<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,609,894" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 00:44:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261021T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="21102026-CBE-07" position.sequence="07" ex-ref="21102026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">மோசமான நீர் மேலாண்மை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">வானம் பார்த்த பூமியான காவிரி டெல்டா!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup931894_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ல் நூற்­றாண்டு காலத்­தில் இது போன்ற ஒரு நிலை­மையை காவிரி டெல்­டா­வில் வாழும் தலை­முறை பார்த்­த­தே­யில்லை. கடந்த 5 ஆண்­டு­க­ளில் சாதனை அள­வி­லான நெல் அறு­வ­டை­யைக் கண்ட டெல்டா மாவட்­டங்­கள் இந்த ஆண்டு வானம் பார்த்த பூமி போல வறண்டு கிடக்­கின்­றன. வட­கி­ழக்­குப் பருவ மழை முறை­யா­க­வும், சரி­யா­க­வும் பெய்­தால் மட்­டுமே சம்பா மற்­றும் தாளடி பருவ நெற்­ப­யிர்­கள் விளை­யும். குறு­வைப் பயிர் ஏற்­க­னவே கைவி­ரித்­து­விட்­டது என்று வேத­னை­யு­டன் சொல்­கி­றார்­கள் டெல்டா விவ­சா­யி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆண்­டு­தோ­றும் ஜூன் 12ஆம் நாள் டெல்­டா­வின் குறுவை சாகு­ப­டிக்­காக மேட்­டூர் அணை­யைத் திறப்­பது வழக்­கம். கடந்த 5 ஆண்­டு­கால திரா­விட மாடல் ஆட்­சி­யில், உரிய நேரத்­தில் மேட்­டூர் அணை திறக்­கப்­பட்­டது. அதற்கு முன்­பா­கவே, ஆறு­க­ளும் வாய்க்­கால்­க­ளும் தூர்­வா­ரப்­பட்­ட­தால், மேட்­டூ­ரி­லி­ருந்து கல்­ல­ணைக்கு வரும் காவிரி நீர் தஞ்சை மாவட்­டத்­தில் தொடங்கி, டெல்­டா­வின் கடை­ம­டைப் பகு­தி­யான புதுச்­சே­ரி­யின் காரைக்­கால் மாவட்­டம் வரை ஓடி­யது. வயல்­வெ­ளி­கள் செழித்­தன. மேட்­டூர் அணைத் திறப்பு முதல் நெல் அறு­வடை வரை ஒவ்­வொன்­றி­லும் தனிக்­க­வ­னம் செலுத்­தி­னார் டெல்டா மாவட்­டத்­துக்­கா­ர­ரான கழ­கத் தலை­வர்-­தி­ரா­விட நாய­கர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அடுத்த பிற­வி­யில் விவ­சா­யி­யா­கப் பிறக்க ஆசைப்­ப­டு­கி­றேன் என்று தஞ்­சை­யில் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் உள­றிய த.வெ.க தலை­வர் விஜய் தலை­மை­யில் ஆட்சி அமைந்­த­பி­றகு, நீர்­மே­லாண்மை என்­பதே சீர­ழிந்து கிடக்­கி­றது. ஜூன் மாதம் திறக்­கப்­ப­ட­ வேண்­டிய மேட்­டூர் அணை ஜூலை, ஆகஸ்ட் என ஏறத்­தாழ 80 நாட்­கள் கடந்து செப்­டம்­பர் 1ஆம் நாள் திறக்­கப்­பட்­டது. விஜய்­யின் வரு­கைக்­காக சாலை­யோ­ரத் தடுப்­பு­கள் மற்­றும் அலங்­கா­ரங்­க­ளுக்­காக 5 கோடி ரூபாய் அர­சாங்­கப் பணம் செல­வ­ழிக்­கப்­பட்­டது. அணை­யைத் திறந்து வைத்த விஜய், வழி­யில் ஒரு கிரா­மத்­தில் உள்ள குடி­சைக் ­குள் புகுந்து, மூதாட்டி ஒரு­வ­ருக்கு கூலிங்­கி­ளாஸ் மாட்­டி­விட்­டார் என ஊட­கங்­கள் புள­காங்­கி­தம் அடைந்­தன. எல்­லாம் சரி! மேட்­டூர் தண்­ணீர் காவிரி டெல்­டா­வில் பாய்ந்­ததா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காவி­ரி­யி­லும் கிளை ஆறு­க­ளி­லும் ஓடி­வ­ரும் தண்­ணீர், வாய்க்­கால்­கள் வழியே வய­லுக்­குப் பாய்ந்­தால்­தான் விவ­சா­யம் செய்ய முடி­யும்.  “விநா­டிக்கு 20ஆயி­ரம் கன­அடி தண்­ணீரை மேட்­டூர் அணை­யி­லி­ருந்து விடு­விச்­சா­தான் வாய்க்­கா­லி­லும் வய­லி­லும் தண்­ணீர் வரும். ஆனால், 15ஆயி­ரம் கன அடிக்­கும் குறை­வாத்­தான் திறக்­கு­றாங்க. பாசன வாய்க்­கால்­க­ளில் போது­மான அளவு தண்­ணீரே இல்­லீங்க. அப்­பு­றம் எப்­படி வய­லுக்கு தண்ணி பாய்ச்ச முடி­யும்? எப்­படி பயிர் பண்ண முடி­யும்?” எனக் கேட்­கி­றார்­கள் திரு­வா­ரூர் மாவட்ட விவ­சா­யி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அதி­க­ள­வில் பெய்­யும் தென்­மேற்கு பரு­வ­மழை இந்த ஆண்டு போது­மான அள­வில் இல்லை என்­ப­தால், கர்­நா­டக அணை­க­ளில் தண்­ணீர் இல்லை என்று அந்த மாநில அரசு கைவி­ரித்­து­விட்­டது. இது­போன்ற தண்­ணீர்த் தட்­டுப்­பாடு நில­வும் காலங்­க­ளில், முறைப்­பா­ச­னம் என்ற முறை­யில், ஆறு­க­ளை­யும் பாசன வாய்க்­கால்­க­ளை­யும் தேர்ந்­தெ­டுத்து இரண்டு மூன்று நாட்­கள் என்ற கால இடை­வெ­ளி­யில் சீரா­கத் தண்­ணீர் பாய்­வ­தற்கு அர­சாங்­கம் வழி செய்­யும். அந்த நீர்­மே­லாண்மை என்­பது த.வெ.க ஆட்­சி­யில் சீர­ழிந்­து­விட்­டது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">காவி­ரி­யில் தமிழ்­நாட்­டின் உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தி­லும் த.வெ.க அர­சுக்கு அக்­க­றை­யே­யில்லை. விஜய் கர்­நா­ட­கா­வுக்­குப் போனார். கொல்­லூர் 
மூகாம்­பிகை கோயி­லில் வழி­பட்­டார். ஆனால், கர்­நா­ட­கத்­தில் ஆட்சி செய்­யும் தனது கூட்­ட­ணிக் கட்­சி­யான காங்­கி­ரஸ் அர­சி­டம் தமிழ்­நாட்­டின் உரிமை குறித்து வலி­யு­றுத்­த­வில்லை. காவிரி மேலாண்மை வாரி­யம், காவிரி ஒழுங்­காற்று ஆணை­யம், உச்­ச­நீ­தி­மன்­றம் ஆகி­ய­வற்­றி­லும் தமிழ்­நாட்­டின் உரி­மையை நிலை­நாட்­டி­டும் வலிமை த.வெ.க அர­சுக்கு இல்லை. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காவி­ரி­யில் தமிழ்­நாட்­டின் உரி­மைக்­காக அமைக்­கப்­பட்­ட­து­தான் நடு­வர் மன்­றம். அதனை அமைப்­ப­தில் முனைப்­பாக இருந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். தி.மு.க பங்­கேற்­றி­ருந்த தேசிய முன்­னணி ஆட்­சி­யில்­தான் உச்­ச­நீ­தி­மன்ற உத்­த­ர­வுப்­படி நடு­வர் மன்­றத்தை அமைத்­தார் அப்­போ­தைய பிர­த­மர் வி.பி.சிங் அவர்­கள். நடு­வர் மன்­றம் இடைக்­கா­லத் தீர்ப்­பை­யும், இறு­தித் தீர்ப்­பை­யும் வழங்­கி­யது. இறு­தித் தீர்ப்பு வெளி­யா­ன­போ­தும் கலை­ஞர்­தான் முத­ல­மைச்­ச­ராக இருந்­தார். முழு­மை­யான உரி­மைக்­கா­கத் தொடர்ந்து வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­ட­தன் விளை­வா­கத்­தான் காவி­ரி­யில் தமிழ்­நாட்­டின் உரிமை நிலை­நாட்­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு போரா­டிப் பெற்ற உரி­மையை மாற்­றம் செய்ய வேண்­டும் என கர்­நா­ட­கம் அண்­மை­யில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது. சர்­வ­தேச ஆற்று நீர் ஒப்­பந்­தங்­களை காலச்­சூ­ழ­லுக்­கேற்ப மறு­ப­ரி­சீ­லனை செய்­யும் வாய்ப்­புள்­ள­தா­க­வும், 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர்தொடர்­பாக இந்­தி­யா­வுக்­கும் பாகிஸ்­தா­னுக்­கும் இடை­யில்போடப்­பட்ட ஒப்­பந்­தம், காஷ்­மீ­ரின் பெஹல்­கா­மில் தீவி­ர­வா­தி­கள் நடத்­திய கொடூ­ரத் தாக்­கு­த­லைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்­டில் கைவி­டப்­பட்­டது என்­ப­தை­யும், இப்­போது சிந்து நதி நீரை பாகிஸ்­தா­னுக்கு இந்­தியா தரு­வ­தில்லை என்­றும் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் சுட்­டிக்­காட்டி, “சூழ்­நிலை மாற்­றத்­தைக் கருத்­தில் கொண்டு காவிரி ஒப்­பந்­தத்­தை­யும் மாற்­றம் செய்ய வேண்­டும்” என்று கர்­நா­டக அரசு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் உயிர் ஆதா­ர­மான காவிரி நீரில், கீழ் ஆயக்­கட்டு மாநி­ல­மான தமிழ்­நாட்­டிற்­குக் கிடைக்க வேண்­டிய உரி­மையை மறுப்­ப­து­டன், தமிழ்­நாட்டை பாகிஸ்­தா­னு­டன் ஒப்­பிட்டு வாதா­டி­யி­ருக்­கி­றது கர்­நா­டக காங்­கி­ரஸ் அரசு. தமிழ்­நாட்டை ஆளும் விஜய் அரசு, காவி­ரி­யில் தமிழ்­நாட்­டின் உரி­மையை நிலை­நாட்­டும் அக்­க­றை­யில்­லா­ம­லும், கர்­நா­டக காங்­கி­ரஸ் அர­சின் நிலைப்­பாட்­டைக் கண்­டிக்­கா­ம­லும் வாய் மூடிக் கிடக்­கி­றது. டெல்டா மாவட்­டங்­கள் வறண்டு, வானம் பார்த்­துக் கிடக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தண்­ணீர் இல்­லாத கார­ணத்­தால், நேரடி நெல் விதைப்பு செய்­யும் நிலைக்கு டெல்டா விவ­சா­யி­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். அதா­வது, வழக்­க­மாக நாற்­றங்­கா­லில்­தான் நெல் விதைப்­பார்­கள், ஒரு ஹெக்­டேர் வயல் என்­றால் அதில் ஏறத்­தாழ 20 சென்ட்  நிலம் நாற்­றங்­கா­லுக்­குத் தேவைப்­ப­டும். நெல் ரகத்­தைப் பொறுத்து, நாற்­று­கள் வள­ரும். அதற்­கேற்ப தண்­ணீர் தேவைப்­ப­டும். நாற்­றங்­கா­லில் தண்­ணீர் அதி­க­மாக இருக்க வேண்­டிய நாட்­க­ளும் உண்டு. தண்­ணீ­ரைக் குறைக்க வேண்­டிய நாட்­க­ளும் உண்டு. சரி­யான முறை­யில் நீர் மேலாண்மை இருந்­தால்­தான், நாற்­றாங்­கா­லில் நெல் விதைத்து, குறிப்­பிட்ட நாட்­க­ளுக்­குப் பிறகு, நாற்­று­க­ளைப் பறித்து, வய­லில் நட முடி­யும். அதன்­பி­றகே நெற்­ப­யிர் வளர்ந்து, அறு­வ­டைக்­குத் தயா­ரா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நேரடி நெல் விதைப்பு என்­பது மிக மோச­மான தண்­ணீர்ப்பற்­றாக்­குறை காலத்­தில் மட்­டுமே டெல்டா மாவட்­டங்­க­ளில் மேற்­கொள்­ளப்­ப­டும். 33 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு டெல்டா மிக மோச­மான நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. 1993ஆம் ஆண்டு ஜெய­ல­லி­தா­வின் ஆட்சி நடந்­த­போது, ஜெ.ஜெ.92 என்ற நெல்­ர­கம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. ஜெய­ல­லி­தா­வின் பெய­ரைக் குறிக்­கும் வகை­யில் இந்­தப்பெயர் வைக்­கப்­பட்­டது. இந்த நெல்­ர­கம் நல்ல விளைச்­சல்தரும் என்­றும், அரிசி பொங்­கி­னால் மல்­லி­கைப் பூ போல இருக்­கும் என்­றெல்­லாம் அதி­கா­ரி­கள் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">“பேரு வச்­சியே, சோறு வச்­சியா?” என்­பது போல நெல்­ர­கத்­துக்கு ஜெ.ஜெ.92 என்று ஜெய­ல­லி­தா­வின் பெயரை வைத்­தது அப்­போ­தைய அ.தி.மு.க. அரசு. ஆனால்,   பரு­வ­ம­ழை­யும் இல்லை. அணை­யி­லும் தண்­ணீர் இல்லை. வயல்­கள் காய்ந்து கிடந்­த­தால் நாற்று விட முடி­ய­வில்லை. நேர­டி­யாக நெல் விதைக்­கும் முறையை ஜெய­ல­லிதா அர­சாங்­கம் வலி­யு­றுத்­தி­யது. டெல்டா மாவட்ட விவ­சா­யி­கள் வேறு வழி­யின்றி, நேரடி நெல் விதைப்பை மேற்­கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று. விளைச்­சல் சரி­யாக இல்லை. பயிர் எது? களை எது? என்று தெரி­யாத வகை­யில் புல்­லும் களை­யும் நெல்­லு­டன் சேர்ந்து வளர்ந்­தன. அறு­வ­டை­யும் மோச­மாக இருந்­தது. அப்­போ­தைய ஜெய­ல­லிதா ஆட்­சிக்­குப் பிறகு, இப்­போ­தைய விஜய் ஆட்­சி­யில்­தான் காவிரி டெல்டா விவ­சா­யி­கள் நேரடி நெல் விதைப்­புக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வட­கி­ழக்­குப் பருவ மழை தொடங்­கி­யுள்ள நிலை­யில், அதன் தாக்­கம் எப்­படி இருக்­கும் என்­ப­தும், எல்-­நினோ எனும் பரு­வ­நிலை மாற்­றத்­தால் அதி­க­ரிக்­கும் வெப்­பம் டெல்டா நெற்­ப­யிரை என்ன செய்­யும் என்­றும் தெரி­யா­மல் தவிக்­கி­றார்­கள் விவ­சா­யி­கள். “பேஞ்சு கெடுக்­கும். இல்­லேன்னா காஞ்சு கெடுக்­கும்” என்று டெல்­டா­கா­ரர்­கள் சொல்­வது வழக்­கம். மழை அதி­க­மா­கப் பெய்­தால் 10 இலட்­சம் ஏக்­க­ரில் உள்ள குறு­வைப் பயிர் மூழ்­கா­மல் காப்­பாற்­றப் பட­வேண்­டும். மழை போது­மான அள­வில் பெய்­யா­விட்­டா­லும் பாதிப்­பு­தான். நேரடி நெல்­வி­தைப்பு செய்­யப்­ப­டும் சம்பா பயிர்­கள் நிலை இன்­னும் மோசம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இயற்கை கொடுத்­தா­லும், கெடுத்­தா­லும் அதை டெல்டா விவ­சா­யி­கள் எதிர்­கொண்டு விடு­வார்­கள். வாழ்வோ சாவோ தங்­கள் நிலத்தை விட்­டுப் போக மாட்­டார்­கள். அர­சாங்­கம் கைக்­கொ­டுக்­கும் என்­ப­து­தான் அவர்­க­ளின் கடைசி நம்­பிக்கை. த.வெ.க. ஆட்­சி­யில் அந்த நம்­பிக்­கை­யை­யும் இழந்து வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வறட்சி நிவா­ர­ணத்தை அரசு வழங்­கி­னால் மட்­டுமே விவ­சா­யி­க­ளால் இழப்பை ஓர­ள­வே­னும் எதிர்­கொள்ள முடி­யும். த.வெ.க அரசோ, குறு­வைப் பயிர் இழப்­புக்­கா­ன காப்­பீட்­டுத் தொகை­யையே இன்­னும் சரி­யாக வழங்­காத நிலை­யில், சம்பா பயி­ரைக் காப்­பாற்ற என்ன செய்­வது என்று தெரி­யா­மல் விவ­சா­யி­கள் தவிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு காலத்­தில் வானம் பார்த்த பூமி­யாக இருந்த மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மக்­கள், காவிரி டெல்­டா­வுக்கு வந்து தங்­கள் வாழ்க்­கையை அமைத்­துக் கொண்­டார்­கள். இப்­போது, காவிரி டெல்­டாவே வானம் பார்த்த பூமி­போல ஆகி­விட்­டது. வய­லில் தண்­ணீர் இல்­லா­த­தால், உழ­வ­னின் கண்­ணீர் பெருக்­கெ­டுக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>