<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,663,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 11 2026 03:41:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261011T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="11102026-MDU-02" position.sequence="02" ex-ref="11102026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup916841_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Thalavar11_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">சென்னை, அக்.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இடைத்­தேர்­தல் முடி­வு­கள் குறித்து அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளி­யிட்­ட­டார். அதில் ‘‘துரோ­கத்­துக்­குக் கிடைத்த இடைக்­கால வெற்றி’’ என்­றும்,‘‘பொய் பிம்ப அர­சி­ய­லின் வீழ்ச்சி தொடங்கிவிட்­டது’‘ என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது­தொ­டர்­பாக கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நடந்து முடிந்த மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் இடைத்­தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தலை­மை­யி­லான மதச்­சார்­பற்றமுற்­போக்­குக் கூட்­டணி வேட்­பா­ளர்­க­ளுக்குவாக்­க­ளித்த வாக்­கா­ளப் பெரு­மக்­கள் அனை­வ­ருக்­கும் எனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இரண்டு தொகு­தி­யி­லும் மிகக்­க­டு­மை ­யா­கத் தேர்­தல் பணி­யாற்­றிய தொண்­டர்­கள், முன்­ன­ணி­யி­னர், உடன்­பி­றப்­பு­கள், கூட்­ட­ணிக் கட்­சி­யின் தலை­வர்­கள் ஆகிய அனை­வ­ருக்­கும் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">அப்­பட்­ட­மான ஜன­நா­ய­கப் படு­கொலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சட்­ட­மன்­றத் தேர்­தல் முடிந்த ஐந்தே மாதத்­தில் திணிக்­கப்­பட்­ட­து­தான் இந்த இடைத்­தேர்­தல். வாக்­க­ளித்த மை அழி­வ­தற்கு முன்­னால் மக்­க­ளின் விருப்­பத்தை அழித்­து­விட்டு இரண்டு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் பத­வியை விட்டு விலகி, அடுத்த நிமி­டமே ஆளும் கட்­சி­யில் சேர்ந்­தார்­கள். அப்­பட்­ட­மான ஜன­நா­ய­கப் படு­கொலை நடந்­தது. அத­னால்­தான் இந்த இடைத்­தேர்­தல் நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பதவி வில­கிய இரு­வ­ரையே வேட்­பா­ளர்­க­ளாக அறி­வித்து, தேர்­த­லைச் சந்­தித்­தது ஆளும்­கட்சி. அதி­கார பலம், ஆட்சி பலம், பண­ப­லம், போலீஸ் பலம் ஆகி­ய­வற்­றைப் பக்­க­ப­ல­மாக வைத்து த.வெ.க.இந்­தத் தேர்­தலை எதிர்­கொண்­டது. சினிமாகவர்ச்சி பலத்தை மட்­டுமே நம்பி அர­சி­யல் களத்­தில் குதித்து – பெரும்­பான்மை பலம் இல்­லா­விட்­டா­லும் குதிரை பேரங்­க­ளின் மூல­மாக முத­ல­மைச்­சர் ஆகி­யுள்ள விஜய், இந்த இடைத்­தேர்­த­லி­லும் ரீல்ஸ் காட்­சி­களே கைகொ­டுக்­கும் என்று நம்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">டீ குடித்­தார், டிராக்­டர் ஓட்­டி­னார், முருங்­கைக்­காய் பறித்­தார், தெருத்­தெ­ரு­வா­கப் போனார். எந்­த­வொரு இடைத்­தேர்­த­லுக்­கும், ஒரு முத­ல­மைச்­சர் பத­வி­யில் இருப்­ப­வர் இப்­ப­டித் தெருத்­தெ­ரு­வா­கப் போனது இல்லை. இந்த இரண்டு தொகு­தி­யில் வெற்றி பெற்­றால்­தான் தனக்கு இனி அர­சி­யல் வாழ்க்கை என்ற முடி­வோடு செயல்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">வெற்­றி பெற –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">த.வெ.க. அடைந்த பதற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நான்கு நாட்­கள் இரண்டு தொகு­தி­யி­லும் இருந்­துள்­ளார் முத­ல­மைச்­சர். வெளி­யூ­ரில் இருந்து இறக்­கி­வி­டப்­பட்ட ஆட்­கள், அவர் போகும் சாலை­கள் அனைத்­தும் வைக்­கப்­பட்ட பேரி­கேட், கொடுக்­கப்­பட்டஅன்­ப­ளிப்­பு­கள், அமைச்­சர்­க­ளுக்கு மட்­டும்எவ்­வ­ளவு செலவு செய்­துள்­ளேன் என்று ஆளும்­கட்சி வேட்­பா­ளரே அளித்த வாக்­கு­ மூ­லங்­கள் இவை அனைத்­தை­யும் வைத்­துப் பார்க்­கும்­போது இந்த வெற்­றியை அடைய த.வெ.க. எவ்­வ­ளவு பதற்­றத்­தில் இருந்­துள்­ளது என்­பதை அறிய முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஐந்து நிமி­டம் பேசி­னாலே கொத்து புரோட்டாபோட்­டு­வி­டு­வார் என்று சொல்­லப்­பட்­ட­வரை நான்கு நாட்­கள் கொளுத்­தும் வெயி­லில் அலைய வைத்­துக் கொத்துபுரோட்டா போட்­டு­விட்­டார்­கள் மக்­கள். கட்சி, தேர்­தல், மக்­கள் பணி­கள் என்­றால் என்­ன­வென்றுமுத­ல­மைச்­சர் விஜய் இனி­யா­வது உணர்ந்து செயல்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்ட பிற­கு­தான் மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பயண விரி­வாக்­கம், தாய்­மா­மன் தங்­க­மோ­தி­ரம், அண்­ணன் சீர் போன்ற திட்­டங்­களை அவர் அறி­வித்­தார். இதுவே தேர்­தல் நடத்தை விதி­களை மீறி­ய­து­தான்.இப்­படி பல்­வேறு விதி­மீ­றல்­க­ளைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்­றுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில்  துரோ­கத்­துக்கு இடைக்­கால வெற்றி கிடைத்­துள் ளது. அதே நேரத்­தில் பொய் பிம்ப அர­சி­ய­லின் வீழ்ச்சி தொடங்­கி­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">அம்­ப­ல­மான தூய­சக்­தி­யின் வேடம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஜி.பே.யில் பணம் – பரி­சுப் பொருட்­கள் கொடுத்­தார்­கள். ஊரையே விலை பேசி­னார்­கள் என்­பதை இந்த ஆட்­சியை ஆத­ரிக்­கும் கட்­சி­களே ஒப்­புக்­கொண்டு பேட்டி கொடுத்த காட்­சி­க­ளை­யும் நாம் பார்த்­தோம். தேர்­த­லுக்கு முந்­தைய இரவு வெளி­யான வீடி­யோ­வில் கோடி­க­ளைக் கொட்­டிச் செல­விட்­டதை வேட்­பா­ளரே ஒப்­புக்­கொள்­ளும் காட்­சி­க­ளை­யும் பார்த்­தோம். தூய சக்­தி­யின் வேடத்தை இது அம்­ப­லப்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரை­ம­றை­வில், இன்­னும் சில கட்­சி­களின் வாக்­கு­களை வாங்­கப் பொய்ச்­செய்­தி­யைப் பரப்­பி­னார்­கள். ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வை­யும் இரு தொகு­தி­க­ளுக்­குள் மூன்று வார காலம்முடங்­கி­யது. துரோ­கம் செய்த வேட்­பா­ளர்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்த மக்­கள் காவல்­து­றை­யின­ரைக் கொண்டு மிரட்­டப்­பட்­டார்­கள். 17 வயது இளை­ஞ­ரைக் கூட கைது செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘ஆளும்­கட்­சிக்கு வாக்­க­ளிக்­கா­விட்­டால் தொகு­திக்கு எதை­யும் செய்­ய­மாட்­டோம்’ என பிளாக்­மெ­யில் செய்து வாக்கு வாங்க வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டார்­கள். அரசு ஊழி­யர்­க­ளை­யும் வாக்­குப்­ப­தி­வின் போது மிரட்டி ஆத­ர­வா­கப் பணி­யாற்ற வைத்­தார்­கள். ‘சூரி­ய­னுக்கு வாக்­க­ளிக்­கச் சொன்­னால் விசி­லுக்கு அழுத்­தச் சொன்­னார்­கள்’ என்று ஒரு மூதாட்டி வெளிப்­படை­யா­கப் பேட்­டியே அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­படி, தன் அதி­கார பலம் முழு­வ­தை­யும் இடைத்­தேர்­த­லுக்­கா­கத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­யது த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நான்கே மாதங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கிழிந்து தொங்­கிய பிம்­பம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">5 நிமி­டப் பேச்­சி­லேயே அனைத்­தை­யும் விஜய் மாற்­றி­வி­டு­வார் எனக் கட்­ட­மைக்­கப்­பட்ட போலி பிம்­பம் நான்கே மாதங்­க­ளில் கிழிந்து தொங்­கி­விட்­டது. ஆட்­சிக்கு வந்த இத்­தனை குறு­கிய காலத்­தில் இப்­படி ஒரு சரிவு எந்த முத­ல­மைச்­ச­ருக்­கும் இது­வரை ஏற்­பட்­ட­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கல்­லாப்­பெட்­டிக் கூட்­ட­ணிக் கட்­சி­கள் என விமர்­சித்த கட்­சிக­ளையே, இப்­போது தன்­னோடு இணைத்­துக்­கொண்டுதேர்­த­லைச் சந்­தித்த நிலை­யி­லும், அனைத்­தை­யும் மீறி, ‘எப்­ப­டி­யா­வது வெற்றி பெற்­றால் போதும்’ என்ற மன­நி­லைக்கு அவர்­க­ளைத் தள்­ளும் வகை­யில்­தான் இடைத்­தேர்­தல் முடி­வு­கள் அமைந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்ன செய்­தும், தி.மு.க. மீதான மக்­க­ளின் நம்­பிக்­கையை எது­வும் செய்ய முடி­ய­வில்லை. தி.மு.க.வை மட்­டுமே குறி­வைத்­துப் பேசி­னார் முத­ல­மைச்­சர். ஆனால், தி.மு.க.வின் செல்­வாக்கை 
அவ­ரால் அசைக்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதில் மிக­வும் முக்­கி­ய­மா­னது, துர்­நாற்­ற­ மெ­டுக்­கும் துரோக சக்­தி­யான த.வெ.க. வுக்கு எதி­ரா­கக் களம் கண்ட அனைத்­துக் கட்­சி­கள் பெற்ற வாக்­கு­க­ளும் ஆட்­சிக்கு எதி­ரான வாக்­கு­கள் என்­ப­து­தான்! அவை­தான் பெரும்­பான்மை! இந்தஅரசு மீண்­டும் பெரும்­பான்மை மக்­க­ளால் நிரா­க­ரிக்­கப் பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்­பிங், பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­கள், அரு­வ­ருப்­பான பேச்­சு­கள், அசிங்­க­மான சைகை­கள், ரீல்ஸ் எடுப்­ப­தில் மட்­டும் கவ­னம் ஆகி­ய­வற்­றைத் தவிர்த்­து­விட்டு இனி­யா­ வது மக்­கள் பணி­க­ளில் ஆட்­சி­யா­ளர்­கள் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று கேட்டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உடன்­பி­றப்­பு­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நன்­றி­யும் பாராட்­டு­க­ளும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் வெற்றி தோல்­வி­க­ளைப் பற்­றிக்கவ­லைப்­ப­டா­மல்கொள்கை – இலக்குஎன பய­ணிக்­கும் உடன்­பி­றப்­பு­கள் அனை­வ­ருக்­கும் எனது மன­மார்ந்த நன்­றியை மீண்­டும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">களத்­தில் கடும் போட்­டி­யைக் கொடுத்து, ஆளும்­கட்­சி­யி­னரை அச்­சத்­தில் அலை­ய­விட்ட கழக உடன்­பி­றப்­பு­க­ளுக்கு நன்­றி­யும் பாராட்­டு­க­ளும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்­துக் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள், நிர்­வா­கி­கள், தோழர்­க­ளுக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்­றி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சினிமா கவர்ச்­சியை மூல­த­ன­மா­கக் கொண்டு, அதன்மூல­மாக மக்­களை ஏமாற்றி அதி­கா­ரத்­துக்கு வந்து கார்ப்­ப­ரேட் மாஃபி­யாக்­கள் சில­ரின் கைப்­பா­வை­யாக ஆட்சிநடத்தி வரும் முத­ல­மைச்­சர் விஜய்­யின் முகத்­தி­ரை­யைக் கிழிக்­கும் பரப்­பு­ரைப் பய­ணத்தைநாம் தினம்­தோறும் தொய்­வின்­றித் தொடர்­வோம். தமிழ்­நாட்­டுக்கு விரோ­த­மான சக்­தி­க­ளின் பிடி­யில் அவர் சிக்கி இருக்­கி­றார். அதை மக்கள் விரை­வில் முழு­மை­யாகஉணர்­வார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>