<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,1133" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 08 2026 03:53:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261008T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="08102026-VLR-07" position.sequence="07" ex-ref="08102026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">08.10.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">தேர்தல் ஆணையர்கள் நியமனம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை முறைகேடு! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Veeramaanicol_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை, அக். 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யாவே கொதித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. நாட்­டின் ஒட்­டு­மொத்த மக்­கள்­தொ­கை­யில் ஏறத்­தாழ 10% பேரின் (13 கோடி வாக்­கா­ளர்­க­ளின்) வாக்­கு­ரி­மை­யைப் பறித்­து­விட்­டது இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம். இந்­தி­யா­வில் வசிக்­கும் எல்­லோ­ரி­ட­மி­ருந்­தும், இந் நாட்­டுக் குடி­மக்­கள் யார் என்­ப­தைப் பிரித்­துக் காட்­டு­வது, வயது வந்த ஒரு­வ­ருக்கு இருக்­கும் வாக்­கு­ரிமை தான். அதைப் பறித்­தி­ருக்­கி­றார்­கள். வாக்­கு­ரிமை அற்ற இரண்­டாம் தரக் குடி­மக்­க­ளாக 13 கோடிப் பேர் ஆக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­றால், இது எவ்­வ­ளவு பெரிய மோசடி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கடந்த 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலா­கப் படிப்­ப­டி­யாக, தேர்­தல் முறை­கே­டு­கள் அரங்­கேறி வரு­கின்­றன. ஒவ்­வொரு சம­யத்­தி­லும் இது குறித்து எதிர்ப்­பு­கள் எழு­வ­தும், தேர்­தல் முடிந்­த­பின் வேறு பிரச்­சி­னை­க­ளின் கார­ண­மாக அடங்­கு­வ­து­மாக இந்­திய ஜன­நா­ய­கத்­தின் உயிர்ப் போராட்­டம் மூச்சை இழுத்து இழுத்து விட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தொடக்­கம் முதலே நாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சுட்­டிக்­காட்டி வரு­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இப்­போது அதன் மூக்கை அழுத்­திப் பிடித்து, ஒரே அடி­யாக மூச்சை நிறுத்­தும் வேலை­யைத் தான் எஸ்.அய்.ஆர். என்ற பெய­ரால், ஒன்­றியபா.ஜ.க. அர­சால் நிய­மிக்­கப்பட்ட தேர்­தல் ஆணை­யம் செய்து கொண்­டி­ருக்­கி­றது. இது வெறும் தேர்­தல் வெற்றி, தோல்­வி­யைச் சார்ந்­த­தல்ல. இதன் பின்­னால் மிகப்­பெ­ரிய சூழ்ச்சி ஒளிந்­தி­ருக்­கி­றது என்­ப­தைத் தொடக்­கம் முதலே நாம் சுட்­டிக்­காட்டி வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை ஏற்­காத அமைப்பு ஆர்.எஸ்.எஸ்! ஒவ்­வொரு குடி­ம­க­னுக்­கும் ஒரு வாக்கு என்ற அர­சி­யல் சமத்­து­வத்தை அது உரு­வாக்­கு­கி­றது. இந் நாட்­டின்  பன்­மொழி, பல மதங்­கள், பல கலாச்­சா­ரங்­கள் என்ற பன்­மைத்­து­வத்­தைப் பாது­காக்­கி­றது. சமூ­க­நீ­திக்கு உத்­த­ர­வா­தம் தரு­கி­றது. மதச் சார்­பின்­மையை முன்­மொ­ழி­கி­றது. இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் முகப்­புரை, இறை­யாண்மை மிக்க, சமத்­து­வ­மான, மதச்­சார்­பற்ற, ஜன­நா­ய­கக் குடி­ய­ரசை அமைக்க உறு­தி­ய­ளிக்­கி­றது. ஆனால், இவை எது­வும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஹிந்­துத்­து­வத் தத்­து­வத்­திற்குஉகந்­தவை அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வர்­ணா­சி­ர­மம் கோலோச்­சும், சமஸ்­கி­ருத - ஸநா­தன - பார்ப்­ப­னிய ஆட்­சி­யும், மத­மும், பண்­பா­டும் தான் ஆர்.எஸ்.எஸ்.சின் இலக்கு! அதை உரு­வாக்­கு­வது தான் ‘ஹிந்­து­ராஷ்­டிரா’ என்ற முழக்­கத்­தின் நோக்­கம். அந்த ஆயு­தங்­க­ளைக் கொண்டு போர் நடத்தி அவர்­க­ளால் வெல்ல முடி­யாது. இந்­நாட்­டின் 97 சத­வி­கித பார்ப்­ப­ன­ரல்­லாத, ஒடுக்­கப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­கள் ஒன்­றி­ணைந்­தால், ஹிந்­துத்­து­வா­வின் திட்­டம் தவி­டு­பொ­டி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மாறாக, தங்­கள் இலக்­கான வர்­ணா­சி­ரம ஹிந்­து­ராஷ்­டி­ரத்தை அடைய வேண்­டு­மா­னால், அதற்­குத் தடை­யாக இருக்­கும் இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை ஒழிக்க வேண்­டும். அதற்­குப் பதி­லாக மனுஸ்­மி­ரு­தி­யைக் கொண்டு வர­வேண்­டும். இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை ஒழிக்க வேண்­டு­மா­னால், அதற்கு ஆட்­சி­ய­தி­கா­ரம் வேண்­டும். அதி­லும் திருத்­தங்­க­ளைச் செய்ய வேண்­டு­மா­னால், இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்மை வேண்­டும் - அது­வும் மக்­க­ள­வை­யி­லும் வேண்­டும்; மாநி­லங்­க­ள­வை­யி­லும் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தேர்­தல் ஆணை­யம் பா.ஜ.க.வின் கைப்­பா­வை­!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்­றப் பொதுத் தேர்­த­லின் மூலம் மக்­க­ள­வை­யைப் பிடிக்­க­லாம்; ஆனால், எல்லா மாநி­லங்­கள் அல்­லது பெரும்­பான்மை கிடைப்­ப­தற்­கான எண்­ணிக்­கை­யில், பல மாநில சட்­ட­மன்­றங்­க­ளி­லும் பெரும்­பான்மை தேவை! இந்­தியா முழு­வ­தும் நடை­பெ­றும் தேர்­தல்­க­ளில் உட­ன­டி­யா­கப் பார­திய ஜனதா கட்­சிக்­குப் பெரும்­பான்மை கிடைத்­து ­வி­டாது. எனவே, அதற்­கேற்­பத் தேர்­தல்­களை நடத்­தத் திட்­ட­மிட வேண்­டும். அதற்­குத் தேர்­தல் ஆணை­யம் முழுக்க ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் கைப்­பா­வை­யாக இருக்க வேண்­டும். சந்­தே­கங்­கள் எழாத வண்­ணம் இவை­யெல்­லாம் நிறை­வேற்­றப்­பட வேண்­டும். இவற்­றை­யெல்­லாம் கருத்­தில் கொண்­டு­தான் படிப்­ப­டி­யா­கத் திட்­டங்­கள் ஒன்­றிய பி.ஜே.பி. ஆட்­சி­யால் நிறை­வேற்­றப் 
பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவற்­றுக்­கெல்­லாம் மூலா­தா­ர­மா­கத் தான் 2023 ஆம் ஆண்டு தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் மற்­றும் தேர்­தல் ஆணை­யர்­கள் சட்­டம் கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. தேர்­தல் ஆணை­யத்­தின் நிய­மன முறை­யில் கொண்டு வரப்­பட்ட மாற்­ற­மும், அதற்­காக உரு­வாக்­கப்­பட்ட இச் சட்­ட­முமே அடிப்­படை நியாய விரோ­த­மான சட்­ட­மா­கும்.தேர்­தல் ஆணை­ய­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் குழு­வில் நடு­நி­லைமைஏற்­படா வண்­ணம், வெளிப்­ப­டை­யா­கவே 2:1 என்று முடிவை அறி­வித்து விட்டு ஆடப்­பட்ட ஆட்­டம் அது. இந்­தி­யப் பிர­த­ம­ரும், ஒன்­றிய அமைச்­ச­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் அடங்­கிய மூவர் குழு­வின் முடிவு என்­ன­வாக இருக்க முடி­யும்? அதற்கு முன்பு, அக் குழு­வுக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்ட உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யின் பெயரை நீக்­கி­விட்­டுத்­தானே அதற்­குப் பதி­லாக ஒன்­றிய அமைச்­சர் ஒரு­வர் என்று சட்­டத்­தில் சேர்த்­தது பா.ஜ.க! எவ்­வ­ளவு வெளிப்­ப­டை­யான சார்­புத் தன்மை! இது­தானே பச்­சை­யான பார்ப்­ப­னி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மக்­க­ளின் ஜன­நா­ய­கத்தை உறுதி செய்ய வேண்­டிய தேர்­தல் ஆணை­யத்­தின் ஆணை­யர்­கள் தேர்வு முறை­யி­லேயே ஜன­நா­ய­கம் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டதே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அது மட்­டு­மல்ல, அடுத்­த­டுத்து பல முறை­கே­டு­க­ளைச் செய்­யப் போகி­றோம் என்­பதை உறுதி செய்­து­கொண்­டு­தான், அச் சட்­டமே வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த முறை­கே­டு­க­ளுக்­குத் தலை­மை­யேற்­கிற தேர்­தல் ஆணை­ய­ருக்­குத் தகுந்த பாது­காப்பு ஏற்­பா­டு­களை முன்­கூட்­டியே செய்­துள்­ளார்­கள் என்­பதை அச் சட்­டத்­தைச் சுட்­டிக்­காட்­டியே முன்பே நாம் எச்­ச­ரித்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்­டப் பிரிவு 16 என்ன சொல்­கி­றது?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">“தற்­போது நடை­மு­றை­யில் உள்ள வேறு எந்­தச் சட்­டத்­தி­லும் என்­ன­தான் கூறப்­பட்­டி­ருந்­தா­லும், தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரா­கவோ அல்­லது தேர்­தல் ஆணை­ய­ரா­கவோ பத­வி­யில் இருப்­ப­வர் அல்­லது இருந்­த­வர் ஒரு­வர், தனது அலு­வல்­ரீ­தி­யான கடமை அல்­லது பணி­யைச் செய்­யும்­போது அல்­லது செய்ய முற்­ப­டும்­போது செய்த செயல், நிகழ்வு அல்­லது பேசிய வார்த்தை தொடர்­பாக, அவர் மீது எந்­த­வொரு நீதி­மன்­ற­மும் சிவில் அல்­லது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவோ அல்­லது தொட­ரவோ கூடாது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் ஆணை­ய­ரா­கத் தற்­போது இருப்­ப­வர் மட்­டு­மல்ல, இச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள தேர்­தல் ஆணை­யர்­க­ளும், தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ரும் ஓய்வு பெற்ற பின்­னும், இப் பத­வி­யில் இருக்­கும் போது செய்த எவற்­றுக்­கா­க­வும் சிவில் அல்­லது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டக் கூடாது என்­னும் ஆயுள்­கால விலக்கை (Lifelong Immunity), சட்­ட­ரீ­தி­யான பாது­காப்பை வழங்­கி­யுள்­ளது இச் சட்­டம். (“who is or was a Chief Election Commissioner or an Election Commissioner”)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு மோச­டி­க­ளைச் செய்ய வேண்­டுமே, இத­னால் பிற்­கா­லத்­தில் நான் மாட்­டிக் கொண்­டால் என்ன ஆவது என்று அஞ்சி, மோசடி செய்­யத் தயங்­கக் கூடாது என்­ப­தற்­கா­கவே இப்­படி ஒரு பிரிவு அச்சட்­டத்­தில் இருக்­கி­றது என்­றால், நாம் எதிர்த்து நிற்­கும் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் எத்­த­கைய சூழ்ச்சி மிகுந்த திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள் என்­பதை எண்­ணிப் பாருங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இத்­த­கைய இம்­மி­யூ­னிட்டி, உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்கே கூடக் கிடை­யாதே! அதைத் தானே நேற்று முன் தினம் (5.10.2026) இது தொடர்­பான வழக்­கில் நீதி­பதி ஜோய்­மாலா பாக்சி அவர்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">‘‘பத­வி­யில் இருக்­கும்­போது வழங்­கப்­ப­டும் பாது­காப்பு என்­பது இயல்­பா­கவே புரிந்­து­ கொள்­ளக்­கூ­டிய ஒன்று. ஆனால், அந்­தச் சட்­டப்­பி­ரி­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ‘முன்பு பத­வி­யில் இருந்­த­வர்’ (was) என்ற அம்­சம், குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு மட்­டுமே பொருந்­தக்­கூ­டிய வகை­யி­லான பாது­காப்­பா­கத் தோன்­று­கி­றது. இது நீதி­ப­தி­க­ளுக்­குக் கூட பொருந்­தாது... ‘நீதி­ப­தி­கள் மீதான விசா­ர­ணைச் சட்­டத்தை’ (Judges Inquiry Act) சற்று கவ­னி­யுங்­கள்’’ என்று நீதி­பதி பாக்சி குறிப்­பிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே, இந்­தப் பிரச்­சினை தலை­மைத் தேர்­தல் ஆணை­யர், தேர்­தல் ஆணை­யர்­கள் தொடர்­பான பிரச்­சினை அல்ல; இதற்­குப் பின்­னால் உள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளின் பங்கு மிகப் பெரி­யது ஆகும். வாக்­குத் திருட்­டு­கள், வாக்­குப் பறிப்­பு­கள், தேர்­தல் பத்­தி­ரங்­கள், வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்­புத் தீவி­ரத் திருத்­தம் என்று இந்­தி­யா­வின் தேர்­தல் முறை­க­ளி­லேயே அப்­பட்­ட­மான முறை­கே­டு­கள் அரங்­கே­றி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இத்­த­கைய முறை­கே­டு­க­ளின் வாயி­லாக ஒன்­றிய அரசு முதல் மாநில அர­சு­க­ளுக்­கான தேர்­தல் முடி­வு­கள் வரை மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் தொலை­நோக்கு ஹிந்­து­ராஷ்­டிரா திட்­டங்­க­ளுக்­குத் தேவைப்­ப­டும் வகை­யில் அமை­வ­தற்­கான வழி­கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. அவை தான் கடந்த சில ஆண்­டு­க­ளாக நடை­பெ­றும் தேர்­தல்­க­ளில் பா.ஜ.க.வின் கணக்­கு­கள் வெற்­றி­பெற உத­வி­யி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">போராட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஓய்ந்­து­வி­டப் போவ­தில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நாடெங்­கும் நடக்­கும் போராட்­டங்­கள், மக்­க­ளின் அடிப்­படை உரி­மைக்­கான போராட்­டங்­கள்! இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தைக் காக்­கின்ற போராட்­டம்! இந்­தப் போராட்­டம் ஓய்ந்­து­வி­டப் போவ­தில்லை! இந்­தி­யா­வின் சுதந்­தி­ரத்தை, ஜன­நா­ய­கத்­தைக் காக்­கின்ற உண்­மை­யான சுதந்­தி­ரப் போராட்­ட­மாக அமை­யும் - அமை­ய­வும் வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நீதி­மன்­றங்­க­ளில் எழும் கேள்­வி­க­ளுக்கு, மக்­கள் மன்­றமே அடிப்­படை! இது யாரோ சில­ருக்­கான பிரச்­சி­னை­யல்ல - ஒட்­டு­மொத்த நாட்­டின் பிரச்­சினை என்­ப­தைப் புரிந்து அனை­வ­ரும் கட­மை­யாற்­ற­வேண்­டும். இதில் கட்சி, ஜாதி, மதம், மொழி, இனம் என்ற எந்த வேறு­பா­டும் இல்லை - இருக்­க­வும் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>