<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 07 2026 21:20:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261008T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08102026-MDU-02" position.sequence="02" ex-ref="08102026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.97960263559774">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup906090_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தே</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ர்­தல்  ஆணை­யம் பயன்­ப­டுத்­தும் படி­வம் – 6இல்  செய்­துள்ள திருத்­தத்தை நாங்­கள் அங்­கீ­க­ரிக்­க­வில்லை என்று உச்­ச­நீ­தி­மன்­றம் இப்­போது சொல்லி இருக்­கி­றது. இப்­போது சொல்லி என்ன பயன்? சதி­க­ர­மான தேர்­தல்­கள் தான் நடந்து முடிந்து விட்­ட­னவே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தேர்­தல்­க­ளில் தான் பிரச்­சி­னை­கள்  வரும் என்­றால் இந்­தி­யா­வைப் பொறுத்­த­வ­ரை­யில் தேர்­தல் ஆணை­யர்­களே பிரச்­சி­னைக்கு உரி­ய­வர்­கள் ஆனார்­கள். அதி­லும்  தலை­மைத் தேர்­தல் அதி­கா­ரி­யாக ஞானேஷ்­கு­மார் நிய­மிக்­கப்­பட்­டது முதல் அவ­ரைச் சுற்­றி­யும், அவ­ரால் உரு­வாக்­கப்­ப­டும் பிரச்­சி­னை­கள் தான் அதி­கம். தலை­மைத் தேர்­தல் அதி­காரி ஞானேஷ் குமா­ருக்கு  நாங்­கள் சொன்ன ஆலோ­ச­னை­கள் எதை­யும் அவர் கேட்­கா­மல் தன்­னிச்­சை­யாக நடந்து கொண்­டார் என்று மற்ற இரு தேர்­தல் ஆணை­யர்­க­ளும் சொல்ல விவ­கா­ரம் இப்­போது இந்­தியா முழு­வ­தும் வெடித்­துள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதை வைத்து ஞானேஷ்­கு­மா­ருக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் சைலேந்­திர மணி திரி­பாதி என்­ப­வர் பொது­நல வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். ‘’இரண்டு தேர்­தல் ஆணை­யர்­க­ளின் எதிர்ப்பை மீறி தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் நடந்து கொண்­டுள்­ளார். இதில் மிக முக்­கி­ய­மா­னது படி­வம் 6 பிரச்­சினை ஆகும். படி­வம் 6 இரண்டு ஆணை­யர்­க­ளின் எதிர்ப்பை மீறி திருத்­தப் பட்­டுள்­ளது. சட்­டத் திருத்­தம் செய்து திருத்த வேண்­டி­யதை  தன்­னிச்­சை­யாக இணை­யத்­தில் திருத்தி இருக்­கி­றார்­கள். பெற்­றோர் விப­ரங்­கள் கேட்­கப்­பட்­டுள்­ளன. முந்­தைய திருத்­தம் தொடர்­பான நிபந்­த­னை­க­ளும் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இரண்டு தேர்­தல் ஆணை­யர்­கள் ஒப்­பு­தல் இல்­லா­மல் ஞானேஷ்­கு­மார் இதைச் செய்­துள்­ளார். இவை அனைத்­தும் சட்­ட ­வி­ரோ­த­மா­னது. எனவே ஞானேஷ்­கு­மார் மீது குற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்” என்று அந்த மனு­வில் கூறப்­பட்­டுள்­ளது. இதே போல் பாட்­னா­வைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் என்­ப­வ­ரும் மனு தாக்­கல் செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த இரு வழக்­கு­க­ளும் உச்­ச­நீ­தி­மன்­றத்  தலைமை நீதி­பதி சூர்­ய­காந்த், நீதி­ப­தி­கள் ஜோய்­மால்யா பாக்சி, மோகனா அமர்­வில் விசா­ர­ணைக்கு வந்­தது. விசா­ர­ணை­யின் போது நீதி­ப­தி­கள் சொன்ன ஒரு கருத்து அதிர்ச்­சிக்­கு­ரி­ய­தாக  இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘’தேர்­தல் ஆணை­யம் பயன்­ப­டுத்­தும் படி­வம் 6 இல்  செய்­யப்­பட்­டுள்ளஎந்த மாற்­றத்­தை­யும் நாங்­கள்  அங்­கீ­க­ரிக்க வில்லை. இதை இந்த நீதி­மன்­றம் தெளி­வு­ப­டுத்­து­கி­றது. இது குறித்து தேர்­தல் ஆணை­யம் விளக்­கம் அளிக்க வேண்­டும். அவர்­கள் விளக்­கம் அளித்த பிறகு, அதை மாற்­றி­யது யார் என்­ப­தைக் கண்­டு­பி­டிப்­போம்” என்று நீதி­ப­தி­கள் சொல்லி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">SIR நடை­மு­றை­யின் கீழ் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இணைய வழி­யில் பெயர் சேர்க்­கும் புதிய வாக்­கா­ளர்­கள் தங்­க­ளது பெற்­றோ­ரின் SIR தக­வல்­க­ளை­யும் சேர்க்க வேண்­டும் என்று விதி சேர்க்­கப்­பட்­டது. 2025 ஜூலை மாதம் இந்த திருத்­தம் செய்­யப்­பட்­டது. இந்த தக­வல்­க­ளைப்  பெறு­வது சாதா­ர­ண­மான விஷ­யம் அல்ல. அனை­வ­ருக்­கும் இந்த தக­வல்­கள் கிடைக்­காது. இந்த தக­வ­லைச் சேர்க்க முடி­யா­மல் போன­தால் தான் கொத்­துக்­கொத்­தாக பல­ரது  பெயர்­களை  சேர்க்க முடி­யா­மல் போனது. இந்த திருத்­தம் கூடாது என்று தான் தேர்­தல் ஆணை­யர்­க­ளான விவேக் ஜோஷி, சுக்­பீர் சிங் சாந்து ஆகிய இரு­வ­ரும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார்­கள். ஆனால் அதை தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் மதிக்­க­வில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">20 மாநி­லங்­க­ளில்  SIR பணி­கள் நடந்­துள்­ளன. இது­வரை 13 கோடி பேர் பெயர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ளது. இவை அனைத்­தும் மீண்­டும் கேள்­விக்­கு­ரி­ய­தாக ஆகி­றது.  SIR நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பிறகு நாடா­ளு­மன்­றத்  தேர்­தல் நடந்­துள்­ளது. தமிழ்­நாடு உள்­ளிட்ட பல மாநி­லங்­க­ளில் சட்­ட­மன்­றத் தேர்­த­லும் நடந்­துள்­ளது. இந்த முடி­வு­க­ளும் நியா­ய­மான, மக்­கள் முடி­வு­கள் தானா என்­ப­தும் கேள்­விக்­கு­ரி­யது ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் எத்­த­கைய  மோச­டி­யைச் செய்­துள்­ளார் என்­பது இதன்­மூ­லம் தெரிய வந்­துள்­ளது. எதைக் கேட்­டா­லும், ‘உச்­ச­நீ­தி­மன்­றமே சொல்லி விட்­டது, அங்­கீ­க­ரித்து விட்­டது’ என்று சொல்லி வந்­தார் ஞானேஷ்­கு­மார். ஆனால், ‘படி­வம் 6 திருத்­தத்தை அங்­கீ­க­ரிக்க வில்லை’ என்று உச்­ச­நீ­தி­மன்­றமே சொல்லி விட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">படி­வம் 6 இல் செய்­யப்­பட்ட திருத்­தத்தை உச்­ச­நீ­தி­மன்­றம் அங்­கீ­க­ரித்­துள்­ள­தாக கடந்த மாதம் செப்­டம்­பர் 26 ஆம் தேதி அன்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது. ‘’வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்­புத் தீவிர திருத்­தப் பணிக்­கான படி­வம் 6 இல் இணைக்­கப்­பட்ட உறு­தி­மொழி உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">SIR இல்­லாத காலங்­க­ளில் வாக்­கா­ளர் பதிவு விதி­கள் 1960 இன் படி பழைய படி­வங்­களே பயன்­ப­டுத்­தப்­ப­டும்” என்று செப்­டம்­பர் 6 அன்று தேர்­தல் ஆணை­யம் சொல்லி இருக்­கி­றது.  அப்­ப­டி­யா­னால் திட்­ட­மிட்டு தேர்­தல் ஆணை­யம் பொய் சொல்லி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘ஆன்­லைன் படி­வம் 6 இல் சட்­ட­வி­ரோத மாற்­றத்­தைச் செய்ய டி.சி.எஸ். நிறு­வ­னத்­துக்கு  தேர்­தல் ஆணை­யத்­தில் யார் உத்­த­ர­விட்­டது? அவர்­கள் அவ்­வாறு செய்ய அழுத்­தம் கொடுக்­கப்­பட்­டதா?’’ என்று காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல்­காந்தி  எழுப்பி உள்ள கேள்­வி­யும் மிக­மிக முக்­கி­ய­மா­னது. உச்­ச­நீ­தி­மன்­றம் இதை­யும் விசா­ரிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திட்­ட­மிட்டு ஞானேஷ்­கு­மார் படி­வம் 6–ஐ சட்­ட­வி­ரோ­த­மாக மாற்றி இருக்­கி­றார். தேர்­த­லையே குற்­றச்­சம்­ப­வ­மாக மாற்றி இருக்­கி­றார் ஞானேஷ்­கு­மார். இதை விட சட்­ட­வி­ரோ­தம் இருக்க முடி­யாது. எந்­த­வித மிகப்­பெ­ரிய தண்­ட­னைக்­கும் அவர் பொருத்­த­மா­ன­வரே  ஆவார். உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­டம்  இருந்து மக்­கள் எதிர்­பார்ப்­ப­தும் அது­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க உச்­ச­நீ­தி­மன்­றம் மறுத்து விட்­டா­லும், அவர் இது­வரை பிறப்­பித்த அனைத்து உத்­த­ர­வு­க­ளும் ஆய்வு செய்­யப்­ப­டும் என்று சொல்லி இருக்­கி­றது. சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­ப­டாத முடி­வு­களை ரத்து செய்­வோம் என்­றும் உச்­ச­நீ­தி­மன்ற  நீதி­ப­தி­கள் சொல்லி இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யத்­தின் தவ­றான முடி­வு­க­ளால் நடத்­தப்­பட்ட தேர்­தல் முடி­வு­களை என்ன செய்­யப் போகி­றீர்­கள் என்­பது தான் மிக­மிக முக்­கி­ய­மான கேள்வி ஆகும். தவ­றான முடி­வு­க­ளால் தவ­றான மனி­தர்­கள் ஆட்­சி­யைக் கைப்­பற்றி இருப்­ப­தற்­கும் முடிவு கட்­டி­யாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு ஞானேஷ்­கு­மார் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தால் மட்­டும் இப்­பி­ரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யாது. வைத்து விடக் கூடாது. ஞானேஷ்­கு­மார் எடுத்த நட­வ­டிக்­கை­க­ளின்  விளை­வு­க­ளை­யும் விசா­ரணை செய்­தாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>