<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 13 2026 03:31:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261013T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13102026-CBE-05" position.sequence="05" ex-ref="13102026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.10.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">‘மிசா’ காலத்தில் சென்னைச் சிறையிலே பல்வேறு கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட இளைஞரான மு.க.ஸ்டாலின்தான்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="34"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">இன்றைக்கு தமிழினத்தை வழிநடத்தும் தலைவராக உயர்ந்து நிற்கிறார்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">‘மிசா வடுக்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் – கழக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup941006_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="thiruchisiva_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">சென்னை, அக். 13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">கழக துணைப் பொதுச் செய­லா­ளர் திருச்சி சிவா எம்.பி., ‘மிசா வடுக்­கள்’ நூல் வெளி­யீட்டு விழா­வில் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்று­கையில், “மிசா காலத்­தில் சென்­னைச் சிறை­யிலே பல்­வேறு கொடு­மை­க­ளைத் தாங்­கிக் கொண்ட இளை­ஞ­ரான மு.க.ஸ்டாலின் அவர்­கள்­தான், இன்­றைக்­குத் 
தமிழி­னத்தை வழி­ந­டத்­தும் தலை­வ­ராக உயர்ந்து 
நிற்­கி­றார்” என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆத­வன் என்­டர்­டெ­யின் மெண்ட் சார்­பில் எஸ்.கே. ஸ்ரீதரன்  தொகுத்த ‘மிசா வடுக்­கள்’  நூல் மற்­றும் ‘மிசா ஆவ­ணப் ப­டம்’ வெளி­யீட்டு விழா­வில் கழக துணைப் பொதுச் செய­லா­ளர் திருச்சி சிவா எம்.பி. ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நாடா­ளு­மன்­றப் பொதுக்­க­ணக்­குக் குழு­வின் சுற்­றுப் 
பய­ணத்­தில் இருந்த நான், இந்­நி­கழ்ச்­சிக்­காக இன்று பய­ணத்­தைப் பாதி­யி­லேயே விட்­டு­விட்டு வந்­தி­ருக்­கின்­றேன். “இப்­படி ஒரு நூல் வெளி­யாக இருக்­கி­றது; இதிலே நீங்­கள் கலந்து கொள்ள வேண்­டும்” என்று கழ­கத்­தின் தலை­வர் அவர்­கள் எனக்­குக் கட்­ட­ளை­யிட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்த நூல் எனக்கு இன்று மாலை 4 மணிக்­குத்­தான் கிடைத்­தது. விமான நிலை­யத்­தி­லி­ருந்து தங்­கு­மி­டம் செல்­லும் வழி­யி­லும், பின்­னர் அங்­கி­ருந்து விழா அரங்கு வரும் வழி­யி­லும் படித்­துக்­கொண்டே வந்­தேன். ஏறத்­தாழ 150 பக்­கங்­க­ளைப் படித்­து­விட்­டேன். முன்­ன­தா­கவே நூல் கிடைத்­தி­ருந்­தால் இன்­னும் சிறப்­பாக இருந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இங்கே வர­லாற்று ஆவ­ணம் என்று எல்­லோ­ரா­லும் குறிப்­பி­டப்­பட்ட இந்த நூலில், எனக்கு ஒரு இடம் இல்­லா­மல் போய்­விட்­டதே என்ற சிறு ஆதங்­கம் இருக்­கி­றது. என்­னி­டம் கட்­டு­ரை­யும் கேட்டு வாங்­க­வில்லை; ஆவ­ணப்­ப­டம் எடுத்­த­போ­தும் என்­னைச் சந்­திக்­க­வில்லை. நான் ஏற்­க­னவே நூல் எழு­தி­விட்­ட­தா­கக் கார­ணம் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நான் எழு­திய நூலின் தலைப்பு மிக­வும் ஈர்க்­கக்­கூ­டிய வகை­யில் இருக்­கும்; ஆனால் அது மிசா­வைப் பற்­றி­யது என்­பது பல பேருக்­குத் தெரி­யாது. ‘எதிர்­பா­ராத திருப்­பம்’ என்று அதற்­குத் தலைப்­பிட்­டேன். தலை­வர் தளபதி அவர்­கள்­தான் அதனை வெளி­யிட்­டார்­கள். அப்­பொ­ழுது அவர் முத­ல­மைச்­ச­ராக இருந்­தார்; வெளி­யி­டு­வ­தற்­குச் சிறி­தும் தயங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">சிறைக் கொட்­ட­டி­யில் பல அவ­மா­னங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">முன்­னால் பேசி­ய­வர்­கள் சொன்­ன­தைப் போல, சரி­யான நேரத்­திலே இது வெளி­யா­கி­யி­ருக்­கி­றது என்­பதை விட, எந்த நிலை­யி­லும் எதற்­கும் தயார் நிலை­யில் இருக்­கக்­கூ­டி­ய­வர் அண்ணன் தளபதி ஸ்டாலின். வர­லாற்றை மறைக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­ப­தில் திட­மான எண்­ணம் உடை­ய­வர் அவர். அந்த நூலை நான் எழுதி வெளி­யிட்ட போது, பெரு­ம­ள­வில் எல்­லோ­ரா­லும் படிக்­கப்­பட்­டது; தம்பி ஸ்ரீத­ரன் கூட அத­னைப் படித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அவ­ச­ர­நி­லைக் காலத்­தில், சிறைக்­கொட்­ட­டி­யில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மீது தாக்­கு­த­லும் அடி­யும் உதை­யும் நடந்­தது சென்­னை­யில்­தான். பல அவ­மா­னங்­கள் இழைக்­கப்­பட்­டன. அதற்கு அங்­கி­ருந்த சிறை அதி­கா­ரியே கார­ணம் என்­ப­தை­யும் எல்­லோ­ரும் குறிப்­பிட்­டார்­கள். மற்ற சிறைச்­சா­லை­க­ளில் அப்­படி தாக்­கு­தல் இல்­லையே தவிர, துன்­பங்­கள் எல்லா இடங்­க­ளி­லும் இருந்­தன. தழும்­பு­கள் இல்­லை­யென்­றா­லும், வலி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">என் நூலுக்கு ‘எதிர்­பா­ராத திருப்­பம்’ என்று தலைப்­பிட்­ட­தற்­குக் கார­ணம், இள­வ­ய­தில் எனக்­குள் கனிந்த ஒரு கனவு — ஐ.ஏ.எஸ். அதி­கா­ரி­யாக வேண்­டும் என்­ப­து­தான். அதை நோக்­கியே சென்று கொண்­டி­ருந்­தேன்; அதற்­கா­கவே ஆங்­கில இலக்­கி­யம் எடுத்­துப் படித்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆனால், கழக மாண­வ­ர­ணி­யில் ஈடு­பாடு கொண்­டி­ருந்த கார­ணத்­தால் கைது செய்­யப்­பட்­டுச் சிறைக்­குச் சென்­றேன். அது என் வாழ்க்­கை­யின் மிகப்­பெ­ரிய திருப்­பு­மு­னை­யாக மாறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ராபர்ட் ஃபிராஸ்ட் எழு­திய கவி­தை­யில் சொல்­வ­தைப் போல:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">“கான­கத்­திலே இரண்டு சாலை­கள் பிரிந்­தன; யாரும் பய­ணம் செய்­யாத பாதையை நான் தேர்ந்­தெ­டுத்­தேன். அதுவே எல்லா மாற்­றங்­க­ளுக்­கும் கார­ண­மாக அமைந்­தது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதைப்­போல, சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வெளியே வந்­த­வு­டன், என் கன­வைத் தொடர்ந்து நிறை­வேற்ற அந்த வழி­யில் செல்­வதா அல்­லது கலை­ஞ­ருக்­குப் பின்­னாலே நடக்­கத் தொடங்­கி­யதை அப்­ப­டியே தொடர்­வதா என்று அந்­தச் சிறை வாச­லில்­தான் முடி­வெ­டுத்­தேன். இதெல்­லாம் கதை அல்ல; நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கைதா­ன­போது எனக்கு வயது 21; விடு­த­லை­யான போது 22. வெளியே வந்து, “இந்த மதில் சுவர்­க­ளுக்­குப் பின்­னால் ஒரு வரு­டம் இருந்­தோம்” என்று யோசித்­துத் தீர்க்­க­மான முடி­வெ­டுத்­தேன். “இனி எங்கு சென்­றா­லும் சிறைக் கைதி என்ற முத்­திரை தொட­ரும்; நாம் தவ­றான பாதை­யில் செல்­ல­வில்லை. ஜன­நா­ய­கத்­திற்­காக ஆட்­சி­யைப் பறி­கொ­டுத்த தலை­வ­னுக்­குப் பின்­னால் கால­மெல்­லாம் நடந்­திடவேண்­டும்” என்று முடி­வெ­டுத்து அவ­ரைத் தொடர ஆரம்­பித்­தேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">என்­னைத் தாய்க்­கோ­ழி­யா­கப் பொத்தி வளர்த்­தார். இன்­றைக்­கும் அந்­தப் பந்­தம் இன்­றைய கழ­கத் தலை­வ­ரோடு எனக்கு 50 ஆண்டு கால­மா­கத் தொடர்­கி­றது. அவர் என் மீது கொண்­டி­ருக்­கிற அன்பு அள­வற்­றது. அத­னால்­தான் இந்த நிகழ்ச்­சி­யில் நானும் கலந்து கொள்ள வேண்­டும் என்று பணித்­தார்­கள். அதன் பொருட்­டு­தான் நான் ஒரு முக்­கி­ய­மான பணி­யைக் கூட பாதி­யில் விட்­டு­விட்டு ஓடோடி வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நூலி­னைப் படித்­தேன். சிறை­யில் இருந்த வழக்­க­றி­ஞர் துரை­சாமி, ஐயா வீர­மணி, அண்­ணன் சோமா போன்­ற­வர்­கள்; அதே­போ­லச் சிறை­யில் இருந்­த­வர்­க­ளின் பிள்­ளை ­க­ளான தம்பி கலா­நிதி, அண்­ணன் ஆர்.டி.சீத்தாபதியின் மகள் அண்ணன் சிட்டிபாபு அவர்களின் மகன் எனப் பலர். நான்கு நாட்­கள் மட்­டுமே உள்ளே இருந்­து­விட்டு வெளியே வந்­தா­லும், ஆனால், அந்­தக் காலத்­தில் நடந்­த­வை­க­ளைப் பக்­கத்­தி­லி­ருந்து பார்த்து உணர்ந்த தோழர் டி.கே.எஸ்.இளங்­கோ­வன் அவர்­கள், சிறைச்­சா­லை­யில் வேறு கைதி­யாக இருந்­தா­லும் எங்­க­ளைப் பற்றி நன்­றா­கத் தெரிந்­தி­ருந்த தோழர் தியாகு என்று பல பேர் அதில் நிறைய எழு­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">அண்ணா – கலை­ஞர் காலத்­தி­லி­ருந்து 
பின்­பற்­றப்­ப­டும் பாரம்­ப­ரி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கம்­யூ­னிஸ்ட் கட்­சித் தோழர்­க­ளும் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். அதனை ஊன்­றிப் படிக்­கும்­போது சில வேறு­பா­டு­கள் தெரி­ய­லாம். இங்கே தோழர் பால­கி­ருஷ்­ணன் அவர்­கள் பேசும்­போது, “இங்கே வந்­து­விட்ட கார­ணத்­தால் அர­சி­யல் மாற்­றம் நிகழ்ந்­து­விட்­ட­தாக யாரும் கரு­தி­விட வேண்­டாம்” என்­றார். அப்­படி நாங்­கள் அவ­ச­ரப்­ப­டு­கி­ற­வர்­கள் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இலக்­கிய நிகழ்­வு­கள், சமு­தாய நிகழ்ச்­சி­கள் மற்­றும் வர­லாற்றை நினைவு கூர்­கிற தரு­ணங்­க­ளில், பங்­கேற்­பா­ளர்­கள் இணைந்து கலந்து கொள்­ளும்­போது அர­சி­யல் அடை­யா­ளங்­கள் பின்­னுக்­குப் போய்­வி­டு­கின்­றன. இது பேர­றி­ஞர் அண்ணா மற்­றும் தலை­வர்கலை­ஞர் காலத்­தி­லி­ருந்து உரு­வாக்­கப்­பட்­டுப் பின்­பற்­றப்­ப­டும் பாரம்­ப­ரி­யம். நாங்­கள் தொடர்ந்து அதைக் கடைப்­பி­டிக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தம்பி ஸ்ரீத­ரன் அவர்­கள், தோழர்­கள் டி.கே. ரங்­க­ரா­ஜ­னி­டமோ பால­கி­ருஷ்­ணன் அவர்­க­ளி­டமோ கட்டுரை பெற்­ற­போது, “எங்­க­ளோடு கூட்­ட­ணி­யில் இருந்­த­வர்­கள் இப்­போது இல்லை” என்று  அவர் குறிப்­பிட்­டார். அதற்­கும் இதற்­கும் சம்­பந்­த­மில்லை. அவ­ச­ர­நி­லையை எதிர்த்­த­வர்­க­ளில் அவர்­க­ளும் முக்­கி­ய­மா­ன­வர்­கள். அவர்­கள் இயக்­கத்­தைச் சார்ந்த பலர் கைதா­கி­யி­ருந்­தார்­கள்; பலர் தலை­ம­றை­வாக இருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தலை­ம­றைவு வாழ்க்கை என்­பது அவர்­க­ளுக்­குப் பழக்­க­மான ஒன்று; பயிற்­று­விக்­கப்­ப­டு­கின்ற பாடங்­க­ளில் அது­வும் ஒன்று. ஆனால் தி.மு.க. அப்­ப­டிப்­பட்­டது கிடை­யாது; நேர­டி­யா­கக் களத்­தில் இறங்கி, வரு­வதை எதிர்­கொண்­டு­தான் பழக்­கம். இரு­வ­ருக்­கும் இரண்டு இயல்­பு­கள் உண்டு என்­றா­லும், லட்­சி­யக் குணம் ஒன்­றா­கத்­தான் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்த இடத்­திலே சில­வற்­றைச் சொல்ல வேண்­டும். திரை­யி­டப்­பட்ட ஆவ­ணப்­ப­டத்­தில் சிறைச்­சா­லை­யில் நடை­பெற்ற சித்­தி­ர­வ­தை­க­ளை­யெல்­லாம் படம்­பி­டித்­துக் காட்­டி­னார்­கள். அது­போல இந்த நூலி­லும் அந்­தக் கால­கட்­டத்­தில் நடந்­த­வை­க­ளைப் பற்­றிப் பல­ரும் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">எதிர்­கா­லத்­திற்­கான நூல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நான் கூடச் சிறு ஆதங்­கத்­து­ட­னும் பொறா­மை­யு­ட­னும் தம்பி ஸ்ரீத­ர­னி­டம் சொன்­னேன்: “மீண்­டும் என்­னி­டம் ஒரு கட்­டுரை வாங்கி இதில் இணைத்­துக் கொள்” என்று. ஏனெ­னில், பின்­னா­ளில் மிசா­வைப் பற்­றித் தெரிந்து கொள்ள விரும்­பு­ப­வர்­கள் தேடு­கின்ற நூல்­க­ளில் இது முக்­கி­ய­மான ஒன்­றாக இருக்­கும். எழு­தப்­ப­டு­கின்ற நூல் என்­பது அந்­தக் கால­கட்­டத்­திற்கு மட்­டும் உரி­யது அல்ல; அது எதிர்­கா­லத்­திற்­கா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">காலங்­கள் கடந்து 50 ஆண்­டு­கள் கழித்து இன்­றைக்கு இதைப் பேச வைத்த அந்த வாய்ப்­பைத் தந்த இன்றைய ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்கு நன்றி சொல்ல வேண்­டும்! இல்­லா­விட்­டால் ஒரு தலை­மு­றைக்கு அவ­ச­ர­நிலை என்­றால் என்­ன­வென்றே தெரி­யா­மல் போயி­ருக்­கும். அவ­ச­ர­நிலை என்­றால் என்ன என்­பதை விட, அதன் பின்­வி­ளை­வு­க­ளும் கொடு­மை­க­ளும் என்­ன­வென்­பதை அறி­யாத ஒரு தலை­முறை இன்று ஓங்கி வளர்ந்து நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அர­சி­யலை இன்­னும் முழு­மை­யாக உண­ராத சூழ­லில், ஒரு கொடு­மை­யான கால­கட்­டம் நடந்­தி­ருக்­கி­றது; அது மீண்­டும் நடப்­ப­தற்­கான வாய்ப்­பும் இருக்­கி­றது. இன்­றைக்கு மிசா சட்­டம் இல்­லையே தவிர, UAPA என்ற சட்­டம் இருக்­கி­றது. அது பல­ருக்­குத் தெரி­யாது. அது இன்­னும் அர­சி­யல்­வா­தி­களை தொட­வில்லை; சமூக ஆர்­வ­லர்­க­ளை­யும், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளை­யும் மட்­டுமே கை வைத்­துள்­ளது. இப்­படி ஒரு சட்­டம் இருப்­பதே பல­ருக்­குத் தெரி­யாது. அப்­ப­டித்­தான் 1971-இல் இயற்­றப்­பட்ட மிசா சட்­டம், தோழர் பால­கி­ருஷ்­ணன் சொன்­ன­தைப் போல 1975-இல் கூர்­மை­யாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">அவ­சர நிலைப் பிர­க­ட­னம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய இன்­றைய தலை­மு­றை­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கா­கச் சொல்­வேன், இந்­தி­ரா­காந்தி அம்­மை­யா­ரின் தேர்­தல் செல்­லாது என்­றும், ஆறு ஆண்­டு­கள் அவர் தேர்­த­லில் நிற்க முடி­யாது என்­றும் அல­கா­பாத் உயர்­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளிக்­கி­றது. தன்­னு­டைய அர­சி­யல் எதிர்­கா­லம் இருண்டு போனது என்ற நிலை­யில், அதி­லி­ருந்து தன்­னைக் காத்­துக் கொள்­வ­தற்­காக அவர் அர­சி­யல் சட்­டத்­தின் 352, 356, 360 ஆகிய பிரி­வு­க­ளைப் பயன்­ப­டுத்தி அவ­ச­ர­நி­லை­யைப் பிர­க­ட­னம் செய்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதற்கு முன்­னால், 1971-இல் முதன்­மு­றை­யா­கத் தி.மு.க. காங்­கி­ர­ஸோடு கூட்­டணி சேர்­கி­றது. அது­வரை எதி­ரும் புதி­ரு­மா­கப் போட்­டி­யிட்டு கடு­மை­யாக விமர்­சித்து வந்த கட்­சி­கள் அவை. அந்­தத் தேர்­த­லில், தமிழ்­நாடு அர­சி­யல் வர­லாற்­றில் இது­வரை யாரும் பெறாத அள­விற்கு 184 இடங்­க­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மட்­டுமே வெற்றி பெற்­றது. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ர­ஸுக்­குக் ஒதுக்­கப்­பட்ட இடங்­க­ளி­லெல்­லாம் வெற்றி பெற்­றது; தி.மு.க.விற்­கும் இடங்­கள் கிடைத்­தன. அவர்­கள் கொண்­டு­வந்த முற்­போக்­குத் திட்­டங்­க­ளான மன்­னர் மானிய ஒழிப்பு, வங்­கி­கள் தேசி­ய­ம­ய­மாக்­கம் போன்ற முற்­போக்­கான திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு அளித்து நாங்­கள் கூட்­டணி கரம் கோர்த்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்த நிலை­யில்­தான், இந்­திரா காந்­தி­யின் தேர்­தல் தொடர்­பான தீர்ப்பு வந்­த­வு­டன் அவ­ச­ர­நிலை பிர­க­ட­னம் செய்­யப்­பட்­டது. அந்த நாளைத் தய­வு­செய்து குறித்­துக் கொள்­ளுங்­கள்: 1975 ஜூன் 25.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அன்­றைய தினம் காங்­கி­ரஸ் அல்­லாத அரசு குஜ­ராத்­தில் நடை­பெற்­றது. அது ‘ஜனதா மோர்ச்சா’ என்ற கூட்­ட­ணிக் கட்சி ஆட்சி; பாபு­பாய் ஜே. படேல் முத­ல­மைச்­சர். தமிழ்­நாட்­டில் காங்­கி­ர­ஸோடு கூட்­டணி சேர்ந்து வெற்றி கண்ட திமுக ஆட்சி; கலை­ஞர் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்­திரா காந்தி அம்­மை­யார் “Indiscipline and violence in India” என்று குறிப்­பிட்­டது தமிழ்­நாட்­டை­யும் குஜ­ராத்­தை­யும் தான். ஆனால் குஜ­ராத் அரசு சில நாட்­க­ளி­லேயே அவர்­க­ளுக்­குள் ஒற்­றுமை இல்­லாத கார­ணத்­தால், நிதி­நிலை அறிக்­கை­யைக் கூடச் சட்­ட­ச­பை­யில் நிறை­வேற்ற முடி­யா­மல் கலைந்­து­போ­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">கலை­ஞர் செயல்­பட்ட வேகம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நாம் கூட்­ட­ணி­யில் இருந்த போதி­லும், ஜூன் 25 அன்று அவ­ச­ர­நிலை பிறப்­பிக்­கப்­பட்­ட­வு­டன் கலை­ஞர் செயல்­பட்ட வேகத்­தைப் பார்க்க வேண்­டும்; ஆவ­ணப்­ப­டம், வலி இதெல்­லாம் நாமாக வர­வ­ழைத்­துக் கொண்­டது. திணிக்­கப்­ப­டு­வது வேறு; தெரிந்தே ஒன்றை வர­வ­ழைத்து ஏற்­றுக் கொள்­வ­தற்­குப் பெயர்­தான் தியா­கம் என்­பது. தெரிந்தே ஒரு துன்­பத்தை தாங்­கிப் கொள்­வோம் என்­ப­தற்­குப் பெயர்­தான் களத்­தில் நிற்­போம்என்ற தெளி­வான உறுதி”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஜூன் 27, அதா­வது 48 மணி நேரத்­திற்­குள், தி.மு.க.வின் செயற்­கு­ழு­வைக் கூட்டி கலை­ஞர் நிறை­வேற்­றிய தீர்­மா­னம் என்ன தெரி­யுமா? “இது சர்­வா­தி­கா­ரத்­தின் தொடக்­கம்!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">“அவ­ச­ர­நி­லை­யைத் திரும்­பப் பெறுங்­கள்; சிறை­யில் இருப்­ப­வர்­களை விடு­தலை செய்­யுங்­கள்; ஜன­நா­ய­கத்தை மீட்­க­வும்” என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார். அதனை இந்­திரா காந்தி அம்­மை­யா­ருக்கு அனுப்பி வைத்­து­விட்டு, ஜூலை 6-ஆம் தேதி சென்னை கடற்­க­ரை­யில் மாபெ­ரும் கூட்­டத்­தைக் கூட்டி, வந்­தி­ருந்த மக்­க­ளை­யும் சேர்த்து அந்த முழக்­கத்தை எழுப்ப வைத்த ஒரே தலை­வர் இந்­தி­யா­வில் கலை­ஞர் மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அப்­பொ­ழுது இந்­திரா காந்தி அம்­மை­யார் அங்­கி­ருந்து நய­மான ஒரு செய்­தியை அனுப்பி வைத்­தார்: “உங்­க­ளுக்­கும் எனக்­கும் கருத்து வேறு­பாடு இல்லை. எனக்கு அர­சி­யல் எதி­ரி­கள் வடக்கே இருக்­கி­றார்­கள்; என் கட்­சி­யி­லேயே சிலர் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்­காக நான் இதைச் செய்­கி­றேன். நீங்­கள் ஏன் அதை எதிர்க்­கி­றீர்­கள்?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">அடக்கு முறையை கண்டு அஞ்­சி­ய­தில்லை தி.மு.க.!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதற்­குத் தலை­வர் கலை­ஞர்: “தனிப்­பட்ட முறை­யில் உங்­க­ளுக்­கும் எனக்­கும் அன்பு உண்டு என்­பதை எல்­லாம் மீறி, அடிப்­ப­டை­யில் இந்த நாட்­டின் ஜன­நா­ய­கம் முக்­கி­யம். அது எந்த வகை­யி­லும் பறி­போக நான் அனு­ம­திக்க 
மாட்­டேன்!” என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கழ­கத்­தின் இரு­வண்­ணக் கொடி­யைக் கையில் ஏந்­தி­னோம்; கலை­ஞ­ருக்­குப் பின்­னால் நடக்­கத் தொடங்­கி­னோம் என்­றால், எங்­கள் கம்­பீ­ரம் இன்­ன­மும் குறை­யா­த­தற்­குக் கார­ணம். அதே வழி­யில் இன்­றைக்­குத் தள­பதி அண்­ணன் ஸ்டாலின் அவர்­க­ளும் நடை­போ­டு­கி­றார் என்­ப­து­தான் எங்­க­ளுக்­குள் உள்ள தனிப்­பட்ட சிறப்பு. நாங்­கள் எந்­த­வித அடக்­கு­மு­றை­யைக் கண்­டும் அஞ்சி ஓடி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஏதோ சிலர், ஏதோ இருப்­ப­தா­கக் கரு­திக் கொண்டு, அவர்­கள் காட்­டு­கிற இந்த பூச்­சாண்­டி­களை எல்­லாம் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோமே தவிர, அவற்றை நாங்­கள் வேறு மாதிரி கரு­து­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">“Tolerance is not Acceptance!” பொறுத்­துக் கொண்­டி­ருப்­போம் என்­பது, ஏற்­றுக்­கொண்­டோம் என்­பதோ அல்­லது கையா­லா­காத்­த­னம் என்­பதோ அல்ல. திற­மை­யா­ன­வன் சரி­யான நேரத்­திற்­கா­கக் காத்­தி­ருப்­பான். அது அண்ணா சொல்­லித் தந்­தது. “We know when to raise our arms”, அப்­போ­து­தான் எங்­க­ளின் குர­லும் உய­ரும்; எங்­க­ளின் செய­லும் மாறும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">தி.மு.க.வின் சிறப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வர­லாற்­றைப் பார்க்­கின்ற போது, பத­விக்­காக அலை­கின்­ற­வர்­கள் அல்ல. ஆட்சி கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவோ அல்­லது ஆட்­சி­யில் இரண்டு இடம் கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவோ, எதை வேண்­டு­மா­னா­லும் செய்­வார்­கள். ஆனால், இருந்த ஆட்­சி­யைத் துறந்த ஒரு கட்சி தி.மு.க.! அது­தான் எங்­க­ளு­டைய சிறப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பெரும்­பான்மை இல்­லா­மல் இல்லை; ஆத­ர­வைத் தேடி அலைந்­தோம் என்­ப­தில்லை. 184 இடங்­க­ளோடு இருந்த நேரத்­தில், ஆட்­சி­யைத் தூக்கி எறி­யத் தயார், “எனக்கு ஜன­நா­ய­கம்­தான் வேண்­டும்!” என்று சொல்­லி­விட்டு, இந்­தியா முழு­வ­தும் பத்­தி­ரி­கைத் தணிக்கை இருந்­தது. பொதுக்­கூட்­டங்­கள் கிடை­யாது. இந்­தச் சூழ­லில் தமிழ்­நாட்­டில் மட்­டும்­தான் பொதுக்­கூட்­டங்­கள் நடந்­தன. தோழர்­கள் அதைச் சொல்லி இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இங்­கு­தான் வேலை­நி­றுத்­தங்­கள் நடை­பெற்­றன. தொழிற்­சங்க வேலை­நி­றுத்­தங்­கள் நடை­பெற்­றன. மாண­வர்­கள் போராட்­டம் நடத்­தி­னார்­கள். அவ­ச­ர­நி­லைக் காலத்­திலே நான் போராட்­டங்­க­ளில் பங்­கேற்­றி­ருக்­கி­றேன் மாண­வ­னாக. இங்கே பொதுக்­கூட்­டங்­கள் தொடர்ந்து நடந்­தன. காம­ரா­ஜர் வந்து பேசி­னார். பல­பேர் பேசிக் கொண்­டி­ருந்­தார்­கள். எல்­லாக் கட்­சி­யைச் சார்ந்­த­வர்­க­ளும் பேசிக் கொண்­டி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாட்­டைப் பொறுத்­த­வரை, அவ­சர நிலை என்­பதே வெளியே தெரி­யாத அள­விற்கு ஜன­நா­ய­கத்­தைக் காப்­பாற்­றிய பெருமை, தி.மு.க.வுக்­கும் கலை­ஞ­ருக்­கும் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இது பொறுக்க முடி­ய­வில்லை அவர்­க­ளுக்கு. “என்ன இது, இந்த ஒரு மாநி­லம் மட்­டும்?” ஜார்ஜ் பெர்­னாண்­டஸ் வந்து அடைக்­க­லம் புகுந்­தார்; தங்­கிய இடம் முர­சொலி அலு­வ­ல­கம். பேரா­சி­ரி­யர் நாக­நா­தன் அவர்­கள் கிளம்­பி­விட்­டார் உடல்­ந­லன் கார­ண­மாக. அவர் நிறை­யச் சொல்லி இருக்­கி­றார். அந்த நேரத்­தில் கலை­ஞ­ரு­டனே இருந்­த­வர் அவர். கலை­ஞ­ரு­டைய ஒவ்­வொரு அசை­வை­யும் தெரிந்­த­வர். அவர் எடுத்த முடி­வு­கள், செயல்­ப­டுத்­திய விதம் எல்­லா­வற்­றை­யும் கூட இந்­தக் கட்­டு­ரை­க­ளிலே கூட அவர் சொல்லி இருக்­கின்­றார். எல்­லோ­ரும் ஒவ்­வொரு கோணத்­தில் சொல்லி இருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அப்­படி எல்­லோ­ருக்­கும் அடைக்­க­லம் கொடுத்த சூழ­லில்­தான், 1976 ஜன­வரி 30 காந்தி நினைவு நாள் அரசு விழா நடை­பெ­று­கி­றது. ஆளு­நர் கே.கே. ஷா பேசு­கி­றார்: “தமிழ்­நாட்­டில் காந்­திய வழி­யில் ஆட்சி நடக்­கி­றது”. அடுத்த நாள் 31-ஆம் நாள் அவரே கையெ­ழுத்­தி­டு­கி­றார்: “இங்கே சட்­டம் ஒழுங்கு கெட்­டுப் போனது” என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">காந்­திய வழி என்­பது என்ன என்­பது அவர்­தான் விளக்க வேண்­டும்; ஆள் இல்லை இப்­போது. 31-இலே அவர் கொடுத்த அந்த அறிக்­கை­யின்­படி, 356-வது பிரிவு அது­தான். ஆளு­நர் அறிக்கை தர வேண்­டும், ‘or otherwise’ என்று ஒன்று இருக்­கி­றது. அன்று இரவு ஆட்சி கலைக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">இந்­தி­யா­வில் ஒரு தீவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கலைக்­கப்­பட்ட உடனே வேட்­டை­யா­டு­தல் நடை­பெ­று­கி­றது. எல்­லோ­ரும் கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். ஆயி­ரக்­க­ணக்­கில் டி.ஐ.ஆர் என்ற பிரி­வின் கீழ் கைது செய்­யப்­பட்­டார்­கள். மிசா­விலே சில பேர் கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். மிசா­விலே கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­பட்­ச­மாக 500 வரும். கலை­ஞர் ‘இந்­தி­யா­வில் ஒரு தீவு’ என்ற நூலில் அதை முழு­மை­யாக எழுதி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நான் இன்­னொரு உண்­மை­யும் இப்­போது சொல்­லி­யாக வேண்­டும். யாரா­வது போய் தேடி, “உன் பேரைக் காண­வில்லை; இப்­போது எப்­படி மு.க. ஸ்டாலின் சிறைக்கே போக­வில்லை என்­கி­றார்­களோ, அது­போல சிவா­வும் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்” என்று கரு­தக்­கூ­டாது என்­ப­தற்­காக, என்­னு­டைய இயற்­பெ­யர் என் தந்தை வைத்­தது, நான் பிறந்த மூன்­றா­வது மாதம் அவர் மறைந்த கார­ணத்­தால், பெயரை மாற்­ற­வில்லை, என் பெயர்சிவ­சண்­மு­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பின்­னா­ளில் அழைத்த பெயர் ‘சிவா’ என்­பது. ‘சிவா’ என்று மாறி, ‘மிசா சிவா’­வாகி, பின்­னர் கலை­ஞ­ரால் ‘திருச்சி சிவா’­வாக மாற்­றப்­பட்­டது. எனவே என்­னு­டைய வாரண்­டி­ல் இருந்த ரொம்­பத் தெளி­வான வாச­கம்: “It is necessary to detain Siva alias Sivasanmugam, Son of R. Natesan, residing at Trichy” என்று இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எனக்­குத் தெரி­யாது போலீ­சார் என்னை விரட்­டு­கி­றார்­கள் என்று. ஆனால் தேடு­கி­றார்­கள் என்று தெரிந்து நான் 
ஓடி ஓடி, அப்­போ­தெல்­லாம் சைக்­கி­ளில்­தான் போலீஸ் துரத்­து­வார்­கள். அவர்­கள் இந்­தப் பக்­கம் வந்­தால் நான் 
இன்­னொருபக்­கம் போய்­வி­டு­வேன். ரொம்­பச் சிர­மப்­பட்­டார்­கள். கல்­லூரி வரை வந்­து­விட்­டார்­கள். கல்­லூ­ரி­யி­லி­ருந்­தும் நான் தப்­பிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">14 நாட்­கள் கழித்து, கடை­சி­யா­கப் பேர்­வெல் பார்ட்டி நடந்த அடுத்த நாள் வீட்­டுக்கு வந்து படுத்த காலை­யி­லேயே வந்து, “வாருங்­கள்” என்று கூட்­டிக்­கொண்டு போய் நிலை­யத்­திலே வைத்து சொன்ன வார்த்தை: “யார் இவர்?” என்று அங்கு இருந்­த­வர் கேட்­டார். “அந்த ஸ்டூடெண்ட்­டைப் பிடிச்­சுக்­கிட்டு வந்­து­விட்­டோம்.” “மனோ­கரா, அழைத்து வந்­தாயா, இழுத்து வந்­தாயா?” என்­கிற மாதிரி, “கூட்­டிப் போகி­றோம்” என்று சொல்­லி­விட்டு, “பிடித்­துக்­கொண்டு வந்­து­விட்­டோம்” என்று சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பின்­னர் சர்க்­கிள் இன்ஸ்­பெக்­டர் வந்து எல்­லோ­ருக்­கும் போன் போட்­டுச் சொன்­னார்: “அந்த ஸ்டூடெண்ட்­டைப் பிடிச்­சாச்சு!” “பிடிச்­சாச்சு” என்­றால், அப்­போ­து­தான் என்னை ரொம்­பத் தேடி இருக்­கி­றார்­கள் என்று தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பிறகு, என்­னென்­னவோ நடந்­தது. நான் அதைப்­பற்றி இப்­போது அதி­க­மா­கப் பேச­வில்லை. புரொஃ­பைல் போட்டோ எல்­லாம் எடுத்­துக்­கொண்டு போய் உள்ளே போட்­டார்­கள். ஒரு வரு­ஷம் கழித்­து­தான் வெளி­யில் வந்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இடை­யில் நான் ஒரு முறை எம்.ஏ. தேர்வு எழு­தப் போனேன். ஆறு போலீஸ், துப்­பாக்கி ஏந்­தி­ய­வர்­க­ளோடு சென்­றேன். தேர்வு நடக்­கிற நாள் அன்று என் கல்­லூரி காலி­யாக இருந்­தது. சரி, நமக்கு மட்­டும் சிறப்­புத் தேர்வு போல இருக்­கி­றது என்று கரு­தி­னால், எல்­லோ­ருக்­கும் தான் தேர்வு நடந்­தது. ஆனால் எல்­லாம் மரத்­துக்­குப் பின்­னால் ஒளிந்­தி­ருந்து பதுங்­கிப் பார்த்­தார்­களே தவிர, பக்­கத்­தில் யாரும் வர­வில்லை. ஒரு தனி அறை­யில் வைத்து எழு­தச் சொன்­னார்­கள். மீண்டு வந்­தேன். இது ஒரு புறம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆனால் சென்­னைச் சிறை­யிலே முதல் இரண்டு நாட்­க­ளில் நடந்த கொடுமை, கால­மெல்­லாம் மறக்க முடி­யாத ஒரு வடு­வாக மாறி­விட்­டது என்­ப­தைத்­தான் தம்பி ஸ்ரீத­ரன் ஆவ­ணப்­ப­டுத்தி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அத்­தோடு மட்­டு­மில்­லா­மல், அது ஏன் நடந்­தது என்­ப­தற்கு அவ­ச­ர­நி­லைக் காலத்­தைப் பற்றி அறிந்­த­வர்­கள், தெரிந்­த­வர்­கள், அர­சி­ய­லில் ஈடு­பாடு உள்­ள­வர்­கள், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தைச் சார்ந்­த­வர்­கள், பாதிக்­கப்­பட்டு இன்­றைக்கு இருப்­ப­வர்­கள் ரொம்­பக் கொஞ்­சம். ஐயா வீர­மணி இருக்­கி­றார், தள­பதி அண்­ணன் ஸ்டாலின் அவர்­கள் இருக்­கி­றார், நான் இருக்­கி­றேன், அண்­ணன் சோமா இருக்­கி­றார். இப்­படி ரொம்ப ரொம்­பக் குறைவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திருச்­சி­யில் இருந்­த­வர்­கள் 100 பேர். அதில் இப்­போது இருப்­பதே ஒன்­பது பேர்­தான். திருச்சி, தஞ்­சா­வூர், புதுக்­கோட்டை என்று ஒருங்­கி­ணைந்த மாவட்­டங்­க­ளில் இருந்து 102 பேர் இருந்­தோம். அது என்­னவோ அவ­ரு­டைய நம்­ப­ரைப் பற்றி ஏதோ 1576 என்­றார். என் நம்­பர் 171. நான் நாடா­ளு­மன்­றத்­தில் போய் மாநி­லங்­க­ள­வை­யில் உட்­கா­ரும்­போது, ஒரு தடவை எனக்கு டிவி­ஷன் நம்­ப­ராக அது வந்­து­விட்­டது. அப்­பொ­ழுது சொன்­னேன்: “நம்­பர் விட­மாட்­டேன் என்று, நம்மை விரட்­டிக்­கொண்டே இருக்­கி­றது பாருங்­கள்!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆனால் இங்கே சிறை­யிலே பிடி­பட்­ட­வர்­க­ளைத் தனிப்­பட்ட முறை­யிலே என்று கார­ணம் சொல்­கி­றார்­கள். அந்த அள­விற்கு குரோ­தம் என்­றால், இந்த அள­வுக்கு இருக்க முடி­யாது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">தலை­வ­னாக உயர்ந்து நிற்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திரைப்­ப­டத்­தில் வரு­வது போல,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">ஒவ்­வொரு அறை­யா­கத் திறந்து அடித்து, இரத்­தம் சிந்த மேலே ஏறி பூட்ஸ் காலால் மிதித்து, உண­விலே வேப்­பெண்­ணெ­யைக் கலந்து, மண்­ணைக் கலந்து, சிறு­நீ­ரைக் கலந்து, ஏதோ விடுதலைப் போராட்டக் காலத்­திலே நடை­பெற்ற சித்­தி­ர­வ­தை­க­ளைப் போல, இரண்டு நாட்­கள் சென்­னைச் சிறை­யிலே நடந்த அவ­லம் கொஞ்ச நஞ்­ச­மில்லை. அதைத் தாங்­கிக்­கொண்ட அந்த இளை­ஞன்­தான் இன்­றைக்­குத் தமிழ் இனத்தை வழி­ந­டத்­து­கிற ஒரு தலை­வ­னாக உயர்ந்து நிற்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இப்­பொ­ழுது நான் இந்த பின்­ன­ணி­யை­யெல்­லாம் சொன்­ன­தற்­குச் கார­ணம்? என்ன மிசா? ஏன் மிசா? இவர்­களை ஏன் கைது செய்­தார்­கள் என்று மேலோட்­ட­மாக யாரும் பேசி­வி­டக் கூடாது. அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக ஒரு ஆட்­சி­யா­ள­ரால் கொண்­டு­வ­ரப்­பட்­டதை, அர­சி­யல் ஆதா­யம் கரு­தா­மல் எதிர்த்து நின்ற கட்சி தி.மு.க. என்ற கார­ணத்­தால், அதில் இருந்­த­வர்­கள் பாதிக்­கப்­பட்­ட­போது, கலை­ஞர் தனி மனி­த­னாக விடப்­பட்டு, படை­கள் புடை­சூ­ழச் சென்று கொண்­டி­ருந்த முத­ல­மைச்­சர், தனி மனி­த­னாக உட்­கார்ந்து, பக்­கத்­தில் யாரும் நிற்­கவே முடி­யாது என்ற நிலை வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திருச்சி சிறை­யிலே நாங்­கள் இருந்­த­போது, திடீ­ரென்று ஒரு நாள் ஒரு­வரை அழைத்து வந்­தார்­கள். அவர் ஊர் சீர்­காழி. யார் என்று பல பேருக்­குத் தெரி­யவே இல்லை. ஒரு­வர், “எங்­கள் ஊரா­யிற்றே இவர்; கட்­சி­யிலே ஒன்­றும் தீவி­ர­மில்­லையே” என்று போய், “என்ன நடந்­தது?” என்­றார். “ஒன்­று­மில்லை. நேற்­றைக்­குக் கலை­ஞர் அங்கே ஒரு நிகழ்ச்­சிக்கு வந்­தார், திரு­ம­ணத்­திற்கு. என் வீட்­டில் கூப்­பிட்­டுச் சோறு போட்­டேன். காலை­யில் இங்கே கூட்டி வந்­து­விட்­டார்­கள்.” கலை­ஞ­ருக்கு ஒரு­வேளை உண­வ­ளித்­தார் என்­ப­தற்­காக மறு­நாள் சிறைக்­க­தவு திறக்­கப்­பட்ட கால­கட்­டம் அது! கலை­ஞ­ரோடு போய் வீட்­டிலே போய்ப் பார்த்­தால் மிரட்­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">என்­னு­டன் பேரா­வூ­ரணி கிருஷ்­ண­மூர்த்தி என்று ஒரு­வர் இருந்­தார். அவர் பார்ப்­ப­தற்கு ஒரு சினிமா கதா­நா­ய­கன் மாதிரி இருப்­பார். நல்­லாச் சிவப்­பாக, அந்த நாஞ்­சி­லார் மாதிரி ஒரு வேட்டி கட்டி, சட்டை போட்டு, துண்­டைத் தரை­யில் தள தள­வென்று தவழ தவழப் போட்டு நடப்­பார். வாய் நிறைய வெற்­றி­லைப் பாக்கு இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">இதை­விட கொடு­மை­யான காலம் வேண்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அவரை … அவர் வீட்­டில் பார்க்க வரு­கி­றார்­கள். அப்போது வரும்­போது அவர் சொல்­கி­றார்: “என்ன வாரம் வாரம் துணி­யைக் கசக்கி எடுத்­துட்டு வர்றே? ஏன் அயன் பண்ணி எடுத்­துட்டு வந்தா என்ன? சிறைக்கு வந்தா இப்­படி அலை­ய­ணுமா?” என்று கோப­மா­கக் கேட்­ட­போது, அந்த அம்மா சொன்­னார்­கள்: “இல்­லைங்க, சல­வைத் தொழி­லாளி எங்­கள் துணி­யை­யெல்­லாம் எடுத்­துப் போய் சலவை செய்து மடித்­துத் தரு­கி­றார், உங்­க­ளு­டை­யதை வாங்க மாட்­டேன் என்­கி­றார்.” “ஏன்?” “கருப்­புச் சிவப்­புத் துண்டோ வேட்­டியோ தன் வீட்­டில் காய்ந்­தால், இவ­ரைத் தி.மு.க. என்று போலீஸ் மிரட்­டு­வ­தா­கச் சல­வைத் தொழி­லாளி அஞ்­சு­கி­றார்” என்று சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இதை­விட ஒரு கொடு­மை­யான காலம் வேண்­டுமா? இன்­றைக்­குப் பெரு­மை­யாக நடக்கிறோம். “இது எங்­கள் வேட்டி, இது எங்­கள் நிறம், எங்­கள் கொடி, எங்­கள் மானம்” என்று சொல்­கி­றோமே! அந்­தக் கொடியை உயர்த்­திய உடனே, ஒரு உயர்வு வரு­கி­றது. நான் என்­றைக்கு மிசா­வில் இருந்து வந்து, 80-இல் இந்த வேட்­டி­யைக் கட்ட ஆரம்­பித்­தேனோ, வேறு வேட்­டி­யைக் கட்­டு­வது இல்லை. என் திரு­ம­ணத்­திற்­குக்­கூட நான் வேறு கரை போட்ட வேட்டி கட்ட மாட்­டேன் என்று பிடி­வா­தம் பண்­ணி­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அப்­ப­டிச் சொல்­கிற இந்த வேட்­டி­யைச் சல­வைத் தொழி­லாளி தொடப் பயந்த காலம், அவ­ச­ர­நி­லைக் காலம்! இதுக்­கு­மேல் என்ன வேண்­டும்? அதை­யும் கடந்து கழ­கம் வென்­றதே, அது­தான் வர­லாறு! ஒரு அலை அடித்­தால் காணா­மல் போவார்­கள்; ஒரு அர­சி­யல் மாற்­றம் வந்­தால் அடித்த சுவடே இருக்­காது. ஆனால் எங்­கள் மீது விழுந்த அடி­யும் நாங்­கள் தாங்­கிய கொடு­மை­க­ளும் கொஞ்ச நஞ்­ச­மல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கலை­ஞர் கடைசி நாள் வரை போரா­ளி­யா­கவே இருந்­தார். அவ­ரோடு நெருங்­கிப் பழ­கி­ய­வர்­கள் இங்கே இருக்­கி­றார்­கள், அங்கேஇருக்­கி­றார்­கள். அந்­தத் தோளில் துண்­டைப் போட்டு அப்­படி ஒரு சிலுப்பு சிலுப்­பி­னார் என்று வைத்­துக் கொள்­ளுங்­கள், அதற்­குப் பிறகு அவ­ரைப் பார்க்­க­ணும்... நாங்­கள் அவரை நேசித்­ததே அதற்­கா­கத்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அந்த மாண­வர் பரு­வத்­திலே எங்­க­ளைக் கவர்ந்­தார் அவர். இப்­போது தம்பி, “என்னை இன்ஸ்­பி­ரே­ஷன்” என்­றார். “நான் உங்­க­ளைப் பேசி இன்ஸ்­பை­யர் செய்­வேன்; தனிப்­பட்ட முறை­யில் கொஞ்­சம் பாடம் எடுத்­தி­ருக்­கி­றேன்.” ஆனால் கலை­ஞ­ரு­டைய ஒவ்­வொரு அசை­வும் எங்­க­ளைக் கவர்ந்­தது. ஒவ்­வொரு செயல், ஒவ்­வொரு சொல், அவ­ரு­டைய துணிச்­சல், அவ­ரு­டைய ஆற்­றல்... அதில் வீழ்ந்­த­வர்­கள், அதி­லி­ருந்து மீளவே முடி­யாது என்­பதை விட, “அது­தான், தலை­வர் என்­றால் அவர்­தான்!” என்­கின்ற ஒரு மன­நிலை எங்­க­ளுக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">நிலை­யான ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அப்­ப­டிப்­பட்ட அந்­தத் தலை­வ­னால்­தான் ஒரு அவ­ச­ர­நி­லையை எதிர்த்து நிற்க முடிந்­தது; ஒரு ஆட்­சியை இழக்க முடிந்­தது. அடுத்து, அடுத்து, அடுத்­துச் சரி­யான முடி­வு­களை எடுத்­தார். 1977-இல் ஜன­தா­வோடு சேர்ந்­தோம். பின்­னர் அவர்­க­ளுக்­குள் ஒற்­றுமை இல்­லா­மல் அந்த ஆட்சி பட்ட பாடு, ஒவ்­வொரு அமைச்­ச­ரும் இழுத்த இழுப்­பில் இந்­தி­யாவே வீணாய்ப் போகி­றது என்­று­தான், “நேரு­வின் மகளே வருக, நிலை­யான ஆட்சி தருக!” என்று, அப்­போது விளக்­கம் சொன்­னார்: “தனிப்­பட்ட முறை­யில் நானோ, என் கட்­சியோ பட்ட துன்­பங்­கள் வேறு; மீண்­டும் இந்த நாட்­டுக்­காக, இந்த ஆட்சி வர வேண்­டும், ஒரு நிலை­யான ஆட்சி” என்று விளக்­கம் சொன்­னார். அப்­படி நடந்த அந்­தக் கால­கட்­டம், இன்­றைய தலை­முறை தெரிந்­து­கொள்ள வேண்­டிய ஒரு கால­கட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பல இடங்­க­ளுக்­குப் போய் “தலை­வர் என்­னைப் பேசச் சொல்­கி­றார்”. இன்­றைக்­குத் தம்பி இந்த வாய்ப்பை உரு­வாக்கி வைத்­தி­ருந்­த­தைக்­கூ­டத் தலை­வர் தான், “செல்­லுங்­கள்” என்று சொல்லி, நான் விழுந்­த­டித்து வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இங்கே வந்து இந்த நிகழ்ச்­சி­யில் நான் பங்­கெ­டுத்­தது, இங்கே இவ்­வ­ளவு திர­ளா­ன­வர்­கள் இருப்­பது ரொம்ப, ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சி! அவ­ரு­டைய முயற்சி பாராட்­டத்­தக்­கது. உள்­ள­ப­டியே ஒரு வர­லாற்­றுச் செய்­தி­யைப் பத்­தி­ரப்­ப­டுத்தி ஆவ­ண­மாக வைத்­தி­ருக்­கி­றார். என்­ன­தான் புத்­த­க­மாக வந்­தா­லும், விஷு­வல் மீடியா என்­பது வேறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இப்­போது நான் எழு­திய நூலையே நிறை­யப் பேர் “கொடுத்­தி­ருக்­கி­றேன், படித்­துக்­கொண்டு இருக்­கி­றேன்” என்று இன்­னும் சொல்­கி­றார்­கள். நான் ஆரம்­பத்­தி­லேயே புரூஃப்-­ஆக இருக்­கும்­போதே சில பேரி­டம் கொடுத்­தேன். படித்­து­விட்டு, உடனே தொழிற்கல்வித் தலைவர் சண்­மு­கம், என்­னு­டன் வந்த கனி­மொழி இவர்­கள் எல்­லாம் சொன்­னது: “அண்ணே, தய­வு­செய்து உடனே புத்­த­க­மா­கக் கொண்­டு­வந்­து­வி­டுங்­கள், சினிமா பார்க்­கிற மாதிரி  இருந்­தது” 
என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">எவ்­வ­ளவு பேர் படிப்­பார்­கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">என்னை ரொம்ப நாளாக மனுஷ்ய புத்­தி­ரன்­தான் “அதை எழு­துங்­கள், எழு­துங்­கள்” என்று சொல்­லிக்­கொண்டே இருந்­தார். பின்­னர் அதை எழுதி, அந்த நூல் பெரிய அள­வில் வெளியே போய்­விட்­டது. ஆனால் எத்­தனை பேர் படித்­தார்­கள் என்­ப­து­தான் முக்­கி­யம். நிறைய நூலைப் பத்­தி­ர­மாக அடுக்கி வைத்­தி­ருப்­பார்­கள். கலர் கல­ராக இருக்­கும். எடுத்து ஒரு நாள் கூடப் பார்க்க மாட்­டார்­கள். வாங்­கி­விட்­டுப் போவார்­கள், அல்­லது “வீட்­டில் இருக்­கி­ற­தைக் கொடுங்­கள்” என்று வாங்­கு­வார்­கள். அப்­ப­டி­யெல்­லாம் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தொடர்ந்து விடா­மல் படிப்­பது யார் என்­றால் ஐயா ஆசி­ரி­யர் வீர­மணி, கலி பூங்­குன்­றன் ஐயா மாதிரி ஒரு சிலர் இருக்­கி­றார்­கள். அத­னால், இவர்­கள் வெளி­யிட்ட இந்த ‘வடுக்­களை’ எவ்­வ­ளவு பேர் படிக்­கப் போகி­றார்­களோ தெரி­யாது, படிக்க வேண்­டும்! ஏன் தெரி­யுமா? நான் இப்­போது கிட்­டத்­தட்ட முக்­கால்­வாசி படித்­து­விட்­டேன், இந்­தப் பயண நேரத்­தி­லேயே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதில் சில பேர் சொல்லி இருக்­கிற கருத்­துக்­கள் எல்­லாம் ரொம்ப நெகிழ்­வாக இருந்­தது, ரொம்ப உணர்­வுப்­பூர்­வ­மாக இருந்­தது. பழைய நினை­வு­கள் பல­வற்றை யாருக்­குமே தெரிய முடி­யா­த­தை­யெல்­லாம் அவர்­கள் அழ­கான கோணத்­தில் சொல்லி இருந்­தார்­கள். அதுவே எனக்கு ரொம்­பப் பய­னுள்­ள­தாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தம்­பிக்கு ஒரு நல்ல செய்தி. என்­னு­டன் மிசா­வில் இருந்­த­தில் மீதி இருப்­பது ஒன்­பது பேர் என்று ஒரு கணக்­குக்கு சொன்­னேன், இன்­னும் கம்­மி­யா­கக் கூட இருக்­க­லாம். கரூ­ரில் இருக்­கிற சுப.ராஜ­கோ­பால் என்­கி­ற­வர் காலை­யில் எனக்­குத் தொலை­பே­சி­யில் பேசி­னார். “நான் டெல்­லி­யில் இருக்­கி­றேன்” என்­றேன், “மும்பை போயிட்­டுப் போகி­றேன்” என்று. “இல்லை தம்பி, இன்­றைக்­குச் சாயங்­கா­லம் ஒரு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­கி­றீர்­கள்; அந்­தப் புத்­த­கம் எனக்கு ஒரு காப்பி வேண்­டும்” என்று கேட்­டார். “என் புத்­த­கத்தை நீ படித்­தாயா?” என்று கேட்­டேன். “அதை அப்­போதே படித்­து­விட்­டேன்” என்­றார். “சரி, அப்ப நான் வாங்­கித் தரு­கி­றேன்” என்று சொல்லி இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அந்த அள­வுக்கு ஒரு எதிர்­பார்ப்பை உரு­வாக்கி இருக்­கி­றது, இந்த நூல். உள்­ள­ப­டியே படித்­தால் நிறைய தக­வல்­கள் இருக்­கும். அதில் என்­னு­டை­யது இடம்­பெ­ற­வில்லை என்­பதை மீறி நான் ரசித்­தேன். எல்­லோ­ரு­டைய எழுத்­துக்­க­ளும் அதில் ரொம்ப, ரொம்ப, ரொம்ப அழ­காக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தலை­வ­ருக்கு மீண்­டும் நன்றி, என்னை இங்கு போகச் சொன்­ன­தற்­காக! இவ்­வ­ளவு நேரம் காத்­தி­ருந்த உங்­க­ளுக்கு ரொம்ப ரொம்­பப் பாராட்­டும், நன்­றி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">கொள்­கையை  கைவி­டா­மல் வைத்­துக்­கொள்­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கார­ணம், இது ஒரு சாதா­ர­ணக் கூட்­டம் இல்லை. இந்த இடத்­துக்கு போக்குவரத்து நெருக்கடி காரணமாக வந்து சேர்­வ­து­தான் ரொம்­பச் சிர­ம­மாக இருந்­தது. ஆனா­லும் கூட, அதை­யும் மீறி இந்­தக் கூட்­டம் இவ்­வ­ளவு நேரம், நிறை­யப் பேர் உடல்­ந­லன், வயது இதை­யெல்­லாம் மீறி காத்­தி­ருந்­தீர்­கள். அதற்­காக நான் நன்றி தெரி­விக்க விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இளைய தலை­மு­றை­யி­னர் யாரா­வது வந்­தி­ருந்­தால் தய­வு­செய்து ஒன்றை புரிந்து கொள்­ளுங்­கள்: நாங்­கள் பேசி­யது அர­சி­ய­லுக்கு விளம்­ப­ரம் தேட அல்ல; அர­சி­யல் கட்சி என்­றால் இது­தான் என்­பதை உணர்த்­து­வ­தற்­காக! ஒரு கொள்கை, ஒரு லட்­சி­யம், அதை எந்த நாளும் கைவி­டா­மல் வைத்­துக்­கொள்­வ­தும், எந்த நிலை­யி­லும் எது வந்­தா­லும் எதிர்த்து நிற்­ப­தும் என்­ப­து­தான் இயல்­பாக இருக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யிலே ஒரு கடு­மை­யான கால­கட்­டத்­தைக் கடந்து வந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">விடு­த­லைப் போராட்ட வர­லா­றைப் போல, ஜன­நா­ய­கப் போராட்ட வர­லாறு, அவ­ச­ர­நி­லைக் காலம். அது தொடர்­பான ஒரு நூலும் ஆவ­ணப் பட­மும் வெளி­யா­கி­யி­ருக்­கி­றது. மீண்­டும் தம்பி ஸ்ரீத­ரனை எல்­லோ­ரை­யும்போலப் பாராட்டி, உங்­க­ளுக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு திருச்சி சிவா எம்.பி. உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>