<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="620,71,955,1489" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 25 2026 19:29:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261026T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="26102026-CBE-07" position.sequence="07" ex-ref="26102026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">மூவலூர் இராமாமிர்தம்</lang>
	</hl4>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">சிந்­திக்­கத் தூண்­டிய திரா­விட எழுத்­து­கள்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Pic324.10.2021_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Ramamirtham241_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய இயக்­கத்தின் பழைய கால நிகழ்ச்சிகளைப் பற்றி ஏதா­வது எழு­துங்­கள் என்று “முர­சொலி”  ஆசி­ரி­யர் கேட்­டார். எல்லா நிகழ்ச்­சி ­க­ளை­யும் எடுத்­துச் சொல்­லு­வ­தா­னால் இந்த ஏடு போதாது. எழு­ப­தைக் கடந்து எண்­பதை நெருங்­கிக் கொண்­டி­ருக்­கும் என்­னால் இந்­தத் தள்­ளாத வய­தில் அவை­க­ளை­யெல்­லாம் முறை­யாக நினை­வுக்­குக் கொண்­டு­வந்து எழு­த­வும் இய­லாது. எனவே நானும் பெண்­ணி­னத்­தைச் சேர்ந்­த­வ­ளாக இருப்­ப­தால் என்­னைப் போலவே இந்த இயக்­கத்­துக்­கா­கப் பாடு­பட்டு – ஆனால் இப்­போது நம்­மு­டன் இல்­லாத – நமது அன்­னை­யா­ரான நாகம்­மை­யார் அவர்­க­ளைப் பற்றி சில சொல்­ல­லா­மென எண்­ணு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1921–ம் ஆண்­டில், திருச்­சி­யில் தமிழ்­நாடு காங்­கி­ரஸ் மாகா­ணக் கமிட்­டிக் கூட்­டம் நடை­பெற்­றது. அப்­போது நான் மாகா­ணக் கமிட்டி உறுப்­பி­னர். அந்­தக் கூட்­டத்­தில் திரு. வி. க., டாக்­டர் வர­த­ரா­ஜுலு நாயுடு, தண்­ட­பா­ணிப் பிள்ளை, ஆச்­சா­ரி­யார் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர். பெரி­யா­ரும் அவ­ரோடு அன்னை நாகம்­மை­யா­ரும் வந்­தி­ருந்­த­னர். அங்­கு­தான் அம்­மை­யார் அவர்­களை முதன்­மு­றை­ யா­கப் பார்த்­தேன். அது முதல் அவர்­கள் மறை­யும் வரை – பெரி­யாரை விட்­டுப் பிரிந்­த­தையே நான் கண்­ட­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கள்­ளுக்­கடை மறி­யல் செய்­வ­தென்று காங்­கி­ர­சில் தீர்­மா­னம் அமு­லுக்கு வந்­த­போது அம்­மை­யார் தலை­மை­யாக நின்று மறி­ய­லைத் தீவி­ர­மாக நடத்­தி­னார்­கள். மறி­யல் 
வெற்­றி­க­ர­மாக நடந்து வந்­த­தைக் கண்டு, அப்­போது வைஸ்­ரா­யாக இருந்த லார்டு இர்­வின் பிரபு காந்­தி­யாரை அழைத்து, எப்­ப­டி­யா­வது அந்த மறி­ய­லைக் கைவிட வேண்­டு­மென்று கேட்­ட­போது, காந்­தி­யார், “மறி­யலை நிறுத்­தும் அதி­கா­ரம் என்­னி­டம் இல்லை; அதற்கு ஈரோட்­டி­லுள்ள ஈ. வெ. ரா. நாகம்­மை­யார் அவர்­க­ளைத்­தான் கேட்­க­வேண்­டும்” எனக் கூறி­னார். அந்த மறி­ய­லில் பெரி­யார், ஆச்­சா­ரி­யார் எல்­லோ­ரும் கலந்­து­
கொண்­ட­னர். என்­றா­லும் அம்­மை­யா­ருக்­குத்­தான் பெரு­மை­ய­ளித்­தார் காந்­தி­யார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிறகு வைக்­கத்­தில் தீண்­டாமை ஒழிப்­புக்­காக சத்­தி­யாக்­கி­ர­கம் நடத்­தச் செல்­லும்­போது அம்­மை­யார் என்­னை­யும் அழைத்­தார்­கள். அதற்கு நான், “இதைப்­பற்றி காங்­கி­ர­சில் தீர்­மா­னம் ஒன்­றும் போட­வில்லை. ஆனா­லும் உங்­க­ளுக்­குத் துணை­யாக வேண்­டு­மா­னால் வரு­கி­றேன்” என்­றேன். உடனே அவர்­கள், “நான் என் கண­வன் துணை­யு­டன் செல்­கி­றேன். வேறு துணை வேண்­டி­ய­தில்லை” என்று கூறி­விட்டு வைக்­கத்­துக்­குச் சென்­றார்­கள். போராட்­டத்­தில் வெற்­றி­யும் பெற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று நம்­மு­டைய கொள்­கை­கள் நாடெங்­கும் பரவி, இதைப் பற்­றித் தெரி­யா­த­வரே இல்­லை­யென்­கிற நிலை­மை ­யி­ருக்­கி­றது. இயக்­கத்­தில் பணி­யாற்­ற­வும் நீ முந்தி; நான்­முந்தி என்று ஏரா­ள­மான தோழர்­கள் இன்று நிரம்­பி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால் ஆரம்­பக் காலத்­தில் இயக்­கத்­தில் விரல் விட்டு எண்­ணக்­கூ­டிய சிலர்­தான் இருந்­தார்­கள். இயக்­கத்­துக்­கென்று நிதியோ,  பண வச­தியோ கிடை­யாது. அவ­ர­வர்  சொந்த வேலை­க­ளை­யும் விட்­டு­விட்டு இயக்­கமே உயிர் என்று முன் வந்­த­வர்­கள். அப்­பேர்ப்­பட்­ட­வர்­களை எப்­போ­தும் அன்­போடு வர­வேற்று, உப­ச­ரித்து, ஆத­ரித்து வந்­த­வர்­கள் அம்­மை­யார்­தான். அம்­மை­யார் மட்­டும் இல்­லா­ம­லி­ருந்­தால் அப்­போது இயக்­கத்­துக்கு ஆளே கிடைத்­தி­ருக்­காது, இப்­போது இந்த அள­வுக்கு வளர்ச்­சி­யும் வந்­தி­ருக்­காது என்­பது என்­னு­டைய உறு­தி­யான எண்­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உதா­ர­ண­மா­கச் சொல்ல வேண்­டு­மா­னால், அடிக்­கடி அய்­யா­வுக்­கும் அழ­கி­ரிக்­கும் வருத்­தம் உண்­டா­கும். அம்­மா­திரி நேரங்­க­ளி­லெல்­லாம் அம்­மை­யார் அழ­கி­ரியை அழைத்து, ‘தந்தை கோபித்­தால் தாயி­டத்­தில் மகன் இருக்க வேண்­டி­ய­து­தானே முறை’ என்று கூறி ஆறு­தல் சொல்­லு­வார்­கள். எல்­லோ­ரி­டத்­தி­லும் இதைப் போலவே இத­மான வார்த்­தை­க­ளைச் சொல்லி சமா­தா­னப்­ப­டுத்­து­வார்­கள். அன்று பணி­யாற்­றிய யாவ­ரும் அன்­புக்­குக் கட்­டுப்­பட்­டுத்­தான் இருந்து வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அந்­தக் காலத்­தில் கழ­கத்­திற்­கென்று அமைப்பு முறை இல்லை. அத­னால் எந்த விஷ­யத்­தைப் பற்றி முடிவு செய்ய வேண்­டு­மா­னா­லும் இயக்­கத்­தி­லுள்ள முக்­கி­ய­ மா­ன­வர்­கள் ஈரோடு சென்று வர­வேண்­டும். சொந்­தச் செல­வில், காங்­கி­ர­சுக்கு இருந்­த­து­போல் இந்த இயக்­கத்­துக்கு வெளி­யார் பண உத­வி­யும் கிடை­யாது. ஆகவே இப்­ப­டிப்­பட்ட 
நெருக்­க­டி­க­ளுக்­கி­டை­யி­லும் இயக்­கம் வளர்ந்­த­தென்­றால் அதற்கு அம்­மை­யா­ரின் அன்பு கலந்த உற்­சா­க­மூட்­டும் மொழி­க­ளைத் தவிர வேறு எது­தான் கார­ண­மா­யி­ருக்க முடி­யும்! ஆனால் அம்­மை­யார் எந்­தக் காலத்­தி­லும் மேடை­யே­றிப் பேசி­ய­து­மில்லை; எந்­தப் 
பத்­தி­ரி­கை­யி­லும் எழு­தி­ய­து­மில்லை. இயக்­கத்­தையே வாழ்­வா­கக் கருதி அவ்­வ­ளவு
அக்­க­றை­யோடு பணி­யாற்றி வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு சம­யம் காரைக்­கு­டி­யில் தோழர் முரு­கப்பா அவர்­கள் முயற்­சி­யால் ஒரு சுய­ம­ரி­யாதை மாநாடு நடை­பெற்­றது. அதற்கு மறைந்த தோழர் ஆர். கே. சண்­மு­கம் அவர்­கள் தலைமை தாங்­கி­னார்­கள். தன்­னு­டைய தலை­மை­யு­ரை­யில், ‘தகப்­பன் சொத்­தில் பெண்­க­ளுக்­கும் உரி­மை­யி­ருக்க வேண்­டும்’ என்று பேசி­னார்­கள். அதன்­படி அந்த மாநாட்­டில் அதே மாதிரி தீர்­மா­னம் ஒன்­றும் நிறை­வேற்­றி­ னோம். இவ்­வ­ளவு காலத்­துக்­குப் பிறகு இப்­போது அது சட்­ட­மாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. கால­தா­ம­த­மாக ஆனா­லும் இது வெற்றி பெற்­றது குறித்து எனக்கு மிக­வும் மகிழ்ச்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டித்­தான் முன்பு தேவ­தாசி முறை ஒழிப்பு சம்­பந்­த­மாய் நான் தீவி­ர­மாய்ப் பணி­யாற்­றி­ய­தைப் பாராட்டி காந்­தி­யார் எனக்கு ஒரு கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். நான் அந்­தக் கடி­தத்தை வைத்து தினந்­தோ­றும் பூஜை செய்து வந்­தேன். 
காங்­கி­ரசை  விட்டு வில­கிய பின்பு  – அந்­தக் கடி­தம் என்ன, காந்­தி­யாரே நினை­வி­லி­ருந்து நீங்­கி­விட்­டார். என்ன செய்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்னை நாகம்­மை­யார் மறைந்த செய்தி தந்தி மூலம் மாய­வ­ரம் தோழர் நட­ரா­ச­னுக்­குக் கிடைத்­தது. உடனேஅல­றிக்­கொண்டு என்­னி­டம் ஓடி வந்­தார். இரு­வ­ரும் தேம்­பித் தேம்பி அழு­தோம். என்ன பயன்? எங்­க­ளைத் தேற்ற அன்னை நாகம்­மை­யாரா இருக்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“ஆயி­ரம் இரா­மர் நின்­கேள் ஆவரோ தெரி­யே­னம்மா” என்­ற­படி – எத்­தனை பேர் சேர்ந்­தா­லும் ஒரு அன்னை நாகம்­மை­யா­ருக்கு ஈடாக முடி­யுமா? அவர்­க­ளின் அன்பு தவ­ழும் முக­மும், ஆத­ரவு நிரம்­பிய கரங்­க­ளும் நம்மை என்­றும் இந்த இயக்­கப் பணி­யி­லி­ருந்து வழு­வா­தி­ருக்க உத­வுமே! அது போதும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அன்னை நாகம்­மை­யார் புகழ் நீடு வாழ்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">–முர­சொலி பொங்­கல் மலர் – 1956</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>