<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,227,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 17 2026 03:54:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261017T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="17102026-VLR-01" position.sequence="01" ex-ref="17102026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">திராவிட மாடல் அரசால் அமைக்கப்பட்ட</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="97">கோவை ‘பெரியார் அறிவுலகம்’: திறந்து வைப்பதில் என்ன பெருமை   ? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை   ! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="5CM_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Periyarphotoo_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Arivulagam16_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, அக்.17–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கோவை­யில் கழக அர­சின் ‘பெரி­யார் 
அறி­வு­ல­கம்’ திறக்­கப்­ப­டு­வ­தை­யொட்டி கழ­கத் தலை­வர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள்  விடுத்த அறிக்­கை­யில், ‘‘திரா­விட மாடல் அர­சால் அமைக்­கப்­பட்ட கோவை ‘பெரி­யார் அறி­வு­ல­கத்தை’  இவர்­கள் திறந்து வைப்­ப­தில் என்ன பெருமை, இருக்­கி­றது! எதை­யும் திட்­ட­மிட்டுஉரு­வாக்­கு­வ­தில்­தான் உண்­மை­யான பெருமைஇருக்­கி­றது!’’  என்று குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வர்  அவர்­க­ளின் அறிக்கை 
வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பூவி­ருந்­த­வல்லி– வட­ப­ழனி மெட்ரோ வழித்­த­டத்­தைத் தொடர்ந்து நமது திரா­விட மாடல் அர­சின் மற்­று­மொரு மாபெ­ரும் 
திட்­டம் இன்று மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு அர்ப்­ப­ணிக்­கப்­பட உள்­ளது.சுய­ம­ரி­யா­தையை­ யும் பகுத்­த­றி­வை­யும் பரப்­பு­வ­தையே தம் வாழ்­நாள் கட­மை­யா­கக் கரு­திக்­கொண்டு, தமி­ழி­னத்­தின் மேன்­மைக்­கா­கத் தம் இறு­தி­மூச்சு வரை உழைத்து ஒளி­வீ­சிய பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் பெய­ரி­லான அறி­வு­ல­கம் இன்று கோவை­யில் திறக்­கப்­படு­ 
கிறது. மனம் மகிழ்ச்­சி­யில் கூத்­தா­டு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2024-–25-ஆம் ஆண்­டுக்­கான நிதி­நிலை அறிக்­கை­யில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘‘கோவை வாழ் பொது­
மக்­க­ளி­டையே, குறிப்­பாக இளைய தலை­முறை­யி­ன­ரின் அறி­வுத்­தா­கத்தைமேலும் தூண்­டும் வித­மாக ஒரு மாபெ­ரும் நூல­கம் மற்­றும் அறி­வி­யல் மையம்அமைக்­கப்­ப­டும்’’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என அறி­வித்­தோம். அத­னை­ய­டுத்து, 
6-.11.-2024 அன்று அடிக்­கல் நாட்டி, கோவை மத்­திய சிறைச்­சா­லைக்­குச் சொந்­த­மான இடத்­தில், 1.98 இலட்­சம் சதுர அடிப் பரப்­ப­ள­வில் தரை மற்­றும் ஏழு தளங்­க­ளு­டன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் இத­னைக் கட்டி முடித்­தோம். இப்­படி நாம் விரைந்து செயல்­பட்டு, அக்­க­றை­யோடு உரு­வாக்­கி­யுள்ள அறி­வுக் கோயில்­தான் ‘பெரி­யார் 
அறி­வு­ல­கம்’.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மேற்கு மண்­ட­லத்­துக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மாபெ­ரும் அறி­வுச் சுரங்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தரைத்­த­ளத்­தில் கலை­ய­ரங்­கம், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கானநூல­கம் மற்­றும் விண்­வெ­ளிப் பய­ணத் தூக்கி, முதல் தளத்­தில் 
வர­வேற்­பறை, அறி­வி­யல் மையம், இரண்­டாம் தளத்­தில் குழந்­தை­க­ளுக்­கான நூல­கம் மற்­றும் சொந்­தப் புத்­த­கம் படிக்­கும் பிரிவு, மூன்­றாம் தளத்­தில் போட்­டித் தேர்­வு­க­ளுக்­கான நூல­கம் மற்­றும் தலைமை நூல­கர் அலு­வ­ல­கம், நான்­காம் தளத்­தில் தமிழ்ப் 
புத்­த­கப் பிரிவு மற்­றும் பருவ இதழ்­கள் பிரிவு, ஐந்து, ஆறா­வது தளங்­க­ளில் ஆங்­கில புத்­த­கப் பிரிவு மற்­றும் இன்­கு­பே­ஷன் சென்­டர், ஏழாம் தளத்­தில் அறி­வி­யல் மையம் மற்­றும் டிஜிட்­டல் நூல­கம் எனக் காண்­போ­ரின் 
கண்­க­ளைக் கவ­ரும் விதத்­தி­லும் சிந்­தை­யைத் தூண்­டும் விதத்­தி­லும் உல­கத்
த­ரத்­தில் இதனை அமைத்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கோட்­டூர்­பு­ரத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மாண­வர்­க­ளின் சர­ணா­ல­யம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு இலட்­சத்து 25 ஆயி­ரம் நூல்­க­ளைக் கொண்ட, மேற்கு மண்ட­லத்­துக்­கான 
மாபெ­ரும் அறி­வுச் 
சு­ரங்­க­மாக இது திக­ழ­வுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆண்டு 
பிப்­ர­வரி மாதம் நான் கோவைக்­குச் சென்­றி­ருந்­த­போதே, பெரும்­பாலான பணி­கள் 
முடி­வுற்று இருந்­தன. அப்­போதே இத­னைத் திறந்து வைத்­தி­ட­லாம் எனப் பல­ரும் சொன்­ன­போது, “அவ­ச­ரம் வேண்­டாம், முழு­மை­யா­கப் பணி­கள் நிறை­வ­டைந்த பின்­னர் திறந்­தால் போது­மா­னது” என்று சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">யார் திறந்­தால் என்ன! திறந்து வைப்­பதா பெருமை? எதை­யும் திட்­ட­மிட்டு உரு­வாக்­கு­வது­தானேஉண்­மை­யான பெருமை! தமிழ்­நாட்­டில் அந்­தப் பெருமை ஆக்­க­சக்­தி­யான திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்கே உரி­யது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­றி­ஞர் அண்ணாஅவர்­க­ளின் 
நூற்­றாண்டைமுன்­னிட்டு அவ­ரது அன்­புத்­தம்பி முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் சென்னை கோட்­டூர்­பு­ரத்­தில் ஆசி­யா­விலேயே மிகப் பிரம்­மாண்­ட­மான, அழ­கிய நூல­கத்தை உரு­வாக்­கி­னார். கலை­ஞ­ரின் ஆட்­சிக்­கா­லத்­துக்­குப் பின்­னர், அதனை 
அங்­கி­ருந்து மாற்­றி­ட­வும் சீர­ழித்­தி­ட­வும் பல முயற்­சி­கள் நடை­பெற்­றன. அனைத்­தை­யும் தடுத்து நிறுத்தி, திரா­விட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்­த­தும் அண்ணா நூற்­றாண்டு நூல­கத்­துக்­குப் புத்­து­யி­ரூட்­டி­னோம். ஒவ்­வொரு நாளும் ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­க­ளுக்­குச் சர­ணா­ல­ய­மாக இன்­ற­ள­வும் அது திகழ்ந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னைத் தொடர்ந்து,தமிழ்­நாடு முழு­
வ­தும் கல்­லூ­ரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள், 
பூங்­காக்­கள், நூல­கங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், தொழிற்­சா­லை­கள், ஐ.டி. பூங்­காக்­கள், மேம்­பா­லங்­கள், தமி­ழர் பண்­பாட்­டுச் 
சின்­னங்­கள் என உரு­வாக்­கிய நவீன தமிழ்­நாட்­டின் சிற்­பி­யாம் தலை­வர் கலை­ஞர் அவர்­களின் நூற்­றாண்­டை­யொட்டி, மது­ரை­யில் கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கத்தை அமைத்­துத் திறந்து வைத்­தேன். சென்னை முழு­வ­தும் முதல்­வர் படைப்­ப­கங்­கள் 
மற்­றும் நூல­கங்­க­ளை­யும் அமைத்­துத் திறந்து வைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் முதல் பொது­நூ­ல­க­மான எழும்­பூர் கன்­னி­மாரா நூல­கத்தை மிகச் சிறப்­பான முறை­யில் புதுப்­பித்து, நவீன 
சிறு­வர் நூல­கம், அறி­வி­யல் மையம்,சொந்த நூல் படிக்­கும் பிரிவு, நவீன மாநாட்­டுக்கூடம் போன்ற புதிய வச­தி­க­ளை­யும் 
ஏற்­ப­டுத்­தித் திறந்து வைத்­தோம். மேலும், சிந்­தா­தி­ரிப்­பேட்­டை­யில் சிதி­ல­ம­டைந்து இருந்த கோஷன் நூல­கத்­தை­யும் அதன் நூற்­றாண்­டை­யொட்­டிப் பழமை மாறா­மல் புதுப்­பித்தோம். இரண்­டை­யும், அப்­போ­தைய துணைமுத­ல­மைச்­சர்  உத­ய­நிதி அவர்­கள் திறந்து வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் திசை­தோ­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பிரம்­மாண்ட நூல­கங்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, மது­ரை­யைத் தொடர்ந்து பிற பகு­தி­க­ளி­லும் மாபெ­ரும் நூல­கங்­களை அமைக்கநமது திரா­விட மாடல் அர­சில் முடிவு செய்­தோம். அப்­படி, மேற்கு 
மண்­டல மக்­க­ளுக்­கா­கக் கோவை­யில் நாம் அமைத்­துள்­ள­து­தான், இன்று திறப்பு விழா காணு­கின்ற பெரி­யார் அறி­வு­ல­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை மட்­டு­மல்ல, திருச்­சி­யில் 290 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பெய­ரில் பிரம்­மாண்ட நூல­கம், நெல்­லை­யில் 100 கோடி­யில் கண்­ணி­யத் தென்­றல் காயிதே மில்­லத் பெய­ரி­லான மாபெ­ரும் நூல­கம், சேலத்­தில் 104 கோடி ரூபா­யில் பார­தி­தா­சன் அறி­வு­ல­கம், கட­லூ­ரில் 98.26 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அமை­ய­வுள்ள அஞ்­சலை அம்­மாள் அறி­வு­ல­கம் எனத் தமிழ்­நாட்­டில் திசை­தோ­றும் பிரம்­மாண்ட நூல­கங்­க­ளைத் திரா­விட மாடல் அர­சில் அமைத்து வந்­தோம். இவை­ய­னைத்­தும் வெகு விரை­வில் அடுத்­த­டுத்து திறப்பு விழா காண­வி­ருக்­கின்­றன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கழக அர­சின் சிந்­த­னை­யில் உதித்த அறி­வுச் சின்­னங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த வகை­யில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆட்­சி­யில் இருந்­த­போது மட்­டு­மல்ல, ஆட்­சி­யில் இல்­லாத நிலை­யி­லும் திரா­விட மாடல் அர­சின் சாத­னை­கள்­தான் ஒவ்­வொரு நாளும் மிளிர்­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சைத் தவிர வேறு எந்த அர­சும் இப்­படி நூல­கங்­களை அமைத்­த­தில்லை என்று கழக உடன்­பி­றப்­பு­கள் தம் கால­ரைத் தூக்­கி­விட்­டுப் 
பெரு­மை­யோடு சொல்­லிக் கொள்­ள­லாம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் ஒவ்­வொருமூலை­யி­லும் எழுந்து நிற்­கும் இந்த அறி­வுச் சின்­னங்­கள் கழக அர­சின் சிந்­த­னை­யில் உதித்­தவை. 
கழ­கத்­தால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டவை. வேறு எந்த அர­சும் செய்­யா­தவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நூல­கங்­கள் மட்­டு­மில்­லா­மல், சென்­னை­யில் சைதாப்­பேட்டை முதல் தேனாம்­பேட்டை வரை­யி­லான மேம்­பா­லம், சென்னை மெட்ரோ இர­யில் திட்ட 
இரண்­டாம் கட்­டத்­தின் எஞ்­சிய வழித்­த­டங்­கள், முட்­டுக்­காட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள கலை­ஞர் பன்­னாட்டு அரங்­கம் எனத் 
திரா­விட மாடல் அரசு அமைத்த திட்­டங்­களை மட்­டுமே இந்­தப் புதிய அரசு இன்­னும் பல ஆண்­டு­க­ளுக்­குத்திறந்­து­கொண்டே 
இருக்­க­லாம். அந்த அள­வுக்கு வலு­வான அடித்­த­ளத்தை ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் அமைத்து­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கழக இளை­ஞ­ரணி நடத்­திய 
‘அறி­வுத்­தி­ரு­விழா’!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்­ப­டுத்­தியே இயங்கி வரும் இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அத­னால்­தான், கழ­கத்­தின் முதல் தலை­மை­ய­கத்­துக்கு ‘அறி­வ­கம்’ எனப் பெயர் வைத்­தார் 
நம் ஆரு­யிர் அண்ணா. அவரை ‘அறி­ஞர்’ என்­றும், கலை­ஞரை முத்­த­மிழ் ’அறி­ஞர்’ என்­றும்­தான் அடை­மொழி தந்து அழைக்­கிறோம். தலை­வர் கலை­ஞ­ரால் அமைக்­கப் பட்டுஇன்­ற­ள­வும் கழ­கத்­தின் தலை­மை­ய­க­மா­கத் திக­ழும்அலு­வ­ல­கக் கட்­ட­டத்­துக்­கும் அண்ணா  ‘அறி­வா­ல­யம்’ என்­று­தான் 
கலை­ஞர் பெய­ரிட்­டார். இந்த அறி­வு­ம­ர­பின் தொடர்ச்சி­ யாகத்­தான், கடந்த ஆண்டு 
கழக இளை­ஞ­ர­ணி­யின் சார்­பில் அறி­வுத்­திருவிழா நடத்­தப்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">‘மாபெ­ரும் தமிழ்க்­க­னவு’ 
சொற்­பொ­ழிவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அறி­வுத்தீ எங்­கும் பரவ வேண்­டும், அறிவு ஜன­நா­ய­க­ம­ய­மாக வேண்­டும், வாசிப்­புப் 
பழக்­கம் வளர்ந்துபண்­பட்ட சமூ­க­மா­கத் தமிழ்ச் சமூ­கம் திகழ வேண்­டும் என்­று­தான் தமிழ்­நாடு முழு­வ­தும் நூல­கங்­களை 
உரு­வாக்­கி­னோம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புத்­த­கத் திரு­வி­ழாக்­களை நடத்­தி­னோம். கீழடி, பொருநை என 
அருங்­காட்சியகங்­களை உரு­வாக்­கி­னோம். 
‘மாபெ­ரும் தமிழ்க்­க­னவு’ சொற்­பொ­ழி­வு­களை நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நமது ‘நான் முதல்­வன்’ 
திட்­டத்­தின் வெற்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவை­யா­வும் பசு­ம­ரத்­தாணி போல, தமிழ்­நாட்டு மக்­க­ளின்நெஞ்­சங்­க­ளில் பதிந்­தி­ருக்­கி­றது. ஆனால், உள்­ளங்­கை­யால் உத­ய­சூ­ரி­யனை மறைத்­து­விட முயல்­வ­தைப் போல சில முட்­டாள்­த­ன­மான செயல்­க­ளில் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் ஈடு­ப­டு­வ­தைக் கண்­டேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெரி­யார் அறி­வு­ல­கத்­தின் அறி­வி­யல் தொழில்­நுட்ப அரங்­கில் பிர­மிட் வடி­வி­லான கணினி மேசை­யில் பொறிக்­கப்­பட்­டுள்ள ‘நான் முதல்­வன்’ பெயரை மறைத்து வைத்­துள்­ளார்­க­ளாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தான் முத­ல­மைச்­ச­ராக ஆகி­விட்ட பின்­பும் கூட, ‘முதல்­வன்’என்ற சொல்­லைக் கண்­டால் மக்­க­ளுக்கு இந்த ஸ்டாலின் நினை­வு­தான் வரும் என நம் எதி­ரி­களே அஞ்­சு­கி­றார்­கள் என்­றால், அது­தான் நமது வெற்றி! நமது ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் வெற்றி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">இனி, கோவை­யின் 
பெரு­மை­மிகுஅடை­யா­ளம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறி­வுச் செயல்­பா­டு­க­ளுக்கு எந்­தத் தொடர்­பு­மற்ற, அறி­வார்ந்த சமூ­கத்­தின் மேல் ஒவ்­வாமை கொண்ட இந்த மூடர் 
கூட்­டத்­தின் ஆட்­டம் முடி­வுக்கு வந்தே தீரும்! அதை நிறை­வேற்­று­வ­தில், நாம் அமைத்த நூல­கங்­க­ளும், வெளி­யிட்ட நூல்­க­ளும் 
நிச்­ச­யம் பங்­க­ளிக்­கும்! இன்று திறக்­கப்­பட­ வுள்ள பெரி­யார் அறி­வு­ல­கம் இனி கோவை­யின் பெரு­மை­மிகு அடை­யா­ளங்­க­ளுள் ஒன்­றா­கத் திக­ழும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என் அன்­புக்­கு­ரிய கோவை மக்­களே! திரா­விட மாடல் அர­சில் நாம் திறந்து வைத்த ‘செம்­மொ­ழிப் பூங்­கா’­­­வுக்­குத் திர­ளா­கச் 
செல்­வ­தைப் போல, பெரி­யார் அறி­வு­ல­கத்­தை­யும் அனை­வ­ரும் சென்று காணுங்­கள். தினம் தி­னம் செல்­லுங்­கள். கோவைக்கு உங்­கள் உற­வி­னர், நண்­பர் வந்­தா­லும், ‘‘பாருங்­கள் எங்­கள் அறி­வு­ல­கத்தை!’’ எனப் பெரு­மை­யோடு அழைத்­துச் சென்று 
காட்­டுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெரி­யார் அறி­வு­ல­கக் கதவு திறக்­கட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அறி­யாமை ஒழி­யட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வாழ்க பெரி­யார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தமது அறிக்­கை­யில் கழ­கத் 
தலை­வர் அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ளார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>