<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 13 2026 17:20:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261014T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="14102026-CBE-06" position.sequence="06" ex-ref="14102026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup944546_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup944859_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Gandhicol_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M712.10.2026_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">கா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி அக்­டோ­பர் 
பத்­தாம் தேதி சென்­னைக்கு ஒரு மாண­வர் சந்­திப்­பிற்­காக வந்­தார். “ஷாத்­ரோன் கீ கூஞ்ச்” என்ற பெய­ரில் அவர் நாடு முழு­வ­தும் மாண­வர்­களை சந்­தித்து பேசி வரு­கி­றார். அந்த முறை­யில் சென்னை வந்த அவ­ருக்கு தமி­ழக வெற்­றிக் கழ­கத் தலை­வர்விஜய் தன்­னு­டைய வீட்­டில் விருந்­த­ளித்­தார். அதன் பிறகு ஒரு உயர்­ரக காஃபி ஷாப்­பிற்­கும் கூட்­டிச்­சென்று இத்­தா­லிய திர­மிசு என்ற கேக் வகை, காபி வாங்­கிக் கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நட்பு ரீதி­யான சந்­திப்பு போலத் தோன்­றி­னா­லும், இரு­வ­ரும் அர­சி­யல்­வா­தி­கள் என்­ப­தால் அர­சி­யல் சந்­திப்பு என்­று­தான் எடுத்­துக்­கொள்ள வேண்­டும். காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளும் உட­னி­ருந்­த­னர் என்­றா­லும் என்ன 
அர­சி­யல் பேசி­னார்­கள் என்­பது குறித்து எது­வும் பொது­வெ­ளி­யில் பகி­ரப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் என்ன வேடிக்கை என்­றால் மறு­நாளே 
பிர­த­மர் மோடி­யும் பூந்­த­மல்­லி-­­­வ­ட­ப­ழனி மார்க்க மெட்ரோ ரயிலை தொடங்கி வைக்க சென்னை வந்­தார். அவரை விமான நிலை­யத்­தில் சென்று வர­வேற்று, 
அவ­ரு­டன் சேர்ந்து மெட்ரோ ரயிலை துவக்கி வைத்து அதில் பய­ண­மும் செய்­தார் விஜய். பின்­னர் ஐ.ஐ.டி. வளா­கத்­தில் நிகழ்ந்த கூட்ட த்திலும் பிர­த­மர் மோடி­யு­டன் கலந்து கொண்டு உரை­யாற்­றி­னார். விமான நிலை­யம் சென்று வழி­ய­னுப்­பி­யும் வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தேசிய அர­சி­ய­லில் கடு­மை­யாக மோதிக்­கொண்­டி­ருக்­கும் ராகுல் காந்­தி­யும், பிர­த­மர் மோடி­யும் அடுத்­த­டுத்த நாட்­க­ளில் முதல்­வர் விஜயை சந்­தித்­தது விஜய் யார் 
பக்­கம் என்ற கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது. விஜய் ஆத­ர­
­வா­ளர்­கள் இந்த கேள்வி கேட்­ப­வர்­களை கடு­மை­யா­கக் கோபித்­துக் கொள்­கி­றார்­கள். விஜய் கட்­சித் தலை­வர் என்ற முறை­யில் கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள காங்­கி­ரஸ் தலை­வரை சந்­தித்து பேசி­னார். முதல்­வர் என்ற முறை­யில் பிர­த­மரை வர­வேற்று அவ­ரு­டன் நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றார். இதில் என்ன குழப்­பம் என்று ஆவே­சப்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மேலோட்­ட­மா­கப் பார்த்­தால் அது சரி­தான். காங்­கி­ரஸ் ஆளும் மாநி­லங்­க­ளில் கூட முதல்­வர்­கள், பிர­த­மர் அரசு முறைப் பய­ண­மாக வந்­தால் சந்­திக்க வேண்­டும். நிகழ்­வு­
­க­ளில் பங்­கேற்க வேண்­டும். அது­தான் புரொட்­டோ­கால் என்ற அரசு முறைமை. பிரச்­சினை எங்கே வரு­கி­றது 
என்­றால் விஜய் அர­சி­யல்­வா­தி­யாக பாஜக செய்­யும் 
எதை­யுமே கண்­டித்­துப் பேசு­வ­தில்லை என்­ப­து­தான். மேலும் ராகுல் காந்­தி­யும், காங்­கி­ரஸ் கட்­சி­யும் தீவி­ர­மா­கப் போரா­டும் சம­யத்­தி­லும் ஆத­ர­வாக எந்த அறிக்­கை­யும் விடு­வ­தில்லை. அவர்­கள் தரப்பு நியா­யத்தை ஆத­ரிப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ராகுல் காந்தி, காங்­கி­ரஸ் மட்­டு­மின்றி இளை­யோர் அமைப்­பான காக்­ரோச் ஜனதா பார்ட்­டி­யும், மாண­வர் அமைப்­பு­க­ளும் போரா­டும் பிரச்­சினை ஒன்­றும் சாதா­ர­ண­மான பிரச்­சி­னை­யல்ல. இந்­திய மக்­க­ளாட்­சி­யையே கேள்­விக் குறி­யாக்­கி­யுள்ள பிரச்­சினை. பதி­மூன்று கோடி பேரின் வாக்­கு­ரி­மையை பறித்­துள்ள மாபெ­ரும் அநீதி குறித்த பிரச்­சினை. அதில் நாட்­டின் மீது அக்­க­றை­யுள்ள ஒவ்­வொரு குடி­ந­ப­ரும் தீவி­ர­மாக பங்­கெ­டுப்­பதே  அடிப்­படை அர­சி­யல் தன்­னு­ணர்­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விஜய் மிகத்­தீ­வி­ர­மாக உரு­வெ­டுத்­து­வ­ரும் இந்த போராட்ட த்தைக் குறித்து எது­வுமே பேசு­வ­தில்லை. ராகுல் காந்­தி­யு­டன் சேர்ந்து அவர் மாண­வர் நிகழ்­வில் பங்­கேற்­றுப் பேசி­யி­ருக்­க­லாம். அல்­லது ஒரு செய்­தி­யா­ளர் 
சந்­திப்பை ஏற்­பாடு செய்து ராகுல் காந்­திக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­க­லாம். ஆனால் இந்­திய மக்­க­ளாட்சி வர­லாற்­றில் மிக முக்­கி­ய­மான இந்த சந்­தர்ப்­பத்­தில் அவர் எந்த ஆர்­வ­மும் இன்றி ராகுல் காந்­தி­யு­டன் திர­மிசு சாப்­பி­டு­வ­தில் கவ­ன­மாக இருக்­கி­றார் என்­றால் அதை எப்­படி புரிந்து ­கொள்­வது என்­ப­து­தான் கேள்வி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">அர­சி­யல் விலாங்கு மீன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விலாங்கு மீன் என்­பது பாம்­பினை போன்ற நீண்ட உட­லும், மீனின் தலை­யும் கொண்ட நீர்­வாழ் பிராணி. அதன் இரட்டை உரு­வத்­தோற்­றத்­தால் அது இரட்டை வேடம் போடு­ப­வர்­க­ளுக்­கான உரு­வ­க­மாக இருக்­கி­றது. “மீனுக்­குத் தலை­யும், பாம்­புக்கு வாலும் காட்­டு­ப­வர்­கள்” என்று அவ்­வாறு நடந்து கொள்­ப­வர்­க­ளைக் குறிப்­பார்­கள். “பாலுக்­கும் காவல், பூனைக்­கும் தோழன்” என்­ப­தற்கு இணை­யான சொல­வ­டை­தான் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விஜய் பா.ஜ.­க.-­வின் கட்­டுப்­பாட்­டில்­தான் அர­சி­யல் செய்­கி­றார் என்­பது அவர் செயல்­பா­டு­களை கூர்ந்து நோக்­கும் யாரும் புரிந்­து­கொள்ள முடி­யும். ஆனால் பேச்­சுக்கு, தமிழ்­நாட்­டில் பாஜக எதிர்ப்பு வாக்­கு­க­ளைப் பெற, பா.ஜ.க. 
தன் கொள்கை எதிரி என்று சொல்­வார். அதை நம்­பு­கின்ற சாக்­கில் அவ­ரால் காங்­கி­ரஸ் கட்­சிக்கு ஏதெ­னும் ஆதா­யம் கிடைக்­குமா என்று பார்க்க விரும்­பு­கி­றது காங்­கி­ரஸ். குறிப்­பாக ராகுல் காந்தி அதில் அதிக ஆர்­வம் காட்டி 
வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்கு ஒரு முன் கதை இருக்­கி­றது. ராகுல் காந்தி 
பதி­னேழு ஆண்­டு­க­ளுக்கு முன் செப்­டம்­பர் 2009-ஆம் ஆண்டு விஜய்யை டில்­லிக்கு அழைத்­துப் பேசி­னார். விஜயை காங்­கி­ர­ஸில் சேர அழைத்­த­தாக நம்­பப்­ப­டு
­­கி­றது. அந்த சம­யம் இலங்­கை­யில் தமி­ழர் இனப்­ப­டு­கொலை நடந்து முடிந்த நேரம். தி.மு.க-விற்­கும், காங்­கி­ர­ஸிற்­கும் உர­சல்­கள் நிறைய இருந்­தன. ஆனால் விஜய் அப்­போது காங்­கி­ர­ஸில் சேர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ர­ஸிற்கு தி.மு.க-.வைநேர­டி­யாக வெல்ல முடி­யாது என்ற எண்­ணம் 1971 தேர்­த­லுக்­குப் பிறகு உரு­வான பிறகு, எம்.ஜி.ஆரை தி.மு.க.-விலி­ருந்து பிரித்து ஒன்­றிய அர­சிற்கு இணக்­க­மான ஒரு திரா­விட கட்­சியை உரு­வாக்­கிய அனு­ப­வம் இருக்­கி­றது. அதன் பிறகு தொன்­னூ­று­க­ளின் மத்­தி­யில் ரஜி­னி­காந்­தை­யும் நர­சிம்ம ராவ், மூப்­ப­னார் முத­லிய காங்­கி­ரஸ் தலை­வர்­கள் அர­சி­ய­லுக்கு அழைக்­கத்­தான் செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தி.மு.க-.வின் திரா­வி­ட-­­­த­மி­ழர் அடை­யாள அர­சி­ய­லுக்கு எதி­ராக ஒரு திரை­பிம்ப தலை­மையை உரு­வாக்­கு­வ­து­தான் சரி­யான வழி என்­பது எம்.ஜி.ஆரின் வெற்­றி­யி­லி­ருந்தே காங்­கி­ர­ஸிற்­கும், பின்­னர் பா.ஜ.­க.-­­விற்­கும் 
தோன்­றக்­கூ­டிய விஷ­ய­மா­கவே இருந்து வரு­கி­றது. விஜய் ­காந்த் திரா­விட அடை­யா­ளம் கொண்ட மூன்­றா­வது மாற்­றாக இயங்க முயற்­சித்து ஓர­ளவு வெற்­றி­யும் பெற்­றது, இத்­த­கைய திரை­பிம்ப அர­சி­யலை நீடிக்க வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.க. ரஜி­னி­காந்த்­தைத்­தான் வெகு­வாக நம்­பி­யது. ஆனால் அவ­ருக்கு தனிப்­பட்ட முறை­யில் முழு­நேர அர­சி­யல்­வா­தி­யா­வ­தில் முழு­ம­ன­தான விருப்­பம் இல்லை. அத­னால் கிட்ட த்தட்ட கட்­சியை அறி­வித்து துவங்­கி­விட்ட நிலை­யில் உடல்­நிலை கார­ண­மாக பின்­வாங்கி விட்­டார். ரஜி­னி­காந்த் அவரே முதல்­வ­ராக விரும்­பாத நிலை­யில் அவர் ஆத­ர­வு­டன் முதல்­வா­ரா­கக்  கூடி­ய­வ­ராக ஒரு­வர் தேவை என ஐ.பி.­எஸ். அண்­ணா­
­ம­லையை பணி­யி­லி­ருந்து வில­கச்­செய்து பின்­னர் பா.ஜ.க. தலை­வ­ராக்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பா.ஜ.­க.-­வால் ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பின் அ.இ.அ.தி.மு.க-.வை முழு­மை­யாக தன் கட்­டுப்­பாட்­டில் கொண்­டு­வர முடி­ய­வில்லை. எடப்­பாடி பழ­னி­சாமி அர­சி­யல் ரீதி­யாக பா.ஜ.­க.-­­வுடன் முழு­மை­யாக ஒத்­து­ழைக்­கத் தயா­ராக இருந்­தா­லும், தொகு­தி­க­ளைப் பகிர்­வ­தில் கறா­ராக இருந்­தார். நேர­டி­யா­கவே அண்­ணா­மலை தலை­மை­யில் பா.ஜ.­க-.வை வளர்க்­கும் முயற்­சி­யும் வெற்­றி­பெ­ற­வில்லை. தி.மு.க. நாளுக்கு நாள் வலுப்­பெற்று வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அந்த நிலை­யில்­தான் விஜயை கள­மி­றக்­கிப் பார்க்க பா.ஜ.க. முடிவு செய்­தது என்று யூகிக்க இட­மி­ருக்­கி­றது. எடப்­பாடி அ.இ.அ.தி.மு.க-.வுடன் இணைந்­து­கொண்டு, விஜயை தனி­யாக கள­மி­றக்கி தி.மு.க-வை தீவி­ர­மாக எதிர்க்­கச் செய்ய பா.ஜ.க. முடிவு செய்­தது. தி.மு.க. கூட்­டணி அமைச்­ச­ர­வைக்கு ஒத்­துக்­கொள்­ளாது என்ற நிலை­யில், த.வெ.க. கூட்­டணி கட்­சி­க­ளுக்கு ஆட்­சி­யில் பங்கு தரு­வ­தாக அறி­விக்­கச் செய்து தி.மு.க. கூட்­டணி கட்­சி­களை, குறிப்­பாக காங்­கி­ரஸ், விசி­க-வை தி.மு.க-.விட­மி­ருந்து பிரிக்க திட்­ட­மிட்­டது என்­றும் யூகிக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த யூகங்­க­ளுக்­கெல்­லாம் என்ன அடிப்­படை என்­றால் ஊட­கங்­க­ளில் வெளி­யான பல்­வேறு சிறு, சிறு 
தக­வல்­களை ஒரு­வர் தொகுத்­துத் தர இய­லும். ஆனால் அதை­யெல்­லாம் விட மிக முக்­கி­ய­மான அடிப்­படை பா.ஜ.க. என்ன செய்­தா­லும் விஜய் ஒரு வார்த்தை கூட கண்­டித்­துப் பேச மாட்­டார் என்­ப­து­தான். இன்­னொரு தெளி­வான அறி­குறி தி.மு.க அலர்ஜி கொண்ட பார்ப்­­­ப­னர்­க­ளின் பெரு­ம­ள­வி­லான விஜய் ஆத­ரவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அது மட்­டு­மல்ல. பா.ஜ.க. எதிர்ப்பை, ஒன்­றிய அர­சின் அதி­கா­ரக்­கு­விப்பை எதிர்ப்­ப­தையே தனது அர­சி­ய­லின் மைய­மாக தி.மு.க. அறி­வித்து அணி­தி­ரட்­டிக் கொண்­டி­ருந்த நிலை­யில், தி.மு.க. தீய­சக்தி என்று கடும் கூச்­ச­லி­டும் ஒரு­வ­ராக விஜய் கள­மி­றக்­கப்­பட்­டார். பா.ஜ.­க.-­­
வின் பாசிச முனைப்பை எதிர்த்து போரா­டும் தி.மு.க 
தீய சக்தி என்­றால் பா.ஜ.க. நல்ல சக்­தியா என்ற கேள்வி எழ­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் விஜய் பாஜக குறித்து எது­வுமே சொல்ல மறுத்­தார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தி.மு.க, பாஜக இரண்­டுமே தீய­சக்தி என்று சொன்­னால் பிரச்­சி­னை­யில்லை; ஆனால் தி.மு.க மட்­டுமே தீய­சக்தி என்று கூவும்­போது, தி.மு.க கடு­மை­யாக எதிர்க்­கும் பாஜக நல்ல சக்தி என்­று­தானே பொருள்­ப­டும்? ஆனால் விஜய்க்­கான நல்­வாய்ப்பு என்­ன­வென்­றால் தமிழ்­நாட்டு ஊட­கங்­கள் அவர் ஒப்­புக்கு “பாஜக எங்­கள் கொள்கை எதிரி” என்று சொன்­னால் போதும் என்­பதை 
ஏற்­றுக் கொண்­ட­து­தான். எந்­தக் கொள்­கையை எதிர்க்­கி­றோம் என்­றா­வது கூற வேண்­டும்என்று அவரை யாரும் நிர்ப்­பந்திக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தப் பின்­ன­ணி­யில்­தான் அர­சி­யல் விலாங்கு மீனாக உரு­வெ­டுத்­தார் விஜய். முழு பெரும்­பான்மை கிடைக்­காத நிலை­யில் தி.மு.க. ஆத­ர­வு­டன் வெற்­றி­பெற்றகூட்­டணி கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவை கோரிப்­பெற்று ஆட்­சி­ய­மைத்­தார். காங்­கி­ரஸ் பாய்ந்து சென்று அவரை ஆத­ரித்து 2029 நாடா­ளு­மன்ற தேர்­தல் வரை கூட்­டணி என்று உடன்­பாடு செய்­து­கொண்­டது. ராகுல் காந்தி தன்­னால் விஜயை பா.ஜ.க. பக்­கம் செல்­லா­மல் தடுத்து காங்­கி­ரஸ் கட்­சியை வலுப்­ப­டுத்த முடி­யும் என்று நினைக்­கி­றார் போலி­ருக்­கி­றது. அது காங்­கி­ரஸ் அர­சி­யல் காலா­வதி ஆகி வரு­வ­தையே காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ர­ஸின் பிரச்­சினை என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">   
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­க­ளாட்­சிக்கு இரண்டு பரி­மா­ணங்­கள் உள்­ளன. ஒன்று அரசு எவ்­வி­த­மான கொள்­கை­க­ளைப் பின்­பற்றி அர­சின் சட்­டங்­களை, திட்­டங்­களை தீட்­டு­கி­றது என்­ப­தும், மக்­கள் அர­சி­யல் கட்­சி­கள் மூல­மா­க­வும், நேர­டி­யா­க­வும் எப்­படி அர­சு­டன் உறவு கொள்­கி­றார்­கள் என்­ப­தும். இத­னைத்­தான் அர­சி­யல், ஆங்­கி­லத்­தில் பாலி­டிக்ஸ் (politics)  என்று கூறு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரண்­டா­வது பரி­மா­ணம் முக்­கி­ய­மா­னது. அது என்­ன­வென்­றால் சமூ­கத்­தி­லுள்ள பல்­வேறு முரண்­சக்­தி­கள் தங்­களை வெவ்­வேறு அர­சி­யல் கட்­சி­க­ளு­டன் இணைத்­துக்­கொண்டு அமைக்­கும் முர­ண­ர­சி­யல். இதனை ஆங்­கி­லத்­தில் பொலி­டி­கல் (political) என்று பெயர்ச்­சொல்­லா­கக் குறிப்­பி­டு­கி­றார்­கள். இந்த முர­ண­ர­சி­யல் களம் அந்­தந்த மாநி­லங்­க­ளுக்­குள்­தான் உரு­வா­கும். இந்­திய மாநி­லங்­கள் எல்­லாம் வித்­தி­யா­ச­மான மிக நீண்­ட­கால பண்­பாட்டு, அர­சி­யல் வர­லா­று­க­ளைக் கொண்ட பகு­தி­கள் என்­ப­தால் முர­ண­ர­சி­யல் வடி­வ­மைப்பு மாநி­லங்­க­ளில்­தான் நடக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் கட்சி துவக்­கம் முதலே ஆங்­கி­லம் படித்த மேட்­டுக்­கு­டி­யி­ன­ரின் கட்சி. அது ஒன்­றிய அர­சின் 
அர­சி­யலை நடத்­து­வ­தற்­கான குடி­மைச் சமூக தளத்­தி­னைக் கொண்­டது. இன்­னும் குறிப்­பா­கச் சொன்­னால் பார்ப்­ப­னர்­கள், பிற முன்­னே­றிய வகுப்­பி­னர்­க­ளான 15% உய­ர­டுக்கு மக்­க­ளில் நவீன மனம் கொண்­ட­வர்­கள் காங்­கி­ர­ஸில் பங்­கேற்­பார்­கள். அவர்­க­ளில் பழ­மை­வாத, சனா­தான பற்று கொண்­ட­வர்­கள் பா.ஜ.­க.-­­வில் 
இருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ர­ஸின் நல்­வாய்ப்­பாக காந்தி மிகப்­பெ­ரிய வெகு­ஜன அணி ­சேர்க்­கையை சாத்­தி­ய­மாக்கி காங்­கி­ர­ஸி­டம் அளித்­து­விட்டு சென்­ற­தால் முதல் மூன்று தேர்­தல்­களை நேரு தலை­மை­யில் காங்­கி­ரஸ் சமா­ளித்­து­விட்­டது. ஆனால் அப்­போதே மாநி­லங்­க­ளில் உரு­வா­கும் கோஷ்­டிப் பூசல்­களை சமா­ளிப்­பது நேரு­விற்கு சவா­லா­கத்­தான் இருந்­தது. இந்த குழு­வாத அர­சி­ய­லால்­தான் நேரு­விற்­குப் பின் வாரிசு அர­சி­ய­லாக இந்­திரா காந்­தியை பிர­ம­ராக்க நேர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­திராஒரு இட­து­சாரி சார்­பெ­டுத்து வங்­கி­கள் தேசிய மயம், வறுமை ஒழிப்பு, பசுமை புரட்சி என பல திட்­டங்­கள் மூலம் வெகு­ஜன ஆத­ர­வைப் பெற்­றார். ஆனால் மாநி­லங்­க­ளில் காங்­கி­ரஸ் கட்­சிக் குழுக்­களை டில்­லி­யி­லி­ருந்து கட்­டுப்­ப­டுத்­தும் ஹை கமாண்ட் (High Command) என்ற மேலிட கட்­டுப்­பாட்டை நிலை நிறுத்­தி­னார். இத­னால் என்ன நட ந்தது என்­றால் மாநில முர­ண­ர­சி­யல் தகுந்த தலை­மையை உரு­வாக்க முடி­யா­மல், மேலிட த்தால் திணிக்­கப்­ப­டு ­ப­வர்­கள் தலை­வர்­க­ளா­வது, அவர்­க­ளுக்கு எதி­ராக பல கோஷ்­டி­கள் உரு­வா­வ­தும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் இயல்­பாக மாறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதன் விளை­வாக மாநில முர­ண­ர­சி­யல் மூலம் தங்­கள் தலை­மையை உரு­வாக்­கிக் கொள்­ளும் மாநில கட்­சி­கள் பல்­வேறு மாநி­லங்­க­ளில் தோன்­றின. பல இடங்­க­ளில் காங்­கி­ர­ஸி­லி­ருந்து வெளி­யே­றி­வர்­களே அத்­த­ கைய மாநில கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளாக மாறி­னார்­கள். மமதா பானர்ஜி, சந்­தி­ர­பாபு நாயுடு, சந்­தி­ர­சே­கர ராவ், சரத் பவார் என பல தலை­வர்­கள் காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளாக இருந்­த­வர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உத்­தி­ரப் பிர­தே­சம், பீஹார், மேற்கு வங்­கம் என பல மாநி­லங்­க­ளில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் சமூக வேர்­கள் 
எல்­லாம் மாநில கட்­சி­க­ளுக்கு சென்­று­விட்­டன. என்ன முயன்­றும் காங்­கி­ர­ஸால் அந்த மாநி­லங்­க­ளில் மீண்­டும் கட்­சிக் கட்­ட­மைப்பை உரு­வாக்க முடி­ய­வில்லை. 
ஆனா­லும் மாநில கட்­சி­கள் தங்­க­ளுக்கு நிறைய தொகு­தி­களை ஒதுக்­கித் தர வேண்­டும், மாநில ஆட்­சி­யில் பங்கு தர­வேண்­டும் என்­றெல்­லாம் ஆசைப்­ப­டு­கி­றது காங்­கி­ரஸ். அத­னால் காங்­கி­ரஸை ஆத­ரிக்­கும் மாநில கட்­சி­கள் பா.ஜ.­க.-­­­வி­டம் தோல்­வி­ய­டை­யும் சூழ்­நிலை உரு­
வா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பெரிய கூடார அணு­கு­முறை என்ற 
கருத்­தி­யல் சம­ர­சம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ரஸ் வலது சார்பு இடது சார்பு என பல்­வேறு கருத்­தி­யல் போக்­குள்­ள­வர்­க­ளை­யும் இணைத்­துக்­கொள்­ளும். மேட்­டுக்­குடி பார்ப்­ப­னர்­க­ளும் வேண்­டும், பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளும் வேண்­டும், தலித்­து­க­ளும் வேண்­டும் என்று நினைக்­கும். ஒரு வகை­யில் இது வெகு­ஜன கட்­சிக்­கான அணு­கு­மு­றை­தான். ஆனால் பிரச்­சினை என்­ன­வென்­றால் அது பெரும்­பா­லான பிரச்­சி­னை­க­ளில் கருத்­தி­யல் சார்ந்து துல்­லி­ய­மான முடிவு எடுக்­காது என்­ப­து­தான். உதா­ர­ண­மாக சபரி மலைக்கு பெண்­கள் செல்­லக்­கூ­டாது என்று பா.ஜ.­க.­வு­டன் சேர்ந்து கேரள காங்­கி­ரஸ்­கா­ரர்­க­ளும் சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காங்­கி­ர­ஸின் கருத்­தி­யல் தடு­மாற்­றங்­கள், சம­ர­சங்­க­ளைப் பட்­டி­யல் போட்­டால் பெரிய நூலே எழு­த­லாம். உதா­ர­ண­மாக பூட்­டிக் கிடந்த பாபர் மசூதி வளா­கத்தை திறந்­து­விட்டு இந்­துக்­கள் உள்ளே சென்று பூஜை செய்ய அனு­ம­தித்­த­வர் ராஜீவ் காந்­தி­தான். அதி­லி­ருந்­து­தான் மீண்­டும் ராம் ஜென்ம பூமி பிரச்­சினை பெரி­தா­னது. என்ன கொடு­மை­யென்­றால் மத்­திய பிர­தேச தேர்­த­லில் இதைச் சுட்­டிக்­காட்டி, நாங்­கள்­தான் ராமர் கோயில் உரு­வாக க் கார­ணம் என்று பெரு­மை­யா­கச் சொல்­லியே வாக்­குக் கேட்­டார் காங்­கி­ரஸ் தலை­வர் கமல்­நாத்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த பிரச்­சி­னை­யால், காங்­கி­ரஸ் கட்­சி­யில் மாநி­லங்­க­ளில் உரு­வா­கும் கோஷ்­டிப் பூச­லில் பாதிக்­கப்­பட்ட தலை­வர்­கள் பாஜக கட்­சி­யி­லேயே சென்று சேர்ந்­து­வி­டு­வார்­கள். அந்த பட்­டி­ய­லும் உண்­மை­யில் பெரி­யது. ஒரு முக்­கி­ய­மான உதா­ர­ணம் சொல்ல வேண்­டும் என்­றால் பஞ்­சாப் மாநி­லத்­தில் இரு­முறை காங்­கி­ரஸ் முதல்­வ­ராக இருந்த அம்­ரீந்­தர் சிங்­கைச் சொல்­ல­லாம். சமீ­பத்­தில் ராகுல் காந்­தி­யி­டம் உங்­க­ளுக்­குப் பிடித்த பாஜக தலை­வர் யார் என்று கேட்­ட­போது அவர் அம்­ரீந்­தர் சிங்­கைக் குறிப்­பிட்­டார். சொல்­லப்­போ­னால் அம்­ரீந்­தர் சிங் ராஜீவ் காந்­தி­யின் பள்ளி நண்­பர். காந்தி குடும்­பத்­திற்கு நெருக்­க­மா­ன­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">வாக்­கு­ரி­மையை காக்­கும் போரில் 
காங்­கி­ரஸ் தெளி­வின்மை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ் குமார் பதி­மூன்று கோடி பேரை வாக்­கா­ளர் பட்­டி­யி­லி­லி­ருந்து சிறப்­புத் தீவிர திருத்­தம் (SIR) என்ற பெய­ரில் நீக்­கி­யது நாட்­டில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. காங்­கி­ர­ஸும், இந்­தியா கூட்­டணி கட்­சி­க­ளும் டில்­லி­யில் பல போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே சம­யம் காக்­ரோச் ஜனதா பார்ட்டி என்ற இளை­யோர் அமைப்­பும், நேஹா போரா போன்ற ஆய்வு மாண­வர்­கள் தலை­மை­யில் இடது சாரி மாண­வர் அமைப்­பு­க­ளும், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளும், குடிமை சமூக அமைப்­பு­க­ளும் போரா­டு­கின்­றன. காங்­கி­ரஸ் செய்த துரோ­கத்­தால் இந்­தியா கூட்­ட­ணி­யி­லி­ருந்து வில­கிய தி.மு.க. போராட்ட த்திற்கு ஆத­ரவு தெரி­வித்து வரு­கி­றது. சென்­னை­யில் போரா­டிய மாண­வர்­களை தவெக அரசு கைது செய்­த­போது தி.மு.க தலை­வர்­கள் அவர்­­­க­ளுக்கு ஆத­ர­வாகச் சென்று வாதா­டி­யது குறிப்­பி­டத் 
தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">போரா­டு­ப­வர்­கள் என்ன நிலை­ப்பாடு எடுக்க வேண்­டும்? ஒரே ஒரு­வ­ரது வாக்­கு­ரிமை தவ­றான காரணங் களுக்­கா­கப் பறிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அது அநீ­தி­யா­னது. அவ்­வா­றான SIR செயல்­பாடு மொத்­த­மும் ரத்து செய்­யப்­பட வேண்­டும். அந்த செயல்­பாட்­டின் பின் நடந்த தேர்­தல்­கள் அனைத்­துமே செல்­லா­தவை என்­று­தான் கரு­தப்­பட வேண்­டும் என்று கூறு­வ­து­தான் சரி­யான நிலை­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஆனால் காங்­கி­ரஸ் கேர­ளா­வில் அது சி.பி.ஐ(எம்) 
கட்­சிக்­கெ­தி­ராக பெற்ற வெற்­றி­யும், தமிழ்­நாட்­டில் அது கூட்­டணி அமைத்­துள்ள விஜ­யின் தவெக பெற்ற வெற்­றி­யும் மட்­டும் சரி­யா­னவை என்று சொல்­கி­றது. தமிழ்­நாட்டு தேர்­தல் முடி­வு­களை ஆரா­யும்­போது எந்­தத் தொகு­தி­க­ளி­லெல்­லாம் அதிக வாக்­கு­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­னவோ, அங்­கே­யெல்­லாம் தவெக வென்­றி­ருப்­பது தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">காக்­ரோச் ஜனதா பார்ட்­டி­யும், வேறு சில­ரும் பா.ஜ.­க.-வை தீவி­ர­மாக எதிர்த்த மாநில கட்­சி­க­ளெல்­லாம் தோற்­றி­ருப்­பதை சுட்­டிக் காட்­டு­கி­றார்­கள். ஆனால் காங்­கி­ரஸ் தனக்கு வச­தி­யா­னதை விலக்­கி­விட்டு பிற தேர்­தல்­களை மட்­டும் ஆட்­சே­பிக்­கி­றது. இப்­ப­டிப்­பட்ட அப்­பட்­ட­மான 
சந்­தர்ப்­ப­வா­தம் காங்­கி­ரஸ் கட்­சி­யின் பா.ஜ.க. எதிர்ப்பு என்­பது வெறும் அதி­கா­ரப் போட்­டி­தானா என்ற ஐயத்­தையே பல­ரி­ட­மும் ஏற்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வெறும் இரண்டு மந்­திரி பத­வி­க­ளுக்­காக, பா.ஜ.­க. -­­­விற்கு எதி­ரான முழு­மை­யான கொள்­கைப் போராட்ட த்தை நடத்திய தி.மு.க-வை விட்­டு­விட்டு, பா.ஜ.­க.-வை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத விஜ­யு­டன் திர­மிசு சாப்­பி­டும் ராகுல் காந்­தி­தான் பா.ஜ.­க.­வி­ட­மி­ருந்து நாட்டை 
மீட்­கப் போகி­றார் என்­றால் வேடிக்­கை­யாக இருக்­கி­றது. மாநில கட்­சி­க­ளின் மூன்­றா­வது அணி, காக்­ரோச் ஜனதா பார்ட்டி போன்ற இளை­யோர் அமைப்­பு­க­ளை­யும் இணைத்­துக்­கொண்டு செயல்­ப­டு­வதே சரி­யான அணு­கு­மு­றை­யாக இருக்­கும் என்­பதே பல அர­சி­யல் நோக்­கர்­கள் வந்து சேரும் முடி­வாக இருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>