<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,829" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 20 2026 03:37:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261020T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20102026-CHN-04" position.sequence="04" ex-ref="20102026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">செயற்கை நுண்­ண­றிவு வேலை­வாய்ப்­பைக் குறைக்­குமா? </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">விஞ்­ஞா­னம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தே தீரும்!   </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சென்னை, அக்.20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">செயற்கை நுண்­ண­றிவு வேலை­வாய்ப்­பைக் குறைக்­குமா? என்­றும் விஞ்­ஞா­னம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தே தீரும்! என்­றும் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இது­கு­றித்து திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­க­ளது அறிக்கை வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">உல­கப் புகழ்­பெற்ற இணை­ய­தள வணிக நிறு­வ­ன­மான அமே­சான் தளத்­தின் நிறு­வ­ன­ரான ஜெஃப் பெசோஸ் கடந்த வாரம் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்டி யில், “செயற்கை நுண்­ண­றி­வால் வாரத்­திற்கு மூன்று நாட்­கள் மட்­டுமே வேலை செய்­யும் சூழ­லும், ஒரே ஒரு நபர் மட்­டும் வரு­மா­னம் ஈட்­டும் குடும்ப அமைப்­பு­க­ளும் உரு வாகப்­போ­கின்­றன’’ என்­றும் கூறி­யி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்க ஒன்­றா­கும். இத­னால், வேலை இழப்பு ஏற்­ப­டுமோ என்று எதிர்­ம­றை­யா­கச் சிந்­திக்­கா ­மல், நேர்­ம­றை­யான பார்­வை­யில் அவர் தெரி­வித்­துள்ள கருத்­து­கள் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தவை என்று கரு­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">‘‘சிலர், ‘வாரத்­திற்கு மூன்று நாட்­கள் வேலை செய்­தாலே என் குடும்­பத்­தைக் காப்­பாற்­றி­விட முடி­யும்’ என்று முடி வெடுப்­பார்­கள். குடும்­பத்­தில் இரு­வ­ருமே வேலை செய்ய வேண்­டிய கட்­டா­யம் இருக்­காது. விரும்­பி­னால் வேலை செய்­ய­லாம், இல்­லை­யென்­றால் ஒரு­வர் வேலை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­ள­லாம். பொரு­ளா­தா­ரத்­தில் உற்­பத்­தித்­தி­றன் உயர்­வ­தால், மக்­கள் இரண்டு வேலை­க­ளைச் செய்ய விரும்­ப­ வில்லை என்­றால், அவர்­கள் அவ்­வாறு செய்ய வேண்­டிய அவ­சி­ய­மும் இருக்­காது. எனவே, பணி­யா­ளர்­களை வேலைக்கு அமர்த்­து­வது கடி­ன­மா­கி­வி­டும். பொரு­ளா­தா­ரத்­தில் உற்­பத்­தித்­தி­றன் அதி­க­ரிப்­ப­தன் அர்த்­தம் இது­தான்” என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதா­வது, செயற்கை நுண்­ண­றிவு கார­ண­மாக, வேலை இல்­லாத் திண்­டாட்­டம் ஏற்­ப­டும் என்­ப­தற்கு மாறாக, செயற்கை நுண்­ண­றிவு காலத்­தில் செல்­வ­மும், வளங்­க­ளும் பெரு­கும் என்­ப­தால், தொழி­லா­ளர் பற்­றாக்­குறை ஏற்­பட வாய்ப்­புள்ள தாக­வும் அவர் கூறு­வது பெரும்­பா­லோ­ரு­டைய அச்­சத்­துக்­குப் பதி­லாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">நாம் தான் உரத்­துக் கூறி­னோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">‘‘அறி­வி­ய­லின் வளர்ச்­சி­களை, மனி­த­கு­லம் பயன்­ப­டுத்தி மேம்­பட வேண்­டும் என்­பதே பகுத்­த­றிவு! ஒரு போதும், அத­னைக் கண்டு அஞ்ச வேண்­டி­ய­தில்லை. எத்­த­கைய பிரச்­சி­னை­யை­யும் சந்­தித்து, அதை விஞ்­சும் ஆற்­றல் மனி­த­கு­லத்­துக்கு உண்டு என்­பதை வர­லா­று­தோ­றும் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கடந்த நூற்­றாண்­டில் கணினி பெரு­ம­ளவு புழக்­கத்­துக்கு வந்­த­போது கூட, இது வேலை­வாய்ப்பை இல்­லா­மல் ஆக்கி விடும்; எனவே, கணினி மய­மாக்­கக் கூடாது என்று சிலர் கரு­தி­னர். அப்­போ­தும் கணினி என்­பது அறி­வி­யல் வளர்ச்சி, அதை எதிர்ப்­பது அறி­வற்ற செய­லா­காது; அறி­வி­யலை நாம் வளைத்­துக் கொள்ள வேண்­டுமே தவிர, அதன் வளர்ச்­சி­யைத் தடுக்­க­வி­ய­லாது” என்­ப­தைப் பெரி­யார் கண்­ணாடி அணிந்து நாம் தான் உரத்­துக் கூறி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கணினி வேலை­வாய்ப்­பைப் பெருக்­கி­யதா? வேலை யில்­லாத் திண்­டாட்­டத்தை உரு­வாக்­கி­யதா என்று அதன் பிறகு உல­கம் உணர்ந்­தது. கணினி அறி­வி­ய­லின் வளர்ச்சி பெரும் புரட்­சி­யையே மனித குலத்­தில் தோற்­று­வித்­தது. குறிப்­பாக தமிழ்­நாட்­டில்,  பார்ப்­ப­ன­ரல்­லாத, பிற்­ப­டுத்­தப்­பட்ட, தாழ்த்­தப்­பட்ட சமூ­கங்­க­ளைச் சார்ந்த பிள்­ளை­கள் உல­கம் முழுக்க வெற்­றிக் கொடி நாட்­டு­வ­தற்கு கணினி, தக­வல் தொழில்­நுட்ப வளர்ச்­சியை நாம் பற்­றிக் கொண்­டதே பெரும் கார­ண­மா­யிற்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இன்­றைய செயற்கை நுண்­ண­றிவு குறித்த அச்­ச­மும் அத்­த­கை­யதே! தொடக்­கத்­தில் இத­னால் சில இடை­யூ­று­கள் இருக்­க­லாம். வேலைக் குறைப்­பு­க­ளும் கூட நடக்­க­லாம். அவற்றை நம்­மால் தடுக்க முடி­யாது. ஆனால், மனித குலத்­தின் வளர்ச்­சிக்­கும், மேன்­மைக்­கும் இத­னையே நாம் வாய்ப்­பா­கக் கருத வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">“இனி வரும் உல­கம்!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இயந்­தி­ரங்­கள் பெரு­கிய காலத்­தில், இதே போல வேலைக் குறைவு என்ற பிரச்­சினை எழுமோ என்று எல்­லோ­ரும் அஞ்சி னார்­கள். பகுத்­த­றி­வுப் பக­ல­வ­னும், காலத்­தைக் கடந்து சிந்­திப்­ப­வ­ரு­மான நமது அறிவு ஆசான் தலை­வர் தந்தை பெரி­யார் அவர்­கள்,  83 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தமது “இனி வரும் உல­கம்” நூலில் இத­னைக் குறித்­துத் தெரி­வித்­துள்ள கருத்­து­கள், இன்­றும், நாளை­யும் மனித குலத்­துக்கு உரி­யது என்­பதை இந்­தச் சூழ­லில் நம்­மால் பொருத்­திப் பார்க்க முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இதோ நம் அறிவு ஆசான் பேசு­கி­றார்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">“...நுட்­ப­மான இயந்­தி­ரங்­கள் இப்­போதே கண்டு பிடிக்­கப்­பட்­டி ­ருக்­கும் போது, இனி வருங்­கால இயந்­திர உல­கம் எப்­படி இருக்­கும் என்­பதை விளக்­க­வும் வேண்­டுமா! இம்­மா­தி­ரி­யா­கவே வாழ்­வுக்கு வேண்­டிய எல்­லாத் தேவைத் துறை­க­ளி­லும் இயந்­திர சாத­னங்­கள் பெரு­கும்­போது நாட்டு மக்­க­ளில் ஒவ்­வொ­ரு­வ­ரும் வரு­ஷத்­திற்கு இரண்டு வாரம் வேலை செய்­வ­த­னா­லேயே மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான எல்­லாத் தேவை­க­ளும் பூர்த்­தி­யா­கி­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">வேலை இல்­லா­மற் போகாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆகவே, ஓர் ஆண்­டில் மீதி­யுள்ள 50 வாரங்­க­ளும் மக்­க­ளைச் சும்மா, சோம்­பே­றி­க­ளாய் இருக்க செய்­யுமே என்று யாரும் பயப்­பட வேண்­டி­ய­தில்லை. வாழ்க்­கைச் சாத­னங்­க­ளுக்கு எப்­ப­டிக் கால­மும், யோச­னை­யும், கண்­டு­பி­டிப்­பு­க­ளும் தேவை இருக்­கி­றதோ அது­போ­லவே மக்­க­ளின் ஓய்­வுக்­கும், உடற்­ப­யிற்­சிக்­கும், மகிழ்ச்­சிக்­கும், போக போக்­கி­யத்­துக்­கும் யோச­னை­க­ளும், ஆராய்ச்­சி­க­ளும், சாத­னங்­க­ளும், அவற்­றைச் சுல­ப­மா­கச் செய்ய வச­தி­கள் கண்­டு­பி­டிப்­ப­தும், அவை நாளுக்கு நாள் மாற்­ற­ம­டை­வ­தும் ஆகிய காரி­யங்­க­ளில் மீதி நாள்­கள் செல­வ­ழிக்­கப்­ப­ட­வேண்டி இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அக்­கால நிலை நாம் வரை­ய­றுக்க முடி­யாத அற்­பு­தங்க ளையும், அதி­ச­யங்­க­ளை­யும் கொண்­டி­ருக்­கு­மென்று சொல்­லு­வது, மிகை­ப­டச் சொன்­ன­தாக ஆகாது. ஆத­லால் மக்­கள் குறிப்­பாக, அறி­வா­ளி­கள், சிந்­த­னை­யா­ளர்­கள், முற்­போக்­கில் கவலை உள்­ள­வர்­கள் ஆகி­ய­வர்­க­ளுக்கு இவற்­றின்­மூ­லம் சதா வேலை இருந்­து­கொண்டே இருக்­கும். அப்­ப­டிப்­பட்ட வேலை­கள் இன்று உள்­ள­து­போல் கூலிக்கு வேலை செய்­வது போலவோ, இலா­பத்­துக்கு வேலை செய்­வது போலவோ இல்­லா­மல் உற்­சா­கத்­துக்­கா­க­வும், போட்­டிப் பந்­தய உணர்ச்சி போன்ற தூண்­டு ­த­லுக்­கா­க­வும் ஊக்­கத்­து­டன் வேலை செய்­வ­தாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கும் ஒவ்­வொரு குழந்­தை­க­ளுக்­கும் தனது வாழ்­நா­ளில் தன்னை என்ன காரி­யத்­தைச் செய்து முடித்து உல­குக்­குப் பயன்­ப­டச் செய்­து­கொள்­ளு­வது என்ற கருத்தே வள­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">சோம்­பே­றி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இப்­ப­டி­யா­னால் சோம்­பே­றி­கள் வளர்ந்து விட மாட்­டார்­களா என்று கேட்­க­லாம். இப்­ப­டிப்­பட்ட காலத்­தில் சோம்­பே­றி­கள் இருக்க முடி­யாது; இருப்­பார்­கள் என்றே வைத்­துக்­கொண்­டா­லும், இவர்­க­ளால் சமூ­கத்­துக்­குத் தேவை­யான எந்த வேலை­யும் குறைந்து போகாது. அத­னால் ஒரு கெடு­தி­யும் ஏற்­பட்­டு­வி­டாது. ஆத­லால் அப்­ப­டிப்­பட்ட இவர்­கள் வேலை­யில் ஈடு­ப­டு­வ­தை­விட சும்மா இருந்து சாப்­பி­டு­வது அவர்­க­ளுக்கே கஷ்­ட­மா­யி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">பொது­வாக அந்­தக் காலத்­தில் மனி­தர்­கள் உண்மை யிலேயே தங்­க­ளுக்கு “வேலை செய்ய சந்­தர்ப்­பம் கிடைக்­க­வில்­லையே, வீணாக நேரம் கழி­கி­றதே” என்று வேலைக்­குப் போரா­டிக் கொண்டு இருப்­பார்­கள். அப்­ப­டிப்­பட்ட மக்­க­ளுக்கு இச்­சோம்­பே­றி­க­ளால் அனு­கூ­லம் ஏற்­ப­டுமே தவிர, கவலை இருக்­காது. எல்லா மக்­க­ளுக்­கும் அவர்­கள் ஆசை தீர வேலை கொடுக்க முடி­யாத கால­மாக இருக்­குமே ஒழிய அந்­தக் காலம் வேலைக்கு ஆள் தேட வேண்­டி­ய­தா­கவோ, அவன் வேலை செய்­ய­வில்லை இவன் வேலை செய்­ய­வில்லை என்று கரு­து­வ­தா­கவோ, குறை கூறு­வ­தா­கவோ இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">“இழி­வான” வேலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">“இழி­வான” வேலை­க­ளுக்கு ஆள் கிடைக்­குமா? என்ற கேள்வி பிறக்­க­லாம். இழி­வான வேலை என்­பது வருங்­கா­லத்­தில் இருக்க முடி­யாது. சரீ­ரத்­தால் செய்­யப்­பட வேண்­டிய எல்­லாக் காரி­யங்­க­ளும் அநே­க­மாக இயந்­தி­ரங்­க­ளா­லேயே செய்­யும் படி­யாக ஏற்­பட்­டு­வி­டும். கக்­கூஸ் எடுக்க வேண்­டி­ய­தும், துலக்க வேண்­டி­ய­தும், வீதி கூட்ட வேண்­டி­ய­தும் கூட இயந்­தி­ரத்­தி­னா­லேயே செய்து முடித்­து­வி­டும்... மனி­த­னுக்கு பாரம் எடுக்­க­வேண்­டி­யதோ, இழுக்க வேண்­டி­யதோ ஆன காரி­யங்­கள் இருக்­கவே இருக்­காது. அக்­கா­லத்­தில் கவு­ர­வம் வேண்­டும் என்­ப­வர்­கள் பொது­ஜன நன்மை சவு­க­ரி­யம் ஆகி­ய­வை­க­ளைச் செய்ய வேண்டி இருக்­கும் என்­ப­தோடு, அதில் ஏற்­ப­டும் போட்­டி­யி­னால் “இழி­வான” வேலைக்கு எப்­போ­தும் கிராக்கி இருந்து கொண்டே இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">கவி­க­ளும், இதர சித்­தி­ரக்­கா­ரர்­க ­ளும், நாவ­லர்­க­ளும், சிற்­பி­க­ளும் போட்டி போட்­டுக்­கொண்டு புதிய உலகை (தோற்­றத்தை) உண்­டாக்­கு­ப­வர்­க­ளா­கவே இருப்­பார்­கள். திற­மை­யா­ன­வர்­க­ளுக்­குத் தான் வேலை­யும், மதிப்­பும் கிடைக்­கும்; மற்­ற­வர் கள் அலட்­சி­யப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.3">தந்தை பெரி­யா­ரின் முன்­னோக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆம், உண்மை தான் தோழர்­களே, நம்­புங்­கள்! 1943 ஆம் ஆண்டு தந்தை பெரி­யார் பேசிய உரை­தான் இது! இன்­றைய சூழ­லுக்­கும் அச்சு அச­லாய் எப்­ப­டிப் பொருந்­திப் போகி­றது பாருங்­கள். அன்று தந்தை பெரி­யார் சொன்­ன­தைத்­தான், இன்று புகழ் பெற்ற அறி­வி­ய­லா­ளர்­க­ளும், செயற்கை நுண்­ண­றிவு விற்­பன்­னர் களும் கூறு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">செயற்கை நுண்­ண­றி­வின் வளர்ச்­சிக் கார­ண­மாக மனி­தர்­க­ளுக்கு வேலை­யில்­லா­விட்­டால் என்ன ஆவார்­கள் என்­பது குறித்து ஓராண்­டுக்கு முன்பு, ‘‘மக்­க­ளுக்கு அதி­கச் செழிப்­பும், அதிக நேர­மும், வளங்­க­ளும், ஆற்­ற­லும், திற­னும் இருக்­கும் இந்த உல­கில், குடும்­ப­மும், சமூ­க­மும்­தான் நம்மை மிக­வும் மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்­கின்­றன என்­பது மிகத் தெளி­வா­கத் தெரி­கி­றது. நாம் மீண்­டும் அத­னி­டம் திரும்­பு­வோம் என்று நம்­பு­கி­றேன்’’ என்று புகழ்­பெற்ற ‘ஓபன் ஏஅய்’ செயற்கை நுண்­ண­றிவு நிறு­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­கா­ரி­யான சாம் ஆல்ட்­மென் தெரி­வித்­தி­ருந்­தார். தற்­போ­தைய ஜெப் பெசோ­சின் (அமே­சான்) கருத்­தும் இதையே உறுதி செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">‘தவிர்க்க முடி­யா­ததை ஏற்­பதே பகுத்­த­றிவு’ என்று பல நேரங்­க­ளில் தந்தை பெரி­யா­ரின் சிந்­த­னையை நாம் சுட்­டிக்­காட்­டு­வது உண்டு. அறி­வி­ய­லின் வளர்ச்­சி­யும் அப்­ப­டித்­தான்! அதனை ஏற்­றுக் கொண்டு, அத­னைப் படிக்­கல்­லாக்கி வளர்­வதே மனித குலத்­தின் சிறப்பு. இந்த உண்­மை­யைத் தனது பகுத்­த­றி­வால் உணர்ந்தே தந்தை பெரி­யார் ‘இனி வரும் உல­கம்’ நூலில் மிக விளக்­க­மாக இப் பகு­தி­யைக் குறித்­துப் பேசி­யுள்­ளார். பெரி­யா­ரின் மண்­டைச்சுரப்பு இன்­னும் பல நூற்­றாண்­டு 
­க­ளுக்கு மனித குலத்­துக்கு வழி­காட்­டும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எண்ணி எண்ணி வியக்­கி­றோம். அவ­ரின் பட்­ட­றி­வும், பகுத்­த­றி­வும், ஒப்­பு­யர்­வற்ற சுய­சிந்­த­னை­யும் எத்­த­கை­யவை என்­ப­தற்கு இதை­விட வேறென்ன சான்று பகர? அவ­ரின் மண்­டைச் சுரப்பு இன்­னும் பல நூற்­றாண்­டு­க­ளுக்கு மனித குலத்­துக்கு வழி­காட்­டும் என்­பது நொடி­தோ­றும் நிறு­வப்­பட்­டுக் கொண்டே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதை உல­கெங்­கும் கொண்டு செல்­வ­தற்­கான பாதை யைத்­தான் நாம் உரு­வாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம். “பெரி­யார் உலக மயம்; உல­கம் பெரி­யார் மயம்” என்­பது பெரி­யா­ருக்­காக அல்ல; நமக்­காக அல்ல! மனி­த­கு­லத்­தின் மேன்­மைக்­காக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>