<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,958,1251" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 03:58:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="28102026-VLR-05" position.sequence="05" ex-ref="28102026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup954534_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup954424_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16.5">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரப்­பான் பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் அவர்­க­ளின் இடை­வி­டாத போராட்­டத்­தி­னால் ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தா­னைப் பத­வியை விட்டு இறங்­கச் செய்­த­னர். மோடி­யும் அமித்­ஷா­வும்  அது முதல் பெருத்த அதிர்ச்­சிக்கு ஆளாகி இருக்­கின்­ற­னர். கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சியை இனி, சிஜேபி என்றே சுருக்­க­மாக இக்­கட்­டு­ரை­யில் குறிப்­பிட்டு இருக்­கின்­றோம். இக்­கட்­சி­யின் ‘ரிஷி­மூ­லம்’ என்­பது மக்­க­ளி­ட­மி­ருந்து தான் என்­பதை மோடி­யும் அமித்­ஷா­வும் ஏற்­க­வில்லை, இதில் என்ன வேடிக்கை என்­றால் சி.ஜே.பி.யைப் பற்றி ‘அவர்­கள்’ இது­வரை எது­வும் நேர­டி­யா­கக் கருத்­துத் தெரி­விக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிஜே­பி­யின் போராட்­டங்­கள் ஏன் நடந்­தன? ஏன் தொட­ரு­கின்­றன? அவை  மோடி அர­சின் தன்­னிச்­சை­யான சர்­வா­தி­கார போக்­கி­னால்­தான் நிகழ்ந்து கொண்டு இருக்­கி­றது. ஊழலே இல்­லாது மாதி­ரி­யான ஒரு தோற்­றத்தை வழங்கி வரும் மோடி அரசு அதன் நட­வ­டிக்­கை­களை ஆய்­வுச் செய்­தால் ஊழ­லில் அது குளித்­துக் கொண்டு இருக்­கி­றது. இது மட்­டு­மல்ல. ஜன­நா­ய­கத்­தின் பெய­ரால் நீதி­மன்­றங்­களை மோடி அரசு ஆட்­டிப் படைக்­கி­றது. வரு­மான வரித்­துறை கைகாட்­டிய திசை­யில் பய­ணம் செய்­கி­றது. தேர்­தல் ஆணை­யத்­தைக் கைய­கப்­ப­டுத்­தி­விட்­டது.  அம­லாக்­கத்­துறை அடுத்து என்ன?- – என்று அர­சைக் கேட்டு நிற்­கி­றது. ஆளு­நர்­கள் ‘நாங்­கள் மாநி­லங்­களை என்­ன­வெல்­லாம் செய்ய வேண்­டும்’ என்று கேட்டு நிற்­கி­றார்­கள். தேசிய புல­னாய்வு முகாமை கண்­ஜாடைக்­கா­கக் காத்து நிற்­கி­றது.  இன்­னும் என்­ன­வெல்­லாம் சுயேச்­சை­யான நிறு­வ­னங்­கள் இருக்­கின்­ற­னவோ அவை­யெல்­லாம் மோடி அர­சின் சுட்டு விர­லுக்கு சேவ­கம் செய்ய அடிமை போல் இருக்­கின்­றன. இதைச் செய்­வ­தற்கு முன் அவர்­கள் செய்த பணி என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மோடி­யும் அமித்­ஷா­வும் அரா­ஜ­கத்­தால் ‘மைனா­ரிட்டி’ ஆட்­சியை  ‘மெஜா­ரிட்டி’ ஆட்­சி­யாக ஆக்­கிக் கொண்­டார்­கள். மோடி அதி­கா­ரப்­பீ­டத்­தில் அமர்ந்­த­தற்­கான வெள்­ளி­வி­ழா­வைக் கொண்­டா­டிப்  ‘பேருரை’ ஆற்றி இருக்­கி­றார். மோடி பிர­த­ம­ராகி என்ன இவர் செயற்­க­ரிய திட்­டங்­களை மக்­கள் பலன் அடை­யும் விதத்­தில் நிறை­வேற்­றிக் காட்டி இருக்­கி­றார் என்­றால் ஒன்­றும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மணிப்­பூர் பிரச்­சி­னை­யின் கொந்­த­ளிப்பு அடங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொடுத்த வாக்­கு­று­தி­படி ஜம்­மு-­­ – காஷ்­மீ­ருக்கு மாநில அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதி­தாக லடாக் பகு­திக்­கான கோரிக்­கை­கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் என்ன என்று கேட்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாட்­டில் பெரிய திட்­டங்­கள் எது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பண­வீக்­கம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சீன­உ­று­மல் முற்­றி­லும் நீங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாகிஸ்­தான் ஊடு­ரு­வல் அடங்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாட்­டின் வறுமை முற்­றி­லும் ஒழிக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்­றிய அரசு- – மாநில அர­சு­க­ளுக்­கான உற­வு­கள் சுமூ­க­மாய் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வேலை­யில்லா திட்­டங்­கள் போக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="12">*</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தினத்­தந்தி நாளேடு 23.10.2026  அன்று 25 ஆண்டு பிர­த­ம­ரின் அதி­கா­ரத்­தில் நிகழ்த்­திய 25 முத்­தான சாத­னை­கள் குறித்து தலை­யங்­கம் எழு­தி­யி­ருக்­கி­றது. அத­னை­யும் ஆய்ந்து பாருங்­கள், உண்மை நில­வ­ரங்­கள் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி மோடி அர­சின் சாத­னை­கள் இருந்து வரு­கின்­றன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆனால் மோடி-­­ – அ­மித்ஷா வகை­ய­றாக்­க­ளுக்கு கார் உள்­ள­ள­வும் கடல் நீர் உள்­ள­ள­வும் இந்­தி­யாவை ஆள­வேண்­டும். அகண்ட ‘இந்து’ இந்­தி­யாவை உரு­வாக்க வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றார்­கள். ஜன­நா­ய­கத்தை மோடி எவ்­வ­ளவு சிதைத்­தா­லும் சின்­னா­பின்­னப்­ப­டுத்­தி­னா­லும் ‘போரா­டும் சக்தி’ என்­பது மோடி­யைத் தேர்ந்­தெ­டுத்த சக்­தி­யை­விட மிக அதி­க­மா­னது -– எண்­ணிக்­கை­யில் மிகப் பெரிது என்­பதை மோடி மறந்து, ‘ஜன­நா­யக சர்­வா­தி­கா­ரத்தை’ மேற்­கொள்­கி­றார். இன்று நிலைமை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘கரப்­பான் பூச்சி’  ஜனதா கட்­சிக்கு முன்­னொட்டு எப்­படி வந்­தது என்­பதை முத­லில் நாம் தெரிந்து கொள்­ள­லாம். 2026 மே 15 ஆம் தேதி அன்று வழக்கு தொடுக்க வரும் பொது­மக்­க­ளைக்கரப்­பான் பூச்­சி­க­ளைப் போல் வழக்­குரைஞர்­க­ளைக் சூழ்ந்து கொண்டு இருக்­கி­றார்­கள். பல கீழமை நீதி­மன்­றங் ­களில் இப்­ப­டிப்­பட்ட நிலை­மை­கள் இருக்­கின்­றன என்று உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி சூரிய காந்த் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி அவர் கூறி­யது இந்­தி­யா­வில் உள்ள வேலை­யில்­லாத இளை­ஞர் களை இழி­வுப் படுத்­து­வ­தா­கும் என்று அமெ­ரிக்­கா­வில் அந்­தச் சம­யத்­தில் இருந்த  அபி­ஜித் தீப்கே இணைய தளத்­தில் பதி­விட்­டி­ருந்­தார். அது முதல் 24 மணி நேரத்­தில் 50,000 பேரும் ஐந்து நாள்­க­ளில் 10 இலட்­ச­மா­க­வும் ஆத­ரவு அதி­க­ரித்­தது. இந்த  ஆத­ர­வையே உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி கூறிய கரப்­பான் பூச்­சியை அடை­யா­ள­மாக்கி கொண்டு ஜனதா கட்­சி­யின் முன்­னொட்­டாக ஆக்­கி­னர். இதுவே ஓர் அமைப்­பாக உரு­வா­கி­விட்­டது. இந்த அமைப்­பி­னர் போராட்­டம் நடத்தி தர்­மேந்­திர பிர­தானை அமைச்­சர் பொறுப்­பி­லி­ருந்து நீக்­கிய வெற்­றியை சிஜேபி பெற்­று­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாம் மேலே சொன்ன சிஜேபி போராட்­டக்­க­ளத்­தில் தோன்றி மோடி­யைக் கதி­க­லங்க வைத்து இருக்­கி­றது. அதிர்ச்­சி­யும் அச்­ச­மும் அவர்­களை ஆட்­டிப் படைத்­துக் கொண்டு இருக்­கி­றது. இவர்­களை எப்­படி எதிர்­கொள்­வது என்று அவர்­களை பெருங்­கு­ழப்­பம் ஆட்­கொண்­டு­விட்­டது. அந்த நேரத்­தில் ஒரு குரல் ஒலித்­தது. மேரி மில்­பென் எனும் அமெ­ரிக்­கப் பாடகி  சிஜே­பிக்­கும் 
அபி­ஜித் தீப்­கே­வுக்­கும் அமெ­ரிக்க நிதி­யு­த­வி­யா­ளர்­கள் பணம் தரு­கி­றார்­கள். ஆகவே மோடி அரசை 
எதிர்த்­துப் போரா­டு­கி­றார்­கள் என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மோகன் பகா­வத் அந்­நிய சக்தி ஊடு­வல் எனும் கருத்­தில் சிஜே­பியை விமர்­ச­னம்  செய்­கி­றார். இராஜ்­நாத் சிங் ஆட்சி மாற்­றம் என்ற கருத்தை முன் வைக்­கி­றார். இத் தரு­ணத்­தில் மோடி அவர் அதி­கா­ரத்­திற்கு  வந்த 25 ஆம் ஆண்­டைக் கொண்­டா­டு­கி­றார். அமெ­ரிக்­கப் பாடகி மேரி மில்­பென் பா.ஜ.கவின் குர­லில் பேசு­வ­தா­கத்­தான் நாம் கரு­து­கின்­றோம். அவர் என்ன சொல்­கி­றார்? அமெ­ரிக்க நிதி­யா­ளர்­கள் சிஜே­பிக்கு  
உத­வு­கி­றார்­கள் என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமெ­ரிக்க நிதி­யா­ளர்­கள் சிஜே­பிக்கு உதவி பா.ஜ.கவுக்கு எதி­ரா­கப் போராட செய்­யும் வரை மோடி அர­சின் உள­வுத்­துறை தக­வல் எதை­யும் அர­சுக்கு  தெரி­விக்­காதா?  மௌனம்  காக்­குமா? அமெ­ரிக்­கப்­பா­டகி சொல்­வது உண்­மை­யா­னால் மோகன் பகா­வத் சொல்­வ­தும் சரி­யா­ன­தா­கி­வி­டும். போராட்ட நிலை­மை­களை எதிர்­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்க நிதி­யா­ளர்­ களைப் பாடகி மூலம் பா.ஜ.க.வினர் கற்­ப­னை­யா­கப் படைத்­துக் கொள்­கி­றார்­கள். அந்­தக் கருத்தை 
வெளி­யி­டச் செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்­மை­யில் நடப்­பது என்ன? அதைப் பீப்­பிள்ஸ் டெமாக்­ரசி (அக்.18/2026) அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இதோ அந்­தக் கூற்­றைப் படித்­துப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆர்.எஸ்.எஸ்.கீழ் இயங்­கும் இரண்டு பெரிய அமைப்­பு­கள் அமெ­ரிக்­கா­வின் இலாப நோக்­க­மற்ற அமைப்­பு­க­ளுக்­கான சட்­டங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, 
இந்­தி­யா­விற்­குள் நிதி­க­ளைக் கொண்டு வந்து 
இருக்­கின்­றன.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இது மெய்யா? அமெ­ரிக்­கப் பாடகி சொல்­வது மெய்யா? அமெ­ரிக்­கப் பாடகி மேரி மில்­பென்­னின் குரல் எங்­கி­ருந்து எழுப்­பப்­ப­டு­கி­றது?- – என்று நாம் கேட்க விரும்­பு­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஏன்-­ – நாம் இப்­ப­டிச் சொல்­கி­றோம் என்­றால் பத்­தி­ரி­கை­யா­ளர் சுஹா­சினி ஹைதர், ஜென்சி போராட்­டக்­கா­ரர்­கள் மீதான பா.ஜ.க. அர­சின் நட­வ­டிக்­கை­கள் குறித்து அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மனித உரி­மை­கள் அமைப்­பு­கள் மற்­றும் அய்.நா. அவை­யி­ட­மி­ருந்து விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன. இந்­தியா சர்­வ­தேச அள­வில் இரட்டை நிலை­பா­டு­களை எதிர்­கொள்­கி­றதா?”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று கேட்­டுள்­ள­னர். இதி­லி­ருந்து நாம் அறிந்து கொள்­வது அமெ­ரிக்க நிதி­யா­ளர்­கள் சிஜே­பிக்கு உதவி செய்து இருந்­தால்  பா.ஜ.க.வுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களை சுஹா­சினி  ஹைதர் குறிப்­பிட்­டுள்ள அமைப்­பு­கள் செய்­தி­ருக்க முடி­யாது. ஒரு வேளை நிதி­யா­ளர்­கள் யார் என்­றும் அவர்­கள் வெளிப்­ப­டுத்தி இருக்­கக் கூடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜென்சி போராட்­டக்­கா­ரர்­கள் இந்­தி­யா­வில் கரப்­பான் பூச்சி ஜனதா  கட்­சி­யா­க-­­ – சி­ஜே­பி­யாக அறி­மு­க­மாகி இருக்­கி­றார்­கள். ஆனால் உண்மை நில­வ­ரம் என்ன? ஆசி­யா­வில் தொடங்­கிய எழுச்சி அய்­ரோப்­பா­விற்­கும் பரவி இருக்­கி­றது என்­ப­து­தான் நமக்­குக் கிடைக்­கும் செய்­தி­க­ளாக இருக்­கின்­றன. இந்­தி­யா­வில் தன் எழுச்­சி­யான இளை­ஞர்­க­ளின் போராட்­டத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­து­வது ஏற்­பு­டை­ய­தா­கி­வி­டாது. இவர்­கள் ஜூன் மாதத்­தில் 23 நாள்­கள் ஜந்­தர் மந்­த­ரில் தர்­மேந்­திர பிர­தான் அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும் என்று உண்ணா நோன்­பில் தொடங்கி தொடர்ந்து போராடி வெற்றி பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் தலைமை ஆணை­யரை வில­கக் கோரி­யும் எஸ்.ஐ.ஆரை ரத்து செய்­ய­வும் சிஜேபி மற்­றும் அமைப்­பு­கள் டெல்­லி­யில் அக்.10, 11,12 தேதி­க­ளில் நிகழ்த்­திய போராட்­டம் டெல்­லியை அதி­ரச் செய்­தன. காவல் துறை­யி­ன­ரும் துணை இரா­ணு­வத்­தி­ன­ரும் குவிக்­கப்­பட்­ட­னர். 30 இடங்­க­ளில் சாலை தடுப்­பு­க­ளால் அடைத்­த­னர். 4 கி.மீ. சுற்­ற­ளவு தூரத்­திற்கு ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் இணைய சேவை முடக்­கப்­பட்­டது. 57 மெட்ரோ ரெயில் நிலை­யங்­கள் மூடப்­பட்­டன. 35 தடுப்பு மய்­யங்­க­ளில் போராட்­டக்­கா­ரர்­கள் அடைத்து வைக்­கப்­பட்­ட­னர். டெல்லி பெரு­ந­கர எல்­லை­கள் அனைத்­தும் மூடப்­பட்­டன. போராட்­டக்­கா­ரர்­கள் மீதும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வா­கத் திரண்ட மக்­கள் மீதும் துணை இரா­ணு­வம் தாக்­கு­த­லைத் தொடுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரு­ந­க­ரங்­க­ளில் எல்­லாம் இத்­த­கைய கிளர்ச்­சி­கள் நடை­பெற்று இருக்­கின்­றன. இதைப் பற்­றி­தான் மோகன் பகா­வத் விஜ­ய­த­சமி விழா­வில் பின்­வ­ரு­மாறு பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்சி மாற்­றத்­துக்­காக வங்­கா­ள­தே­சம், நேபா­ளம், பிரான்ஸ் மற்­றும் அல்­பே­னியா போன்ற நாடு­க­ளில் சமீ­பத்­தில் ஏற்­பட்ட அர­சி­யல் கொள்­த­ளிப்­பு­க­ளை­யும் ஆட்சி மாற்­றங்­க­ளை­யும் நாம் பார்த்­தோம். தங்­க­ளது சொந்த சுய­ந­லன்­களை அடைய நினைக்­கும் சில 
சர்­வ­தேச சக்­தி­கள் ஒரு நாட்­டின்  அர­சி­யல் சூழலை மாற்­று­வ­தற்­காக இந்த ஆட்சி மாற்ற, ஆயு­தத்தை பயன்­ப­டுத்­து­கின்­றன. ஆட்­சியை மாற்­றி­னால் எல்­லாம் மாறி­வி­டும் என்று  அவர்­கள் கூறு­கி­றார்­கள். ஆனால் வர­லாற்­றில் அப்­படி ஒரு போதும் நிஜ­மாக நடந்­ததே இல்லை. ஆட்சி மாற்ற போராட்­டக் காரர்­க­ளி­டம் பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தினந்­தந்தி (21.10.2026)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தப் பேச்­சுக்­குத் தந்தி நாளேடு போராட்­டக்­கா­ரர்­களி­டம் மக்­கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும்” என தலைப்­பிட்டு இருக்­கி­றது. பா.ஜ.க. அர­சுக்கு எதி­ராக மக்­கள், இளை­ஞர்­கள், மாண­வர்­கள் திரண்டு ஆட்சி மாற்­றம் தேவை என­வும் தேர்­தல் ஆணை­யரை விலக்­குங்­கள் என்­றும் முழக்­கங்­கள் நாடு தழுவி ஒலிக்­கத் தொடங்­கி­விட்­டது. அது தொடர்ந்து கொண்டே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆக­வே­தான்  மோகன் பகா­வத், ராஜ்­நாத் சிங் போன்­ற­வர்­கள் புலம்­பத் தொடங்­கி­விட்­டார்­கள். அமை­தி­யாக இருந்து வந்த மோடி இப்­போது பிரி­வினை வாத சக்­தி­கள் நாட்­டில் உள்­ள­தா­கச் சொல்­கி­றார். அமித்ஷா அதை வேறு வித­மா­கக் கூறி ஓல­மி­டு­கி­றார். இவர்­கள் உள்­நாட்­டுப் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள முடி­யா­மல் பல­வி­த­மான பொய்­யான தக­வல்­க­ளைக் கூறித் திசை திருப்­பிக் கொண்டு இருக்­கி­றார்­கள். 
ஆக, இவர்­கள் எவ்­வ­ளவு தான் கர்­ஜித்­தா­லும் காரண காரி­யங்­களை எடுத்து விளக்­கி­னா­லும் ஜெர்­மா­னிய கவி­ஞர் கதே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கருத்து ஒன்று காலத்­தால் கனிந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கனத்து வந்­து­விட்­டால் அதை­விட வலி­யது 
வேறு ஏது?”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று சொன்­ன­து­போல இவர்­கள் ஆட்­சிக்கு முடிவு ஒன்று ‘கனிந்து கனத்­து­விட்­ட­தால்’ தான் சிஜே­பி­யின் போராட்­டங்­கள் தொடர்ந்து கொண்டு இருக்­கின்­றன. தொடர்ந்து கொண்­டு­தான் இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான் அபி­ஜித் தீப்கே, சௌரவ் தாஸ், அசு­தோஷ் ரங்கா போன்­ற­வர்­க­ளோடு  மாண­வர் அமைப்­பின் தலை­வி­யான நேகா போரா­வும் இணைந்து ஞானேஷ் குமா­ரைப் பத­வி­யி­லி­ருந்து அகற்­ற­வும் இன்­னொரு வகை­யில் ஆட்சி மாற்­றத்­திற்­கான தொடக்­கப் போராட்­டத்­தை­யும் நிகழ்த்­திக் கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சி­யல் போராளி யோகேந்­திர யாதவ், பரா­கல பிர­பா­கர், நடி­கர்பிர­காஷ் ராஜ், சாந்தி பூஷண் போன்­ற­வர்­க­ளும்  மற்­றும் ஒதுங்­கி­யி­ருந்த தனிப்­பட்ட சிந்­த­னை­யா­ளர்­கள் எல்­லாம் சிஜே­பிக்கு ஆத­ரவு தெரி­வித்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள். இந்த ஆத­ரவு மேலும் கூட வாய்ப்­பு­கள் மிக அதி­க­மாக இருக்­கின்­றன. இது­மட்­டு­மல்­லா­மல் இன்ஸ்­டா­கி­ராம் சமூக வலை­த­ளத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யைக் காட்­டி­லும் மிக மிக அதி­க­மான வர­வேற்­பு­கள் சிஜே­பிக்கு இருந்து வரு­கின்­றது. அதா­வது சிஜேபி முதல் இடத்­தில் இருந்து வரு­கி­றது எனும் செய்­தி­கள் வெளி­யா­கிக் கொண்டு இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஒன்­றிய அரசு தனது அதி­கா­ரத்­தைக் கொண்டு போலீசை ஏவி அடக்­கு­மு­றை­யைக் கட்­ட­விழ்த்­து­விட்­டா­லும் நீதித்­து­றை­யி­னர் கட்­டுப்­பா­டு­களை விதித்­தா­லும் ஜன­நா­யக எழுச்சி சிஜே­பி­யின் மூலம் கட்­ட­றுத்து மோடிக்­கும் அமித்­ஷா­வுக்­கும் அறை­கூ­வலை விடுக்­கத் தொடங்­கி­விட்­டது. அபி­ஜித் தீப்கே அவ­ரைச் சார்ந்த சிஜே­பி­யின் தலை­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­போது நமது கழ­கத் தலை­வர், அவர்­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்­யு­மாறு அறிக்­கையை வெளி­யிட்­டார். நமது தலை­வர் அவர்­க­ளின் எழுச்­சி­யின் அடிப்­படை ‘மக்­கள் சக்­தியே’ என்­பதை உணர்ந்து வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அபி­ஜித் தீப்கே சிஜே­பி­யின் தலை­வர். இந்த இளை­ஞ­ரின் பெய­ரைச் செய்­தி­க­ளில்  பார்த்­த­வு­டன் நாம்
(கட்­டு­ரை­யா­ளர்) 30.01.2024 தேதி­யிட்ட முர­சொ­லி ­யில், ‘அயோத்தி பால­ரா­மர் பேசி­னால் என்ன பேசு­வார்?’ எனும் தலைப்­பில் கட்­டுரை ஒன்றை எழு­தி­யி­ருந்­தோம். அதில் இப்­ப­டிக் குறிப்­பிட்டு இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பிர­த­மர் மோடி ஜன­வரி 22 ஆம் தேதி நண்­ப­கல் 12.29:08- – 12.30:32 ஆகிய இடைப்­பட்ட இந்த நேரத்­தில் – -அபி­ஜித்  முகூர்த்­தத்­தில் கறா­ரான நேரத்­தில் தான்  பிராண பிர­திஷ்டை சடங்­கைச் செய்­தார். 84 விநா­டி­க­ளுக்­குள் இந்­தச் சடங்கு நடத்­தப்­பட்டு விட்­ட­தாம். என்னை பால­ரா­மாக்­கி­னார்­கள்.  
உயி­ரூட்­டி­னார்­கள். ஹெலி­காப்­ட­ரி­லி­ருந்து கோவி­லின் மீது மல­ரா­கப் பொழிந்­தார்­கள்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நாம் மேலே ‘அபி­ஜித் முகூர்த்­தம்’ என்று குறிப்­பிட்டு இருக்­கின்­றோம் அல்­லவா? அதி­லுள்ள ‘அபி­ஜித்’ என்­கிற சொல்லே ‘அபி­ஜித் தீப்கே’  எனும் பெய­ரில் இடம் பெற்று இருக்­கி­றது. அபி­ஜித்  முகூர்த்­தத்­தில் ஏன் பால­ரா­மரை பிர­திஷ்டை பிர­த­மர் செய்­தார் என்­றால் அது மிகச் சிறப்­புக்­கு­ரிய நேரம். தினந் ­தோ­றும் 45 முதல் 48 நிமி­டங்­கள்  வரை நிக­ழும் முகூர்த்­தம் ஆகும். அதில் 84 விநா­டி­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து பால­ரா­மரை பிர­திஷ்டை செய்­தார்­கள்.  இதனை வேத­சோ­தி­டம் என்­கி­றார்­கள். அதன்­படி பிர­த­மர் பால­ரா­மரை பிர­திஷ்டை செய்­தார். இந்த அபி­ஜித் முகூர்த்­தம் ஒரு மனி­த­னா­கவே இயற்­கை­யாக பிர­த­மர் மோடிக்கு எதி­ராக இன்று முளைத்து அவரை வீழ்த்த முன் வந்து இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அபி­ஜித் என்­றால் ‘வீழ்த்த முடி­யா­த­வன்’ ‘வெற்­றியை நிலை­நாட்­டு­ப­வன்’ என்று பொருள் சொல்­லப்­பட்டு இருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தீப்­கே­வுக்கு இந்­தச் சொல்­தான்  அவர் பெய­ரின் முதல் மொழி­யாக அமைந்து இருக்­கி­றது. மோடி அரசை எதிர்த்து போரா­டும் சிஜே­பி­யின்  தலை­வ­ராக அபி­ஜித் தீப்கே எனும் இளை­ஞர் செய­லாற்­று­கி­றார். இவர் இந்த பெய­ருக்கு ஏற்­றாற்­போல தர்­மேந்­திர பிர­தா­னைப் போராட்­டத்­தின் மூலம் அவர் தலை­மை­யில் போரா­டி­ய­வர்­கள் அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து வெளி­யேற்­றி­விட்­டார்­கள். இப்­போது இந்­தி­யா­வின் தலை­மைத் தேர்­தல் ஆணை­யர் ஞானேஷ்­கு­மா­ரைப் 
பத­வி­யி­லி­ருந்து அகற்­றப் போரா­டு­கி­றார்­கள். அது ஆட்சி மாற்­றத்­திற்­கான நட­வ­டிக்­கை­யா­க­வும் அமைந்து இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மர் மோடி அதி­கார சுவை கண்டு 10+15 (?) =25 ஆண்­டு­களை நோக்கி விரைந்து கொண்டு இருக்­கி­றார். கொண்­டாடி மகி­ழு­கி­றார். அதனை உரை­யாற்­றிக் களித்­துக் கொண்டு இருக்­கி­றார். ஆனால் சிம்­மா­ச­னத்து பொம்­மை­கள் அவ­ரைப் பார்த்து நகைக்­கத் தொடங்கி விட்­டன. அபி­ஜித் தீப்கே என்று அவை உரத்த குரல் எழுப்­பு­கின்­றன. நரேந்­திர மோடி­யின் ஆட்­சி­யின் சிம்­மா­ச­னம் ஆட்­டங்­கா­ணத் தொடங்­கி­விட்­டது. இனி இத­னைத் தடுக்க முடி­யாது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>