<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,766" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 22:02:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261029T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="29102026-CBE-07" position.sequence="07" ex-ref="29102026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70"> பொய் வழக்­கு­க­ளைக் கழ­கம் எதிர்­கொண்டு பொடிப் பொடி­யாக்­கும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup948427_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">்னி வர­வி­ருக்­கும் இடைத்­தேர்­தல் களங்­க­ளுக்கு உடன்­பி­றப்­பு­கள் ஆயத்­த­மாக வேண்­டும் எனக் கழ­கத் தலை­வர் அறி­விப்பு வெளி­யி­டு­கி­றார். தலை­வ­ரின் அறி­விப்பு வெளி­யான வேகத்­தில் த.வெ.க. அரசு பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆயத்­த­மாகி விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இடைத்­தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கும் தொகு­தி­க­ளில் ஒன்று, திருச்சி கிழக்கு. அது கழ­கத்­தின் வலி­மை­யைப் பல முறை பறை­சாற்­றிய தொகுதி. தி.மு.க.வின் திருச்சி தெற்கு மாவட்­டத்­திற்­குள் அடங்­கி­யுள்ள தொகுதி. அதன் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி அவர்­கள். த.வெ.க அரசு பழி­வாங்­கும் நோக்­கத்­து­டன் அவ­சர அவ­ச­ர­மாக அவ­ரைக் கைது செய்­தி­ருக்­கி­றது. தி.மு.க இப்­ப­டிப் பழி­வாங்­கும் வழக்­கு­களை எதிர்­கொள்­வது புதி­தல்ல. எம்.ஜி.ஆர்-­ஜெ­ய­ல­லிதா ஆட்­சிக்­கா­லங்­க­ளில் அ.தி.மு.க என்ன செய்­ததோ, அதைத்­தான் விஜய் தலை­மை­யி­லான த.வெ.க அர­சும் செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் இரண்டு தொகு­தி­க­ளின் இடைத்­தேர்­தல்­க­ளி­லும் தி.மு.க. வின் வாக்கு வங்கி வலு­வாக இருப்­பது நிரூ­ப­ண­மா­கி­விட்­டது. த.வெ.க.வுக்கு நேர­டி-­ம­றை­மு­கக் கூட்­ட­ணிக் கட்­சி­கள் இருந்­தும், பணத்தை வாரி இறைத்­தும், ஆளுங்­கட்சி என்­கிற அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­தி­யும், கடைசி அஸ்­தி­ர­மாக இடைத்­தேர்­தல் களத்­தில் இது­வரை எந்த முத­ல­மைச்­ச­ரும் பிரச்­சா­ரம் செய்­யாத அள­வுக்கு விஜய் தெருத் தெரு­வா­கச் சுற்­றி­யும் சொல்­லிக்­கொள்­ளும் அள­வுக்­கான செல்­வாக்­கு­டன் த.வெ.க.வால் வெற்றி பெற முடி­ய­வில்லை. இரண்டு தொகு­தி­களை இத்­தனை படை­ப­லத்­து­டன்­தான் வெற்றி கொள்ள முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருச்சி கிழக்கு என்­பது விஜய் ராஜி­னாமா செய்த தொகுதி. இரண்டு தொகு­தி­யில் வெற்றி பெற்ற அவர், ஏன் தங்­கள் தொகு­தியை ராஜி­னாமா செய்ய வேண்­டும் என்ற கேள்வி திருச்சி கிழக்­குத் தொகு­தி­யில் விசி­லுக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளின் மன­நி­லை­யாக உள்­ளது. கடந்த 5 மாத­கால த.வெ.க ஆட்­சி­யை­யும், கழ­கத் தலை­வர் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்­சி­யை­யும் திருச்சி கிழக்கு வாக்­கா­ளர்­கள் ஒப்­பிட்­டுப் பார்க்­கும்­போது, கண்­மூ­டித்­த­ன­மான கவர்ச்­சி­யால் எத்­த­கைய சிறப்­பான ஆட்­சி­யைப் பறி­கொ­டுத்­தி­ருக்­கி­றோம் என்ற வருத்­த­மும் அவர்­க­ளி­டம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மது­ராந்­த­கம், தாரா­பு­ரம் தொகு­தி­க­ளை­வி­ட­வும் திருச்சி கிழக்­கில் த.வெ.க தனது அதி­கார பலத்­தைக் கொண்டு மொத்த வித்­தை­யை­யும் இறக்­கி­னா­லும் தி.மு.க.வை நேர்­மை­யாக எதிர்­கொள்­வது சிர­மம் என்­ப­தால், ‘மகா­பா­ரத’ வியூ­கத்தை விஜய் தரப்பு மேற்­கொண்­டுள்­ளது. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். பெற்­றெ­டுத்த பிள்­ளை­தான் த.வெ.க என்று தற்­போது அத­னு­டன் கூட்­ட­ணி­யில் உள்ள கட்சி ஏற்­க­னவே விமர்­சித்­தி­ருந்­தது அல்­லவா? அதனை நினை­வூட்­டிக் கொண்­டால், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். நட்­பின் விளை­வாக த.வெ.க கையா­ளும்  மகா­பா­ரத சூழ்ச்சி வியூ­கம் புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குரு­ஷேத்­தி­ரப் போரில் துரி­யோ­த­னா­தி­க­ ளின் கௌர­வப் படையை, தர்­ம­ரின் பாண்­ட­வர் படை எதிர்­கொள்­கி­றது. கௌர­வர்­கள் படை­யில், செஞ்­சோற்­றுக் கடன் தீர்ப்­ப­தற்­காக கர்­ணன் இருக்­கி­றார். கர்­ணனை வெல்­வது அத்­தனை எளி­தல்ல. பாண்­ட­வர்­கள் படை­யில் சகல வித்­தை­க­ளை­யும் அறிந்த அர்­ஜூ­ன­னுக்கு எதிர்ப்­பு­றத்­தில் கர்­ணன்­தான் பெரும் சவால். அத­னால் பாண்­ட­வர்­கள் பக்­கம் நிற்­கக்­கூ­டிய பக­வான் கிருஷ்­ணர் ஒரு வழி செய்­கி­றார். கர்­ண­னின் உட­லு­டன் ஒட்­டி­யி­ருக்­கும் கவ­ச-­குண்­ட­லங்­கள் பெரும் பாது­காப்­பா­ன­வை­யாக உள்­ளன. அத­னால், அந்த கவ­ச-­குண்­ட­லங்­க­ளைப் பறித்­து­விட வேண்­டும் என்­ப­து­தான் சூழ்ச்சி. அந்த சூழ்ச்சி நடந்­தே­று­கி­றது. போரில் கர்­ணன் பங்­கேற்­கும்­போது அந்­தக் கவச குண்­ட­லங்­கள் இல்லை. கர்­ணனை அர்­ஜூ­னன் வீழ்த்­து­வ­தற்கு வச­தி­யாகி விடு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருச்சி கிழக்கு தொகு­தி­யில் தி.மு.க.வுடன் இரத்­த­மும் சதை­யு­மாக ஒட்­டி­யி­ருக்­கும் உடன்­பி­றப்­பு­க­ளின் கவச குண்­ட­லங்­க­ளாக முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு அவர்­க­ளும், திருச்சி தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொ­ழி­யும் இருக்­கி­றார்­கள். அன்­பில் மகேஸ் மீது குற்­றச்­சாட்டு சுமத்தி, பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யாக கைதுப் பட­லத்தை அரங்­கேற்­றி­யி­ருக்­கி­றது த.வெ.க அரசு. முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு மீது வழக்­குத் தொடர நீதி­மன்­றம் அனு­மதி என்ற செய்­தி­யும் அதே நாளில் வெளி­யா­கி­றது. இது­தான் ‘மகா­பா­ரத’ சூழ்ச்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இது­போன்ற பல சூழ்ச்­சி­களை எதிர்­கொண்டு நிமிர்ந்து நிற்­கும் இயக்­கம். த.வெ.க.வின் விஜய் உள்­ளிட்ட அவ­ரு­டைய கட்சி நிர்­வா­கி­க­ளின் ‘கரூர் ஓட்­டம்’ போல தொடை­ந­டுங்­கி­கள் அல்ல. தி.மு.க.வின் உடன்­பி­றப்­பு­கள் துணிந்து நிற்­கும் மன வலிமை கொண்­ட­வர்­கள். கழ­கத் தலை­வர்-­தி­ரா­விட நாய­க­ரின் கட்­ட­ளையை ஏற்று, களம் கண்டு, வெற்­றிக்­காக அய­ராது உழைப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க ஆட்சி அமைந்­த­தி­லி­ருந்து 
அன்­றாட வானிலை அறிக்கை போல, கொலை­கள், கொள்­ளை­கள், பாலி­யல் குற்­றங்­கள், போதைப் பொருள் கடத்­தல்­கள் என அத்­தனை கிரி­மி­னல்­த­னங்­க­ளும் நடை­பெ­று­கின்­றன. நாளுக்கு நாள் இவை அதி­க­ரித்­துக் கொண்டே இருக்­கின்­றன. பாலி­யல் புகார்­க­ளில் த.வெ.க. நிர்­வா­கி­களே ஈடு­பட்­டி­ருப்­பது புகார்­க­ளாக அம்­ப­ல­மா­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாவட்­ட-­ஒன்­றிய அள­வி­லான நிர்­வா­கி ­க­ளாக இருந்­தால் அர­சாங்­கமே அவர்­க­ளைப் பாது­காக்­கி­றது. திரு­வை­குண்­டம், இரா­ணிப்­பேட்டை, அரக்­கோ­ணம் ஆகிய ஊர்­க­ளைச் சேர்ந்த த.வெ.க. பெண்­களே புகார் கொடுத்­தும் நட­வ­டிக்கை இல்லை. வட்ட அள­வி­லும், கிளை அள­வி­லும் பாலி­யல் புகார்­க­ளில் ஈடு­ப­டும் த.வெ.க.வினர் கைது செய்­யப்­ப­டு­கி­றார்­கள். அவர்­க­ளைக் கைது செய்­தது ஊருக்கே தெரிந்­து­விட்­ட­பி­ற­கு­தான், அவர்­கள் த.வெ.க.வில் இருப்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. அத­னால் மறைக்க முடி­யா­மல் திண­று­கி­றது விஜய்­யின் அதி­கா­ரத்­திற்­குள் இருக்­கும் காவல்­துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மெத் எனும் போதை கடத்­த­லில் சர்­வ­தேச அள­வில் ஈடு­பட்­டி­ருந்த நாகப்­பட்­டி­னம் மாவட்ட த.வெ.க நிர்­வா­கியை ஒன்­றிய அர­சின் வரு­வாய்ப் பிரிவு கைது செய்­தி­ருக்­கி­றது. உள்­ளூர் போதை வியா­பா­ரி­க­ளான த.வெ.க நிர்­வா­கி­க­ளைப் போலீஸ் பாது­காக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திண்­டி­வ­னம் அருகே செஞ்­சி­யில் 7 வயது சிறுமி காணா­மல் போய் இரண்டு வாரங்­க­ளா­கி­யும் போலீ­சால் ‘துப்­பு’த்துலக்க முடி­ய­வில்லை. மது­ராந்­த­கத்­தில் இளம்­பெண் கொலை செய்­யப்­பட்டு தண்­ணீ­ரில் மிதக்­கி­றார். வட­சென்­னை­யில் ஒரு வயது குழந்தை பாலி­யல் கொடூ­ரத்­திற்­குள்­ளாகி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அல்­லா­டு­கி­றது. சாத்­தான்­கு­ளத்­தில் தாயைக் கொலை செய்­து­விட்டு, தந்­தை­யை­யும் கொடூ­ர­மா­கத் தாக்­கி­விட்டு பெண் பிள்­ளை­க­ளைக் கடத்­திக் கொண்டு போயி­ருக்­கி­றார்­கள். ஈரோட்­டில் பள்­ளி­யில் விட்ட பெண்­பிள்ளை வகுப்­ப­றைக்­குச் செல்­வ­தற்கு முன்பே மாய­மா­கி­யி­ருக்­கி­றது.ஒவ்­வொரு நாளும் தமிழ்­நாட்­டில் ‘திக்..திக்..‘ பயங்­க­ரங்­கள் அரங்­கே­றி­ய­ப­டியே இருக்­கின்­றன. சட்­டம்-­ஒ­ழுங்கு சீர­ழிந்து கிடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அவ­லங்­க­ளைக் கண்­டித்து கழக மக­ளி­ரணி சார்­பில் அக்­டோ­பர் 31அன்று ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும் என அறி­விப்பு வெளி­யான நிலை­யில், அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி கைது என்ற செய்தி ஊட­கங்­க­ளில் வெளி­யா­கி­றது. அவர் மீது சுமத்­தப்­ப­டு ­பவைகுற்­றச்­சாட்­டு­கள். நீதி­மன்­றத்­தில் அவற்றை எதிர்­கொண்டு அவர் வெளியே வரு­வார். தமிழ்­நாட்­டில் அன்­றா­டம் நடந்து கொண்­டி­ருப்­பவை கொடூ­ரக் குற்­றங்­கள். அதில் பல­வற்­றில் த.வெ.க.வினரே தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். எந்த நட­வ­டிக்­கை­யு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திட்­ட­மிட்­டுப் பழி­வாங்­கும் நோக்­கில் தி.மு.க.வினர் மீது போடப்­பட்ட பொய் வழக்­கு­கள் அனைத்­தி­லும் கழ­கம் வெற்றி கண்­டுள்­ளது. ஜெய­ல­லிதா தலை­மை­யி­லான அ.தி.மு.க ஆட்­சி­யில் கழ­கத்­தி­ன­ரைப் பழி­வாங்­கு­வ­தற்­கா­கவே நில அப­க­ரிப்பு சட்­டத்தை அவ­சர அவ­ச­ர­மா­கக் கொண்டு வந்து, கழக நிர்­வா­கி­க­ளைக் கைது செய்து சிறை­யில் அடைத்து, சிலர் மீது குண்­டாஸ் பிரி­வி­லும் வழக்­குப் போடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தின் இன்­றைய தலை­வர் நம் திரா­விட நாய­கர் அவர்­கள் மீது பொய்­யான வகை­யில் நில அப­க­ரிப்பு புகா­ரைக் கிளப்­பி­ய­போது, அவரே நேரில் டி.ஜி.பி. அலு­வ­ல­கத்­திற்­குச் சென்­றார். வழக்கு விவ­ரங்­க­ளைக் கேட்­க­வும், தன் சார்­பி­லான மனுக்­களை அளிக்­க­வும் திரா­விட நாய­கர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்­ற­போது உய­ர­தி­கா­ரி­கள் பின்­வா­சல் வழியே ஓட்­ட­மெ­டுத்­த­னர். கார­ணம், ஆள்­ப­வர்­க­ளின் உத்­த­ர­வின்­படி அவர்­கள் பரப்­பிய பொய்­க­ளுக்கு எந்த ஆதா­ர­மு­மில்லை. இறு­தி­யில், ஜெய­ல­லிதா ஆட்­சி­யின் அவ­ச­ரக் கோல நில அப­க­ரிப்­புச் சட்­டம்­தான் ரத்­தா­னது. கழ­கத்­தி­னர் மீது போடப்­பட்­டவை பொய் வழக்­கு­கள் என்­பது சட்­டப்­பூர்­வ­மாக உறு­தி­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பழி­வாங்­கும் நோக்­கில் போடப்­ப­டும் பொய் வழக்­கு­களை டெல்லி வரை எதிர்­கொண்டு தகத்­த­காய சூரி­ய­னாக வெளி­வந்­த­வர்­கள் கழ­கத்­தி­னர். த.வெ.க. ஆட்­சி­யின் 
சீர­ழி­வு­க­ளை­யும், பெண்­க­ளுக்கு வீட்­டி­லும் வெளி­யி­லும் பாது­காப்பு இல்­லாத நிலை­யை­யும், மின்­சா­ரம் முதல் மாண­வர்­க­ளுக்­கான சைக்­கிள் வரை அனைத்­தி­லும் நடை­பெ­றும் ஊழல்­க­ளை­யும் களத்­தில் நின்று கழ­கம் அம்­ப­லப்­ப­டுத்­தும். பொய் வழக்­கு­க­ளைப் பொடிப்பொடி­யாக்­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>