<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,68,957,1210" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 03:52:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260930T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="30092026-TRY-03" position.sequence="03" ex-ref="30092026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">மக்களாட்சியின் நெஞ்சில் குத்தும் தேர்தல் ஆணையம்! முதுகில் குத்தும் த.வெ.க.!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame912428_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup912487_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M3bw_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M4bw_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.2">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">ரு புகழ்­பெற்ற வர­லாற்று நிகழ்வு; ஷேக்ஸ்­பி­ய­ரால் 
நாடக மாக்­கப்­பட்­டது; திரைப்­ப­ட­மா­க­வும் பல­முறை எடுக்­கப்­பட்­டது. அது என்­ன­வென்­றால் ஜூலி­யஸ் சீசர் கொலை­யு­றும் நிகழ்வு. ரோம் நகரை செனட் என்ற அவையே ஆட்சி செய்த சம­யத்­தில், பெரும் போர் வீர­ரான ஜூலி­யஸ் சீசர் ரோமப் பேர­ர­ச­ராக முடி­சூட்­டிக் கொள்ள எண்­ணு­வார். அதனை எதிர்க்­கும் செனட் உறுப்­பி­னர்­கள் அவரை சூழ்ந்­து­கொண்டு குறு­வாள்­க­ளால் 
குத்­திக் கொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">இந்­திய மக்­க­ளாட்சி இப்­போது ஜூலி­யஸ் சீசர் போல எதி­ரி­க­ளால் சூழப்­பட்­டுள்­ளது. ஒரு­வர் முது­கில் குத்து கிறார். ஒரு­வர் வயிற்­றில் குத்­து­கி­றார். ஒரு­வர் நெஞ்­சில் குத்­து­கி­றார். குற்­று­யி­ரும் கொலை­யு­யி­ரு­மாக 
மக்­க­ளாட்சி தள்­ளா­டிக் கொண்­டுள்­ளது என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">நாடெங்­கும் தேர்­தல் ஆணை­யத்­திற்கு, தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ருக்கு எதி­ரா­கப் போராட்­டங்­கள் வெடிக்­கின்­றன. காக்­ரோச் ஜனதா பார்ட்டி என்ற இளை­ஞர்­கள், மாண­வர்­கள் அமைப்பு காந்தி ஜெயந்தி தினத்­தில் மும்­பை­யில் பெரும் போராட்ட த்தை துவங்­கப் போவ­தாக அறி­வித்­துள்­ளது. டில்­லி­யில் பல்­வேறு பொது­நல அமைப்­பு­களை சார்ந்­த­வர்­கள், யோகேந்­திர யாதவ், நேஹா போரா உள்­ளிட்­ட­வர்­கள் ஊர்­வ­ல­மா­கச் சென்று கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">நாடெங்­கும் இந்­தப் பிரச்­சினை கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், தமிழ்­நாட்­டில் முதல் முறை­யாக குதிரை பேர இடைத்­தேர்­தலை உரு­வாக்­கி­யுள்­ளது நடி­கர் விஜ­யின் தமி­ழக வெற்­றிக் கழ­கம். மக்­க­ளாட்சி விழு­மி­யங்­க­ளின் அப்­பட்­ட­மான 
சீர­ழிவு இது என்­றால் மிகை­யா­காது. இந்த இரண்டு பிரச்­சி­னை ­
க­ளை­யும் விரி­வாக ஆராய்­வது நமது அர­சி­யல் தெளி­விற்கு 
அவ­சி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.7">ஞானேஷ்­கு­மா­ரின் பின்­னணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">ஞானேஷ்­கு­மார் 1988-ஆம் ஆண்­டில் பணி­யில் இணைந்த இந்­திய ஆட்­சிப் பணி (IAS) அதி­காரி. ஆக்­ரா­வைச் சேர்ந்த இவர் கேரள ஆட்­சிப் பணி பட்­டி­ய­லில் பணி­யில் அமர்ந்­த­வர். இவர் கேர­ளா­வில் பணி­யாற்­றி­ய­போதே முக்­கி­ய­மான சர்ச்சை ஒன்­றில் இவர் பெயர் அடி­பட்­டுள்­ள­தாக இணைய தளங்­கள் கூறு­கின்­றன. அதன் பின் இவர் ஒன்­றிய அர­சில் பா.ஜ.க.-விற்கு அணுக்­க­மான பல நட­வ­டிக்­கை­க­ளில் முக்­கிய பங்கு வகித்­துள்­ளார். காஷ்­மீர் மாநில அந்­தஸ்த்தை நீக்­கிய சட்­டம், அயோத்தி ராமர் கோயி லுக்­கான டிரஸ்ட்டை உரு­வாக்­கிய சட்­டம் போன்­ற­வற்றை உரு­வாக்­கு­வ­தில் முக்­கிய பங்கு வகித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">ஞானேஷ்­கு­மார் அவர் பத­விக் காலத்­தி­லேயே தேர்­தல் ஆணை­யத்­தில் பணி­யாற்­றி­யுள்­ளார். அவ­ரது பணிக்­கா­லம் முடிந்த பிறகு சர்ச்­சைக்­கு­ரிய முறை­யில் பிப்­ர­வரி, 2025-ஆம் ஆண்டு தலைமை தேர்­தல் ஆணை­யா­ராக பணி­ய­மர்த்­தப்­பட்­டார். அந்த சர்ச்சை என்­ன­வென்­றால் தலைமை தேர்­தல் ஆணை­யர் எப்­படி நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டும் என்ற நிய­தியை பா.ஜ.க. புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின் மூலம் மாற்­றி­ய­மைத்­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">முத­லில் இருந்த சட்­டம் என்­ன­வென்­றால் தலைமை தேர்­தல் ஆணை­யரை பிர­த­மர், எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்­றும் உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி ஆகி­யோர் அடங்­கிய மூவர் குழு நிய­மிக்க வேண்­டும். இது ஆளும் கட்சி விரும்­பி­ய­படி நிய­மிக்க முடி­யாது என்ற பாது­காப்பை வழங்­கி­யது. ஆனால் ஒன்­றிய பா.ஜ.க. அரசு அந்த சட்­டத்தை மாற்றி பிர­த­மர், உள்­துறை அமைச்­சர் மற்­றும் எதிர்­கட்­சித் தலை­வர் ஆகி­யோர் அடங்­கிய குழு நிய­மிக்­கும் வழி­மு­றையை உரு­வாக்­கி­யது. இந்­தக் குழு­வில் ஆளும் கட்­சிக்கு பெரும்­பான்மை இருப்­ப­தால் எதிர்க்­கட்­சித் தலை­வர் இடம் பெறு­வ­தில் எந்­தப் பொரு­ளும் இல்லை என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">இந்­தப் புதிய சட்­டத்­தின் கீழ் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­தான் ஞானேஷ் குமார். எனவே தெளி­வா­கவே பா.ஜ.க.-வின் கைப்­பா­வை­யாக செயல்­ப­டவே அவர் நிய­மிக்­கப்­பட்­டார் என்று கருத இட­மி­ருக்­கி­றது. அதற்­கேற்­ற­ப­டியே தேர்­தல் ஆணை­யம் மேலான புகார்­கள் பெரு­கத் துவங்­கின. “வோட் சோரி” அதா­வது “ஓட்­டுத் திருட்டு” என்ற பெய­ரில் ஏரா­ள­மான புகார்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யால் முன்­வைக் கப்­ப­டத் துவங்­கின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">கர்­நா­டக மாநில தொகுதி ஒன்­றின் வாக்­கா­ளர் பட்­டி­யல் விவ­ரங்­களை காங்­கி­ரஸ் கட்சி தேர்­தல் ஆணைய தளத்­தி­லி­ருந்தே எடுத்­துத் தொகுத்­த­போது ஏரா­ள­மான குள­று­ப­டி­கள் கண்­டு­பி­டிக்­கப் பட்­டன. பிரே­சில் நாட்டு விளம்­பர மாடல்  ஒரு­வ­ரின் புகைப்­ப­டத்­து­டன் பல வாக்­கா­ளர்­கள் பெயர்­கள் இருந்­தன. ஒரு­வ­ருக்கே ஒன்­றுக்கு மேற்­பட்ட வாக்­கு­கள் இருந்­தன. ஒரே விலா­சத்­தில் நூற்­றுக்­க­ணக் கான வாக்­கு­கள் இருந்­தன. இப்­ப­டி­யான கோளா­று­கள் வெளிப்­பட்ட போது தேர்­தல் ஆணை­யம் எந்­த­வி­த­மான திருப்­தி­க­ர­மான விளக்­க­மும் தர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.7">சிறப்­புத் தீவிர திருத்­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">இதன் பிறகு ஞானேஷ்­கு­மா­ரின் தனிப்­பங்­க­ளிப்பு துவங்­கி­யது. வாக்­கா­ளர் பட்­டி­யலை சரி­பார்த்து சிறப்­புத் தீவி­ரத் திருத்­தம் (SIR – Special Intensive Revision) என்ற நடை­மு­றையை ஒவ்­வொரு மாநி­ல­மாக செயல்­ப­டுத்­தத் துவங்­கி­னார். கிட்­டத் தட்ட சென்­சஸ் கணக்­கெ­டுப்­புக்கு ஒப்­பான இந்த செயல்­பாட்டை மிகக் குறு­கிய காலத்­தில் செய்ய திட்­ட­மிட்ட து பெரும் திகைப்பை ஏற்­ப­டுத்­தி­யது.மேலும், ஒரு வாக்­கா­ளர் இரு­ப­தாண்­டு­க­ளுக்கு முன் நிகழ்ந்த சிறப்­புத் தீவி­ரத் திருத்த த்தில் இடம் பெற்­றி­ருந்­தாரா என்ற விவ­ரங்­கள் கேட்­கப்­பட்­டி­ருந்­தன. அப்­போது வாக்­க­ளிக்­கா­த­வர்­க­ளின் தாய் தந்­தை­யர் விவ­ரங்­கள் கேட்­கப்­பட்­டன. சரி­யான விவ­ரங்­கள் தரப்­ப­ட­வில்­லை­யென்று ஏரா­ள­மா­ன­வர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">நாடு முழு­வ­தும் 13 கோடி வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் இது­வரை நீக்­கப்­பட்­டுள்­ளன. வரி கட்­டும், பாஸ்­போர்ட் வைத்­தி­ருக்­கும் பல­ருக்­கும் வாக்­கு­ரிமை நீக்­கப்­பட்­டுள்ள அவ­லம் நிகழ்ந்­துள்­ளது. எந்த ஒரு குடி­ந­ப­ரின் வாக்­கு­ரிமை யும் பறிக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற இலட்­சி­யத்­திற்­குப் பதி­லாக எந்த ஒரு தவ­றான வாக்­கா­ளர் பெய­ரும் பட்­டி­யி­லில் இடம் பெற்­று­வி­டக்­கூ­டாது என்ற இலட்­சி­யம் 
உரு­வாக்­கப்­பட்டு பல­ரது குடி­யு­ரி­மையே கேள்­விக்கு உள்­ளாக்­கப்­பட்­டது. நாடு முழு­வ­தும் பெரும் கொந்­த­ளிப்பு எழுந்­தது. ஏராளமான வழக்­கு­கள் போடப்­பட்­டன. உச்­ச­நீ­தி­மன்­றம் பல கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­தா­லும், இந்த 
விப­ரீத நடை முறையை தடுத்து நிறுத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">தவ­றா­கப் பெயர் நீக்­கப்­பட்­ட­வர்­கள் மீண்­டும் விண்­ணப் 
­பிக்­க­லாம் என்று கூறப்­பட்­டது. ஆனால் அந்த விண்­ணப்­பங் 
­க­ளுக்கு என்­ன­வா­யிற்று என்று பல­ருக்­கும் தெரி­ய­வில்லை. வாக்­கா­ளர் பட்­டி­யலை இறுதி செய்­யும் அதி­கா­ரம் யாரி­டம் இருக்­கி­றது என்­பதே புதி­ராக மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">இவ்­வாறு கோடிக்­க­ணக்­கான வாக்­க­ளர்­கள் நீக்­கப்­பட்டு நடந்த மாநி­லத் தேர்­தல் முடி­வு­கள் இன்று ஐயத்­திற்கு உரி­ய­வை­யாக பார்க்­கப்­ப­டு­கின்­றன. ஏனெ­னில் பா.ஜ.க.-வை தீவி­ர­மாக எதிர்த்த மாநிலக் கட்­சி­கள் எல்­லாம் தோல்­வி­ய­டைந்­துள்­ளன. மமதா பானர்ஜி, அர்­விந்த் கேஜ்­ரி­வால், மு.க.ஸ்டாலின் போன்ற பிர­பல தலை­வர்­கள் அவர்­கள் தொகு­தி­க­ளில் தோற்­ற­தற்கு 
நீக்­கப்­பட்ட வாக்­கு­கள் கார­ணமா என்ற கேள்­வியை காக்­ரோச் ஜனதா கட்சி அபி­ஜித் தீப்கே எழுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.7">ஆணை­யத்­தில் வீசிய புயல் – 
பிரச்­சினை வெடித்­தெ­ழக் கார­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் என்­ப­வர் தன்­னிச்­சை­யா­கச் செயல்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் மூன்று ஆணை­யர்­க­ளைக் கொண்ட குழு உரு­வாக்­கப்­பட்­டது. எல்லா முடி­வு­க­ளும் மூவ­ரும் கலந்­தா­லோ­சித்து பெரும்­பான்மை வாக்கு அடிப்­ப­டை­யில்­தான்எடுக்­கப்­பட வேண்­டும் என்­பதே விதி. பல சம­யங்­க­ளில் ஆணை யர்­க­ளுக்­குள் கருத்து வேறு­பாடு இருப்­பது வெளிப்­பட்­டுள்­ளது. பல ஆணை­யர்­கள் பதவி விலகி உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">இப்­போது ஒரு புதிய சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. தேர்­தல் ஆணை­யர்­க­ளான சுக்­பீர் சிங் சந்­து­வும், விவேக் ஜோஷி­யும் 14 முக்­கிய சந்­தர்ப்­பங்­க­ளில் ஒன்­று­பட்டு எதிர்ப்­புத் தெரி­வித்­தும், ஞானேஷ்­கு­மார் அதைப் பொருட் படுத்­தா­மல் தன்­னிச்­சை­யாக செயல்­பட்­டார் என்ற குற்­றச் சாட்டை அவர்­கள் இரு­வ­ரும் அமைச்­ச­ரவை செய­ல­ருக்­குக் கடி­த­மாக எழு­தி­யுள்­ளார்­கள். இந்­தப் பிரச்­சினை இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் நாளேட்­டில் வெளி­யாகி பெரும் புய­லாக மாறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">பெரும்­பான்மை இல்­லா­மல் சிறப்­புத் தீவிர திருத்­தம் தொடர்­பான முடி­வு­களை ஞானேஷ்­கு­மார் எடுத்­தார் என்­றால் அந்த நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­திற்­குப் புறம்­பா­னவை என்­றா­கின்­றன. அதன் அடிப்­ப­டை­யில் நடந்த மாநி­லத் தேர்­தல்­க­ளும் கூட முறை­யான தேர்­தல்­கள் அல்ல என்று கூற­வேண்டி வரு­கி­றது. அத­னால்­தான் இப்­போது எதிர்க்­கட்­சி­க­ளும், காக்­ரோச் ஜனதா கட்­சி­யும் போராட்­டங்­களை அறி­வித்­துள்­ளன. ஞானேஷ்­கு­மார் பதவி விலக வேண்­டும் என்­றும், தேர்­தல் ஆணை­யம் சீர்­தி­ருத்­தப் பட வேண்­டும் என்­றும் கோரிக்­கை­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.7">எதற்­கா­கப் போராட வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">நிச்­ச­யம் ஞானேஷ்­கு­மார் என்ற தனி­ம­னி­த­ருக்கு எதி­ராக மட்­டும் போராட்­டம் நடக்­கப்­போ­வ­தில்லை. இந்­திய தேர்­தல்­கள் ஐயங்க ளுக்கு அப்­பாற்­பட்­ட­வை­யாக மாற்­றப்­ப­ட­வேண்­டும் என்­பதே முக்­கி­ய­மான கோரிக்­கை­யாக இருக்க வேண்­டும். மூன்று முக்­கிய அம்­சங்­க­ளில் போரா­டு­ப­வர்­கள் கவ­னத்­தைக் குவிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">1. வாக்­கா­ளர் பட்­டி­யல் முழு­வ­தும் தேடப்­ப­டக்­கூ­டிய தர­வு­க­ளாக (searchable database) பொது­மன்­றத்­தில் வைக்­கப்­படவேண்­டும். மக்­க­ளாட்­சி­யின் உயிர்­மூச்­சான வாக்­கு­ரிமை பகி­ரங்க மான யாரும் சரி­பார்க்­கக் கூடிய தர­வாக இருப்­பது அவ­சி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">2. வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் விடு­பட்டு விண்­ணப்­பித்­த­வர்­கள் அனை­வ­ரது பெயர்­க­ளும், கார­ணங்­க­ளும் தேடப்­ப­டக்­கூ­டிய தரவு களாக தனிப்­பட்­டி­ய­லாக பொது­மன்­றத்­தில் பகி­ரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">3. தேர்­த­லுக்­குப் பின் விவி­பாட் ஒப்­புகை சீட்­டு­கள் முழு­வ­தும் எண்­ணப்­பட்டு, அந்­தந்த மின்­னணு வாக்கு இயந்­தி­ரங்­க­ளு­டன் சரி­பார்க்­கப்­பட்ட பிறகே முடி­வு­கள் அறி­விக்­கப்­பட வேண்­டும். அல்­லது முந்­தைய வாக்­குச்­சீட்டு முறைக்கே திரும்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">இந்த மூன்று கோரிக்­கை­க­ளும் நிறை­வேற்­றப்­ப­டா­மல் இந்­திய மக்­க­ளாட்சி பிழைத்­தி­ருப்­பது கடி­னம். வாக்­க­ளர் பட்­டி­ய­லி­லும், மின்­னணு இயந்­தி­ரங்­க­ளி­லும் மோச­டி­கள் நடக்­கின்­றன என்ற சாத்­தி­யம், ஐயம் மக்­க­ளாட்­சி­யைக் கொன்று விடும். இவையே மக்­க­ளாட்­சி­யின் உயிர்­மூச்சு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.7">தமிழ்­நாட்­டின் பேரக் குதிரை இடைத்­தேர்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">நாடு முழு­வ­தும் தேர்­தல் ஆணை­யத்­திற்கு எதி­ரான போராட் டங்­கள் உருக்­கொள்­ளும் நேரத்­தில், தமிழ்­நாட்­டில் இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கான இடைத்­தேர்­தல்­க­ளில் அர­சி­யல் கட்­சி­க­ளின் கவ­னம் குவிந்­துள்­ளது. இந்த இரண்டு இடைத்­தேர் தல்­க­ளும் மிக மோச­மான மக்­க­ளாட்சி விழு­மி­யங்­களை சிதைக்­கும் முன்­னு­தா­ர­ணங்­கள் என்­றால் மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">தமிழ்­நாட்­டில் மே மாதம் நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நடி­கர் விஜ­யின் தமி­ழக வெற்­றிக் கழ­கம் 108 இடங்­க­ளில் வெற்றி பெற்­றது. அதில் நடி­கர் விஜய் போட்­டி­யிட்ட கூடு­தல் தொகு­தியை கழித்­தால் 107 இடங்­க­ளில் வென்­றது என­லாம். இது பெரும்­பான்­மைக்­குத் தேவை­யான 118 இடங்­க­ளுக்கு 11 இடங்­கள் குறை­வா­ன­தா­கும். இருந்­தா­லும் ஆளு­னர் ஆட்சி வந்­து­வி­டக் கூடாது என்­ப­தால் தி.மு.க. கூட்­ட­ணி­யில் வென்ற கட்­சி­கள் (காங்­கி­ரஸ் 5, வி.சி.க., முஸ்­லீம் லீக், வ.கம்­யூ­னிஸ்டு, இ.கம்­யூ­னிஸ்ட் தலா 2) அந்த 11 தொகு­தி­க­ளின் ஆத­ரவை வழங்கி நடி­கர் விஜய் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க உத­வின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">விஜய் அதில் திருப்­தி­ய­டை­வில்லை. அவ­ரது நோக்­கம் அ.இ.அ.தி.மு.க.-விலி­ருந்து பெரும்­பான்­மை­யான சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை த.வெ.க.-வில் இணைய வைத்து அந்­தக் கட்­சியை கப­ளீ­க­ரம் செய்­வ­து­தான். அப்­படி செய்­து­விட்­டால் அவர் வெளிப்­ப­டை­யாக பா.ஜ.க.-வுடன் கூட்­டணி வைத்­துக்­கொள்­ள­லாம் என்­ப­தும் முக்­கி­ய­மான சாத்­தி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">அதில் என்ன பிரச்­சி­னை­யென்­றால் அ.இ.அ.தி.மு.க. மொத்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் 47 பேரில் அவ­ரால் 25 பேரைத்­தான் தன் பக்­கம் இழுக்க முடிந்­தது. கட்சி தாவல் தடை சட்­டத்­தின்­படி மூன்­றில் இரண்டு பங்கு, 32 பேர் கட்சி மாறி­னால்­தான் அவர்­கள் பத­வியை தக்க வைத்­துக்­கொள்ள முடி­யும். அத­னால் கட்­சிக் கொறடா உத்­தி­ரவை மீறி த.வெ.க.-விற்கு வாக்­க­ளித்­த­வர்­கள் பலர் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் மன்­னிப்­புக் கேட்­டு­விட்டு மீண்­டும் கட்­சி­யில் இணைந்­து­விட்­ட­னர். ஆனால் முத­லில் 4 பேர், பின்­னர் இரண்டு பேர் தங்­கள் பத­வி­களை ராஜி­நாமா செய்­து­விட்டு த.வெ.க.-வில் இணைந்து விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">அந்த ஆறு தொகு­தி­கள், நடி­கர் விஜ­யின் இரண்­டா­வது தொகுதி ஆகி­யவை காலி­யாக உள்­ள­தால் இடைத்­தேர்­தல்­கள் நடத்­தப்­பட வேண்­டும். அதில் பல தொகு­தி­க­ளில் சில வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன என்ற கார­ணம் காட்டி தாரா­பு­ரம், மது­ராந்­த­கம் ஆகிய இரண்டு தொகு­தி­க­ளில் மட்­டும் இப்­போது இடைத்­தேர்­தல்­கள் நடக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">இந்த இரண்டு தொகு­தி­க­ளி­லும் த.வெ.க. கட்சி வேட்­பா­ளர்­கள் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­துள்­ள­னர். இப்­போது அந்­தக் கட்சி ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்ள நிலை­யில், நடி­கர் விஜய் முதல்­வ­ரா­கி­யுள்ள நிலை­யில் அவர்­க­ளுக்கு மீண்­டும் போட்­டி­யிட வாய்ப்­ப­ளித்து வெற்­றி­பெற வைக்க வேண்­டும். அல்­லது கட்­சி­யில் வேறு முக்­கி­ய­மான நிர்­வா­கி­கள் யாரு­மி­ருந்­தால் அவர்­க­ளுக்­கும் வாய்ப்­ப­ளிக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">ஆனால் த.வெ.க., அந்­தத் தொகு­தி­க­ளில் யார் அ.இ.அ.தி.மு.க. சார்­பாக போட்­டி­யிட்டு வென்று, பத­வியை ராஜி­நாமா செய்­து­விட்டு த.வெ.க.-வில் இணைந்­தார்­களோ அவர்­க­ளையே த.வெ.க. வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தி­யுள்­ளது. அதா­வது அவர்­கள் அ.இ.அ.தி.மு.க. சார்­பாக வெற்­றி­பெற்று நான்கு மாதங்­கள் கூட நிறை­யாத நிலை­யில் மீண்­டும் த.வெ.க. சார்­பாக போட்­டி­யி­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">இந்­திய மக்­க­ளாட்சி வர­லாற்­றில் இவ்­வ­ளவு குறு­கிய கால அவ­கா­சத்­தில், மூன்றே மாதத்­தில், கட்சி மாறி மீண்­டும் அதே தொகு­தி­யில் யாரும் போட்­டி­யிட்­டி­ருப் பார்­களா என்­பது ஐயமே. தாரா­பு­ரத்­தில் சத்­தி­ய­பா­மா­வும், மது­ராந்­த­கத்­தில் மர­க­தம் கும­ர­வே­லும் கட்சி மாறு­வ­தற் காக ஒரு இடைத்­தேர்­தல் நடத்தி மக்­கள் அவர்­க­ளுக்கே மீண்­டும் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று நினைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">தமி­ழக வெற்­றிக் கழ­கத்­திற்கு, நடி­கர் விஜய்க்கு இதில் எந்த வெட்­க­மும் இல்லை. அவர்­க­ளாக எங்­கள் கட்­சிக்கு வந்­தார்­கள், சேர்த்­துக்­கொண்­டோம், மீண்­டும் போட்­டி­யிட வைக்­கி­றோம் என்று கொக்­க­ரிக்­கி­றார்­கள். நாங்­கள் பணம் கொடுத்து வாங்­க­வில்லை, அவர்­க­ளாக வந்­தார்­கள் என்­ப­தால் குதிரை பேரம் கிடை­யாது என்று கூறு­கி­றார்­கள். நான்கு மாதத்­திற்கு முன் போட்­டி­யிட்ட போது த.வெ.க.-வை விமர்­சித்­துத்­தானே அவர்­கள் வாக்கு சேக­ரித்­தி­ருப் பார்­கள். இப்­போது எப்­படி அந்த கட்சி சார்­பாக வாக்கு சேக­ரிக்­கி­றார்­கள் என்ற கூச்­சமே யாருக்­கும் இல்­லா­மல் போனது அதிர்ச்­சி­ய­ளிக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">அர­சி­யல்­வா­தி­கள் கட்சி மாறு­வது புதி­தல்ல. ஆனால் ஆட்­சிய மைக்க பெரும்­பான்மை இல்­லாத நிலை­யில் ஒரு கட்சி இன்­னொரு கட்­சி­யி­லி­ருந்து உறுப்­பி­னர்­களை ஈர்ப்­பது குதிரை பேரம் எனப்­ப­டும். பத­விக்­காக, பிற வச­தி­க­ளுக்­காக அவர்­கள் கட்சி மாறு­கி­றார்­கள் என்­பது வெளிப்­ப­டை­யா­னது. இவ்­வாறு செய்­தால் அர­சி­ய­லில் நிலை­யற்ற தன்மை ஏற்­ப­டும் என்­ப­தற்­கா­கத்­தான் கட்சி தாவல் தடைச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.7">விளை­வு­தான் செய­லின் 
நோக்­கத்தை தீர்­மா­னிக்கிறது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">இரண்டு நண்­பர்­கள் சண்டை போட்­டுக்­கொள்­கி­றார்­கள். ஒரு­வன் கோபத்­தில் கார்க் பாலை அல்­லது கன­மான டேபிள் வையிட்டை மற்­ற­வன் மீது எறி­கி­றான். எதிர்­பா­ரா­மல் அது அவன் மண்­டை­யில் பட்டு, மண்டை உடைந்து, இரத்­தப்­பெ­ருக்குஅதி­க­மாகி இறந்­து­வி­டு­கி­றான். எறிந்த நண்­பன் நான் அவ­னைக் கொல்ல நினைக்­க­வில்லை என்­று­தான் சொல்­வான். ஆனா­லும், அவன் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்ப முடி­யாது. தூக்­குத் தண்­டனை கொடுக்க மாட்­டார்­கள்; ஆனால் மேன்ஸ்­லாட்­டர் என்று சொல்லி ஐந்து முதல் பத்­தாண்­டு­கள் தண்­டனை கொடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">தமி­ழக வெற்­றிக் கழ­கம் அ.இ.அ.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் தங்­களை ஆத­ரிக்க வேண்­டும் என விரும்­பு­கி­றது. ஆனால் மூன்­றில் இரண்டு பங்கு உறுப்­பி­னர்­களை அத­னால் ஈர்க்க முடி­ய­வில்லை. அத­னால் அவர்­களை பதவி வில­கச் சொல்லி கட்­சி­யில் சேர்த்­துக்­கொண்டு, மீண்­டும் அவர்­களே காலி­யான தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெல்ல வாய்ப்­ப­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">தொகுதி மக்­க­ளுக்கு உள்ள சுய­ம­ரி­யாதை கார­ண­மாக கட்சி மாறிய வேட்­பா­ளர்­க­ளுக்­குக் கணி­ச­மான எதிர்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­கி­றது. ஆனா­லும் கூட ஆளும் கட்சி என்­ப­தால் அவர்­கள் எப்­ப­டியோ வெற்றி பெறு­கி­றார்­கள் என்று வைத்­துக்­கொள்­வோம். அப்­போது அவர்­கள் நாலே மாதங்­க­ளில் கட்­சி­யும் மாறி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­க­வும் தொடர்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">இதன் விளைவு என்ன? கட்­சித் தாவல் தடைச் சட்ட த்தின் நோக்­கம் முறி­ய­டிக்­கப் படு­கி­றது. அதன் விளை­வாக அ.இ.அ.தி.மு.க-.விலி­ருந்து மேலும் 20 பேர் பதவி விலகி த.வெ.க.வில் சேர­லாம். அவர்­க­ளும் தேர்­த­லில் போட்­டி­யிட்டு த.வெ.க. உறுப்­பி­னர்­க­ளாக ஆகி­வி­ட­லாம் என்று நினைக்­க­லாம். இது ஒட்­டு­மொத்­த­மாக கட்சி தாவல் தடைச் சட்ட த்தை பொரு­ளற்­ற­தாக மாற்­றி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.7">நடை­மு­றை­யில் உள்ள ஒரு சட்ட த்தை பொரு­ளற்­ற­தாக மாற்­றும் எந்­தச் செயல்­பா­டும் சட்ட விரோ­த­மா­ன­து­தான். சென்னை உயர்­நீதி மன்­றம் இந்த செயல்­பாட்­டைக் கடு­மை­யா­கக் கண்­டித்­தா­லும், சட்­டப்­படி தடை விதிக்க முடி­யாது என்று கூறி­விட்­டது. ஆனால் எதிர்க்­கட்­சி­க­ளும் சரி. சிவில் சமூக ஆர்­வ­லர்­க­ளும் சரி, தேர்­தல் முடி­வு­கள் எது­வாக இருந்­தா­லும் உச்­ச­நீ­தி­மன்­றத்தை அவ­சி­யம் நாட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">ஒரு கட்சி சார்­பாக போட்­டி­யிட்டு வென்­ற­வர்­கள் பதவி விலகி மாற்­றுக் கட்­சி­யில் சேர்ந்­தால் அந்த சட்­ட­மன்­றத்­தின் ஆயுட்­கா­லம் முடி­யும்­வரை அவர்­கள் மீண்­டும் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்று சட்­டத்­தி­ருத்­தம் செய்­யப்­பட வேண்­டும். இல்­லா­விட்­டால் இது போன்ற குதிரை பேர தேர்­தல்­கள் ஒரு புதிய வழக்­க­மாக மாறி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">நடி­கர் விஜய் போன்ற அர­சி­ய­லுக்கு எதி­ரான தற்­கா­தல் சக்­தி­கள் மக்­க­ளாட்­சி­யின் முது­கில் குத்­து­வ­தற்கு அனு­ம­திக் கக் கூடாது. தாரா­பு­ரம், மது­ராந்­த­கம் மக்­கள் அவ­ருக்­குப் பாடம் புகட்ட வேண்­டும்; அது மட்­டு­மல்­லா­மல் உச்ச நீதி மன்­ற­மும் தேர்­தல் ஆணை­யத்­திற்­கும், ஒன்­றிய அர­சிற்­கும் புதிய சட்­ட­மி­யற்ற அறி­வு­றுத்தவேண்­டும். மக்­க­ளாட்­சியைநம்­பும் அனை­ வ­ரும் அதற்­கா­கக் குரல் கொடுக்க வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>