<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,492,958,1210" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 18 2026 05:43:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261018T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="18102026-VLR-07" position.sequence="07" ex-ref="18102026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை    இடைச்செருகல் செய்து அரசியலுக்காக அவசரக்கதியில் நடத்தும் நிலை!   </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்பூர், அக்.18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பள்­ளிக்­கல்­வித்­துறை மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத்­துறை சார்­பில் வழக்­க­மாக நடத்­தப்­ப­டும் போட்­டி­களை முறை­யாக நடத்­து­வ­தற்கு முன்­பா­கவே,ம் விளை­யாட்டு வீரர்­களை ஊக்­கப்­ப­டுத்த ரூ.5 கோடி பரிசு என அறி­வித்து முத­ல­மைச்­சர் கோப்பை விளை­யாட்டு போட்­டி­களை இடைச்செ­ரு­கல் செய்து அர­சி­ய­லுக்­காக அவ­ச­ரக்­க­தி­யில் நடத்­தும் நிலை மாற வேண்­டும். போட்­டி­கள் நடந்த மைதா­ன­மும் இல்லை, ஆசி­ரி­ய­ரும் இல்லை, கட்­ட­மைப்­பில் பெரும் சவால்­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் இளை­ஞர்­கள் மாண­வர்­கள் இடையே விளை­யாட்டு திறனை ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில் அடுத்­த­டுத்து பல அதி­ரடி அறி­விப்­பு­களை தமிழ்­நாடு அரசு வெளி­யிட்டு வந்­தா­லும் தற்­போ­தைய சூழ­லில் அதற்­கான போதிய அடிப்­படை கட்­ட­மைப்­பு­கள் இல்­லா­ததே மிகப்­பெ­ரிய சவா­லாக உள்­ள­தாக உடற்­கல்வி ஆசி­ரி­யர்­கள் வேதனை தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் உள்ள பள்­ளி­க­ளில் பயி­லும் மாண­வர்­கள் மற்­றும் விளை­யாட்டு வீரர்­கள் இடையே விளை­யாட்டு ஆர்­வத்தை ஊக்­கப்­ப­டுத்­த­வும். அவர்­க­ளின் திற­மை­களை வெளிக்­கொ­ண­ர­வும் அரசு பல்­வேறு முன் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. குறிப்­பாக, பள்­ளி­க­ளில் வாரத்­தின் ஐந்து நாட்­க­ளும் உடற்­கல்­விக்கு ஒரு பாட­வேளை ஒதுக்­கப்­ப­டும் என்ற அறி­விப்­பும், ஒலிம்­பிக் உள்­ளிட்ட சர்­வ­தேச அள­வி­லான போட்­டி­க­ளில் வெற்றி பெற்று திரும்­பும் வீரர்­க­ளுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை பரி­சுத்­தொகை வழங்­கப்­ப­டும் என்ற அறி­விப்­பும் கிரா­மப்­புற மற்­றும் ஏழை, எளிய மாண­வர்­க­ளின் விளை­யாட்­டுக் கன­வு­க­ளுக்கு மிகப்­பெ­ரிய நம்­பிக்­கையை அளித்­துள்­ளன. ஆனால், களத்­தில் உள்ள குறை­பா­டு­களை சரி செய்­யா­மல் அரசு இத்­த­கைய அறி­விப்­பு­களை வெளி­யி­டு­வது வெறும் கவர்ச்சி கர­மா­ன­தாக இருக்­குமே தவிர, நடை­மு­றை­யில் பல­ன­ளிக்­காது எனப்­ப­ல­ரும் தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர் மாவட்­டம் மட்­டு­மன்றி தமிழ்­நாடு முழு­வ­தும் ஏரா­ள­மான அரசு பள்­ளி­க­ளில் பயிற்சி மேற்­கொள்­வ­தற்­கான மைதான வச­தி­களே இல்­லாத நிலை நீடிக்­கி­றது. ஏற்­கெ­னவே வாரத்­திற்கு இரண்டு நாட்­கள் உடற்­கல்வி பாட­வேளை இருந்த போதே, போதிய மைதான வச­தி­யும், ஆசி­ரி­யர்­க­ளும் இல்­லாத சூழலே நில­வி­யது. வாரத்­திற்கு மூன்று நாட்­கள் மட்­டுமே பகுதி நேர உடற்­கல்வி ஆசி­ரி­யர்­கள் பணி­யாற்றி வரும் நிலை­யில், தற்­போது வாரத்­தின் ஐந்து நாட்­க­ளும் உடற்­கல்வி பாட­வேளை கொண்­டு­வ­ரப்­பட்­டால் மாண­வர்­க­ளுக்கு யார் பயிற்சி அளிப்­பார்­கள் என்ற கேள்­வி­யும் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல் கழ­கத் தலை­வர், எந்­நா­ளும் எங்­கள் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யின் போது கழக இளை­ஞர் அணி செய­லா­ளர், அன்­றைய விளை­யாட்டு மேம்­பாட்டு துறை அமைச்­சர், இன்­றைய தமிழ்­நாடு சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் ஒவ்­வொரு தொகு­தி­யி­லும் ஒரு மினி விளை­யாட்டு அரங்­கம் அமைப்­ப­தற்­கான முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப் பட்ட நிலை­யில், தற்­போது பல்­வேறு பகு­தி­க­ளி­லும் புதி­தா­கப் பொறுப்­பேற்ற தவெக அர­சால் கால்ப்­பு­ணர்ச்­சி­யின் கார­ண­மாக அந்­தத் திட்­டங்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. இத­னால் பள்ளி மாணவ, மாண­வி­கள் மட்­டு­மன்றி விளை­யாட்டு ஆர்­வ­லர்­க­ளும் முறை­யான பயிற்சி பெற­மு­டி­யாத சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இதன் கார­ண­மா­கவே அர­சின் இந்த அறி­விப்­பு­கள் அம­லா­வ­தும் அதன் மூலம் விளை­யாட்­டுத்­துறை வளர்ச்­சி­ய­டை­யும் என்­ப­தும் சந்­தே­கத் திற்­கு­ரி­ய­தாக இருப்­ப­தாக விளை­யாட்டு ஆர்­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து திருப்­பூரை சேர்ந்த உடற்­கல்வி ஆசி­ரி­யர் கூறு­கை­யில், பள்­ளிக் கல்­வித்­துறை மற்­றும் விளை­யாட்­டுத்­துறை சார்­பி­லான அறி­விப்­பு­கள் வர­வேற்க கூடி­யவை தான். ஆனால், அதற்­கான கட்­ட­மைப்­பை­யும் முத­லில் உரு­வாக்க வேண்­டும். தொடக்க மற்­றும் நடு­நி­லைப் பள்­ளி­க­ளி­லும் உடற்­கல்வி ஆசி­ரி­யர் பணி­யி­டங்­களை உட­ன­டி­யாக உரு­வாக்க வேண்­டும். உடற்­கல்­விப் பாடத்­தைக் கட்­டா­ய­மாக்கி, ஆறா­வது பாட­மா­கச் சேர்ப்­ப­தோடு, அதற்­கு­ரிய பாட­நூல்­க­ளை­யும் மாண­வர்­க­ளுக்கு வழங்க வேண்­டும். மேலும், அரசு பள்­ளி­க­ளில் குறைந்­த­பட்ச பயிற்­சி­க­ளுக்­கான விளை­யாட்டு மைதா­னங்­களை அமைத்­துத் தரு­வது அவ­சி­ய­மா­கும். விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடத்­து­வ­தற்­கான செல்­வி­னத் தொகையை உயர்த்­திக் கொடுப்­ப­தோடு, போட்­டி­க­ளுக்­கான கால அட்­ட­வ­ணை­யைச் சரி­யா­கத் திட்­ட­மிட்டு அமைக்க வேண்­டும். மாதாந்­திர விளை­யாட்­டுப் போட்­டி­களை அந்­தந்­தக் குறு­வட்ட அள­வி­லும், மாவட்ட அள­வி­லும் தொடர்ச்­சி­யாக நடத்த வேண்­டும். அதை விட்­டு­விட்டு பள்­ளிக்­கல்­வித்­துறை மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத்­துறை சார்­பில் வழக்­க­மாக நடத்­தப்­ப­டும் போட்­டி­களை முறை­யாக நடத்­து­வ­தற்கு முன்­பா­கவே, முத­ல­மைச்­சர் கோப்பை விளை­யாட்டு போட்­டி­களை இடைச்­சொ­ரு­கல் செய்து அர­சி­ய­லுக்­காக அவ­ச­ரக்­க­தி­யில் நடத்­தும் நிலை மாற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கள அள­வி­லான இத்­த­கைய அடிப்­படை மாற்­றங்­க­ளைச் செய்­யா­த­வரை, அர­சின் கனவு ஒலிம்­பிக் திட்­டம் வெறும் கன­வாக மட்­டுமே எஞ்­சி­யி­ருக்­கும். அர­சின் உய­ரிய இலக்­கு­கள் வெற்­றி­பெற வேண்­டு­மா­னால், கிரா­மப்­புற மற்­றும் நகர்ப்­புற பள்­ளி­க­ளில் அடி­மட்ட அள­வில் விளை­யாட்­டுக்­கான கட்­ட­மைப்பு வச­தி­கள் உட­ன­டி­யாக மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டும். போதிய உடற்­கல்வி ஆசி­ரி­யர்­க­ளின் நிய­ம­ன­மும் உறுதி செய்­யப்­பட்­டால் மட்­டுமே அர­சின் அறி­விப்­பு­கள் களத்­தில் முழு­வ­து­மாய் செயல்­பாட்­டுக்கு வரு­வ­தோடு, தமிழ்­நாடு மற்ற மாநி­லங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக திக­ழும் என்­கி­றார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>