<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 05 2026 23:42:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261006T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06102026-VLR-06" position.sequence="06" ex-ref="06102026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">ஏன் என்ற கேள்வியே மக்களாட்சியின் முதுகெலும்பு   ; நாயக பிம்ப வழிபாடல்ல!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame926082_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup926141_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M4bw_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M2bw_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M3_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரு­வ­கை­யான போராட்­டங்­கள் மக்­க­ளாட்­சி­யைக் காக்க இந்­தி­யா­வில் நடக்­கின்­றன. ஒரு போராட்­டம் காக்­ரோச் ஜனதா கட்­சி­யா­லும், மாண­வர்­கள் அமைப்­பு­க­ளா­லும் மும்­பை­யி­லும், டில்­லி­யி­லும் நடத்­தப்­ப­டும் தேர்­தல் ஆணை­ய­ருக்கு, மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­க­ளைப் பறித்­த­தற்கு எதி­ரான போராட்­டம். எதிர்க்­கட்­சி­க­ளும் இந்­தப் போராட்­டங்­களை ஆத­ரிக்­கின்­றன. காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே கடந்த சில ஆண்­டு­க­ளில் நடந்த தேர்­தல்­கள் எல்­லாமேமோச­டி­கள், ஒன்­றிய அர­சாங்­கம் உட்­பட எல்லா அர­சாங்­கங்­க­ளும் கலைக்­கப்­பட வேண்­டும் என்று கூறு­ம­ளவு சென்­றுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­னொரு போராட்­டம் தமிழ்­நாட்­டில் இடைத்­தேர்­தல் என்ற வடி­வில் நடக்­கின்­றது. இது­வும் மக்­க­ளாட்­சியை காக்­கும் போராட்­டம்­தான். அற­மற்ற குதிரை பேர அர­சி­யல், மக்­கள் பிர­தி­நி­தித்­து­வத்தை கேவ­லப்­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து காக்­கும் போராட்­டம். ஆட்­சி­ய­மைக்க அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­காத முதல்­வர் விஜய், அ.இ.அ.தி.மு.க-.விலி­ருந்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை பதவி வில­கச் செய்து தன் கட்­சி­யில் சேர்த்து, அவர்­களை மீண்­டும் இடைத்­தேர்­தல்­க­ளில் வெற்றி பெறச் செய்ய முயல்­கிறார். அதா­வது எதிர்க்­கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்­கு­வது குதிரை பேரம் என்­றால், அதனை இடைத்­தேர்­தல் மூலம் செய்ய முயல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளி­டையே இந்த குதிரை பேர இடைத்­தேர்­த­லுக்கு எதிர்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. பல இடங்­க­ளில் வேட்­பா­ளர்­களை மறித்து வாக்­கா­ளர்­கள் ஏன் கட்சி மாறி மீண்­டும் வாக்கு கேட்­கி­றீர்­கள் என்ற கேள்­வியை எழுப்­பி­யுள்­ள­னர். இத­னால் கலக்­க­ம­டைந்த விஜய், மது­ராந்­த­கத்­தில் எம்.ஜி.ஆர். போல தொப்பி அணிந்து பிரச்­சா­ரம் செய்­துள்­ளார். அதா­வது தனது திரை­நா­யக பிம்­பம் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி என்று உணர்த்த இவ்­வாறு தொப்பி அணிந்து பிரச்­சா­ரம் செய்­துள்­ளார். அவர் குதிரை பேரத்­தில் இழுத்த 
சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எம்.ஜி.ஆர். தோற்­று­வித்த அ.இஅ.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் என்­ப­தும் முக்­கி­ய­ மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">திரைக் கதா­நா­ய­க­னின் 
கருத்­துக்­க­ளும், பிம்­ப­மும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறு­ப­தாண்­டு­க­ளுக்கு முன்­னால் “ஆயி­ரத்­தில் ஒரு­வன்” (1965) திரைப்­ப­டத்­தில் எம்.ஜி.ஆர்.  நடித்த மணி­மா­றன் கதா­பாத்­தி­ரம் கொடு­மைப் படுத்­தப்­ப­டும் அடி­மை­கள் பொங்­கி­யெ­ழும்­போது ஒரு சிறப்­பான பாட­லைப் பாடும். “ஏன் என்ற கேள்வி இன்று கேட்­கா­மல் வாழ்க்கை இல்லை” என்ற பாடல்­தான் அது. கவி­ஞர் வாலி  எழு­தி­யது. மிக­வும் எழுச்­சி­யூட்­டும் வரி­க­ளைக் கொண்ட அந்­தப் பாடல் எப்­படி ஆதிக்­கத்­திற்கு எதி­ராக கேள்­வி­களை எழுப்ப வேண்­டும் என்று வலி­யு­றுத்­தும். அந்­தப் பாட­லில் “பகுத்­த­றிவு பிறந்­த­தெல்­லாம் கேள்­வி­கள் கேட்­ட­த­னாலே” என்ற அற்­பு­த­மான வரி­யும் இடம் பெற்­றி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்தத் திரைப்­ப­டத்தை பார்த்த ஏழை எளிய மக்­கள்பலர் அந்­தப் பாட­லின் எழுச்­சி­மிகு கருத்­துக்­களை உள்­வாங்­கி­யி­ருக்­க­லாம். ஏனெ­னில் எம்.ஜி.ஆர். சார்ந்­தி­ருந்த மகத்­தான பகுத்­த­றிவு இயக்­க­மா­கிய திரா­விட இயக்­கம் அதே செய்­தி­யைத்­தான் மக்­க­ளி­டையே பரப்­பிக்­கொண்­டி­ருந்­தது. மக்­க­ளாட்சி என்­பது ஆட்­சி­யில் உள்­ள­வர்­க­ளைப் பார்த்து “ஏன்?” என்ற கேள்­வி­யைக் கேட்­ப­து­தான் என்ற செய்­தி­யைத்­தான் பெரி­யா­ரும், அண்­ணா­வும், கலைஞ­ ரும் ஓயா­மல் பிரச்­சா­ரம் செய்து வந்­தார்­கள்.எம்.ஜி.ஆர். அதைப் பாட­லா­கவே திரை­யில் பாடி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ஆயி­ரத்­தில் ஒரு­வன்” மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற்­றது. செல்வி ஜெய­ல­லிதா எம்.ஜி.ஆரு­டன் இணைந்து நடித்த முதல் திரைப்­ப­டம் அது. திரைப்­ப­டக் கலை­யின் ஒரு பிரச்­சினை என்­ன­வென்­றால் கதா­நா­ய­கர்­க­ளாக நடிப்­ப­வர்­கள் கதை­யில் செய்­யும் சாக­சங்­க­ளில் மன­தைப் பறி­கொ­டுக்­கும் பல­வீ­ன­மான உள­வி­யல் கொண்ட ரசி­கர்­கள் அவர்­கள் பிம்­பத்­தி­னால் பெரி­தும் ஈர்க்­கப்­பட்டு வழி­பாட்டு மன நிலைக்­குச் சென்று விடு­வார்­கள். ஏன் என்று கேள்வி கேட்க மறந்­து­விட்டு, அந்­தப் பாட­லுக்கு வாய­சைத்த நடி­கரை வழி­ப­டத் தொடங்கி விடு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காலம் கால­மாக மானுட வர­லாற்­றில் நடப்­ப­து­தான் அது. மகான்­க­ளும், துற­வி­க­ளும், இறை தூதர்­க­ளாக கரு­தப்­பட்ட மேலோர்­க­ளும் மானுட வாழ்­விற்­கான நெறி­க­ளைத்­தான் உரு­வாக்­கு­வார்­கள். ஆனால் அவர்­கள் கூறிய நெறி­கள் மறக்­கப்­பட்டு அவர்­களே பிம்­பங்­க­ளாக, புனித அடை­யா­ளங்­க­ளாக, சிலை­க­ளாக மாற்­றப்­பட்டு மக்­க­ளால் வழி­ப­டப்­ப­டு­வார்­கள். பூசா­ரி­கள் இடையே புகுந்து தங்­கள் ஆதிக்­கத்­தை­யும், கொடுங்­கோல் மன்­னர்­கள் ஆதிக்­கத்­தை­யும் அந்த இறை பிம்­பங்­க­ளைக் கொண்டு நிலை­நாட்­டு­வார்­கள். புத்­தர், ஏசு என பல­ருக்­கும் நடந்­தது அது­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே போலத்­தான் திரை­யில் ஏழைப்­பங்­கா­ள­னாக நடித்து, பகுத்­த­றிவு பேசி திரா­விட இயக்­கப் பிரச்­சா­ரத்­தின் அங்­க­மாக இருந்த எம்.ஜி.ஆர்., அவரே வழி­பாட்­டிற்கு உரிய நாயக பிம்­ப­மாக மாறி கேள்­விக்கு அப்­பாற்­பட்ட அதி­கார மைய­மாக மாறி ஆட்சி செய்­தார். அவ­ருக்­குப் பின் வாரி­சாகஅவ­ரு­டன் நடித்த அம்­மை­யார் ஜெய­ல­லி­தா­வை­யும் விட்­டுச் சென்­றார். பகுத்­த­றிவு இயக்­கம் பிம்ப வழி­பாட்டு இயக்­க­மாக அவர்­க­ளால் மாற்­றப்­பட்டு சீர­ழிந்­தது. மற்­றொ­ரு­பு­றம் கலை­ஞ­ரும், பெரி­யா­ருக்­குப் பின் ஆசி­ரி­யர் வீர­ம­ணி­யும் மேலும் பல தலை­வர்­க­ளும் சிந்­த­னை­யா­ளர்­க­ளும் திரா­விட இயக்க பகுத்­த­றிவு மரபை பேணிக் காக்க போரா­டி­னார்­கள். அந்­தப் போராட்­டம் இன்­றும் தொடர்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">எம்.ஜி.ஆர். குல்லா அணி­யும் அர­சி­யல் 
நீக்க நாயக பிம்­பம் விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட இயக்­கம் தொடக்­கம் முதலே தீவி­ர­மாக எதிர்த்து வந்த “இந்து- இந்­தி-­­இந்­தியா” என்ற முழக்­கத்தை முன்­னி­றுத்­தும் பார்ப்­ப­னீய இந்­துத்­துவ சக்தி 2014-ஆம் ஆண்டு ஒன்­றிய அர­சில் முழு பெரும்­பான்­மை­யு­டன் ஆட்­சிக்கு வந்­தது. அதி­லி­ருந்து தமிழ்­நாட்­டில் எப்­ப­டி­யா­வது திரா­விட இயக்­கத்­தின் சுவ­டு­களை அகற்­றி­விட்டு ஆட்­சிக்கு வந்­து­விட வேண்­டும் என்று துடித்­தது. ஜெய­ல­லிதா மறை­விற்­குப் பின் அ.இ.அ.தி.மு.க-.வை கப­ளீ­க­ரம் செய்ய நினைத்­தது. நடி­கர் ரஜி­னி­காந்த்தை பக­டைக்­கா­யா­கப் பயன்­ப­டுத்த விரும்­பி­யது. அவர் தப்­பித்­துக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் வர­லாற்று ஆன்­மா­வின் தொடர்ச்­சி­யாக கலை­ஞர் மறை­விற்­குப் பின் மு.க.ஸ்டாலின் 
கட்­சித் தலை­மை­யேற்­றார். பா.ஜ.க. எதிர்ப்பே தன் அர­சி­யல் என முழங்­கி­னார். இரண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளில் 2019, 2024 தேர்­தல்­க­ளில் 
பா.ஜ.க.-வை முற்­றி­லு­மாக முறி­ய­டித்­தார். மாநில 
சட்­ட­மன்­றத் தேர்­த­லில் 2021-ஆம் ஆண்டு பெரு­வெற்றி பெற்று முதல்­வ­ராகி, தமிழ்­நாட்­டினை அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய திரா­விட மாடல் வளர்ச்­சிப் பாதை­யில் கொண்டு சென்­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்ன செய்­தும் திரா­விட இயக்­கத்தை வீழ்த்த முடி­யாத பா.ஜ.க., நடி­கர் விஜய் என்ற திரைப் 
­பிம்­பத்தை கள­மி­றக்­கி­யது. அர­சி­யல் நீக்­கத்­தின் உரு­வ­க­மான உள்­ளீ­டற்ற நாயக பிம்­ப­மாக விஜய் இன்ஸ்­டா­கி­ராம், வாட்ஸ் அப் குழுக்­கள் மூலம் இளை­ஞர்­களை மூளைச்­ச­லவை செய்து, மக்­க­ளுக்கு இயல்­பா­கவே இருக்­கக் கூடிய போதா­மை­க­ளைப் பயன்­ப­டுத்தி மாற்­றத்­தின் நாய­க­னாக தன்னை முன்­னி­றுத்தி வெற்றி பெற்­றார். “திரா­வி­டம்” “தமிழ்­நாடு” ஆகிய இந்­துத்­து­வம் வெறுக்­கும் இரண்டு வார்த்­தை­க­ளை­யும் தவிர்த்து “தமி­ழக வெற்­றிக் கழ­கம்” என்ற பெய­ரில் ஆட்­சிக்கு வந்­தார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அதற்­கான சாத்­தி­யம் எப்­படி உரு­வா­கி­யது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எம்.ஜி.ஆர்., ஜெய­ல­லிதா என்ற திரைப்­பிம்ப தலை­மை­யின் தொடர்ச்சி அ.இ.அ.தி.மு.க-.வில் அறு­பட்டு போனது. எடப்­பாடி பழ­னி­சா­மி­யால் திரா­விட இயக்­கப் பகுத்­த­றி­வுக் கொள்­கை­க­ளை­யும் பேச முடி­ய­வில்லை; மக்­களை ஈர்க்­கும் ஆளு­மை­யா­க­வும் இல்லை. அத­னால் பா.ஜ.க.-வின் துணை­யு­டன் ஆட்சி செய்­ப­வ­ரா­கவே விளங்­கி­னார். அது அவரை தேர்­தல் வெற்­றி­க­ளுக்கு இட்­டுச்­செல்­ல­வில்லை. அவர் செல்­வாக்கு குறை­யத் துவங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அந்த நேரத்­தில் தன்­னு­டைய திரைக்­க­தா­நா­யக பிம்­பத்தை முத­லீடு செய்ய விஜ­யைத் தூண்­டி­யது பா.ஜ.க.. திரைப்­ப­டங்­க­ளில் பிறர் இயக்­கியே நடித்து பழக்­கப்­பட்ட விஜய்க்கு சிறி­தும் அர­சி­யல் பயிற்­சியோ ஆர்­வமோ இல்லை. தன்­னையே ஒரு கதா­நா­யக பிம்­ப­மா­கப் பார்க்­கும் தற்­கா­தல் மட்­டுமே அவ­ருக்கு இருந்­தது. அத­னால் அவரை இயக்க பல ஆலோ­ச­கர்­கள் நிய­மிக்­கப் பட்­டார்­கள். அவர்­கள் சொற்­படி நடப்­ப­தும், அவர்­கள் எழு­திக் கொடுப்­பதை படிப்­ப­து­மாக ஒரு பொம்­மைத் தலை­வ­ராக விஜய் உரு­வா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கரூ­ரில் அவர் கூட்­டக்­காட்சி அர­சி­யல் மோகத்­திற்­காக சேர்க்­கப்­பட்டு, நாள் முழு­வ­தும் காக்க வைக்­கப்­பட்ட கூட்­டத்­தில் நெரி­ச­லில் பலர் மூர்ச்­சை­ய­டைந்து விழுந்து மிதி­பட்டு இறந்த கொடூ­ரம் அரங்­கே­றி­யது.  உடனே அஞ்சி நடுங்கி விஜ­யும், அவர் மொத்த கட்­சி­யும் வளைக்­குள் சென்று பதுங்­கும் உயி­ரி­கள் போல பதுங்­கிக் கொண்­ட­னர். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.  ஆகிய இரண்டு கட்­சி­க­ளுமே விஜயை நேர­டி­யா­கக் குற்­றம் சாட்­டா­மல் பெருந்­தன்­மை­யாக நடந்து கொண்­டன. ஆனா­லும் விசா­ரணை, வழக்கு எல்­லாம் விஜயை பய­மு­றுத்­தின. வழக்கு ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள சி.பி.ஐ.க்கு மாற்­றப்­பட்ட தால் பா.ஜ.க. அவரை காப்­பாற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க-.வை வீழ்த்த நினைத்த பார்ப்­ப­னீய, இந்­துத்­துவ சக்­தி­க­ளெல்­லாம் ஒன்றுசேர்ந்து மீண்­டும் விஜயை தூக்கி நிறுத்­தின. அவ­ரும் செல் ஃபோன் மூல­மான பொய் பிர­சா­ரத்­தில் சிறப்­பா­கச் செயல்­பட்டு மக்­களை ஈர்ப்­ப­தில் வெற்றி பெற்­றார். முழு­மை­யான வெற்றி கிடைக்­கா­விட்­டா­லும், வட தமிழ்­நாட்­டில், சென்­னை­யில் அவர் கணி­ச­மான வாக்­கு­க­ளைப் பெற்­றார். முற்­றி­லும் எதிர்ப்­பா­ராத வகை­யில் 108 
தொகு­தி­க­ளில் வென்­றார். அந்த வெற்றி நிச்­ச­யம் விரி­வாக ஆரா­யப்­பட வேண்­டி­யது என்­ப­தில் ஐய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் அர­சி­யல் உள்­ளீ­டற்ற திரை­பிம்­ப­மா­கவே விஜய் ஆட்சி செய்­யத் தொடங்­கி­ய­து­தான் அவ­லம். அதி­லும் அவ­ருக்­குப் பெரும்­பான்மை இல்­லா­த­தால் அவரை ஆத­ரிக்க ராகுல் காந்­தி­யும், திரு­மா­வ­ள­வ­னும் முன்­வந்­த­தும், அவ­ரு­டைய அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்று இப்­போது அர­சி­யல் கூட்­டணி அமைத்­தி­ருப்­ப­தும் ஒரு அர­சி­யல் சிக்­கலை உரு­வாக்­கி­யுள்­ளன. அகில இந்­திய அள­வில் தி.மு.க., காங்­கி­ரஸ் பிரிந்­தது இந்­தியா கூட்­ட­ணியை பல­வீ­னப்­ப­டுத்த பா.ஜ.க.-விற்கு பெரி­தும் உத­வி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">வாக்­கு­ரிமை பறிப்பு மோச­டி­யும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் குள­று­ப­டி­க­ளும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில்­தான் நாடெங்­கும் 13 கோடி மக்­க­ளின் வாக்­கு­ரி­மையை சிறப்­புத் தீவிர திருத்­தம் (SIR) என்ற பெய­ரில் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் பறித்­தது தேசிய அள­வில் பெரும் போராட்­டம் வெடிக்­கக் கார­ண­மா­கி­யுள்­ளது. இந்த வாக்­கு­ரிமை பறிப்­பிற்கு முக்­கிய கார­ணம் பழைய வாக்­கா­ளர் பட்­டி­யல் சீர்­தி­ருத்­தம் தொடர்­பான ஆவ­ணங்­களை கொடுக்­கச் சொல்லி வாக்­கா­ளர்­களை கட்­டா­யப் படுத்­தி­ய­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதா­வது ஒரு­வர் வாக்­கா­ளர் அடை­யாள அட்டை வைத்­தி­ருந்­தா­லும், அதில் குறிப்­பிட்ட விலா­சத்­தில் வசித்­தா­லும், பழைய ஆவ­ணங்­கள், அவர்­கள் பெற்­றோர் தொடர்­பான ஆவ­ணங்­க­ளைக் கேட்­டுத் தர­வில்­லை­யென்­றால் அவர்­களை பட்­டி­ய­லில் இருந்து நீக்­கு­வது. இது தொடர்­பான ஏரா­ள­மான வழக்­கு­கள் உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்­குச் சென்ற. முறை­கே­டு­கள் விரி­வா­கச் சுட்­டிக் காட்­டப்­பட்­டன. ஆனால் உச்­ச­நீ­தி­மன்­றம் தேர்­தல் ஆணை­யத்தை மென்­மை­யா­கக் கண்­டித்­து­விட்டு அதன் செயல்­பாட்டை அனு­ம­தித்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னால் மெல்ல மெல்ல கொதி­நிலை ஏறிப்­போ­யி­ருந்­த­போ­து­தான், இரண்டு தேர்­தல் ஆணை­யர்­கள் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுக்­கி­றார் என்று கூறி­யி­ருந்த ரக­சி­யம் வெளிப்­பட்டு பெரு­நெ­ருப்பு பற்­றி­யது. ஏற்­க­னவே நீட் தேர்வு மோச­டிக்கு எதி­ரா­கப் போராட்­டம் நட த்தி வென்ற காக்­ரோச் ஜனதா பார்ட்டி என்ற இளை­ஞர் அமைப்­பும், இட துசாரி மாண­வர் கூட்­ட­மைப்­பு­க­ளும் மீண்­டும் தேர்­தல் ஆணை­ய­ருக்கு எதி­ராக கள­மி­றங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நஸ்­ரு­தீன் ஷா, ஷபானா ஆஸ்மி, பிர­காஷ் ராஜ் உள்­ளிட்ட பிர­பல நடி­கர்­கள், உதவ் தாக்­கரே, ராஜ் தாக்­கரே உள்­ளிட்ட பல எதிர்க்­கட்சி தலை­வர்­கள், கபில் சிபல், பிர­சாந்த் பூஷண், யோகேந்­திர யாதவ் போன்ற செயல்­பாட்­டா­ளர்­கள் எல்­லோ­ரும் போராட்­டத்­தில் இணைந்­துள்­ளார்­கள். தலை­ந­கர் டில்­லி­யில் ஜந்­தர் மந்­தர் பகு­தியை யாரும் நெருங்­க­வி­டா­மல் தடுப்­பு­கள் அமைத்து தின­சரி போராட்­டக்­கா­ரர்­களை கைது செய்து வரு­கி­றது காவல்­துறை. போராட்­டத்­தின் வேகம் அதி­க­ரிக்­கி­றதே தவிர குறை­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் ஆணை­யம் இரண்­டு­வி­த­மான பிரச்­சி­னை­க­ளில் சிக்­கி­யுள்­ளது. ஒன்று வாக்­க­ளர் பட்­டி­யி­லில் இருந்து கோடிக்­க­ணக்­கா­ன­வர்­களை நீக்­கி­யது, அந்த நடை­மு­றை­யில் வெளிப்­ப­டைத்­தன்மை இல்­லா­தது, வாக்­கா­ளர் பட்­டி­யல் கணினி நிரல்­களை ஒரு சிலரே கையாள்­வது போன்ற பல தீவி­ர­மான குற்­றச்­சாட்­டு­களை சந்­திக்­கி­றது. இரண்­டா­வது கடந்த பன்­னி­ரண்டு ஆண்­டு­க­ளா­கவே பல­ரும் கூறி­வ­ரும் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­திர மோச­டி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உச்­ச­நீ­தி­மன்­றம் விவி­பாட் எனப்­ப­டும் வாக்­கா­ளர் ஒப்­பு­கைச் சீட்­டு­க­ளை­யும், மின்­னணு இயந்­தி­ரங்­கள் காட்­டும் எண்­ணிக்­கை­யை­யும் பத்து சத­வீ­த­மா­வது ஒப்­பிட்டு சரி­பார்க்­க­வேண்­டும் என்று தீர்ப்பு வழங்­கி­யது. ஆனால் இந்த சரி­பார்ப்பு திருப்­தி­க­ர­மாக நடப்­ப­தில்லை. முரண்­பா­டு­கள் தோன்­றி­னால் அதற்கு விளக்­கங்­கள் அளிக்­கப்­ப­டு­வ­தில்லை. மின்­னணு வாக்கு இயந்­திர உற்­பத்­தி­யி­லி­ருந்து, அவை தேர்­தல் முடிந்­த­தும் சீல் வைக்­கப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­வது, விவி­பாட் சீட்­டு­க­ளு­டன் சரி­பார்ப்­பது என ஏரா­ள­மான அம்­சங்­கள் ஐயத்­திற்கு உரி­ய­வை­யா­கவே விளங்கி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இப்­போது SIR நடந்த பிற­கான தேர்­தல்­க­ளில் எல்­லாம் பா.ஜ.க.-வைஎதிர்த்தமுக்­கிய தலை­வர்­கள் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளார்­கள். குறிப்­பாக மேற்கு வங்க தேர்­தல் மிக மோச­மாக கள­வா­டப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்­டில் தலை­வர்மு.க.ஸ்டாலின் குளத்­தூர் தொகு­தி­யில் தோல்வி அடைந்­தது மிகுந்த ஐயங்­களை உரு­வாக்­கு­வ­தாக உள்­ளது. அவர் பண்­பட்ட அர­சி­யல்­வா­தி­யாக தன் தோல்­வியை ஏற்­றுக்­கொண்­டா­லும், பின்­னர் வாக்கு எண்­ணிக்கை சரி­பார்ப்­பில் பல­வி­த­மான ஐயங்­கள் தோன்றி, வழக்­குப் போடப்­பட்­டுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கார்கே கண்­ட­ன­மும், விஜய் மெள­ன­மும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் பிர­வீன் சக்­ர­வர்த்தி, மாணிக் தாகூர் போன்ற சில தலை­வர்­கள் செய்த சதி­யால் காங்­கி­ரஸ் தேர்­த­லுக்­குப் பின் விஜ­யு­டன் கூட்­டணி அமைத்­தா­லும், விஜய் காங்­கி­ர­ஸின் எந்த போராட்ட த்திற்­கும் ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை. பா.ஜ.க.-வை எந்­தக் கார­ணம் கொண்­டும் ஒரு வார்த்தை கூட எதிர்த்­துப் பேசு­வ­தில்லை. ஆனா­லும் சென்ற வாரம் தமிழ்­நாட்டு இந்­தியா கூட்­டணி கூட்­டத்­தில் ஆதவ் அர்­ஜுனா கலந்து கொண்­டுள்­ளார். பேருக்கு தலை காட்­டு­கி­றாரே தவிர, ஒரு­போ­தும் அவர்­கள் பா.ஜ.க.-வை எதிர்க்க முன்­வ­ர­மாட்­டார்­கள் என்­பது வெளிப்­ப­டை­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. கடந்த மூன்று தேர்­தல்­க­ளாக காங்­கி­ர­ஸின் முக்­கிய ஆத­ரவு சக்­தி­யாக, இந்­தியா கூட்­ட­ணி­யின் முக்­கிய அங்­க­மாக விளங்­கி­ய­போ­தும், 2026 தேர்­த­லில் விஜய் வென்­ற­வு­டன் தன்னை முது­கில் குத்­தி­விட்டு சென்ற காங்­கி­ர­ஸு­டன் இந்­தியா கூட்­ட­ணி­யில் தொடர்­வ­தில்லை என்று நியா­ய­ மா­கவே முடிவு செய்­துள்­ளது. ஆனால் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ருக்கு கடு­மை­யான கண்­ட­னம் தெரி­வித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில்­தான் காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே தீவி­ர­மான ஒரு குரலை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். அவர் சட்ட விரோ­த­மாக SIR நடந்து வாக்­கா­ளர்­களை நீக்­கிய பிறகு நடந்த தேர்­தல்­கள் எல்­லாமே சட்ட விரோ­த­மா­னவை; அவற்­றின் மூலம் அமைந்த அர­சு­க­ளும் சட்ட விரோ­த­மா­னவை என்று கூறி­யுள்­ளார். அப்­ப­டி­யா­னால் தமிழ்­நாட்­டில் நடந்த தேர்­த­லும், விஜய் அர­சும் சட்ட விரோ­த­மா­னவை என்­று­தான் பொருள்­ப­டும். அந்த அர­சு­கள் அனைத்­தும் கலைக்­கப்­பட வேண்­டும். நீக்­கப்­பட்ட வாக்­கா­ளர்­களை சேர்த்து மறு­தேர்­தல் நட த்த வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏற்­க­னவே காங்­கி­ரஸை நம்­பா­மல், அ.இ.அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை குதிரை பேரத்­தில் வாங்­கு­வ­தில் தீவி­ர­மாக உள்ள விஜய் கார்­கே­யின் முழக்­கத்­திற்கு என்ன பதில் சொல்­வார் என்­பது மிகப்­பெ­ரிய கேள்­விக்­குறி. தமிழ்­நாட்­டில் நடந்த SIR மட்­டும் நியா­ய­மா­னது என்று சொல்ல இய­லாது. இங்கே அதி­கம் வழக்­கு­கள் பதி­வா­க­வில்லை என்று வேண்­டு­மா­னல் சொல்­ல­லாம். ஆனால் முறை­யற்ற நீக்­கங்­களே நடக்­க­வில்லை என்று கூற­மு­டி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அகில இந்­திய அர­சி­யல் நீக்க சக்­தி­யாக மாறு­வாரா விஜய்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விஜ­யின் மெள­னத்­திற்கு மற்­றொரு பரி­மா­ண­மும் உள்­ளது. அது­தான் அவர் குறித்து இந்­தியா முழு­வ­தும் நடை­பெ­றும் சமூக ஊடக பொய் பிரச்­சா­ரம். அவர் அடுத்த பிர­த­மர் வேட்­பா­ளர் என்று முன்­னி­றுத்­தப்­ப­டும் அவ­லம். இது எத­னால் நடக்­கி­றது என்­பது சிந்­திக்­கத் தக்­கது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காக்­ரோச் ஜனதா பார்ட்டி, இட துசாரி மாண­வர் அமைப்­பு­க­ளின் எழுச்சி வட நாட்­டில் ஜென் ஸீ எழுச்­சி­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் தமிழ்­நாட்­டிலோ அர­சி­யல் நீக்­கம் செய்­யப்­பட்ட, கதா­நா­யக தற்­கா­தல் வலை­யில் சிக்­கிய ஒரு ஜென் ஸீ உரு­வா­கி­யுள்­ள­தா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. அப்­போது விஜய் பிம்­பத்தை வட நாட்­டி­லும் பரப்­பி­னால், அது அர­சி­யல் மயப்­ப­டுத்­தப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு மாற்­றாக ஒரு அறி­யா­மைக் கூட்­டத்தை உரு­வாக்க உத­வ­லாம் என்று நினைக்க வாய்ப்­புள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த சாத்­தி­யத்தை சுட்­டும் வித­மாக ஒரு செய்தி சென்ற வாரம் வெளி­யா­கி­யது. அது என்­ன­வென்­றால் டில்­லி­யில்ஒரு இளம்­பெண் சாலை­யில் படுத்­துக்­கொண்டு மறி­யல் செய்­கி­றார். கார­ணம் கேட்­டால் தள­பதி விஜய் வந்து தன்னை கட்­டி­ய­ணைத்­தால் தான் எழுந்­தி­ருப்­பேன் என்று கூறு­கி­றார். இங்கே அவர் யார் என்ன என்­பது பிரச்­சி­னை­யில்லை. இந்­தச் செய்தி எப்­படி இன்ஸ்­டா­கி­ராம், யூடி­யூப், வாட்ஸ் அப் என சமூக ஊட­கங்­க­ளில் பரப்­பப் படு­கி­றது என்­ப­து­தான் முக்­கி­ய­மா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏன் என்ற கேள்வி இன்று கேட்­கா­மல் வாழ்க்­கை­யில்லை என்று பகுத்­த­றி­வைப் பாடிய எம்.ஜி.ஆர். பிம்­பம் இன்று ஒரு தொப்­பி­யாக மாறி­யது போல, கதா­நா­யக பிம்ப மாயை மூலம் இளை­ஞர்­க­ளின் புரட்­சிக் கனலை அணைக்­க­லாமாஎன்று ஆதிக்க சக்­தி­கள் சிந்­தித்­தால் வியப்­ப­தற்­கில்லை. அந்­தக் கனவு தமிழ்­நாட்டு இடைத்­தேர்­தல்­க­ளி­லும், 
வட நாட்­டி­லும் முறி­ய­டிக் கப்­ப­டு­வது இந்­திய 
மக்­க­ளாட்­சி­யைக் காக்க இன்­றி­ய­மை­யா­தது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>