<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,957,980" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 18 2026 05:20:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261018T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="18102026-TRY-08" position.sequence="08" ex-ref="18102026-TRY-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.99610108">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="95">அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் பணியை முடக்குகிறதா த.வெ.க.?</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">50</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="12"> ஆண்­டு­கால சட்­டப் போராட்­டத்­திற்­குப் பிறகு நடை­மு­றைக்கு வந்த அனைத்­துச் சாதி
­யி­ன­ரும் அர்ச்­ச­கர் பணிக்கு மீண்­டும் கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. த.வெ.க அர­சின் இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் இந்த வழி­பாட்டு உரி­மை­க­ளில் கவ­னம் செலுத்­தா­மல், முறுக்கு பாக்­கெட் காலா­வதி தேதியை ஆய்வு செய்­ப­வ­ராக இருக்­கி­றார். பழநி கோயி­லுக்­குச் சொந்­த­மான 100 கோடி ரூபாய் மதிப்­புள்ள நிலத்தை மிகக் குறைந்த விலைக்­குப் பத்­தி­ர­வுப் பதிவு செய்த மோசடி தொடர்­பாக பதற்­றத்­து­டன் பேட்டி அளிக்­கி­றார். முந்­தைய ஆட்­சி­யா­ளர்­கள் மீது பழி­போட்­டுப் பேசு­வ­தையே வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கி­றார். விஜய் தலைமை யிலான த.வெ.க. ஆட்­சி­யில் பல­வற்­றி­லும் இரட்டை நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­பது போலவே அற­நி­லை­யத்­துறை சார்ந்த முடி­வு­க­ளி­லும் இரட்டை நிலைப்­பாடே வெளிப்­பட்டு வரு­கி­றது.</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">1970களின் தொடக்­கத்­தில் தந்தை பெரி­யார் அவர்­கள் கோயில் கரு­வ­றை­க­ளில் சாதி­யப் பாகு­பாட்டை அகற்­றும் வகை­யில் அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ராக வேண்­டும் என்ற கிளர்ச்­சியை அறி­வித்­தார். அப்­போது முத­ல­மைச்­ச­ராக இருந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் 
பெரி­யாரை நேரில் சந்­தித்து, ‘‘தி.மு.க.வின் கொள்­கை­யும் சாதிய சமத்­து­வம்­தான் என்­ப­தால் அனைத்­துச் சாதி­யி­ன­ரை­யும் அர்ச்­ச­க­ராக்­கு­வ­தற்கு தி.மு.க அரசு துணை நிற்­கும்’’ என உறு­தி­ய­ளித்து, பெரி­யா­ரின் கிளர்ச்­சியை ஒத்­தி­வைக்­கச் செய்­த­து­டன், பெரி­யா­ரி­டம் அளித்த உறு­தி­மொ­ழி­யின்­படி, 1971ஆம் ஆண்டு அனைத்­துச் சாதி­
யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­வ­தற்­கான சட்­டத்­தைக் கொண்டு வந்­தார்.  அர்ச்­ச­கர் உரிமை தங்­க­ளி­ட­மி­ருந்து பறி­போ­வ­தா­கப் பத­றிய சமூ­கத்­தி­னர், இந்­தச் சட்­டத்தை எதிர்த்து உச்­ச­நீ­தி­மன்­றம் சென்­ற­னர். சட்­டத்தை ஒப்­புக்­கொண்ட நீதி­மன்­றம், ஆகம விதி­களை முன்­வைத்து அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­குத் தடை விதித்­தது. கரு­வ­றைத் தீண்­டா­மையை ஒழிக்க முடி­ய­வில்­லையே என்று, தன் நெஞ்­சில் தைத்த முள்­ளு­டன் 1973ல் பெரி­யார் மறை­வெய்­தி­னார். பின்­னர், பெரி­யார் நூற்­றாண்­டை ­யொட்டி எம்.ஜி.ஆர். ஆட்­சி­யில் அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­வது குறித்து ஆராய நீதி­பதி மக­ரா­சன் கமிட்டி அமைக்­கப்­பட்­டது. ஜெய­ல­லிதா ஆட்­சி­யில்  ஆக­மப் பயிற்சி மையம் பெய­ர­ள­வில் தொடங்­கப்­பட்­டது. ஆனால், அது முழு­மை­யும் பெற­வில்லை. அனைத்­துச் சாதி­யி­ன­ரை­யும் அர்ச்­ச­க­ராக்க எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2006ஆம் ஆண்டு ஐந்­தா­வது முறை­யாக முத­ல­மைச்­ச­ரான 
கலை­ஞர், தனது முத­லா­வது அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தி­ லேயே அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­கும் 
சட்­டத்தை நிறை­வேற்­றிட முடிவு செய்­தார். நீதி­பதி ஏ.கே.ராஜன் தலை­மை­யில் இதற்­கான குழு­வும் அமைக்­கப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து மதுரை, பழநி, திரு­வண்­ணா­மலை, திருச்­செந்­தூர் ஆகிய இடங்­க­ளில் சைவ ஆக­மப் பள்­ளி­க­ளும், திரு­வ­ரங்­கம், திரு­வல்­லிக்­கேணி ஆகிய இடங்­க­ளில் வைணவ ஆக­மப் பள்­ளி­க­ளும் திறக்­கப்­பட்டு, அனைத்­துச் சாதி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் அர்ச்­ச­கர்ப் பயிற்­சியை வழங்­கி­யது கலை­ஞர் அரசு. </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="13"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அர்ச்­ச­கர் சட்­டம், ஆக­மப் பள்­ளி­கள் இவற்­றுக்கு எதி­ரா­க­வும் வழக்­குத் தொட­ரப்­பட்­டது. 2011–2021 அ.தி.மு.க ஆட்­சி­யில் இந்த வழக்­கின் மீது போதிய கவ­னம் செலுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக, உயர்­நீ­தி­மன்­றத் தீர்ப்­பின்­படி இந்து சமய அற­நி­லை­யத்­துறை வசம் வந்த சிதம்­ப­ரம் நட­ரா­சர் திருக்­கோ­யிலை மீண்­டும் தீட்­சி­தர்­க­ளி­டமே ஒப்­ப­டைத்­தார் ஜெய­ல­லிதா.</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2021ல் திரா­விட மாடல் ஆட்சி அமைந்­தது. அதன் நூறா­வது நாளான 14.8.2021 அன்று 
மயி­லாப்­பூர் கபா­லீ­சு­வ­ரர் திருக்­கோ­யி­லுக்கு சொந்­த­மான மண்­ட­பத்­தில் நடந்த விழா­வில், அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­கும் சட்­டத்­தின்­கீழ் பணி­ ஆ­ணை­களை வழங்­கி­னார், திரா­விட நாய­க­ரான திரா­விட மாடல் அர­சின் முத­ல­மைச்­சர். பட்­டி­யல் இனத்­தைச் சேர்ந்த 5 பேர் உள்­பட பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் உள்­ளிட்ட 
ஆக­மப் பயிற்சி  பெற்ற அனைத்­துச் சாதி­யி­னைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் பணி­ யா­ணை­களை வழங்­கி­னார். பெண் ஓது­வார்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­ட­ னர். பெரி­யா­ரின் நெஞ்­சில் தைக்­கப்­பட்ட முள், ஏறத்­தாழ 50 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, திரா­விட மாடல் அர­சால் 
அகற்­றப்­பட்­டது.</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க 
சாத­னை­யைப் பொறுக்க இய­லா­மல், 
ஆக­மக் கோயில்­க­ளில் அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­வ­தற்கு எதி­ராக சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் வழக்­குத் தொடர்ந்­த­னர். இந்த வழக்கை விசா­ரித்த உயர்­நீ­தி­மன்­ற­மும், உச்­ச­நீ­தி­மன்­ற­மும் தமிழ் 
­நாட்­டில் உள்ள ஆக­மக் கோயில்­க­ளைக் கணக்­கெ­டுக்க ஒரு கமிட்­டியை அமைக்க உத்­த­ர­விட்­டன. அதன்­படி நீதி­பதி சொக்­க­லிங்­கம் தலை­மை­யில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்­கப்­பட்­டது.  தமிழ்­நாட்­டில் ஆட்­சி­மாற்­றம் ஏற்­பட்ட நிலை­யில், சொக்க லிங்­கம் கமிட்­டி­யின் கணக்­கெ­டுப்­பின்­படி 7,461 ஆக­மக் கோயில்­கள் இருப்­ப­தாக அற­நி­லை­யத்­துறை வகைப்­ப­டுத்தி யுள்­ள­தா­க­வும், இந்­தக் கணக்­கெ­டுப்பு தவ­றான அணு­கு­மு­றை­யில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்­றும் ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர் ஹரி­ப­ரந்­தா­மன், வழக்­க­றி­ஞர் வாஞ்சி நாதன் ஆகி­யோர் சென்னை பத்­தி­ரி­கை­யா­ளர் சங்­கத்­தில் பேட்டி அளித்­த­னர். ஆகம வழக்­கங்­கள் இல்­லாத தமி­ழர் களின் மரபு ரீதி­யான பெருங்­கோ­யில்­க­ளை­யும் வகைப் படுத்த வேண்­டும். அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கரா வதைத் தடுக்­கும் வகை­யில் தற்­போ­தைய அற­நி­லை­யத் துறை­யின் செயல்­பாடு உள்­ளது. அதைக் கைவிட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னர்.  சைவ சித்­தாந்­தப் பெரு­மன்­றத் தலை­வர் முனை­வர் நல்­லூர் சர­வ­ணன் பேசும்­போது, “கோயில்­கள் குறித்த முறை­யான வர­லாற்­றுப் பார்­வை­யு­டன் சொக்­க­லிங்­கம் கமிட்டி செயல்­ப­ட­வில்லை. கோயில்­களை நேரில் சென்று பார்­வை­யி­ட­வு­மில்லை.  பல வகை­யான ஆக­மங்­கள் உள்ள நிலை­யில், ஒரு கோயி­லில் ஒரே­யொரு ஆக­மம்­தான் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டும் என்­கிற நெறி­முறை இப்­போது எந்­தக் கோயி­லி­லும் இல்லை. சாமிக்கு கற்­பூ­ரம் காட்­டிய தட்­டில் தட்­சணை வாங்­கி­னாலே அந்­தக் கோயி­லில் ஆக­மம் இல்லை என்­று­தான் அர்த்­தம். கணக்­கெ­டுப்பு என்ற பெய­ரில் ஒரு பக்­கத்­தி­லான படி­வத்­தைக் கொடுத்து கோயி­லில் உள்ள பரம்­பரை அர்ச்­ச­கர்­கள் மற்­றும் பூசா­ரி­கள் சொல்­வ­தைக் கேட்டு ஆக­மக் கோயில்­கள் எனக் கணக்­கிட்­டுள்­ள­னர். அதை ஆய்வு செய்­யா­மல் கமிட்டி ஏற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.  நீதி­மன்ற உத்­த­ரவை முழு­மை­யா­கச் செயல்­ப­டுத்­தும் வகை­யில் வர­லாற்­றுத்­துறை, சிற்­பக்­கலை, கல்­வெட்­டி­யல், கோயில் கட்­டு­மா­னக் கலை ஆகி­ய­வற்­றில் உள்ள வல்­லு­நர்­க­ளைக் கொண்ட ஒரு குழு அமைத்து, உண்­மை­யான ஆக­மக் கோயில்­கள் எவை­யென்று உறுதி செய்ய வேண்­டும்” என  தெரி­வித்­தார். கலை­ஞர் ஆட்­சி­யில் கொண்டு வரப்­பட்ட அனைத்­துச் சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­கும் சட்­டத்­தின் கீழ்ப் பயிற்­சி­யி­னைப் பெற்­ற­வ­ரும், அர்ச்­ச­கர் பயிற்­சிப் பெற்ற மாண­வர்­கள் சங்­கம் மற்­றும் தமிழ்­நாடு அரசு நிய­மன அர்ச்­ச­கர்­கள் சங்­கத்­தின் பொறுப்­பா ­ள­ரு­மான வி.அரங்­க­நா­தன் பின்­வ­ரும் கோரிக்­கை­களை த.வெ.க அர­சுக்கு வைத்­துள்­ளார்.   உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி எம்.எம்.சுந்­த­ரேஷ் அமர்வு அர்ச்­ச­கர் நிய­ம­னத்­திற்கு விதித்த தடையை நீக்க உடனே நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும். தடை­யற்ற அர்ச்­ச­கர் நிய­ம­னத்­
திற்கு உரிய சட்ட ஆலோ­சனை வழங்­கி­டும் வகை­யில், தமிழ்­நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள், சட்ட வல்­லு­நர் குழு அமைக்க வேண்­டும். அனைத்­துச் சாதி­க­ளை­யும் சேர்ந்த இந்­துக்­களை அர்ச்­ச­க­ராக நிய­மிப்­ப­தற்கு சிறப்­புச் சட்­டம் இயற்ற வேண்­டும். 18 ஆண்­டு­க­ளாக வேலைக்­குக் காத்­தி­ருக்­கும் மாண­வர்களுக்கு வேலை­வாய்ப்பு – உத­வித்­தொகை – இழப்­பீடு உள்­ளிட்­டவை வழங்­கப்­பட வேண்­டும். தமிழ் மக்­கள் கட்­டிய கோயி­லில் தமி­ழி­லேயே குட­மு­ழுக்கு நடத்­தப்­பட வேண்­டும். இது தொடர்­பான உயர்­நீ­தி­மன்­றத் தீர்ப்பு நடை­
மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். குட­மு­ழுக்கு, வேள்வி எனக் கரு­வ­றை­யி­லும் கோபு­ரத்­தி­லும் தமிழ் ஒலிக்க ஒரு புதிய சட்­டத்தை இயற்ற 
வேண்­டும். –என்­பது அர்ச்­ச­கர் பயிற்சி மாண­வர் சங்­கம் மற்­றும் தமிழ்­நாடு அரசு நிய­மன அர்ச்­ச­கர்­க­ளின் கோரிக்­கை­யாக உள்­ளது. </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மதுரை மீனாட்­சி­யம்­மன் திருக்
­கோ­யில் குட­மு­ழுக்கு நன்­னீ­ராட்டு விழா­வில் நீதி­மன்ற உத்­த­ர­வுக்­குப் பிற­கும் உரிய முறை­யில் தமி­ழுக்­கான முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வில்லை என்­ப­தைச் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் வழக்­க­றி­ஞர் வாஞ்­சி­நா­தன் ஆதா­ரத்­து­டன் விளக்­கி­னார். தமிழ்க் குட­மு­ழுக்­கினை வலி
­யு­றுத்­திப் பேரா­டிய தெய்­வத் தமிழ்ப் பேர­வை­யி­ன­ரைத் த.வெ.க அர­சின் காவல்­துறை கைது செய்த கொடூ­ர­மும் மீனாட்­சி­யம்­மன் திருக்­கோ­யில் குட ­மு­ழுக்­கின் போது நடந்­தது.</lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">த.வெ.க அர­சும் அதன் அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­ரும் அனைத்­துச் சாதி­
யி­னர் அர்ச்­ச­க­ரா­வ­தற்­குத் தடை­யாக இருப்­ப­வர்­க­ளின் பக்­கம் சாய்ந்து நிற்­ப­தால், ‘கொள்­கைத் தலை­வர் பெரி­யார்’ என்­பது த.வெ.கவின் வெறும் பசப்பு வார்த்­தை­யா­கவே உள்­ளது.  அம்­ப­லம் ஏறி அரை நூற்­றாண்டு காலப் போராட்­டம் மீண்­டும் அந்­த­ரத்­தில் தொங்­கும் நிலை­யில் உள்­ளது. முத்­த­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரும் திரா­விட நாய­கர் கழ­கத் தலை­வ­ரும் தந்தை பெரி­யா­ரின் நெஞ்­சில் தைத்த முள்ளை அகற்­றி­னர். விஜய்­யின் த.வெ.க அரசு மீண்­டும் பெரி­யார் நெஞ்­சில் முள்ளை வைத்­துத் தைக்­கும் வேலையை யாருக்­கா­கவோ செய்­யப் பார்க்­கி­றதா என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ளது. </lang>
	</hl9>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="1">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Lenin_08_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="95">அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் பணியை முடக்குகிறதா த.வெ.க.?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>