<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,921" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 08 2026 15:23:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261009T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09102026-CBE-06" position.sequence="06" ex-ref="09102026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup931903_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup932129_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="12">“ஜ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ன­நா­ய­கத்­தின் தொட்­டில்” (Cradle of Democracy) என்று ஆத­வன் மறை­யாக ஆங்­கில சாம்­ராஜ்­ய­மான இங்­கி­லாந்து நாட்­டின் ஆட்­சி­மு­றையை வர­லாற்று ஆசி­ரி­யர்­கள் வரு­ணித்­துள்­ளார்­கள். அந்த இங்­கி­லாந்து நாட்­டின் ஆட்­சி­மு­றையை பின்­பற்­றிய இந்­தியா ஒரு காலக்­கட்­டத்­தில் விடு­தலை பெற்­ற­பின்­னர், ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை பின்­பற்றி செயல்­ப­டத் தொடங்­கி­யது. ஆனால், இந்­திய ஒன்­றி­யத்­தோடு சம­கா­லத்­தில் விடு­த­லை­ பெற்ற அண்­டை­நா­டான பாகிஸ்­தான், சர்­வா­தி­கார ஆட்­சி­மு­றையை பின்­பற்றி செயல்­பட தொடங்­கி­யது. அவ்­வாறே இந்­தோ­னே­சி­யா­வும் சர்­வா­தி­கார ஆட்­சி­மு­றையை ஏற்­றுக்­கொண்டு செயல்­பட்டு வந்­தது. அன்­றைய பாகிஸ்­தான் அதி­ப­ராக இருந்த அதி­பர் அயூப்­கா­னி­டம் தாங்­கள் சர்­வா­தி­கார ஆட்­சி­மு­றையை  ஏற்­றுக்­கொண்­ட­வர்­தானே என்று பத்­தி­ரிக்­கை­யா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­ய­பொ­ழுது, அதி­பர் அயூப்­கான் எங்­கள் நாட்­டில் “பாது­காக்­கப்­பட்ட ஜன­நா­யக ஆட்சி” (Protected Democracy) முறை­தான் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­போன்றே  இந்­தோ­னே­சிய நாட்­டின் அதி­பர் சுகர்­னோ­வி­டம் கேட்­ட­பொ­ழுது, அவர் சொன்­னார் “எங்­கள் நாட்­டில் தூண்­டி­வி­டப்­பட்ட ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை” (Induced Democracy) ஏற்­றுக்­கொண்டு செயல்­ப­டுத்­து­கி­றோம் என்று பதில் கூறி­னார். எனி­னும் இவற்­றிற்கு மாறாக ஜன­நா­ய­கத்­தின் தொட்­டில் என்று அறி­யப்­பட்ட இங்­கி­லாந்து நாட்­டில் ஆட்­சி­முறை  1930களில் ஜன­நா­ய­கப் பாதை­யி­லி­ருந்து தடம்­மா­றிச்­சென்ற நிலை­யைக் கண்­டித்து அறி­ஞர் பெர்­ணாட்ஷா, தனது “ஆப்­பிள்­கார்ட்” (Apple Cart) என்ற நாட­கத்­தின் மூல­மாக இங்­கி­லாந்­தின் திசை­மா­றிய ஜன­நா­யக ஆட்­சி­முறை கடு­மை­யா­கக் கண்­டித்­தார் என்­பது வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­போன்ற ஒரு வித்­தி­யா­ச­மான, வேறு­பட்ட சூழ்­நி­லை­யில் ஜன­நா­யக ஆட்­சி­மு­றை­யில் இன்று உரு­வா­கி­யுள்­ளது. ஆம்! இந்­திய நாட்­டின்  தேர்­தல் ஆணை­யம் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் மேற்­கொண்ட சிறப்பு தீவிர திருத்­தத்­தின் (Special Intensive Revision) மூலம் ஜன­நா­ய­கத்­திற்கு குடும்ப கட்­டுப்­பாடு அறு­வைச் சிகிச்சை முறை­யில் செய்­தி­ருப்­ப­தா­கவே அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள் வாதப்­பி­ர­தி­வா­தங்­களை முன்­வைக்­கி­றார்­கள். அந்­த ­வ­கை­யில், சமீ­பத்­தில் தமிழ்­நாடு உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் நடை­பெற்ற பொதுத்­தேர்­தல்­க­ளில், தேர்­தல்­கள் நடை­பெ­று­வ­தற்கு முன்­னரே இந்த குடும்ப கட்­டுப்­பாடு அறு­வைச் சிகிச்­சை­யின் மூலம், ஒன்­றி­யத்­தில் ஆட்­சிப்­பொ­றுப்­பி­லுள்ள ஆளும் பார­தீய ஜன­தாக் கட்­சிக்கு எதி­ரான வாக்­கா­ளர்­க­ளாக கரு­தப்­ப­டும் வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­களை,  வாக்­கா­ளர் பட்­டி­ய­லின் வரி­சை­யி­லி­ருந்து நீக்­கப் ­பட்­டுள்­ளது வெளிப்­ப­டை­யா­கவே தெரி­ய­வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன்­மூ­லம் நீக்­கப்­பட்­டுள்ள வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் சட்­டப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­யின் மூலம் நடை­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை. ஆளுங்­கட்­சி­யான பார­தீய ஜன­தாக் கட்­சி­யின் அர­சி­யல் லாபத்­திற்­காக மட்­டுமே இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தால் (Election Commission of India) மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­பது இன்­றைய தேர்­தல் ஆணை­யம் தொடர்­பான அதிர்ச்­சி­யூட்­டும் செய்­தி­க­ளால் அறி­ய­மு­டி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின்  சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­த­மா­னது   மதச்­சார்­போ­டு­கூ­டிய உள்­நோக்­கம் கொண்­ட­தா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. இந்த ஒரு­த­லைப்­பட்­ச­மான நட­வ­டிக்­கை­யின்­மூ­லம் ஜன­நா­யக அமைப்­பு­மு­றை­யின் அடித்­த­ளம் ஆட்­டம் காண்­ப­தோடு உண்­மை­யான ஜன­நா­ய­கத்­தின் மக்­கள் பெரும்­பான்மை என்­றக் கோட்­பாட்டை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது. பல்­வேறு மொழி பேசு­கின்ற பண்­பாட்­டைப் பின்­பற்­று­கிற கலாச்­சா­ரங்­களை வாழ்­வி­ய­லாக கொண்­டி­ருக்­கிற  மக்­கள் வாழும் பரந்­து­பட்ட இந்­திய நாட்­டில் ஒரு கட்சி  ஆட்சி தொடர்ந்து நடை­பெ­று­வ­தற்­கான  வாய்ப்பை உரு­வாக்­கும் நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் வாக்­க­ளிப்­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே வாக்­கு­ரிமை வந்­த­தன்­மூ­லம் வாக்­கு­ரி­மையை இழந்­த­வர்­கள், வேரற்ற மரங்­க­ளாய் உரி­மை­யில்­லாத இந்­திய குடி­மக்­க­ளாக சொந்த நாட்­டி­லேயே புறக்­க­ணிக்­கப்­ப­டு­வது வேத­னை­க­ளின் உச்­ச­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆம்! அவர்­க­ளது வாக்­க­ளிக்­கும் உரிமை இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் இந்த சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்­தின் மூலம் (SIR) நிரந்­த­ர­மாக நீக்­கப்­பட்டு இந்த விப­ரீத குடும்­பக் கட்­டுப்­பாடு அறு­வைச் சிகிச்சை மூலம் வாக்­கு­ரிமை பறிக்­கப்­பட்­டி­ருப்­பது “ஒரு தாய் குழந்­தை­பெ­றும் இயற்­கை­யின் நிய­தியை பறிப்­ப­து­போல் ஆகி­றது”. “கரு­வ­றை­யிலே கல்­லறை கட்­டும் கொடுமை” இந்­திய தேர்­தல் ஆணை­யம் உண்­மை­யான வாக்­கா­ளர்­க­ளின் வயிற்­றெ­ரிச்­ச­லுக்கு ஆளா­கி­யிருப்­பதை அனைத்து தரப்பு மக்­க­ளும் நன்கு அறி­வர்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் ஆணை­யத்­தி­னு­டைய தலை­வர் ஞானேஷ்­கு­மார்­தான் இந்த குடும்ப கட்­டுப்­பாடு அறு­வைச் சிகிச்சை நட­வ­டிக்கை களுக்­கும்,  கரு­வ­றை­யி­லேயே கல்­லறை கட்­டிய கொடுஞ் செய­லுக்­கும் பொறுப்­பா­வார். அவ­ரைத் தவிர்த்து மற்ற இரண்டு ஆணை­யா­ளர்­கள் தலைமை ஆணை­யா­ளர் ஞானேஷ்­கு­மார் கடந்­த­கா­லத்­தில் எடுத்த முடி­வு­கள் பற்றி எங்­க­ளுக்கு எது­வும் தெரி­யாது.  அவ­ரும் அவற்­றைப்­பற்றி எங்­க­ளுக்கு தெரி­விக்க வில்லை என்று வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­தி­ருப்­பது தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரின் சர்­வா­தி­கா­ரப் போக்கை படம்­பி­டித்­துக் காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதில் குறிப்­பாக ஆழ்ந்து பரி­சீ­லிக்க வேண்­டி­யது எது­வெ­னில், தலைமை ஆணை­யா­ள­ரின் பின்­பு­ல­மும் அவ­ரது கடந்­த­கால பணி குறித்த விப­ரங்­க­ளை­யும் அறிந்து கொள்­வது இந்த சூழ்­நி­லை­யில் அவ­சி­ய­மா­ன­தும் தவிர்க்க முடி­யா­த­தும் ஆகி­றது. அதற்கு உதா­ர­ண­மா­கவே ஞானேஷ்­கு­மார் கேரள மாநி­லத்­தில் பொதுப்­ப­ணித்­துறை செய­லா­ள­ராக அவர் பணி­யாற்­றி­ய­பொ­ழுது, அவ­ரது துறை­யில் நடந்த ஊழல்­கள்­பற்றி விசா­ரிப்­ப­தற்கு இப்­போது கேர­ள­அ­ரசு ஆணை பிறப்­பித்­தி­ருப்­பது அனை­வ­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, தேர்­தல் ஆணை­யத்­தி­னு­டைய தலை­வர் ஞானேஷ்­கு­மா­ரின்  கடந்­த­கா­லங்­க­ளில் பணி­யாற்­றிய பொறுப்­பு­க­ளில் அவ­ரது நட­வ­டிக்­கை­கள் விமர்­ச­னங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை என்­பதை புரிந்­து­கொள்ள முடி­கி­றது. அவ­ரும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளும் இன்­றைக்­கும் பல்­வேறு உயர்­ப­த­வி­க­ளில் பணி­யாற்றி கொண்­டி­ருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேலும் ஆணை­யத் தலை­வர் செய்த தவ­று­க­ளுக்­காக நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் (Impeachment) கொண்­டு­வர வேண்­டும் என்­பதே நடு­நிலை யாளர்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கும். ஆனால், இன்­றைய சூழ்­நி­லை­யில் அத்­த­கைய நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னம் கொண்­டு­வந்து நிறை­வே­று­வ­தற்­கான வாய்ப்­பே­யில்லை. அவர் ஓய்­வு­பெற்ற பின்­ன­ரும்­கூட இதற்­காக அவர்­மீது நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்­கின்ற சட்­ட­பா­து­காப்­பும் அவ­ருக்கு 
இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, அவர் உட­ன­டி­யாக தனது பத­வியை ராஜி­னாமா செய்ய வேண்­டும் அல்­லது ஒன்­றிய அரசு அவரை பத­வி­யி­லி­ருந்து பணி­நீக்­கம் செய்ய வேண்­டும் அல்­லது உச்­ச­நீ­தி­மன்­றம் அவரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கானவழி­மு­றை­களை உரு­வாக்க வேண்­டும். இதன் முன்­மு­யற்­சி­யா­கத்­தான் இளை­ஞர்­கள், மாண­வர்­கள் மற்­றும் நல்­லெண்­ணம் கொண்­ட­வர்­கள் ஜந்­தர் மந்­த­ரில் கூடி இணைந்து நாட்­டின் தலை­ந­கர் “ஜந்­தர்­மந்­த­ரில்” தொடர்ந்து போராட்­டத்தை முன்­னெ­டுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.சமீ­பத்­தில் ஏறத்­தாழ ஆயி­ரம் போராட்­டக்­கா­ரர்­கள் கைது­செய்­யப்­பட்டு விடு­விக்­கப் 
­பட்­டி­ருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைத்தொடர்ந்து இரு­பால் இளை­ஞர்­கள் சார்­பு­டைய “கரப்­பான் பூச்சி ஜன­தாக் கட்­சி­யின்” (Cockroach Janatha Party) நிர்­வா­கி­கள் இணைந்து எதிர்­வ­ரும் அக்­டோ­பர் 10ஆம் தேதி­யன்று ஜந்­தர் மந்­த­ரில் இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தி­னு­டைய தலை­வர் ஞானேஷ்­கு­மார் தனது சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு தார்­மீ­கப்பொறுப்­பேற்று உட­ன­டி­யாக ராஜி­னாமா செய்ய வேண்­டும் என்ற வலு­வான கோரிக்­கை­களை முன்­வைத்­தும் அவ­ரது அறி­விக்­கப்­ப­டாத மேலே சொன்ன குடும்ப கட்­டுப்­பாடு அறு­வைச் சிகிச்­சை­மூ­லம் செய்த வாக்­கு­ரிமை பறிப்­பிற்கு சட்­ட­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் தொடர்ந்து போராட்­டத்தை நடத்­த­வுள்­ள­தா­க­வும் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இந்­தப் போராட்­டங்­க­ளின் நியா­யங்­களை எந்த சூழ்­நி­லை­யி­லும் யாரா­லும் நிரா­க­ரிக்­க­ 
வி­ய­லாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­த­கைய நாடும் என்­றும் கண்­டி­ராத அசா­தா­ரண அர­சி­யல் சூழ்­நி­லை­யில் சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்­தின் அடிப்­ப­டை­யில், நடை­பெற்ற தமிழ்­நாடு உள்­ளிட்ட ஐந்து மாநில சட்­ட­மன்­றத்­திற்கு நடந்த பொதுத் தேர்­தல்­க­ளின் முடி­வு­கள் எப்­படி நியா­ய­மா­ன­தாக இருக்க முடி­யும்? திரா­விட மாடல் ஆட்­சி­யின் நிறு­வ­னர், உல­கம் தழு­விய தமி­ழி­னத்­தின் கலங்­கரை விளக்­கம் எங்­கள் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் கொளத்­தூர் சட்­ட­மன்­றத் தோல்வி என்­பது இந்த ஜன­நா­யக படு­கொ­லைக்்­கான திட்­ட­மிட்ட சதி­யா­கவே அனு­மா­னிக்­கத் தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வினா­விற்கு விடை­கா­ணும் டெல்­லி­யில் இன்­னொரு படை­யெ­டுப்­பா­கத்­தான், இரு­பால் மாண­வர்­க­ளும் சேர்ந்து கரப்­பான் பூச்சி ஜன­தாக் கட்­சி­யோடு கைகோர்த்து களம் காண்­ப­தன்­மூ­லம் “வற்­றிய குளத்­தில் புது­ வெள்­ளம் பாய்­வ­து­போல்” இந்­திய ஜன­ நா­ய­கத்­திற்கு புது இரத்­தம் பாய்ச்ச, புது­யு­கம் படைக்க  புறப்­பட்­டி­ருப்­ப­தைப் பார்த்து  ஒன்­றிய ஆட்­சி­யா­ளர்­கள் அச்­ச­மும் கவ­லை­யும் அடைந்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்­திய ஜன­நா­ய­கத்­தைப் பாது­காக்க இளை­ஞர்­கள் “ஜந்­தர் மந்­த­ரில்” மேற்­கொள்­ளும் போராட்­டம் இந்­திய ஜன­நா­ய­கம் வலு­வும் பொலி­வும் பெறு­வ­தற்கு ஊட்­ட­மா­கும்!! அதற்கு ஜன­நா­ய­கத்­தின் தூண்­க­ளான பாரா­ளு­மன்­ற­மும், பத்­தி­ரிக்­கைத் துறை­யும், நீதித்­து­றை­யும், நிர்­வாக துறை­யும் தன் பங்­க­ளிப்பை வர­லாற்­றின் பக்­கங்­க­ளில் பதிவு செய்­யட்­டும்!!! இந்­திய ஜன­நா­ய­கத்­தைப் பாது­காக்க எந்த விலை­யும் கொடுக்க தயார்­நி­லை­யில் இருக்­கும் எங்­கள் தள­ப­தி­யார் தலை­மை­யில் இயங்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இந்த ஜன­நா­யக பாது­காப்பு போராட்­டத்­திற்­கும் தயா­ரா­கும் என்­ப­தில் ஐய­மில்லை!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>