<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,919" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 14 2026 23:03:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261015T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="15102026-CBE-05" position.sequence="05" ex-ref="15102026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup947385_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup946927_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வர் 25 வயது பெண். சாஃப்ட்­வேர் இன்­ஜி­னி­ய­ரா­கப் பணி­யாற்­று­கி­றார். அதி­காலை 5 மணிக்கு ஃபரி­தா­பாத்­தில் உள்ள வீட்­டி­லி­ருந்து யாருக்­கும் தெரி­யா­மல் புறப்­ப­டு­கி­றார். குறிப்­பாக, அவ­ரது அம்மா விழித்­து­வி­டக்­கூ­டாது என்ற கவ­னத்­து­டன் கத­வைத் திறந்து, பூனை போல நடந்து, தெரு­வுக்கு வந்து, ஒரு வாட­கைக் கார் பிடித்து டெல்­லி­யின் ஜந்­தர் மந்­தர் பகு­திக்கு வந்து சேர்­கி­றார் அந்­தப் பெண்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">63 வயது நிறைந்த பெண்­மணி தனது 36 வது வயது மக­ளு­டன் முதல் நாள் இரவே குரு­கி­ராம் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டு டெல்­லிக்கு வந்­து­விட்­டார். மாண­வர்­கள் பல­ரும் அவ­ரைப் போலவே வந்து கொண்­டி­ருந்த னர். அசா­மி­லி­ருந்து டெல்­லிக்கு வந்த  மாண­வி­யால் தலை­ந­க­ரின் கெடு­பி­டி­க­ளைக் கடந்து ஜந்­தர் மந்­தர் பகு­திக்­குச் செல்­வது பெரும் சவா­லாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஹச­ரத் நிஜா­மு­தீன் ரயில் நிலை­யத்­தில் எல்­லைப் பாது­காப்பு படை வீரர்­கள் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். ரயில் நிலை­யத்­தின் வாச­லில் காத்­தி­ருந்த டாக்ஸி டிரை­வர்­க­ளும், உள்ளே இருந்த போர்ட்­டர்­க­ளும் எந்த ரயி­லும் இயங்­காத நிலை­யில் தங்­கள் வயிற்­றுப்­பாட்­டுக்கு வழி என்ன என்று தெரி­யா­மல் தவித்­துக் கொண்­டி­ருந்­த­னர். புது­டெல்­லிக்­குள் நுழை­வ­தற்­கான ஒவ்­வொரு வழித்­த­டத்­தி­லும் போலீஸ் குவிக்­கப்­பட்­டி­ருந்­தது. மாண­வர்­கள், இளை­ஞர்­கள், பொது­ந­லச் செயற்­பாட்டா ளர்­கள், சூழ­லி­யல் ஆர்­வ­லர்­கள், பொது 
மக்­கள், அர­சி­யல் பிர­மு­கர்­கள் உள்­ளிட்ட 
அத்­தனை பேருக்­குமே டெல்­லிக்­குள் நுழை­வது பெரும் சவா­லாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எஸ்.ஐ.ஆர் எனப்­ப­டும் சிறப்பு வாக்­கா­ளர் சீர­மைப்பு முறை­யால் பொது­மக்­க­ளின் வாக்­கு­ரி­மை­யைப் பறித்து, மோச­டி­யா­கத் தேர்­தல் நடத்­திய தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரைப் பதவி நீக்­கம் செய்ய வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் அக்­டோ­பர் 10ஆம் தேதி நடந்­தப் போராட்­டத்­தைத் தடுப்­ப­தற்­கா­கத்­தான் ஒன்­றிய பா.ஜ.க. அரசு, போர்ப் பதற்­றம் போன்ற சூழலை உரு­வாக்­கி­யி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எந்­தப் பக்­கம் திரும்­பி­னா­லும் போலீஸ் மற்­றும் துணை ராணு­வத்­தி­ன­ரின் தலை­கள்­தான். இத்­த­னைக்­கும், தலை­மைத் 
தேர்­தல் ஆணை­ய­ருக்கு எதி­ராக நடந்­தது, அர­சி­யல் சட்­டம் வழங்­கி­யுள்ளநெறி­மு­றை­ க­ளின்­ப­டி­யான அற­வ­ழிப் போராட்­டம். அதை ஒடுக்கு வதற்­கா­கத்­தான் இத்­த­னைக் கெடு­பி­டி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜந்­தர்­மந்­தர் 2.0 போராட்­டத்தை முன்­னெ­டுத்த கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யின் தலை­வர் அபி­ஜித் திப்கே, துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சவு­ரவ் தாஸ் உள்­ளிட்­டோர் மும்­பை­யி­லி­ருந்து டெல்­லிக்கு வந்த விமா­னம் தரை­யி­றங்­கி­ய­துமே, விமா­னத்­திற்­குள் புகுந்து அவர்­க­ளைக் கைது செய்­தது காவல்­துறை. விமான நிலைய நெறி­மு­றை­க­ளுக்கு மாறான வகை­யில் நடந்த இந்­தக் கைது, ஏர் இந்­தியா விமான அதி­கா­ரி­கள் உள்­பட பல­ரை­யும் அதி­ர­வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போரா­டி­ய­வர்­கள் சட்­டத்­திற்­குட்­பட்டு நடந்து கொண்­டார்­கள். போராட்­டத்தை ஒடுக்­கு­வற்­கா­கக் கள­மி­றக்­கப்­பட்ட அர­சின் பாது­காப்­புப் படை­யி­னர் சட்­டத்­தைப் பூட்ஸ் காலால் மிதித்­த­னர். செய்தி சேக­ரித்த ஊட­கத்­தி­னர், அதி­லும் குறிப்­பா­கப் பெண் செய்­தி­யா­ளர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. போராட்­டத்­தில் ஈடு­பட்ட பெண்­க­ளைக் கைது செய்து வாக­னத்­தில் ஏற்­றும்­போது காவல்­துறை அதி­கா­ரி­கள் கடைப்­பி­டித்த முறை சொல்­லக்­கூ­சும் அள­வுக்கு இருந்­தது. அகில இந்­திய மாண­வர் சங்­கத் தலை­வர் நேரா போரா­வின் செயல்­பா­டு­களை எப்­ப­டி­யா­வது முடக்­கி­விட்­டால், மொத்­தப் போராட்­டக் கூட்­டத்­தை­யும் விரட்­டி­வி­ட­லாம் என நினைத்து டெல்­லிப் போலீஸ் செயல்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாது­காப்பு என்ற பெய­ரில் ஊடு­ரு­விய இந்­துத்வா அமைப்­பி­ன­ரின் வன்­செ­யல்­கள் வீடியோ ஆதா­ரங்­க­ளாக வெளி­யாகி வைர­லா­யின. போலீ­சார் முன்­னி­லையிலேயே போராட்­டக்­கா­ரர் ஒரு­வரை 5 பேர் கொண்ட கும்­பல் தாக்­கு­வ­தும், அவ­ரைக் காப்­பாற்ற வந்த பெண்ணை தூக்­கிக் கீழே வீசி, பின்­னர் தாக்­கு­வ­தும்அந்த வீடி­யோ­வில் பதி­வா­கி­ யி­ருந்­தது. இது தொடர்­பாக 5 பேர் கைது செய்­யப்­பட்ட நிலை­யில், இந்து ரக் ஷா தள் அமைப்­பின் தலை­வர் பிங்கி சவுத்ரி என்­ப­வர் அவர்­கள் தங்­கள் அமைப்­பி­னர் என்­றும், அவர்­க­ளுக்­குப் பாது­காப்பு தேவை என்­றும் வெளிப்­ப­டை­யா­கக் கேட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமை­தி­யா­கக் கூடி, அற­வ­ழி­யில் நடை­பெ­றும் போராட்­டத்தை ஒடுக்­கு­வ­தற்கு போர்க்­கா­லப் பதற்­றம் போன்ற சூழல் உரு­வாக்­கப்­பட்­ட­தால்­தான், “அறி­விக்­கப்­ப­டாத எமர்­ஜென்சி” என்று இதனை விமர்­சித்து, தன் கண்­ட­னத்­தைப் பதிவு செய்­தார் திரா­விட நாய­கர் நம் கழ­கத் தலை­வர் அவர்­கள். எஸ்.ஐ.ஆர்.  மோசடி குறித்து முதன் முத­லில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­ய­தும், தகு­தி­யுள்ள ஒரு வாக்­கா­ளர் பெயர்­கூட விடு­ப­டக்­
கூ­டாது என்று தி.மு.க.வின­ரைக் கள­மி­றக்­கிச் செயல்­பட வைத்­த­தும், சட்­ட­மன்­றத் 
தேர்­தல் நடை பெற்ற மாநி­லங்­க­ளில் நடந்த எஸ்.ஐ.ஆர். மோச­டி­கள் குறித்த செய்தி ஊட­கங்­க­ளில் வெளி­யா­ன­துமே இந்­திய தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் பதவி விலக வேண்­டும் என்று முதல் குரல் கொடுத்­த­வ­ரும் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யத் தலை­ந­க­ரில் மாண­வர்­க­ளும் இளை­ஞர்­க­ளும் ஜன­நா­ய­கம் காக்­கும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த அதே நாளில், சென்­னை­யி­லும் தமிழ்­நாட்­டின் பல பகு­தி­களி­லும் மாண­வர் அமைப்­பு­கள் தங்­கள் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தன. சென்னை பெசன்ட் நக­ரில் கூடிய மாண­வர்­க­ளை­யும் இளை­ஞர்­க­ளை­யும் த.வெ.க. அர­சின் காவல்­துறை ஒரு மண்­ட­பத்­தில்  சிறை வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டும் மாண­வர்­களை த.வெ.க அரசு கைது செய்­வது இது முதல்­மு­றை­யல்ல. ‘நீட்’ தேர்­வுக்கு எதி­ரா­னப் போராட்­டத்­தின்­போ­தும் மாண­வர் அமைப்­பி­ன­ரைத் தீவி­ர­வா­தி­கள் போல இழுத்­துச் சென்று வேனில் ஏற்­றி­யது. இட­து­சாரி மாண­வர் - இளை­ஞர் அமைப்­பு­க­ளின் செயல்­பாடு களைக் கல்வி நிலை­யங்­க­ளில் அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று கல்­லூ­ரிக் கல்வி இயக்­க­கம் மூல­மாக சுற்­ற­றிக்கை வெளி­யிட்­ட­தும் த.வெ.க அர­சு­தான். எஸ்.ஐ.ஆர். மோச­டி­களுக்­குக் கார­ண­மா­னத் தலை­மைத் 
தேர்­தல் ஆணை­யர் பதவி வில­கக் கோரி நடந்த போராட்­டத்­தை­யும் முடக்­கி­டும் வகை­யில், காலை­யி­லேயே கைது நட­வ­டிக்­கை­களைத் தொடங்­கி­விட்­டது த.வெ.க அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாண­வர்­க­ளும் இளை­ஞர்­க­ளும் காவல்­து­றை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு மண்­ட­பத்­தில் அடைத்துவைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்ற தக­வல் கிடைத்­த­வு­ட­னேயே கழ­கத் தலை­வர் அவர்­கள் இது குறித்து, கழக நிர்­வாகி களுக்­குத் தெரி­வித்து, அற­வ­ழி­யில் போரா­டு­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வா­கக் கழ­கம் உறு­தி­யாக நிற்­கி­றது என்­பதை நேரில் உணர்த்­தி­டச் 
செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன்­படி, கழ­கத் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் ஆ.ராசா எம்.பி, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் ஆகி­யோர் விரைந்து சென்று, கைது செய்­யப்­பட்­டி­ருந்தவர்­க­ளைச் சந்­தித்து, போராட்­டத்­திற்கு கழ­கத்­தின் ஆத­ர­வைத் தெரி­வித்­த­து­டன், அவர்­களை விடு­விக்­கும் வரை இங்கு தான் இருப்­போம் என உறு­தி­ய­ளித்து, மண்­ட­பத்­தின் வாச­லி­லேயே தரை­யில் அமர்ந்து, போராட்­டக்­கா­ரர்­களை விடு­விக்­கும்­படி முழக்­கங்­கள் எழுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க. நிர்­வா­கி­கள் கள­மி­றங்­கி­ய­தால் காவல்­துறை தயங்­கி­யது. கைதா­ன­வர்­களை விடு­விக்க முடிவு செய்­தது. மதி­யப் பொழு­திற்­குள் அவர்­கள் அனை­வ­ரும் விடு­ விக்­கப்­பட, வாச­லில் உட்­கார்ந்து தங்­க­ளுக்­காக முழக்­கம் எழுப்­பிய தி.மு.க. நிர்­வா­கி­க­ளுக்குஅவர்­கள் நன்றி தெரி­வித்­து­விட்­டுச்  சென்­ற­னர். தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்கு எதி­ராக டெல்­லி­யில் நடக்­கின்ற போராட்­ட­மாக இருந்­தா­லும், சென்­னை­யில் நடக்­கின்ற போராட்­ட­மாக இருந்­தா­லும் எங்­கள் நிலைப்­பாடு ஒன்­று­தான் என்­ப­தைச் செய­லில் உணர்த்­திக்­காட்­டி­யது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அக்­டோ­பர் 10 அன்று இந்­தி­யத் தலை­
நக­ரில்  மாண­வர்­கள் - இளை­ஞர்­க­ளின் தன்­னெ­ழுச்­சி­யா­னப் போராட்­டம் நடைபெற்ற நாளில், தாங்­க­ளும் எஸ்.ஐ.ஆரை எதிர்க்­கி­றோம் என்று சொல்­லிக்­கொள்­ளும் காங்­கி­ரஸ் கட்­சி­யின் எம்.பி.யும், மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான ராகுல்­காந்தி, அங்கே இல்­லா­மல் சென்­னைக்கு வந்து விட்­டார். மம்­தா­பா­னர்ஜி, அர­விந்த் கெஜ்­ரி­வால், 
இட­து­சாரி கட்­சி­க­ளின் தலை­வர்­கள் டெல்­லி­யில் மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்து, பா.ஜ.க. அர­சால் கைது செய்­யப்­பட்ட நிலை­யில், ராகுல்­காந்­திக்கு சென்­னை­யில் அப்­படி என்ன வேலை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தி.மு.க. கூட்­ட­ணி­யில் 5 சீட்­டு­களை வென்று, அடுத்­த­நாளே த.வெ.க. பக்­கம் தாவிய நன்­றிக்­கெட்­டத்­த­னத்தை மேலும் உறுதி செய்­யும் வகை­யில், டெல்லி குலுங்­கிட போராட்­டம் நடந்த நாளில், விஜய்­யு­டன் சென்­னை­யில் ஒரு காபிக் கடை­யில் உட்­கார்ந்து உறிஞ்­சிக் கொண்­டி­ருந்­தார் ராகுல்­காந்தி. எந்த விஜய்? எஸ்.ஐ.ஆருக்கு எதி­ரா­கப் போரா­டிய மாண­வர்­க­ளைக் காலை­யில் கைது செய்த ஆட்­சியை நடத்­து­கிற அதே விஜய்­தான். காங்­கி­ர­சின் இரட்டை வேடத்தை ராகுல்­காந்­தியே வெளிச்­சம் போட்­டுக் காட்­டி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லா­ளி­யான ஒன்­றிய அர­சின் மனம் நோகா­த­படி சேவ­கம் செய்­வ­தில் பா.ஜ.க ஆளும் மாநில அர­சு­களை மிஞ்சி நிற்­கி­றது விஜய்­யின் த.வெ.க. அரசு. தமிழ்­நாட்­டில் போராட்ட உரி­மை­களை முற்­றி­லும் பறிக்­கின்ற வகை­யில் கடந்த 5 மாதங்­க­ளா­கக் காவல்­து­றை­யின் தொடர் நட­வ­டிக்­கை­கள் அமைந்­துள்­ளன. சென்­னை­யில் தொடங்கி நாமக்­கல் வரை பல ஊர்­க­ளி­லும் தூய்­மைப் பணி­யா­ளர்களின் போராட்­டங்­க­ளைக் காவல்­துறை கொண்டு முடக்­கி­யது த.வெ.க அரசு. செவி­லி­யர்­க­ளின் போராட்­டத்­தை­யும் ஒடுக்­கி­யது. பன்­னோக்கு மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் தங்­க­ளின் கோரிக்­கை­களை வலி­யு­றுத்­திப் போரா­டு­வ­தற்­கும் அனு­ம­தி­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">போராட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக வீட்­டி­லி­ருந்து புறப்­பட்ட மருத்­து­வப் பணி­யா­ளர்­களை அங்­கேயே தடுத்து, வீட்­டுக்­கா­வ­லில் வைத்­தது த.வெ.க அர­சின் காவல்­துறை. பாத்­ரூம் செல்­வ­தற்­குக்­கூட அனு­ம­திக்­கா­மல், மருத்­து­வப் பணியாளர்­களை விரட்­டிச் சென்று கைது செய்­தது. “மக்­க­ளுக்கு ஒன்று என்­றால் இந்த விஜய் நிற்­பான்” என்று பஞ்ச் டய­லாக் பேசிய விஜய்­யின் ஆட்­சி­யில் ஜன­நா­ய­கம் பஞ்­சர் ஆகிக்­கி­டக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்­சி­யில் திட்­ட­மி­டப்­பட்டு, 
ஒன்­றிய அர­சி­டம் நிதிக்­கா­கப் போராடி, மாநில நிதி­யில் கட்­ட­மைக்­கப்­பட்ட சென்னை மெட்ரோ இரண்­டா­வதுகட்­டத் திட்­டத்தை, நிதி தராத அர­சின்பிர­த­ம­ரும், நிர்­வா­கத் திற­னில்­லாத அர­சின் முதல்­வ­ரும் சேர்ந்து தொடங்கி வைத்­தார்­கள். அந்த விழா­வில் வைக்­கப்­பட்­டி­ருந்தவள்­ளு­வ­ருக்கு காவிச் சாயம் பூசப்­பட்­டி­ருந்­தது. பா.ஜ.க வேறல்ல, த.வெ.க வேறல்ல என்­ப­தன் அடை யாளம்­தான் அது. தகி­டு­தத்தஆட்­சி­யில் தமிழ்­நாடு தனது தனித்­து­வ­மான பண்­பாட்டு விழு­மி­யங்­க­ளை­யும்,  ஜன­நா­யக உரி­மை­க­ளை­யும் ஒவ்­வொருநாளும் இழந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>