<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,492,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 21 2026 03:41:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261021T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="21102026-CHN-08" position.sequence="08" ex-ref="21102026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.972971206108">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">ஒரு கோமாளி நடிகர், அரசியல் நாடகம் ஆடுகிறார்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup964704_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘ஆ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">யுத பூஜையை அரசு அலு­வ­ல­கங்­கள் எளி­மை­யா­கக் கொண்­டா­ட­லாம்’ என அர­சின் மத சார்­பின்­மைக்கு 
எதி­ராக ஓர் அர­சாணை போட்­டி­ருக்­கி­றது ஜோசப் விஜய் அரசு. அதன்­ப­டியே சரஸ்­வதி பூஜை எனும் இந்­துப் பண்­டி­கை­யைக் கொண்­டாட அரசு அலு­வ­ல­கங்­க­ளில் கத­வைத் திறந்­து­விட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது இந்­திய அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் கூறும் மதச் சார்­பின்­மைக் கொள்­கைக்கு எதி­ரா­னது; மக்­க­ளின் அரசு நிர்­வா­கத்­தில் அனைத்து மதத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளும் வந்து செல்­வ­தற்­கும், உத­வி­கள் செய்­வ­தற்­கும், பெறு­வ­தற்­கு­மான ஒரு பொது அலு­வ­லக நிரு­வாக இடத்­தில்; தனிப்­பட்ட முறை­யில் ஒரு மதத்­திற்­கான பண்­டி­கை­யைக் கொண்­டாட இடம் அளிப்­பது என்­பது, மற்ற மதத்­தி­ன­ரி­டையே மனத்­தைப் புண்­ப­டுத்­து­வ­தோடு மட்­டு­மல்­லாது, தேவை­யற்ற வெறுப்­புணர்வை உரு­வாக்­கு­வ­தா­கும். இது­வ­ரைப் பின்­பற்றி வந்த மதச்­சார்­பின்­மைக் கொள்­கையை அரசே துணை நின்று  தூண்­டு­கோ­லா­கிப்  புதைக்­கு­ழிக்­குள் வாழ்த்தி  அனுப்­பும் “இந்­துத்­துவா” அர­சா­ணை­யா­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அப்­ப­டி­யெ­னில், இஸ்­லா­மி­யர்­க­ளின் ரம்­ஜான், பக்­ரீத் போன்­ற­வை­யும்; கிறிஸ்­து­வர்­கள் கொண்­டா­டும் கிறிஸ்­து­ மஸ், ஈஸ்­டர், பெரிய வெள்ளி, குருத்­தோலை போன்­ற­வை­யும்; சீக்­கி­யர்­க­ளின் குரு பூரப், குரு நானக் ஜெயந்தி, வைசாகி போன்­ற­வை­யும், புத்­த­ம­தப் பண்­டி­கை­க­ளான புத்த பூர்­ணிமா/ வெசாக், மகா பூஜா, பரி­பூ­ரண நாள் போன்­ற­வை­யும், மற்­றும் சமண மத பண்­டி­கை­க­ளான மகா­வீர் ஜெயந்தி, சமண தீபா­வளி, அட்­சய திதி போன்­றவை இன்­னும் பிற மதத்­த­வர் பண்­டி­கை­க­ளைத் தமிழ்­நாடு அரசு உத்­த­ரவு பிறப்­பித்­துத் தனது துறை சார்ந்த அலு­வ­ல­கங்­களில் கொண்­டாட ஏற்­பாடு செய்­யுமா? என்ற கேள்வி எழாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜோசப் விஜய் ஆட்­சிக்கு வந்­த­தும் வரா­த­து­மாக அவ­ரு­டன் உலா வந்­த­வ­ரும், வாக­னங்­க­ளில் சவாரி செய்­த­வ­ரு­மான குடும்­பச் சோதி­டர் இரத்­தன் பண்­டிட் (ராதன் பண்­டிட் வெற்­றி­வேல்/ரிக்கி) என்­ப­வரை அரசு ஆலோ­ச­க­ரா­கச் (சிறப்­புப் பணி அதி­காரி- ஓ.எஸ்.டி) நிய­மித்­தார். தி.மு.க. தலை­வர்  தள­பதி மு.க. ஸ்டாலின், எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் மற்­றும் எதிர்க்­கட்­சி­கள் கடும் கண்­ட­னம்  தெரி­வித்­த­வு­டன் அந்த உத்­த­ரவை அவர் திரும்­பப் பெற்­றார். அதன் பிறகு அவர் டெல்லி நிதி ஆயோக் கூட்­டத்­திற்குசென்று விட்டு கர்­நா­டகஉடுப்பி மாவட்­டத்­தில் உள்ள கொல்­லூர் ஸ்ரீ மூகாம்­பிகை கோயில்  சென்று வழி­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைப்­போல அண்­மை­யில் ஆந்­தி­ரா­வில் தெலுங்கு கங்கை கிருஷ் ணாநதி நீர் பங்­கீடு மற்­றும் கோதா­வரி- காவிரி இணைப்­புத் திட்­டம் என அம் மாநில முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயு­டு­வு­டன்  பேச்­சு­வார்த்தை என்று கூறிச் சந்­திக்­கச் சென்­ற­தாக நாட­கம் ஆடி­னார். அப்­போது ஆந்­திர “கனக துர்கா கோயில்” சென்று வழி­பாடு நடத்தி விட்டு திரும்­பி­னார். மதுரை மீனாட்சி 
அம்­மன் கோயி­லுக்­கும் சென்று பூர­ணக் கும்ப மரி­யா­தையை ஏற்­றுக் கொள்­கி­றார். அவ­ரு­டைய தனிப்­பட்ட ஆன்­மீக நம்­பிக்­கையை நாம் யாரும் குறை சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், ஓர் அர­சின் மாநில முத­ல­மைச்­ச­ராக அர­சி­யல் அமைப்­புச் சட்ட உறு­தி­மொ­ழி­களை ஏற்று பொறுப்­பேற்­ற­வர் மதச்­சார்­பற்ற கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வ­ராக இருக்க வேண்­டும். அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் படி பொறுப்­பேற்­ற­வர் இப்­ப­டிச் சென்று வரும் சொகுசு விமா­னப் பய­ணச் செல­வு­கள் யாரு­டை­யது? அதற்­கான பல இலட்ச ரூபாய், பல கோடி ரூபாய் எனச் செல­வா­கும் அந்த ரூபாய் யாரு­டைய அப்­பன் வீட்­டுப் பணம்? மக்­க­ளு­டைய வரிப்­ப­ணம் அல்­லவா? என்­பது பற்­றி­யும் அவர் பதில் சொல்ல வேண்­டும். அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தின்­படி மதச்­சார்­பற்ற இந்­திய மாநி­லத்­தில்; தான் ஒரு கிறிஸ்­த­வர் என்­றா­லும், “இந்­துத்­து­வக் கொள்கை “உடை­ய­வ­ராக நாட­க­மாடி மீண்­டும் சங்­கி­க­ளின் முக­மூ­டி­யோடு ஜோசப் விஜய் தமிழ்­நாட்­டில் முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார் என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கி­றார். அதன் எடுத்­துக்­காட்­டா­கத்­தான் இப்­பொ­ழுது அரசு நிர்­வா­கத்­தில் ஓர் உத்­த­ரவை போட்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1967 ஆம் ஆண்டு தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்­சிக்கு வந்­த­தும், முத­ல­மைச்­ச­ராக அண்ணா பொறுப்­பேற்­றார். அரசு அலு­வ­ல­கங்­க­ளில் கட­வுள் படங்­கள், சிலை­களை அகற்­று­வது மற்­றும் மத வழி­பா­டு­க­ளைத் தவிர்ப்­பது தொடர்­பான சுற்­ற­றிக்கை எனும் நினை­வுக் குறிப்பு வெளி­யி­டப்­
பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அண்­ணா­வின் அறி­வு­றுத்­தல் பேரில் வெளி­யி­டப்­பட்ட அந்த வர­லாற்று சிறப்­பு­மிக்க அர­சா­ணை­யின் முக்­கிய வடி­வங்­கள் (1) அர­சாணை எண் / தேதி/நினை­வுக் குறிப்பு எண்: 7553 / 62 - 2 பொது ஜென­ரல் இலாக்கா,  29 ஏப்­ரல் 1968ல் இதனை தொடர்ந்து ஜூலை 18, 1968 அன்று தலை­மைச் செய­லா­ளர் சி.ஏ.இராம கிருஷ்­ணன் மூலம் அர­சின் அனைத்து துறை­க­ளுக்­கும் சுற்­ற­றிக்­கையை அனுப்­பப்­பட்­டது. (2) மதச் சார்­பின்­மையை நிலை நாட்­டு­தல்: அதில் உள்ள முக்­கிய விவ­ரங்­க­ளாக மத­சார்­பின்­மையை நிலை நாட்­டு­தல்; இந்­திய அர­சி­யல் அமைப்­புச் சட்­டப்­படி ‘அரசு’ என்­பது பொது­வா­னது. மற்­றும் மதச் சார்­பற்­றது. எனவே, அரசு அலு­வ­ல­கத்­தில் எந்த ஒரு குறிப்­பிட்ட மதப் பிரச்­சா­ரத்­திற்­கும் அல்­லது அடை­யா­ளத்­திற்­கும் புக­லி­ட­மாக இருக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">படங்­கள் மற்­றும் சிலை­கள் அகற்­றம்: அரசு அலு­வ­ல­கங்­கள் மற்­றும் அரசு வளா­கங்­க­ளில் உள்ள கட­வுள், பெண் கட­வுள்­கள் படங்­கள் உரு­வங்­கள் மற்­றும் சிலை­கள் யாரு­டைய மன­தும் புண்­ப­டுத்­தா­த­வாறு படிப்­ப­டி­யா­க­வும் பொது அலு­வ­ல­கத்­தில் இருந்து  அமை­தி­யா­க­வும் அகற்­றப்­பட வேண்­டும். (Removed gradually and unostentuitiously) என்று அனைத்து துறை தலை­வர்­க­ளும் அறி­வு­றுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மதக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு தடை: மதச் சார்­பற்ற ஆட்சி, நாடு என்­ப­தால்; எந்த மதத்­தைச் சார்ந்த சாமி­யார்­கள், சாது, மகான்­கள், அவ­தா­ரங்­கள் உட்­பட கட­வுள்­கள், பெண் கட­வுள்­கள் ஆகி­ய­வற்­றின் படங்­கள், சிலை­கள் முத­லி­ய­ன­வற்றை அர­சாங்க அலு­வ­ல­கங்­க­ளில் அல்­லது அர­சுக்­குச் சொந்­த­மான இடத்­தில் வைத்­தி­ருப்­பது சரி­யல்ல என்று அர­சாங்­கம் கரு­து­கி­றது. அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்­குள் மதச்­சார்­பான விழாக்­கள், பூஜை­கள் மற்­றும் கொண்­டாட்­டங்­களை நடத்­து­வது தவிர்க்­கப்­பட வேண்­டும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல்­வர் அண்ணா காலத்­தில் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட பிறகு முத­ல­மைச்­சர்­க­ளான கலை­ஞர், எம்.ஜி.ஆர்.ஜெய­ல­லிதா, ஓ. பன்­னீர்­செல்­வம், எடப்­பாடிபழ­னிச்­சாமி, மு.க.ஸ்டாலின் ஆகி­யோர் அந்த உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்தி வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­கி­டை­யில் 1993 ஆம் ஆண்­டில் அ.தி.மு.க. 
ஆட்­சி­யில் அப்­போ­தைய முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான  தமிழ்­நாடு அரசு அலு­வ­லக நடை­முறை கையேட்­டில் (Tamilnadu Office Manual) சட்­டத் திருத்­தம் ஒன்­றைக் கொண்டு வந்து, அரசு அலு­வ­ல­கங்­க­ளில் பணி­யா­ளர்­கள் வழி­பாடு நடத்­து­வ­தை­யும், மதச் சின்­னங்­கள்வைப்­ப­தை­யும், முழு­மை­யா­கத் தடை செய்து அர­சாணை பிறப்­பித்­தது. இது குறித்து விரி­வான வர­லாற்­றுப் பின்­ன­ணியை  “தி இந்து நாளி­தழ்” “டைம்ஸ் ஆப் இந்­தியா” போன்ற நாளே­டு­கள்  செய்­தி­கள் வெளி­யிட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இப்­ப­டிப்­பட்ட அரசு உத்­த­ர­வு­க­ளை­யும் முன்­னாள் இருந்த முதல்­வர்­கள் ஆட்­சி­யில் அரசு உத்­த­ர­வு­க­ளை­யும் நடை­மு­றை­க­ளை­யும் புறக்­க­ணித்­து­விட்டு த.வெ.க. ஆட்சி தற்­போது ஆயுத பூஜை கொண்­டா­டும் வித­மாக 
தமி­ழக அரசு அலு­வ­ல­கங்­க­ளில் அக்­டோ­பர் 10 அன்று 
சுற்­ற­றிக்கை ஒன்றை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் உள்ள முக்­கிய விவ­ரங்­க­ளாக கொண்­டாட்­டத்­திற்­கான வழி­காட்­டு­தல் அரசு அலு­வ­ல­கங்­கள் மற்­றும் துறை­க­ளில் ஆயுத பூஜை விழாக்­களை எவ்­வாறு முறைப்­படி கொண்­டாட வேண்­டும் என்­ப­தற்­கான நெறி­மு­றை­கள் இந்த சுற்­ற­றிக்­கை­யில் துறைச் செய­லா­ளர்­கள் மூலம் அனுப்­பப்­பட்­டுள்­ளன. இந்த உத்­த­ர­வின் மிக முக்­கி­ய­மான அம்­ச­மாக அரசு அலு­வ­ல­கங்­க­ளில் ஆயுத பூஜை மற்­றும் தீபா­வளி பேரில் ஊழி­யர்­க­ளி­டம் அல்­லது பொது மக்­க­ளி­டம் கட்­டாய பண வசூல் சந்தா செய்­யக்­கூ­டாது என திட்­ட­வட்­ட­மாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு அலு­வ­ல­கங்­க­ளில் ஆயுத பூஜை போன்ற மத வழி­பா­டு­கள் நடத்­த­லாம் என்ற விவா­தம் எழுந்த போது நீதி­மன்­றம் இது குறித்து தெளி­வு­ப­டுத்தி உள்­ளது. இதன் அடிப்­ப­டை­யில் நிரந்­தர கட்­டு­மா­னங்­கள் இன்றி கட்­டாய பண வசூ­லில் ஈடு­ப­டா­மல் ஆயுத பூஜை தினத்­தில் அரசு அலு­வ­ல­கங்­க­ளில் தூய்­மைப் பணி­களை மேற்­கொண்டு பணி உப­க­ர­ணங்­க­ளுக்கு பூஜை செய்­வ­தற்கு தற்­போ­தைய நடை­மு­றை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சின் கொள்­கை­க­ளைத் தெரிந்து கொள்­ளா­மல், காலம் கால­மா­கப் பின்­பற்றி வரும் நடை­மு­றை­யைத் தூக்கி எறிந்து விட்டு, அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் கூறும் சம­யச் சார்­பின்மை கருத்­துக்கு  எதி­ரான முறை­யில், “சரஸ்­வதி பூஜை, ஆயுத பூஜை என்ற பெய­ரால் அரசு அலு­வ­லங்­க­ளில் கொண்­டா­ட­லாம்” என்று தமி­ழக அரசு உத்­த­ரவு போடு­கி­றது என்­றால்; அது பிற மதத்தை சேர்ந்­த­வர்­கள் மனத்­தைத் 
துன்­பு­றுத்­து­வ­தும், சமு­தா­யத்­தைப் பிள­வு­ப­டுத்­திப் பிணக்­கு­கள் உரு­வாக்­கும் என்­ப­தோடு,  துன்­பு­றுத்­து­வ­து­மா­கும் 
அல்­லவா! இதனை எதிர்த்து சரி­யான முறை­யில் தமி­ழக அரசு ஏன் எண்ணி பார்க்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீதி­மன்ற உத்­த­ரவு எது­வா­னா­லும், அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­தைக் கருத்­தில் கொண்டுஅண்ணா அவர்­கள் போட்ட உத்­த­ரவை நடை­மு­றைப்­படுத்தி கடந்த கால அர­சு­கள் தனது கட­மை ­க­ளைச் செய்து வந்­தன. ஆனால், ஜோசப் விஜய் அரசு சட்ட விதி­மு­றை­களை மீறி, அரசு உத்­த­ரவு போட்­டி­ருக்­கக் கூடாது. அரசு அலு­வ­ல­கங்­க­ளில் அர­சி­யலோ ஆன்­மீக கருத்­து­களோ திணிக்­கக் கூடாது. அது அனைத்­துத் தரப்பு மக்­க­ளும் வந்து செல்­லும் மதச் சார்­பற்ற  பொது­வான இடம். ஆகவே, சம­யச் சார்­பின்­மை­யைப் பின்­பற்றி வரும் ஒரு அர­சா­னது; தகுந்த முறை­யில் கவ­னம் செலுத்தி அரசு அலு­வ­ல­கங்­க­ளில் ஆயுத பூஜை, சரஸ்­வதி பூஜை கொண்­டாட எந்த வகை­யி­லும் இப்­ப­டி­யான ஓர்  உத்­த­ர­வைப் பிறப்­பித்­தி­ருக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. கட்­சித் தலை­வர் ஜோசப் விஜய் தான்  தொடங்கி நடத்தி வரும் கட்­சி­யின் மேடை­க­ளில் தந்தை 
பெரி­யார், டாக்­டர் பி.ஆர்.அம்­பேத்­கர், பெருந்­த­லை­வர் 
காம­ரா­ஜர், வீர­மங்கை வேலு நாச்­சி­யார், அஞ்­சலை 
அம்­மாள் என்று படங்­க­ளைப் போட்டு நாட­கம் நடத்தி வரு­கி­றார். ஒரு பக்­கம்  பெரி­யார் கொள்­கை­யின்­படி நான் பகுத்­த­றி­வைப் பின்­பற்ற மாட்­டேன் என்­றும் கூறி வரு­கி­றார். அதே நேரத்­தில், தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின்  முதல்­வ­ராக இருந்­த­போது,  ரூபாய் 300 கோடி செல­வில்  கட்டி முடித்த கோவை “பெரி­யார் அறி­வு­ல­கம்” எனும் வர­லாற்று நூல­கத்­தைத் தற்­போ­தைய ‘கொத்­துப் புரோட்டா’ முதல்­வர்  ஜோசப் விஜய் திறந்து  வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="8">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் முகப்­பு­ரை­யா­னது “இந்­திய மக்­க­ளா­கிய நாம் (We the people of India) என்று தொடங்கி இந்­தி­யாவை ஓர் இறை­யாண்மை, சமத்­துவ, சமய சார்­பற்ற, மக்­க­ளாட்சி, குடி­ய­ரசு (Soveriegn, Socialist, Secular, Democratic, Republic) நாடா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="8">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் மத­ச்சார்­பின்­மைக்குநேர்­ம­றை­யான ஓர் அணு­கு­மு­றையை (Positive Secularism)வழங்­கு­கி­றது. அர­சுக்கு என்று தனி­யாக மதம் ஏதும் கிடை­யாது; இந்­திய நாட்­டுக்­கென்று எந்த ஒரு அதி­கா­ரப்­பூர்­வ­மான ‘அரசு மத ‘மும் கிடை­யாது; மத நடு நிலை­மை­யா­னது மதத்­தின் அடிப்­ப­டை­யில் குடி­மக்­க­ளைப் பாகு­ப­டுத்­தாது; அர­சி­யல் அமைப்­புக் சட்­டம் 1950 இல் வந்­த ­போது, சம­யச் சார்­பற்ற (Secular) என்ற வார்த்தை முகப்­பு­ரை­யில் நேர­டி­யாக இடம்­பெ­ற­வில்லை என்­றா­லும், 1976 ஆம் ஆண்டு 42 ஆவது அர­சி­யல் அமைப்­புச் சட்­டத் திருத்­தத்­தின் மூலமே இந்த வார்த்தை வரி­கள் முகப்­பு­ரை­யில் முறைப்­படி சேர்க்­கப்­பட்­டன. அது அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பா­கப் புகழ்­பெற்ற கேச­வா­னந்த் பாரதி வழக்­கில் (1973) 
மற்­றும் எஸ்.ஆர்.பொம்மை வழக்­கில் (1994) உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­த­படி ‘மத­ச்சார்­பின்மை என்­பது இந்­திய அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­தில் மாற்ற முடி­யாத அடிப்­ப­டைக் 
கட்­ட­மைப்பு (Basic structure) ஆகும்” என்று கூறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது மதச்­சார்­பின்­மையை உறுதி செய்­யும் சட்­டப்­பி­ரி­வு­க­ளான அர­சி­யல் அமைப்­புச் சட்­டம்  சட்­டம் பகுதி III இல் உள்ள அடிப்­படை உரி­மை­க­ளும் மதச்சார்­பின்­மையை உறுதி செய்­கின்­றன. அதற்­கான சட்ட உறுப்­பு­கள் (Articles) 15 ,16 மதம் கார­ண­மாக அரசு எவ்­வித பாகு­பா­டும் காட்­டக்­கூ­டாது என்­றும், உறுப்பு 25: சமூ­கத்­தில் (அரசு அலு­வ­ல­கங்­க­ளில் அல்ல) எந்த ஒரு நப­ரை­யும் தனது விருப்­பப்­படி எந்த மதத்­தை­யும் பின்­பற்­ற­வும் பரப்­ப­வும் அனு­ம­திக்­கி­றது என்­றும்; உறுப்பு 26: மத நிறு­வ­னங்­களை நிர்­வ­கிக்­கும் உரிமை அளிக்­கி­றது என்­றும்; உறுப்பு 27: எந்த ஒரு மதத்­தை­யும் பரப்­பு­வ­தற்­காக அரசு வரி­களை விதிக்கக் கூடாது என்­றும் தெளி­வுப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால்,  பொது­மக்­கள் நாடி­வ­ரும் அரசு அலு­வ­ல­கங்­க­ளில், மதப் பாகு­பாடு எண்­ணங்­களை உரு­வாக்­கும் வகை­யில் ஜோசப் விஜய்அரசு ‘கொத்து புரோட்டா’ அர­சி­யல் 
ஆட்­டம்  போட்டு, “ஆயுத பூஜை”, “சரஸ்­வதி” பூஜை” எனக் கொண்­டாட அரசு ஊழி­யர்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யான 
உத்­த­ரவு போட்­டி­ருப்­பது என்­பது, பெரி­யா­ரின் மனி­த­நேய கொள்­கைக்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல, முன்­னாள் முதல்­வர் பேர­றி­ஞர் அண்ணா போட்ட உத்­த­ர­வுக்­கும் மாறா­னது; அர­சி­யல் சட்­டத்­திற்­கும் புறம்­பா­னது. ஆம்; ஒரு கோமாளி நடி­கர் முதல்­வ­ராக நாட­க­மா­டு­கி­றார்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>