<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,142,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 04 2026 20:16:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261005T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05102026-TRY-07" position.sequence="07" ex-ref="05102026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">தாராபுரம் தொகுதி மக்களின் உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பக் கூடியவர் வழக்கறிஞர் சுகன்யா! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">குண்டடம் – நொச்சிப்பாளையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup923986_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தாரா­பு­ரம், அக்.05 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தாரா­பு­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­தல் நடை­பெ­று­வ­தை­யொட்டி, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், நேற்று முன்தினம்  தனது தேர்­தல் பரப்­பு­ரையை மேற்­கொண்­டார். குண்­ட­டம் மேற்கு ஒன்­றி­யம் நொச்­சிப்­பா­ளை­யத்­தில் பெருந்­தி­ர­ளா­கக் கூடி­யி­ருந்த மக்­கள் மத்­தி­யில் அவர் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்­சி­மிக்க உரை 
வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு சிறப்­பான, அன்­பான, உற்­சா­க­மான வர­வேற்பு அளித்­தி­ருக்­கக்­கூ­டிய நொச்­சிப்­பா­ளை­யம் பகுதி மக்­க­ளுக்­கும், அத்­தனை பேருக்­கும் முத­லில் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.  இந்த வர­வேற்­பை­யும், எழுச்­சி­யை­யும், உங்­க­ளு­டைய உற்­சா­கத்­தை­யும் பார்க்­கும்­போது, நடை­பெற இருக்­கும்  சட்­ட­மன்ற இடைத் தேர்­த­லில்...  வரு­கிற ஒன்­ப­தாம் தேதி, தேர்­தல் முடி­வு­க­ளில் நிச்­ச­யம் தாரா­பு­ரத்­தில் வெற்றி உறுதி என்­பது உங்­க­ளு­டைய எழுச்­சி­யைப் பார்க்­கும்­போது நன்­றா­கவே தெரி­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­க­ளெல்­லாம் ஏற்­க­னவே முடிவு செய்­து­விட்­டீர்­கள் என்­ப­தை­யும் புரிந்­து­கொள்ள முடி­கி­றது. இப்­ப­டித்­தான் கடந்த ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­னால், இதே தாரா­பு­ரத்­திற்கு வந்து வாக்­குக் கேட்­டேன். `வெற்றி பெறச் செய்­து­வி­டு­கி­றோம், சென்று வாருங்­கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்­தீர்­கள். கடை­சி­யில் பெரிய அல்­வா­வாக கொடுத்­து­விட்­டீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மிகச் சிறந்த வேட்­பா­ளர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய வெற்றி வேட்­பா­ளர் அரு­மைச் சகோ­தரி சுகன்யா அவர்­களை, தலை­வர் அவர்­கள் உங்­க­ளி­டத்­தில் ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றார்­கள். மிகச் சிறந்த வேட்­பா­ளர். சகோ­தரி சுகன்­யா­வைப் பொறுத்­த­வரை நன்கு படித்­த­வர்; பண்­பா­ன­வர்; ஒரு வழக்­க­றி­ஞர். தாரா­பு­ரம் தொகுதி மக்­க­ளான உங்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளுக்­கா­க­வும், உரி­மை­க­ளுக்­கா­க­வும் நிச்­ச­யம் சட்­ட­மன்­றத்­தில் தன்­னு­டைய குரலை எழுப்­பக்­கூ­டிய ஆற்­றல் படைத்­த­வர். நிச்­ச­யம் தேர்­த­லுக்­குத் தேர்­தல் கட்சி மாறக்­கூ­டி­ய­வர் கிடை­யாது. கொண்ட கொள்­கை­யில், உள்­ளத்­தின் உறு­தி­யில், ஏற்­றுக்­கொண்ட லட்­சி­யத்­தில் என்­றைக்­கும் மாறா­மல் உறு­தி­யோடு நிற்­கக்­கூ­டி­ய­வர். நம்­மு­டைய கலை­ஞ­ரு­டைய உடன்­பி­றப்பு, தலை­வ­ரு­டைய தங்கை, நம்­மு­டைய அன்­புச் சகோ­தரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் `பெட்டி பாமா’­விற்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால், அவர்­கள் நூற்­றில் ஒரு­வ­ராக இருப்­பார். ஆனால், சகோ­தரி சுகன்­யா­விற்கு வாக்­க­ளித்­தீர்­கள் என்­றால் உங்­க­ளில் ஒரு­வ­ராக நிச்­ச­யம் இருப்­பார். முத­லில் நீங்­க­ளெல்­லாம் யோசித்­துப் பாருங்­கள், இப்­போது ஐந்து மாதங்­க­ளுக்கு முன்­பு­தான் தேர்­தல் நடந்­தது. ஏப்­ரல் 23–ஆம் தேதி தேர்­தல் நடந்­தது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம். ஆனால், ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்­டும் என்­றால் குறைந்­தது 234 தொகு­தி­க­ளில் 118 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வெற்றி பெற வேண்­டும். இப்­போது ஆட்சி அமைத்­தி­ருக்­கி­றார்­களே, அவர்­கள் வெறும் 107 இடங்­க­ளில் மட்­டும்­தான் வெற்றி பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிறகு, எப்­படி ஆட்சி அமைத்­தார்­கள் என்று நீங்­கள் கேட்­க­லாம். எப்­படி ஆட்சி அமைத்­தார்­கள்? நம்­மோடு கூட்­டணி வைத்து, நம் தலை­வ­ரு­டைய பெய­ரைச் சொல்லி, நம் தலை­வ­ரு­டைய புகைப்­ப­டத்­தைக் காட்டி, திரா­விட மாடல் அர­சி­னு­டைய சாத­னை­க­ளை­யெல்­லாம் சொல்லி வாக்­குக் கேட்டு, நம் கூட்­ட­ணி­யில் இருந்­து­கொண்டு வெற்றி பெற்­றார்­கள். அப்­படி வெற்­றி­பெற்று, நம்­மு­டைய தலை­வ­ரி­டம் சொல்­லி­விட்­டுச் சென்­றார்­கள். சில பேர் சொல்­லி­விட்­டுச் சென்­றார்­கள், சில பேர் சொல்­லா­மல் சென்­றார்­கள். துரோ­கி­கள் சிலர் சொல்­லா­மலே சென்­றார்­கள். அந்­தத் துரோ­கி­க­ளைக் கடை­சி­வ­ரைக்­கும் நாங்­க­ளும் மறக்க மாட்­டோம், நீங்­க­ளும் மறக்­கா­தீர்­கள். தமிழ்­நாட்டு மக்­கள் மறக்க மாட்­டோம். அதன் பிற­கு­தான் அவர்­கள் ஆட்சி அமைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெட்­டி­யைக் கொடுத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விலைக்கு வாங்­கி­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த முறை தாரா­பு­ரத்­தி­லி­ருந்து நீங்­கள்  ஒரு­வரை அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பி­னீர்­கள். இப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் என்ன செய்­தார்? நம்­மு­டைய கூட்­ட­ணி­யி­லி­ருந்து சில கட்­சி­க­ளைப் பிரித்­தார். அதன் பிறகுஅண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைக் கிட்­டத்­தட்ட இரண்­டாக உடைத்து, அதில் இருக்­கக்­கூ­டிய சில சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைப் பெட்­டி­யைக் கொடுத்து விலைக்கு வாங்­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கட்­சித் தலை­வர்­க­ளுக்­கெல்­லாம் சோஃபா. வெறும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மட்­டும் வந்­தால் அவர்­க­ளுக்கு பெட்டி மட்­டும்­தான். அத­னால்­தான் நீங்­கள் இப்­போது இங்கு இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர், இப்­போது உங்­க­ளு­டைய ஆளுங்­கட்­சி­யி­னு­டைய வேட்­பா­ளர் பெய­ரையே மாற்றி வைத்­தி­ருக்­கி­றீர்­கள். அவர்­கள் பெயர் என்ன? `பெட்டி பாமா’வா? அதைத்­தான் நேற்று தலை­வர் நேற்­றுப் பேசும்­போது சொன்­னார்­கள், `பெட்டி பாமா இல்லை,பல்டி பாமா!’ சாதா­ரண பல்டி இல்லை; `அந்­தர் பல்டி பாமா’ என்று குறிப்­பிட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தாரா­பு­ரம் மக்­கள் ஏமா­ளி­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் வாக்­க­ளித்­தது அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு. நீங்­கள் வாக்­க­ளித்­தது, இரட்டை இலைக்கு.  உங்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்­றுக்­கொண்டு அவர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கப் பத­விப் பிர­மா­ணம் ஏற்­றுக்­கொண்ட நாள் மே 12. ஆனால், வெறும் பன்­னி­ரண்டே நாளில், மே 25–ஆம் தேதி அங்கு இருக்­கக்­கூ­டிய சபா­நா­ய­க­ரைச் சந்­தித்து `நான் கட்சி மாறு­கி­றேன்’ என்று சொல்லி, அவர்­க­ளி­டம் பெட்­டியை வாங்­கிக்­கொண்டு, உடனே ராஜி­னாமா செய்து, இன்­றைக்கு வேறொரு கட்­சி­யில் சென்று சேர்ந்து, அவர்­க­ளி­ட­மும் சென்று சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வாய்ப்­பைப் பெற்று, இன்­றைக்கு மீண்­டும் உங்­க­ளி­டம் வேறு சின்­னத்­தில் வந்து வாக்­குக் கேட்­கி­றார்­கள் என்­றால், இங்கு இருக்­கக்­கூ­டிய தாரா­பு­ரம் மக்­கள் ஏமா­ளி­கள், நாம் என்ன சொன்­னா­லும் கேட்­பார்­கள்; இங்கு இருக்­கக்­கூ­டிய தாரா­பு­ரம் மக்­கள் சுய­ம­ரி­யாதை இல்­லா­த­வர்­கள்; அவர்­கள் நிச்­ச­யம் நம்­மு­டைய இந்­தச் சூழ்ச்­சிக்கு அடி­மை­யா­கி­வி­டு­வார்­கள். பயந்து வாக்­க­ளித்­து­வி­டு­வார்­கள் என்­கின்ற நினைப்­பில் மீண்­டும் உங்­க­ளைத் தேடி வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேற்று முன்­தி­னம் பார்த்­தீர்­கள் என்­றால், முத­ல­மைச்­சர் வந்­தார். ஆனால், நீங்­கள் முத­ல­மைச்­ச­ரு­டைய பேச்­சை­யெல்­லாம் கேட்­டி­ருக்­கி­றீர்­களா? முத­ல­மைச்­சர் இப்­போது இரண்டு இடங்­க­ளில் சென்று பேசி­னார். ஐந்து நாட்­க­ளுக்கு முன்பு மது­ராந்­த­கத்­தில் இடைத்­தேர்­தல். அங்கு போய்க் காட்­டுக் கத்­தல். பொது­வாக அவர் எந்­தப் பொதுக்­கூட்­டத்­தில் பேசி­னா­லும் சரி, அது­வும் சட்­ட­ச­பை­யில் பேசி­னால், காதில் பஞ்சு வைத்­துக்­கொண்­டு­தான் செல்ல வேண்­டும். அந்த மாதி­ரி­தான் கத்­து­வார். நாங்­க­ளெல்­லாம், `தய­வு­செய்து கத்­தா­தீர்­கள்; இரத்த அழுத்­தம் வந்­து­வி­டப் போகி­றது. கத்­தா­தீர்­கள், கத்­தா­தீர்­கள்’’ என்று சொல்லி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டு மக்­கள்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அழ வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாரா­பு­ரத்­திற்கு வந்­தார். தாரா­பு­ரத்­தில் கத்­த­வில்லை. கத்­தா­மல் என்ன செய்­து­விட்­டார்? நடிக்க ஆரம்­பித்­து­விட்­டார்! வேட்­பா­ளர் `பெட்டி பாமா’ நன்­றா­கப் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்; எல்­லா­ருக்­கும் நன்றி சொல்­கி­றார்­கள். பின்­னா­லி­ருந்து ஓர் அமைச்­சர், `நீங்க பேசி­ய­தெல்­லாம் போதும்; நடிப்­பைத் தொடங்­குங்க’ என்று சொன்ன உடனே, அந்த அம்மா கதறி அழு­கி­றார்­கள். அந்த அம்மா ஏன் அழு­கி­றார்­கள்? அந்த அம்­மா­விற்கு வாக்­க­ளித்த நீங்­கள்­தான் அழ வேண்­டும்!  இப்­படி ஒரு முத­ல­மைச்­ச­ரைத் தேர்ந்­தெ­டுத்த தமிழ்­நாட்டு மக்­கள்­தான் அழ வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­வர் அவர்­கள் சொன்­னார்­கள், `இவர் சீஃப் மினிஸ்­டர் கிடை­யாது; ஒண்­ணாம் நம்­பர் சீப் மினிஸ்­டர்’’ ஏனென்­றால், சட்­ட­ச­பை­யில் என்­னென்ன கேலிக்­கூத்­து­கள் நடக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். அனை­வ­ரும் சட்­ட­ச­பையை நேர­லை­யில் பார்க்­கி­றீர்­களா? நேர­லை­யில் எல்­லா­ரும் பார்த்து ரசிக்­கி­றீர்­களா? மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றதா? நாங்­கள் படு­கின்ற துன்­பம் எங்­க­ளுக்­குத்­தான் தெரி­யும். ஒவ்­வோர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் பாட்­டுப் பாடு­கி­றார்­கள்! முன்­பெல்­லாம் சட்­ட­மன்­றத்­திற்­குச் சென்­றோம் என்­றால், ‘இந்­தத் தொகு­தி­யில் இந்­தப் பிரச்­சினை இருக்­கி­றது; எங்­க­ளுக்­குச் செய்து கொடுங்­கள், பள்­ளிக்­கூ­டம் கட்­டிக் கொடுங்­கள், மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி ஒன்று கட்­டிக் கொடுங்­கள், சாலை வசதி அமைத்­துக் கொடுங்­கள்’’ என்று கேட்­பார்­கள். அப்­போது அமைச்­சர்­கள் பதில் சொல்­வார்­கள். சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கேள்வி கேட்­டால் பதில் சொல்­வார்­கள்.  ஆனால், இப்­போது என்ன நடக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நட­ன­மும் சண்­டை­யும் மட்­டும்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­னும் போட­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் கேள்வி கேட்­டால் எதிர்த்­துப் பாட்­டுப் பாடு­கி­றார்­கள். பிறகு நாங்­கள் என்ன எதிர்ப்­பாட்டா பாட முடி­யும்?  இனி­மேல் நாங்­க­ளெல்­லாம் பாட்டு கிளாஸ்க்காசெல்ல முடி­யும்? நான் எழுந்து சொல்­லி­விட்­டேன், `எல்லா ஆளுங்­கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பாட்­டுப் பாடு­கி­றார்­கள், அமைச்­சர்­கள் பாட்­டுப் பாடு­கி­றார்­கள், சபா­நா­ய­க­ரி­டம் சொன்­னால், அவ­ரும் பாட்­டுப் பாடு­கி­றார்!’ முத­ல­மைச்­சர் சட்­ட­மன்­றத்­தில் நட­ன­மும் சண்­டை­யும் மட்­டும்­தான் இன்­னும் போட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து சொல்­கி­றார், `எங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் முகம் தெரி­ய­வில்லை, நாங்­கள் பின்­னால் அமர்ந்­தி­ருக்­கி­றோம்’ என்று ஆளுங்­கட்சி உறுப்­பி­னர் சொல்­கி­றார், `எங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் முகம் தெரிய வேண்­டும்; அவர் பேசு­வதை நாங்­கள் பார்க்க வேண்­டும்’ என்று. ஆம், இவர் பெரி­தா­கப் பேசிச் கிழித்­து­விட்­டார்! பிடித்து வைத்த பிள்­ளை­யார் மாதிரி... அப்­படி அமர்ந்­தி­ருப்­பார்.  சில நேரம் அவர் அவை­யில் இருக்­கி­றாரா இல்­லையா என்றே எங்­க­ளுக்­குத் தெரி­யாது. எந்­தக் கேள்­விக்­கும் பதில் சொல்­வது கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சொல்­கி­றார், `எங்­கள் அனை­வ­ருக்­கும் கையில் ஒரு தொலைக்­காட்சி கொடுங்­கள்; எங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ரு­டைய முகத்தை நாங்­கள் பார்க்க வேண்­டும்.’ நான் கேட்­டேன், ‘ஆம், இப்­போது அப்­ப­டியே பதில் சொல்­லிச் கிழித்­து­விட்­டார், இவ­ரு­டைய முகத்­தைப் பார்க்க வேறு வேண்­டுமா?’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எழுந்து சொல்­கி­றார், `எங்­கள் தலை­வர் முத­ல­மைச்­ச­ ருக்கு நன்றி சொல்­கி­றேன். ஏனென்­றால், நான் வேலை­யில்­லா­மல் இருந்­தேன்; எனக்கு வேலை கொடுத்­து­விட்­டார். நான் வீடு இல்­லா­மல் இருந்­தேன்; எனக்கு வீடு கொடுத்­து­விட்­டார் முத­ல­மைச்­சர். இப்­போது எனக்­குச் சமீ­பத்­தில் காதல் தோல்வி ஆகி­விட்­டது…’ என்று சொன்ன உடனே, முத­ல­மைச்­சர் பின்­னால் திரும்பி, அந்­தச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைப் பார்த்­துச் சிரிக்­கி­றார். நான் நினைத்­துக்­கொண்­டேன், சரி இந்த ஆட்­சி­யில் இந்த முத­ல­மைச்­சர் இதற்­கெல்­லாம் திட்­டம் வைத்­தி­ருப்­பார்­போல என்று நினைத்­தேன். ஒரு நல்ல மாற்­றத்தை இவர்­கள் கொண்டு வந்­து­விட்­டார்­கள் என்று.  இப்­ப­டிப்­பட்ட சட்­ட­ச­பை­தான் நடக்­கி­றது. சட்­டம்–­ஒ­ழுங்கு பிரச்­சி­னை­யைப் பற்றி நான் பேசி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஐந்து மாதங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">500 படு­கொ­லை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிட்­டத்­தட்ட 40 நிமி­டங்­கள் பேசி­னேன். 18 கேள்­வி­கள் கேட்­டேன். இந்த ஐந்து மாதங்­க­ளில் மட்­டும் 500 படு­கொ­லை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. 400–க்கும் மேல் பாலி­யல் வன்­மு­றை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. எல்லா இடங்­க­ளி­லும் போதைப்­பொ­ருள் புழக்­கம் அதி­க­மா­கி­விட்­டது. ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­களே, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களே, ஸ்ரீவை­குண்­டம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பெயர் சர­வ­ணன், அவர் மீதே ஒரு பெண் பாலி­யல் வன்­கொ­டு­மைப் புகார் கொடுத்­தி­ருக்­கி­றார். இதற்­கெல்­லாம் நட­வ­டிக்கை எடுங்­கள். முத­ல­மைச்­சர் பதில் சொல்­லுங்­கள் என்று கேட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கேள்வி கேட்­கக் கேட்க சபா­நா­ய­கர் என்ன சொன்­னார்? ‘பொறுத்­தி­ருங்­கள் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­களே, முத­ல­மைச்­சர் பதில் சொல்­வார். அவர் நன்­றா­கத் தயா­ரா­கத்­தான் வந்­தி­ருக்­கி­றார்’ என்­றார். நான் சொன்­னேன், ‘மூன்று நாட்­கள் விடு­முறை இருக்­கி­றது; இன்­றைக்கு வெள்­ளிக்­கி­ழமை. வெள்ளி, சனி, ஞாயிறு வீட்­டில் சென்று நன்­றாக ஆயத்­த­மா­கித் தயா­ராக வாருங்­கள்.’ இவ்­வ­ள­வு­தான் சொன்­னேன், இதில் ஒன்­றும் தவறு கிடை­யாது. நான் இவ்­வ­ளவு கேள்­வி­கள் கேட்­கி­றேன், முத­ல­மைச்­சர் தயா­ராக வாருங்­கள் என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உடனே சபா­நா­ய­கர் என்ன சொல்­லி­விட்­டார், `என்ன நீங்­கள் இப்­ப­டிச் சொல்­லி­விட்­டீர்­கள்? எங்­கள் முத­ல­மைச்­சர் எப்­போ­துமே தயா­ரா­கத்­தான் இருப்­பார்’ என்­றார். நான் சொன்­னேன், `எப்­போ­துமே தயா­ராக இருப்­பாரா? அப்­ப­டி­யென்­றால் இப்­போதே பதில் சொல்­லச் சொல்­லுங்­கள், நான் அமர்­கி­றேன்’ என்று கூறி­னேன். திடீ­ரென்று எழுந்­து­விட்­டார் முத­ல­மைச்­சர். எழுந்து... நான் கூட சரி முத­ல­மைச்­சர் ஏதோ நல்ல பதில் சொல்­லப் போகி­றார். நாம் கொஞ்ச நேரம் அமர்ந்து கேட்­போம் என்று அமர்ந்­தேன். கீழே­தான் சற்று தலை­யைக் குனிந்­தேன். உடனே எழுந்து முத­ல­மைச்­சர் சொல்­கி­றார், மூன்று நாட்­க­ளில் நான் பதில் சொல்­கி­றேன், யாரும் ஓடி­வி­டா­தீர்­கள்’ என்று சொல்­லி­விட்டு அவர் ஓடிப் போய்­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் கீழே பார்த்­து­விட்டு மேலே பார்க்­கி­றேன்; ஆளையே காணோம்! முத­ல­மைச்­ச­ரையே காணோம்! நான்பேசு­வ­தை­யா­வது அமர்ந்து முழு­மை­யா­கக் கேட்­டார். அ.தி.மு.க.வின் பொதுச்­செ­ய­லா­ளர், முன்­னாள் முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னி­சாமி இருக்­கி­றார் அல்­லவா, அவர் பேசு­வ­தை­யெல்­லாம் யாரும் கேட்­கக்­கூட இல்­லைங்க. முத­ல­மைச்­சரே இல்லை! அப்­ப­டிப்­பட்ட ஓர் ஓடு­காலி முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர்­தான் இப்­படி என்­றால், அங்கு இருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­க­ளு­டைய லட்­ச­ண­மும் உங்­க­ளுக்­குத் தெரி­யும். ஒவ்­வோர் அமைச்­ச­ரும் யார் பெயர் யாருக்கு என்று தெரி­யாது. எங்­களை விடுங்­கள், ஒவ்­வோர் அமைச்­சர்பெய­ரும் முத­ல­மைச்­ச­ருக்கே தெரி­யாது.எல்­லோ­ருக்­குமே இப்­போது நாங்­கள் பட்­டப்­பெ­யர் வைத்­துத்­தான் கூப்­பிட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­டி­மன்ற அமைச்­சர் ராஜ்­மோ­கன் என்று ஒரு­வர் இருக்­கி­றார். அவர் பேச ஆரம்­பித்­தார் என்­றால், காது கொடுத்­துக் கேட்­டீர்­கள் என்­றால் திண்­டுக்­கல் லியோனி அண்­ணன் பட்­டி­மன்­றம் கேட்­கின்ற மாதி­ரியே இருக்­கும். முடிக்­கவே மாட்­டார்! என்ன சொல்ல வரு­கி­றார் என்று யாருக்­குமே புரி­யாது. அடுத்து, `ரீல்ஸ் அமைச்­சர்’ கீர்த்­தனா, `முறுக்கு அமைச்­சர் அற­நி­லை­யத்­துறை அமைச்­சர்’ அடுத்து, `சங்கி அமைச்­சர்’... அடுத்து, ‘உருட்­டுக்­கட்டை அமைச்­சர்’ தமிழ்­நாட்­டி­னு­டைய நிதித்­துறை அமைச்­சர்; அவ­ருக்­குப் பட்­டப்­பெ­யர் உருட்­டுக்­கட்டை அமைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, ‘பவு­டர் அமைச்­சர்’... கில்லி சரத் என்று ஒரு­வர் இருக்­கி­றார். ஏன் தெரி­யுமா? சென்­னை­யில் நடை­பெற்ற ஐ.பி.எல். போட்­டி­யில் 40,000 பேர் கூடி­யி­ருக்­கின்ற மக்­கள் கூட்­டத்­தில், அங்கு பவு­டர் போடு­கி­றார்... போதைப் பவு­டர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்து, `திருட்டு வி.சி.டி. அமைச்­சர்’... அடுத்து, ‘திருட்டு லாட்­டரி அமைச்­சர்’... இப்­படி நான் அமைச்­சர் பெய­ரைச் சொன்­னால் உங்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்­காது. ஆனால், இந்­தப் பட்­டப்­பெ­யர் சொன்­னால் மட்­டும்­தான் உங்­க­ளுக்­குத் தெரி­கி­றது. இப்­ப­டித்­தான் இந்த ஆட்சி நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஆட்­சிக்கு ஒரு சரி­யான பாடத்­தைக் கற்­பிக்க வேண்­டும் என்­றால், வரு­கின்ற சட்­ட­மன்ற இடைத்­தேர்­தல் ஆறாம் தேதி, இன்­றைக்கு மூன்­றாம் தேதி. இன்­னும் நம்­மு­டைய கைக­ளில் இரண்டு நாட்­கள்­தான் இருக்­கின்­றன. நீங்­கள் அத்­தனை பேரும் பிரச்­சா­ரம் செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒன்று மின்­வெட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­னொன்று அரி­வாள் வெட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய தலை­வர் பேசும்­போது சொன்­னார், இந்த முத­ல­மைச்­ச­ருக்கு அவ­ரு­டைய மொழி­யி­லேயே சொல்­கி­றேன். இந்த ஆட்­சி­யில்... இந்த வெட்­கங்­கெட்ட ஆட்­சி­யில் இரண்டே பேருக்கு நடு­வில்­தான் போட்டி. ஒன்று மின்­வெட்டு!  இன்­னொன்று அரி­வாள் வெட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்­வெட்டு, இந்த ஆட்சி அமைந்­த­தி­லி­ருந்து தொடர்ந்து எட்டு மணி நேரம் அனைத்து இடங்­க­ளி­லும் மின்­வெட்டு. முத­ல­மைச்­ச­ரு­டைய சொந்­தத் தொகுதி பெரம்­பூ­ரில் மின்­சா­ரம் கிடை­யாது. பெரம்­பூ­ரில் தின­மும் மக்­கள் குடும்­பத்­து­டன் சாலை­யில் வந்து மறி­யல் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். முத­ல­மைச்­ச­ரு­டைய சொந்­தத் தொகு­தி­யி­லேயே இந்த நிலைமை! அமைச்­சர்­கள் பங்­கேற்­கின்ற எல்­லாக் கூட்­டங்­க­ளி­லும் மின்­வெட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சரி­யான பாடம் புகட்­டுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, விலை­வாசி உயர்வு. நம்­மு­டைய ஆட்­சி­யில்... தி.மு.க. ஆட்­சி­யில் அரிசி ஒரு கிலோ 50 ரூபா­யாக இருந்­தது. இப்­போது  த.வெ.க ஆட்­சி­யில் ஒரு கிலோ அரிசி 70 ரூபாய். சர்க்­கரை, நம்­மு­டைய ஆட்­சி­யில் ஒரு கிலோ சர்க்­கரை 40 ரூபாய். இன்­றைக்கு த.வெ.க ஆட்­சி­யில் 60 ரூபாய். ஒரு கிலோ புளி நம்­மு­டைய தி.மு.க. ஆட்­சி­யில் 180 ரூபாய்; இன்­றைக்கு த.வெ.க ஆட்­சி­யில் 230 ரூபாய். சமை­யல் எண்­ணெய் ஒரு லிட்­டர் நம்­மு­டைய ஆட்­சி­யில் 165 ரூபாய்; இன்­றைக்கு 200 ரூபாய். பூண்டு ஒரு கிலோ நம்­மு­டைய ஆட்­சி­யில் 240 ரூபாய்; இன்­றைக்கு 310 ரூபாய். மிள­காய் நம்­மு­டைய ஆட்­சி­யில் ஒரு கிலோ 360 ரூபாய்; இன்­றைக்கு 420 ரூபாய். இதை­யெல்­லாம் கட்­டுப்­ப­டுத்த வக்­கில்­லாத இந்த அர­சுக்கு, ஒரு சரி­யான பாடத்தை, இந்த இடைத்­தேர்­த­லில் நீங்­கள் கற்­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">100 நாள் வேலை வாய்ப்­புத் திட்­டம். இங்கு இருக்­கக்­கூ­டிய மக்­கள் நீங்­கள் நிறைய பேர் அந்­தத் திட்­டத்­தில் நம்­மு­டைய ஆட்­சி­யில் பய­ன­டைந்­தி­ருப்­பீர்­கள். அது இன்­றைக்­குச் சரி­யாக வரு­கி­றதா உங்­க­ளுக்கு? கிடை­யாது. 100 நாள் வேலை வாய்ப்­புத் திட்­டத்தை இன்­றைக்கு ஒன்­றிய அரசு 125 நாட்­க­ளாக உயர்த்­திக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் இங்கு இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்சி 10 நாட்­கள்­கூட உறுதி செய்­வது கிடை­யாது. 10 நாட்­கள்­கூட 100நாள் வேலை வாய்ப்­புத் திட்­டத்­தில் வேலை கொடுப்­பது கிடை­யாது. அப்­ப­டியே வேலை கொடுத்­தா­லும், 10 நாட்­க­ளுக்­குக் கொடுப்­பது இல்லை, அப்­ப­டியே கொடுத்­தா­லும் அதற்­கான சரி­யான ஊதி­யத்­தை­யும் கொடுப்­பது இல்லை. 100 நாள் வேலைக்கு இன்­றைக்­குப் பல கட்­டுப்­பா­டு­களை விதித்­தி­ருக்­கி­றார்­கள்; விதி­க­ளைப் போட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வீட்­டிற்கு வரி கட்­டி­யி­ருக்க வேண்­டும், குடி­நீர் வரி கட்­டி­யி­ருக்க வேண்­டும். இப்­ப­டிப் புதி­தாக நிறைய விதி­களை விதித்­தி­ருக்­கி­றார்­கள். நம்­மு­டைய ஆட்­சி­யில் இந்த மாதிரி கிடை­யாது. நாம் 100 நாள் வேலை வாய்ப்­புத் திட்­டத்­தை­யும் சரி­யா­கக் கொடுத்­தோம்; உட­னுக்­கு­டன் அதற்­கான ஊதி­யத்­தை­யும் கொடுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­மா­திரி, 10 கோடி ரூபா­யில் பி.ஏ.பி. (PAP) கால்­வாய் திட்­டம் நம்­மு­டைய தி.மு.க. ஆட்­சி­யில் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் தூர்­வாரி அனைத்­தை­யும் செய்து கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய கழக ஆட்­சி­யில் பரம்­பிக்­கு­ளம்–­ஆ­ழி­யாறு திட்­டத்­தின் கீழ் சரி­யாக ஒவ்­வொரு வரு­ட­மும் 2,000 கன அடித் தண்­ணீரை நம்­மு­டைய ஆட்­சி­யில் நம்­மு­டைய தலை­வ­ராக இருந்த முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து விட்­டார். அத­னால், இந்­தப் பகு­தி­யில் தென்னை விவ­சா­யம் செழிப்­பாக, சரி­யான நேரத்­திற்கு நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இந்த ஆட்­சி­யா­ளர்­கள் ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து முறை­யா­கத் தண்­ணீர் திறந்து விட­வில்லை. இத­னால் இன்­றைக்­குத் தென்­னை­யெல்­லாம் காய்ந்து போயி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மிகப்­பெ­ரிய வெற்றி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. இன்­றைக்­குக் களத்­தில் இறங்­கிப் போராட்­டம் செய்­த­தால், வலி­யு­றுத்­தி­ய­தால் இப்­போது தண்­ணீ­ரைச் சில நாட்­க­ளா­கத் திறந்து விட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்த இடைத்­தேர்­த­லுக்கு முழு கார­ண­மாக இருந்த முத­ல­மைச்­ச­ருக்கு ஒரு சரி­யான பாடத்தை நீங்­கள் கற்­பிக்க வேண்­டு­மென்­றால், வரு­கின்ற ஆறாம் தேதி நம்­மு­டைய வெற்றி வேட்­பா­ளர் சகோ­தரி சுகன்யா அவர்­க­ளுக்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வெற்­றி­யைத் தேடித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய வாக்­கா­ளர் பெரு­மக்­கள், உங்­கள் அத்­தனை பேரை­யும்  நான் கேட்­டுக்­கொள்­வ­தென்­ன­வென்­றால், நம்­மு­டைய கைக­ளில் இன்­னும் இரண்டு நாட்­கள் இருக்­கின்­றன. வரு­கின்ற இரண்டு நாட்­க­ளில் நீங்­கள் யார் யாரை­யெல்­லாம் சந்­திக்­கி­றீர்­களோ உங்­க­ளு­டைய உற­வி­னர்­கள், உற்­றார்­கள், நண்­பர்­கள், உங்­கள் பக்­கத்து வீட்­டுக்­கா­ரர், எதிர் வீட்­டுக்­கா­ரர், உங்­க­ளுக்­குத் தெரிந்­த­வர்­கள் அவர்­க­ளை­யெல்­லாம் பார்க்­கும்­போது நீங்­கள் சொல்­லுங்­கள், பிரச்­சா­ரம் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">`ஏன்? சுகன்யா அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டும்? ஏன் தாரா­பு­ரத்­தில் உத­ய­சூ­ரி­யன் சின்­னம் வெற்றி பெற்­றுக் காட்­ட­வேண்­டும்? ஏன் நம்­மு­டைய சுகன்­யா­வைச் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக அனுப்ப வேண்­டும்’ என்­கின்ற பிரச்­சா­ரத்தை அடுத்த இரண்டு நாட்­கள் நீங்­கள் சிறப்­பா­கச் செய்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் கடந்த முறை செய்த தவற்றை இந்த முறை நாம் சரி செய்­து­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிச்­ச­யம் தாரா­பு­ரத்­தில் மீண்­டும் உத­ய­சூ­ரி­யன் வெற்றி பெற்­று­விட்­டது என்­கின்ற வெற்­றிச் செய்தி ஒன்­ப­தாம் தேதி வர வேண்­டு­மென உங்­க­ளை­யெல்­லாம் அன்­போடு கேட்­கி­றேன், பண்­போடு கேட்­கி­றேன், பாசத்­தோடு கேட்­கி­றேன், உரி­மை­யோடு கேட்­கி­றேன், உங்­கள் வீட்­டுப் பிள்­ளை­யாக இருந்து கேட்­கி­றேன், தலை­வ­ரு­டைய மக­னாக இருந்து கேட்­கி­றேன். இன்­னும் பெரு­மை­யாக, குறிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞ­ரு­டைய பேர­னாக இருந்து கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வரு­கின்ற இடைத்­தேர்­த­லில் சகோ­தரி சுகன்யா அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்து, மிகப்­பெ­ரிய வெற்­றியை நீங்­கள் தேடித்­தா­ருங்­கள் என்று உங்­க­ளை­யெல்­லாம் மீண்­டும் மீண்­டும் கேட்டு, இந்­தச் சிறப்­பான வர­வேற்­பிற்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழ­கத்­தின் முதன்­மைச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் கே.என். நேரு, கழக துணைப் பொதுச் செய­லா­ளர்­கள் அந்­தி­யூர் செல்­வ­ராஜ், வெள்­ளக்­கோ­வில் சாமி­நா­தன், மேற்கு மண்­ட­லப் பொறுப்­பா­ளர் செந்­தில் பாலாஜி, திருப்­பூர் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பத்­ம­நா­பன், முன்­னாள் அமைச்­சர் கயல்­விழி செல்­வ­ராஜ்,இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிர­காஷ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் சீனி­வா­சன், ஜெயக்­கு­மார், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் செல்­வ­ராஜ், கிர­காம்­பெல், முத்­த­மிழ்ச்­செல்­வன், தள­பதி முரு­கே­சன், தொண்­டா­முத்­தூர் ரவி, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பிர­பா­வதி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் கே.எஸ்.தன­சே­கர், பொதுக்­குழு உறுப்­பி­னர் கரு­ணா­க­ரன், மாவட்­டக் கழ­கத் துணைச் செய­லா­ளர் முத்­துக்­கு­மார், ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் சந்­தி­ர­சே­கர், சிவ­பி­ர­காஷ், இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர்­கள் இன்­ப­ரசு, ஆனந்­த­கு­மார், ஆதி­தி­ரா­வி­டர் அணி இணைச் செய­லா­ளர் திப்­பம்­பட்டி கணே­சன், பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள் அன்­ப­ரசு, ராம­சாமி, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் யுவ­ராஜ், சக்­தி­வேல், விஸ்­வ­நாத், அருண்­பி­ர­சன்னா, மணி­கண்­டன், சுமன், தினேஷ் ராஜன், சிலோ­கர், மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த  நிர்­வா­கி­கள் உள்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>