<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 11 2026 03:52:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261011T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11102026-VLR-05" position.sequence="05" ex-ref="11102026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="48">இடைத்தேர்தல் காட்டிய உண்மைகளும்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="90">ஞானேஷ்குமாருக்கு ஊழியம் செய்யும் ஆதவ் அர்ஜுனாவும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup939333_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ரண்டு தொகுதி இடைத்­தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்த அடுத்த நாள் காலை­யில் வெளிப்­பட்ட இரண்டு காட்­சி­கள், அர­சி­யல் மற்­றும் ஊட­கச் சீர­ழி­வின் உச்­சக்­கட்­டத்­தைப் படம் பிடித்­துக் காட்­டின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒன்று, இரண்டு தொகு­தி­க­ளி­லும் 
த.வெ.க. வென்­ற­தைத் தொடர்ந்து, தலை­மைச் செய­ல­கத்­தில் உள்ள முதல்­வ­ரின் அறை­யி­லி­ருந்தே தனது அமைச்­ச­ரவை சகாக்­க­ளோடு முதல்­வர் விஜய் எடுத்­துக்­கொண்ட குழுப் புகைப்­ப­டம். விஜய் தனது அர­சி­யல் குரு­வான வி.எஸ்.பாபு செய்த அதே இழி சைகை­யைச் சட்­ட­மன்­றத்­தில் செய்­த­து­போ­லவே தலை­மைச் செய­ல­கத்­தி­லும் செய்து  அந்­தப் படத்தை வெளி­யிட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்டை எத்­த­னையோ முதல்­வர்­கள் ஆண்­டி­ருக்­கி­றார்­கள்; ஆனால், எவ­ருமே தலை­மைச் செய­ல­கத்­தி­லி­ருந்து ஒரு தேர்­தல் வெற்­றியை இது­போல கேவ­லா­மா­கக்  கொண்­டா­டி­ய­தில்லை. தேர்­தல் வெற்­றி­கள் எப்­போ­தும் அந்­தந்­தக் கட்சி அலு­வ­ல­கங்­க­ளில்­தான் கொண்­டா­டப்­ப­டும். குதிரை பேரத்­தில் கட்சி மாறு­கி­ற­வர்­க­ளுக்­குத் தலை­மைச் செய­ல­கத்­தில் வைத்து உறுப்­பி­னர் அட்டை கொடுப்­ப­து­போ­லவே, இப்­போது முதல்­வ­ரின் அறை­யி­லி­ருந்தே இது­போன்ற கொண்­டாட்­டப் படங்­க­ளை­யும் வெளி­யிட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். சட்­ட­மன்­றத்­தின் மாண்­பு­க­ளைத் த.வெ.க. சீர­ழித்­த­து­போ­லவே, இப்­போது தலை­மைச் செய­ல­கத்­தின் மாண்­பு­க­ளை­யும் 
சீர­ழித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இரண்­டா­வ­தாக,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">த.வெ.க. ஆத­ரவு 
ஊட­க­வி­ய­லா­ளர் இரு­வர், இடைத்­தேர்­தல் முடி­வு­க­ளைக் கேட்டு நேரலை அரங்­கி­லேயே (Studio) நட­ன­மா­டிய காணொ­ளி­யைப் பல­ரும் சமூக வலைத்­த­ளங்­க­ளில் பகிர்ந்து விமர்­சித்­தி­ருந்­தார்­கள். த.வெ.க. ஆத­ரவு ஊட­கங்­கள் எந்த எல்­லைக்­கும் செல்­லத் தயா­ரா­கி­விட்­டன என்­ப­தற்கு இதுவே சாட்­சி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மது­ராந்­த­கம் – தாரா­பு­ரம் இடைத்­தேர்­தல் முடி­வு­கள் பல உண்­மை­களை வெளிச்­ச­மிட்­டுக் காட்­டி­யுள்­ளன:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">1. தி.மு.க.வின் வாக்கு வங்கி மாசற்­றது:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் உட­னி­ருந்த பெரும்­பா­லான கூட்­ட­ணிக் கட்­சி­கள் தேர்­தல் முடி­வு­க­ளுக்­குப் பிறகு த.வெ.க. பக்­கம் சென்­று­விட்­ட­போ­தி­லும், தி.மு.க. இந்த இடைத்­தேர்­த­லில் தனது வாக்கு வங்­கியை அப்­ப­டியே தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது. “கூட்­ட­ணிக் கட்­சி­க­ளால்­தான் தி.மு.க. வலி­மை­யு­டன் இருக்­கி­றது” என்று சொல்­லப்­பட்ட மாயை மட்­டு­மல்ல; இந்­தக் கட்­சி­கள் ஒரு போலித் தோற்­றத்­தின் மூலம் தங்­களை வலி­மை­யான சக்­தி­யா­கக் காட்­டிப் பேரம் பேசி­வந்த மாயை­யும் உடைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2. செயற்­கைப் பிம்­பத்­தின் வீழ்ச்சி: 
த.வெ.க. இந்த இடைத்­தேர்­த­லைத் தனது அனைத்துஆயு­தங்­க­ளை­யும் பயன்­ப­டுத்­திச் சந்­தித்­தது. அதி­கார பலம், டிபன் பாக்­சில் பணம், தி.மு.க.விட­மி­ருந்து திரு­டப்­பட்ட கூட்­ட­ணிக் கட்­சி­கள், விஜய் தெருத்­தெ­ரு­வா­கத் தேநீர் குடித்­தும் முருங்­கைக்­காய் பறித்­தும் செய்த பிரச்­சா­ரம் என அத்­த­னை­யும் இருந்­தும், அவர்­கள் எதிர்­பார்த்த வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற முடி­ய­ வில்லை. தி.மு.க. தலை­வர் சொன்­னது போல, ‘பொய் பிம்ப அர­சி­ய­லின் வீழ்ச்சி’ தொடங்­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">3. தி.மு.க.வின் களப்­பணி: இந்த இரண்டு தொகுதி இடைத்­தேர்­தல்­க­ளி­லும் தி.மு.க. நிர்­வா­கி­க­ளும் தொண்­டர்­க­ளும் அடி­மட்­டம் வரை ஆற்­றிய களப்­ப­ணி­கள், தி.மு.க.வே தமிழ்­நாட்­டின் முதன்­மை­யான அர­சி­யல் சக்தி என்­பதை மீண்­டும் நிரூ­பித்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘தி.மு.க. போபி­யா’­வும் ஆதவ் அர்­ஜு­னா­வின் நாட­க­மும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் முடி­வு­கள் வெளி­வந்த அன்று மாலை, அமைச்­சர் ஆதவ் அர்­ஜுனா ‘செய்­தி­யா­ளர் சந்­திப்பு’ என்ற பெய­ரில் தனது வழக்­க­மான நாட­கப் பிர­சங்­கம் ஒன்றை நிகழ்த்­தி­னார். ஒரு பச்­சைப் பொய்யை உண்மை போலக் காட்­ட­வேண்­டு­மென்­றால், இந்த நாடக பாணி அவ­சி­யம்­தானே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவ­ரது தலை­வ­ருக்கு இருக்­கும் 
‘தி.மு.க. போபியா’ (DMK Phobia), அன்று ஆதவ் மூல­மாக உச்­சக்­கட்­ட­மாக வெளிப்­பட்­டதை அப்­பட்­ட­மாக உணர முடிந்­தது. எந்­தக் கூட்­ட­ணி­யின் பல­மும் இல்­லா­மல் இடைத்­தேர்­த­லில் தி.மு.க. பெற்ற தனிப்­பெ­ரும் வாக்கு வங்கி, அவர்­களை எந்த அள­வுக்­குப் பத­ற­வைத்­தி­ருக்­கி­றது என்­ப­தற்கு இதுவே தெளி­வான சான்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சிறப்பு தீவிர திருத்­தப் பணி (SIR) மூலம் தமிழ்­நாட்­டில் சுமார் ஒரு கோடி வாக்­கு­கள் நீக்­கப்­பட்­ட­து­தான் தேர்­தல் முடி­வு­க­ளுக்­குக் கார­ணம் என்று கள ஆய்­வு­கள் அம்­ப­லப்­ப­டுத்தி வரு­கின்­றன. இந்த உண்­மையை எதிர்­கொள்ள முடி­யா­மல், “தமிழ்­நாட்­டில் ஒரு கோடி வாக்­கு­கள் நீக்­கப்­பட்­ட­தற்கு தி.மு.க. அர­சு­தான் கார­ணம்” என்று ஒரு புதிய அறி­வி­யல் கண்­டு­பி­டிப்பை அறி­வித்­துக்­கொண்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதா­வது, ‘எஸ்.ஐ.ஆர்.’ மூலம் ‘ஜென் ஸீ’ (Gen Z) இளை­ஞர்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெரு­ம­ள­வில் தி.மு.க. நீக்­கி­ விட்­ட­தா­க­வும், அத­னால்­தான் த.வெ.க. 160 தொகு­தி­க­ளில் வெற்­றி­பெ­று­வது தடுக்­கப்­பட்­டு­விட்­டது என்­றும் அள்­ளி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உண்மை இதற்கு நேர் எதி­ரா­னது. எஸ்.ஐ.ஆர். மூலம் அதிக வாக்­கு­கள் நீக்­கப்­பட்ட தொகு­தி­க­ளில்­தான் த.வெ.க. வெற்­றி­பெற்­றுள்­ளது; மிகக் குறைந்த அள­வில் வாக்­கு­கள் நீக்­கப்­பட்ட இடங்­க­ளில் அது படு­தோல்வி அடைந்­துள்­ளது. இந்த எளிய முரண்­பாட்டை அங்கே நின்ற எந்­த­வொரு ஊட­க­வி­ய­லா­ள­ரும் அவ­ரி­டம் எதிர்­கேள்­வி­யாக எழுப்­பா­தது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அடுத்­த­தாக, “மாநில அர­சின் பொறுப்­பில்­தான் எஸ்.ஐ.ஆர். பணி­கள் நடக்­கின்­றன; த.வெ.க.விற்கு எதி­ராக வாக்­கு­களை நீக்­கத்­தான் மு.க.ஸ்டாலின் தலை­ மை­யி­லான அரசு எஸ்.ஐ.ஆரைப் பயன்­படுத்­தி­யது” என்­பது அடுத்த பொய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாநில அர­சுக்கோ அதன் அதி­கா­ரி­களுக்கோ தேர்­தல் ஆணை­யத்­தின் எஸ்.ஐ.ஆர். நடை­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் அதி­கா­ரம் உண்டு என்­றால், மேற்கு வங்­கத்­தில் மம்தா பானர்ஜி ஏன் தோற்க வேண்­டும்? அவர்­தான் எஸ்.ஐ. ஆரை எதிர்த்து மிகக் கடு­மை­யா­கப் போரா­டி­ய­வர் ஆயிற்றே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேலும், “தி.மு.க. அரசு எஸ்.ஐ.ஆர். பணி­க­ளைச் செய்­ய­மாட்­டோம் என்று 
திட்­ட­வட்­ட­மாக மறுத்­தி­ருக்க வேண்­டும்” என்­றும் பேசி­யுள்­ளார். மக்­க­ளாட்சி அமைப்போ, அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டமோ என்­ன­வென்றே தெரி­யாத ஒரு புலம்­பல் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு மாநில அரசு தனது நிர்­வா­கத்­தின் கீழ் உள்ள அதி­கா­ரி­கள் மற்­றும் பணி­யா­ளர்­களை “தேர்­தல் ஆணை­யத்­தின் பணி­களை (SIR உட்­பட) செய்ய வேண்­டாம்” என்று தன்­னிச்­சை­யாக உத்­த­ர­விட அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக அதி­கா­ரம் கிடை­யாது. அவ்­வாறு ஒரு மாநில அரசு உத்­த­ர­விட்டால், அது நேர­டி­யான அர­சி­ய­ ல­மைப்பு முடக்­கம் மற்­றும் நெருக்­க­டிக்கு (Constitutional Crisis) வழி­வ­குக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">1.	அர­சி­ய­ல­மைப்­புப் பிரிவு 324 
மற்­றும் மக்­கள் பிர­தி­நி­தித்­து­வச் சட்ட மீறல்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o	அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப் பிரிவு 324(6):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யம் கோரும்­போது, தேர்­தல் பணி­க­ளுக்­குத் தேவை­யான மனி­த­வ­ளம் மற்­றும் அதி­கா­ரி­களை மாநில ஆளு­நர் அல்­லது அரசு கட்­டா­யம் வழங்க வேண்­டும் என அர­சி­ய­ல­மைப்பு தெளி­வா­கக் குறிப்­பி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மக்­கள் பிர­தி­நி­தித்­து­வச் சட்­டம் (1950 -பிரிவு 13CC / 1951 - பிரிவு 28A):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் அறி­விக்­கப்­பட்­ட­தும் அல்­லது வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தப் பணி­கள் தொடங்­கப்­பட்­ட­தும், அந்­தப் பணி­யில் உள்ள மாநில அரசு அதி­கா­ரி­கள் தேர்­தல் ஆணை­யத்­தின் முழுக் கட்­டுப்­பாட்­டின் கீழ் உள்ள பணிப் பிர­தி­நி­தி­க­ளா­கவே (Deemed Deputation) கரு­தப்­ப­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனவே, மாநில அர­சின் உத்­த­ரவை விடத் தேர்­தல் ஆணை­யத்­தின் உத்­த­ரவே இங்கு மேலோங்­கும் (Supremacy of ECI).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2. உச்ச நீதி­மன்­றத் தலை­யீடு மற்­றும் நீதி­மன்ற அவ­ம­திப்பு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யம் உட­ன­டி­யாக உச்ச நீதி­மன்­றத்தை அணு­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீதி­மன்­றம் மாநில அர­சின் உத்­த­ர­வுக்கு இடைக்­கா­லத் தடை விதிப்­ப­ 
து­டன், உட­ன­டி­யா­கத் தேர்­தல் பணி­களை மேற்­கொள்­ளு­மாறு தலை­மைச் செய­லா­ளர் (Chief Secretary) உள்­ளிட்ட உயர் அதி­கா­ரி­க­ளுக்­குக் கடு­மை­யான உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உத்­த­ரவை மதிக்­காத பட்­சத்­தில் மாநில அரசு மற்­றும் உயர் அதி­கா­ரி­கள் மீது நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு (Contempt of Court) பாயும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">3.	அதி­கா­ரி­கள் மீதான நேரடி ஒழுங்கு நட­வ­டிக்கை:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாநில அர­சின் பேச்­சைக் கேட்­டுத் தேர்­தல் பணி­யைப் புறக்­க­ணிக்­கும் தலை­மைச் செய­லா­ளர், மாவட்ட ஆட்­சி­யர்­கள் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அல்­லது அவர்­களை உட­ன­டி­யா­கப் பணி­நீக்­கம்/பணி­யிட மாற்­றம் செய்­யு­மாறு தேர்­தல் ஆணை­யம் நேர­டி­யாக உத்­த­ர­ வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­பு­க­ளின்­படி, இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளில் அதி­கா­ரி­களை இட­மாற்­றம் செய்­யும் அல்­லது தற்­கா­லி­கப் பணி­நீக்­கம் செய்­யும் அதி­காரவரம்பு தேர்­தல் ஆணை­யத்­திற்கு உண்டு.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">4.	தீவிர அர­சி­ய­ல­மைப்பு விளைவு - குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி (பிரிவு 356):</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு மாநில அரசு இந்­திய அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்டு இயங்க மறுத்­தால் அல்­லது மத்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் சட்­டப்­பூர்வ உத்­த­ர­வு­க­ளைத் திட்­ட­மிட்டு முடக்­கி­னால்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13"></lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பிரிவு 365:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மத்­திய அரசு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு ஆணை­யங்­க­ளின் உத்­த­ர­வு­களை ஒரு மாநில அரசு செயல்­ப­டுத்­தத் தவ­றி­னால், அங்கு “அர­சி­ய­ல­மைப்பு இயந்­தி­ரம் முறிந்­து­விட்­டது” (Breakdown of Constitutional Machinery) எனக் கரு­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதன் அடிப்­ப­டை­யில் ஆளு­நர் அறிக்கை தாக்­கல் செய்து, பிரிவு 356-ன் கீழ் மாநில ஆட்­சி­யைக் கலைத்­துக் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்­சியை (President’s Rule) அமல்­ப­டுத்த மத்­திய அர­சுக்கு அதி­கா­ரம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">5.	தேர்­தல் அல்­லது பட்­டி­யல் பணி­கள் நிறுத்­தி­வைக்­கப்­ப­ட­லாம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாநில அர­சின் ஒத்­து­ழை­யா­மை­யால் தேர்­தல் பணி­க­ளையோ அல்­லது வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்­தையோ நேர்­மை­யாக நடத்த முடி­யாது என்ற சூழல் ஏற்­பட்­டால், அந்த மாநி­லத்­தில் தேர்­தல் நடை­மு­றை­க­ளையே நிறுத்­தி வைக்­கும் அதி­கா­ர­ மும் தேர்­தல் ஆணை­யத்­திற்கு உண்டு. இது மாநி­லத்­தின் ஒட்­டு­ மொத்த ஜன­நா­யக நிர்­வா­கத்­தை­யும் முடக்­கி­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வ­ளவு சிக்­கல்­கள் இருக்­கும்­போது, “மு.க. ஸ்டாலின் அரசு ஏன் எஸ்.ஐ.ஆரை நிறுத்­தி­வைக்­க­வில்லை?” என ஆதவ் சவ­டால் அடிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எஸ்.ஐ.ஆரில் உள்ள உண்­மை­யான தில்­லை­முல்லு என்­ன­வென்­றால், தேர்­தல் ஆணை­யம் ‘படி­வம் 6’ மூலம் 25 ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய ஆவ­ணங்­க­ளை­யும் விவ­ரங்­க­ளை ­யும் கேட்டு, பெரும்­பான்மை மக்­கள் பதி­ல­ளிக்க முடி­யா­த­வாறு தடுத்­த­து­தான். அர­சுப் பணி­யா­ளர்­கள் தேர்­தல் ஆணை­யம் வழங்­கும் படி­வத்­தில் உள்­ள­ப­டி­தான் செயல்­பட முடி­யும்; பெயர்­களை அவர்­க­ளா­கவே சேர்க்­கவோ நீக்­கவோ முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">புதிய வாக்­கா­ள­ரைச் சேர்ப்­ப­தற்கு தாத்தா, பாட்டி, அப்பா, அம்­மா­வின் வாக்­கா­ளர் வரிசை எண் கேட்­ப­தில் தொடங்கி, வாக்­கா­ளர்­க­ளின் முந்­தைய வாக்­குச்­சா­வடி எண், வரிசை எண் பதி­விட நிர்­பந்­திப்­பது வரை ஒரு­வர் தன் வாக்­கு­ரி­மையை இழப்­ப­தற்­கான அத்­தனை தந்­தி­ரங்­க­ளும் அதில் செய்­யப்­பட்­டன. அரசு ஊழி­யர்­க­ளுக்­குப் படி­வம் 6-ல் கேட்­ட­படி அதை நிரப்­பு­வ­து­தான் பணியே தவிர, பெயர்­களை நீக்­கவோ சேர்க்­கவோ அதி­கா­ரம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தங்­கள் வாக்­கு­ரி­மையை இழந்த 
எத்­தனை பேர் இதை எதிர்த்து நீதி­மன்­றம் செல்ல முடி­யும்? அப்­ப­டியே வாக்­கா­ளர் பெயர் நீக்­கத்தை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­தா­லும், தேர்­தல் ஆணை­யம் தனது மையப்­ப­டுத்­தப்­பட்ட அமைப்­பின் மூலம் திட்­ட­மிட்டு அவற்றை ஏதேச்­ச­தி­கா­ர­மாக நிரா­க­ரித்­தது. உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள், முன்­னாள் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர்­கள், அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள், மாண­வர்­கள் மற்­றும் இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த எதிர்க்­கட்­சி­கள் என அனை­வ­ரும் கொதித்­தெ­ழுந்து நிற்­பது இந்­தப் பிரச்­ச­னைக்கு எதி­ரா­கத்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எஸ்.ஐ.ஆரின் பின்­ன­ணி­யும் பிர­ணாய் ராயின் தர­வு­க­ளும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">DeKoder தளத்­தில் பிர­பல ஊட­வி­ய­லா­ளர் பிர­ணாய் ராய் (Prannoy Roy) வெளி­யிட்­டுள்ள “More SIR Deletions, Bigger BJP Swing? Prannoy Roy DeKodes the Data” என்ற காணொ­ளி­யில் பல சந்­தே­கங்­க­ளை­யும் கேள்­வி­க­ளை­யும் முன் வைக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் மேற்­கொண்ட வாக்­கா­ளர் பட்­டி­ய­லின் சிறப்பு தீவிர திருத்­தப் பணி (SIR) மிக­வும் சிக்­க­லா­னது; இதற்கு குறைந்­த­பட்­சம் இரண்டு ஆண்­டு­க­ளா­வது தேவைப்­பட்­டி­ருக்க வேண்­டும். ஆனால், மாநி­லத் தேர்­த­லுக்­குச் சில மாதங்­க­ளுக்கு முன்பு அவ­சர அவ­ச­ர­மாக இந்­தப் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது ஏன் என்ற கேள்­வியை அவர் எழுப்­பு­கி­றார். மேலும், தேர்­தல் ஆணை­யத்­தின் இந்த நட­வ­டிக்­கை­ யால் நாடு முழு­வ­தும் லட்­சக்­க­ணக்­கான தகு­தி­யுள்ள வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­தைக் குறிப்­பிட்டு, பிர­ணாய் ராய் தான் பல தசாப்­தங்­க­ளாக வாக்­க­ளித்து வந்­த­போ­தி­லும், அவ­ரு­டைய பெய­ரும் வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ள தா­கத் தெரி­விக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவ­ரது காணொ­ளி­யில் உள்ள முதன்­மை­யான தர­வு­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">•	டெல்­லி­யில் சுமார் 33%, மகாராஷ்­டி­ரா­வில் சுமார் 21%, கர்­நா­ட­கா­வில் சுமார் 20% வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">•	மேற்கு வங்க சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பா.ஜ.­க.­வுக்­குச் சாத­க­மா­கச் சுமார் 8% வாக்­கு­கள் அதி­க­ரித்­த­தும், திரி­ணா­மூல் காங்­கி­ர­ஸுக்கு (TMC) 7% வாக்­கு­கள் குறைந்­த­தும் தெரி­ய­வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">•	வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்ட விகி­தத்­திற்­கும் பா.ஜ.க. வாக்­கு­கள் அதி­க­ரித்­த­தற்­கும் நேர­டித் தொடர்பு இருப்­ப­தா­கத் தர­வு­கள் காட்­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">•  அதிக வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்ட தொகு­தி­க­ளில் TMC-க்கு எதி­ரான வாக்­குப் பின்­ன­டைவு 10.5% ஆக இருந்­தது; குறைந்த வாக்­கா­ளர் நீக்­கம் நிகழ்ந்த 25தொகு­தி­களில் அந்­தப் பின்­ன­டைவு 5.3%மட்­டுமே. அதா­வது, வாக்­கா­ளர்­கள் அதி­க­மாக நீக்­கப்­பட்ட தொகு­தி­க­ளில் வாக்­குப் பின்­ன­டைவு கிட்­டத்­தட்ட இரு­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">• பொது­வாக மம்தா பானர்ஜி மற்­றும் திரி­ணா­மூல் காங்­கி­ர­ஸுக்கு பெண்­க­ளி­டையே பாஜ­கவை விட 13% வரை அதிக ஆத­ரவு இருந்­து­வந்­துள்­ளது. ஆனால், மேற்கு வங்­கத்­தில் ஆண்-­பெண் வாக்­கா­ளர் விகி­தம் 50:50 என்ற அள­வில் உள்­ள­போ­தும், நீக்­கப்­பட்ட மொத்த வாக்­கா­ளர்­களில் 62% பேர் பெண்­கள், ஆண்­கள் 38% மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">• முஸ்­லிம் வாக்­கா­ளர்­க­ளில் 75% பேர் TMC-க்கும், 7 முதல் 8% பேர் மட்­டுமே பா.ஜ.­க.­வுக்­கும் ஆத­ர­வ­ளித்­து­வந்­துள்­ள­னர். தேர்­தல் முடிவை மாற்­றக்­கூ­டிய அள­வில் அதிக முஸ்­லிம் வாக்­கா­ளர்­க­ளைக் கொண்ட தொகு­தி­க­ளி­லேயே அதி­கப்­ப­டி­யான நீக்­கங்­கள் நடந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">•   மற்ற வாக்­கா­ளர்­க­ளின் விகி­தத்­தி­ லேயே நீக்­கப்­பட்­டி­ருந்­தால் முஸ்­லிம் வாக்­கா­ளர்­கள் 19.8 லட்­சம் பேர் மட்­டுமே நீக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும்; ஆனால் உண்­மை­யில் 30 லட்­சம் முஸ்­லிம் வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­னர் (சுமார் 52% கூடு­தல் நீக்­கம்).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பாலி­னம் மற்­றும் மதம் சார்ந்த இந்­தப் பெரும் சம­நி­லை­யின்மை மற்­றும் முறை­யான நீக்­கங்­கள் குறித்­துத் தேர்­தல் ஆணை­யம் நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யான விளக்­கம் அளிக்க வேண்­டும் என்­றும், முன்­னாள் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் எஸ். ஒய். குரேஷி (S.Y. Quraishi) கூட இதற்­கான விளக்­கத்­தைக் கோரி­யுள்­ளார் என்­றும் பிர­ணாய் ராய் பல கேள்­வி­களை எழுப்­பு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தக் கேள்­வி­கள் அனைத்­தும் தமிழ்­நாட்­டிற்­கும் மிக­வும் பொருந்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆதவ் அர்­ஜு­னா­வின் அறி­யா­மை­யும் தி.மு.க.வின் களப்­ப­ணி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எஸ்.ஐ.ஆர். வாக்­கா­ளர் நீக்­கத்­திற்­குத் தி.மு.க.தான் கார­ணம் என்று ஆதவ் அர்­ஜுனா கூசா­மல் சொல்­வ­தற்­குப் பின்­னால் உச்­சக்­கட்ட காழ்ப்­பு­ணர்ச்­சி­யும் அறி­யா­மை­யும் மட்­டுமே கார­ணம் அல்ல; தனக்கு மறை­மு­க­மாக உத­விய தேர்­தல் ஆணை­யத்­திற்­குச் செய்­யும் கைம்­மாறு அது. நாடே இந்­தப் பிரச்­சி­னை­யில் தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்­கு­எ­தி­ராக கிளர்ந்து எழுந்­து­கொண்­டி­ருக்­கும்­போது ஞானேஷ் குமார் மீதான பழியை தி.மு.க மீது திருப்­பு­வது என்­றால் ஆதவ் அர்­ஜுனா யாரு­டைய ஆள் என்­பது தெட்­டத் தெளி­வாக தெரி­கி­றது. மேலும்  இத்­தனை தில்­லை­முல்­லு­க­ளுக்­குப் பிற­கும் தி.மு.க. கம்­பீ­ர­மாக எழுந்து நிற்­ப­தைப் பார்த்து உண்­டான நடுக்­கம் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் 96 லட்­சம் வாக்­கு­கள் நீக்­கப்­பட்ட சூழ­லில், தி.மு.க. எடுத்த தொடர் சட்ட மற்­றும் களப் போராட்­டங்­க­ளால்­தான் அதில் 20 லட்­சம் வாக்­கு­கள் மீண்­டும் சேர்க்­கப்­பட்­டன. இந்த எஸ்.ஐ.ஆர். நடை­முறை நடந்­து­கொண்­டி­ருந்­த­போது,அதற்கு எதி­ரா­கத் த.வெ.க. ஒரு சிறு துரும்­பை­ யா­வது கிள்­ளிப் போட்­ட­துண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யத்­தின் இந்த மோச­டிக்கு மௌன­மா­கத் துணை­நின்று அர­சி­யல் ஆதா­யம் தேடிக்­கொண்­ட­வர்­கள், இப்­போது ஒட்­டு­மொத்­தப் பழி­யை­யும் தி.மு.க. மீது சுமத்­து­கி­றார்­கள். தங்­க­ளுக்­குக் களத்­தில் எந்­தத் தனிப்­பெ­ரும் செல்­வாக்­கும் இல்லை என்­பதை உணர்ந்­து­விட்­ட­தால்­தான், இத்­த­கைய எஸ்.ஐ.ஆர். பழி­யைத் தி.மு.க. மீது போடும் நாட­கங்­களை அரங்­கேற்றி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“வெளியே இருந்து வந்­த­வன் எல்­லாம் இது­பற்றி முட்­டாள்­த­ன­மா­கப் பேசு­றான்” என அகில உலக மேதை ஆதவ் அர்­ஜுனா தாக்­கு­வது திரைக் கலை­ஞர் பிர­காஷ் ராஜை. மேலும், இவர்­க­ளது கூட்­ட­ணிக் கட்­சி­யைச் சேர்ந்த திரு­மா­வ­ள­வன் கூட அண்­மை­யில், “த.வெ.க. வெற்­றிக்கு எஸ்.ஐ.ஆர்­தான் கார­ணம்” என்று சொல்­லி­யி­ருப்­ப­தற்­கும் ஆதவ் அர்­ஜு­னா­வின் பதில் இது­தானா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பா.ஜ.கவின் முக­மூ­டி­யாக தமி­ழ­கத்­தில் தேர்­தல் ஆணைய மோச­டி­யால் ஆட்­சி­லி­ருக்­கும் த.வெ.க இப்­ப­டிப் பேசா­விட்­டால்­தான் ஆச்­ச­ரி­யம். தமிழ்­நட்­டி­லி­ருக்­கும் பா.ஜ.க. தான் த.வெ.க.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>