<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,918" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 08 2026 15:23:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261009T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09102026-CBE-08" position.sequence="08" ex-ref="09102026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup930640_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup931789_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">று­படை வீடு­க­ளில் ஒன்­றான திருத்­த­ணி­யில், பெரி­யார் நக­ரில் வசித்து வந்­த­வர் விவ­சாயி யுவ­ராஜ். அதே பகு­தி­யைச் சேர்ந்த ஓர் இளை­ஞர்,  தன்­னு­டைய 
மக­ளைத் தொடர்ந்து தொந்­த­ரவு செய்து வரு­வ­தா­கத் திருத்­தணி காவல் நிலை­ 
யத்­தில் புகார் தெரி­வித்­தி­ருந்­தார். இளம் வய­தான தன் மக­ளைத் தொந்­த­ரவு 
செய்­யும் இளை­ஞர் மீது போலீ­சார் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள் என்று யுவ­ராஜ் எதிர்­பார்த்­தி­ருந்­தார். ஆனால், நடந்­தது வேறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அக்­டோ­பர் 4 ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று விவ­சாயி யுவ­ராஜை இரண்டு இளை­ஞர்­கள் சேர்ந்து வெட்­டிக் கொலை செய்­தார்­கள். புகார் கொடுத்­த­வ­ரின் உயி­ரைக் காப்­பாற்ற முடி­யாத திருத்­தணி போலீ­சார், கொலை செய்த இரண்டு பேரில் சஞ்­சய் லாரன்ஸ் என்­ப­வ­ரைக் கைது செய்த நிலை­யில், இன்­னொரு குற்­ற­வா­ளி­யைத் தேடி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்­கள். த.வெ.க. ஆட்சி அமைந்­த­
பி­றகு, காவல்­நி­லை­யத்­தில் புகார் கொடுப்­ப­வர்­கள் கொலை செய்­யப்­ப­டு­வது இது முதல்­மு­றை­யல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கோவை­யில் ஒரு தனி­யார் கல்­லூ­ரி­யில் படித்து வந்த கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த மாண­வன் அமு­தன், கல்­லூரி வளா­கத்­தில் போதைப் பொருட்­கள் புழக்­கம் அதி­க­மாக இருப்­பது குறித்து புகார் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், மாண­வன் அமு­த­னுக்கு எந்­தப் பாது­காப்­பும் இல்­லாத சூழ­லில் 6 பேர் கொண்ட கும்­பல், மாண­வன் அமு­தனை அடித்­துக் கொன்­றது. அவர்­க­ளும் அதே கல்­லூ­ரி­யில் படிப்­ப­வர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரு­வொற்­றி­யூ­ரில் காவல் ஆய்­வா­ளர் தனக்கு கொலை மிரட்­டல் விடுத்­த­தாக, கடந்த செப்­டம்­பர் 8ஆம் தேதி காவல்­நி­லைய வாச­லி­லேயே பேட்டி கொடுத்த பிர­தீப்­ராஜ் என்­ப­வர் மறு­நாளே படு­கொலை செய்­யப்­பட்­டுக் கிடந்­தார். இந்த மர­ணத்­தில் உள்ள மர்­மங்­களை மூடி மறைக்­கும் வேலை­க­ளைத்­தான் 
த.வெ.க அரசு மேற்­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தாரா­பு­ரம் இடைத்­தேர்­த­லில் பரப்­புரை செய்த கழ­கத் தலை­வர்-­­தி­ரா­விட நாய­கர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், “த.வெ.க. என்­பது ஓர் அர­சி­யல் கட்­சியே இல்லை. அது ஒரு கார்ப்­ப­ரேட் மாஃபியா” என்­பதை அழுத்­தம் திருத்­த­மா­கக் குறிப்­பிட்­டார். குற்­ற­வா­ளி­கள் பல­ரும் நமக்­கான ஆட்சி நடக்­கி­றது என்ற மன­நி­லை­யு­டன் வெளிப்­ப­டை­யா­கவே குற்­றங்­களை செய்­யத் தொடங்­கி ­விட்­டார்­கள் என்­றும் கழ­கத் தலை­வர் அவர்­கள் தனது பரப்­பு­ரை­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பாலி­யல் குற்­றங்­க­ளில் த.வெ.க. நிர்­வா­கி­கள் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக, அவர்­க­ளால் பாதிக்­கப்­பட்ட 
த.வெ.க. பெண்­களே புகார் தெரி­விக்­கும் நிலை­யில் தமிழ்­நாட்­டின் ஆட்சி நிர்­வா­கம் இருக்­கி­றது. பெண்­கள் மீது தாக்­கு­தல் நடத்­து­வ­தாக த.வெ.க.வைச் சேர்ந்­த­வர்­களே த.வெ.க நிர்­வா­கி­கள் மீது புகார் தெரி­விக்­கி­றார்­கள். இவை குறித்து எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை. அத­னால் த.வெ.க. வின­ரும் அவர்­க­ளு­டன் நீண்­ட­கா­ல­மா­கத் தொடர்­பில் உள்ள கிரி­மி­னல்­க­ளும் அடா­வ­டிச் செயல்­க­ளில் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­சர் விஜய்­யின் சொந்­தத் தொகு­தி­யான பெரம்­பூர் தொகு­திக்­குட்­பட்ட மகா­கவி பார­தி­யார் நக­ரில் ஒரு செல்­போன் கடை­யில் பட்­டாக்­கத்­தி­யைக் காட்டி மிரட்டி, மாமூல் வசூ­லித்த விவ­கா­ரம் சி.சி.டி.வி.யில் பதி­வான காட்­சி­கள் மூல­மாக அம்­ப­ல­மா­னது. இந்த விவ­கா­ரத்­தில் த.வெ.க.வைச் சேர்ந்த வட்­டச் செய­லா­ளர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பது குறித்து ஊட­கங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யாகி, அது விவா­தப் பொரு­ளா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சட்­ட­வி­தி­க­ளால் தங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்­கிற திமிர்த்­த­னம் த.வெ.க.வின் அமைச்­சர்­கள், எம்.எல்.ஏ.க்கள் நிர்­வா­கி­க­ளி­டம் வெளிப்­ப­டு­கி­றது. அமைச்­சர் ஒரு­வரே டூவீ­லரை வீலிங் செய்­யும் சாகச ரீல்ஸ் வீடி­யோக் ­க­ளைப் பெரு­மை­யு­டன் பதி­விட்­டி­ருந்­தார். பெண் எம்.எல்.ஏ. ஒரு­வர் இடைத்­தேர்­தல் பரப்­பு­ரை­யில், ஹெல்­மெட் அணி­யா­மல் பைக் ஓட்­டிச் செல்­வதை ரீல்ஸ் எடுத்து வெளி­யிட்­டி­ருந்­தார். சட்­ட­வி­தி­க­ளை­யும் சாலை­ வி­தி­க­ளை­யும் மதிக்க வேண்­டிய அமைச்­சர்­க­ளும் எம்.எல்.ஏ.க்களும் அதை மீறி செயல்­ப­டு­வ­தால், விஜய் நடித்த படங்­க­ளின் போக்­கி­ரித்­த­ன­மா­னக் காட்­சி­களை ஹீரோ­யி­சம் என நினைக்­கும் விட­லை­கள் சென்­னை­யின் முக்­கி­ய­மான சாலை­க­ளில் ‘வீலிங் சாக­சம்’ செய்து பொது­மக்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­து­வ­து­டன், தங்­கள் உயி­ருக்­கும் தாங்­களே ஆபத்தை விளை­வித்­துக் கொள்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சினி­மா­வைப் போலவே விஜய், 
ஆட்­சிப் பொறுப்­பேற்­கும் சீனுக்கு அடுத்­த­டுத்த சீன்­க­ளில் தமிழ்­நாட்­டையே தலை
­கீ­ழாக மாற்­றி­வி­டு­வார் என்று ரூட் மாஃபியா வெளி­யிட்ட ரீல்ஸ்­களை நம்பி விசி­லுக்கு வாக்­க ­ளித்த மக்­கள் பல­ரும் இன்று கார்ப்­ப­ரேட் மாஃபி­யா­வி­டம் சிக்­கிக் கொண்டு விட்­டோ­மே என்ற ஏமாற்­றத்தை உணர்ந்து வேத­னைப்­ப­டு­கின்­ற­னர். அவர்­க­ளில் உழைக்­கும் மக்­க­ளின் நிலை மிக­வும் பரி­தா­ப­மாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விஜய்யை வெற்­றி­பெற வைத்த பெரம்­பூர் தொகு­தி­யின் வியா­சர்­பாடி பகு­தி­யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்­டு­நர் முஹ­மது 
இப்­ரா­கிம் என்­ப­வர் ஆட்டோ ஓட்­டு­நர்­களுக்­கான நல வாரி­யத்­தில் நடக்­கும் முறை­கேடு ­களைக் குறிப்­பிட்டு, ஆட்டோ ஓட்­டு­நர்­க­ளுக்கு எந்த சலு­கை­யை­யும் த.வெ.க. ஆட்­சி­யில் வழங்­க­வில்லை எனக் குற்­றம்­சாட்டி வீடியோ வெளி­யிட்ட பிறகு, தற்­கொலை செய்து உயிரை மாய்த்­தி­ருக்­கி­றார். அக்­டோ­பர் 4 அன்று நடந்த இந்த பரி­தாப உயி­ரி­ழப்பு, ஆட்டோ ஓட்­டு­நர்­கள் உள்­ளிட்ட உழைக்­கும் தொழி­லா­ளர்­க­ளி­டம் பெரும் அதிர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. “இன்­னும் எத்­தனை உழைப்­பா­ளி­க­ளின் உயிரை இந்தஅரசு பறிக்­கப்­போ­கி­றதோ” என்று அச்­ச­மும் வேத­னை­யும் கலந்த குரல் தொழி­லா­ளர்­க­ளி­ட­மி­ருந்து வெளிப் ­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை குதி­ரை­ பே­ரம் மூலம் விலைக்கு வாங்கி, தேவை­யில்­லாத இடைத்­தேர்­தலை வலிந்து திணித்­தி­ருக்­கும் த.வெ.க.வின் கார்ப்­ப­ரேட் மாஃபியா ஆட்­சி­யில், கிரி­மி­னல்­கள் தாறு­மா­றாக ஆட்­டம் போட்டு வரு­கி­றார்­கள். விவ­சா­யி­கள் உள்­ளிட்ட உழைக்­கும் மக்­கள் அன்­றாட வாழ்­வுக்­கா­கத் தெரு­வில் வந்து போரா­டும் நிலை­யும், தற்­கொலை செய்து கொள்­ளும் அவ­ல­மும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கார்ப்­ப­ரேட் மாஃபி­யாக்­கள் தங்­கள் சொந்த நலனை மட்­டுமே நோக்­க­மாக வைத்து செயல்­ப­டு­வார்­கள். அவர்­க­ளுக்கு மக்­கள் எல்­லா­ருமே வணி­கப் பண்­டம்­தான். த.வெ.க. அர­சும் அப்­ப­டித்­தான் செயல்­ப­டு­கி­றது. கார்ப்­ப­ரேட் மாஃபி­யா­வுக்கு இன்­வெஸ்­டிங் பார்ட்­னர், வொர்க்­கிங் பார்ட்­னர், ஸ்லீப்­பிங் பார்ட்­னர், சீக்­ரெட் பார்ட்­னர் என்று கழ­கத் தலை­வர் திரா­விட நாய­கர் தனது பரப்­பு­ரை­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">த.வெ.க. எனும் கார்ப்­ப­ரேட் மாஃபி­யா­வுக்கு இன்­வெஸ்ட் பார்ட்­னர்- ‘முதல்’ போட்ட அமைச்­சர் வகை­ய­றாக்­கள், வொர்க்­கிங் பார்ட்­னர்- அமைச்­சர் பத­விக்­காக பல்­லக்­குத் தூக்­கு­கி­றோம் எனப் பெரு­மைப்­ப­டும் கூட்­ட­ணிக் கட்­சி­கள், ஸ்லீப்­பிங் பார்ட்­னர்- எதை­யும் கண்­டு­கொள்­ளாத தேர்­தல் ஆணை­யம் உள்­ளிட்ட அதி­கார அமைப்­பு­கள். சீக்­ரெட் பார்ட்­னர்- ஆட்டி வைக்­கும் ஆர்.எஸ்.எஸ். தலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பொது­மக்­க­ளின் நல­னை­யும், தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யை­யும் புறக்­க­ணித்து வரும் த.வெ.க. ஆட்­சி­யில், அதிக வேலை­வாய்ப்­பு­க­ளைத் தரக்­கூ­டிய பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளின் முத­லீ­டு­கள் பல­வும் ஆந்­திரா உள்­ளிட்ட வெளி­மா­நி­லங்­க­ளுக்­குப் போய்க் கொண்­டி­ருக்­கி­றது. அதே நேரத்­தில், தூத்­துக்­கு­டி­யில் மக்­க­ளின் எதிர்ப்­புக்­குள்­ளான ஸ்டெர்­லைட் ஆலை நிறு­வ­னம், தாங்­கள் மீண்­டும் முத­லீடு  செய்­ய­வி­ருப்­ப­தாக  அறி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அ.தி.மு.க. ஆட்­சி­யில் தூத்­துக்­கு­டி­யில் வேதாந்தா நிறு­வ­னத்­தின் ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ராக மக்­கள் நடத்­திய போராட்­டத்­தில், காவல்­துறை நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் 13 பேரின் உயிர் அநி­யா­ய­மா­கப் பறிக்­கப்­பட்­டது. தி.மு.க. ஆட்­சி­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக் ­கு­ரிய நிவா­ர­ணம்-­­அ­ரசு வேலை ஆகி­யவை வழங்­கப்­பட்­ட­து­டன், ஸ்டெர்­லைட் ஆலை­யை மீண்­டும் திறப்­ப­தற்­காக வேதாந்தா நிறு­வ­னத்­தார் எடுத்த எந்த முயற்­சிக்­கும் அனு­மதி அளிக்­கப்­ப­ட­வில்லை.  த.வெ.க. ஆட்­சி­யில் 2.3 பில்­லி­யன் டாலர் முத­லீடு செய்து ஆலை­யைத் திறக்­கும் முயற்­சி­ க­ளைத் தொடங்­கி­யுள்­ளது வேதாந்தா நிறு­வ­னம். துப்­பாக்­கிச் சூட்­டில் பலி­யான ஸ்நோலி­னைத் தனது தங்கை என அன்று குறிப்­பிட்ட நடி­கர் விஜய், இப்­போது முதல்­வ­ரான பின், வேதாந்தா நிறு­வ­னத்­தைக் கட்­டிப்­பி­டித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">செவி­லி­யர்­கள் மீது இர­வில் தாக்­கு­தல் நடத்­து­கி­றது விஜய்­யின் சிங்­கப் பெண் படை. மீன­வர்­களை அலட்­சி­யப்­ப­டுத்தி அவர்­க­ளின் வாழ்­வி­டத்­தைப் பறிக்­கி­றது விஜய் ஆட்­சி­யின் நிர்­வா­கம், விவ­சா­யி­ க­ளைக் கைது செய்­கி­றது த.வெ.க. அர­சின் காவல்­துறை, தேடப்­ப­டும் குற்­ற ­வாளி ஒரு­வர் முதல்­வர் விஜய்­யின் பரப்­பு­ரை­யில் மாட்டு வண்டி ஓட்­டு­கி­றார்.  கார்ப்­ப­ரேட் மாஃபி­யா­வான த.வெ.க. ஆட்­சி­யில் கிரி­மி­னல்­கள் கொழுத்­துத் திரி­கி­றார்­கள். நம்பி வாக்­க­ளித்த மக்­கள் ஒவ்­வொரு நாளும் உயிர் வாழ்­வ­தற்கே தவிக்­கி­றார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>