<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Oct 26 2026 15:52:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261027T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="27102026-MDU-03" position.sequence="03" ex-ref="27102026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.99610108">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">SIR மென்பொருளில் நடந்தது என்ன? தடயங்களை மறைக்கும் திட்டமிட்ட  சதி!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup946081_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ருமாபெ­ரும் திருட்­டுத்­த­னத்­தில் கையும்கள­வு­மாக மாட்­டிக்­கொண்­டால் திரு­டர்­கள் செய்­யும் முதல் வேலை, அதற்­கான தட­யங்­களை மறைப்­பது அல்­லது அழிப்­ப­து­தான். இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம், ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்­தம்’ (SIR) என்ற பெய­ரில் திரு­டி­யி­ருப்­பது பொன்­னையோ பொரு­ளையோ அல்ல; அதை­வி­டப் பல்­லா­யி­ரம் மடங்கு மதிப்பு வாய்ந்த ஜன­நா­ய­கத்­தை­யும், மக்­க­ளின் மகத்­தான வாக்கு 
உரி­மை­யை­யும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கொலைக் குற்­றத்­தை­வி­டக் கொடிய குற்­றத்­தைச் செய்­தி­ருக்­கி­றது தேர்­தல் ஆணை­யம். SIR பணி­க­ளின் மூலம் 
வாக்­கு­கள் எவ்­வாறு திரு­டப்­பட்­டன என்­பது குறித்த விவா­தங்­க­ளும் போராட்­டங்­க­ளும் தொடர்ந்து நடந்து வரு­கின்­றன. ஆனால், ஒன்­றிய அர­சும் அதற்­குத் துணை­நிற்­கும் தேர்­தல் ஆணை­ய­மும் கல்­நெஞ்­சத்­தோடு எதற்­கும் அசைந்­து­கொ­டுக்­கா­மல் இருக்­கின்­றன. ஒரு­பு­றம் தேர்­தல் ஆணை­யத்­திற்கு எதி­ரான போராட்­டங்­கள் கடு­மை­யாக ஒடுக்­கப்­ப­டு­கின்­றன; இன்­னொ­ரு­பு­றம் SIR செயல்­பா­டு­கள் குறித்து தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் (RTI) கீழ் எழுப்­பப்­ப­டும் கேள்­வி­களுக்­குத் தேர்­தல் ஆணை­யம் பதி­ல­ளிக்க மறுத்து வரு­கி­றது. தலை­மைத் தேர்­தல் ஆணை­ய­ருக்­கும் பிற தேர்­தல் ஆணை­யர்­க­ளுக்­கும் இடையே ஏற்­பட்ட மோதல்­கள்­கூட, இந்­தத் தொழில்­நுட்ப ரீதி­யான மறை­மு­கச் சதி­கள் தொடர்­பா­ன­வை­தான் என்­பதைஇங்கு நினை­வு­கூர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">SIR சர்ச்­சை­யின் மையப்­புள்­ளி­யாகஇருக்­கும் ‘இசி­ஐ­நெட்’ (ECINET) மென்­பொ­ருள்குறித்த தக­வல்­க­ளைத் தேர்­தல் ஆணை­யம் தொடர்ந்து மறைத்து வரு­கி­றது. RTI மூலம் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு மழுப்­ப­லான பதில்­களே அளிக்­கப்­பட்­டன. பல­வீ­ன­மான கார­ணங்­க­ளைக் கூறி, மென்­பொ­ரு­ளின் பெயரை வெளிப்­ப­டுத்­தவோ, செயற்கை நுண்­ண­றிவு (AI) பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்­ப­தை­யும் அதற்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் என்ன என்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தவோ தேர்­தல் ஆணை­யம் மறுத்­து­விட்­டது. மோசடி எப்­படி அரங்­கேற்­றப்­பட்­டது என்­பதை நிரூ­பிக்க வேண்டுமானால், அதற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கரு­வி­களைநாம் தெளி­வா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">RTI கேள்­வி­க­ளும் தேர்­தல் ஆணை­யத்­தின் மழுப்­பல்­க­ளும்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­கா­ளர் பட்­டி­ய­லைச் சீர­மைப்­ப­தற்­காக இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் மேற்­கொண்ட ‘வாக்­கா­ளர் பட்­டி­யல் சிறப்பு தீவிர திருத்த’ (SIR)பணி­யில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மென்­பொ­ருள் (Software) தொடர்­பாக, தெலங்­கா­னா­வைச் சேர்ந்த சமூக ஆர்­வ­லர் எம்.ஏ. முஜீப் அய்­யூப் உள்­ளிட்­டோர் RTI சட்­டத்­தின்­கீழ் எழுப்­பிய கேள்­வி­க­ளும், அதற்­குத் தேர்­தல் ஆணை­யம் அளித்த பதில்­களும் பெரும் விவா­தங்­களை ஏற்­ப­டுத்தி ­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உள்ள பிழை­கள் மற்­றும் முரண்­பா­டு­க­ளைக் கண்­ட­றி­யப் பயன்­ப­டுத்­தப்­பட்ட தொழில்­நுட்­பத்­தின் வெளிப்­ப­டைத்­தன்­மை­யைக் கேள்­விக்­குள்­ளாக்­கும் வகை­யில் பின்­வ­ரும் முதன்­மை­யான கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1.வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உள்ள முரண்­பாடு­ க­ளைக் கண்­ட­றி­யத் தேர்­தல் ஆணை­யம் பயன்­ப­டுத்­திய மென்­பொ­ருள், செயலி, அல்­கா­ரி­தம் அல்­லது செயற்கை நுண்­ண­றிவு (AI) தளத்­தின் பெயர் 
மற்­றும் அதன் பதிப்பு (Version) என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2.	இந்த மென்­பொ­ரு­ளா­னது வாக்­கா­ளர்­களின் விவ­ரங்­க­ளைத் தானி­யங்கி முறை­யில் (Automatically) ‘சந்­தே­கத்­திற்­கு­ரி­யவை’ என வகைப்­ப­டுத்தி, சரி­பார்ப்பு, திருத்­தம் அல்­லது நீக்­கத்­திற்­குப் பரிந்­து­ரைக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3.	இந்த SIR பணி­க­ளின் ஏதே­னும் ஒரு 
கட்­டத்­தில் செயற்கை நுண்­ண­றிவு (AI), இயந்­தி­ரக் கற்­றல் (Machine Learning) அல்­லது கணிப்பு பகுப்­பாய்வு (Predictive Analytics) போன்ற தானி­யங்கி முடி­வெ­டுக்­கும் தொழில்­நுட்­பங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">4.	இந்த மென்­பொ­ருள் மூலம் தவ­றான அடை­யா­ளப்­ப­டுத்­து­த­லால் தகு­தி­யான உண்­மை­யான வாக்­கா­ளர்­க­ளின் பெயர்கள் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­ப­டா­மல் இருக்க வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு வழி­மு­றை­கள் (Safeguards) என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">5.	இவ்­வாறு மென்­பொ­ரு­ளால் சுட்­டிக்­காட்­டப்­ப­டும் முரண்­பா­டு­களை இறுதி நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்­பாகஆய்வு செய்­யும் அதி­கா­ரி­கள் யார்? அதற்­கான பணிப்­பாய்வு (Workflow) என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இக்­கேள்­வி­க­ளுக்­குத் தேர்­தல் ஆணை­யம் நேர்­மை­யான பதில்­களை அளிக்­கா­மல், திசை­தி­ருப்­பும் மழுப்­ப­லான வாதங்­களையே முன்­வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 1: “வணி­கப் பாது­காப்பு மற்­றும் அறி­வு­சார் சொத்­து­ரிமை”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேர்­தல் ஆணை­யத்­தின் வாதம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“மென்­பொ­ரு­ளின் பெயர் மற்­றும் அதன் பதிப்பு (Version) தொடர்­பான விவ­ரங்­கள் வணிக ரக­சி­யம், வர்த்­தக ரக­சி­யங்­கள் மற்­றும் அறி­வு­சார் சொத்­து­ரிமை (Commercial confidence, trade secrets, and intellectual property) சார்ந்­தவை என்­ப­தால், RTI சட்­டத்­தின் பிரிவு 8(1)(d)-ன் கீழ் இதற்கு விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இது உண்­மை­யல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">1.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொது நலன் புறக்­க­ணிக்­கப்­ப­டு­தல்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு ஜன­நா­யக அமைப்­பின் அடிப்­ப­டைத் தூண்­கள் வெளிப்­ப­டைத்­தன்­மை­யும் (Transparency) பொறுப்­புக்­கூ­ற­லுமே (Accountability) ஆகும். தேர்­தல் என்­பதுநாட்­டின் ஜன­நா­யக அடித்­த­ளம். அதில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் அமைப்­பு­கள் நம்­ப­க­மா­ன­வையா என்­பதை அறி­வது140 கோடி மக்­க­ளின் அடிப்­படை உரிமை.இரண்டு நிறு­வ­னங்­க­ளின் “வணிக ரக­சி­யத்தை” விட, “தேர்­தல் அமைப்­பின் மீதான மக்­க­ளின் நம்­பிக்கை” என்­பதே மிகப்­பெ­ரிய பொதுநலன் சார்ந்த விஷ­யம். எனவே, பிரிவு 8(1)(d)-ல் உள்ள பொது நலன் விதி­யைப் பயன்­ப­டுத்தி இத்­த­க­வலை அளித்­தி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">2.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தவ­றான பாது­காப்பு அணு­கு­முறை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொழில்­நுட்ப உல­கில், “ஒரு அமைப்­பின் மென்­பொ­ருள் பெயரை ரக­சி­ய­மாக வைப்­ப­தன் மூலம் மட்­டுமே அத­னைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க முடி­யும்” என்ற அணு­கு­முறை அறி­வி­யல்­பூர்­வ­மாக நிரா­க­ரிக்­கப்­பட்ட ஒன்­றா­கும். உண்­மை­யான பாது­காப்பு என்­பது மென்­பொ­ரு­ளின் வலு­வான கட்­ட­மைப்பு (Robust Architecture) மற்­றும் திறந்த மூலத் தணிக்கை (Open Source/Independent Audit) மூலம் மட்­டுமே சாத்­தி­ய­மா­கும். மென்­பொ­ருள் பதிப்பு எண்ணை மறைப்­பது சந்­தே­கங்­களை அதி­க­ரிக்­குமே தவிர,பாது­காப்­புக்கு உத்­த­ர­வா­தம் அளிக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3.	பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்கு பொருந்­தாத விதி: தனி­யார் நிறு­வ­னங் களுக்­கி­டை­யே­யான சந்­தைப் போட்­டி­யைக் கருத்­தில் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட பிரிவு 8(1)(d)-ஐ, தேர்­தல் நடத்­தும் ஒரு பொது அதி­கார அமைப்­பிற்­குப் பயன்­ப­டுத்­து­வது சட்­டத்­தின் நோக்­கத்­தையே சிதைப்­ப­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">4.	சர்­வ­தேச நடை­மு­றை­கள்: ஜெர்­மனி, நெதர்­லாந்து போன்ற நாடு­க­ளில் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­க­ளின் செயல்­பாட்­டில் “பொது­மக்­க­ளுக்­கான வெளிப்­ப­டைத்­தன்மை” (Public Verifiability) இல்லை என்­ப­தற்­கா­கவே அவை அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­திற்கு எதி­ரா­னது என அறி­விக்­கப்­பட்டு ரத்து செய்­யப்­பட்­டன. அயர்­லாந்து போன்ற நாடு­களில் மென்­பொ­ருள் கட்­ட­மைப்பு தொடர்­பான விவ­ரங்­கள் பொது­மக்­கள் தணிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 
பின்­னரே பரி­சீ­லிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு ஜன­நா­யக அமைப்­பில், வணிக நிறு­வ­னங்­க­ளின் “வர்த்­தக ரக­சி­யத்தை” விட “வாக்­கா­ளர்­க­ளின் நம்­பிக்கை” மிக உயர்ந்த இடத்­தில் வைக்­கப்­பட வேண்­டும். மென்­பொ­ருள்­க­ளின் முழு மூலக் குறி­யீட்டை (Source Code) வெளி­யி­டா­விட்­டா­லும் கூட, அதன் மென்­பொ­ருள் பெயர் மற்­றும் பதிப்பு போன்ற அடிப்­படை விவ­ரங்­களை வெளிப்­ப­டுத்­து­வது வணி­கப் போட்­டியை எந்த வகை­யி­லும் பாதிக்­காது. மாறாக, அத்­த­கைய வெளிப்­ப­டைத்­தன்மை மட்­டுமே தேர்­தல் ஆணை­யத்­தின் மீதான மக்­க­ளின் நம்­ப­கத்­தன்­மையை வலுப்­ப­டுத்­தும். எனவே, இத்­த­க­வலை மறுக்க பிரிவு 8(1)(d)-ஐ  பயன்­ப­டுத்­து­வது ஜன­நா­யக தத்­து­வத்­திற்கு முற்­றி­லும் முர­ணா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் 2: “புதிய மென்­பொ­ருள் எது­வும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேர்­தல் ஆணை­யத்­தின் வாதம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“SIR பணிக்­கா­கப் புதிய மென்­பொ­ருள் எது­வும் உரு­வாக்­கப்­ப­டவோ அல்­லது வாங்­கப்­ப­டவோ இல்லை; வாக்­கா­ளர்­க­ளைச் சேர்ப்­பது அல்­லது நீக்­கு­வது குறித்து தொகுதி அள­வி­லான தேர்­தல் பதிவு அதி­கா­ரி­கள்­தான் (EROs) ஆதா­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் 
முடி­வெ­டுக்­கி­றார்­கள்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இது மற்­றொரு பொய் பிரச்­சா­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“புதிய மென்­பொ­ருள் இல்லை” என்று கூறி­னா­லும், ஏற்­க­னவே உள்ள மென்­பொருள்­க­ளி­லேயே ஒரே மாதி­ரி­யான பெயர்­கள் (Duplicates), முக­வரி மாற்­றங்­கள் அல்­லது போலி வாக்­கா­ளர்­க­ளைக் கண்­ட­றி­யப் பின்­ன­ணி­யில் அல்­கா­ரி­தம்­கள் (Algorithms) செயல்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மென்­பொ­ருள் அல்­லது AI அளிக்­கும் “நீக்­கப்­பட வேண்­டி­ய­வர்­க­ளின் பட்­டி­யல்” அல்­லது “சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்­கள் பட்­டி­யல்” அடிப்­ப­டை­யி­லேயே அந்­தந்த கள அதி­கா­ரி­க­ளான வாக்­குச்­சா­வடி நிலை அதி­கா­ரி­கள் (BLO) கள ஆய்­விற்கே செல்­கி­றார்­கள். இத­னால், மென்­பொ­ரு­ளின்வழி­மு­றை­க­ளில் (Logic/Rules) சிறு தவறுஇருந்­தா­லும், அது லட்­சக்­க­ணக்­கான வாக்­கா­ளர்­க­ளைப் பாதிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">களத்­தில் உள்ள BLO அதி­கா­ரி­க­ளுக்­குப் பணிச்­சுமை அதி­க­மாக இருக்­கும் சூழ­லில், மென்­பொ­ருள் கொடுக்­கும் பரிந்­து­ரை­களை அவர்­கள் 100% நேரில் சென்றுசரி­பார்க்­கி­றார்­களா என்­பது கேள்­விக்­குறியே. பெரும்­பா­லான நேரங்­க­ளில், மென்­பொ­ருள் சுட்­டிக்­காட்­டும் பெயர்­களை அதி­கா­ரி­கள் விரி­வான விசா­ர­ணை­யின்றி நீக்­கி­வி­டும் ஆபத்து உள்­ளது. இதன் கார­ண­மா­கவே, லட்­சக்­க­ணக்கான வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் அவர்­க­ளுக்­குத் தெரி­யா­ம­லேயே பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் (தெலங்­கானா உள்­ளிட்ட பிற மாநி­லத் தேர்­தல் க­ளில்) நடந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மென்­பொ­ருள் எவ்­வாறு வாக்­கா­ளர்­களைப் பிரித்­தெ­டுக்­கி­றது (Inclusion/Exclusion criteria) என்­ப­தற்­கான “மூலக் குறி­யீடு” (Source Code) அல்­லது “விதி­கள்” (Rules) பொதுத் தணிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. ஒரு குறிப்­பிட்ட சமூ­கம், பகுதி அல்­லது குறிப்­பிட்ட வய­து­டைய வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் 
அதி­க­ள­வில் விடு­ப­டும்­போது, அதற்கு மென்­பொ­ரு­ளின் பிழையா அல்­லது அதி­கா­ரி­க­ளின் பிழையா என்­ப­தைக் கண்­ட­றி­யச் சுயா­தீ­னத் தணிக்கை (Indepen dent Audit) வசதி இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தம் (SIR) மற்­றும் தேர்­தல் மேலாண்­மைப் பணி­க­ளில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் மென்­பொ­ருள்­களை (எ.கா: ECINET போன்­றவை) அர­சி­யல் கட்­சி­க­ளின் தேர்­தல் முக­வர்­கள் (Election Agents / Polling Agents) நேர­டி­யாக அணு­கவோ, தணிக்கை செய்­யவோ முடி­யாத நிலை குறித்­துத் தீவி­ர­மான குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.  தேர்­தல் முக­வர்­க­ளுக்கு வாக்­கா­ளர் 
பட்­டி­ய­லின் இறு­திப் பிரதி (Hard Copy/PDF) மட்­டுமே வழங்­கப்­ப­டு­கி­றது. ஆனால், அந்­தப் பட்­டி­ய­லி­லி­ருந்து பெயர்­கள் எதன் அடிப்­ப­டை­யில் நீக்­கப்­பட்­டன அல்­லது சேர்க்­கப்­பட்­டன என்ற மென்­பொ­ரு­ளின் தர­வுப் பின்­னணி (Data Logs / System Audit Trails) முக­வர்­க­ளின் பார்­வைக்­குக் கிடைப்­ப­தில்லை. மென்­பொ­ருள் எந்­தக் கார­ணி­யைக் (Logic / Rules) கொண்டு ஒரு வாக்­கா­ளரை “சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்” எனக் சுட்­டப்­ப­டு­கி­றது  (Flagging) என்­ப­தைத் தேர்­தல் முக­வர்­களோ அல்­லது அர­சி­யல் கட்­சி­களோசரி­பார்க்க அனு­மதி இல்லை. தவ­றான 
முடி­வு­களை சரி செய்ய தேர்­தல் அதி­கா­ரி­கள். முக­வர்­கள் அணுக முடி­யா­த­படி மையப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பாட்டு அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புதிய தொழில்­நுட்ப மாற்­றங்­களை 
மறைத்­தல்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">SIR போன்ற தீவி­ரத் திருத்­தப் பணி­க­ளின் போது, தர­வுத்­த­ளங்­களை ஒருங்­கி­ணைத்­தல் (Database Integration), ஆதார் இணைப்பு சரி­பார்ப்பு அல்­லது தானி­யங்கி ஒப்­பி­டு­தல் போன்ற புதிய அம்­சங்­கள் (Features) மென்­பொ­ரு­ளில் சேர்க்­கப்­ப­டு­கின்­றன. “புதிய மென்­பொ­ருள் வாங்­கப்­ப­ட­வில்லை” என்று கூறு­வது தொழில்­நுட்ப ரீதி­யா­கச் சரி­யாக இருக்­க­லாம்; ஆனால் பயன்­பாட்­டில் உள்ள மென்­பொ­ரு­ளில் செய்­யப்­பட்ட மாற்­றங்­கள் மற்­றும் புதுப்­பிப்­பு­கள் (Updates/Upgrades) என்ன? என்­பதை வெளிப்­ப­டுத்­தா­மல் இருப்­பது வெளிப்­ப­டைத்­தன்­மைக்கு முர­ணா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரி­ணா­முல் காங்­கி­ரஸ் (TMC) எம்.பி.க்களான சாகேத் கோகலே மற்­றும் டெரெக் ஓ பிரை­யன் ஆகி­யோர், தேர்­தல் ஆணை­யத்­தின் இந்த ரக­சி­யத்­தன்மை பெரும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கக் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.இது வெளிப்­ப­டை­யான தேர்­தல் திருத்­தம் அல்ல; மாறாக திட்­ட­மிட்ட “மென்­பொ­ருள் மூல­மான தேர்­தல் முறை­கேடு” (Software Intensive Rigging) என்று அவர்­கள் விமர்­சித்­துள்­ள­னர். ‘டி.சி­.எஸ்.’ (TCS) நிறு­வ­னம் உரு­வாக்­கிய ‘இ.சி­.ஐ­.நெட்’ (ECINET) மென்­பொ­ரு­ளின் பங்­க­ளிப்­பைத் தேர்­தல் ஆணை­யம் ஏன் வெளிப்­ப­டை­யாக அறி­விக்­க­வில்லை என்­றும் கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டிஜிட்­டல் உரி­மை­கள் அமைப்­பான 
‘இன்­டர்­நெட் ஃப்ரீடம் ஃபவுண்­டே­ஷன்’ (IFF) மற்­றும் பல ஆர்­வ­லர்­கள், முறை­யான தணிக்கை அல்­லது பொது விவ­ரங்­கள் இல்­லா­மல் இந்த அல்­கா­ரி­தம்­கள் செயல்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ள­னர். இரண்டு தசாப்­தங்­கள் பழ­மை­யான தர­வு­க­ளு­டன் ஒப்­பிட்டு இந்த மென்­பொ­ருள் தானா­கவே வாக்­கா­ளர்­களை நீக்­கு­வ­தால், நாடு முழு­வ­தும் கோடிக்­க­ணக்­கான தகு­தி­யான இந்­தி­யக் குடி­மக் க­ளின் வாக்­கு­ரிமை பறி­போ­கும் ஆபத்து உள்­ள­தாக எச்­ச­ரித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செயற்கை நுண்­ண­றிவு (AI) மூலம் நடந்­தி­ருக்­கக்­கூ­டிய முறை­கே­டு­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பம் SIR முறை­கே­டு­க­ளுக்­குப் பெரு­ம­ளவு பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என்ற சந்­தே­கங்­கள் வலுத்­துள்­ளன. இது­கு­றித்த கேள்­வி­க­ளுக்­குத் தேர்­தல் ஆணை­யம் பதி­ல­ளிக்க மறுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">1. தரவு அடிப்­ப­டை­யி­லான அல்­கா­ரி­தம் முறை­கேடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செயற்கை நுண்­ண­றிவு மாதி­ரி­கள் (AI Models) அவற்­றுக்கு வழங்­கப்­ப­டும் தர­வு­க­ளைக் கொண்­டு­தான் (Training Data) கற்­றுக்­கொள்­கின்­றன. வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உள்ள பெயர்­கள், முக­வ­ரி­கள், சமூ­கப் 
பின்­னணி அல்­லது குறிப்­பிட்ட பகு­தி­யின் மக்­கள்­தொகை விவ­ரங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, குறிப்­பிட்ட சில பிரி­வி­ன­ரின்பெயர்­களை மட்­டும் “சந்­தே­கத்­திற்­கு­ரி­யவை”(Demographic Duplicates/Deficiencies) என்று சுட்­டிக்­காட்­டும் வகை­யில் அல்­கா­ரி­தம்­களை வடி­வ­மைக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முறை­கேடு நடக்­கும் விதம்: எதிர்க்­கட்­சி­க­ளுக்கு ஆத­ர­வான வாக்­கு­வங்­கி­கள் அதி­கம் உள்ள பகு­தி­கள் அல்­லது குறிப்­பிட்ட சமூ­கத்­தி­னர் (சிறு­பான்­மை­யி­னர்/முஸ்­லிம்­கள்) வசிக்­கும் பகு­தி­க­ளில் உள்ள வாக்­கா­ளர் விவ­ரங்­களை இந்த AI மென்­பொ­ருள் தீவி­ர­மாக ஸ்கேன் செய்து, அவற்­றில் உள்ள சிறு எழுத்­துப்­பி­ழை­கள் (Spelling mistakes) அல்­லது முக­வரி முரண்­பா­டு­க­ளைக் கார­ணம் காட்டி, அவற்றை ‘நீக்­கப்­பட வேண்­டி­யவை’ என்ற பட்­டி­ய­லில் தானா­கவே வகைப்­ப­டுத்­த­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தெலங்­கானா உதா­ர­ணம்: இந்­தி­யா­வில் ‘வெப்­லான்ச்’ (Weblaunches) மற்­றும் தெலங்­கா­னா­வில் பயன்­ப­டுத்­தப்­பட்ட Aadhaar-Voter ID linking (EHR) அல்­கா­ரி­தம் மூலம் 2018-ஆம் ஆண்டு முறை­யான கள­ஆய்­வின்றி லட்­சக்­க­ணக்­கான வாக்­கா­ளர் பெயர்­கள் நீக்­கப்­பட்­ட­தா­கப் புகார்­கள் எழுந்­தன. அல்­கா­ரி­தம் செய்த தவ­று­க­ளால் உண்­மை­யான வாக்­கா­ளர்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">2. தானி­யங்கி தர­வுப் பொருத்­தம் மற்­றும் தவ­றான நீக்­கம்: (Automated Data Matching &amp; False Positives)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இயந்­தி­ரக் கற்­றல் (Machine Learning) அல்­கா­ரி­தம்­கள் இரு வேறு தர­வுத்­த­ளங்­களை (Database) ஒப்­பி­டும்­போது ‘ஒரே மாதி­ரி­யான பெயர்­கள்’ (Soundex or Fuzzy Matching அல்­கா­ரி­தம்) இருந்­தால், அவர்­களை ஒரே நபர் என்று தவ­றா­கக் கணிக்க வாய்ப்­புள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முறை­கேடு நடக்­கும் விதம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ண­மாக, ஒரு தொகு­தி­யில் “ அப்­துல் ரஹீம், தந்தை பெயர்: ஷேக் அப்­துல்லா “ என்ற பெய­ரில் இரு­வேறு வார்­டு­க­ளில் இரு­வர் இருந்­தால், AI தொழில்­நுட்­பம் அவர்­களின் புகைப்­ப­டம் அல்­லது முக­வ­ரியை அரை­கு­றை­யா­கப் பொருத்­திப் பார்த்து, இரு­வ­ரும் ஒரு­வரே என்று முடிவு செய்து ஒரு பெய­ரைத் தானா­கவே நீக்­கப் பரிந்­து­ரைக்­க­லாம் (False Positive).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்க உதா­ர­ணம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்­கா­வில் ‘Interstate Crosscheck’ என்ற அல்­கா­ரி­தம் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­போது, அது வெவ்­வேறு நபர்­களை ஒரே நபர் என்று 
தவ­றாக அடை­யா­ளம் கண்டு லட்­சக்­கணக்கான சிறு­பான்­மை­யின வாக்­கா­ளர்­க­ளைப் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கி­யது தொழில்­நுட்ப ரீதி­யாக நிரூ­பிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">3. இலக்கு­ வைக்­கப்­பட்ட வாக்­கா­ளர் 
ஒடுக்­கம்: (Targeted Voter Suppression via Geofencing)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புவி­யி­யல் தக­வல் அமைப்பு (GIS) மற்­றும் இயந்­தி­ரக் கற்­றல் மூலம் ஒரு குறிப்­பிட்ட தேர்­தல் தொகு­தி­யின் வாக்­குப்­ப­திவு வர­லாற்றை (Voting history) பகுப்­பாய்வு செய்ய முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முறை­கேடு நடக்­கும் விதம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எந்­தெந்த வாக்­குச்­சா­வ­டி­க­ளில் (Booths) ஆளுங்­கட்­சிக்கு ஆத­ரவு குறை­வாக இருக்­கி­றது என்­பதை AI மூலம் கண்­ட­றிந்து, 
அந்­தக் குறிப்­பிட்ட புவி­யி­யல் எல்­லைக்­குள் (Geofencing) உள்ள வாக்­கா­ளர்­களின் தர­வு­க­ளில் மட்­டும் மென்­பொ­ருள் மூல­மா­கத் திருத்­தங்­கள் அல்­லது இட­மாற்­றங்­க­ளைச் செய்து குழப்­பத்தை ஏற்­ப­டுத்­த­லாம். இதன் மூலம் தேர்­தல் நாளன்று அவர்­கள் வாக்­குச்­சா­வ­டிக்கு வரும்­போ­து­தான் பெயர் விடு­பட்­டி­ருப்­பது தெரி­ய­வ­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">4. கறுப்­புப்­பெட்டி தொழில்­நுட்­பம் மற்­றும் மனித தணிக்­கை­யின்மை: (Black Box AI &amp; Lack of Oversight)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘பிளாக் பாக்ஸ்’ (Black Box) என்­பது ஒரு AI அல்­கா­ரி­தம் எவ்­வாறு ஒரு முடிவை எடுத்­தது என்ற கார­ணத்தை மனி­தர்­க­ளால் எளி­தில் கண்­ட­றிய முடி­யாத ஒரு தொழில்­நுட்­பச் சூழ­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முறை­கேடு நடக்­கும் விதம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மென்­பொ­ருள் ஒரு வாக்­கா­ளரை “முறை­யற்­ற­வர்” என்று பட்­டி­ய­லிட்­ட­தும், அதைச் சரி­பார்க்­கும் வாக்­குச்­சா­வடி நிலை அதி­கா­ரி­கள் (BLOs), மென்­பொ­ரு­ளின் முடிவை இறுதி உண்மை என்று நம்பி (Automation Bias), கள ஆய்வு செய்­யா­ம­லேயே பெய ர்­களை நீக்­கி­வி­டு­வார்­கள். RTI-யில் இதற்­கான பாது­காப்பு வழி­மு­றை­கள் என்ன என்ற கேள்­விக்­குத் தேர்­தல் ஆணை­யம் உரிய பதில் அளிக்­கா­தது இந்­தச் 
சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொதுத் தணிக்­கை­யின்மை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வின் இன்­டர்­நெட் ஃப்ரீடம் ஃபவுண்­டே­ஷன் (IFF) போன்ற அமைப்­பு­கள், தேர்­தல் ஆணை­யம் பயன்­ப­டுத்­தும் அல்­கா ­ரி­தம்­கள் பொது தணிக்­கைக்கு (Public Audit) உட்­ப­டுத்­தப்­ப­டா­த­வரை, டிஜிட்­டல் முறை­யில் வாக்­கா­ளர்­க­ளைப் பட்­டி­ய­லி­லி­ருந்து விலக்­கு­வது மிக எளி­தாக 
நடக்­கும் என்று தொடர்ந்து எச்­ச­ரித்து 
வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­தான் SIR-இல் நடந்த மோச­டி­க­ளில் தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­பட்ட விதம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த காலங்­க­ளில் மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் தொடர்­பான குற்­றச்சாட்­டு­க­ளில் சந்­தே­கம் எழுப்­பி­ய­வர்­க­ளையேதண்­டித்து அச்­சு­றுத்­தும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீதி­மன்­றங்­கள் தேர்­தல் ஆணை­யத்­தின் தில்­லு­முல்­லு­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­க­ளில் ஆணை­யத்­தின் தன்­னாட்­சித் தன்­மைக்கு அதீத முக்­கி­யத்­து­வம் அளித்­துக் கையாண்ட மென்­மை­யான போக்கு மற்­றும் தேர்­தல் ஆணை­யரை அவ­ரது குற்­றங்­க­ளி­லி­ருந்து பாது­காக்­கும் சட்­டத்­தி­ருத்­தம் ஆகி­யவை கார­ண­மா­கவே, எந்­தக் குற்­றத்­தை­யும் தைரி­ய­மா­கச் செய்­ய­லாம் என்ற துணிச்­ச­லைத் தேர்­தல் ஆணை­யம் பெற்­றுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>