<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1216" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 01 2026 12:58:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261002T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02102026-TRY-05" position.sequence="05" ex-ref="02102026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.10.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">‘தூய சக்தி எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள்’ என்று சொன்­ன­வர்­கள் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="117">இன்று திருட்டு சக்­தி­யாக மாறி­யி­ருக்­கி­றார்­கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">மது­ராந்­த­கம் தொகுதி – மக­ளிர் சந்­திப்­பில் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி எம்.பி. பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup920290_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Kanimozhispeec_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மது­ராந்­த­கம்,அக்.2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மது­ராந்­த­கம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் இ.பரந்­தா­மன் அவர்­களை ஆத­ரித்து, நேற்று (30.09.2026) திமுக துணைப் பொதுச் செ­ய­லா­ளர் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி கருங்­கு­ழிப் பகு­தி­யில் மக­ளிர் சந்­திப்பு நிகழ்­வில் பேசி­னார். அப்­போது அவர், இந்த இடைத்­தேர்­தல் உண்­மை­யில் தேவை­யான ஒன்­று­தானா என்­பதை நாம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். சட்­ட­மன்­றத் தேர்­தல்நடந்து முடிந்­தது. தேர்­தல் முடிந்து ஒரு ஆட்சி பொறுப்­பிற்கு வந்­தி­ருக்­கி­றது; அது அவர்­க­ளுக்­கும் புரி­ய­வில்லை, நமக்­கும் இன்­னும் தெளி­வா­கப் புரி­ய­வில்லை. அதற்­குள்­ளா­கவே மற்­றொரு புதிய இடைத்­தேர்­தல் ஏன் நடக்­கி­றது. ஏனெ­னில், நாங்­கள் தூய சக்தி எங்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று சொன்ன ஒரு­வர், இன்று திருட்­டுச் சக்­தி­யாக மாறி­விட்­டார் என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மேலும் அவர் பேசு­கை­யில், அந்­தத் திருட்­டுச் சக்தி என்ன செய்­தது. எந்­தக் கட்­சியை முடிந்­து­போன சக்தி, தேவை­யற்ற சக்தி, தூரத்­தில் இருக்க வேண்­டிய சக்தி என்று விமர்­சித்­ததோ, அங்­கேயே சென்று இரண்டு பேரைக் கவர்ந்து இழுத்­துக்­கொண்டு வந்து இன்று இடைத்­தேர்­தலை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. தாரா­பு­ரத்­தி­லும், மது­ராந்­த­கத்­தி­லும் இடைத்­தேர்­தல் நடக்க வேண்­டிய ஒரு அவ­சி­யத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். இது­தானா ஒரு தூய சக்­தி­யின் வேலை. இது தூய சக்தி இந்த வேலையா செய்­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திருட்­டுச் சக்­தி­யால் இடைத்­தேர்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தவெக ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­து­விட்­டீர்­கள். திமுக கூட்­ட­ணி­யில் இருந்த கட்­சி­களை எல்­லாம் பிரித்து எடுத்­துச் சென்று ஆட்­சியை நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். எங்­க­ளு­டைய தலை­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யிலே நடந்த அந்த கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்டு யார் யாரெல்­லாம் திமு­க­வோடு நின்று வெற்றி பெற்­றார்­களோ, அவர்­களை எல்­லாம் கூட்­டிச் சென்று இன்று ஆட்­சியை நடத்­து­கி­றீர்­கள். அத்­து­டன் விட்­டி­ருக்­க­லாம். ஆனால், அந்­தத் திருட்­டுச் சக்தி வேட்­பா­ளர்­க­ளைத் திருடி, மக்­கள் பிர­தி­நி­தி­க­ளைத் திருடி இன்று இந்த இடைத்­தேர்­தலை நடத்த வேண்­டிய அவ­சி­யத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி மு.க.ஸ்டாலின், வழக்­க­றி­ஞர் பரந்­தா­மன் அவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து உங்­கள் கரங்­க­ளிலே ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். பரந்­தா­ம­னைப் பற்றி நான் உங்­க­ளுக்கு அதி­க­மா­கச் சொல்ல வேண்­டி­ய­தில்லை. ஏனெ­னில், எல்­லா­ரும் தொலைக்­காட்­சி­யைத் திறந்­தி­ருந்­தீர்­கள் என்­றால் பரந்­தா­ம­னைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். எப்­போ­தும் யாரா­வது ஒரு­வ­ரு­டன் தொலைக்­காட்­சி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­காக, கழ­கத்­தின் கொள்­கை­க­ளுக்­கா­கச் சண்டை போட்­டுக் கொண்­டி­ருப்­பார். உறு­தி­யோடு, தெளி­வோடு அங்கே பேசத் தெரிந்த ஒரு­வ­ரைத்­தான் நம்­மு­டைய அண்­ணன் உங்­க­ளி­டத்­திலே வேட்­பா­ள­ராக அறி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பரந்­தா­மன் தொலைக்­காட்­சி­யில் மட்­டும் சண்டை போட மாட்­டார்; சட்­ட­மன்­றத்­திற்­குச் சென்­றா­லும் மிகத் தெளி­வாக உங்­க­ளுக்­கா­கப் போரா­டக்­கூ­டிய ஒரு­வர். அத­னால், நம்­மு­டைய பரந்­தா­ம­னுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும், திமு­க­விற்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால், வாக்­க­ளித்த நபர் திமு­க­வி­லேயே தான் இருப்­பார். அதி­லும் பரந்­தா­மன் திமு­க­வைத் தாண்டி எந்­தப் பக்­க­மும் செல்­கிற ஆள் இல்லை. இவர்­கள் அழைத்­தார்­கள், அவர்­கள் அழைத்­தார்­கள், மது­ரை­யில் அழைத்­தார்­கள், கன்­னி­யா­கு­ம­ரி­யில் அழைத்­தார்­கள், பரந்­தூ­ரில் அழைத்­தார்­கள் என்று சொல்­லி­விட்டு எங்­கே­னும் ஓடு­கிற ஆள் இல்லை. அத­னால், தெளி­வா­கச் சிந்­தித்து நீங்­கள் அளிக்­கும் வாக்­கிற்கு ஒரு நியா­யம் கிடைக்க வேண்­டும் என்­றால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு, நம்­மு­டைய தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கக்­கூ­டிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தி.மு.க.வுக்கு வாக்­க­ளி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வாக்­க­ளித்­த­வர்­கள் ஓடி­விட்­டார்­கள் என்­ப­தற்­காக பரி­தா­பப்­பட்டு வாக்­க­ளித்­தால் இன்­னொரு முறை மீண்­டும் ஒரு இடைத்­தேர்­தல் வரும். அத­னால் அதி­மு­க­விற்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால், மறு­ப­டி­யும் இதே­தான் நடக்­கும். ஏனெ­னில், திமு­க­வில் இங்கே மேடை­யில் இருக்­கக்­கூ­டிய அண்­ணன் வேலு சந்­திக்­காத வழக்­கு­கள் இல்லை. அடிக்­கடி அவர் வீட்­டிற்கு வரு­மான வரி சோத­னை­யிட வரு­ப­வர்­கள் காபி சாப்­பிடு செல்­வது போல சோத­னை­க­ளுக்கு வந்­து­வி­டு­கி­றார்­கள். வாயைத் திறந்து பேசி­னாலே வழக்கு. எதிர்க்­கட்­சித் தலை­வர் மீது வழக்கு, அவ­ரைக் கைது செய்­கி­றார்­கள். சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைக் கைது செய்து கொண்டு சென்று இரண்டு வாரங்­கள் சிறை­யில் வைக்­கி­றார்­கள். சிறு­வர்­கள் யாரா­வது சமூக வலை­த­ளங்­க­ளில் கருத்­துப் பதி­விட்­டால், அவர்­க­ளைப் பிடித்­துச் சென்று சிறை­யில் அடைத்­துத் துன்­பு­றுத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இத்­த­னை­யும் தாண்டி திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திலே ஒரு­வர் கூட தடம் மாறச் சிந்­திக்­கக்­கூட இல்லை. அது­தான் தலை­வர் கலை­ஞர் வளர்த்த இயக்­கம், பேர­றி­ஞர் அண்ணா தொடங்­கிய இயக்­கம், இன்று நம்­மு­டைய தலை­வர் அண்­ணன் மு.க.ஸ்டாலின் பாது­காத்து வைத்­தி­ருக்­கக்­கூ­டிய இயக்­கம். அத­னால் உறு­தி­யோடு இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு வாக்­க­ளி­யுங்­கள். உங்­க­ளு­டைய வாக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தைத் தவிர வேறு எந்­தப் பக்­க­மும் சென்­று­வி­டக் கூடாது என்­ப­தில் தெளி­வாக நீங்­கள் இருக்க வேண்­டும் என்று உங்­கள் எல்­லோ­ரை­யும்நான் வேண்­டிக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் முத­ல­மைச்­சரை அதி­க­மாக விமர்­சிக்க முடி­யாது. ஏனெ­னில், அவர் நமக்கு சொந்­த­மா­கி­விட்­டார். ஏனெ­னில், அவர் எங்­க­ளு­டைய அண்­ணனை மை டியர் அங்­கிள் என்று அன்­பாக அழைக்­கி­றார். அத­னால் நானும் அவரை அன்­புத் தம்பி விஜய் என்று அழைக்­க­லாம் என்று இருக்­கி­றேன். இல்­லை­யென்­றால் அவ­ருக்­குப் புரி­கிற பாஷை­யில் ப்ரோ, ஸ்வீட் ப்ரோ என்று அழைக்­க­லாம் என இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தேர்­த­லுக்கு முன்­னாடி ஸ்வீட் ப்ரோ என்ன செய்­தார். உங்­க­ளி­டம் மட்­டும் வாக்கு கேட்­க­வில்லை; உங்­கள் வீட்­டில் இருக்­கிற குழந்­தை­க­ளி­ட­மும் வாக்கு கேட்­டார். வீட்­டில் இருக்­கக்­கூ­டிய குழந்­தை­க­ளி­டம் யாரும் வாக்கு கேட்­கக் கூடாது. வீட்­டில் போய் அடம் பிடி­யுங்­கள், சாக்­லேட்­டிற்கு அடம் பிடிக்­கி­றீர்­களா, விளை­யாட்டு சாமான்­க­ளுக்கு அடம் பிடிப்­பதை போல பெரி­ய­வர்­க­ளி­டம் அடம் பிடித்து விஜய் மாமா­விற்கு ஓட்டு போடச் சொல்­லுங்­கள் என்று சொல்லி குழந்­தை­க­ளைத் தூண்­டி­விட்­டார். அதற்­குக் வழக்கு நடக்­கி­ற­தது. வழக்­க­றி­ஞ­ரி­டம் என்ன சந்­தே­கம் இருந்­தா­லும் நீங்­க­ளும் கேட்­டுக்­கொள்­ள­லாம், அவர் இங்­கே­யே­தான் இருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­படி குழந்­தை­க­ளைத் தூண்­டி­விட்டு எனக்கு வாக்­க­ளி­யுங்­கள் என்று சொல்­லி­விட்டு, அந்த குழந்­தை­க­ளைப் பற்றி எந்த அக்­க­றை­யும் அவ­ருக்கு கிடை­யாது. மது­ராந்­த­கத்­திற்கு முத­ல­மைச்­சர் வரு­கி­றார் என்­றால் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் எல்­லாம் செய்ய வேண்­டும், நாங்­கள் தவ­றென்று சொல்­ல­வில்லை. ஆனால், பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­த­வர்­கள் அங்கே நடந்த அநி­யா­யங்­களை மூடி மறைக்க நினைத்­த­து­தான் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கொடூ­ர­மான ஆட்சி நடக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கடந்த 25ஆம் தேதி மது­ராந்­த­கத்­திற்கு வரு­கி­றார், வண்­ட­லூர் அருகே பத்­தாம் வகுப்பு படிக்­கும் ஒரு குழந்தை. பள்­ளிக்­கூ­டத்­தில் அந்­தக் குழந்­தை­யைத் தூக்­கிச் சென்று மயக்க மருந்து கொடுத்­துப் பாலி­யல் துன்­பு­றுத்­தல் நடை­பெ­று­கி­றது. முத­ல­மைச்­சர் வரும் வழி­யில் ஒரு அசம்­பா­வி­தம் நடந்­து­விட்­டது என்று வெளியே தெரி­யக் கூடாது என்­ப­தற்­காக, அந்த குழந்­தை­யின் மீதே பழி போடு­கி­றார்­கள். அந்த குழந்தை பத்­தாம் வகுப்பு கணக்­குத் தேர்­வுக்­குப் பயந்­து­கொண்டு பொய் சொல்­கி­றது என்று சொல்­லக்­கூ­டிய ஒரு கொடூ­ர­மான ஆட்­சி­தான் இங்கே நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மறு­நா­ளான 26ஆம் தேதி இன்­னொரு குழந்­தை­யைக் கடத்­திச் சென்று பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கு­கி­றார்­கள். இது­வ­ரைக்­கும் அந்த வழக்­கில் என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்று அதி­கா­ரி­கள் நமக்­குச் சொல்­லவே இல்லை. முத­ல­மைச்­சர் வார்த்­தைக்கு வார்த்தை நண்­பாஸ், நண்­பீஸ் என்று சொன்­னாரே, அந்த நண்­பீ­ஸுக்கு அநீதி இழைக்­கப்­ப­டும்­போது ஒரு வார்த்தை கூட அவர் சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், இன்று காலை முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அந்­தத் தாய்க்­குத் தொலை­பேசி மூல­மாக உங்­க­ளுக்கு என்ன வேண்­டும் என்­றா­லும் நான் செய்து தரு­கி­றேன், தைரி­ய­மாக இருங்­கள், நான் உங்­க­ளோடு இருக்­கி­றேன் என்று  ஆறு­தல் கூறி­னார். ஆட்­சி­யில் இருந்­தா­லும், இல்­லா­விட்­டா­லும் மக்­க­ளுக்­கா­கச் சிந்­திக்­கக்­கூ­டிய, அவர்­க­ளு­டைய வலி­க­ளைத் தன் மன­தில் ஏந்­தக்­கூ­டிய ஒரே தலை­வன் எங்­க­ளு­டைய தலை­வர் அண்­ணன் மு.க.ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், அந்­தப் பிள்­ளை­க­ளி­டம் வாக்கு கேட்ட நம்­மு­டைய விஜய் ப்ரோ எங்கே போனார் என்று யாருக்­கும் தெரி­ய­வில்லை. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு பெண்­கள் எல்­லாம் சாலை­யில் நடக்க முடி­ய­வில்லை, பெண்­க­ளுக்­குப் பாது­காப்பே இல்லை என்று கூறி­னார்.. ஆனால், தேசிய குற்ற ஆவ­ணக் காப்­ப­கம் (NCRB) தக­வ­லின்­படி தமிழ்­நாடு தான் விஜய் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு பெண்­கள் வாழ்­வ­தற்­குப் பாது­காப்­பான ஒரு மாநி­லம் என்று சொல்­லு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பெண்­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை, குழந்­தை­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை, யாருக்­கும் கவ­லை­யில்லை, ஆட்சி மாற்­றம் வர வேண்­டும், நான் வந்­தால் குற்­றம் நடந்­தா­லும் மேலி­ருந்து குதித்து வந்து காப்­பாற்­றி­வி­டு­வேன் என்­றார். அதனை நம்பி நிறைய சகோ­த­ரி­கள் வாக்­கும் போட்­டார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், இன்று ஆட்­சிக்கு வந்து நான்கு மாதங்­க­ளில் 500க்கும் மேற்­பட்ட குற்­றச் சம்­ப­வங்­கள், 300க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் உட்­பட பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், 200க்கும் மேற்­பட்ட கொலை­கள், 8 லாக் அப் மர­ணங்­கள், 10 ஆண­வக் கொலை­கள் என இது­தான் இந்த தவெக ஆட்­சி­யி­னு­டைய சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், இந்­தக் கணக்கு நான் சொன்ன கணக்கு நேற்­றைய கணக்கு. இன்று ஒரே நாளில் ஒன்­பது குற்­றங்­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன.  ஒரே நாளில் ஒன்­பது குற்­றங்­கள்; காலை­யி­லி­ருந்து மாலை வரை ஒன்­பது குற்­றங்­கள். கடை­சி­யான குற்­றம், புழல் ஏரி அரு­கில் மூன்று இளை­ஞர்­கள் மது குடித்­து­விட்­டுச் சண்டை போட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். யாரைக் கூப்­பி­டு­வது, யாரைக் கூப்­பி­டக்­கூ­டாது என்று சொல்­லிச் சண்டை போட்டு ஒரு பையனை வெட்­டிக் கொலை செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விலை­வாசி உயர்­வில் சாதனை படைத்­துள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த ஆட்­சி­யில் ஒரே ஒரு சாத­னை­தான் செய்­தார்­கள் என்ற பெருமை இவர்­க­ளுக்கு இருக்­கி­றது. நம்­மு­டைய தலை­வர் சொல்­வது போல, மின்­வெட்­டிற்­கும் அரு­வாள் வெட்­டிற்­கும் தான் போட்டி.  இன்­னொரு சாதனை என்­ன­வென்­றால், தேசிய சரா­ச­ரியை விட எப்­போ­துமே தமிழ்­நாடு உயர்­வாக இருக்­கும். எல்­லா­வற்­றி­லும் கல்­வி­யாக இருந்­தால் முத­லில் இருக்­கும்; அல்­லது சுகா­தா­ர­மாக இருந்­தால் அதில் முன்­னி­லை­யில் இருக்­கும்; பெண்­கள் பாது­காப்பு என்­றால் முன்­ன­ணி­யில் இருக்­கும்; தொழில் முத­லீ­டு­கள் வரு­வ­தில், வளர்ச்­சி­யில் முத­லில் இருக்­கும்; பெண்­கள் வேலைக்­குச் செல்­லக்­கூ­டிய வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தில் தமிழ்­நா­டு­தான் முத­லில் இருக்­கும். ஆனால் இப்­போது இல்லை,  நம்­மு­டைய ஆட்­சி­யில் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், இன்று தேசிய சரா­ச­ரியை விட தமிழ்­நாடு அதி­க­மாக இருப்­பது ஒரே ஒரு விஷ­யத்­தில்­தான். அது விலை­வாசி உயர்வு, தேசிய சரா­சரி 4.4%. தமிழ்­நாட்­டின் சரா­சரி 5.44% ஆக உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் இதை உங்­க­ளுக்கு அதி­க­மாக எடுத்­துச் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் கூடக் கிடை­யாது. ஏனெ­னில், பொன்னி அரிசி 50 ரூபாய்க்கு விற்­றது, இப்­போது 85 ரூபா­யி­லி­ருந்து 90 ரூபாய்க்கு விற்­கி­றது. இட்லி அரிசி 43 ரூபாய்க்கு விற்­றது இப்­போது 71 ரூபாய். சூரி­ய­காந்தி எண்­ணெய் ஒரு லிட்­டர்  115 ரூபாய் இருந்­தது, இப்­போது 80 ரூபாய் அதி­க­மாகி கிட்­டத்­தட்ட 195 ரூபாய். சர்க்­கரை 44 ரூபாய் இருந்­தது, இப்­போது 65 ரூபாய். வெங்­கா­யம் கிலோ 35 ரூபா­யி­லி­ருந்து இப்­போது கிலோ 60 ரூபாய். தக்­காளி 18லிருந்து மிக­வும் வேக­மா­கச் சென்று 40, 50, இன்று 60 ரூபாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விஜய் ஆட்­சி­யில் உளுத்­தம் பருப்பு 120லிருந்து 150. கட­லைப்­ப­ருப்பு 80லிருந்து 100. தனியா 160லிருந்து 250. இப்­ப­டிச் சொல்­லிக்­கொண்டே போனால் போய்க்­கொண்டே இருக்­க­லாம். இந்த விலை­வா­சி­தான் அவ­ரு­டைய ஆட்­சி­யில் செய்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரே சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதை­வி­டப் பெரிய சாதனை என்­ன­வென்­றால், உங்­க­ளுக்­கெல்­லாம் 100 யூனிட் இல­வச மின்­சா­ரம் என்­றார்­கள். இப்­போது மின்­சா­ரமே இல்லை, அப்­பு­றம் எங்கே இல­வச மின்­சா­ரம் கொடுப்­பது. மின்­சா­ரமே இல்­லா­மல், முத­லில் 500 ரூபாய் வந்த மின்­கட்­ட­ணம் இப்­போது 5000 ரூபாய், 6000 ரூபாய் வரு­கி­றது. மின்­சா­ர­மும் இல்லை, நான்கு மணி நேரம் மின்­வெட்டு என்­பது சாதா­ரண விஷ­ய­மாக மாறி­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால் ஒன்றே ஒன்று நினை­வில் வைத்­துக்­கொள்­ளுங்­கள். அமைச்­சர் சொல்­லி­யி­ருக்­கி­றார், பஞ்­சாப்­பில் 15 மணி நேரம் மின்­வெட்டு. அத­னால் தமிழ்­நாடே கிட்­டத்­தட்ட 15 மணி நேரம் மின்­வெட்டு, இல்­லை­யென்­றால் அந்த சாத­னையை முறி­ய­டிக்க வேண்­டும் என்­ப­தற்­காக 20 மணி நேரம் மின்­வெட்டு வந்­தா­லும் வரும். அத­னால் தாய்­மார்­கள் தய­வு­செய்து பத்­தி­ர­மாக இருங்­கள். இல­வ­ச­மாக மின்­சா­ரம் தரு­கி­றோம் என்­ற­வர்­கள் இன்று மின்­கட்­ட­ணத்­தை­தான் அதி­க­ரித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">100 நாள் வேலை பாதி­யாக குறைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால் வரு­மா­னம் இருக்­கி­றதா என்­றால் கிடை­யாது. 100 நாள் வேலை யாருக்­கா­வது கிடைக்­கி­றதா. பெரிய அள­வில் நான் மக்­க­ளுக்­கா­கப் போரா­டு­வேன், நான் சினி­மா­வில் போரா­டி­யது போலப் போரா­டு­வேன் என்­றெல்­லாம் சொல்­லி­விட்டு ஆட்­சிப் பொறுப்­புக்கு ப்ரோ விஜய் வந்­தார். டெல்­லி­யில் கொண்­டு­வந்த மசோ­தாவை நாங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்று நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர் இருக்­கக்­கூ­டிய அரங்­கத்­திலே, அமித்ஷா இருக்­கக்­கூ­டிய இடத்­திலே தெளி­வாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எதிர்த்­துப் போரா­டி­யது. நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் தள­பதி இதை நாங்­கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம் என்று தீர்­மா­னம் போட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், நீங்­கள் என்ன செய்­தீர்­கள். வாயை மூடிக்­கொண்டு பாஜக அர­சாங்­கம், மோடி என்ன மசோ­தா­வைக் கொண்டு வந்­தாரோ, என்ன சட்­டத்­தைக் கொண்டு வந்­தாரோ அதை ஏற்­றுக்­கொண்டு, இன்று தமிழ்­நாட்­டிற்­குக் கிடைத்­துக் கொண்­டி­ருந்த 100 நாள் வேலை­யில் பாதியை குறைத்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதனை டெல்­லி­யில் இருக்­கக்­கூ­டிய கணக்­கு­களை, தர­வு­களை எடுத்­துப் பார்த்து அதன் ஆதா­ரத்­தில்­தான் சொல்­கி­றேன்; இது­வ­ரைக்­குமே இந்த ஆண்­டி­லேயே 50% தமிழ்­நாட்­டிற்கு வர வேண்­டிய வேலை குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. சம்­ப­ள­மும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதை­விட சுறா என்று ஒரு திரைப்­ப­டத்­தில் விஜய் நடித்­தார். அனை­வ­ரும் அவரை மீன­வர், மீன­வர்­க­ளின் நண்­பர், மீன­வர்­க­ளுக்­கா­கப் போரா­டு­வார் என்­றார்­கள். இப்­போது பட்­டி­னப்­பாக்­கத்­தில் மீன­வர்­கள் குடி­யி­ருக்­கக்­கூ­டிய இடத்­தில் சென்று புதிய சட்­ட­மன்­றத்­தைக் கட்­டு­கி­றா­ராம். அங்கே இருக்­கக்­கூ­டிய மீன­வர்­கள் சொல்­கி­றார்­கள், குழந்­தை­கள் சொன்­னார்­கள் என்று நம்பி இவ­ருக்கு வாக்­க­ளித்­தோம்; இன்று இப்­படி நாங்­கள் அவ­திப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம். இந்த ஆட்சி எங்­க­ளைக் கொன்று புதைத்­தால் கூட பர­வா­யில்லை, நாங்­கள் இங்­கி­ருந்து நகர மாட்­டோம் என்று போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது­தான் ஒடுக்­கப்­பட்ட, பொரு­ளா­தா­ரத்­தில் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்கு இந்த அரசு செய்­யக்­கூ­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பரந்­தூ­ரில் விமான நிலை­யம் வேண்­டாம், விவ­சா­யி­க­ளுக்­காக நாங்­கள் அதை விட்­டு­வி­டு­கி­றோம் என்­றார்­கள். இப்­போது விமான நிலை­யத்தை எங்கே கொண்­டு­வ­ரப் போகி­றார்­கள் தெரி­யுமா, செய்­யூர். இங்கே இருக்­கக்­கூ­டிய விவ­சா­யி­கள் விவ­சா­யி­கள் இல்­லையா. நீங்­கள் பாதிக்­கப்­பட மாட்­டீர்­களா, இங்கே இருக்­கக்­கூ­டிய விவ­சாய நிலங்­கள் பாழா­காதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­க­ளுக்கு செய்­வ­த­னால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கஜானா காலி­யாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">விவ­சா­யக் கட­னைத் தள்­ளு­படி செய்­கி­றேன் என்­றார். அதற்­குப் பிறகு விவ­சா­யக் கடன் தள்­ளு­படி செய்­யப்­பட்­டதா என்­றால் கிடை­யாது. அதே­போல 2500 ரூபாய் இங்கே இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­க­ளுக்­குத் தரு­கி­றேன் என்­றார். எங்­க­ளு­டைய தலை­வர் சொன்­ன­படி 1000 ரூபா­யைத் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் தந்­தார்.ஆனால் 2500 ரூபா­யைப் பற்­றிப் பேச்சு மூச்சே இல்லை. 4000 ரூபாய் வேலை­யில்­லாத பட்­ட­தா­ரி­க­ளுக்கு என்­றார். தனுஷ் தான் அர­சி­ய­லுக்கு வந்­தி­ருக்­கி­றாரே தவிர, வேலை­யில்­லாத பட்­ட­தா­ரிக்கு 4000 ரூபாய் பணம் இன்­னும் வர­வில்லை. கரும்­பிற்கு 4500 ரூபாய் கொடுக்­கி­றேன் என்­றார், அது­வும் வர­வில்லை. நெல்­லிற்கு விலையை உயர்த்­தித் தரு­கி­றோம் என்­றார்­கள், 150 ரூபாய் உயர்த்­தி­விட்டு அதோடு விட்­டு­விட்­டார்­கள். இப்­படி யாருக்­குமே கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றா­மல், ஏன் என்று கேட்­டால் பணம் இல்லை, கஜானா காலி என்­கி­றார்­கள். மக்­க­ளுக்­குக் கொடுக்க வேண்­டிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்­குக் கஜானா காலி. ஆனால், 1200 கோடி­யில் பட்­டி­னப்­பாக்­கத்­தில் மீன­வர்­க­ளு­டைய வாழ்க்­கையை நிர்­மூ­ல­மாக்­கி­விட்டு கட்ட வேண்­டும் என்று துடிக்­கக்­கூ­டிய அந்த கட்­டி­டத்­தைக் கட்­டு­வ­தற்கு மட்­டும் 1200 கோடி ரூபாய் இருக்­கி­றது. புதிய தலை­மைச் செய­ல­கம் கட்­டப்­போ­கி­றீர்­களே, எதற்கு. ஏற்­க­னவே 7 கோடி ரூபாய்க்கு உங்­க­ளு­டைய ஜோசி­யக்­கா­ரர் சொன்­னார் என்று செய்த பணி­கள் என்ன ஆயிற்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">உங்­கள் நண்­ப­ரு­டைய ரேஸ் கார் பந்­த­யத்­தைப் பார்க்க வேண்­டும் என்று இங்­கி­ருந்து எல்­லா­ரை­யும் கூட்­டிச் சென்று லண்­ட­னுக்­குப் போகி­றீர்­கள். ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு ஊரா­வுட்டு வீட்டு நெய்­யில் இனிப்பு செய்­யா­தீர்­கள் என்­றார். இப்­போது நீங்­கள் என்ன காரா­பூந்­தியா செய்­து­கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தந்தை பெரி­யார் மான­முள்ள ஆயி­ரம் பேரி­டம் சண்டை போட­லாம், மானத்­தைப் பற்றி கவ­லைப்­ப­டாத ஒரு ஆளி­டம் கூட சண்டை போட முடி­யாது என்று கூறு­வார். அந்த அர­சாங்­கத்­தில் இப்­போது அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்­கள் எல்­லாம் இருக்­கி­றார்­கள். அர­சாணை என்­பது அர­சாங்­கம் ஒரு ஆணையை வெளி­யி­டு­கி­றது என்­றால், எல்­லா­வற்­றை­யும் யோசித்­து­விட்டு, முத­ல­மைச்­ச­ரி­டம் ஆலோ­சனை செய்து, எல்­ஒரு அர­சனை வரு­வது முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யுமா, இல்­லையா? அவ­ருக்கு தெரி­யா­மல் அர­சாணை வராது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆனால், இந்த அர­சாங்­கத்­தில் எத்­தனை அர­சா­ணை­கள் திரும்­பப் பெறப்­பட்­டி­ருக்­கின்­றன என்று யோசித்­துப் பாருங்­கள். ஜோதி­டர்­தான் பட்­டி­னப்­பாக்­கத்­தில் கட­லைப் பார்த்து நீங்­கள் ஒரு கட்­டி­டம் கட்டி அங்கே அமர்ந்­தீர்­கள் என்­றால் நாட்­டின் பிர­த­மர் ஆகி­வி­ட­லாம் என்று அறி­வுரை வழங்­கி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வாபஸ்வாங்­கும் அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த ஜோசி­யக்­கா­ரர் பெயர் ரிக்கி ரத்­தன் பண்­டிட். அவ­ருக்கு முத­ல­மைச்­ச­ரின் அர­சி­யல் பிரி­வில் சிறப்பு அதி­கா­ரி­யாக நிய­மிப்­ப­தற்கு அர­சாணை வெளி­யி­டப்­பட்­டது. எல்­லா­ரும் கடு­மை­யாக விமர்­சித்­தார்­கள் என்­ற­வு­டன் அதைத் திரும்­பப் பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­பு­றம் மாண­வர்­கள் போராட்­டத்­தில் பங்­கேற்­கக் கூடாது என்று ஒரு அர­சாணை வெளி­யாகி எல்­லா­ரும் அதை எதிர்த்­துப் போரா­டி­ய­தால் அதைத் திரும்­பப் பெற்­றார்­கள். இட­து­சா­ரி­கள் தய­வில்­தான் நீங்­கள் ஆட்­சியே நடத்­து­கி­றீர்­கள்; அவர்­க­ளைப் பற்­றிக் கணக்­கெ­டுப்­ப­தற்கு ஒரு அர­சாணை, அப்­பு­றம் அதைத் திரும்­பப் பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">காலை உண­வுத் திட்­டத்தை நான் போடு­கி­றேன், நான் போடு­கி­றேன் என்­றார். எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் கொண்­டு­வந்­த­து­தான் காலை உண­வுத் திட்­டம். அதை விரி­வாக்­கம் செய்­கி­றேன் என்று சொல்­லி­விட்டு, பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் அதற்­குப் பணம் கொடுக்க வேண்­டு­மாம். அப்­பு­றம் எதற்கு அர­சாங்­கம், அதற்கு ஒரு அர­சாணை; அப்­பு­றம் அது ஒரு பெரிய பிரச்­சி­னை­யா­ன­வு­டன் அதைத் திரும்­பப் பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே­போல் தூய்­மைப் பணி­யா­ளர்­களை 12 மாந­க­ராட்­சி­க­ளில் தனி­யா­ருக்­குக் கொடுக்­கி­றேன் என்று சொன்­ன­தில் போராட்­டம் வெடித்து அதைத் திரும்­பப் பெற்­றார்­கள். சென்­னை­யில் சொத்து வரி உயர்வு என்று சொல்லி அர­சாணை வெளி­யிட்டு, அது திரும்­பப் பெறப்­பட்­டது. செய்­யாறு அருகே தொழிற்­பூங்கா விரி­வாக்­கத்­திற்­காக அறிக்கை வெளி­யி­டப்­பட்டு, அது திரும்­பப் பெறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­பு­றம் இந்த அர­சாங்­கத்­தில் பொதுத்­து­றை­யில் யாருமே கேள்வி கூட கேட்­கக் கூடாது என்று சொல்லி, தக­வல் அறி­யும் உரி­மைச் சட்ட (RTI) உரி­மை­யைப் பறிக்­கக்­கூ­டிய ஒரு அர­சாணை போடு­கி­றார்­கள். அதற்கு எதிர்ப்பு வந்­த­வு­டன் அதைத் திரும்­பப் பெறு­கி­றார்­கள். இப்­போது புதிய தலை­மைச் செய­லக ஆணை­யைத் திரும்­பப் பெறு­வதா இல்­லையா என்று யோசித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நேற்று சன் டிவி­யில் ஒரு விவாத மேடை நடக்­கி­றது. அதில் பட்­டி­னப்­பாக்­கத்­தில் அந்த மீன­வர்­க­ளுக்கு எதி­ராக ஒரு அர­சாணை வெளி­யிட்டு இருக்­கி­றீர்­களே, இது நியா­யமா என்று கேட்­கி­றார்­கள். அதற்கு தவெ­கவை சார்ந்­த­வர் சொல்­கி­றார், நாங்­கள் ஒன்­றுமே செய்­ய­வில்­லையே, அர­சா­ணை­தானே வெளி­யிட்டு இருக்­கி­றோம், அதைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­டால் சரி­யாக போகி­றது என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதை கேட்டு எல்­லா­ரும் சிரித்­து­விட்­டார்­கள். அர­சாணை என்­றால் சாதா­ரண விஷ­யம் இல்லை. அதற்கு அவர், நிறைய அர­சா­ணை­களை நாங்­கள் திரும்­பப் பெற்­றி­ருக்­கி­றோம், அத­னால் இது ஒன்­றும் பெரிய விஷ­யம் இல்லை, அர­சா­ணை­தானே, திரும்­பப் பெற்­றுக்­கொள்­கி­றோம், அதைப்­பற்றி ஒன்­றும் பிரச்­சி­னை­யில்லை என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அப்­போ­து­தான் எனக்கு நினை­வுக்கு வந்­தது, மான­முள்ள ஆயி­ரம் பேரி­டம் சண்டை போட­லாம், மானத்­தைப் பற்றி கவ­லைப்­ப­டாத ஒரு­வ­னு­டன் கூட நம்­மால் சண்டை போட முடி­யாது. அது­தான் இன்று ஆட்­சிப் பொறுப்­பில் இருக்­கக்­கூ­டிய தவெக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மக்­க­ளோடு இருக்­கும் இலட்­ச­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்­குக் கூட முத­ல­மைச்­சர் அன்­புத் தம்பி விஜய் அவர்­கள் பேசும்­போது, அண்ணா மக்­க­ளி­டம் செல்­லுங்­கள், மக்­க­ளோடு இருங்­கள் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். நாங்­கள் மக்­க­ளோ­டு­தான் இருக்­கி­றோம். நீங்­கள்­தான் மக்­க­ளோடு வர முடி­யாத ஒரு தூரத்­தில், மக்­கள் சந்­திக்­கவே முடி­யாத ஒரு இடத்­தில் அமர்ந்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மக்­க­ளோடு இருக்­கக்­கூ­டிய ஒரு­வர், 41 பேர் இறந்­து­போன போது ஓடி ஒளிந்­தி­ருக்க மாட்­டார். எங்­க­ளு­டைய தலை­வ­ரைப் போல நடு­இ­ர­வாக இருந்­தா­லும் ஓடிப்­போய் அந்த 41 குடும்­பங்­க­ளுக்­கும் ஆறு­தல் சொல்ல ஓடி­யி­ருப்­பீர்­கள். நீங்­கள் மக்­க­ளோடு இருந்த லட்­ச­ணத்தை இப்­போது மது­ரை­யில் கூடப் பார்த்­தோம். ஒரு வரு­டம்­தான் ஆகி­றது, அந்த ஒரு வரு­டத்­தில் கூட அந்த இறந்­த­வர்­க­ளின் வலி ஆறு­வ­தற்கு முன்­னால், மறு­ப­டி­யும் நீங்­கள் கூட்டி வைத்த கூட்­டத்­தில் குழந்­தை­கள் உட்­பட 15 பேர் மறு­ப­டி­யும் மருத்­து­வ­ம­னை­யில் போய் சேர வேண்­டிய ஒரு நிலை. அதைப்­பற்றி எந்­த­வி­த­மான ஒரு வருத்­த­மும் கிடை­யாது; தான் செய்­தி­ருக்­கக்­கூ­டிய தவ­றினை நினைத்து ஒரு மன்­னிப்பு கேட்­கக் கூட மன­மில்­லாத ஒரு­வர், மக்­க­ளைப் பற்றி, மக்­க­ளோடு இருப்­ப­தைப் பற்­றிப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திரைப்­ப­டங்­க­ளில் வேண்­டு­மா­னால் ஓடோடி வந்து காப்­பாற்­றக்­கூ­டிய கதா­நா­ய­க­னாக  இருக்­க­லாம். உண்­மை­யி­லேயே இன்று கொஞ்­சம் கொஞ்­ச­மாக அவ­ரு­டைய உண்­மை­யான வேஷம் வெளியே வந்து கொண்­டி­ருக்­கி­றது. இங்கே இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­கள் அதை உணர்ந்­து­கொண்டு, உங்­க­ளோடு நிற்­கக்­கூ­டி­ய­வர்­கள், உங்­க­ளுக்­காக உழைக்­கக்­கூ­டி­ய­வர்­கள், தமி­ழுக்­காக உழைக் ­கக்­கூ­டி­ய­வர்­களை தேர்வு செய்­யுங்­கள். இந்த ஆட்­சி­யில் தமிழ்த்­தாய் வாழ்த்தே மூன்­றா­வது இடத்­திற்­குப் போய்­விட்­டது, எதிர்த்­துக் கேட்­ப­தற்­குத் துப்­பில்லை, தைரி­யம் இல்லை. இவர்­களை எல்­லாம் தூக்கி எறிந்­து­விட்டு, நம்­மு­டைய பரந்­தா­மன் அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­திலே வாக்­க­ளித்து, இந்த ஆட்­சியைமுடி­வுக்­குக் கொண்டு வரு­வ­தற்கு நீங்­கள் ஒரு வழி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>