<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,166,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 13 2026 17:33:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261014T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="14102026-VLR-03" position.sequence="03" ex-ref="14102026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="122">பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து காங்கிரஸ் புல்லுருவிகள் கழகத்திற்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="56">தலைமைக் கழகம் கடும் எச்சரிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup945803_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup945804_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="dmkhq_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Rectangle945470_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, அக்.14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஞானேஷ்­கு­மாரை பதவி நீக்க முதல் 
குரல் கொடுத்­த­வர் எங்­கள் தலை­வர் என­வும், தொடை நடுங்கி விஜய்­யின் காலைக் 
கழு­விக் குடிக்­கும் மாணிக்­கம் தாகூர் 
போன்­ற­வர்­க­ளுக்கு தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்­துப் பேச துளி­யும் அருகதை இல்லை என்­றும், பா.ஜ.க. எதிர்ப்பு பற்றி காங்­கி­ரஸ் புல்­லு­ரு­வி­கள் கழ­கத்­திற்­குப் 
பாடம் எடுக்­கத் தேவை­யில்லை என­வும் தலை­மைக் கழ­கம் கடும் எச்­ச­ரிக்கை 
விடுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­மைக் கழ­கம் விடுத்­துள்ள 
அறிக்கை வரு­மறு :–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“கூட்­ட­ணி­யில் இல்­லாத கழ­கத்தை 
நோக்­கிக் கூவும் காங்­கி­ரஸ் தலை­வர் வாயை அடக்க வேண்­டும்! இல்­லை­யென்­றால் 
அடக்­கப்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றப் பொதுத்­தேர்­த­லுக்கு முன்பே, தனது திமிர்ப்­பேச்­சு­க­ளால், தமிழ்­நாட்­டில் வலு­வாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்­புக் கூட்­ட­ணி­யைச் சீர்­கு­லைத்த த.வெ.க. அடிமை மாணிக்­கம் தாகூர் மீண்­டும் தனது வாய்த்­­துடுக்கை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தின் வாக்­குச்­சா­வடி முக­வர்­கள் கூட்­டத்­தில், கழ­கச் செயல்­வீ­ரர்­கள் களத்­தில் ஆற்­றிய பணியை அங்­கீ­க­ரிக்­கும் விதத்­தி­லும், அவர்­களை ஊக்­கு­விப்­ப­தற்­கா­க­வும் பேசிய பேச்சை எடுத்து வைத்­துக்­கொண்டு, தேர்­தல் ஆணை­யத்­தின் பார­பட்­ச­மான நேர்­மை­யற்ற SIR நட­வ­டிக்­கைக்கு வக்­கா­லத்து வாங்­கு­கி­றார்.  இத­னைக் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேசி­யத் தலைமை ஏற்­கி­றதா? SIR–இல் இது­தான் அவர்­க­ளது நிலைப்­பாடா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் SIR–ஆல் மக்­க­ளின் வாக்­கு­ரிமை பறி­போ­கா­மல் இருக்­கத் தங்­க­ளால் இயன்­ற­வரை தி.மு.க.வினர் பாடு­பட்­ட­னர். படி­வங்­களை நிரப்­பிச் சமர்ப்­பிக்க மக்­க­ளுக்கு உத­வி­னர். எனி­னும், வரைவு வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லும் பின்­னர் இறுதி வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லும் பல­ரது பெயர்­கள் இடம்­பெ­றா­மல் போனது அனை­வ­ரும் அறிந்த உண்மை. இப்­படி ஊர­றிந்த உண்­மை­யைத்­தான் 
இந்­தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்­கம் மறைக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்­மை­யில், தி.மு.க.வின் தோல்­விக்கு S.I.R.–உடன் சேர்த்து மற்­றொரு கார­ண­மும் இருக்­கி­ற­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதனை மறுப்­ப­தற்­கில்லை. தி.மு.க. தலை­மை­யி­லான மதச்­சார்­பற்ற முற்­போக்­குக்கூட்­ட­ணி­யில் அங்­கம் வகித்­துக் கொண்டே, தின­மும் தி.மு.க. குறித்து மாணிக்­கம் தாகூர், கிரிஷ் சோடங்­கர், 
பிர­வீன் சக்­ர­வர்த்தி போன்ற காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருக்­கும் சில புல்­லு­ரு­வி­கள் தெரி­வித்த கருத்­து­க­ளும் ஒரு கார­ண­மாக அமைந்­தன. இத­னால், கூட்­ட­ணி­யின் நற்­பெ­ய­ரும் 
ஒற்­று­மை­யும் பொது­வெ­ளி­யில் கேள்­விக்­குள்­ளா­னது. தி.மு.க. கூட்­ட­ணி­யி­லும், காங்­கி­ரஸ் கட்­சி­யி­லும் அங்­கம்வகித்­துக் கொண்டே, வேறு கட்­சி­யின் ஸ்லீப்­பர் செல்­க­ளாக 
இவர்­கள் செயல்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காங்­கி­ரசை தூக்கி எறிந்­த­பி­றகு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கழ­கத்­திற்குக் கிடைத்­துள்ள பேரா­த­ரவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னால், காங்­கி­ரஸ் கட்­சிக்­குள்­ளேயே கூட்­ட­ணி­யின் வெற்­றிக்­காக உண்­மை­யாக உழைத்­த­வர்­க­ளின் உழைப்­பும் சேர்ந்து வீணா­னது. காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்த இத்­த­கைய அழு­கிய பிணங்­க­ளின் சுமை­யைச் சேர்த்­துச் சுமந்­த­தும் கழ­கத்­தின் வாக்­கு­கள் சரிய ஒரு கார­ண­மாக அமைந்­து­விட்­டது. அந்­தச் சுமை­யைத் தூக்கி எறிந்­த­பின்­னர் மக்­க­ளி­டம் கழ­கத்­துக்­கான ஆத­ரவு தற்­போது பன்­ம­டங்கு பெரு­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழக உடன்­பி­றப்­பு­கள் புத்­து­ணர்ச்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள். நடந்து முடிந்த இடைத்­தேர்­தல் முடி­வு­க­ளும் அதைத்­தான் சொல்­கின்­றன. “தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் பதவி வில­கக் கோரி நடை­பெ­றும்போராட்­டத்­தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்­கேற்­க­வில்லை.” என்று கூற மாணிக்­கம் தாகூ­ருக்குமுத­லில் என்ன தகுதி இருக்­கி­றது? தமிழ்­நாட்­டில் 
SIR–க்கு எதி­ரா­கப் போரா­டிய இளை­ஞர்­கள் த.வெ.க. அர­சால் கைது செய்­யப்­பட்­ட­போது, தி.மு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அவர்­களை விடு­விக்­கக் கோரிப் போராட்­டம் நடத்­தி­னர். அப்­போது காங்­கி­ரஸ் என்ன செய்­து­கொண்­டி­ருந்­தது? முத­ல­மைச்­சர் விஜய் அவர்­க­ளோடு காபி குடித்­துக்­கொண்­டி­ருந்­த­ வர்­கள்  கழ­கம் குறித்­துப் பேச­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் நாளேட்­டில் 
தேர்­தல் ஆணை­யத்­தில் நடை­பெற்ற முறை­கே­டு­கள் குறித்த கட்­டுரை வெளி­யா­ன­தும்,ஞானேஷ் குமார் அவர்­க­ளைப் பத­வி­நீக்­கம் செய்ய வேண்­டும் என்று தமிழ்­நாட்­டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்­ட­வர் எங்­கள் தலை­வர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள். தொடர்ந்து இடைத்­தேர்­தல் பரப்­பு­ரை­க­ளி­லும் இது­கு­றித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசி­னார். அது­மட்­டு­மின்றி, கடந்த ஏப்­ரல்மாதமே, ஞானேஷ் குமா­ரைப் பத­வி­நீக்­கம் செய்ய வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­க­ளின் சார்­பில் அளிக்­கப்­பட்ட நோட்­டீ­சி­லும் தி.மு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பத­விப் பிச்­சைக்­காக கூட்­டணி தர்­மத்­திற்கு எதி­ராக காங்­கி­ரஸ் புல்­லு­ரு­வி­கள் தி.மு.க.வுக்­குச் செய்ததுரோ­கத்­தை­ய­டுத்து இந்­தியா கூட்­ட­ணி­யில் இருந்து நாங்­கள் வெளி­யே­றி­விட்­டோம். இந்­தியா கூட்­ட­ணி­யில் இல்­லாத தி.மு.க. இனி அவர்­கள் முன்­னெ­டுக்­கும் போராட்­டங்­க­ளில் இணைய வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இணைய வேண்­டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­தும் உரி­மை­யும் அவர்­க­ளுக்கு இல்லை. இனி எங்­கள் வழி, தனி வழி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாணிக்­கம் தாகூர் சூடு, சொர­ணை­யுள்ள மனி­த­ராக இருந்­தால் காங்­கி­ர­சு­டன் கூட்­ட­ணி­யில் இருக்­கும் த.வெ.க.வின் தலை­வர் விஜய் ஏன் போராட்­டத்­தில் இணை­ய­வில்லை என்று கேட்க வேண்­டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிர­த­மர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்­காத தொடை­ந­டுங்­கி­தான் விஜய். அப்­ப­டி­பட்ட தொடை­ந­டுங்­கி­யின் காலைக் கழு­விக் குடிக்­கும் மாணிக்­கம் தாகூர் போன்­ற­வர்­களுக்கு தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்­துப் பேசத் துளி­யும் அரு­கதை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த இரு நாட்­க­ளாக டெல்­லி­யில் இந்­தி­யா­வின் இளை­ஞர் பட்­டா­ளம் ஒன்­று­தி­ரண்டு ஞானேஷ் குமார் அவர்­க­ளின் பத­வி­ நீக்­கத்தை வலி­யு­றுத்­திப் போராடி வரு­கி­றார்­கள். அவர்­கள் மீது கடும் அடக்­கு­மு­றை­க­ளும் வன்­மு­றை­யும் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளது. பல முன்­னாள் முத­ல­மைச்­சர்களும், நாடா­ளு ­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் கூட இந்த அடக்­கு­மு­றை­யில் இருந்து தப்­ப­வில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்­ட­னங்­க­ளைக் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தெரி­வித்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தாவை
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கொளுத்தி வீசி­ய­வர் தலை­வர் மு.க.ஸ்டாலின்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், SFI அமைப்­பி­னர், கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னரே கூட இதற்­காக மனப்­பூர்­வ­மாக நன்றி தெரி­வித்து, கழ­கத் தலை­வர்  மு.க.ஸ்டாலின் அவர்­களின் கண்­டன அறிக்­கை­யைப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டிப்­பட்ட எங்­க­ளைப் பார்த்­து­தான், “எஸ்.ஐ.ஆருக்கு எதி­ரான போராட்­டத்­தில் பங்­கேற்­றால் பா.ஜ­.க.வை பகைத்­துக்­கொள்ள நேரி­டும் என்று தி.மு.க. அஞ்­சு­கிறது” என்று மாணிக்­கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்­தி­ருக்­கி­றார். எவ­ரை­யும் கண்டு அஞ்­சும் இயக்­கம் அல்ல தி.மு.க.! தேர்­தல் பரப்­பு­ரைக்கு இடை­யி­லும், கருப்­புடை தரித்து தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தா­வைக் கொளுத்தி பா.ஜ.க. வின் முயற்­சியை வீழ்த்­திய வீரர் எங்­கள் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பஞ்ச் டய­லாக் பேசிய பக்காபொடி­மாஸ் விஜய் SIR குறித்து பேசி­ய­துண்டா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாசி­சம், பாயா­சம் என பஞ்ச் பேசிய பக்கா பொடி­மாஸ் முத­ல­மைச்­சர் விஜய் ஏன் இது­வரை SIR மற்­றும் ஞானேஷ் குமார் குறித்­துப் பேச­வில்லை? அவர் காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் அங்­கம் வகிக்­கி­றாரா இல்­லையா? அவ­ரைக் கேள்வி கேட்க மாணிக்­கம் தாகூ­ருக்கு ஏன் வக்கு வகை­யில்லை? காங்­கி­ரஸ் கட்­சி­யி­லேயே சில சுய­ம­ரி­யாதை உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முத­ல­மைச்­சர் விஜய்­யின் கள்ள மவு­னம் குறித்­தும், தமிழ்­நாட்­டில் அவ­ரது அரசு போராட்­டங்­களை அடக்­கு­வது குறித்­தும் கேள்வி எழுப்பி உள்­ள­னர். ஆனால், கட்­சி­யின் தலை­வ­ராக இருக்­கும் மாணிக்­கம் தாகூரோ பனை­யூர் பண்­ணை­யா­ரின் கால­டி­யில் மண்­டி­யிட்டு, திமு­கவை நோக்­கிக் கூவு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­க­ளெல்­லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழ­கத்­துக்­குப் பாடம் எடுக்க வேண்­டிய நிலை­யில் நாங்­கள் இல்லை. அதி­லும், பா.ஜ.க. எதிர்ப்­பில் இந்­தி­யா­வி­லேயே மிக வலிமை வாய்ந்த கூட்­ட­ணி­யைக் கட்­ட­மைத்து, தொடர்ந்து இரு நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளில் முழு வெற்­றி­யைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்­த­வர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்­கையை ஓட்­டும் மாணிக்­கம் தாகூர் போன்ற அட்­டைப்­பூச்­சி­கள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்­கட்­டுக்­காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்­டாம் என எச்­ச­ரிக்­கி­றோம். அவ­தூறு தொடர்ந்­தால் அதற்­கு­ரிய விளைவை எதிர் கொண்டே ஆக 
வேண்­டும்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு தலை­மைக் கழ­கம் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>