<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,32,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Sep 30 2026 03:55:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260930T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="30092026-TRY-04" position.sequence="04" ex-ref="30092026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">30.09.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">நான்கு மாதங்களில் 550 குற்றச் சம்பவங்கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">த.வெ.க. ஆட்சியில் பெண்கள் வெளியே வரவே    அஞ்சுகிறார்கள்! பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகிறது!   </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தாராபுரம் இடைத்தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில்</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="39">கனிமொழி ராஜாத்தி கருணாநிதி பேச்சு!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup911623_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865282_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865226_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865155_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தாரா­பு­ரம், செப். 30 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தாரா­பு­ரம் இடைத்­தேர்­தல் பணி­கள் தொடர்­பாக திருப்­பூர் கிழக்கு மாவட்ட திமுக சார்­பில், தாரா­பு­ரம் தேர்­தல் பணி­ம­னை­யில் மாவட்ட, ஒன்­றிய, நகர, பேரூர் கழக மக­ளிர் அணி மற்­றும் மக­ளிர் தொண்­டர் அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­க­ளு­ட­னான ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இக்­கூட்­டம் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற திமுக குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி தலை­மை­யில் நடை­பெற்­றது. இதில், தாரா­பு­ரம் இடைத்­தேர்­தல் களப்­ப­ணி­கள் மற்­றும் தேர்­தல் நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இக்­கூட்­டத்­தில் பேசிய கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது:-
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நீங்­கள் மக்­க­ளைச் சந்­திக்­கும்­போது அதி­க­மாக எது­வும் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இந்த ஆட்சி வந்­தால் மிகப்­பெ­ரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தப் போவ­தா­க­வும், இதற்கு முன்பு எது­வுமே சரி­யாக நடை­பெ­ற­வில்லை என்­றும் வாக்­கு­றுதி அளித்­த­னர். தாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் அனைத்­தை­யும் ஒரே நாளில் மாற்­றிக் காட்­டு­வோம். அதி­லும் திரைப்­ப­டங்­க­ளில் காட்­டு­வது போலப் பேசி ஆட்­சிக்கு வந்­தார்­கள். ஆனால், ஆட்­சிக்கு வந்து இத்­தனை நாட்­க­ளில் அவர்­கள் மாற்­றி­யது என்ன? ஒன்­றுமே இல்லை. காலை­யில் மின்­வெட்டு, மாலை­யில் மின்­வெட்டு என மக்­கள் தின­மும் மின்­வெட்­டால் அவ­திப்­ப­டு­கி­றார்­கள். குறிப்­பாக, மாலை நேரங்­க­ளில் பல­முறை மின்­வெட்டு ஏற்­ப­டு­கி­றது. அந்த நேரத்­தில் பொது­மக்­க­ளி­டம், குறிப்­பாக பெண்­க­ளி­டம் சென்று அவர்­கள் எதிர்­கொள்­ளும் சிர­மத்தை பற்றி கேளுங்­கள். முந்­தைய திமுக ஆட்­சி­யில் இது­போல் தின­மும் மின்­வெட்டு ஏற்­பட்­டதா என்று அவர்­க­ளி­டமே கேளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அன்­புத் தம்பி விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­போது வெளியே வந்து மின்­வெட்டு ஏற்­பட்­டால்­கூட, வீட்­டில் இருக்­கும் சகோ­த­ரி­கள் வெளியே வந்து உட்­கா­ரு­வ­தற்­குப் பயப்­ப­டு­கி­றார்­கள். ஏனென்­றால், இந்த தவெக ஆட்­சி­யில் சட்­டம் ஒழுங்கு எந்த அள­வுக்கு இருக்­கி­றது என்ற அச்­சம் மக்­க­ளி­டம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. நம்­மு­டைய முத­ல­மைச்­சர், என்­னு­டைய அன்­புத் தம்பி விஜய். ஏனென்­றால் இப்­போது அவர் சொந்­தக்­கா­ர­ரா­கி­விட்­டார். எங்­கள் அண்­ணன் ஸ்டாலினை ஸ்வீட் அங்­கிள் என்று அழைக்­கி­றார்; அத­னால் அவரை அன்­புத் தம்பி விஜய் என்று அழைப்­ப­தில் என்ன தவறு இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">550 குற்­றச் சம்­ப­வங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால், தம்பி விஜ­யின் ஆட்­சி­யில் பெண்­கள் மின்­வெட்டு ஏற்­ப­டும் நேரத்­தில்­கூட வீட்­டிற்கு வெளியே வந்து உட்­கா­ரு­வ­தற்­குப் பயப்­ப­டு­கி­றார்­கள். சொல்­லப்­போ­னால் இருட்­டாக இருந்­தா­லும், காற்­றில்­லா­மல் வீட்­டுக்­குள்­ளேயே இருந்­து­வி­ட­லாம்; வெளியே வந்­தால் ஆபத்து என்று நினைக்­கக்­கூ­டிய அள­வுக்கு சட்­டம் ஒழுங்கு குறித்த அச்­சம் உரு­வா­கி­யுள்­ளது. தவெக ஆட்சி அமைத்து நான்கு மாதங்­க­ளி­லேயே கிட்­டத்­தட்ட 550 குற்­றச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. ஆனால், அவர்­கள் தொடர்ந்து இப்­போ­து­தான் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றோம் என்று சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளு­டைய சாதனை என்­ன­வென்­றால், நம்­மு­டைய அண்­ணன் மு.க.ஸ்டாலின் சொல்­வ­தைப் போல, மின்­வெட்­டுக்­கும் அருவா வெட்­டுக்­கும் மட்­டும்­தான் போட்டி; வேறு எதற்­கும் இங்கு போட்­டியே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால்­தான், இந்த நான்கு மாத ஆட்­சி­யில் கிட்­டத்­தட்ட 550 குற்­றச் சம்­ப­வங்­கள், 200க்கும் மேற்­பட்ட கொலை­கள், பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான 300க்கும் மேற்­பட்ட பாலி­யல் குற்­றங்­கள், 8 காவல் மர­ணங்­கள், 10க்கும் மேற்­பட்ட ஆண­வக் கொலை­கள் என பல்­வேறு சம்­ப­வங்­கள் நடந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. காவல்­து­றைக்­குப் பொறுப்­பான அமைச்­சர் யார், முத­ல­மைச்­ச­ரான அன்­புத் தம்பி விஜய்­தானே. இது­தான் இவர்­கள் ஆட்­சிக்கு வந்த பிறகு கொண்டு வந்­தி­ருக்­கக்­கூ­டிய மாற்­றமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­ப­டிப்­பட்ட சூழ­லில், மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­திற்­கான 100 நாள் வேலைத் திட்­டத்­தின் நிலை என்ன எழாது பற்றி இது­வரை பேச­வில்லை. இப்­போது யாருக்­கா­வது 100 நாள் வேலை முறை­யா­கக் கிடைக்­க­வில்லை. ஒன்­றி­யத்­தில் இருக்­கக்­கூ­டிய பாஜக அரசு, 100 நாள் வேலைத் திட்­டத்­தைப் பாதிக்­கும் வகை­யில் புதிய திட்­டத்­தை­யும் சட்­டத்­தை­யும் கொண்டு வர முயற்­சிக்­கி­றது. அதற்கு எதி­ராக பிர­த­ம­ரை­யும், ஒன்­றிய உள்­துறை அமைச்­ச­ராக இருந்த அமித் ஷாவை­யும் எதிர்த்து, பாஜக அர­சுக்கு எதி­ரா­கத் தொடர்ந்து போரா­டி­யது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான். அந்த விவ­கா­ரத்­தில் நாடா­ளு­மன்­றத்­தி­லும், பொது­வெ­ளி­யி­லும் எதிர்த்து குரல் கொடுத்­தது திமு­க­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், இங்கே ஆட்­சிப் பொறுப்­பில் இருக் அன்­புத்­தம்பி விஜய், இந்­தப் பிரச்­சி­னைக்கு எதி­ராக ஒரு வார்த்­தைக் கூட பேச­வில்லை. தமிழ்­நாட்­டுக்கு வர வேண்­டிய 100 நாள் வேலைத் திட்­டப் பணி­க­ளில் 20 சத­வீ­தத்­துக்­கும் மேல் குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. இவர்­கள் ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்­க­ளி­லேயே, தமிழ்­நாட்­டுக்­குக் கிடைக்க வேண்­டிய 100 நாள் வேலை வாய்ப்­பு­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன; அதோடு, பணி­யாற்­றி­ய­வர்­க­ளுக்­கான ஊதி­ய­மும் முறை­யா­கக் கிடைக்­க­வில்லை என்று மக்­கள் கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதை­யெல்­லாம் எதிர்த்து, நான்­தான் பெரிய போராளி என்று சினிமா வச­னங்­களை ரீல்­ஸுக்­கா­கப் பேசிக்­கொண்­டி­ருக்­கிற முத­ல­மைச்­சர் தம்பி விஜய், ஒரு வார்த்­தை­யா­வது பேசி­யி­ருக்­கி­றாரா என தேடு­கி­றேன். தம்பி விஜய் மது­ராந்­த­கம் கூட்­டத்­தில் வந்து, தமிழ்­நாட்­டின் பாஜக திமுக என்று பேசு­கி­றார். ஆனால், 100 நாள் வேலைத் திட்­டத்­தைப் பாதிக்­கும் இந்­தச் சட்­டத்தை ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்று சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது அன்­றைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்­தான். என் மக்­களை நான் பாது­காப்­பேன் என்று உறு­தி­யா­கச் சொன்­ன­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் மு.க.ஸ்டாலின். ஆனால், இன்­றைக்கு இந்­தப் பிரச்­சி­னைக்­காக தம்பி விஜய் ஏதா­வது ஒரு வார்த்தை கூட பேச மறுக்­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தேர்­தல் ஆணை­யம் குறித்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">விஜய் கேள்வி எழுப்­பி­னாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நாடு முழு­வ­தும் தேர்­தல் ஆணை­யம் தொடர்­பாக மிகப்­பெ­ரிய விவா­தம் எழுந்­தி­ருக்­கி­றது. மூன்று பேர் கொண்ட தேர்­தல் ஆணை­யத்­தில், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தலை­மை­யில் செயல்­ப­டும் ஆணை­யத்­தின் நட­வ­டிக்­கை­கள் குறித்து, மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளான சுக்­பீர் சிங் சந்து மற்­றும் விவேக் ஜோஷி ஆகி­யோர் கடந்த பத்து மாதங்­க­ளில் குறைந்­தது 14 முறை எழுத்­துப்­பூர்­வ­மாக எதிர்ப்­பு­க­ளைப் பதிவு செய்­துள்­ள­தாக செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன. வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் பெயர்­க­ளைச் சேர்ப்­பது, நீக்­கு­வது, மீண்­டும் சேர்ப்­பது உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளி­லும் அவர்­கள் கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­நி­லை­யில், தேர்­தல் ஆணை­யத்­தின் செயல்­பா­டு­கள் குறித்து நாடு முழு­வ­தும் அர­சி­யல் கட்­சி­கள் கேள்வி எழுப்பி வரும் நிலை­யில், நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி மு.க.ஸ்டாலின் இது­கு­றித்து கண்­ட­னம் தெரி­வித்து அறிக்கை வெளி­யிட்­டி­ருக்­கி­றார். ஆனால், தம்பி விஜய் இது­கு­றித்து இது­வரை ஒரு வார்த்­தை­யா­வது பேசி­யி­ருக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் ஆணை­யம் என்­பது நாம் செலுத்­தும் ஒவ்­வொரு வாக்­கும் முறை­யா­கப் பதிவு செய்­யப்­பட்டு, மக்­கள் யாரைத் தேர்ந்­தெ­டுக்­கி­றார்­களோ அவர்­களே வெற்றி பெறு­வதை உறுதி செய்­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்­பின் அங்­கம். ஆனால், தற்­போது நடை­பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம் தொடர்­பாக, வாக்­கா­ளர் பெயர்­கள் நீக்­கம் உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து நாடு முழு­வ­தும் விவா­த­மும் எதிர்ப்­பும் எழுந்­துள்­ளது. இது­வரை 30 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளில் நடை­பெற்­றுள்ள இந்த நட­வ­டிக்­கை­யில், வரைவு வாக்­கா­ளர் பட்­டி­யல்­க­ளில் 13 கோடிக்­கும் மேற்­பட்ட பெயர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அதில் தகு­தி­யான வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் விடு­ப­டக்­கூ­டாது என்­பதே நம்­மு­டைய கவலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­ப­டிப்­பட்ட சூழ­லில், மக்­க­ளின் வாக்­கு­ரிமை தொடர்­பான ஒரு முக்­கி­ய­மான பிரச்­சினை குறித்து நாடே விவா­தித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது, முத­ல­மைச்­சர் என்று சொல்­லிக்­கொள்­ளும் தம்பி விஜய் இது­கு­றித்து ஏதா­வது ஒரு வார்த்­தை­யா­வது பேசி­யி­ருக்­கி­றாரா என்­ப­து­தான் மக்­க­ளி­டம் நாம் கேட்க வேண்­டிய கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சட்­ட­மன்­றத்­தில் விசிக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வன்­னி­ய­ரசு , சட்­ட­மன்­றத்­தில் பிர­த­மர் மோடி குறித்து விமர்­சித்து பேசு­வ­தற்­காக எழுந்­த­போது, அந்­தப் பேச்சை அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்க வேண்­டும் என்று அவ­ச­ர­மா­கச் சொல்லி, அதைப் பற்­றி­யெல்­லாம் பேசா­தீங்க, இங்கே பேசா­தீங்க என்று தடுத்­தது யார். அவரை தடுத்­தது முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலினா இல்லை, ஜோசப் விஜயா என மக்­க­ளுக்கு தெரி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அடிப்­ப­டை­யில் எந்த இட­மாக இருந்­தா­லும் கொஞ்­சம் அடக்­கம் தேவை. நீங்­கள் எந்த இடத்­தில் போய் உட்­கார்ந்­தா­லும் அடக்­கம் இருக்க வேண்­டும். சட்­ட­மன்­றத்­தில் நீங்­களே, கரு­ணா­நி­தி­யின் பெய­ரைச் சொன்­ன­தற்­காக நான் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­கி­றேன் என்று கூறி­யி­ருக்­கி­றீர்­கள். ஒரு­வ­ரு­டைய பெய­ரைச் சொல்­வ­தில் என்ன தவறு இருக்­கி­றது.உண்­மை­யில் பெயர் என்­பது அவரை அழைப்­ப­தற்­கா­கத்­தானே வைக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பெய­ரைச் சொல்­லா­த­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மரி­யாதை குறைந்து விடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என்­னு­டைய பெயர் என்ன என்று கேட்­டால், கனி­மொழி கரு­ணா­நிதி என்­று­தான் நான் சொல்­வேன். உங்­கள் அப்­பா­வின் பெயர் என்ன என்று கேட்­டா­லும், கரு­ணா­நிதி என்­று­தான் சொல்­வேன். தலை­வர் கலை­ஞரே தொலை­பே­சி­யில் பேசும்­போது, நான் கரு­ணா­நிதி பேசு­கி­றேன் என்­று­தான் அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொள்­வார்; கலை­ஞர் பேசு­கி­றேன் என்று அவர் சொல்­வதை நான் கேட்­ட­தில்லை. ஒரு­வ­ரு­டைய பெய­ரைச் சொல்­வ­தால் மட்­டும் மரி­யாதை குறைந்­து­வி­டாது; மரி­யாதை என்­பது அவ­ரு­டைய பண்­பி­லும் தன்­ன­டக்­கத்­தி­லும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த வகை­யில், என் பெய­ரைச் சொல்­லக்­கூ­டாது என்று நினைக்­கா­மல், தன்­னு­டைய பெய­ரைச் சொல்­லு­வ­தில் எந்­தத் தவ­றும் இல்லை என்று நினைத்­த­வர் தலை­வர் கலை­ஞர். அந்­தத் தன்­ன­டக்­கம்­தான் அவ­ரு­டைய பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நீங்­கள் சட்­ட­மன்­றத்­தில் பேசும்­போது, அண்ணா, புரட்­சித்­த­லை­வர் எம்.ஜி.ஆர், அடுத்து விஜய் என்று மூவ­ரை­யும் ஒரே வரி­சை­யில் குறிப்­பிட்­டுப் பேசு­கி­றீர்­கள். பேர­றி­ஞர் அண்ணா, தமிழ்­நாட்­டி­லி­ருந்து நாடா­ளு­மன்­றத்­திற்­குச் சென்று முதன்­மு­றை­யா­கப் பேசும்­போது, I come from the Dravidian stock என்று எந்­தத் தயக்­க­மும் இல்­லா­மல் தலை­நி­மிர்ந்து தனது திரா­விட இயக்க அடை­யா­ளத்தை உல­க­றி­யச் சொன்ன தலை­வர். அதே­போல், புரட்­சித்­த­லை­வர் எம்.ஜி.ஆர்.  உங்­க­ளைப் போல இரண்டே ஆண்­டு­க­ளில் அர­சி­ய­லுக்கு வர வேண்­டும் என்று முடிவு செய்து அர­சி­ய­லில் குதித்­த­வர் கிடை­யாது. காங்­கி­ரஸ் பேரி­யக்­கத்­தில் தனது அர­சி­யல் பய­ணத்­தைத் தொடங்கி, பின்­னர் திரா­விட இயக்­கத்­தின் கொள்­கை­க­ளால் ஈர்க்­கப்­பட்டு, தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் சிந்­த­னை­க­ளால் ஈர்க்­கப்­பட்­ட­வர. அது­மட்­டு­மல்ல தலை­வர் கலை­ஞ­ரைத் தனது தலை­வ­ராக ஏற்­றுக்­கொண்டு நீண்ட அர­சி­யல் பய­ணத்தை மேற்­கொண்­ட­வர். ஏழை, எளிய மக்­க­ளுக்­காக ஆட்­சியை நடத்த வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் செயல்­பட்­ட­வர்­தான் புரட்­சித்­த­லை­வர் எம்.ஜி.ஆர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தேர்­தல் வாக்­கு­று­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">என்ன ஆச்சு?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­ப­டிப்­பட்ட இரு தலை­வர்­க­ளின் பெயர்­க­ளோடு உங்­க­ளு­டைய பெய­ரை­யும் சேர்த்­துப் பேசு­கி­றீர்­களே, தம்பி விஜய். தேர்­த­லுக்கு முன்பு அடிக்­கடி, ஊரான் வீட்டு நெய்யை எடுத்து ஸ்வீட் செய்­ய­லாமா என்று கேட்­டு­விட்டு, இப்­போது ஆட்­சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்­கு­று­தி­க­ளில் எதை­யும் முழு­மை­யாக நிறை­வேற்ற முடி­ய­வில்லை என கைவி­ரித்­து­விட்­டார். அதற்கு கார­ண­மாக பணம் இல்லை, கஜா­னாவை காலி பண்­ணி­விட்­டுப் போய்­விட்­டார்­கள் என்று தொடர்ந்து சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நீங்­கள் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளில் எதை­யா­வது நிறை­வேற்றி உள்­ளீர்­களா. தேர்­த­லுக்கு முன்பு ஆறு சிலிண்­டர் என்று சொன்­னது இப்­போது மூன்று சிலிண்­ட­ரா­கி­விட்­டது. வேலை­யில்லா பட்­ட­தா­ரி­க­ளுக்கு மாதம் ரூ.4,000 வழங்­கப்­ப­டும் என்ற வாக்­கு­றுதி, மக­ளிர் உரி­மைத்­தொகை ரூ.2,500 ஆக வழங்­கப்­ப­டும் என எந்த வாக்­கு­று­தி­யும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. விவ­சா­யி­க­ளுக்­குக் கடன் தள்­ளு­படி செய்­வோம் என்று கூறிய முதல்­வர் இன்று அவர்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நிபந்­த­னை­கள் விதித்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மின்­சா­ரக் கட்­ட­ணத்­தைப் பொறுத்­த­வரை, முன்பு 200 ரூபாய் வந்த இடங்­க­ளில் இப்­போது 2,000 ரூபாய் வரை கட்­ட­ணம் அதி­க­ரித்­துள்­ளது. சில இடங்­க­ளில் 20,000 ரூபாய் வரை கூட மின்­கட்­ட­ணம் வந்­துள்­ள­தா­க­வும் மக்­கள் குற்­றம் சாட்­டு­கி­றார்­கள். இதைப் பற்றி கேட்­டால் மீண்­டும் அதே பதில்­தான் அர­சாங்­கத்­தி­டம் பணம் இல்லை, பணம் இல்லை என்று சொல்­கி­றீர்­கள். தேர்­த­லுக்கு முன்பு அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்­கும், ஆட்­சிக்கு வந்த பிறகு சொல்­லப்­ப­டும் கார­ணங்­க­ளுக்­கும் இடை­யி­லான இந்த வித்­தி­யா­சத்­தைத்­தான் மக்­கள் இப்­போது கேள்வி கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கஜானா காலி என்­றீர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ரூ.1200 கோடி­யில் புதிய கட்­டி­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">காம­ரா­ஜர், பேர­றி­ஞர் அண்ணா, நீங்­கள் அடிக்­கடி குறிப்­பி­டும் புரட்­சித்­த­லை­வர் எம்.ஜி.ஆர். அம்­மை­யார் ஜெய­ல­லிதா, அதற்கு முன்­பாக தலை­வர் கலை­ஞர் எனப் பல தலை­வர்­கள் பயன்­ப­டுத்­திய அலு­வ­ல­கத்தை  இன்று மாற்­றி­யுள்­ளேர்­கள். அதற்­காக ரூ.7 கோடி செலவு செய்­கி­றீர்­கள். அது­வும் முறை­யான டெண்­டர் இல்­லா­மல் இந்­தச் செலவு ஏன் செய்­யப்­பட்­டது. கஜா­னா­வில் பணம் இல்லை என்று சொல்­லும் உங்­க­ளுக்கு, இந்த 7 கோடி ரூபாய் மட்­டும் எங்­கி­ருந்து வந்­தது. நீங்­கள் இப்­போது அடுத்த வீட்­டுக் காசை எடுத்து காரா­பூந்தி சுடு­கி­றீர்­களா என கேட்­கத் தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்ல, தலை­வர் கலை­ஞர் கட்­டிய சட்­ட­மன்­றக் கட்­டி­டம் இருக்­கும்­போது, 1,200 ரூபாய் கோடி செல­வில் புதி­தாக ஒரு சட்­ட­மன்­றக் கட்­டி­டம் கட்­டப் போவ­தா­கச் சொல்­கி­றீர்­கள். அதற்கு எதி­ராக அங்கு வாழும் மீனவ மக்­கள் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரு­பு­றம் காசு இல்லை, கஜானா காலி என்று சொல்­கி­றீர்­கள்; மறு­பு­றம் ஆயி­ரம் கோடி­க­ளில் புதிய கட்­டி­டத் திட்­டம். இது­தான் நீங்­கள் சொன்ன மக்­க­ளுக்­கான மாற்­றமா என விளக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விலை­வா­சியை எடுத்­துக்­கொண்­டால் திமுக ஆட்­சிக் காலங்­க­ளில் வளர்ச்சி, கல்வி, சுகா­தா­ரம், முத­லீ­டு­களை ஈர்ப்­பது எனப் பல துறை­க­ளில் தமிழ்­நாடு தேசிய சரா­ச­ரியை விட முன்­னி­லை­யில் இருந்­தது. ஆனால், இன்­றைக்கு தேசிய சரா­ச­ரியை விட அதி­க­மாக இருப்­பது எதில் என்­றால் விலை­வாசி உயர்­வில்­தான் என்று மக்­கள் கேட்­கி­றார்­கள். தேசிய அள­வில் விலை­வாசி உயர்வு 4.4 சத­வீ­தம் என்ற நிலை­யில், தமிழ்­நாட்­டில் அது 5.44 சத­வீ­த­மாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. முன்பு 50 ரூபாய்க்கு கிடைத்த அரிசி இன்று 90 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கி­றது; இட்லி அரி­சி­யின் விலை­யும் இரட்­டிப்­பா­கி­யுள்­ளது. இது­தான் இந்த ஆட்­சி­யின் சாத­னை­யாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால், இங்­கி­ருக்­கிற சகோ­த­ரி­கள் பெரி­தாக எது­வும் செய்ய வேண்­டி­ய­தில்லை. உங்­கள் சுற்­று­வட்­டார மக்­க­ளி­டம் உட்­கார்ந்து பேசுங்­கள். ஃபியூஸ் யாரு புடுங்­கிட்டு போறாங்­கன்னு கூட கண்­டு­பி­டிக்க முடி­ய­லையா என்று கேளுங்­கள். நான்கு மாதங்­க­ளாக இதற்­குக்­கூட தீர்வு காண முடி­யாத ஒரு ஆட்சி எதற்­காக என கேளுங்­கள்.  நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் நேரு இங்­கே­தான் இருக்­கி­றார். அவ­ரு­டைய துறை­யி­லேயே யாரா­வது தொடர்ந்து ஃபியூஸ் புடுங்­கிக்­கொண்­டி­ருந்­தால், அவர்­க­ளைக் கண்­டு­பி­டித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டாமா, இதைக்­கூட செய்ய முடி­யா­மல் நான்கு மாதங்­க­ளாக எதற்­காக ஆட்சி நடத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஃபியூஸ் புடுங்­கிட்­டுப் போறாங்க, பள்­ளம் வெட்­டு­றாங்க, காத்து அடிக்­கல, மழை வரல, தண்ணி வரல என்று எதற்­கெ­டுத்­தா­லும் கார­ணங்­க­ளைச் சொல்­லிக்­கொண்டே இருக்­கி­றார்­கள். எல்லா ஆட்­சிக் காலத்­தி­லும் சில நாட்­கள் காற்று இல்­லா­மல் இருக்­க­லாம், மழை இல்­லா­மல் இருக்­க­லாம். இதெல்­லாம் அடிப்­படை அறி­வி­யல் வேண்­டும், கொஞ்­ச­மா­வது படித்­தால் தெரிந்­தி­ருக்­கும். அதைப் புரிந்­து­கொண்டு பேச வேண்­டும். ஆனால், எதைப் பற்­றிக் கேட்­டா­லும் திரும்­பத் திரும்ப தூய சக்தி, தீய சக்தி என்ற ஒரே வச­னத்­தையே சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதி­மு­கவை தீர்ந்து போன சக்தி என விமர்ச்­சித்­து­விட்டு அந்­தத் தீர்ந்து போன சக்­தி­யி­லி­ருந்­து­தானே இப்­போது ஒரு­வரை அழைத்து வந்து தேர்­த­லில் நிறுத்­தி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தூய சக்தி என்று சொல்­லிக்­கொள்­ளும் நீங்­கள், 50 கோடி கொடுத்து ஒரு­வ­ரைத் தூக்­கி­ய­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கு என்ன பதில் சொல்­கி­றீர்­கள். அந்­தப் பணம் எங்­கி­ருந்து வந்­தது என்­ப­தை­யும் விளக்க வேண்­டும். அதே­போல, உங்­கள் நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் ஆனந்த் பற்றி, அரசு வழக்­க­றி­ஞர் பதவி வழங்­கு­வ­தற்­காக ரூ.30 லட்­சம் பெற்­ற­தாக ஒரு பெண் வழக்­க­றி­ஞர் புகார் அளித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. அந்­தப் புகாரை அளித்த பெண் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. புகார் அளித்­த­வர் மீது நட­வ­டிக்கை எடுப்­பது ஒரு­பு­றம் இருக்­கட்­டும்; அவர் முன்­வைத்த குற்­றச்­சாட்­டின் மீது என்ன விசா­ரணை நடத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ரி­டம் என்ன விளக்­கம் கேட்­கப்­பட்­டது. அந்­தப் புகா­ரின் உண்மை நிலை என்ன என்­ப­தற்கு வெளிப்­ப­டை­யான பதில் சொல்ல வேண்­டிய பொறுப்பு ஆட்­சி­யி­ன­ருக்கு இருக்­கி­றது. தூய சக்தி என்று தொடர்ந்து சொல்­லிக்­கொண்­டி­ருப்­ப­தை­விட, மக்­கள் முன்­வைக்­கும் கேள்­வி­க­ளுக்­கும் எழும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கும் வெளிப்­ப­டை­யா­கப் பதில் சொல்­வ­து­தான் முக்­கி­யம். முன்­ன­தாக தொடர்ந்து நான்கு மாத­மாக ஒரே கதை­யையே சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள்; எனக்கே போர­டித்­து­விட்­டது. குறைந்­த­பட்­சம் அந்த ஸ்கிரிப்ட் ரைட்­ட­ரை­யா­வது மாற்­றுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதே­போல, ஐபி­எல் போட்­டி­யின்­போது ஒரு அமைச்­சர் செல்­போ­னைப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது குறித்­தும் கேள்­வி­கள் எழுந்­தன. அதற்கு, குழந்­தைக்கு மருந்து அரைத்­துக்­கொண்­டி­ருந்­தேன் என்று விளக்­கம் அளித்­த­தா­கச் சொல்­கி­றார்­கள். சரி, அப்­ப­டியே இருக்­கட்­டும். ஆனால், அவர் உண்­மை­யில் என்ன செய்­து­கொண்­டி­ருந்­தார் என்­பதை ஆட்­சி­யி­லி­ருப்­ப­வர்­கள் இது­வரை விசா­ரிக்­க­வில்லை. பெரிய அள­வில் எந்த விசா­ர­ணை­யும் தேவை­யில்லை; அவர் பயன்­ப­டுத்­திய சாத­னம் அல்­லது அதில் இருந்த தக­வல்­கள் குறித்து உரிய முறை­யில் ஆய்வு செய்­தாலே உண்மை என்ன என்­பது தெரிந்­து­வி­டும். அதற்­குக்­கூட இந்த தூய சக்தி அரசு முயற்சி செய்­ய­வில்லை என்­ப­து­தான் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அமைச்­சர் ஜெக­தீஸ்­வரி பேசிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆடியோ மீது எடுத்த நட­வ­டிக்கை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே நேரத்­தில், அர­சி­ய­லில் நாக­ரி­க­மா­கப் பேச வேண்­டும் என்று நீங்­கள் சொல்­கி­றீர்­கள். அதற்கு நானும் உடன்­ப­டு­கி­றேன்; அர­சி­ய­லில் அனை­வ­ரும் நாக­ரி­கத்­தைக் கடைப்­பி­டித்­துப் பேச வேண்­டும். ஆனால், அந்த நாக­ரி­கம் எல்­லோ­ருக்­கும் சம­மாக இருக்க வேண்­டும். உங்­கள் அமைச்­சர் ஜெக­தீஸ்­வரி தொடர்­பாக வெளி­யா­கி­யுள்ள ஆடி­யோ­வில், அவ­ரு­டைய கட்­சி­யில் பொறுப்­பில் இருக்­கும் ஒரு­வ­ரி­டம் கடு­மை­யா­கப் பேசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. அந்த ஆடியோ குறித்து பல்­வேறு கேள்­வி­கள் எழுந்­துள்ள நிலை­யில், இது­வரை என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பெண்­க­ளாக இருந்­தா­லும் சரி, ஆண்­க­ளாக இருந்­தா­லும் சரி, அர­சி­ய­லில் ஒரு­வரை ஒரு­வர் மதித்து, நாக­ரி­க­மா­கப் பேச வேண்­டும். அதை முத­லில் உங்­கள் கட்­சிக்­குள்­ளேயே கடைப்­பி­டிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இது­தான் கண்­ணி­யத்­தை­யும் பெண்­க­ளின் மரி­யா­தை­யை­யும் காப்­பாற்­றும் என்று சொல்­லிக்­கொள்­ளும் தூய சக்தி. சமூக வலை­த­ளங்­க­ளில் திமு­க­வைச் சேர்ந்த பெண்­க­ளைப் பற்றி எப்­ப­டிப்­பட்ட இழி­வான விமர்­ச­னங்­க­ளும் அவ­தூ­று­க­ளும் முன்­வைக்­கப்­ப­டு­கி ன்­றன. இது­கு­றித்து முத­ல­மைச்­சர் தம்பி விஜய் அவர்­கள் ஒரு­மு­றை­யா­வது கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றாரா. அவற்­றைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு ஏதா­வது நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றாரா என்­றால் ஒன்­றுமே இல்லை. ஆனால், தங்­களை மட்­டும் தூய சக்தி என்று சொல்­லிக்­கொள்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதை­யும் தாண்டி, என்­னு­டைய தொகு­தி­யான ஸ்ரீவை­குண்­டத்­தில் தவெக நிர்­வா­கி­யாக இருக்­கும் ஒரு பெண், அங்கு உள்ள ஒரு அமைச்­சர் மீது குற்­றச்­சாட்டு முன்­வைத்­த­தா­க­வும், அதைத் தொடர்ந்து இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. மேலும், பாலி­யல் வன்­கொ­டுமை தொடர்­பாக அந்­தப் பெண் அமைச்­சர் மீது குற்­றச்­சாட்டு முன்­வைத்­த­போது, அவரை மிரட்டி புகா­ரைத் திரும்­பப் பெறச் செய்­த­தா­க­வும் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் குறித்து முறை­யான விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே­போல, தாம்­ப­ரம், காசி­மேடு உள்­ளிட்ட பகு­தி­க­ளில் தவெக நிர்­வா­கி­கள் மீது பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­கள் குறித்து கட்சி மற்­றும் ஆட்­சி­யி­னர் என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர் என்­ப­து­தான் முக்­கி­ய­மான கேள்வி. ஆட்­சிப் பொறுப்­பில் இருப்­ப­வர்­கள் எதை வேண்­டு­மா­னா­லும் செய்­ய­லாம்; அவர்­க­ளி­டம் கேள்வி கேட்­கக்­கூ­டாது என்ற நிலை இருக்­கக்­கூ­டாது. நீங்­கள் வெளி­யி­டும் குற்­றச்­சாட்­டு­க­ளின் பட்­டி­ய­லில், உங்­கள் சொந்­தக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள்­மீ­தும் புகார்­கள் இருக்­கின்­றன என்­றால், அதற்­கும் வெளிப்­ப­டை­யான பதில் சொல்ல வேண்­டிய பொறுப்பு உங்­க­ளுக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்­லா­மல், அரசு அர­சா­ணை­க­ளைப் பிறப்­பித்து பின்­னர் அவற்­றைத் திரும்­பப் பெறு­வது தொடர்­பா­க­வும் இந்த ஆட்­சி­யின் செயல்­பா­டு­கள் குறித்து கேள்­வி­கள் எழுந்­துள்­ளன. தொடர்ந்து அர­சா­ணை­களை வெளி­யிட்டு, பின்­னர் அவற்­றைத் திரும்­பப் பெற வேண்­டிய நிலை ஏன் ஏற்­ப­டு­கி­றது என்­ப­தற்கு அரசு தெளி­வான விளக்­கம் அளிக்க வேண்­டும். மக்­கள் கேட்­கும் கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்­வ­து­தான் ஒரு பொறுப்­பான ஆட்­சி­யின் அடை­யா­ளம்; தூய சக்தி என்ற பெய­ரைச் சொல்­லிக்­கொள்­வது மட்­டும் போதாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதில் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­ட­மான RTIயைப் பற்­றி­யும் பேச வேண்­டும். இந்­தச் சட்­டம் 2005-ஆம் ஆண்டு அன்­றைய ஐக்­கிய முற்­போக்­குக் கூட்­டணி ஆட்­சிக் காலத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. அரசு நிர்­வா­கத்­தில் வெளிப்­ப­டைத்­தன்­மை­யும் பொறுப்­பு­ணர்­வும் இருக்க வேண்­டும்; மக்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான தக­வல்­க­ளைப் பெற வேண்­டும் என்­ப­தற்­கா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட முக்­கி­ய­மான சட்­டம் இது. ஆனால், இன்று அந்­தச் சட்­டத்­தின் மூலம் கேட்­கப்­ப­டும் கேள்­வி­க­ளுக்­குக்­கூட உரிய பதில் கிடைக்­காத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்­டு­கின்­றன. உங்­க­ளு­டைய ஆட்­சியை ஆத­ரித்து வந்த கம்­யூ­னிஸ்ட் தோழர்­கள்­கூட இன்று உங்­க­ளு­டைய செயல்­பா­டு­களை விமர்­சித்து அறிக்கை வெளி­யி­டும் நிலைக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள். இது­தான் நீங்­கள் சொல்­லிக்­கொள்­ளும் தூய சக்தி ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்ல, இந்­தப் பகு­தி­யில் ஒரு அமைச்­சர் சாயப்­பட்­ட­றை­க­ளி­ட­மி­ருந்து 9 முதல் 10 கோடி வரை வசூல் செய்­த­தா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ள­தாக எங்­க­ளுக்­குத் தக­வல் வரு­கி­றது. இந்­தக் குற்­றச்­சாட்டு குறித்து உரிய விசா­ரணை நடத்­தப்­பட்­டதா என்­ப­து­தான் மக்­க­ளி­டம் நாம் கேட்க வேண்­டிய கேள்வி. ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்­க­ளி­லேயே இத்­தனை குற்­றச்­சாட்­டு­கள் எழும்­போது, அவற்­றுக்கு வெளிப்­ப­டை­யான பதில் சொல்ல வேண்­டிய பொறுப்பு அர­சுக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பா.ஜ.க.வின் ஆத­ர­வான நிலைப்­பாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இத்­தனை கேள்­வி­கள் எழுந்­து­கொண்­டி­ருக்­கும்­போது, நம்­மு­டைய தம்பி விஜய் மட்­டும் பாஜ­க­வுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுப்­ப­தாக எதிர்க்­கட்­சி­கள் விமர்­சித்து வரு­கின்­றன. உண்­மை­யில், அவர் அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு முன்பே சில விஷ­யங்­க­ளைத் தெளி­வா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார்; நாம்­தான் அதை சரி­யா­கப் புரிந்­து­கொள்­ள­வில்லை. அவ­ரது கட்­சிக் கொடி­யின் நிறங்­க­ளைப் பற்­றி­யும் பல்­வேறு அர­சி­யல் விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், கொடி­யின் நிறமே மஞ்­சள் மற்­றும் சிகப்பு வண்­ணம். அதை சேர்த்­தாலே காவி வந்து விடு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மதுரை சிறு­வன் கொலைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நீதி வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே­போல, குழந்­தை­களை அர­சி­யல் பிரச்­சா­ரத்­துக்­குப் பயன்­ப­டுத்­து­வது குறித்­தும் கேள்­வி­கள் எழு­கின்­றன. குழந்­தை­க­ளுக்கு அர­சி­யல் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வது வேறு; அவர்­களை வைத்து பெற்­றோ­ரி­டம் வற்­பு­றுத்தி வாக்கு கேட்­கச் செய்­வது வேறு. இது ஜன­நா­யக ரீதி­யா­க­வும், குழந்­தை­க­ளின் உரி­மை­கள் மற்­றும் நலன் தொடர்­பா­க­வும் விவா­திக்க வேண்­டிய விஷ­யம். தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் குழந்­தை­களை எவ்­வாறு பயன்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தற்­கும் ஒரு வரம்பு இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­நி­லை­யில், மது­ராந்­த­கம் பகு­தி­யில் நடை­பெற்ற பிரச்­சா­ரத்­தின்­போது, வண்­ட­லூர் அருகே அர­சுப் பள்ளி மாணவி தொடர்­பான பாலி­யல் வன்­கொ­டுமை சம்­ப­வம் குறித்து செய்­தி­கள் வெளி­யா­கின. அந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா, பாதிக்­கப்­பட்ட குழந்­தைக்­கும் குடும்­பத்­திற்­கும் போது­மான பாது­காப்­பும் நீதி­யும் கிடைத்­ததா என்­ப­து­தான் முக்­கி­ய­மான கேள்வி. ஒரு அர­சாங்­கத்­தின் கடமை, எந்த அர­சி­யல் நிகழ்­வாக இருந்­தா­லும் அதை­விட மக்­க­ளின் பாது­காப்­புக்­கும் நீதிக்­கும் முன்­னு­ரிமை கொடுப்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே­போல, மதுரை அருகே 16 வயது சிறு­வன் கொலை செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் சம்­ப­வத்­தி­லும், அந்­தச் சிறு­வ­னின் குடும்­பத்­தி­னர் நீதி கோரி போரா­டி­ய­தாக செய்­தி­கள் வெளி­யா­கின. போரா­டிய குடும்­பத்­தி­ன­ரி­டம் காவல்­துறை எவ்­வாறு நடந்து கொண்­டது என்­ப­தும் கேள்­விக்­குள்­ளா­னது. இது­போன்ற சம்­ப­வங்­க­ளில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு நீதி கிடைப்­பதை உறுதி செய்­வ­து­தான் அர­சின் முதன்­மை­யான பொறுப்பு. குழந்­தை­கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளில் அர­சி­யல் கணக்­கு­க­ளை­விட அவர்­க­ளின் பாது­காப்­பும் உரி­மை­க­ளும் முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால், திரைப்­ப­டங்­க­ளில் கதா­நா­ய­கர்­கள் தாய்­மா­மன் சீர் கொடுப்­பது போன்ற காட்­சி­க­ளைப் பார்க்­க­லாம். இன்று தாய்­மா­மன் சீர் என்ற பெய­ரில் மோதி­ரம் கொடுப்­பது பற்­றி­யும் பேச­லாம். நீங்­கள் கொடுப்­ப­தில் எங்­க­ளுக்கு எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை. ஆனால், பெண்­கள் யாரு­டைய சீர் அல்­லது உத­வியை எதிர்­பார்த்து நிற்க வேண்­டிய அவ­சி­யமே இல்­லாத ஒரு சமூ­கத்தை உரு­வாக்க வேண்­டும் என்­ப­து­தான் திரா­விட இயக்­கத்­தின் அடிப்­ப­டைச் சிந்­தனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் சமூ­கச் சீர்­தி­ருத்­தப் பய­ண­மும், தொடர்ந்து முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் செயல்­ப­டுத்தி வரும் பெண்­க­ளுக்­கான திட்­டங்­க­ளும், பெண்­கள் தங்­க­ளு­டைய சொந்­தக் காலில் நிற்க வேண்­டும் என்­ப­தையே வலி­யு­றுத்­து­கின்­றன. கல்­லூ­ரிக்­குச் செல்­லும் மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ரூ.1,000 வழங்­கும் திட்­டம் முதல், கல்வி, வேலை­வாய்ப்பு, இட­ஒ­துக்­கீடு, பெண்­க­ளின் பொரு­ளா­தார முன்­னேற்­றம் எனப் பல்­வேறு வழி­க­ளில் பெண்­கள் யாரி­ட­மும் கையேந்­தா­மல் தன்­னம்­பிக்­கை­யு­டன் வாழ வேண்­டும் என்­பதே அந்­தப் பய­ணத்­தின் நோக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்­தப் பாதை­யில், இன்று படித்த ஒரு பெண்­ணை­யும், வழக்­க­றி­ஞ­ரு­மான சுகன்­யா­வை­யும் வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யி­ருக்­கி­றோம். அவர் இன்­னும் மக்­கள் பிர­தி­நி­தி­யா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பே, மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்­காக குரல் கொடுத்து போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார். ஆட்­சி­யில் இருப்­ப­வர்­க­ளுக்­குத்­தான் வாக்­க­ளித்­தால் மட்­டுமே திட்­டங்­கள் கிடைக்­கும் என்று சிலர் சொல்­ல­லாம். ஆனால், மக்­க­ளின் உரி­மை­கள் எந்­தக் கட்­சிக்கு வாக்­க­ளித்­தா­லும் கிடைக்க வேண்­டி­யவை. இப்­போது மக்­க­ளுக்­கா­கப் பணி­யாற்­றும் வேட்­பா­ள­ரைத் தேர்ந்­தெ­டுப்­ப­து­தான் முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதே­போல, விவ­சா­யி­க­ளும் பல்­வேறு கோரிக்­கை­க­ளுக்­கா­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். குழாய்­கள் பதிப்­பது உள்­ளிட்ட பணி­க­ளால் பாதிக்­கப்­ப­டும் விவ­சா­யி­க­ளுக்கு உரிய இழப்­பீடு வழங்­கப்­ப­டு­கி­றதா என்­ப­தை­யும் அரசு உறுதி செய்ய வேண்­டும். வெறும் பச்­சைத் துண்­டைப் போட்­டுக்­கொள்­வ­தால் மட்­டும் ஒரு­வர் விவ­சா­யி­யா­கி­விட முடி­யாது; விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­ க­ளில் நின்று, அவர்­க­ளுக்­கான நியா­யத்­தைப் பெற்­றுத்­த­ரும்­போ­து­தான் அது உண்­மை­யான விவ­சாயி மீதான அக்­க­றை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சினி­மா­வைப் பார்த்து ஏமாந்த காலம் முடிந்­து­விட்­டது. மக்­கள் விழித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். யார் என்ன சொல்­கி­றார்­கள் என்­ப­தைக் காட்­டி­லும், யார் என்ன செய்­கி­றார்­கள் என்­ப­தைப் பார்த்து முடிவு செய்­யும் நிலைக்கு மக்­கள் வந்­து­விட்­டார்­கள். அந்த உண்­மையை இந்­தத் தேர்­த­லில் உங்­க­ளு­டைய உழைப்­பின் மூலம் மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>