<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,32,958,1014" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 01 2026 03:34:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261001T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01102026-CBE-06" position.sequence="06" ex-ref="01102026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">01.10.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">மதுரையில் ‘தாய்மாமன் சீர்’ செய்யும் முதல்வரே</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">மருந்துத் தட்டுப்பாட்டினால் மழலைகள் மடிவதைத் தடுக்க என்ன செய்தீர்கள்?!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="33">தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்.பி. கேள்வி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup915040_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865282_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865226_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865155_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="kani3_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தாரா­பு­ரம், அக். 1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மது­ரை­யில்  தாய்­மா­மன் சீர் செய்­யும் முத­ல­மைச்­சரே; மருந்­துத் தட்­டுப்­பாட்­டால் மழ­லை­கள் மடி­வ­தைத் தடுக்க என்ன செய்­தீர்­கள் என தாரா­பு­ரம் தொகுதி பிரச்­சா­ரத்­தில்  கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திருப்­பூர் மாவட்­டம், தாரா­பு­ரம் தொகு­தி­யில் உள்ள கோவிந்­த­பு­ரம் பகு­தி­யில்  தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி பிரச்­சா­ரம் மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­தப் பிர­சா­ரத்­தில்  கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. பேசி­ய­தா­வது:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த இடைத்­தேர்­தல் ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக நடை­பெ­றக்­கூ­டிய, ஜன­நா­ய­கத்­தைச் சாக­டிக்­கக்­கூ­டிய வகை­யிலே திணிக்­கப்­பட்­டது. மக்­க­ளு­டைய உரி­மை­க­ளை­யும், ஜன­நா­ய­கத்­தை­யும் நிலை­நாட்­டு­வ­தற்­காக நம்­மு­டைய இயக்­கத்­தின் தலை­வர், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் அண்­ணன் தள­பதி மு.க.ஸ்டாலின் தேர்ந்­தெ­டுத்து உங்­கள் கரங்­க­ளில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கக்­கூ­டிய வேட்­பா­ளர், வழக்­க­றி­ஞர் சுகன்யா அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நமது வேட்­பா­ளர் சுகன்­யார் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திலே வழக்­க­றி­ஞர்  அணி­அ­மைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். அவ­ரு­டைய கண­வர் இளை­ஞர் அணி­யிலே பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கப் பாரம்­ப­ரி­யத்­தில் வந்த குடும்­பத்­தைச் சேர்ந்த சகோ­த­ரி­தான் சுகன்யா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால் என்ன சோதனை, வேதனை, கைது­கள், அச்­சு­றுத்­தல்­கள், பணப்­பெட்­டி­க­ளும் சூட்­கேஸ்­க­ளும் வந்­தா­லும் கூட மனம் மாறா­மல், கொண்ட கொள்­கை­யும் கொண்ட தலை­வ­னும் மாறாது என்று உறு­தி­யாக நிற்­கக்­கூ­டி­ய­வர். அப்­படி ஒரு சகோ­த­ரி­யைத்­தான் தேர்ந்­தெ­டுத்து நம்­மு­டைய அண்­ணன் தள­பதி மு.க.ஸ்டாலின் உங்­கள் கரங்­க­ளிலே ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மை அழி­யும் முன்னே பதவி வில­கல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்­தத் தேர்­த­லிலே தலை­மைப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்டு, வெற்றி பெற உழைத்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய, இந்­தத் தேர்­தல் பணி­க­ளின் உந்­து­சக்­தி­யாக இருக்­கக்­கூ­டிய நம்­மு­டைய கழ­கத்­தி­னர் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கடந்த ஏப்­ரல் மாதம் தமிழ்­நாட்­டில் தேர்­தல் நடந்து முடிந்­தது. ஒரு­வ­ழி­யாக இழுத்­துப்­ப­றித்து ஒரு அர­சும் ஆட்­சிக்கு வந்­தது. பிறகு ஏன் மீண்­டும் இந்த இடைத்­தேர்­தல் வந்­தது. ஏனெ­னில் நாங்­கள் தூய சக்தி என்று கூறி ஆட்­சிக்கு வந்­தார்­கள். ஆனால், அ.தி.மு.க.வில் வேட்­பா­ள­ராக நின்று இரட்டை இலைக்கு ஓட்­டுப் போடுங்­கள் என்று கூறி உங்­க­ளி­டம் ஓட்டு வாங்­கிச் சென்ற ஒரு அம்­மை­யார், அந்த மை அழி­யும் முன்பே பதவி வில­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பதவி வில­கிய கையோடு  உங்­க­ளி­டம் வந்து நன்றி கூடச் சொல்­ல­வில்லை. இப்­போது மீண்­டும் வந்து நான் த.வெ.க.வில் நிற்­கி­றேன், விசில் அடித்­துக்­கொண்டு வரு­கி­றேன், அத­னால் எனக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்­கி­றார். எனக்கு ஒரே ஒரு சந்­தே­கம்­தான். ஏன் அ.தி.மு.க.வில் நின்று ஜெயித்­தீர்­கள், எது உங்­க­ளைக் கட்சி மாறச் செய்­தது. இதற்­கான பதிலை அவர்­கள் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தூய சக்­தியா? திருட்டு சக்­தியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எல்­லோ­ரும் ரூ.50 கோடி ரூபாய் கைமா­றி­யது என்று பேசு­கி­றார்­கள். நாம் அதைப் பார்க்­க­வில்லை. ஆனால் அவ்­வாறு பேசப்­ப­டு­வதை நாமும் கேட்­கி­றோம். அந்த 50 கோடி ரூபாய் தூய சக்­தி­யின் கைக்கு எப்­படி வந்­தது. அப்­ப­டி­யா­னால் அது தூய சக்­தியா, அல்­லது திருட்­டுச் சக்­தியா என்ற கேள்வி எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­போது வாக்­க­ளித்த மக்­க­ளின் முகத்­தில் கரி­யைப் பூசு­வது போல இந்த இடைத்­தேர்­தல் நடக்­கி­றது. பாவம், கடந்த முறை வாக்­க­ளித்­தோம்; ஏமாற்­றி­விட்­டுச் சென்­று­விட்­டார்­கள், அத­னால் அவ­ளுக்கே மீண்­டும் ஒரு வாய்ப்பு கொடுக்­க­லாமா என்று நீங்­கள் பரி­தா­பப்­ப­ட­லாம். ஆனால், தன் கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரையே பத்­தி­ர­மாக வைத்­துக்­கொள்­ளத் தெரி­யாத ஒரு கட்­சிக்கு மீண்­டும் வாக்­க­ளித்து என்ன பயன் கிடைக்­கப்­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை எடுத்­துக்­கொள்­ளுங்­கள். ஆட்­சி­யில் இல்­லா­த­போ­தும், நாள்­தோ­றும் வழக்­கு­கள், கைது­கள், சோத­னை­கள் வந்­த­போ­தும் ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னரோ, மக்­கள் பிர­தி­நி­தியோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரோ கட்­சியை விட்­டுப் போக வேண்­டும் என்று யோசித்­துக்­கூ­டப் பார்த்­த­தில்லை. அது­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். நமது தலை­வர் கலை­ஞர் பாது­காத்த இயக்­கம், இன்று முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் முன்­னெ­டுத்து நடத்­தக்­கூ­டிய இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அத­னால் சுகன்­யா­வுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால், நீங்­கள் அளித்த வாக்­கும் பத்­தி­ர­மாக இருக்­கும்; வேட்­பா­ளரை, மக்­கள் பிர­தி­நி­தியை அதை­வி­டப் பத்­தி­ர­மாக நாங்­கள் பார்த்­துக்­கொள்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இங்கே சிலர் கூறு­வார்­கள், ஆளுங்­கட்­சிக்கு வாக்­க­ளித்­தால் எல்­லாம் கிடைக்­கும் என்று. ஒன்­றுமே கிடைக்­காது. இந்த தேர்­த­லில் முத­ல­மைச்­சர் விஜய் எனக்­குச் சொந்­தக்­கா­ர­ரா­கவே ஆகி­விட்­டார். ஏனென்­றால் எங்­க­ளு­டைய அண்­ணன் மு.க.ஸ்டாலினை பார்த்து My dear sweet uncle என்­றார். அத­னால் நான் அவரை அன்­புத்­தம்பி விஜய் என்று அழைப்­ப­தில் தவ­றில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அன்­புத் தம்­பி­யின் மாற்­றம்­தான் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அன்­புத்­தம்பி விஜய் தேர்­த­லுக்கு முன்­னால் உங்­க­ளை­யெல்­லாம் பார்த்­தார். பெரிய மாற்­றத்­தைக் கொண்டு வரு­வேன், இந்த ஆட்­சி­யில் சட்­டம்-­ஒ­ழுங்கு சரி­யில்லை, எது­வுமே சரி­யில்லை, எந்த முன்­னேற்­ற­மும் இல்லை என்று கூறி பல்­வேறு தேர்­தல் வாக்­கு­று­தி­களை அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">குறிப்­பாக ஆறு சிலிண்­டர்­கள், ரூ.2,500 மக­ளிர் உரிமை தொகை, 5 ஏக்­க­ருக்­கும் குறை­வாக நிலம் வைத்­துள்ள விவ­சா­யி­க­ளுக்­குக் கடன் தள்­ளு­படி என பல அறி­விப்­பு­களை வெளி­யிட்­டார். ஆனால் இப்­போது விவ­சா­யி­யையே தள்­ளு­படி செய்­து­விட்­டார், கட­னைத் தள்­ளு­படி செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதைத் தாண்டி வேலை இல்­லாத பட்­ட­தா­ரி­க­ளுக்கு ரூ.4,000 உத­வித்­தொகை என்­றார். ஆனால் ரூ.4,000 வந்­ததா என்­றால் வர­வில்லை. ரூ.4,000 வர­வில்லை, ஆனால் அந்த வேலை­யில்லா பட்­ட­தாரி படத்­தில் நடித்த தனுஷே அர­சி­ய­லுக்கு வந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மின் கட்­ட­ணம் உயர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மின்­சா­ரக் கட்­ட­ணம் குறைக்­கப்­ப­டும் என்­றார்­கள். ஆனால், அன்று ரூ.200 வந்த கட்­ட­ணம் இன்று ரூ.2,000, ரூ.4,000 என உயர்த்­தப்­பட்டு, ரூ.20,000 வரை கூட வரு­கி­றது. இங்கு மின்­சா­ரமே இல்­லா­த­தற்கு மின் கட்­ட­ணம் கட்ட வேண்­டி­யி­ருக்­கி­றது. இடைத்­தேர்­தல் நடக்­கும் இந்­தத் தொகு­தி­யி­லேயே இர­வில் ஒரு நாளைக்கு மூன்று முறை மின்­வெட்டு ஏற்­ப­டு­கி­றது. அப்­ப­டி­யா­னால் தமிழ்­நாட்­டின் மற்ற பகு­தி­க­ளில் எவ்­வ­ளவு மின்­வெட்டு இருக்­கும் என்று யோசித்­துப்­பா­ருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பஞ்­சாப்­பில் 15 மணி நேரம் மின்­வெட்டு ஏற்­ப­டு­கி­றது என்று அமைச்­சர் கூறு­கி­றார். அதற்­குப் போட்­டி­யாக இங்கே 20 மணி நேரம் மின்­வெட்டு ஏற்­பட்டு, 4 மணி நேரம் மின்­சா­ரம் வந்­தாலே பெரிய விஷ­ய­மாக இருக்­கும் போலி­ருக்­கி­றது. இதற்­கான கார­ணத்தை கேட்­டால், ஃபியூ­ஸைப் பிடுங்­கிச் சென்­று­வி­டு­கி­றார்­கள் என்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என்ன கேள்வி கேட்­டா­லும் தண்­ணீர் இல்லை, காற்று இல்லை, மழை இல்லை; சட்­டம்-­ஒ­ழுங்­கை­யும் பாது­காக்க முடி­ய­வில்லை. அன்­புத்­தம்பி விஜய்­யால் சட்­டம் ஒழுங்­கைப் பாது­காக்க முடி­ய­வில்லை. அந்த ஃபியூஸ் கட்­டை­யைப் பிடுங்­கிச் செல்­ப­வர்­கள் யாரென்று நான்கு மாதங்­க­ளாக உங்­க­ளால் கண்­டு­பி­டிக்க முடி­யாதா, இதைக் கூடவா செய்ய முடி­யாது. அப்­பாட்­டி­யா­னால் பிறகு எதற்கு இந்த ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பெரிய மாற்­றத்­தைக் கொண்­டு­வர வந்த இந்த ஆட்­சி­யில், நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி மு.க.ஸ்டாலின் கூறி­யது போல இரண்டே இரண்டு விஷ­யங்­க­ளுக்­குத்­தான் போட்டி. ஒன்று மின்­வெட்டு, இன்­னொன்று அரி­வாள் வெட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நான்கு மாதங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">550 குற்­றச்­சம்­ப­வங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­போது அரி­வாள் வெட்­டுக்கு வரு­வோம். ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்­கள் ஆகின்­றன. இந்த நான்கு மாதங்­க­ளில் 550 குற்­றச்­சம்­ப­வங்­கள்; குழந்­தை­கள் உட்­பட 200 கொலை­கள்; 300-க்கும் மேற்­பட்ட பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­கள்; 8 காவல் மர­ணங்­கள், 10 ஆண­வக் கொலை­கள்! இதை­யெல்­லாம் வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருப்­ப­தற்கு ஓர் ஆட்சி, ஓர் அதி­கா­ரம், ஒரு முத­ல­மைச்­சர் தேவையா என்று நீங்­கள் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் நேரத்­தில் மக்­க­ளி­டம் பேசி­யது மட்­டு­மின்றி, குழந்­தை­க­ளி­ட­மும் விஜய் ஓட்டு கேட்­டார். நண்பா, நண்­பீஸ், வீட்­டில் சென்று சாக்­லேட் கேட்டு அடம் பிடிப்­பீர்­கள் அல்­லவா, அது­போல மாமா­வுக்கு ஓட்­டுப் போடச் சொல்லி அடம் பிடி­யுங்­கள் என்று குழந்­தை­க­ளுக்­குச் சொல்­லிக்­கொ­டுத்­தார். யாரா­வது குழந்­தை­க­ளைத் தேர்­த­லுக்­குப் பயன்­ப­டுத்­து­வார்­களா என யாரும் சிந்­திக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">குழந்­தை­க­ளுக்கு பாது­காப்பு இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால் அதை­யும் செய்­தார் முத­ல­மைச்­சர் விஜய். அப்­ப­டிச் செய்­து­விட்டு இன்று அந்த குழந்­தை­க­ளின் நிலைமை என்ன. மது­ரை­யில் 16 வய­துச் சிறு­வன் படு­கொலை செய்­யப்­பட்டு, கழி­வு­நீர்க் குட்­டை­யில் வீசப்­பட்­டி­ருக்­கி­றான். அந்­தப் பைய­னின் தாயும் தந்­தை­யும் தன் பிள்­ளைக்கு நியா­யம் கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கப் போரா­டு­கி­றார்­கள். ஆனால், காவல்­துறை அவர்­க­ளின் கழுத்­தில் மிதித்து இழுத்­துச் சென்று சிறை­யில் அடைக்­கி­றது. நேற்று இந்­தத் தொகு­தி­யி­லும் போரா­டிய ஒரு 15 வய­துச் சிறு­வ­னைக் கைது செய்து அழைத்­துச் சென்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்ல, மது­ராந்­த­கத்­திற்கு முத­ல­மைச்­சர் பிரச்­சா­ரத்­திற்­குச் செல்­கி­றார். அவர் பிரச்­சா­ரத்­திற்­குச் செல்­லும் வழி­யில் சாலை­க­ளை­யெல்­லாம் சீர­மைக்­கி­றார்­கள், அதில் தவ­றில்லை. ஆனால் அங்கே வண்­ட­லூர் அருகே ஒரு கொடூ­ரம் நடக்­கி­றது.  ஒரு சிறுமி பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­ப­டு­கி­றாள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால் இந்த விஜய்­யின் தவெக அரசு மாற்­றம், மாற்­றம் என்று நம்­மை­யெல்­லாம் ஏமாற்றி உரு­வான இந்த அரசு, தான் செல்­லும் இடத்­தில் ஒரு குற்­றச்­சம்­ப­வம் நடந்­து­விட்­டது என்று வெளி­யில் தெரி­யக்­கூ­டாது என்­ப­தற்­காக, அந்­தச் சிறு­மி­யின் மீது அபாண்­ட­மா­கப் பழி­போட்டு, தேர்வு எழு­து­வ­தற்­குப் பயந்­து­கொண்டு அந்­தச் சிறுமி பொய் சொல்­கி­றாள் என்று கூறு­கி­றார்­கள். இப்­ப­டிப்­பட்ட கொடூ­ர­மான, மன­சாட்­சியே இல்­லாத ஆட்­சி­தான் இன்று நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தவெக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எந்­தக் குழந்­தை­க­ளி­டம் கெஞ்சி, பிச்­சை­யெ­டுத்து ஓட்டு வாங்­கி­னீர்­களோ இன்று அந்­தக் குழந்­தை­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை. குழந்­தை­க­ளுக்­குப் பாது­காப்­பில்­லாத ஓர் இடத்­தில் இருந்­து­கொண்டு இன்று தங்க மோதி­ரம் போட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள். இந்த ஆட்­சி­யில் குழந்­தை­க­ளின் உயி­ருக்கு உத்­த­ர­வா­தம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மருந்து தட்­டுப்­பாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஊரெல்­லாம் டெங்கு காய்ச்­சல். ஒரு வய­துக் குழந்­தை­யும், ஏழு வய­துக் குழந்­தை­யும் இறந்து போயி­ருக்­கி­றார்­கள். அதைப்­பற்­றி­யெல்­லாம் இவர்­க­ளுக்கு அக்­க­றையோ கவ­லையோ இல்லை. பிறந்த குழந்­தை­க­ளுக்­குத் தர வேண்­டிய மருந்­து­கள் கிடைக்­க­வில்லை. முக்­கி­ய­மாக சர்ஃ­பேக்­டன்ட் எனும் பிறந்த குழந்­தை­க­ளுக்­கான மருந்­துக்­குக் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது. மருத்­து­வ­ம­னை­க­ளில் மருத்­து­வர்­கள் பதை­ப­தைத்­துக் கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், தாய்­மா­மன் சீர் என்­றொரு திட்­டத்­தைக் கொண்­டு­வந்து, மருத்­து­வர்­களை நகை வாங்க நகைக்­க­டைக்கு அனுப்­பிக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஆட்­சி­தான் இந்த ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில், பெண்­கள் யாரை­யும் எதிர்­பார்த்து நிற்­கக் கூடாது; தனி­யா­கத் தன்­னம்­பிக்­கை­யோடு தலை­நி­மிர்ந்து வாழுங்­கள். பெண்­கள் சுய­மாக நில்­லுங்­கள்,  படி­யுங்­கள், சுய­மா­கச் சம்­பா­தி­யுங்­கள் என்று பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் முதல் நம்­மு­டைய அண்­ணன் தள­பதி வரை வழி­காட்­டி­னார்­கள். நீ கல்­லூ­ரிக்­குச் சென்று படிக்க மாதம் 1,000 ரூபாய் தரு­கி­றேன். பண­மில்லை என்று படிப்பை நிறுத்­தி­வி­டாதே என்று உதவி செய்த சகோ­த­ரன், தந்தை அண்­ணன் மு.க.ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­போது படித்­து­விட்டு வந்­து­விட்­டாயா, அர­சுப் பணி­யி­டங்­க­ளில் பெண்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்டை 40 சத­வீ­த­மாக உயர்த்­தித்­த­ரு­கி­றேன் என்­ற­வர் தலை­வர் மு.க.ஸ்டாலின். சொந்­த­மா­கத் தொழில் தொடங்க உத­வி­கள் செய்து, பெண் தன் காலில் நிற்க வேண்­டும் என்று வழி­காட்­டிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">இதுவா முன்­னேற்­றம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்று மீண்­டும் 50 ஆண்­டு­கள், 100 ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்த தாய்­மா­மன் சீர் என்­ப­தைக் கொண்­டு­வந்து பெண்­க­ளைப் பின்­னுக்­குத் தள்­ளு­கி­றீர்­களே, இதுவா மாற்­றம்? இதுவா முன்­னேற்­றம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­கள், நம்­மு­டைய சுகன்யா ஆகி­யோர் தாய்­மா­ம­னுக்கே சீர் தரக்­கூ­டிய அள­விற்கு இன்று படித்­துப் பட்­டம் பெற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள் என்­றால் அது­தான் மாற்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு தரு­வ­தில்லை, குழந்­தை­க­ளைப் பாது­காப்­ப­தில்லை, குழந்­தை­க­ளைக் காப்­பாற்ற மருந்து மாத்­தி­ரை­களை வாங்க அக்­கறை காட்­டு­வ­தில்லை. உங்­க­ளு­டைய பிரச்­சா­ரத்­திற்­காக, பாதிக்­கப்­பட்ட ஒரு சிறுமி சொல்­வ­தைப் பொய் என்று மன­சாட்­சியே இல்­லா­மல் கூறக்­கூ­டிய ஓர் ஆட்சி தமிழ்­நாட்­டிற்­குத் தேவையா என்று சிந்­திக்க வேண்­டிய நேரம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">மக்­க­ளுக்­காக நிற்­கும் இயக்­கம் தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதில் மது­ராந்­த­கத்­திற்­குச் சென்று வேறு ஒன்று சொல்­கி­றார். ஏதோ பா.ஜ.க.வுக்கு நாம் பயந்­து­கொண்­டி­ருக்­கி­றோ­மாம். தமிழ்­நாட்­டின் பா.ஜ.க.தான் தி.மு.க.வாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பிர­த­மர் தமிழ்­நாட்­டிற்கு வந்­த­போது அவ­ருக்­குக் கருப்­புக் கொடி காட்­டிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். ஒன்­றிய அரசு இயற்­றிய மசோ­தாக்­க­ளுக்கு எதி­ரா­கச் சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னங்­க­ளைக் கொண்­டு­வந்­த­வர் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­ம­ராக இருந்­தா­லும், உள்­துறை அமைச்­ச­ராக இருந்­தா­லும், வேறு யாராக இருந்­தா­லும் எதிர்த்­துக் கேள்­வி­கள் கேட்­கத் துணி­யக்­கூ­டிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எந்­தப் போராட்­டத்­தி­லும் மக்­க­ளோடு நிற்­கக்­கூ­டி­ய­வர்­கள், மொழிக்­காக, மத நல்­லி­ணக்­கத்­திற்­காக, ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­கத் தொடர்ந்து குரல் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அன்­புத்­தம்பி விஜய் அவர்­களே நாங்­கள் பா.ஜ.க. என்­றால் அண்­ணன் திரு­மா­வ­ள­வன் இயக்­கத்­தில் இருக்­கக்­கூ­டிய வன்­னி­ய­ரசு எழுந்து சட்­ட­மன்­றத்­தில் மோடி­யைப் பற்­றிப் பேசி­ய­போது, அய்­யய்யோ வேண்­டாம், அந்­தப் பேச்­செல்­லாம் இங்கு வேண்­டாம், அதை அவைக்­கு­றிப்­பில் இருந்து நீக்­கி­வி­டுங்­கள், ரப்­பரை வைத்து அழித்­து­வி­டுங்­கள் என்று ஏன் பயந்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உண்­மை­யில் மக்­க­ளின் நலன்­க­ளைப் பாது­காக்­க­வும், தமிழ்­நாட்­டின் உரி­மை­களை மீட்­க­வும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு வாக்­க­ளி­யுங்­கள். உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்­துச் சகோ­தரி சுகன்யா அவர்­க­ளைப் பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>