<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="620,65,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 18 2026 05:44:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261018T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="18102026-VLR-05" position.sequence="05" ex-ref="18102026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup957045_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup957142_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ந்தியத்  துணைக் கண்டத்தை  பிரிட்டிஷார் ஆண்டு வந்த சமயம், ஜனநாயகத்தின் உயர்வையும், ஆட்சி முறையிலே ஜனநாயகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டிய அவசியத்தையும் தேசியத் தலைவர்கள் தவறாது நாட்டிலே எடுத்துக் கூறி வந்தனர்! வெள்ளையர் தம் பிடிப்பை விட்டுக் கொடுத்து வெளியேறினால், அதற்குப் பிறகு ஜனநாயகம் என்ற சொல்லுக்கே – காங்கிரஸ் ஆட்சிதான் ஒரு “மாதிரி” (மாடல்) ஆக இருக்கும் என்றும் கூறினர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்தியாவிற்கு மட்டுமென்ன; உலகிற்கே ஜனநாயகத்தின் முழுஉருவைக் காட்டப் போவதை காங்கிரசார் ஆட்சி பீடமேறிய அடுத்த நிமிடமே காணலாம் – என்று கூட சில தலைவர்கள் செப்பினர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள அந்தப் பெரிய மனிதர்களிடமிருந்து ஜனநாயகப் பண்பை சாதாரண அளவுக்குக்கூட காண இயலவில்லை! அந்தப் பெரிய புள்ளிகளிடம் மட்டுமென்ன; அவர்களின் ஆட்சி முறையிலும்.. அதே லட்சணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்னும் சொல்லப்போனால் ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து வந்த வெள்ளையர்களின் ஆட்சி முறையிலாவது குறைந்தபட்ச ஜனநாயகம் நடை முறையிலிருந்து வந்தது. ஆனால் காங்கிரஸ் ‘பிரபுக்கள்’ ஆட்சி பீடமேறியவுடன் அந்தச் சாதாரண ஜனநாயகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1947ஆ-ம் ஆண்டு வரை இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓரளவு அளிக்கப்பட்டிருந்த அரசியல் உரிமையும், அகில இந்திய ஒற்றுமை என்ற பெயரால் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி – ஏகாதிபத்திய ஆணவம் – கட்சி ஆதிக்கம் படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிரிட்டனில், ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி ஒன்று அமைவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அக்கட்சிகளுக்கு அளிக்க வேண்டிய மரியாதைக்குக் குறுக்கே நிற்பது கிடையாது. கன்சர்வேடிவ் கட்சி நாட்டை ஆளும்போது தொழிற்கட்சி எதிர்க்கட்சியாகவும், தொழிற்கட்சி ஆளும்போது கன்சர்வேடிவ் கட்சியினர் எதிர்க்கட்சியினராகவும் வசதிகள் தரப்படுகின்றன. எதிர்க்கட்சி ஒன்று இருந்தால்தான் ஜனநாயகத்தின் சிறப்பைப் பயன்படுத்த முடியும். ஆகவே மேல்நாடுகளில் ஆளும் கட்சியினரே, எதிர்க்கட்சி அமைவதற்குக் கூடுமான அளவு உதவி புரிகின்றனர். அதனால் அந்நாடுகளில் ஜனநாயகம் தலைநிமிர்ந்து நிற்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ஓயாமல் பேசி வந்த காங்கிரசார் இன்று ஜனநாயகத்தைச் சித்திரவதை செய்யும் விபரீதச் செயலில் ஈடுபட்டிருக்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதாரணமாக, சென்னை மாநிலத்தை எடுத்துக்கொண்டால் தேர்தல் காலங்களில் தேசிய முகாமினரும் குறிப்பாக அமைச்சர்களும் கையாளும் முறைகளை, நாகரிகம் ஓரளவாவது தெரிந்த எவரும் கண்டிக்கத்தான் செய்வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்மையில் நடைபெற்ற நகரசபைத் தேர்தல்களில் ஆளும் வர்க்கத்தினர் நடந்து கொண்ட விதத்தை – அவர்களின் போக்கினைக் கொண்டே திட்டவட்டமாகக் குற்றம் சாட்டுகிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்றுவரை எதிர்க்கட்சியாக இருந்தவர்களை – காங்கிரஸ் என்றால் என்ன என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் மனமில்லாதவர்களை –தேசிய மட்டம் என்று கருதிக்கொண்டிருந்தவர்களை –நாட்டுப்பற்றியக்கத்தினர் என்றாலே மகா பணிக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லாதவர்களிடமெல்லாம் நாட்டை ஆளும் அமைச்சர்கள் – ஏன், முதலமைச்சர் உட்பட தஞ்சமடைந்திருக்கிறார்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கதரா, கட்ட வேண்டாம் – காங்கிரசின் முக்கியக் கொள்கைகளைப் பற்றியா, கவலைப்பட வேண்டாம் – காங்கிரசில் நீண்ட காலமாக இருப்போர் எதிர்ப்பார்கள் என்ற அச்சமா, விடுங்கள் அதை, நான் இருக்கிறேன் எதிர்ப்பவர்களை மட்டந்தட்ட –  ஆகவே சும்மா கையெழுத்துப் போடுங்கள், சேர்மன் ஆகுங்கள் – என்று பேரம் பேசினர் தேசிய முகாமினர்–அமைச்சர்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதாவது கொள்கையைப் பற்றி காங்கிரஸ்காரர்களுக்கு, நாட்டை ஆளும் அமைச்சர்களுக்கு அக்கறை கிடையாது. எந்த வகையிலோ கிடைத்த அதிகாரம் தங்களின் பிடிப்பிலிருந்து போய்விடக் கூடாது; அதற்காகத் தங்கள் கட்சியின் கொள்கையை – கண்ணியத்தைக் கூட விலை பேசிட – அதுவும் நேற்று வரை தங்கள் கட்சியை நையாண்டி செய்து வந்தவர்களிடமே விலை பேசிட முனைகின்றனர் என்றால் இந்த “உத்தமப் புதல்வர்களிடம்” ஜனநாயகம் என்னபாடு படுகிறது என்பதை நாம் மேலும் விளக்கத் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிரிட்டன் போன்ற நாடுகளில், கன்சர்வேடிவ், தொழிற்கட்சி ஆகிய இரு முக்கியக் கட்சியினரும் நாட்டை முறையே அதிகப்படியான வாக்குகளையும், இடங்களையும் கைப்பற்றியவர்கள் – மக்களின் எண்ணத்திற்கு நம்பிக்கையானவர்கள் – என்ற தீர்ப்புக்கேற்ப ஆண்டுவருகின்றனர். ஆனால் அந்த இரு கட்சியினரும் கொள்கையை விலை பேசி எந்தப் பாடுபட்டாகிலும் கட்சியின் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்ய வேண்டும் என்று எண்ணியது கிடையாது. பிரிட்டனின் நல்வாழ்வைத்தான் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர் அவ்விரு கட்சியினரும்; தங்களின் ஆதிக்கமும், ஜபர்தஸ்தும் மட்டும்தான் பெரிது என்ற மட்டமான எண்ணம் அந்நாட்டுத் தலைவர்களிடம் – முக்கியக் கட்சிகளிடம் இன்றுகூட எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் அங்கெல்லாம் ஜனநாயகம் வளர்கிறது – மக்களின் வாழ்வும் மலர்ந்திருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் இந்தியத் துணைக் கண்டத்திலேயோ காங்கிரசார் தங்கள் ஆட்சியில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனநாயகம் என்ற பெரிய தத்துவத்திற்கு புதிய அகராதியைக் கண்டுபிடிக்கும் விசித்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விடுதலையடைந்த நாடுகளிலெல்லாம் வலம் வந்து அந்தந்த நாட்டில் இயங்கி வரும் ஜனநாயகம் – சமதர்மம், பொதுவுடமை ஆகிய பூங்காவிலே அமர்ந்து அகில உலக அரசியல் பிரச்னைகளைப் பற்றி ஓயாமல் பேசிவரும் நேரு பண்டிதரிலிருந்து மாநிலங்களில் தர்பார் நடத்தி வரும் அமைச்சர்கள் வரை ஜனநாயகப் போர்வையில் ஏகாதிபத்தியக் கூத்தாடுகின்றனர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ஆண்டால் காங்கிரஸ்தான் இந்நாட்டை ஆள வேண்டும்; இல்லையெனில் அந்நியர்கள் ஆள வேண்டும்” என்ற வெறித்தன்மையில் இன்றைய தேசிய முகாமை வளர்த்து வருகின்றார்களேயல்லாது, இந்நாட்டிற்குரிய மக்கள் – மாற்றுக் கட்சியினர் – ஜனநாயக முறையை அளவுகோலாக வைத்து ஆள வழிவகுப்போம் என்ற பெரும் புத்தி இன்றைய ஆளவந்தாரிடம் அமையாதது வருந்தத்தக்கதாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, ஜனநாயகப் போர்வையில் ஏகாதிபத்திய தர்பார் நடத்தி வரும் காங்கிரசின் கோரப்பிடியிலிருந்து நம் நாட்டையும் மக்களையும் மீட்டு நல்வாழ்வு அளிக்க நாமெல்லாம் ஒன்றுபடுவோம். மேலும் தொடர்ந்து பணியாற்றுவோம். அடுத்துவர இருக்கும் பொதுத் தேர்தலில் இத்தீய சக்தியைக் கூடுமான அளவு தகர்த்தெறிய முற்போக்கு எண்ணம் கொண்ட, ஆனால் திட்டவட்டமான உறுதியான கொள்கையும் மனவளமும் பெற்ற அனைவரும் ஒன்றுபடுவோம். திராவிடத்தை, திராவிடத்தின் மொழிவழிப் பகுதிகளான தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் ஆகிய ஒவ்வொரு மாநிலமும் எல்லா உரிமைகளும் பெற்று, உலக நாடுகளிடையேயும், இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதி மாநிலங்களிடையேயும், நேசப்பான்மையில் நீடூழி வாழப் பணியாற்றுவோம். இந்த உறுதியை திராவிடர் திருநாளன்று எடுப்போமாக; நம் பணியை இனிது முடிப்போமாக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முரசொலி – பொங்கல் மலர் 1956</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>