<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,67,957,1070" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 23 2026 03:56:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261023T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23102026-VLR-08" position.sequence="08" ex-ref="23102026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="4">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தி.மு.க. ஆட்­சி­யில் விரி­வ­டைந்த அறி­வு­ல­கம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">தமிழ்­நாட்­டின் நூல­கப்­பு­ரட்சி – ஒரு வர­லாற்­றுப் பார்வை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">தலை­மு­றை­களை உயர்த்­திய கட்­ட­மைப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="DC4_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="DC6new_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="DCnew8_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="DCNew10_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரு புத்­த­கம், ஒரு­வ­ரின் வாழ்க்­கையை மாற்­ற­லாம்; ஒரு நூல­கம், ஒரு தலை­மு­றை­யின் எதிர்­கா­லத்­தையே மாற்­றும். பள்­ளியை தாண்டி கற்­கும் வாய்ப்பை வழங்­கும் பொது நூல­கங்­கள், ஏழை எளிய மக்­க­ளின் அறி­வுக் கத­வு­க­ளைத் திறக்­கும் திற­வு­கோல்­கள். தமிழ்­நாட்­டில் கிராம ஊராட்­சி­கள் தொடங்கி மாந­க­ரங்­கள் வரை இந்த    அறி­வுத் திற­வு­கோல்­களை விரி­வு­ப­டுத்­து­ வ­தில் தி.மு.க. ஆட்­சிக் காலங்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திட்­டங்­கள் தனித்த கவ­னம் பெறு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு காலத்­தில் பாடப்­புத்­த­கங்­களே பல மாண­வர்­க­ளுக்கு அறி­வின் எல்­லை­யாக இருந்­தன. வீட்­டில் தனி அறை இல்லை; படிக்க அமை­தி­யான சூழல் இல்லை; போட்­டித் தேர்­வு­க­ளுக்­கான விலை உயர்ந்த நூல்­களை வாங்க வச­தி­யில்லை. ஆனால், ஊரின் ஒரு மூலை­யில் செயல்­ப­டும் சிறிய நூல­கம், அத்­த­கைய மாண­வர்­க­ளுக்­குப் புதிய வாய்ப்­பு­க­ளைத் திறக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாளி­தழ்­களை வாசிக்­கும் பழக்­கத்­தில் தொடங்கி, உலக அர­சி­யல், அறி­வி­யல், வர­லாறு, இலக்­கி­யம், பொரு­ளா­தா­ரம் எனப் பல துறை­க­ளில் அறிவை பெறு­வ­தற்­கான பாதை­கள் வகுத்­தவை நூல­கங்­கள் தான். இது புத்­த­கங்­களை அடுக்கி வைக்­கும் கட்­டி­டம் அல்ல,        அறி­வார்ந்த சமூ­கத்தை உரு­வாக்­கு­ வ­தற்­கான ஜன­நா­யக கட்­ட­மைப்பு. இதை­யெல்­லாம் கருத்­தில் கொண்­டு­தான், கலை­ஞர் முதல்­வ­ராக இருந்­த­போது 1972ம் ஆண்­டில் நூல­கத்­­   துறைக்கு என தனி­யாக பொது நூலக இயக்­கு­ந­ர­கத்தை உரு­வாக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தப் பின்­ன­ணி­யில், தமிழ்­நாட்­டில் தி.மு.க. ஆட்­சிக் காலங்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­பட்ட கிராம நூல­கத் திட்­டங்­கள், சென்னை அண்ணா நூற்­றாண்டு    நூல­கம், மதுரை கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம் போன்ற பெரிய திட்­டங்­களை ஒருங்­கி­ணைத்­துப் பார்க்க வேண்­டி­யது அவ­சி­யம். நூல­கங்­கள் என்­பவை         நக­ரங்­க­ளோடு நின்று விடா­மல், புத்­தக வாசிப்பை கிரா­மங்­கள் வரை கொண்டு செல்­வ­தற்­காக அனைத்­துக் கிராம அண்ணா மறு­ம­லர்ச்­சித் திட்­டத்­தின் கீழ் 12,618 கிரா­மப்­புற நூல­கங்­கள் அமைக்­கப்­பட்­டது 2006 முதல் 2011 வரை­ யி­லான கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. ஆட்­சி­யில் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிராம ஊராட்­சி­க­ளில் நூல­கங்­கள் அமைக்­கப்­ப­டும்­போது, பள்ளி மாண­வர்­கள் பாடங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட நூல்­களை வாசிக்­க­லாம். நாளி­தழ்­கள் மூலம் நடப்பு நிகழ்­வு­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­லாம். அரசு வேலை­வாய்ப்­பு­க­ளுக்­குத் தயா­ரா­கும் இளை­ஞர்­க­ளுக்கு மட்­டு­மின்றி அனைத்து தரப்­பி­ன­ரும் பொது­வான மற்­றும் துறை சார்ந்த தக­வல்­களை தெரிந்து கொள்ள முடி­யும். ஏரா­ள­மான இலக்­கி­யப் படைப்­பு­களை படிக்­க­வும் வாய்ப்­பு­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நூல­கங்­களை உரு­வாக்­கு­வது அறி­வார்ந்த சமூக கட்­ட­மைப்­புக்­கான ஒரு அரிய பணி. அதை விட முக்­கி­யம் ஏற்­கெ­னவே உரு­வாக்­கப்­பட்ட நூல­கங்­கள் பயன்­பா­டின்றி முடங்­கி­வி­டா­மல் பாது­காப்­பது. அ.தி.மு.க. ஆட்­சி­யின்­போது, கிராம அள­வி­லான பல நூல­கங்­கள் முறை­யான பரா­ம­ரிப்பு இன்­றி­யும், புதியபோது­மான புத்­த­கங்­கள் இல்­லா­த­தா­லும்முழு பயன் அளிக்­க­வில்லை. சரி­யாக செயல்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டு ­கள் கூறப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான தி.மு.க. ஆட்­சி­யில், 2021 -– 22ல் 4,116 நூல­கங்­கள் ரூ.91.75 கோடி­யில் புதுப்­பிக்­கப்­பட்­டன. இது­போல், 2022 – 23 நிதி­யாண்­டில் ரூ.84.27 கோடி­யில் 3,679 நூல­கங்­கள் 2024 –- 25ல் ரூ. 96.84 கோடி­யில் 4,386 நூல­கங்­கள் புதுப்­பிக்க வகை செய்­யப்­பட்­டது. இது­போல் நக­ரங்­க­ளில் உள்ள பெரிய நூல­கங்­கள் ஆய்வு, உயர்­கல்வி, போட்­டித் தேர்வு தயா­ரிப்பு, பல்­துறை வாசிப்பு ஆகி­ய­வற்­றுக்­கான விரி­வான வச­தி­க­ளை­யும் வாய்ப்­பு­க­ளை­யும் வழங்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னை­யில் அமைந்­துள்ள அண்ணா நூற்­றாண்டு நூல­கம் இதற்கு முக்­கி­ய­மான எடுத்­துக்­காட்டு. அறி­ஞர் அண்ணா நூற்­றாண்டை முன்­னிட்டு கலை­ஞர் ஆட்­சி­யில் அண்ணா நூற்­றாண்டு நூல­கம் ரூ.178.78 கோடி செல­வில் அமைக்­கப்­பட்டு, 2010 செப்­டம்­பர் 15–ல் திறக்­கப்­பட்­டது. இன்­ற­ள­வும்          மாண­வர்­கள், ஆய்­வா­ளர்­கள் பல­ரின் அறி­வுப்­ப­சியை தீர்ப்­ப­தில் முக்­கி­யப் பங்கு வகிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னையை மைய­மா­கக் கொண்­டி­ருந்த பெரிய நூலக வச­தி­க­ளைத் தாண்டி, தென் தமிழ்­நாட்­டி­லும் நவீன நூல­கக் கட்­ட­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யாக மது­ரை­யில் கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம் 3.8 ஏக்­கர் பரப்­ப­ள­வில் 2.16 லட்­சம் சதுர அடி­யில் நவீன வச­தி­ க­ளு­டன் அமைக்­கப்­பட்­டது. 6 மாடி கொண்ட இந்த பிர­மாண்ட நூல­கத்­தில் 3.64 லட்­சம் புத்­த­கங்­கள் உள்­ளன. தென் மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள், ஆராய்ச்­சி­யா­ளர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு பல்­வேறு பாடப்­பி­ரி­வு­க­ளில் நூல்­களை அணு­கும் வாய்ப்பை ஏற்­ப­டுத்த உரு­வாக்­கப்­பட்ட நூல­கம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதைத் தொடர்ந்து கோவை­யில்         பிர­மாண்ட நூல­கம் அமைக்க திட்­ட ­மி­டப்­பட்டு இதற்­கான அறி­விப்பு 2024- – 25 பட்­ஜெட் உரை­யில் வெளி­யி­டப்­பட்­டது. 2024 நவம்­ப­ரில் நூல­கத்­துக்கு அடிக்­கல் நாட்­டப்­பட்­டது. ஏறக்­கு­றைய 1.98 லட்­சம் சதுர அடி­யில் நூல­கம் ரூ.301.71 கோடி செல­வில் கட்­டப்­பட்­டது. இத­னைத்­தான் தற்­போ­தைய முதல்­வர் விஜய் திறந்து வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு ஏன், திருச்­சி­யில் காம­ரா­ஜர் நூல­கம், நெல்­லை­யில் காயிதே மில்­லத் நூல­கம், சேலத்­தில் பார­தி­தா­சன் அறி­வு­ல­கம், கட­லூ­ரில் அஞ்­சலை அம்­மாள் அறி­வு­ல­கம் என தலை­முறை கடந்­தும் பலன் அளிக்­கக்­கூ­டிய அறி­வார்ந்த சமு­தா­யத்தை உரு­வாக்க தி.மு.க. ஆட்­சி­யில் நூல­கங்­கள் கட்­ட­மைக்­கப்­பட்­டன. பசிப்­ப­வ­ருக்கு மீன்  கொடுப்­பதை விட மீன் பிடிக்க கற்­றுத்­த­ரு­வது அவ­ரது வாழ்­நாள் தேவையை பூர்த்தி செய்­யக் கூடி­யதோ அப்­ப­டித்­தான், தி.மு.க. ஆட்­சில் கட்­டப்­பட்ட நூல­கங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர், மு.க.ஸ்டாலின் என  அடுத்­த­டுத்து தி.மு.க. ஆட்­சி­யில் மட்­டும் மொத்­தம் 12,614 நூல­கங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு முந்­தைய        காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் 1,361நூல­கங்­கள் மட்­டுமே அமைந்­தன. அ.தி.மு.க. ஆட்­சி­ யில்  2,590  நூல­கங்­கள்  அமைக்­கப்­பட்­ட­தாக புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இப்­படி குறைந்த காலமே        ஆட்­சி­யில் இருந்­த­போ­தும் அறி­வார்ந்த சமு­தா­யத்தை கட்­ட­மைப்­ப­தில் தி.மு.க. ஆட்­சி­யில் முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­பட்­ட­து­தான் நூல­கப் புரட்­சிக்கு கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நூல­கத்­தின் வெற்றி, அதன் கத­வு­ க­ளைத் திறந்து உள்ளே வரும் வாச­கர்­க­ளின் எண்­ணிக்­கை­யி­லும், அங்­கி­ருந்து அறி­வைப் பெற்று வெளி­யே­றும் தலை­மு­றை­க­ளி­லும் இருக்­கி­றது. அத்­த­கைய அறி­வார்ந்த தலை­மு­றையை உரு­வாக்க  நூல­கங்­கள் மூலம்   அடித்­த­ள­மிட்ட தி.மு.க. ஆட்­சிக் காலங்­கள், காலங்­கள் கடந்­தும் அறிவு பெட்­டக வாயி­லுக்­கான சாட்­சி­யாக இருக்­கின்­றன என்­கின்­ற­னர் இந்த நூல­கங்­க­ளால் பயன்­பெற்ற அறி­ஞர்­கள், ஆர்­வ­லர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்­சி­யில் புதுப்­பிக்­கப்­பட்ட நூல­கங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021 - – 22   4,116 நூல­கங்­கள் திட்­டச் செலவு ரூ. 91.75 கோடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2022 - – 23   3,679 நூல­கங்­கள் திட்­டச்­செ­லவு ரூ.84.27 கோடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2024 - – 25   4,386 நூல­கங்­கள் திட்­டச் செலவு ரூ.96.84 கோடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தின் நூல­கப் பாரம்­ப­ரி­யம்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆசி­யா­வின் தொன்­மை­யான நூல­கங்­க­ளில் ஒன்­றாக கரு­தப்­ப­டு­வது, தஞ்சை சரஸ்­வதி மகால் நூல­கம். 600 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சோழர் காலத்­தில் அமைக்­கப்­பட்­டது. பின்­னர் தஞ்­சையை ஆண்ட நாயக்­கர், மராட்­டி­யர்­கள் ஆட்­சி­யி­லும் வளர்ச்­சி­ய­டைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> சென்­னை­யில் உள்ள கன்­னி­மாராபொது நூல­கம், நாட்­டின் தேசிய வைப்பு நூல­கங்­க­ளில் ஒன்­றாக திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உ.வே.சா. நூல­கம், சென்னை: டாக்­டர் உ.வே.சாமி­நாத ஐய­ரின் 
இலக்­கிய பாரம்­ப­ரி­யத்தை பாது­காக்­கும் இந்­நூ­ல­கம், அரிய கையெ­ழுத்து               பிர­தி­கள் மற்­றும் அறிய வெளி ­யீ­டு­களை கொண்டு, இலக்­கிய ஆய்­வு­க­ளுக்கு உறு­து­ணை­யாக  உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மறை­ம­லை­ய­டி­கள் நூல­கம், சென்னை: தமிழ் நூல்­கள் மற்­றும் ஆராய்ச்சி வெளி­யீ­டு­ க­ளின் தொகுப்­பு­கள் இங்கு      உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரோஜா முத்­தையா ஆராய்ச்சி நூல­கம், சென்னை: பன்­னாட்டு அள­வில் அங்­கீ­கா­ரம் பெற்­றது இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தி.மு.க. ஆட்­சி­யில் எதி­லும் முதல்மாநி­லம்! இதி­லும் முதல் மாநி­லம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்வி, தொழில்­துறை என துறை­தோ­றும் புது­மை­கள், அறி­மு­கங்­கள் பெரும்­பா­லும் தமிழ்­நாட்­டில் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன. இந்த வகை­யில் சுதந்­திர இந்­தி­யா­வில் முதன் முத­லாக பொது நூல­கச் சட்­டம் 1950ம் ஆண்டுஏப்­ரல் 1ஆம் தேதி இயற்­றப்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன்­பி­ற­கு­தான், ஆந்­திரா- 1960,     கர்­நா­டகா - 1965, மகா­ராஷ்­டிரா - 1967, மேற்கு வங்­கம் - 1979, மணிப்­பூர் - 1988, கேர­ளம் - 1989 என அடுத்­த­டுத்த 
ஆண்­டு­க­ளில் கொண்­டு­வ­ரப்­பட்­டன. இன்­னும் கல்­வி­யில் பின்­தங்­கிய மாநி­ல­மாக உள்ள சில மாநி­லங்­க­ளான குஜ­ராத் - 2000, உத்­த­ர­பி­ர­தே­சம் - 2005, பீகார் - 2007, அரு­ணா­சல பிர­தே­சம் - 2009ம் ஆண்­டு­க­ளில் இந்த சட்­டத்தை அமல்­ப­டுத்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அறி­வி­யல் ஆர்­வ­லர்­க­ளுக்கு தொழில்­நுட்ப மையங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் நகர்ப்­புற மற்­றும்       கிரா­மப்­புற பகு­தி­க­ளில் பொது­மக்­க­ளி­டம் அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்­பத்தை பரப்­பு­தல், பள்ளி மற்­றும் கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் அறி­வி­யல் ஆர்­வ­லர்­கள் அறி­வி­யல் அறிவை மேம்­ப­டுத்­த­வும் ஆய்­வில் ஈடு­ப­டு­வோர் பலன் பெறும் வகை­யி­லும் தமிழ்­நாடுஅறி­வி­யல் தொழில் நுட்ப மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. மாண­வர்­கள் மற்­றும் அறி­வி­யல் ஆர்­வ­லர்­க­ளுக்­காக தி.மு.க. ஆட்­சி­யில் அமைக்­கப்­பட்ட அறி­வி­யல் தொழில் நுட்ப மையங்­கள் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்­டங்­கள் மற்­றும் நடை­மு­றை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் முதன் முத­லாக பொது நூல­கங்­களை நிறு­வு­வ­தற்­கும், நகர்ப்­பு­றம் மற்­றும் கிரா­மப்­பு­றங்­க­ளில் நூல­கச் சேவையை ஒருங்­கி­ணைப்­ப­தற்­கும் தமிழ்­நாடு பொது நூல­கச் சட்­டம், 1948 இயற்­றப்­பட்­டது. பின்­னர், 1972ம் ஆண்டு தனி பொது நூலக இயக்­கம் உரு­வாக்­கப்­பட்­ட­தன் மூலம் நூலக 
நிர்­வா­கம் தனித்த அமைப்­பின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன்­பி­றகு 1982ம் ஆண்டு மே 3ம் தேதி பிறப்­பிக்­கப்­பட்ட அர­சாணை மூலம், உள்­ளாட்சி நூலக ஆணைய ஊழி­யர்­க­ளின் பணி­களை அர­சுப் பணி­யாக மாற்­றும் நட­வ­டிக்கை 1982 ஏப்­ரல் 1 முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. 1996ல் வெளி­யி­டப்­பட்ட அர­சா­ணை­யில், தமிழ்­நாட்­டில் 625 ஊர்ப்­புற நூல­கங்­க­ளைத் தொடங்க அரசு அனு­மதி அளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நன்றி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தினகரன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">                         22.10.2026</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>