<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,68,957,1180" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 17 2026 03:56:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261017T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="17102026-VLR-05" position.sequence="05" ex-ref="17102026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவான வித்தியாசத்தில் வெற்றி:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="34"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">100 தொகுதிகளில் த.வெ.க.வின் வெற்றியை உறுதி செய்த எஸ்.ஐ.ஆர்.!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">ஆய்வில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame953267_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="DC1bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="DC2col_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, அக். 17 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எஸ்.ஐ.ஆர். எனப்­ப­டும் வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்­தத்­துக்கு பிறகு நடந்த 5 மாநில தேர்­தல்­க­ளில் தமிழ்­நாடு, மேற்கு வங்­கம், கேர­ளம் ஆகிய 3 மாநி­லங்­க­ளில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­டது. இவற்­றில் முக்­கி­ய­மாக தமிழ்­நாட்­டில் தி.மு.க. தலை­மை­யி­லான அர­சும், மேற்கு வங்­கத்­தில்மம்தா பானர்ஜி தலை­மை­யி­லான அர­சும் வீழ்த்­தப்­பட்­டி­ருப்­பது தேசிய அள­வில் கவ­னம் பெற்­றது. கார­ணம், இந்த இரண்டு அர­சு­க­ளுமே மாநில உரி­மையை சிறி­தும் விட்­டுக் கொடுக்­கா­மல் போரா­டி­யவை. நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யி­லும் நிலைப்­பாட்டை மாற்­றா­மல், நிலை குலை­யா­மல் நின்­றவை. கேர­ளா­வில் ஆட்சி மாற்­றம் நிகழ்ந்­தா­லும் அது காங்­கி­ரஸ் ஆட்­சிக்கு வர வழி வகுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த வீழ்ச்­சிக்கு கார­ணம் என்­ன­வென்று அந்­தந்த கட்­சி­கள் ஆராய்ந்து கொண்­டி­ருந்த நேரத்­தில் தான், தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் தங்­கள் கருத்தை கேட்­கா­ம­லும், 10 முறை ஆட்­சே­பங்­கள் தெரி­வித்­தும் படி­வம் 6ல் மாற்­றங்­கள் செய்­த­தாக தேர்­தல் ஆணை­யர்­கள் சுக்­பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகி­யோர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­த­னர். இந்த மாற்­றங்­க­ளும் நிபந்­த­னை­க­ளும்தான் பல லட்­சம் பேர் பெயர் நீக்­கத்­துக்கு கார­ண­மாக இருந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. இதன்­பி­றகு, வாக்­கா­ளர் பெயர் நீக்­கம் தொடர்­பாக நடத்­தப்­பட்ட பல ஆய்­வு­கள், தேர்­த­லில் ஆட்சி மாற்­றத்­துக்கு எஸ்.­ஐ.­ஆர். நட­வ­டிக்­கை­கள் கார­ண­மா­கின என்­பதை தெளி­வு­ப­டுத்­தின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தற்­போது, மற்­றொரு ஆய்­வில், தமிழ்­நாட்­டில் த.வெ.க. வெற்றி பெற்ற 108 தொகு­தி­க­ளில் 100 தொகு­தி­க­ளில் வெற்றி வித்­தி­யா­சம், எஸ்.­ஐ.ஆ­ரில் நீக்­கப்­பட்ட வாக்கா­ ளர் எண்­ணிக்­கையை விட குறை­வாக இருந்­தது தெரிய வந்­துள்­ளது. அதி­லும், அதிக வாக்­கா­ளர் நீக்­கப்­பட்ட தொகு­தி­க­ளில் த.வெ.­க.­வின் வெற்றி விகி­தம் உயர்ந்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">74 லட்­சம் பேர் நீக்­கம் 
ஏற்­ப­டுத்­திய மாற்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் எஸ்.ஐ.ஆ­ருக்கு முந்­தைய வாக்­கா­ளர் எண்­ணிக்­கை­யை­யும் இறுதி வாக்­கா­ளர் பட்­டி­ய­லை­யும் ஒப்­பிட்­டுப் பார்க்­கும்­போது, பெரும் மாற்­றம் ஏற்­பட்­டி­ருப்­பது தெரி­கி­றது. தேர்­தல் ஆணைய தர­வு­க­ளின்­படி, கடந்த 2025 நவம்­பர் மாத வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் மொத்­தம் 6,41,14,587 வாக்­கா­ளர்­கள் இருந்­த­னர். 2026 பிப்­ர­வரி 23ம் தேதி வெளி­யி­டப்­பட்ட எஸ்.ஐ.­ஆர். இறுதி வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் 5,67,07,380 வாக்­கா­ளர்­கள் மட்­டுமே இடம்­பெற்­றி­ருந்­த­னர். இதன்­படி, 74,07,207 வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட் ­டுள்­ள­னர். அதா­வது, மாநி­லத்­தின் மொத்த வாக்­கா­ளர்­க­ளில் 11.6 சத­வீ­தம் பேர் நீக்­கப்­பட்டு விட்­ட­னர். இவர்­க­ளில் இடம் பெயர்ந்­த­வர்­கள், இரட்டை பதி­வு­கள், இறந்­த­வர்­கள் என தேர்­தல் ஆணை­யம் வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே நேரத்­தில், தகு­தி­யான வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் தவ­று­த­லாக நீக்­கப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக் 
­கப்­ப­டு­கின்­றன. பி.எல்.ஓ.க்­கள் பல இடங்­க­ளில் நேர­டி­யாக வீடு வீடாக சென்று ஆய்வு நடத்­த­வில்லை என­வும் கூறப்­ப­டு­கி­றது. இது­மட்­டு­மின்றி, படி­வம் 6 ல் மாற்­றம் செய்­தது உட்­பட தலைமை தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மார் தன்­னிச்­சை­யாக மேற்­கொண்ட முடி­வு­க­ளா­லும், கள அள­வில் நடந்த குள­று­ப­டி­க­ளா­லும், பழையஎஸ்.­ஐ.­ஆர்.பட்­டி­ய­லில் பெயர் தேட முடி­யாத கார­ணத்­தா­லும் பல வாக்­கா­ளர்­கள் தங்­கள் பெயரை சேர்க்­கவே போராட வேண்­டி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நீக்க விகி­தம் அதி­க­ரிக்க, அதி­க­ரிக்க த.வெ.­க.­வின் வெற்­றி­யும் அதி­க­ரிப்பு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த ஆய்­வில் வாக்­கா­ளர் பெயர்­கள் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட்ட விகி­ தத்­துக்­கும் த.வெ.­க.­வின் தேர்­தல் வெற்றி விகி­தத்­துக்­கும் இடையே காணப்­ப­டும் தொடர்பு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கி­றது. வாக்­கா­ளர் பெயர் நீக்க விகி­தத்­தின் அடிப்­ப­டை­யில் 234 தொகு­தி­க­ளும் இந்த ஆய்­வில் 4 பிரி­வு­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­டுள் ­ளன. ஒவ்­வொரு பிரி­வி­லும் த.வெ.க. வென்ற தொகு­தி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதன் சரா­சரி வாக்­குப் பங்­கும் ஒப்­பி­டப்­பட்­டுள்­ளன. அதா­வது 4.3 சத­வீ­தம் முதல் 9.6 சத­வீ­தம்வரை 59 தொகு­தி­க­ளில் 13ல் த.வெ.க. வெற்றி பெற்­றுள்­ளது. இங்கு 
த.வெ.­க.­வின் வெற்றி விகி­தம் 22 சத­வீ­த­மா­க­வும், அந்த கட்சி பெற்ற வாக்­கு­கள் 30.8 சத­வீ­த­மா­க­வும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதா­வது, குறைந்த வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்ட தொகு­தி­க­ளில் த.வெ.க. வெற்றி வாய்ப்பு 22 மட்­டுமே என இதனை எடுத்­துக் கொள்­ள­லாம். அதிக வாக்­கா­ளர் நீக்­கப்­பட்ட தொகு­தி­க­ளில் வெற்றி வாய்ப்பு 78 சத­வீ­த­மாக உயர்ந்த விட்­டது. அதா­வது 59 தொகு­தி­க­ளில் 46ல் த.வெ.க. வெற்றி பெற்­றுள்­ளது. இதே­போல், இந்த கட்சி பெற்ற வாக்­கு­கள் முந்­தைய பிரி­வில் இருந்த 30.8 சத­வீ­தத்­தில் 41.8 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இந்த வேறு­பாடு சாதா­ர­ண­மா­கப் புறக்­க­ணிக்கக்­ ­கூடிய ஒன்­றல்ல என்­கின்­ற­னர் அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள். தேர்­தல் முடிவு­களுக்­கும் வாக்­கா­ளர் பட்­டி­யல் மாற்­றங்­க­ளுக்­கும் இடை­யி­லான தொடர்பை மேலும் ஆராய வேண் டிய அவ­சி­யத்தை இது உணர்த்­து­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">சென்­னை­யைச் சுற்­றிய 
தொகு­தி­க­ளில் நடந்­தது என்ன</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்னை மற்­றும் அத­னைச் சுற்­றி ­யுள்ள நகர்ப்­பு­றத் தொகு­தி­க­ளில் வாக்­கா­ளர் பட்­டி­யல் மாற்­றங்­க­ளுக்­கும் த.வெ.­க.­வின் வெற்­றிக்­கும் இடை­யி­லான தொடர்பு அதி­க­மாக இருப்­ப­தாக ஆய்­வு­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. குறிப்­பாக சென்னை, திரு­வள்­ளூர், செங்­கல்­பட்டு ஆகிய மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய பகு­தி­யில் 37தொகு­தி­க­ளில் 32 இடங்­க­ளைத் த.வெ.க. கைப்­பற்­றி­யுள்­ளது. இந்த பகு­தி­க­ளில் வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்ட சரா­சரி விகி­தம் சுமார் 20 சத­வீ­த­மாக இருந்­த­தாகஆய்வு குறிப்­பி­டு­கி­றது. சென்னை மாவட்­டத்­தில் மட்­டும் வாக்­கா­ளர் பட்­டி­ய­லின் மொத்த எண்­ணிக்கை 29.3 சத­வீ­தம் குறைந்­துள் ­ளது. இத­னால்­தான், தி.மு.­க. ­வின் கோட்­டை­யாக கரு­தப்­ப­டும் சென்­னை­யி­லேயே 2 இடங்­களை தான் அக்­கட்சி பிடிக்க முடிந்­தது என்­கின்­ற­னர் ஆய்­வா­ளர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குறிப்­பாக, ஆயி­ரம் விளக்கு, அண்ணாநகர் போன்ற தொகு­தி­க­ளில் சுமார் 35 சத­வீ­தம் வரை வாக்­கா­ளர்­கள் நீக்­கப்­பட்­ட­ தாக தர­வு­கள் தெரி­விக்­கின்­றன. இது­போல், சோழிங்­க­நல்­லூர் தொகு­தி­யில் 1,65,459; பல்­லா­வ­ரத்­தில்1,14,281; வேளச்­சே­ரி­யில் சுமார் 1,05,829; ஆலந்­தூ­ரில் சுமார் 1,03,278; அண்ணா நக­ரில் 99,020 என வாக்­கா­ளர் நீக்­க ப்­பட்­டுள்­ள­தாக புள்ளி விவ­ரங்­கள் கூறு­கின்­றன. இந்­தப் பகு­தி­க­ளில் மக்­கள் இடம் பெயர்ந்த கார­ணத்­தின் அடிப்­ப­டை­யில் அதிக பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. மாவட்ட வாரி­யான தர­வு­க­ளின்­படி, சென்­னை­யில் த.வெ.க. வென்ற 14 தொகு­தி­க­ளி­லும் வெற்றி வித்­தி­யா­சம் எஸ்.ஐ.ஆ­ரில் பெயர் நீக்­கப்­பட்ட எண்­ணிக்­கையை விட குறைவு. இது­போல் திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் 9 தொகு­தி­க­ளில் 6 தொகு­தி­க­ளி­லும், மது­ரை­யில் 8 தொகு­தி­க­ளில் 7 தொகு­தி­க­ளி­லும் இந்த நிலை காணப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கோவை, திருச்சி, ஈரோடு, செங்­கல்­பட்டு, நாமக்­கல், திருப்­பூர், விரு­து­ந­கர், வேலூர், காஞ்­சி­பு­ரம் ஆகிய மாவட்­டங்­க­ளில் தவெக வென்ற தொகு­தி­கள் அனைத்­தி­லும் வெற்றி வித்­தி­யா­சம் எஸ்.ஐ.­ஆ­ரில் நீக்­கப்­பட்ட எண்­ணிக்­கை­யை­வி­டக் குறைவு என்­பதை தர­வு­கள் சுட்­டி க்­காட்­டு­கின்­றன. சேலத்­தில் த.வெ.க. வென்ற 4 தொகு­தி­க­ளில் 3 தொகு­தி­க­ளி­லும், சிவ­கங்­கை­யில் 4 தொகு­தி­க­ளில் 3 தொகு­தி­க­ளி­லும், தூத்­துக்­கு­டி­யில் 3 தொகு­தி­க­ளில் 2 தொகு­தி­க­ளி­லும் இதே ஒப்­பீடு பொருந்­து­கி­றது. வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் பெயர் நீக்­கக்­கப்­பட்­ட­வர்­கள் இல்­லா­த­வர்­கள், இடம் பெயர்ந்­த­வர்­கள், இறந்­த­வர்­கள் என மூன்று வகை­யாக பிரிக்­கப் ­பட்­டுள்­ள­னர். இதில் இறந்­த­வர்­கள் பெயர்­கள் உண்­மை­யா­கவே மர­ணச்­சான்று வாங்­கிய பிறகு நீக்­கப்­பட்­ட­தாக வைத்­துக் கொண்­டால் கூட, எஞ்­சிய நீக்­கங்­கள் மூலம் மட்­டும் 84 தொகு­தி­களை த.வெ.க. பெற்­றுள்­ளது என ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">உண்­மை­யில், பல இடங்­க­ளில் சம்­பந்­தப்­பட்ட குடும்­பத்­தி­னர், உற­வி­னர் அல்­லா­மல் வேறு ஆட்­சே­பங்­கள் மற்­றும் தக­வல்­கள் அடிப்­ப­டை­யில் கூட இறந்­த­வர்­கள் என வகைப்­ப­டுத்­தப்­பட்டு நீக்­கப்­பட்­ட­தாக மக்­கள் பலர் தெரி­விக்­கின்­ற­னர்.தங்­க­ளி­டம் வரா­ம­லேயே தங்­கள் உற­வி­னர் பெயர் இறந்­த­வர்­கள் என வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.இது­போன்ற குற்­றச்­சாட்­டு­கள், உண்­மை­யான சரி­பார்ப்­பின் மூலம் தான் அனை­வ­ரும் நீக்­கப்­பட்­டார்­களா என்ற சந்­தே­கத்தை எழுப்­பி­யுள்­ளன. மற்­றொரு உதா­ர­ண­மாக, இறந்­த­வர் என வகைப்­ப­டுத்­தப்­பட்டு பெயர் நீக்­கப்­பட்­ட­வர் உயி­ரோடு இருந்­தது பீகா­ரில் நடந்த எஸ்.­ஐ.­ஆர். நட­வ­டிக்­கைக்கு பிறகு ஆதா­ரப்­பூர்­வ­மாக நிரூ­ப­ணம் ஆகி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கடைசி வரை பெயர் சேர்க்க முடி­யா­மல், கடைசி நேரத்­தில் விண்­ணப்­பம் தந்­தும் முடி­யா­மல் தேர்­தல் நாளில் ஒவ்­வொரு தொகு­தி­யி­லும் பல வாக்­கா­ளர்­கள் வாக்கு இல்லை என்று திரும்­பிச் சென்­றுள்­ளதே இதற்கு சாட்சி என மக்­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கி­றது. இது­போன்ற தவ­று­கள், குள­று­ப­டி­கள்தான் எஸ்.­ஐ.­ஆர்.இல்­லா­விட்­டால் தேர்­தல் முடிவு மாறி­யி­ருக்­குமா என்ற சந்­தே­கத்தை வலு­வாக எழுப்­பி­யி­ருக்­கி­றது. எனவே, ஒன்­றிய அரசு அழுத்­தத்­தின் பேரில், எஸ்­ஐ­ஆர் எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளில் அந்த அர­சு­களை வீழ்த்த ஒரு ஆயு­த­மாக பயன்­பட்­டி­ருக்­க­லாம் என்ற குற்­றச்­சாட்டு ­கள் எதிர்க்­கட்­சி­க­ளால் முன்­வைக்­கப்­ப­டும் நிலை­யில், என்ன நடந்­தது என்­பதை விளக்க வேண்­டி­யது தேர்­தல் ஆணை­யத்­தின் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வாக்­கு­ரிமை பறிக்­கப்­ப­டு­வது அர­ச­மைப்­புக்கு எதி­ரா­னது என நீதி­மன்­றமே சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது. இதை கருத்­தில் கொண்டு தீர்வு காண வேண்­டி­ய­தும், இனி வரும் தேர்­தல்­களை நியா­ய­மா­க­வும் நேர்­மை­யா­க­வும் நடத்த வேண்­டி­ய­தும் தேர்­தல் ஆணை­யத்­தின் கடமை என்­பதே பெரும்­பான்­மை­யி­ன­ரின் கருத்­தாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">52 தொகு­தி­களை  
இழந்­தி­ருக்க வாய்ப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேர்­தல் ஆணைய புள்ளி விவ­ரங்­கள் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்­வில், வாக்­கா­ளர் பெயர் அதி­க­மாக நீக்­கப்­பட்ட இடங்­கள் த.வெ.க. வெற்­றிக்கு சாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்­தித் தந்­தி­ருக்­கின்­றன. எஸ்.ஐ.­ஆ­ரில் நீக்­கம் செய்­யப்­பட்ட வாக்­கா­ளர் எண்­ணிக்­கையை விட குறை­வான வாக்கு வித்­தி­யா­சத்­தில் த.வெ.க. வெற்றி பெற்ற 100 தொகு­தி­க­ளில், 52தொகு­தி­கள் 15 சத­வீ­தத்­துக்கு மேல் எஸ்.­ஐ.­ஆர். நீக்க விகி­தம் கொண்ட மாவட்­டங்­க­ளில் உள்­ளன. இதன்­படி அனைத்து தொகு­தி­க­ளி­லும் பெயர் நீக்க விகி­தம் 15 சத­வீ­தத்­துக்­குக் கீழ் இருந்­தி­ருந்­தால், த,வெ,க, இந்த 52 தொகு­தி­க­ளை­யும் இழந்­தி­ருக்க வாய்ப்பு உள்­ள­தாக ,இந்த புள்ளி விவ­ரங்­களை ஆய்வுசெய்த நிபு­ணர்­கள் தெரி­விக்­கின் ­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>