கொடுக்­கா­மல், கழிப்­பறை வசதி ஏற்­ப­டுத்­தித் தரா­மல், அவர்­க­ளைப் பட்­டினி போட்டு நெரி­ச­லில் கிட்­டத்­தட்ட 10 குழந்­தை­கள் உள்­ளிட்ட 41 பேர் இறந்த நாள் இந்த செப்­டம்­பர் 27, நீங்­கள் மறந்­தி­ருக்க மாட்­டீர்­கள். ஆனால் அந்த செப்­டம்­பர் 27, அந்த விபத்து நடந்­த­போது, அதற்­குக் கார­ண­மான ஒரு­வர், அந்­தச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆறு­தல் கூறி­னாரா? மன்­னிப்­புக் கேட்­டாரா? கரூ­ரில் அந்­தச் சம்­ப­வம் நடக்­கும்­போது அந்­தக் கட்­சி­யின் தலை­வர் பேசிக்­கொண்டு இருக்­கும்­போதே கிட்­டத்­தட்ட உயிர்­பலி தொடங்­கி­விட்­டது. பாதி­யில் பேசி முடித்­து­விட்­டுப் புறப்­பட்­டு­விட்­டார். எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல் கிளம்­பி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கரூ­ரி­லி­ருந்து திருச்சி விமான நிலை­யத்­திற்­குப் போகும்­போது, அங்கு பொது­மக்­க­ளும், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளும் வழி­ம­றித்­துக் கேள்வி கேட்­டார்­கள். ``சார், பல­ரும் இறந்­து­விட்­டார்­கள். இதற்கு ஏதா­வது சொல்­கி­றீர்­களா?’’ என்று கேட்­கும்­போது, ஏதா­வது பதில் கூறி­னாரா? எந்­தப் பொறுப்­பும் எடுத்­துக்­கொள்­ள­வில்லை. எந்­தப் பதி­லும் கூற­வில்லை. அதன்­பி­றகு திருச்­சி­யி­லி­ருந்து புறப்­பட்டு சென்­னைக்­குச் சென்று சேர்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை விமான நிலை­யத்­தில் பொது­மக்­க­ளும், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளும் வழி­ம­றித்­துக் கேள்வி கேட்­டார்­கள். ``சார், 41 பேர் இறந்­து­விட்­டார்­கள். சார் கரூ­ரில். நீங்­கள் சென்ற கூட்­டத்­தில், நீங்­கள் கலந்­து­கொண்ட கூட்­டத்­தில் 41 பேர் இறந்­தி­ருக்­கி­றார்­கள் சார். ஏதா­வது கூறுங்­கள் சார்’ என்­ற­போது, ஏதா­வது பதில் கூறி­னாரா? எது­வும் கூற­வில்லை. வாயைத் திறக்­கவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">40 நாட்­கள் தலை­ம­றைவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆள் காணா­மல் போய்­விட்­டார். வீட்­டுக்­குச் சென்­ற­வர் வெளியே வர­வில்லை, எந்­த­வி­த­மான செய்­தி­யும் கிடை­யாது. அவர்­தான் அப்­படி என்­றால், அவ­ரு­டைய மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள், அவ­ரு­டைய கட்­சித் தொண்­டர்­கள், இப்­போது இருக்­கக்­கூ­டிய அமைச்­சர் பெரு­மக்­கள் இவர்­கள் எல்­லாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் கிட்­டத்­தட்ட 40 நாட்­கள் தலை­ம­றை­வாக இருந்­தார்­கள். அன்று கரூ­ருக்­குச் சென்று அந்த மக்­க­ளுக்­குத் துணை­யாக நின்­றது, ஆறு­த­லாக நின்­றது யார்? நம்­மு­டைய கழ­கத் தலை­வர், அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்த நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் சென்று  உடன் நின்­றார். நான் அப்­போது வெளி­நாட்­டுக்கு, என் குடும்­பத்­து­டன் சென்று இருந்­தேன். உடனே, புறப்­பட்டு வந்து தலை­வ­ரு­டன் கூட இருந்து, அந்த மக்­க­ளுக்­குக் கூட நின்று உதவி செய்­தோம். நாங்­கள் மட்­டும் அல்ல, அனைத்து அமைச்­சர் பெரு­மக்­க­ளும், நம்­மு­டைய அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், ஏன் இன்­னும் சொல்­லப்­போ­னால், அ.தி.மு.க–வி­னு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், அ.தி.மு.க–வின் நிர்­வா­கி­க­ளும் அன்று மருத்­து­வ­ம­னைக்கு வந்­தார்­கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் துணை­யாக நின்­றார்­கள். ஆனால், அந்த விபத்­திற்­குக் கார­ண­மா­ன­வர்­கள் துணை­யாக நின்­றார்­களா என்று நீங்­கள் சிந்­தித்­துப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நம் தலை­வ­ரின் பெருந்­தன்மை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய தலை­வர் அப்­போ­து­கூ­டப் பெருந்­தன்­மை­யாக என்ன தெரி­யுமா கூறி­னார்? `இதை நான் அர­சி­யல் ஆக்க விரும்­ப­வில்லை’. அப்­போது நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்­தார். காவல்­துறை அவ­ரு­டைய கட்­டுப்­பாட்­டில் இருந்­தது. என்ன தெரி­யுமா கூறி­னார் தலை­வர்? `எந்­தத் தலை­வ­ரும் தன்­னு­டைய தொண்­ட­னு­டைய இறப்­பில் அர­சி­யல் செய்ய விரும்ப மாட்­டான். எந்­தத் தலை­வ­னும் தொண்­டன் இறப்­பதை விரும்­ப­வும் மாட்­டான்’ என்று கூறிய பெருந்­தன்­மை­யான தலை­வர் நம்­மு­டைய தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விசா­ர­ணைக்கு ஒரு தனிப்­பி­ரிவு அமைத்­தோம். சிறப்­புப் புல­னாய்­வுக் குழு அமைத்­தார் தலை­வர். ஆனால், இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் என்ன கூறி­னார்? `அந்­தக் குழு­வின் மீது எங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை. இதை உடனே சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு டெல்­லிக்கு அனுப்­புங்­கள்’ என்று கூறி­ய­வர்­தான் இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர். அது இன்று சி.பி.ஐ. வசம் இருப்­ப­தால்­தான்  முத­ல­மைச்­ச­ ரு­டைய குடுமி டெல்­லி­யின் கைக­ளில் இருக்­கி­றது. இன்று அத­னால்­தான் பா.ஜ.க. என்ன கூறி­னா­லும் அதற்கு `ஆமாம்’ போட்­டுக்­கொண்டு, பா.ஜ.க.வுக்கு ஜால்ரா அடிக்­கின்ற சங்­கிக் கூட்­ட­மா­கத்­தான் இங்கு இருக்­கக்­கூ­டிய டம்மி முத­ல­மைச்­ச­ரும் அவ­ரது அமைச்­ச­ரவை சகாக்­க­ளும் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை இந்த நேரத்­தில் ஏன் ஞாப­கப்­ப­டுத்­து­கி­றேன் என்­றால், எந்­த­வி­த­மான பொறுப்­பு­ணர்­வும் எடுத்­துக்­கொள்­ளாத ஒரு முத­ல­மைச்­சர் இன்று வந்­தி­ருக்­கி­றார். அதற்கு உதா­ர­ணம், அவர் முத­ல­மைச்­ச­ராக இருப்­ப­தற்கு முன்­னால், தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஒவ்­வொரு கூட்­டத்­தி­லும், அவர் கலந்­து­கொண்ட கூட்­டமே ஐந்து கூட்­டமோ, ஆறு கூட்­ட­மோ­தான். தேர்­தல் பிரச்­சா­ரத்­திற்­குக்­ கூட ஒழுங்­கா­கச் செல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அதைச் செய்­வேன் இதைச் செய்­வேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த ஒவ்­வொரு கூட்­டத்­தி­லும் என்ன கூறி­னார் தெரி­யுமா? `ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் மக­ளிர் உரி­மைத்­தொகை 1,000 ரூபா­யி­லி­ருந்து 2,500 ரூபா­யாக உயர்த்­தித் தரு­கி­றேன்’ என்று கூறி­னாரே, கொடுத்­தாரா? ஆனால் நம் தலை­வர் கூறி­யது போல் 1,000 ரூபாய் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்­னால் பிரச்­சா­ரத்­தில் ‘ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் ஒவ்­வொரு வீட்­டிற்­கும் ஆறு கேஸ் சிலிண்­டர் கொடுப்­பேன்’ என்று கூறி­னாரா, இல்­லையா? இது­வ­ரைக்­கும் கொடுத்­தி­ருக்­கி­றாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் ஒவ்­வோர் இளை­ஞ­ருக்­கும் மாதம் தோறும் 4,500 ரூபாய் உத­வித்­தொகை கொடுப்­பேன்’ என்று கூறி­னாரா, இல்­லையா? இது­வ­ரைக்­கும் கொடுத்­தி­ருக்­கி­றாரா? கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றை­யும் விட முக்­கி­யம், அனைத்து விவ­சா­யி­க­ளுக்­கும் முழு பயிர்க்­க­டன் தள்­ளு­ப­டியை `ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டம் கொடுப்­பேன்’ என்று கூறி­னாரே, கொடுத்­தாரா? இப்­படி எதை­யுமே கொடுக்­க­வில்லை. ஆனால், என்ன செய்­தார் வந்­த­வு­டனே? ஆட்­சிப் பொறுப்பை ஏற்­ற­வு­டனே என்ன செய்­தார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நம் தய­வில்­தான் இன்று இந்த ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்­டும் என்­றால் அவர்­க­ளுக்­குக் கிட்­டத்­தட்ட குறைந்­த­பட்­சம் 118 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வேண்­டும். இப்­போது இருக்­கக்­கூ­டிய இந்த கர­காட்ட கோஷ்­டிக்கு அந்த 118 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு மக்­கள் கொடுத்­தது வெறும் 107 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்­தான். இன்று இவர்­கள் ஆட்சி நடந்­து­கொண்டு இருப்­பது நாம் போட்ட பிச்சை, தி.மு.க போட்ட பிச்சை, எங்­கள் தலை­வர் போட்ட பிச்­சை­யில்­தான் இன்று ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது. ஏன் கூறு­கி­றேன் என்­றால், நம்­மோடு கூட்­டணி வைத்­துக்­கொண்டு கிட்­டத்­தட்ட எட்­டாண்­டுக் காலம் நம்­மு­ட­னேயே இருந்து, நம் தலை­வ­ரு­டைய முகத்­தைக் காட்டி, திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய சாத­னை­க­ளை­யெல்­லாம் கூறி வாக்­குக் கேட்டு வெற்றி பெற்று, இன்று சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராகி அவர்­க­ளு­டைய  நம் தய­வில்­தான் இன்று இந்த ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டிய சிலர் நம்­மு­டைய தலை­வ­ரி­டம் கூறி­விட்­டுச் சென்­றார்­கள். ‘குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி வந்­து­வி­டக்­கூ­டாது. மீண்­டும் மறு­தேர்­தல் வந்­து­வி­டக்­கூ­டாது. நாங்­கள் செல்­கி­றோம்’ என்று சென்­றார்­கள். தலை­வரே அனுப்பி வைத்­தார், `ஆம், குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி தமிழ்­நாட்­டிற்­குள் வரக்­கூ­டாது, செல்­லுங்­கள்’ என்­றார். சிலர் கூறி­விட்­டுச் சென்­றார்­கள். சில துரோ­கக் கூட்­டம் சொல்­லவே இல்லை, தலை­வ­ரி­டம் சொல்­லா­ம­லேயே சென்­றார்­கள். நான் யாரைக் கூறு­கி­றேன் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும் அல்­லவா? அந்­தத் துரோ­கக் கூட்­டத்­தைத் தய­வு­செய்து மன்­னித்­து­வி­டா­தீர்­கள், மறந்­து­வி­டா­தீர்­கள். நிச்­ச­யம் நீங்­கள் மறக்க மாட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­டித்­தான் இவர் ஆட்சி அமைத்­தார். முத­ல­மைச்­சர் ஆக வேண்­டும்  என்று அவரே எல்­லாக் கட்­சித் தலை­வர் வீட்­டிற்­கும் சென்­றார். வெறும் கையையா ஆட்­டிக்­கொண்டு சென்­றார்? எல்­லா­ருக்­கும் புதிய சோஃபா வாங்­கிக்­கொண்டு சென்­றார். புதிய சோஃபா எல்லா அலு­வ­ல­கங்­க­ளுக்­கும் வாங்­கிக்­கொண்டு சென்­றார். அது­மட்­டு­மல்ல, நம் கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்கு சோஃபா. அ.தி.மு.க இருக்­கி­றது அல்­லவா, அதில் இருக்­கக்­கூ­டிய ஒரு சில தலை­வர்­களை மட்­டும் சென்று தனி­யா­கப் பார்த்து அந்­தக் கட்­சி­யையே இரண்­டா­கப் பிளந்து, அதில் இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­டைய ஆத­ரவை வாங்­கி­னார். அவர்­க­ளுக்­கெல்­லாம் வெறும் பெட்டி. கூட்­ட­ணிக் கட்சி என்­றால் சோஃபா; அதி­மு­க­வி­லி­ருந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்­றால் வெறும் பெட்­டி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரையே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">விலை கொடுத்து வாங்­கி­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது இருக்­கி­றாரே முத­ல­மைச்­சர், அவ­ருக்கு தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைப் பார்த்­தால், அவர்­கள் மீது வழக்­குத் தொடர வேண்­டும் என்று தோன்­றும். அ.தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைப் பார்த்­தால் அவர்­களை எப்­ப­டி­யா­வது தூக்­கி­விட வேண்­டும் என்று தோன்­றும், விலைக்கு வாங்­கி­விட வேண்­டும் என்று தோன்­றும். இவர் நம்­மைக் கூறு­வார், ‘வாக்­கிற்­குப் பணம் கொடுக்­கி­றார்­கள்’ என்று நம்­மைக் கூறு­வார். ஆனால் இவர் என்ன தெரி­யுமா செய்­தார்? சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரையே தூக்­கி­விட்­டார். மொத்­த­மாக சட்­ட­மன்ற உறுப்­பி­னரை வாங்­கி­விட்­டார். அது­மட்­டு­மல்ல, இப்­போது ஒரு கட்­சி­யையே இரண்­டாக உடைத்து வாங்­கி­யி­ருக்­கி­றார். கிட்­டத்­தட்ட ஏழு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை அ.தி.மு.க–வி­லி­ருந்து இந்த மாதி­ரித் தூக்­கி­யி­ருக்­கி­றார். அதில் வரக்­கூ­டிய இரண்டு இடைத்­தேர்­தல்­தான் இப்­போது வந்­தி­ருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற இடைத்­தேர்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">படித்த, பண்­பான வேட்­பா­ளர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இடைத்­தேர்­த­லில் நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் ஒரு நல்ல வேட்­பா­ளரை, சிறந்த வேட்­பா­ளரை உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார். பரந்­தா­மன் அவர்­களை உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்.  பரந்­தா­மன் அவர்­க­ளைப் பற்றி உங்­க­ளி­டத்­தில் நான் கூற வேண்­டிய அவ­சி­யம் இல்லை. நன்கு படித்த வேட்­பா­ளர், வழக்­க­றி­ஞர், பண்­பான வேட்­பா­ளர், கொண்ட கொள்­கை­யில் உறு­தி­மிக்க ஒரு வேட்­பா­ளர். தேர்­த­லுக்­குத் தேர்­தல் கொள்­கை­யை­யும் தலை­வர்­க­ளை­யும் மாற்­றிக்­கொள்­கிற வேட்­பா­ளர் கிடை­யாது நம்­மு­டைய பரந்­தா­மன் அவர்­கள். உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரி­யும். நீங்­க­ளெல்­லாம் அவ­ரு­டைய பேட்­டி­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். அவ­ரு­டைய ஒவ்­வொரு பேட்­டி­யும் ஆளுங்­கட்­சி­யைத் திண­ற­டிக்­கின்ற வகை­யில் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் எல்­லாம் பார்த்­துக்­கொண்­டு­தானே இருக்­கி­றீர்­கள் சட்­ட­மன்­றம் எப்­படி நடக்­கி­றது என்று? அது மிகப்­பெ­ரிய ஒரு கேலிக்­கூத்து. அந்­தச் சட்­ட­மன்­றத்­தில் இப்­போது இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்­சியை, முத­ல­மைச்­சரை, அமைச்­சர்­க­ளைச் சரி­யா­கக் கேள்வி கேட்க வேண்­டும் என்­றால், நீங்­கள் பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வைத்து அனுப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றம் எல்­லாம் பார்த்­தீர்­களா? நேர­லை­யில் பார்த்­தீர்­களா? நன்­றாக இருந்­ததா? சட்­ட­மன்­றத்­தில் நீங்­கள் எதற்­காக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைத் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பு­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­தில் என்ன நடக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வெறும் பாட்­டுக்­குப் பாட்டு நிகழ்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளுக்­குப் பதி­லாக உங்­க­ளுக்­குப் போய்க் குரல் கொடுக்க வேண்­டும், உங்­கள் தொகு­தி­யில் என்ன தேவையோ சாக்­கடை வசதி, கழி­வு­நீர் வசதி, குடி­நீர் வசதி, தெரு­வி­ளக்கு வசதி இதெல்­லாம் உங்­கள் சார்­பாக உங்­கள் தொகு­தி­யில் வேண்­டும் என்று எங்­க­ளைத் தேர்வு செய்து அனுப்­பு­கி­றீர்­கள். இதற்­குத்­தான், இந்த முக்­கி­யப் பணிக்­கா­கத்­தான் நாங்­கள் சட்­ட­மன்­றத்­திற்­குச் செல்­கி­றோம். அப்­ப­டித்­தான் நாங்­கள் நினைத்­துக்­கொண்டு சென்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொது­வா­கச் சட்­ட­மன்­றத்­திற்­குச் சென்­றால் நாங்­கள் கேள்வி கேட்­போம், அமைச்­சர்­கள் பதில் கூறு­வார்­கள். ஆனால் இப்­போது சட்­ட­மன்­றத்­தில் என்ன நடக்­கி­றது? வெறும் பாட்­டுக்­குப் பாட்டு நிகழ்ச்சி நடக்­கி­றது. எல்­லா­ரும் பாட்­டுப் பாடு­கி­றார்­கள். எல்­லாச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பாடு­கி­றார்­கள், எல்லா அமைச்­சர்­க­ளும் பாடு­கி­றார்­கள். நான் சென்று சபா­நா­ய­க­ரி­டம் கூறி­னால், அவ­ரும் பாட்­டுப் பாடு­கி­றார். சபா­நா­ய­க­ரி­டமே கூறி­விட்­டேன், `சபா­நா­ய­கர் அவர்­களே, இது சட்­ட­மன்­றமா அல்­லது சூப்­பர் சிங்­கர் நிகழ்ச்­சியா என்று தெரி­யாத அள­விற்­குப் போய்க்­கொண்டு இருக்­கி­றது. எல்­லா­ரும் பாட்­டுப் பாடிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்’ அந்த நிலை­மை­யில் இன்று சட்­ட­சபை போய்க்­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று கூறு­கி­றார், ‘முத­ல­மைச்­ச­ருக்கு நன்றி’. ஏன் நன்றி? அவர் கூறு­கி­றார், ‘எனக்கு வீடு இல்லை, வீடு வாங்­கிக் கொடுத்­து­விட்­டீர்­கள். எனக்கு வேலை இல்லை, வேலை போட்­டுக் கொடுத்­து­விட்­டீர்­கள். எனக்­குக் கார் இல்லை, இப்­போது காரும் கொடுத்­து­விட்­டீர்­கள். எனக்கு இப்­போது சமீ­பத்­தில் மிகப்­பெ­ரிய ஒரு காதல் தோல்வி ஏற்­பட்­டு­விட்­டது. அதற்­கும்’ உடனே முத­ல­மைச்­சர் பார்த்­துச் சிரிக்­கி­றார், ‘ராஜா, நான் ஏற்­பாடு செய்­கி­றேன் ராஜா’ என்று. ஏனென்­றால் இது பெரிய மாற்­றம் அல்­லவா! இந்த முத­ல­மைச்­சர் அதற்­கெல்­லாம் திட்­டம் வைத்­தி­ருக்­கி­றார். இப்­ப­டித்­தான் சட்­ட­மன்­றம் நடந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">எந்­தக் கேள்­விக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பதில் கிடை­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து நின்று கேட்­கி­றார், ‘எங்­க­ளுக்கு முத­ல­மைச்­ச­ரு­டைய முகம் தெரி­ய­வில்லை. எங்­கள் எல்­லா­ருக்­கும் தெரி­கிற மாதிரி கையில் ஒரு தொலைக்­காட்சி கொடுங்­கள். முத­ல­மைச்­சரை நாங்­கள் பார்த்­துக்­கொண்டே இருக்க வேண்­டும்’. ஏனென்­றால் இவர் பேசிச் கிழிக்­கி­றார் பாருங்­கள்! வாயைத் திறப்­பதே கிடை­யாது. பிடித்து வைத்த பிள்­ளை­யார் என்­பார்­களே, சில நேரம் சட்­ட­மன்­றத்­தில் அவர் இருக்­கி­றாரா இல்­லையா என்றே தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எந்­தக் கேள்­விக்­கும் பதில் கிடை­யாது.காவல்­து­றைக்கு இவர்­தான் அமைச்­சர், முத­ல­மைச்­சர்­தான்பொறுப்பு. காவல்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் நான் பேசி­னேன். கிட்­டத்­தட்ட 16 கேள்­வி­கள் கேட்­டேன். சட்­டம் ஒழுங்கு தமிழ்­நாட்­டில் எந்த நிலை­மை­யில் இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஒவ்­வொரு நாளும் எத்­தனை கொலை­கள்? நான்கு மாதங்­க­ளில் மட்­டும் 500 கொலை­கள், படு­கொ­லை­கள் தமிழ்­நாடு முழு­வ­தும் நடந்­தி­ருக்­கின்­றன. அது­வும் கோயம்­புத்­தூ­ரில் மட்­டும் ஒரு மாதத்­தில் 10 கொலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த வாரம் ஒரே நாளில் எட்டு கொலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. பெண்­க­ளுக்கு எந்த இடத்­தி­லும் பாது­காப்பு இல்லை. உங்­க­ளுக்­குத் தெரி­யும் வண்­ட­லூ­ரில் நேற்று முன்­தி­னம் என்ன நடந்­தது? ஒரு பத்­தாம் வகுப்பு படிக்­கக்­கூ­டிய பள்ளி மாண­வியை அழைத்­துச் சென்று பாலி­யல் வன்­கொ­டுமை செய்து, அவர்­க­ளு­டைய அப்பா அம்மா புகார் கொடுக்­கச் செல்­லும்­போது ‘இல்லை பாம்பு கடித்­து­விட்­டது’ என்று பொய்ப் புகார் வாங்­கி­யி­ருக்­கி­றார்­கள். இப்­ப­டிச் சட்­டம் ஒழுங்கு இவ்­வ­ளவு சந்தி சிரிக்­கி­றதே, இதற்­குப் பதில் கூறுங்­கள் முத­ல­மைச்­சர் என்று கூறி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் ஓடிப்­போய்­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் என்ன தெரி­யுமா கூறி­னார்? ‘இரண்டு நாள்­க­ளில் பதில், மூன்று நாள்­க­ளில் பதில் கூறு­கி­றேன்’ என்று கூறி­விட்டு அவர் ஓடிப்­போய்­விட்­டார். எங்­க­ளை­யெல்­லாம் ஓடிப்­போய்­வி­டா­தீர்­கள் என்று கூறி­விட்டு அவர் ஓடிப்­போய்­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டித்­தான் நடந்­து­கொண்டு இருக்­கி­றது இப்­போது இருக்­கக்­கூ­டிய சட்­ட­சபை. எனவே இந்­தச் சட்­ட­ச­பை­யில் உங்­க­ளு­டைய உறுப்­பி­ன­ராக, உங்­கள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக, உங்­கள் தொகு­தி­யி­னு­டைய விஷ­யங்­க­ளைப் பேசு­வ­தற்­காக, உங்­க­ளு­டைய உரி­மை­க­ளைக் காப்­ப­தற்­கா­கப் பரந்­தா­மன் அவர்­களை வரு­கிற 6–ஆம் தேதி உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து மிகப்­பெ­ரிய வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">100 நாள் வேலை­வாய்ப்­புத் திட்­டம், இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய உங்­க­ளில் பலர் அதில் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றீர்­கள். 100 நாள் வேலை­வாய்ப்­புத் திட்­டத்­தில் உங்­க­ளுக்­குச் சேர வேண்­டிய ஊதி­யத்தை இந்த அரசு முறை­யா­கக் கொடுக்­கி­றதா? கிடை­யாது. ஆனால் 100 நாள் வேலை­வாய்ப்­பிற்கு இப்­போது தகுதி உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். அதா­வது ஆண்டு வரு­மா­னம் 21,000 ரூபாய்க்­குக் கீழ் இருந்­தால், கிடை­யாது என்று இந்த அரசு புதிய உத்­த­ரவு போட்­டி­ருக்­கி­றது. ஆனால், நம்­மு­டைய ஆட்­சி­யில் அந்த மாதிரி எது­வும் கிடை­யாது, வரம்பு கிடை­யாது, அனை­வ­ருக்­கும் கொடுத்­துக்­கொண்டு இருந்­தோம். எனவே, இதற்­கெல்­லாம் ஒரு சரி­யான தகுந்த பதி­லடி கொடுக்க வேண்­டும் என்­றால், இப்­போது இருக்­கக்­கூ­டிய இந்த அலங்­கோல ஆட்­சிக்கு ஒரு சரி­யான தண்­டனை கொடுக்க வேண்­டும் என்­றால், வரு­கிற 6–ஆம் தேதி வாக்­குச்­சா­வ­டிக்­குச் சென்று நீங்­கள் வாக்­குப்­பெட்­டி­யில் மூன்­றா­வது இடத்­தில் பரந்­தா­ம­னு­டைய பெயர் இருக்­கும். பக்­கத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் இருக்­கும். அதில் வாக்­க­ளித்து, ஆறாம் தேதி மூன்­றா­வது இடத்­தில் அவர் பெயர் இருக்­கும்; ஒன்­ப­தாம் தேதி முத­லி­டத்­தில் திரு. பரந்­தா­ம­னு­டைய பெய­ரும் உத­ய­சூ­ரி­யன் சின்­ன­மும் வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கத்­தில் மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் வெற்றி பெற்­று­விட்­டது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி பெற்­று­விட்­டது என்ற செய்தி வரு­கிற ஒன்­ப­தாம் தேதி வெற்­றிச் செய்­தி­யாக வர வேண்­டும்.  நீங்­கள் அத்­தனை பேரும் முடிவு செய்­து­விட்­டீர்­கள், இந்­தத் தேர்­த­லில், இடைத்­தேர்­த­லில் தி.மு.க–வை வெற்றி பெற வைக்க வேண்­டும், பரந்­தா­மனை வெற்றி பெற வைக்க வேண்­டும் என்று நீங்­கள் முடிவு செய்­து­விட்­டீர்­கள். நான் உங்­க­ளி­டத்­தில் வைக்­கிற வேண்­டு­கோள் எல்­லாம் ஒன்றே ஒன்­று­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உடைந்து போன டேப் ரெக்­கார்­டர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்ன ஆயிற்று லண்­ட­னில்? எனக்கு எப்­ப­டித் தெரி­யும்? ஈர்க்­கச் சென்­றார், முத­லீட்டை ஈர்க்­கச் சென்­றார். தொழில்­துறை அமைச்­சரே இல்­லா­மல், தொழில்­து­றைச் செய­லா­ளர் இல்­லா­மல் வர­லாற்­றி­லேயே ஒரு முத­ல­மைச்­சர் தொழில்­துறை ஈர்க்­கப் போகி­றேன் என்று கூறி? அதற்கு மேல் பேச மாட்­டேன். அவர் முத­ல­மைச்­ச­ராக 
இருக்­கி­றார் அல்­லவா, இரண்டு நாள்­க­ளுக்கு முன்­னால் மது­ராந்­த­கம் வந்­தார் தெரி­யுமா? பிரச்­சா­ரம் செய்­தார் தெரி­யுமா? என்ன பேசி­னார்? யாரா­வது கேட்­டீர்­களா? என்னை என்­னு­டைய நண்­பர்­கள் யாரா­வது கேட்­பார்­கள், ‘என்­னங்க முத­ல­மைச்­சர் இன்று பேசி­யி­ருக்­கி­றார், கேட்­டீர்­களா?’ என்று கேட்­பார்­கள். நான் என்ன தெரி­யுமா கூறு­வேன்? ‘அட என்­னங்க, எப்­போது வேண்­டு­மா­னா­லும் கேட்­டுக்­கொள்­ள­லாம். அவர் எப்­போது பேசி­னா­லும் ஒன்­று­தான் பேசு­வார். உடைந்து போன டேப் ரெக்­கார்­டர் போன்று பேசி­ய­தையே பேசிக்­கொண்டு இருப்­பார்’. அத­னால் இன்று அந்த நேற்று முன்­தி­னம் மது­ராந்­த­கத்­தில் பேசி­னார் அல்­லவா, அதை யாரா­வது கேட்­கத் தவ­ற­விட்­டி­ருந்­தால், கவ­லைப்­ப­டா­தீர்­கள். மீண்­டும் இரண்டு நாள்­கள் கழித்து அதே­தான் பேசு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் சொல்­கி­றேன், மது­ராந்­த­கத்­தில் நேற்று முன்­தி­னம் 30 நிமி­டங்­கள் பேசி­யி­ருக்­கி­றார். முத­ல­மைச்­சர் கிட்­டத்­தட்ட 30 நிமி­டங்­கள் பேசி­யி­ருக்­கி­றார். அதில் 34 முறை தி.மு.க தி.மு.க. தி.மு.க தி.மு.க திமுக! பேசு­கிற நிமி­டங்­களை விட அதி­கம். அவர் பேசி­ய­தில் 34 முறை திமுக, ஒரே ஒரு முறை டி.எம்.கே. ஏனென்­றால் அவ­ருக்கு ஆங்­கி­லம் தெரி­யும் அல்­லவா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, எல்லா இடங்­க­ளி­லும் இரண்­டரை வரு­டங்­க­ளாக இதைத்­தான் பேசிக்­கொண்டு இருக்­கி­றார். இப்­போது என்ன தெரி­யுமா கூறு­கி­றார்? ‘ஏன் நான் முத­ல­மைச்­சர் ஆகக்­கூ­டாதா?’ என்று கேட்­கி­றார். முத­ல­மைச்­சர் ஆனதை அவரே இன்­னும் நம்­ப­வில்லை. நாம் நம்­ப­வில்லை அதை விடுங்­கள், இன்­னும் அவர் நம்­பவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான்கு மாதங்­க­ளுக்­குப் பின்­னால் இருக்­கி­றார். விஜய் சேது­பதி ஒரு திரைப்­ப­டத்­தில் தலை­யில் அடி­பட்டு எழுந்து கேட்­பார் அல்­லவா, ‘என்ன ஆயிற்று? நான் எங்கே இருக்­கி­றேன்?’ என்று கேட்­பார். அது­போன்று இருக்­கி­றார் முத­ல­மைச்­சர். அது லண்­டன் சென்­று­விட்டு வந்­த­த­னால் அல்ல, நான்கு மாதங்­க­ளா­கவே அப்­ப­டித்­தான் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, எங்கு சென்­றா­லும் என்ன தெரி­யுமா பேசு­வார்? ஒரு பெரிய வச­னம். என்­ன­வென்­றால், தி.மு.க.வைக் கூறி ‘ஓம் சக்தி பரா­சக்தி’. சரியா? இப்­போது நான் ஒன்று கூறு­கி­றேன். இப்­போது இவ்­வ­ளவு நேரம் அவர் கூறி­னார் அல்­லவா, அவர் எதிர்க்­கட்­சி­யாக இருந்­தார். ‘என்­னவோ பேசி­விட்­டுப் போகட்­டும்’ என்று விட்­டு­விட்­டோம். நாம் ஆளுங்­கட்­சி­யாக இருந்­தோம். இப்­போது நாம் எதிர்க்­கட்சி ஆகி­விட்­டோம். இப்­போது நாம் என்ன வேண்­டு­மா­னா­லும் பேச­லாம். இப்­போது நாம் அவர் கூறி­ய­தற்கு நாம் திருப்­பிக் கொடுக்க வேண்­டுமா, வேண்­டாமா? திருப்பி வட்­டி­யோடு கொடுக்க வேண்­டுமா, வேண்­டாமா? அத­னால் இப்­போது நான் கூறு­கி­றேன், நீங்­கள் திருப்­பிச் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஓம் காளி! ஜெய் காளி! ஓம் காளி! ஜெய் காளி! ( கூட்­டத்­தி­னர் த.வெ.க ஒரு ஓடு­காலி! என்­கின்­ற­னர்.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இனி­மேல் நாம் எந்­தப் பிரச்­சா­ரக் கூட்­டம் நடத்­தி­னா­லும், எந்­தக் கூட்­டம் நடத்­தி­னா­லும், இதை ஒரு நான்கு முறை கூறி­விட்டு தொடங்­கு­வோம். அவர் பெய­ரைச் சொல்­லா­தீர்­கள். அழு­து­வி­டு­வார், அவர் கட்­சிப் பெய­ரைச் சொல்­லிக்­கொள்­ளுங்­கள். அதைச் சொல்­லித்­தான் நாம் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">இந்­தத் தேர்­தல் நமக்­குக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கிடைத்­தி­ருக்­கிற சரி­யான வாய்ப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தேர்­தல் நமக்­குக் கிடைத்­தி­ருக்­கிற சரி­யான வாய்ப்பு. இந்த ஆட்சி சரி­யான முறை­யில் நடை­பெ­ற­வில்லை. ஒரு காமெடி ஆட்சி நடந்­து­கொண்டு இருக்­கி­றது என்­பதை இந்­தத் தேர்­தல் மூல­மாக இந்த அர­சுக்கு நாம் புரிய வைக்க வேண்­டும். இந்த முத­ல­மைச்­ச­ரைத் தட்டி எழுப்ப வேண்­டும். தூங்­கிக்­கொண்டு இருக்­கிற முத­ல­மைச்­சரை எழுப்­பு­வ­தற்கு, நமக்­குக் கிடைத்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு நல்ல ஆயு­தம்­தான் உங்­க­ளு­டைய வாக்கு. ஆறாம் தேதி உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, திரு. பரந்­தா­மன் அவர்­களை மிகப்­பெ­ரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் நீங்­கள் வெற்றி பெற வைக்க வேண்­டும். உங்­களை எல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரு­டைய மக­னாக இருந்து கேட்­கி­றேன், இன்­னும் பெரு­மை­யாக, பூரிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் டாக்­டர் கலை­ஞ­ரு­டைய பேர­னாக இருந்து கேட்­கி­றேன் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திற்கு, திரு. பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள். மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித் தாருங்­கள். உங்­க­ளு­டைய அன்­புக்­கும், வர­வேற்­புக்­கும் நன்றி, நன்றி, நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் பொறுப்­பா­ளர் முன்­னாள் அமைச்­சர் எ.வ.வேலு, முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சுந்­தர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தர­ணி­வேந்­தன், செல்­வம், சி.என்.அண்­ணா­துரை, முன்­னாள் துணை சபா­நா­ய­கர் பிச்­சாண்டி, உத­ய­சூ­ரி­யன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மலை­ய­ர­சன், அமுலு பொன்­ம­லர், சிவக்­கு­மார், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அம்­பேத்­கு­மார், வசந்­தம் கார்த்­தி­கே­யன், எஸ்.கே.பி.கருணா, சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், மகா­லட்­சுமி யுவ­ராஜ், இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர்­கள் எஸ்.ஜோயல், அப்­துல் மாலிக், இளை­ய­ராஜா, ஜி.பி. ராஜா, பிரபு கஜேந்­தி­ரன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் யுவ­ராஜ், கோல்டு பிர­காஷ், எவ­ரெஸ்ட் நரேஷ் குமார், அருண்­ராஜ், தின­க­ரன், ஆனந்த், இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் பால்­ராஜ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வசந்­த­வேல், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>