<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,934" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 04 2026 19:58:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261005T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05102026-CBE-02" position.sequence="02" ex-ref="05102026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> கோவை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.10.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">நம்பி வாக்களித்த மக்களுக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் செய்ததெல்லாம் துரோகம் மட்டும்தான்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">காங்கிரஸ் கட்சிக்கு டெப்பாசிட் கூட கிடைக்கக் கூடாது;   புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்துபோன அத்தியாயம்!   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பரப்புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865282_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865226_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup865155_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="thlaaivarvideo_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">புதுச்­சேரி, அக்.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">புதுவை மாநி­லம், தட்­டாஞ்­சா­வடி சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் கழக வேட்­பா­ளர் சேது செல்­வம் அவர்­களை ஆத­ரித்து, கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் காணொலி வாயி­லாக மேற்­கொண்ட பரப்­பு­ரை­யின் விவ­ரம் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அன்­பார்ந்த தட்­டாஞ்­சா­வடி சட்­ட­மன்­றத் தொகுதி வாக்­காள பெரு­மக்­க­ளுக்கு என் இனிய வணக்­கம். உங்­களை எல்­லாம் இந்­தக் காணொலி வாயி­லா­கச் சந்­திப்­ப­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன். தமிழ்­நாட்­டைப் போலவே புதுச்­சே­ரி­யி­லும் மக்­க­ளின் நலத்­துக்­கும் வளத்­துக்­கும் – பல்­லாண்டு கால­மா­கப் பங்­காற்­றிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பது புதுவை மக்­க­ளா­கிய உங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரி­யும். 1979-ஆம் ஆண்டு புதுச்­சே­ரி­யின் தனித்­தன்­மையை காக்க, பாண்­டு­ரங்­கன் என்ற கழ­கத் தோழ­ரையே இழந்து, புது­வைக்கு வந்த சோத­னையை தடுத்து நிறுத்­தி­யது தி.மு.க. கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே துணை­நிலை ஆளு­நர்­கள் மூல­மாக, ஆபத்து வந்­த­போ­தும் இந்த மாநி­லத்­துக்­கா­கப் போரா­டிய இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கழக அர­சின் காலத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வெல்­லும் சாத­னை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">புதுச்­சே­ரி­யில் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி நடந்­த­போ­தெல்­லாம், புதிய புதிய திட்­டங்­களை இந்த மாநி­லத்­துக்கு நிறை­வேற்றி இருக்­கோம். சொன்­ன­தைச் செய்­வோம், செய்­வ­தைச் சொல்­வோம் என்ற தலை­வர் கலை­ஞ­ரின் வாக்­குப்­படி, புதுச்­சே­ரி­யின் வளர்ச்­சிக்­கா­கப் பாடு­பட்டு இருக்­கி­றோம். தாலிக்கு தங்­கம் திட்­டம், சத்­து­ண­வில் முட்டை திட்­டம், இதோ, உங்­கள் கண்­ணெ­திரே சிறப்­பா­கச் செயல்­பட்டு வரும் லாஸ்­பேட்டை உழ­வர்­சந்தை போன்­றவை, கழக அர­சின் காலத்தை வெல்­லும் சாத­னை­கள். இதை எல்­லாம் மன­தில் வைத்து, நீங்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். தட்­டாஞ்­சா­வடி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளா­கிய நீங்­கள் எதிர்­கொண்­டி­ருக்­கும் இந்த இடைத்­தேர்­தல், இயற்­கை­யாக நடக்­கும் தேர்­தல் கிடை­யாது. இது, உங்­கள் மேல் திணிக்­கப்­பட்ட தேர்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­சர் ரங்­க­சாமி அவர்­கள், கடந்த பொதுத்­தேர்­த­லில் இரண்டு தொகு­தி­க­ளில் நின்­றார். வெற்­றி­யும் பெற்­றார். சட்­டப்­படி, ஒரு தொகு­தி­யில் பத­வியை ராஜி­னாமா செய்ய வேண்­டும் என்ற நிலை­யில், தட்­டாஞ்­சா­வடி தொகு­தி­யைக் கைவிட்­டு­விட்­டார். அதா­வது, அவரை நம்பி வாக்­க­ளித்த உங்­க­ளைக் கைக­ழுவி விட்­டார். அத­னால், இந்த முறை நீங்­க­ளும் அவரை கைவிட்டு விடுங்­கள். இந்த இடைத்­தேர்­த­லில் என்.ஆர் காங்­கி­ரஸ் – பா.ஜ.க. கூட்­டணி வேட்­பா­ள­ராக ஒரு­வரை முதல்­வர் ரங்­க­சாமி நிறுத்­தி­யி­ருக்­கி­றார். அவர் யார் என என்­னை­விட உங்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஊழல் சாம்­ராஜ்­ஜி­யம் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சாராய சாம்­ராஜ்­ஜி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடந்த தேர்­த­லில், அந்த நபர் போட்­டி­யிட நீதி­மன்­றம் ஏன் தடை விதித்­தது என்­றும் உங்­க­ளுக்­குத் தெரி­யும். அப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ரைத்­தான் முதல்­வர் ரங்­க­சாமி வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யி­ருக்­கி­றார். மறு­பு­றம், காங்­கி­ரஸ் கட்­சி­யும் அவர்­கள் பங்­குக்கு ஒரு வேட்­பா­ளரை நிறுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். என்.ஆர். காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் ஊழல் சாம்­ராஜ்­ஜி­யத்­துக்கு சொந்­தக்­கா­ரர் என்­றால், இந்த காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் சாராய சாம்­ராஜ்­ஜி­யத்­திற்கு சொந்­தக்­கா­ர­ராக இருக்­கி­றார் எனப் புது­வை­யில் எல்­லோ­ருக்­குமே தெரிந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், தி.மு.கழக வேட்­பா­ளர் அரு­மைச் சகோ­த­ரர் சேது செல்­வம், எளிய, நேர்­மை­யான பின்­பு­லம் கொண்­ட­வர். அடித்­தட்டு உழைக்­கும் வர்க்­கத்­தில் பிறந்த, பிற்­ப­டுத்­தப்­பட்ட சமு­தா­யப் பிர­தி­நி­தி­தான் நமது கழக வேட்­பா­ளர் திரு. சேது செல்­வம் அவர்­கள். தொழி­லா­ளர்­க­ளுக்­கா­கப் போரா­டிச் சிறை சென்­றி­ருக்­கி­றார். அவரை நீங்­கள் எப்­போது வேண்­டு­மா­னா­லும் சந்­திக்­க­லாம். நீங்­கள் கூப்­பிட்ட குர­லுக்கு ஓடோடி வரக்­கூ­டிய ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யி­ருக்­கி­ றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் ரங்­க­சாமி செய்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நன்­மை­கள் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சேது செல்­வம் அவர்­களை நீங்­கள் தேர்ந்­தெ­டுத்­தால் உங்­க­ளுக்­காக உண்­மை­யாக உழைப்­பார் என உறு­தி­ய­ளிக்­கி­றேன். கடந்த காலங்­க­ளில், இந்த தொகு­தி­யில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல்­வர் ரங்­க­சாமி அவர்­கள் உங்­க­ளுக்­காக செய்த நன்­மை­கள் என எது­வுமே இல்லை. அதை­விட கொடுமை இந்த தொகு­திக்கு ஒரு MLA அலு­வ­ல­கம் கூட இல்லை. இது அவ­மா­னம் இல்­லையா? நீங்­கள் நமது சேது செல்­வத்­துக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்­றி­பெ­றச் செய்­தால், உங்­க­ளின் நீண்­ட­கால கோரிக்­கை­யான இல­வச வீட்டு மனைப்­பட்டா கிடைக்க, உரிய நட­வ­டிக்­கை­ளைச் செய்­வார். தட்­டாஞ்­சா­வ­டி­யில் இருக்­கும் தொழிற்­பேட்­டை­யில் புதிய தொழிற்­சா­லை­கள் அமை­யப் பாடு­ப­டு­வார். இந்த தொகு­தி­யில் நில­வும் மின்­வெட்­டுப் பிரச்­சி­னைக்­கும் தீர்வு காண்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் சீச­னில் மட்­டும் வந்து, பத்து நாள் திரு­விழா மாதிரி தலை­யைக் காட்­டி­விட்­டுப் போகி­ற­வர் அல்ல நம் வேட்­பா­ளர்! “இந்த இடைத்­தேர்­த­லில் தட்­டாஞ்­சா­வ­டித் தொகு­தி­யில் தி.மு.க. வென்று ஆட்­சியா மாறப் போகி­றது?” எனச் சிலர் கேட்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு நான் சொல்­வது, ஆட்சி மாற்­றம் நடந்­தா­லும், நடக்­கா­விட்­டா­லும் தொகு­தி­யின் காட்சி மாற்­றம் நடக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அடுக்­க­டுக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">படு­கொ­லை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">என்.ஆர்.காங்­கி­ரஸ் – பா.ஜ.க., கூட்­டணி ஆட்­சி­யில் புதுச்­சேரி, கொலைச்­சே­ரியா மாறி­விட்­டது. ஒரு வாரத்­துக்கு சர்­வ­சா­தா­ர­ணமா நான்கு கொலை­யா­வது நடக்­கி­றது. பட்­டப்­ப­க­லில் ஒரு கொலை, நண்­ப­க­லில் ஒரு கொலை, மாலை ஒரு கொலை, நள்­ளி­ர­வி­லும் கொலை என அடுக்­க­டுக்­கான படு­கொ­லை­கள் நடக்­கி­றது என நாளி­தழ், டி.வி.யில் எல்­லாம் பார்த்­தேன். முதல்­வர் ரங்­க­சாமி என்­ன­தான் செய்­து­கொண்டு இருக்­கி­றார்? உள்­துறை அமைச்­சர் நமச்­சி­வா­யம் என்ன செய்­து­கொண்டு இருக்­கி­றார்? குற்­ற­வா­ளி­கள் மேல் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் எனச் சொல்­லக் கூட வாய் திறக்­காத ஆட்­சி­தான் இப்­போது இங்கே நடக்­கி­றது. டபுள் இஞ்­சின் சர்க்­கார் இருந்­தால் நல்­லாட்சி நடக்­கும் எனச் சொன்­னார்­கள். ஒரு இஞ்­சி­னும் இங்கே வேலை செய்­வது மாதிரி தெரி­ய­வில்­லையே. சட்­டம்ஒழுங்­குச் சீர­ழி­வும், நிர்­வா­கச் சீர்­கு­லை­வும் புதுச்­சே­ரியை வாட்டி வதைத்­துக்­கொண்டுஇருக்­கி­றது. இதை­யெல்­லாம் தட்­டிக் கேட்க நமது சேது செல்­வம் போன்ற ஒரு MLAவெற்றி பெற வேண்­டும்! அவர் சட்­ட­மன்­றம் போனால் எதிர்க்­கட்­சி­யின் குர­லுக்கு வலு சேர்ப்­பார். அத­னால்­தான் சொன்­னேன், ஆட்சி மாறி­னா­லும், மாறா­விட்­டா­லும் காட்சி மாறும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மாநில அந்­தஸ்து அஸ்­தி­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தனக்­குப் பிரச்­சினை வரும்­போது மட்­டும்­தான், மாநில அந்­தஸ்து அஸ்­தி­ரத்தை முத­ல­மைச்­சர் ரங்­க­சாமி கையில் எடுப்­பார். சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் போட தெரிந்த ரங்­க­சாமி அவர்­களே! அதி­கா­ரி­கள் தடுக்­கி­றார்­கள் எனக் கூப்­பாடு போடும் ரங்­க­சாமி அவர்­களே! புது­வைக்கு மாநில அந்­தஸ்து வேண்­டு­மென, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை டெல்­லிக்கு அழைத்­துக் கொண்டு போய், போரா­ட­லாமே? ஏன் செய்ய மாட்­டேன் என்­கி­றீர்­கள்? உங்­கள் கூட்­ட­ணிக் கட்­சி­யி­டம்­தானே ஒன்­றிய அரசு இருக்­கி­றது? கடந்த தேர்­த­லி­லேயே புது­வைக்கு மாநி­லத் தகுதி பெற்­றுத் தரு­வேன் எனச் சொல்­லித்­தானே ஆட்­சிக்கு வந்­தீர்­கள்? நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு என்.ஆர்.காங்­கி­ர­சும், பா.ஜ.க.,வும் செய்­த­தெல்­லாம் துரோ­கம் மட்­டும்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்­னொரு துரோ­க­மும் களத்­தில் நிற்­கி­றது. கடந்த தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் முது­கில் குத்­திய காங்­கி­ரஸ் கட்சி இங்கு களம் காண்­கி­றது. கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில், ஐந்து தொகு­தி­க­ளில் கழக வேட்­பா­ளர்­களை எதிர்த்து, கூட்­ட­ணி­யில் இருந்­து­கொண்டே வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யது காங்­கி­ரஸ் கட்சி. ஆனா­லும், தி.மு.க. துரோ­கத்தை வென்­றெ­டுத்­தது. காலாப்­பட்டு, ராஜ்­ப­வன் தொகு­தி­க­ளில் கழக வேட்­பா­ளர்­கள் வெற்றி பெற்­ற­னர். துரோ­கி­கள் படு­தோல்வி அடைந்­த­னர். அதே தோல்­வியை இந்த தட்­டாஞ்­சா­வடி தொகு­தி­யி­லும் காங்­கி­ரஸ் கட்­சிக்­குப் பரி­ச­ளிக்க வேண்­டும். காங்­கி­ரஸ் கட்­சிக்கு டெப்­பா­சிட் கூட கிடைக்­கக் கூடாது. புதுச்­சே­ரி­யைப் பொறுத்­த­வரை காங்­கி­ரஸ் கட்சி முடிந்­து­போன அத்­தி­யா­யம். நமக்கு எதி­ராக நிற்­கும் இந்த இரண்டு வேட்­பா­ளர்­க­ளுக்­கும் இந்த இடைத்­தேர்­தல் மூலம் பாடம் புகட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> சட்­ட­மன்­றத்­தில் உங்­கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்­டும் என்­றால், நமது மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யின் கழக வேட்­பா­ளர்சேது செல்­வம்அவர்­க­ளுக்கு, உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, அவரை பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெ­றச் செய்ய வேண்­டும் என மீண்­டும் உங்­களை அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>