<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,958,946" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 25 2026 03:40:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261025T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25102026-MDU-03" position.sequence="03" ex-ref="25102026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">புதிதாக முன்மொழியப்பட்டுள்ள விலங்­கு­கள் வதை தடுப்­புச் சட்­டத்தை  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">உட­ன­டி­யாக மறு ஆய்வு செய்து நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஒன்­றிய அர­சுக்கு தயா­நிதி மாறன் எம்.பி. அவ­ச­ரக் கடி­தம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dhiyanithimara_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புது­டெல்லி, அக். 25 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">புதி­தாக முன்­மொ­ழி­யப் ­பட்­டுள்ள விலங்­கு­கள் வதை தடுப்­புச் சட்­டத்தை மறு­ஆய்வு செய்து, விலங்­கு­க­ளின் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை வலுப்­ப­டுத்­தக் கோரி, கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி கழக நாடா­ளு­மன்­றக் குழுத் துணைத் தலை­வ­ரும் கழக விளை­யாட்டு மேம்­பாட்டு அணிச் செய­லா­ள­ரு­மான தயா­நிதி மாறன் எம்.பி. ஒன்­றிய அரசை வலி­யு­றுத்­தி­யுள்­ளார். இது­கு­றித்து ஒன்­றிய மீன்­வ­ளம் மற்­றும் கால்­நடை வளர்ப்­புத் துறை அமைச்­சர் ராஜீவ் ரஞ்­சன் சிங் அவர்­க­ளுக்கு அவர் அவ­ச­ரக் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அக்­க­டி­தத்­தில் குறிப்­பிட்­டுள்ள தாவது :-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அறி­வி­யல் ஆராய்ச்­சி­க­ளைச் சீர­மைப்­பது ஒரு நியா­ய­மான நோக்­க­மாக இருந்­தா­லும், அதன் பெய­ரில் விலங்­கு­கள் நல­னுக்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் பல­வீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­வதோ அல்­லது சுதந்­தி­ர­ மான ஒழுங்­கு­மு­றைக் கண்­கா­ணிப்பு குறைக்­கப்­ப­டு­வதோ கூடாது. பெரிய விலங்­கு­கள் தொடர்­பான பரி­சோ­த­னை­கள் உட்­பட, பரந்த அள­வி­லான பரி­சோ­த­னை­க­ளுக்கு நிறு­வ­னங்­க­ளின் நெறி­மு­றைக் குழுக்­களே ஒப்­பு­தல் அளிக்க அனு­ம­திக்­கும் வகை­யில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள மாற்­றம், பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் சுதந்­தி­ர­மான ஆய்­வின் போது­மான தன்மை குறித்து முக்­கி­ய­மான கேள்­வி­களை எழுப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேலும், வன­வி­லங்­கு­கள், தெரு நாய்­கள் மற்­றும் பூனை­க­ளைப் பிடித்து ஆய்­வ­கப் பரி­சோ­த­னை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்த வழி­வ­குக்­கும் விலக்­கு­கள் குறித்­தும் கவ­லை­கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. கடு­மை­யான வலி, துன்­பம் மற்­றும் நீடித்த பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பரி­சோ­த­னை­கள், அத்­து­டன் ஆய்வு நடை­மு­றை­கள் மற்­றும் ஏற்­க­னவே நடை­மு­றை­யில் உள்ள நலப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்த கவ­லை­கள் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில் கொண்டு, இந்த விதி­களை இறுதி செய்­வ­தற்கு முன்­பாக ஒரு முழு­மை­யான மறு­ஆய்வு மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அழ­கு­சா­த­னப் பொருட்­கள் சோதனை, மருத்­து­வக் கல்வி மற்­றும் சில மருந்­துப் பரி­சோ­தனை முறை­க­ளில், விலங்­கு­க­ளைப் பயன்­ப­டுத்­தாத மாற்று வழி­களை அங்­கீ­க­ரிப்­ப­தில் இந்­தியா ஏற்­க­னவே முன்­னேற்­றம் கண்­டுள்­ளது. மனித உயி­ர­ணுக்­கள் சார்ந்த ஆராய்ச்சி, மனித உறுப்­பு­க­ளின் செயல்­பா­டு­களை கணினி சிப் வடி­வில் உள்­ள­மைக்­கும் அதி­ந­வீனமருத்­து­வத் தொழில்­நுட்­ப­மான ‘ஆர்­கன்-­­ஆன்-­­சிப்’ (organ-on- chip) தொழில்­நுட்­பங்­கள், மனித திசு மாதி­ரி­கள் மற்­றும் கணினி வழி மாதி­ரி­யாக்க முறை­கள் (computational methods) போன்­றவை, விலங்­கு­க­ளைப் பயன்­ப­டுத்­தும் சோத­னை­க­ளைக் குறைத்து, அறி­வி­யல் முன்­னேற்­றத்தை ஊக்­கு­விக்க சிறந்த வாய்ப்­பு­களை வழங்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­தச் சூழ­லில், ஒன்­றிய அரசு பின்­வ­ரும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வலி­யு­றுத்­து­கி­றேன்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">1.தற்­போது முன்­மொ­ழி­ யப்­பட்­டுள்ள இந்த வரைவு விதி­க­ளைத் திரும்­பப் பெற்று, எவ­ரை­யும் சார்ந்­தி­ராத விலங்கு நல நிபு­ணர்­கள், விஞ்­ஞா­னி­கள், கால்­நடை மருத்­து­வர்­கள், ஆராய்ச்சி நிறு­வ­னங்­கள் மற்­றும் சமூக அமைப்­பு­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்து, விரி­வான மறு­ஆய்வை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">2. விலங்­கு­கள் மீதான பரி­சோ­த­னை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் மற்­றும் கண்­கா­ணிப்பு குழு’ (CCSEA) மூலம் மேற்­கொள்­ளப்­ப­டும் வலு­வான சுதந்­தி­ர­மான மேற்­பார்­வையை, தொடர்ந்து நடை­மு­றை­யில் வைத்­தி­ருக்க வேண்­டும். குறிப்­பாக, பெரிய விலங்­கு­களை உள்­ள­டக்­கிய பரி­சோ­த­னை­கள் மற்­றும் கடு­மை­யான வலி அல்­லது துன்­பத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நடை­மு­றை­க­ளுக்கு இந்த மேற்­பார்வை அவ­சி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">3. வன­வி­லங்­கு­கள் மற்­றும் மனி­தர்­க­ளோடு இணைந்து வாழும் விலங்­கு­க­ளைப் பிடிப்­ப­தற்கோ அல்­லது ஆய்­வ­கச் சோத­னை­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தற்கோ வழி­வ­குக்­கும் தெளி­வற்ற விலக்­கு­களை நீக்­கு­வ­தன் மூல­மும், எந்­த­வொரு விதி­வி­லக்­கு­க­ளும் துல்­லி­ய­மாக வரை­ ய­றுக்­கப்­பட்டு, சட்­டப்­பூர்­வ­மாக நியா­யப்­ப­டுத்­தப்­பட்டு, கடு­மை­யான ஆய்­வுக்குஉட்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தன் மூல­மும், அவற்­றுக்­கான பாது­காப்­பு­களை வலுப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">4. பொருத்­த­மான மயக்க மருந்து மற்­றும் வலி நிவா­ர­ணம், மனி­தா­பி­மான நிலை­கள், பொருந்­தக்­கூ­டிய இடங்­க­ளில் மறு­வாழ்­வுத் தேவை­கள் மற்­றும் வச­தி­க­ளின் கண்­கா­ணிப்பு மற்­றும் முன்­ன­றி­விப்­பில் ­லாத உள்­ளிட்ட, திற­மை­யான அமல்­ப­டுத்­தக்­கூ­டிய இறுதி ஆராய்ச்சி ஆய்­வு­கள் விலங்கு நலத் தர­நி­லை­க­ளைப் பாது­காக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">5. அறி­வி­யல் ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட விலங்­கு­கள் அல்­லாத ஆராய்ச்சி முறை­க­ளின் வளர்ச்சி மற்­றும் பயன்­பாட்டை ஊக்­கு­விக்க, இதற்­கெ­னத் தனிப்­பட்ட நிதி ஒதுக்­கீடு, நிறு­வ­னக் கட்­ட­மைப்பு வச­தி­கள் மற்­றும் அறி­வி­யல் ரீதி­யா­கச் சாத்­தி­ய­மான இடங்­க­ளில் விலங்­கு­கள் மீதான பரி­சோ­த­னை­க­ளைக் குறைத்து, படிப்­ப­டி­யாக மாற்று முறை­க­ளால் அவற்றை முழு­மை­யாக மாற்­று­வ­தற்­கான தெளி­வான தேசி­யத் திட்­டம் ஆகி­ய­வற்றை உரு­வாக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அறி­வி­யல் முன்­னேற்­ற­மும் விலங்­கு­கள் நல­னும் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும். ஒன்று மற்­றொன்­றிற்­குத் தடை­யாக இருப்­ப­தாக கரு­தப்­ப­டக் கூடாது. தற்­போ­துள்ள சட்­டத்­தின் கீழ் விலங்­கு­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் பாது­காப்­பில் இடை­வெ­ளி­களை உரு­வாக்­கு­வ­தற்­குப் பதி­லாக, நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக, ஒழுங்­கு­முறை சீர்­தி­ருத்­த­மா­னது நெறி­முறை சார்ந்த ஆராய்ச்சி, வெளிப்­ப­டைத்­தன்மை மற்­றும் பொறுப்­புக்­கூ­றல் ஆகி­ய­வற்றை வலுப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">முன்­மொ­ழி­யப்­பட்ட விதி­களை அவற்­றின் தற்­போ­தைய வடி­வத்­தி­லி­ருந்து திரும்­பப் பெற­வும், விலங்­கு­க­ளைப் பாது­காப்­ப­தோடு நம்­ப­க­மான மற்­றும் அறி­வி­யல் பூர்­வ­மான ஆராய்ச்­சியை முன்­னெ­டுத்­துச் செல்­லும் ஒரு கட்­ட­மைப்பை உரு­வாக்க, வெளிப்­ப­டை­யான, ஆதார அடிப்­ப­டை­யி­லான கலந்­தாய்வு செயல்­மு­றை­யைத் தொடங்­க­வும் தாங்­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு  அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>