<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,753,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 07 2026 03:36:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261007T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07102026-CHN-04" position.sequence="04" ex-ref="07102026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபணமானால்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="49">தேர்தல் ஆணைய முடிவுகளை ரத்து செய்வோம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை! தமிழக சட்டப்பேரவை தேர்தலும் ரத்து செய்யப்படுமா?</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">புது­டெல்லி, அக். 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எஸ்.ஐ.ஆர். பணி­க­ளின் போதுதலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தன்­னிச்­சை­யாக செயல்­பட்­டது நிரூ­ப­ண­மா­னால், அவ­ரால் எடுக்­கப்­பட்ட முடி­வு­களை ரத்து செய்­வோம் என்று உச்ச நீதி­மன்­றம் எச்­ச­ரித்­துள்­ளது. வாக்­கா­ளர் பெயர் சேர்ப்­புக்­கான படி­வம் 6ல் திருத்­தம் செய்­யப்­பட்­டதை உச்ச நீதி­மன்­றம் ஒப்­பு­தல் தர­வில்லை என்று நீதி­ப­தி­கள் கூறி­னர். இந்த விவ­கா­ரம் தொடர்­பாக தலை­மைத் தேர்­தல் ஆணை­யர், இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளுக்கு நோட்­டீஸ் அனுப்­ப­வும் நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்ட­னர். இந்த வழக்­கில் தேர்­தல் ஆணை­யத்­தின் முடி­வு­கள் ரத்­தா­னால், எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் நடந்த தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை தேர்­த­லின் முடி­வு­களும் ரத்­தா­குமா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நாடு முழு­வ­தும் நடத்­தப்­ப­டும் வாக்­கா­ளர் தீவிர திருத்­தம் பணி (எஸ்.ஐ.ஆர்.) தொடர்­பான விவ­கா­ரத்­தில் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார், பல முக்­கிய விவ­கா­ரங்­க­ளில் மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளின் ஆட்­சே­ப­னையை மீறி­யும், அவர்­க­ளுக்கு தக­வல் தெரி­விக்­கா­ம­லும் தன்­னிச்­சை­யாக பல முடி­வு­களை எடுத்­த­தாக குற்­றச்­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன. இதை­ய­டுத்து இந்த விவ­கா­ரம் தற்­போது நாடு முழு­வ­தும் பெரும் அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அதே­போன்று ஞானேஷ்­கு­மார் பதவி விலக வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­கள், மாண­வர் அமைப்­பு­கள் தொடர்ந்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இது­போன்ற நிலை­யில், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ருக்கு எதி­ராக பாட்­னா­வைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்­றும் வழக்­க­றி­ஞர் சைலேந்­திர மணி திரி­பாதி ஆகி­யோர் உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல மனுக்­களை தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். அதில், ”ஒட்­டு­மொத்த தேர்­தல் ஆணை­யத்­திற்கு சொந்­த­மான சட்ட அதி­கா­ரங்­களை மீறி ஞானேஷ் குமார் தனிப்­பட்ட முறை­யில் செயல்­பட்டு வரு­கி­றாரா என்­பதை தீர்­மா­னிக்க வேண்­டும். ஒரு­வேளை அவ்­வாறு இருந்­தால் தன்­னிச்­சை­யாக எடுக்­கப்­பட்ட 
முடி­வு­கள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­தவை என அறி­வித்து தகுந்த சட்ட 
நட­வடிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக இந்த வழக்­கில் ஒரு இறுதி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டும் வரை­யில் ஞானேஷ்­கு­மாரை இடை­நீக்­கம் செய்ய வேண்­டும். இதைத்­த­விர, கூட்­டாக முடி­வெ­டுத் ­தல் தொடர்­பான சட்­டப்­பூர்வ நடை­மு­றையை மீறி­ய­தற்­காக தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மற்­றும் பிற அதி­கா­ரி­கள் மீது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­களை தொடங்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி தெரி­வித்­தி­ருந்­த­னர். இதை­ய­டுத்து மேற்­கண்ட மனுக்­கள் அனைத்­தும் உச்ச நீதி­மன்­றத்­தின் தலைமை நீதி­பதி சூர்­ய­காந்த், நீதி­ப­தி­கள் ஜாய்­மா­லயா பாக்ஷி மற்­றும் 
வி.மோகனா ஆகி­யோர் அமர்­வில் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது மனு­தா­ரர்­கள் தரப்­பில் ஆஜ­ரான மூத்த வழக்­க­றி­ஞர்­கள் விகாஸ் சிங் மற்­றும் மேனகா குரு­சாமி, ” எஸ்.ஐ.ஆர். பணி தொடர்­பாக தேர்­தல் ஆணை­யத்­தின் பெய­ரில் 14 முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தா­க­வும், அவற்­றில் இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளும் ஆட்­சே­பனை தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தன்­னிச்சை­யாக முடி­வு­களை மேற்­கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே தேர்­தல் ஆணை­யர்­கள் இல்­லா­மல் எடுக்­கப்­பட்ட அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் ரத்து செய்ய வேண்­டும். அதே­போன்று தலை­மைத் தேர்­தல் ஆணை­யரை இடை­நீக்­கம் செய்து உத்­த­ரவு பிறப்­பிக்க வேண்­டும். மேலும் தேர்­தல் ஆணை­யம் பல உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட அமைப்பு என்­ப­தால், முடி­வு­கள் ஒரு­ம­ன­தாக எடுக்­கப்­பட வேண்­டும். ஒரு­மித்த முடிவு இல்­லா­த­பட்சத்­தில் பெரும்­பான்மை அடிப்­படை­யில் முடிவு எடுக்­கப்­பட வேண்­டும். இதைத்­தான் சட்ட விதி­க­ளும் கூறு­கி­றது என்று தெரி­வித்­தார். அப்­போது குறுக்­கிட்ட தலைமை நீதி­பதி,” ஞானேஷ் குமாரை இடை­நீக்­கம் செய்­தால் தேர்­தல் ஆணை­யத்­தின் செயல்­பா­டு­கள் பாதிக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எதிர்­வ­ர­வுள்ள தேர்­தல்­களை யார் நடத்­து­வார்­கள் என்று கேள்­வி­யெ­ழுப்­பி­னார். அதற்கு பதி­ல­ளித்த வழக்­க­றி­ஞர் விகாஷ் சிங்,” மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­களால் பணி­களை மேற்­கொள்ள முடி­யும் என்று பதி­ல­ளித்­தார். இதை­ய­டுத்து நீதி­ப­தி­கள் பிறப்­பித்த உத்­த­ர­வில், ”தலை­மைத் 
தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமாரை இடை­நீக்­கம் செய்­வது தொடர்­பாக ஒரு­த­லைப்­பட்­ச­மான இடைக்­கால உத்­த­ரவை உட­ன­டி­யாக பிறப்­பிக்க முடி­யாது. முத­லில் தேர்­தல் ஆணை­யம் மற்­றும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ரின் பதி­லைப் பெற வேண்­டும். தேர்­தல் ஆணை­யத்­தின் முடி­வு­கள் ஒரு­ம­ன­தா­கவோ அல்­லது பெரும்­பான்மை அடிப்­படை­யிலோ எடுக்­கப்­பட வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் ஆணை­யத்­தின் முடி­வு­கள் சட்­டத்­துக்கு உட்­பட்டே எடுக்­கப்­ப­டு­கின்­றன என்று நாங்­கள் கரு­து­கி­றோம். தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தன்­னிச்­சை­யாக சட்­டத்தை மீறி முடி­வு­கள் எடுத்­தது உறு­தி­யா­னால், அவற்றை ரத்து செய்­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வோம். செய்­தித்­தாள்­க­ளில் வெளி­யா­னதை அடிப்­ப­டை­யாக கொண்டு இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பிக்க முடி­யாது. குறிப்­பாக எஸ்.ஐ.ஆர். நட­வ­டிக்­கை­கள், வாக்­கா­ளர் பட்­டி­யல் தொடர்­பான நடை­மு­றை­கள் மற்­றும் படி­வம் 6-ல் செய்­யப்­பட்ட மாற்­றங்­கள் உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளும் இந்த வழக்­கு­களில் கேள்­விக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இரு வழக்­கு­க­ளை­யும் ஒன்­றாக இணைத்து விசா­ரிக்க உச்ச நீதி­மன்­றம் முடிவு செய்­துள்­ளது. திருத்­தப்­பட்ட படி­வம் 6-க்கு உச்ச நீதி­மன்­றம் ஒப்­பு­தல் அளிக்­க­வில்லை என்­பதை தெளி­வு­ப­டுத்­திக் கொள்­கி­றோம். அந்த படி­வத்ைத திருத்­தி­ யது யார் என்­பதை அறிய விரும்­பு­கி­றோம். எனவே இந்த விவ­கா­ரம் தொடர்­பாக தலை­மைத் தேர்­தல் ஆணை­யர், இரு தேர்­தல் ஆணை­யர்­கள் மற்­றும் ஒன்­றிய அரசு ஒரு வாரத்­தில் பதி­ல­ளிக்க நோட்­டீஸ் பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது என்று உத்­த­ர­ விட்ட நீதி­ப­தி­கள், விசா­ர­ணையை ஒத்­தி­வைத்­த­னர். எஸ்.ஐ.ஆர்.  விவ­கா­ரம் தொடர்­பாக தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தன்­னிச்­சை­யாக முடிவு எடுத்­தார் என்­பது நிரூ­பிக்­கப்­ பட்­டால், அந்த முடி­வு­களை உச்ச நீதி­மன்­றம் ரத்து செய்ய வாய்ப்பு உள்­ளது. இது­வரை 20 மாநி­லங்­களில் எஸ்.ஐ.ஆர்.பணி­கள் நிறை­வ­டைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த மாநி­லங்­க­ளில் 13 கோடி வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளன. இதில், தமிழ்­நாடு 
உள்­ளிட்ட பல மாநி­லங்­க­ளில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் சட்­டப்­பே­ரவை தேர்­தல் நடை­பெற்­றுள்­ளது. தமிழ்­நாட்டை பொறுத்­த­வரை 74 லட்­சம் வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் எஸ்.ஐ.ஆர்.  பணி­யின்­போது நீக்­கப்­பட்­டன. சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் தி.மு.க. தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யின் தோல்­விக்கு பெரு­மளவு வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டது முக்­கிய கார­ண­மாக உள்­ளது. இந்த வழக்கு விசா­ர­ணை­யின் முடி­வில் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் தன்­னிச்­சை­யாக பிறப்­பித்த உத்­த­ர­வு­கள் ரத்து செய்­யப்­பட வாய்ப்பு உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அப்­படி அந்த உத்­த­ர­வு­கள் ரத்து செய்­யப்­பட்­டால், தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை தேர்­தல் முடி­வு­ க­ளும் ரத்து செய்­யப்­பட்டு, எஸ்.ஐ. ஆருக்கு முந்­தைய வாக்­கா­ளர் 
பட்­டி­யல் அடிப்­ப­டை­யில் மீண்­டும் தேர்­தல் நடத்­தப்­ப­டுமா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உச்ச நீதி­மன்­றத்­தின் முக்­கி­யக் கருத்­து­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் ஆணை­யத்­தின் 
எந்­த­வொரு முடி­வும் சட்­டத்­துக்கு இணக்­க­மாக இல்லை என்­பது தெரி­ய­வந்­தால், அந்த முடிவை நாங்­கள் ரத்து செய்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் ஆணை­யத்­தின் 
முடி­வு­கள் ஒரு­ம­ன­தா­கவோ அல்­லது பெரும்­பான்மை அடிப்­ப­டை­யிலோ எடுக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் ஆணை­யத்­தின் முடி­வு­கள் சட்­டத்­துக்கு உட்­பட்டே எடுக்­கப்­ப­டு­கின்­றன என்று நாங்­கள் கரு­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருத்­தப்­பட்ட படி­வம் 6-க்கு உச்ச நீதி­மன்­றம் ஒப்­பு­தல் அளிக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆவ­ணங்­கள் தாக்­கல் செய்­யப்­பட்ட பின்­னர், அந்­தப் படி­வத்தை யார் திருத்­தி­யது என்­பதை அறிய விரும்­பு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">‘அனைத்து நிறு­வ­னங்­க­ளும் அச்­ச­மின்றி செயல்­ப­டு­கின்­றன’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உச்ச நீதி­மன்­றம் நோட்­டீஸ் அனுப்­பி­யி­ருப்­பது குறித்து பா.ஜ. தலை­மை­ய­கத்­தில் செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்கு பதி­ல­ளித்த அக்­கட்சி­யின் செய்தி தொடர்­பா­ளர் சம்­பித் பத்ரா, ‘‘பொது­நல மனு தாக்­கல் செய்­வது, அதை உச்ச நீதி­மன்­றம் விசா­ரித்து மறு­த­ரப்பு கருத்து தெரி­விக்க நோட்­டீஸ் அனுப்­பு­வது வழக்­க­மான நடை­முறை­கள். இது ஜன­நா­யக, நீதித்­துறை சார்ந்த ஒரு செயல்­முறை. இது முறை­யாக நடை­பெற்று வரு­கி­றது. நாட்­டில் உள்ள அனைத்து நிறு­வ­னங்­க­ளும் சுதந்­தி­ர­மாக 
அச்­ச­மின்றி செயல்­ப­டு­வ­தற்­கான சான்று இது. அனை­வ­ரும் தங்­கள் கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக பேசு­கின்­ற­னர். அனைத்து நடை­முறை­க­ளும் அமைப்­பு­க­ளும் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. ஜன­நா­ய­கத்­திற்கு இதை­வி­டச் சிறந்த ஒரு முன்­மா­திரி வேறு எங்கே இருக்க முடி­யும்?’’ என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் இடைத்­தேர்­தல் நிலை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கம் உள்­ளிட்ட 20 மாநி­லங்­க­ளில் வாக்­கா­ளர் சரி­பார்ப்பு நடத்த தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது. இதற்­காக முகாம்­கள் நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அப்­படி என்­றால், தற்­போது இடைத்­தேர்­தல் நடை­பெ­றும் மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் தொகு­தி­யிலும்வாக்­கா­ளர் பட்­டி­யல் சரி­பார்க்­கா­மல் நடை­பெ­று­கி­றது. தற்­போது சரி­பார்ப்பு இல்­லாத தேர்­தல் நடை­பெ­று­வ­தும் நாளை தேர்­தல் வழக்­காக மாறும் நிலை ஏற்­ப­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>