<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,556,607,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 22 2026 03:49:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261022T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="22102026-VLR-03" position.sequence="03" ex-ref="22102026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">உள்ளே ஒரு மறை­மு­கத் திட்­டம், வெளியே ஒரு வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். ஒரு கபட வேட­தாரி!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">நாடு காவி மய­மா­வ­தைத் தடுக்க ஒன்­றி­ணைந்து செய­லாற்­று­வோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக். 21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­க­ளின் அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மராத்­திய மாநி­லம் பூனே பகு­தி­யில் வாழும் பார்ப்­ப­னர்­க­ளில் – மற்­ற­வர்­க­ளை­விட உயர்ந்­தோர் என்று சொல்­லிக் கொள்­வோர்  (பார்ப்­ப­னர்­க­ளு­டன் கூட ஒப்­பிட்­டும், காயஸ்­தர்­கள் என்ற அடுத்து உரு­வான ‘‘பிரா­ம­ண­ருக்கு அடுத்த காயஸ்­தர்­க­ளுக்­கும்’’ கூடத் தாங்­களே மேலா­ன­வர்­கள் என்று கூறிக் கொள்­வர்) புனே வாழ் பாரப்­ப­னர்­க­ளான சித்­ப­வன் என்ற பிரி­வி­னர் ஆவர். ‘உயர்­ஜா­தி­யி­லும் உயர்­ஜா­திப் பிரிவு’ என்ற ஜாதி அதி­கா­ரத்தை நிலை நிறுத்­தி­டும் நோக்­கம் கொண்­டோர். பிரா­ம­ணர் – சூத்­தி­ரர் என்றஇரண்டு பிரிவே உண்டு; அவற்­றுக்கு இடை­யில் உள்­ளவை என்று ெசால்­லப்­பட்ட சத்­தி­ரி­யர், வைசி­யர் பிரி­வு­கள் கூட இல்லை என்­றெல்­லாம் 19ஆம் நூற்­றாண்­டில் பெரும் அறிவு ஜீவி­கள் என்ற பெய­ரில், ஆண­வப் போராட்­டத்­தினை நடத்தி நிறு­விட முயன்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஜோதி­ராவ் பூலே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே புனே­வில் (மராத்­தி­யத்­தில்) ஜோதி­ராவ் பூலே என்ற புரட்­சிக்­கா­ரர், ‘அப்­போ­தைய சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை’ உரு­வாக்­கி­னார். ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளான ‘சூத்­தி­ரர்­க­ளும்’, பெண்­க­ளும் (அவர்­கள் உயர்­ஜா­தி­யாய் இருந்­தா­லும்­கூட) கல்வி மறுக்­கப்­பட்ட, ‘அடி­மைச் சமூ­கங்­கள்’ (Servile Class) என்ற நிலை­யில் இருந்­த­தைக் கண்­டார், அதை எதிர்த்தே இயக்­கத்­தைத் தோற்­று­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பார்ப்­ப­னர்­க­ளுக்கு வேலை செய்­யும் படிப்­ப­றி­வற்ற – படிக்­கத் தகு­தி­யற்ற கீழ்­மக்­கள் என்று தாங்­கள் வைக்­கப்­பட்­டுள்ள  நிலையை எதிர்த்து மராத்­தி­யத்­தில் ஒரு பெரும் போராட்­டம் வெடித்­தது – பார்ப்­ப­ன­ரல்­லா­தோ­ரில் பெரும் பகு­தி­யி­னர் ஜோதிபா பூலே – சாவித்­திரி பாய் பூலே­வின் இயக்­க­மான ‘‘சத்­திய சோதக் சமாஜ்’’ –இல்  சேர்ந்து, கல்விபெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஹிந்து மகா­ச­பை­யின் நோக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், தங்­க­ளுக்கே சடங்­கு­கள் நடத்த ஏக­போக உரிமை உண்டு என்று  பார்ப்­ப­னர்­கள் உரிமை கொண்­டா­டி­னர். பார்ப்­ப­ன­ரல்­லா­த­வர்­கள் வீட்­டில், பார்ப்­ப­னர்­களை அழைக்­கா­மல், தாங்­களே திரு­ம­ணங்­களை நடத்­திக் கொண்­டா­லும்­கூட, அவர்­க­ளுக்­கு­ரிய தட்­ச­ணையை வரி செலுத்­து­வ­தைப்­போல பார்ப்­ப­னப் புரோ­கி­தர்­க ளுக்கு அளிக்­க­வேண்­டு­மென்று வழக்­காடி, இடை­யில் வென்று, பிறகு சட்­ட­மன்ற (பம்­பாய்) சட்­டங்­கள் மூலம் 20 ஆம் நூற்­றாண்­டில் வெற்­றி­யும் பெற்­ற­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆரிய அழுத்­த­மும், அதி­கார ஆண­வ­மும் மிக அதி­க­மா­னக் கொதி நிலைக்­குச் சென்­ற­வு­டன், அது வெடிக்­கத் தொடங்­கி­யதை உணர்ந்த மராத்­தி­யப் பாரப்­ப­னர்­கள், ‘ஹிந்து மகா­சபை’ என்று தொடங்கி,  முஸ்­லிம்­கள் வெறுப்பு – விரோ­தத்தை மய்­ய­மாக்­கி­னார்­கள். அது­தான் ஹிந்­துத்­து­வாவை அர­சி­யல் கோட்­பா­டாக்­கிய வி.டி.சாவர்க்­கர் ‘இரு நாடு­கள் கோட்­பாடு’ (Two Nation Theory) உரு­வாக்­கி­ய­தன் பின்­னணி. அதன் விளைவே இந்­தியா – பாகிஸ்­தான் பிரி­வினை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆர்.எஸ்.எஸ். என்­னும் முக­மூடி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சூத்­திர ஜாதி, தாழ்த்­தப்­பட்ட, பழங்­குடி என்ற பிரி­வு­கள் மூலம் பகி­ரங்­க­மா­கத் தங்­கள் மீது சுமத்­தப்­பட்­ டுள்ள பிறவி இழி­வை­யும், மறுக்­கப்­பட்ட கல்வி, உரி­மை­க­ளை­யும் வற்­பு­றுத்தி, பார்ப்­ப­ன­ரல்­லா­தார் ஒன்­றி­ணை­வதை உணர்ந்­த­வு­டன், ஆரி­யர்­கள்இனி  ‘ஹிந்து மகா­சபை’ தங்­க­ளது ஆதிக்­கத்­தைக் காப்­பாற்­றாது என்று உணர்ந்த அதே ‘சித்­ப­வன்’ பார்ப்­ப­னர்­கள், வெளிப்­ப­டை­யாக அந்த அடை­யா­ளத்­தைக் கூறா­மல், மறைத்து, ஏதோ தேசத்­திற்கே தொண்­டூ­ழி­யம் செய்­யப் போவது போன்று, மாறு­பட்ட ஓர் அவ­தா­ரத்தை உரு­வாக்கி, ‘ராஷ்­டி­ரிய சுயம்­சே­வக் சங்­கம்’ (Rashtriya Swayam sevak Sangh – RSS) – ‘தேசத்­திற்­குத் தொண்டு செய்­ப­வர்­கள்’ என்ற முக­மூடி அணிந்து தங்­க­ளது சூழ்ச்­சிப் பணி­யைத் தொடர்ந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேச மக்­க­ளுக்கே தொண்டு செய்­வ­து­தான் அவர்­கள் நோக்­க­மா­னால், ஏன் இஸ்­லா­மி­யர்­கள், கிறித்­த­வர்­கள், நாத்­தி­கர்­கள்  – கம்­யூ­னிஸ்­டு­கள் ஆகி­யோர் எங்­கள் விரோ­தி­கள், ஜாதி ஒழிப்­பா­ளர்­கள் எங்­கள் விரோ­தி­கள் என்று சொல்­ல­வேண்­டும்? அர­சி­ய­ல­மைப்­புச் சட்­ட­மாக, ஜாதி – வருண தர்­மத்தை வலி­யு­ றுத்­தும் மனு­தர்­மத்­தையே வைக்­க­வேண்­டும் என்ற கொள்­கைத் திணிப்­பா­ளர்­ க­ளாக ஏன் இருக்­க­வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் தற்­போ­துள்ள இஸ்­லா­மி­யர்­கள், பாகிஸ்­தான் பிரிந்து சென்­ற­போ­து­கூட, இந்­தி­யா­வையே தங்­கள் நாடா­கக் கொண்டு இருந்­த­வர்­கள்­தானே!  ஆர்.எஸ்.எஸ். செய்­வது தேசத் தொண்டு என்­றால், அதில் ஏன் இரட்டை வேடம், இரட்டை நாக்கு? எதற்­காக ரக­சிய அமைப்பு? மத அடிப்­ப­டை­யில்,  87 சத­வி­கி­தப் பெரும்­பான்மை கொண்­டது ஹிந்து மதம் என்­றால், அதில் ஒரு ஜாதி­யின் ஆதிக்­கத்தை மட்­டும் நிலை நிறுத்த ரக­சி­ய­மான வேலைத் திட்­டம் ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வெளிப்­ப­டை­யற்ற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இர­க­சிய அமைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெரும்­பான்மை   மத­வெ­றி­யைக் கிளப்பி, வந்­தே­றி­க­ளின் ராஜ்­யத்தை வகை­யாக நடத்­து­வ­தற்­குத்  ­தானே, இந்த ஆர்.எஸ்.எஸ். என்ற உள்­ளொன்று வைத்­துப் புற­மொன்று பேசும் வெளிப்­ப­டை­யற்ற இர­க­சிய அமைப்பைஇன்­ன­மும் நடத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மூன்று முறை தடை செய்­யப்­பட்ட இயக்­கம், இந்­தி­யா­வி­லேயேஆர்.எஸ்.எஸ்.சைத் தவிர, வேறு எந்த அமைப்­பும் கிடை­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அன்­றைய காங்­கி­ரஸ் அர­சு­க­ளைத் ‘‘தாஜா’’ செய்து, சில நிபந்­த­னை­க­ளுக்கு உட்­ப­டு­வ­து­போல் காட்டி, தங்­கள் மீதான தடையை நீக்­கிக் கொண்­டார்­கள். பிறகு, தங்­க­ளுக்­கென  ஓர் அர­சி­யல் பிரி­வாக பி.ஜே.பி.யை உரு­வாக்­கி­னார்­கள். அதனை ஹிந்­திப் பிர­தே­சங்­க­ளி­லும், பிறகு பல்­வகை தந்­திர சூழ்ச்­சி­க­ளி­னா­லும், வெட்­க­மின்­றிப் பல்­வ­கைக் கட்­சி­களை பதவி மூலம் அடி­யோடு தூக்­கு­வ­தன்­ மூ­லம் பிற பகு­தி­க­ளி­லும் நிலை நிறுத்தி, தங்­க­ளது ‘சாம்­ராஜ்­ஜி­யத்தை’ இன்று நடத்­திக் கொண்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அசல் பாசி­சம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேசு­வது பெருந்­தத்­து­வம்,  காட்­டு­வது தொண்டு முகம்; ஆனால், நடத்­தை­யெல்­லாம், அசல் பாசி­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஹிட்­ல­ரின் ‘‘சுவஸ்­திக்’’­தானே தொடக்­கத்­தில் அவர்­கள் சின்­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஹிட்­ல­ரின் ஆரிய மேலா­திக்க உணர்­வும், சர்­வா­தி­கா­ர­மும் கொண்டு, கூடு­த­லா ­கத் தந்­தி­ரங்­கள், சூழ்ச்­சி­கள், வித்­தை­கள் மூலம் – நாட்டை ஆரிய, வேத சமஸ்­கி­ருத மய­மாக்கி, ஹிந்­துத்­து வா ஆட்சி நடத்­து­கி­றார்­கள். ஆனால், இந்த ஒப்­பனை வெகு நாள்­க­ளுக்­குத் தொட­ராது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு பெரி­யார் மண்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­னாடு, குறிப்­பா­கத் தமிழ்­நாடு. பெரி­யார் மண் – பகுத்­த­றிவு மண் என்­ப­தால், ஆரி­யப் பண­பாட்­டுப் படை­யெ­டுப்பை, ஹிந்தி, சமஸ்­கி­ருத கலாச்­சா­ரம் மற்­றும் பார்ப்­ப­னிய ஜாதி, சம்­பி­ர­தா­யம், சடங்­கு­களை எதிர்த்து அறி­வுப் புரட்சி செய்த மண் என்­ப­தால், அவர்­க­ளு­டைய பாச்சாஇங்கு பலிக்­க­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எப்­ப­டி­யா­வது ஆட்சி அதி­கா­ரங்­க­ளைக் கைப்­பற்றி, அதன்­மூ­லம் தமது எதி­ரி­களை ஒடுக்­க­வும், சமத்­துவ, ஜாதி ஒழிப்பு பேசு­வோரை நசுக்­க­வும், பண்­பாட்­டுப் படை ­யெ­டுப்­பைத் தொடர்ந்து நடத்தி, தமிழ்­நாட்டை வீழ்த்­தத் துடிக்­கி­றார்­கள். அதை எதிர்த்து, சமூ­க­ 
நீ­தியை, சுய­ம­ரியா­தையை நிலை நிறுத்­தல் இன்­றைய கால­கட்­டத்­தின் அவ­சி­யத் தேவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஆர்.எஸ்.எஸ்.சின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நோக்­கங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சமூ­கத்­தில் – ஜாதி வருண தர்­மக் காவல் அரண் ஆர்.எஸ்.எஸ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சி­ய­லில் – மாநி­லங்­களை அழித்து, கூட்­டாட்­சி யை ஒழித்து ஒற்றை ஆட்சி ஏற்­ப­டுத்த முனை­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொரு­ளி­ய­லில் – தனிப்­பட்ட பார்ப்­பன – பனி­யாக்­க­ளி­டம் (அம்­பானி, அதானி போன்­ற­வர்­க­ளி­டம்) நாட்டை ஒப்­ப­டைத்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பண்­பாட்­டில் – சமஸ்­கி­ருத வேதக் கலாச்­சா­ரம் என்ற பெய­ரில், மற்ற மக்­க­ளின் பண்­பாட்டை அழித்து, ஆரிய மய­மாக்­கல் – அதற்கு ஆதார அடிப்­ப­டை­க­ளாக கட­வுள், புரா­ணங்­க­ளைப் பரப்­பு­தல். அதன்­மூ­லம், சம உரிமை, சம வாய்ப்­பு­க­ளைப் பறித்து, நாசூக்­காக பொரு­ளா­தார வலை வீசி, பார்ப்­பன மேலாண்­மையை நாளும் பெருக்­கு­தல். இவையே ஆர்.எஸ்.எஸ்.சின் நோக்­கங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஒத்த கருத்­துள்­ள­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உடனே இணைந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">செய­லாற்­றுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மறை­மு­க­மாக உள்ளே ஒரு திட்­டம் (Hidden Agenda); வெளியே வேறு ஒரு வேடம். அதுவே ஆர்.எஸ்.எஸின் செயல்­முறை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘பசுந்­தோல் போர்த்­திய ஓநாய்­கள் ஒரு போதும் ‘‘சைவ­மா­காது’’ என்­பதை உணர்ந்து, இந்­தி­யா­வைக் ‘காவி மய­மாக்­கும்’ கொடு­மை­யைத் தடுத்து நிறுத்த, எச்­ச­ரிக்­கை­யு­டன் ஒத்த கருத்­துள்­ள­வர்­கள் உடனே இணைந்து செய­லாற்­றுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர்அறிக்கை விடுத்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>