<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,65,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 30 2026 03:34:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261030T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="30102026-CBE-10" position.sequence="10" ex-ref="30102026-CBE-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">“தேசியமும், ஆன்மீகமும் எனது இரு கண்கள்!” - பசும்பொன் தேவர்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup952560_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="pic128.10.202_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="pic228.10.202_10_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">‘‘</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">ம</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ங்கை சூத­க­மா­னால் கங்­கை­யில் நீரா­ட­லாம், கங்­கையே சூத­க­மா­னால் எங்கே நீரா­டு­வது?” என்ற வர­லாற்று வரி­க­ளைத் தந்த தேவர் திரு­ம­க­னார் பிறந்த நாள் இன்று! அவர் நினைவு நாளும் இதே அக்­டோ­பர் 30 தான். ஒரே நாளில் இப்­ப­டி­யான பிறப்­பும், இறப்­பும் நடப்­பது என்­பது அபூர்­வ­மா­னது. தேவர் வாழ்­வி­லும் இது நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சாதி பார்ப்­ப­வன் அர­சி­ய­லுக்கு இலா­யக்­கில்லை; சாதி பார்ப்­ப­வன் தெய்­வீ­கத்தை வணங்­கு­வது அர்த்­த­மில்லை; சாதிக்­காக எதை­யும் செய்­ப­வன் அர­சி­ய­லில் புகுந்­தால் அர­சி­யல்­தான் கெடும். சாதி­யும், நிற­மும் அர­சி­ய­லுக்கு இல்லை; ஆன்­மீ­கத்­துக்­கும் இல்லை!””</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இப்­ப­டித் தத்­து­வங்­கள் பேசித்           தர­ணிக்கு எடுத்­து­ரைத்­த­வர் தன்­னே­ரி­லாத் தலை­வர் தெய்­வத்­தி­ரு­ம­கன்  பசும்­பொன் தேவர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேவ­ரின் நூற்­றாண்டு விழா கொண்­டா­டப்­பட்­டது. மு.க.ஸ்டாலின் திரா­விட மாடல் ஆட்சி நடத்தி வந்த அவ­ரது ஆட்­சி­யில் ரூ.2 கோடியே 45 இலட்ச மதிப்­பீட்­டில் பல்­வேறு பணி­கள் செய்து முடிக்­கப்­பட்­டன. மேலும், ரூபாய் 4 இலட்­சம் மதிப்­பில்  நூல­கம், ரூபாய் 5 இலட்­சம் மதிப்­பில்  முளைப்­பாரி மண்­ட­பம், ரூபாய் 5 இலட்­சம் மதிப்­பில் பால்­கு­டம் மண்­ட­பம், ரூபாய் 9 இலட்­சம் மதிப்­பில் புகைப்­ப­டக் காட்­சிக் கூடம், ரூபாய் 5 இலட்­சம் மதிப்­பில் முடி இறக்­கும் மண்­ட­பம், கூட்ட நெரி­சலை தவிர்க்க தேவர் நினை­வி­டத்­திற்கு ரூபாய் ஒருகோடியே 55 இலட்­சம் புதி­தாய் அமைப்­பிற்­காக செல­வி­டப்­பட்­டது. 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பசும்­பொன் தேவர் நினை­வ­கத்­தில் அணையா விளக்கு, ரூபாய் 10 இலட்­சம் செல­வில் தேவர் வாழ்ந்த இல்­லம், பாது­காப்பு பரா­ம­ரிப்பு வச­தி­கள் எனப் புதுப்­பித்­தல், ரூபாய் 9 இலட்­சம்மதிப்­பில் விழா நூற்­றாண்டு நினைவு வளைவு அமைப்பு 
மற்­றும் நினை­வ­கத்­தைச் சுற்­றி­யுள்ள சாலை­கள் ஏற்­கெ­னவே கற்­சா­லை­க­ளா­க­வும் உரு­வாக்­கிய  கலை­ஞர் செய்த பல்­வேறு பணி­க­ளோடு, முதல்­வ­ராக இருந்த தள­பதி மு.க. ஸ்டாலின் அவர்­க­ளும் கூடு­தல் செலவு செய்து மேற்­கண்ட பல்­வேறு நற் பணி­கள் ஏற்­பாடு செய்து தந்­த­து­டன், முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் பேரால் அரங்­க­மும் கட்­டித் திறக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இரா­ம­நா­த­பு­ரம் கமுதி அருகே உள்ள “பசும்­பூண்” எனும் சிறு­ந­கர் தற்­போது ‘பசும்­பொன்’ என்று மருவி வழங்­கப்­ப­டு­கி­றது. அதி­லும் பழம்­பெ­ய­ரும், ‘இயற்­பெ­ய­ரு­மான ‘தவ­சிக்­கு­றிச்சி’ என்­பதே பிற்றை நாளில் ‘பசும் பொன்’ என்­பது ஆயிற்று. பழங்­கா­லத்­தில் தவ­சி­யர்­கள் என்ற முனி­வர்­கள் இங்­குள்ள காட்­டுப்­ப­கு­தி­யில் ஆசி­ர­மங்­கள் அமைத்து தவ­யோ­கங்­க­ளில் ஈடு­பட்டு வாழ்ந்து வந்­த­னர் என்­ப­தால் இப்­பெ­யர் இடம்­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1908ஆம் ஆண்டு அக்­டோ­பர் 30 வெள்­ளிக்­கி­ழமை அன்று வீரர் எனும் மற­வர் குடி­யில் தந்தை உக்­கி­ர­பாண்­டி­யத்­தே­வ­ருக்­கும், தாயார் இந்­தி­ராணி அம்­மை­யா­ருக்­கும் பிறந்­த­வர் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் ஆவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமது தாயாரை ஆறு மாதக் குழந்­தை­யாக இருக்­கும்­போதே இழந்த இவர், தம் பாட்டி இராணி அம்­மை­யா­ரா­லேயே பெரி­தும் வளர்க்­கப்­பட்­டார் என்­றா­லும், ‘ஆயிஸா அம்­மாள்’ என்­கிற ஓர் இசு­லா­மி­யத் தாயா­ரி­டம் பால் குடித்து வளர்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பால் ஊட்­டிய தாயார் மீது தன் கட­மை­யு­ணர்வு மிகுந்­த­ வ­ராய், தமது நிலங்­களை தான­மாக அளித்து, இன்­று­வரை அவ­ரின் பரம்­ப­ரை­யி­னர் அதனை அனு­ப­வித்து வரு­கிற நிலைக்கு உரு­வாக்­கித் தந்­துள்­ளார். கல்­கத்­தா­வில் ஒரு நிகழ்ச்­சிக்­குச் சென்­றி­ருந்த தேவர் திரு­ம­கன், ஆயிஸா அம்­மாள் மறைந்து விட்­டார் எனும் செய்­தி­ய­றிந்து, நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­கா­மல் ஓடோ­டித் திரும்பி வந்து அவர் அஞ்­சலி செலுத்தி, அதற்­கான ஈமச்­ச­டங்­கு­களை செய்த பெரு­மை­யைச் சரித்­தி­ரம் பதிவு செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">‘இள­மை­யில் கல்’ எனும் வாய்­மொ­ழிக்­கேற்ப கமுதி அமெ­ரிக்­கன் மிஷன் ஆரம்­பப் பள்ளி, 1920இல் மதுரை பசு­மலை உயர்­நி­லைப்­பள்ளி, 1924இல் அய்க்­கிய கிருத்­துவ உயர்­நி­லைப் பள்ளி, பிறகு இரா­ம­நா­த­பு­ரம் அர­சர் பள்­ளி­யில் இறுதி வகுப்பு முடித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இள­மை­யில் தமி­ழி­லும், ஆங்­கி­லத்­தி­லும் நல்ல பாண்­டித்­யம் பெற்­றி­ருந்­த­தோடு, சங்க இலக்­கி­யங்­கள், திருக்­கு­றள், ஞானம், தத்­து­வம் போன்­ற­வற்­றி­லும் தணியா ஆர்­வம் காட்­டிப்பயின்று நின்­றார். தவிர, குதி­ரை­யேற்­றம், மல்­யுத்­தம், சிலம்­பம்,துப்­பாக்­கிச் சுடு­தல், வர்­மக்­கலை போன்­ற­வற்­றி­லும் தேர்ச்சி பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">விளை­யும் பயிர் முளை­யில் தெரி­யும் என்­பார்­கள் அதைப் போலச் சின்­னஞ்­சிறு பரு­வத்­தி­லேயே முத்­து­ரா­ம­லிங்­கத்­தே­வர் வீரச்­செ­யல்­க­ளில் ஈடு­பட்டு எதற்­கும் அஞ்­சா­த­வ­ராக வாழ்ந்து வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1927இல் நடை­பெற்ற அகில இந்­திய காங்­கி­ரசு மாநாட்­டிற்கு, தனது அர­சி­யல் குரு­வான சென்னை எஸ். சீனி­வாச ஐயங்­கா­ரு­டன் சென்­றி­ருந்­தார். அம்­மா­நாட்­டில் உரை­யாற்­றி­யோர் சொற்­பொ­ழி­வு­க­ளி­லி­ருந்து பல்­வேறு தக­வல்­க­ளைப் பெற்­ற­து­டன், தேசிய தலை­வர்­களை நேர­டி­யா­கச் சந்­திக்­கும் வாய்ப்­பு­க­ளை­யும் பெற்­றார். காங்­கி­ரசு இயக்க வளர்ச்­சிக் கொள்­கை­க­ளில் மது­வி­லக்கு, தீண்­டாமை ஒழிப்பு, கதர் பயன்­பாடு, சமூ­க­நீதி போன்­ற­வற்­றில் ஈடு­பாடு காட்­டி­ய­து­டன், சம­ய­மும், நாடும் தமது இரு கண்­க­ளா­கக் கரு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேவர் திரு­ம­க­னின் கன்­னிப்­பேச்சு 1933 ஜுன் 23ஆம் நாள் சாயல்­குடி விவே­கா­னந்தா வாசக சாலை முத­லா­மாண்டு விழா­வின்­போது நடந்­தது. அவ்­வி­ழா­வில் கலந்து கொள்­ளத்­தான் சென்­றி­ருந்­தார் தேவர். சேது­ராம செட்­டி­யார் தலைமை வகித்­தி­ருந்­தார். ஆனால், விழா­விற்கு வர­வேண்­டிய சிறப்­புப் பேச்­சா­ளர் வர­வில்லை. தற்­செ­ய­லாக அங்கு வந்­தி­ருந்த தேவர் திரு­ம­கனை அழைத்­துப் பேச வைத்­த­னர் விழாக்­கு­ழு­வி­னர். மேடை ஏறி­னார் தேவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">“இந்­திய விடு­த­லைக்கு ஒவ்­வொ­ரு­வ­ரும் போராட வேண்­டும்” என்று வேண்­டு­கோள் விடுத்து பேசி­னார். அவ­ரது உரை­யைக் கேட்­போர் வியக்­கும் வண்­ண­மும், வசீ­க­ரிக்­கும் வண்­ண­மும், வர­லாற்­றுச் சிறப்­பு­டை­ய­தாக மூன்று மணி நேரம் தொடர்ச்­சி­யாக அமைந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இது­போல் பின்­னர் பல அர­சி­யல் பொதுக்­கூட்­டங்­க­ளில் கலந்து கொண்டு எழுச்­சி­மிகு வீர உரை­கள் ஆற்றி வந்­தார் தேவர். தான் பேசி­ய­து­டன், அந்­நாள் தேசி­ய­வா­தி­க­ளான தலை­சி­றந்த பேச்­சா­ள­ரா­கக் கரு­தப்­பட்ட டாக்­டர் பி. வர­த­ரா­ஜுலு நாயுடு, திரு.வி.க., சீனி­வாச ஐயங்­கார், இரா­ஜாஜி, வ.உ.சி. போன்­றோரை அழைத்து வந்து, கூட்ட நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்து பேச வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தலை­சி­றந்த ‘சுதேச மித்­தி­ரன்,’ ‘தமிழ்­நாடு’ என்­பன ஏடு­களை அந்­நாள்­க­ளில் மக்­க­ளி­டையே பரப்­பி­ய­து­டன் வாச­கர்­கள் எண்­ணிக்­கையை உயர்த்­திட நின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1932இல் கள்­ளுக்­கடை மறி­யல் போராட்­டங்­க­ளில் கலந்து கொண்­டார். மது­வால் ஏற்­ப­டும் தீமை­களை எடுத்­துக்­காட்டி மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்தி வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1934இல் தொண்­டர்­க­ளைத் திரட்டி முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் கதர் பிரச்­சா­ரம், மது ஒழிப்­புப் பிரச்­சா­ரம் போன்­ற­வற்­றில் ஈடு­பாடு காட்டி வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1934–ஆம் ஆண்டு, ஆங்­கில அரசு முக்­கு­லத்­தோர் எனப்­ப­டும் கள்­ளர், மற­வர், அக­மு­டை­யர் மீது பழங்­கு­டி­யி­னர் குற்­றச்­சட்­ட­மான (Criminal Tribes Act) குற்­றப்­ப­ரம்­ப­ரைச் சட்­டத்­தைத் திணித்­தது. இதன்­படி முக்­கு­லத்­தோர் என்­போர் குற்­ற­மி­ழைக்­கும் பரம்­ப­ரை­யி­ன­ராக அறி­விக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளது முழு­வி­ப­ர­மும், குடும்­பப் பாரம்­ப­ரி­ய­மும் போன்­றவை தொகுக்­கப்­பட்டு காவல் துறை­யால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்­தன. இத­னால், ஆண்­கள் மட்­டு­மின்­றிப் பெண்­கள், குழந்­தை­கள், முதி­யோர் கூடத் தீவிர கண்­கா­ணிப்­புக்­குள் ஆளாக்­கப்­பட்­ட­னர். எங்­குக் குற்­றம் நடந்­தா­லும், அதற்கு முக்­கு­லத்­தோர்­தான் கார­ணம் எனும் கெடு­பி­டி­நிலை உரு­வா­னது. கைவி­ரல் ரேகை பதிவு செய்­யப்­பட்­டுப் பாது­காக்­கப்­பட்டு வந்­தன. அவர்­கள் வெளி­யூர் சென்­றா­லும் காவல்­துறை அனு­மதி பெற வேண்­டும். நண்­பர்­கள், உற­வி­னர்­க­ளைச் சந்­திப்­பது, விழாக்­கள் கூட்­டு­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டது. முக்­கு­லத்­தோர்க்கு எதி­ரான இந்த இழி­நி­லை­யைப் போக்க முத்­து­ரா­ம­லிங்­கத்­தே­வர் வெகுண்டு எழுந்து போரா­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சமூக ஏற்­றத்­தாழ்­வு­களை விரி­வுப்­ப­டுத்தி, பேதங்­களை உரு­வாக்கி, முக்­கு­லத்­தோ­ரைத் தலை­முறை, தலை­மு­றை­யாக அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தான குற்­றப் பரம்­ப­ரைச் சட்­டத்தை டாக்­டர் பி. வர­த­ரா­ஜுலு நாயுடு மிக வன்­மை­யா­கக் கண்­டித்­தார். 1935இல் டாக்­டர் நாயுடு தலை­மை­யில் அபி­ரா­ம­பு­ரம் ஆப்­ப­நாடு மற­வர் மாநாடு நடை­பெற்­றது. அம்­மா­நாட்­டில் குற்­றப்­ப­ரம்­ப­ரைச் சட்­டம் விலக்­கிக் கொள்­ளப்­பட வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இச்­சட்­டம் விலக்­கிக் கொள்­ளா­விட்­டால் தமிழ்­நாட்­டில் பெரும் போராட்­டம் வெடிக்­கும் என்­றும் தேவர் எச்­ச­ரிக்கை விடுத்­த­து­டன், சென்னை மாகாண ஆளு­ந­ரைச் சந்­தித்து தம் குழு­வி­ன­ரு­டன் கோரிக்கை விண்­ணப்­பம் ஒன்­றைத் தந்­தார். மேலும், முக்­கு­லத்­தோர் குறிப்­பாக பிரான்­ம­லைக் கள்­ளர் வாழும் பகு­தி­யில் பல மாநா­டு­கள், ஊர்­வ­லங்­கள் ஆர்ப்­பாட்­டங்­கள் போராட்­டங்­கள் தொடர்ந்­தி­ட­வும் துணை நின்­றார். இதன்­பின்பு திரி­புரா காங்­கி­ரசு மாநாட்­டில் தேவ­ரின் முயற்­சி­யால் தீர்­மா­னம் போட வைக்க கார­ண­மா­யி­ருந்­தார். இத­னால் சில விதி­கள் மட்­டுமே அச்­சட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்­டன. இறு­தி­யாக இந்­தியா விடு­த­லைப் பெற்­ற­தும் இச்­சட்­டம் 1948இல் முழு­மை­யாக விலக்­கிக் கொள்­ளப்­பட்­டது. இதற்­குக் கார­ணம் தேவ­ரின் அனல் கக்­கும் போராட்­டங்­களே ஆயின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1927 முதல் காங்­கி­ர­சில் இணைந்து பணி­யாற்றி வந்த தேவர், எல்லா மாநா­டு­க­ளி­லும் கலந்து கொண்டு காங்­கி­ர­சின் முடி­வு­க­ளைத் தவ­றாது பின்­பற்றி வந்­தார். பல தலை­வர்­களை வர­வ­ழைத்து, மதுரை, முகவை மாவட்­டங்­க­ளில் பேச வைத்­தார். தமது பேச்­சா­லும், எழுத்­தா­லும் சமூக மக்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது, அனைத்­துத் தரப்பு மக்­க­ளுக்­கும் நன்மை புரி­யும் வகை­யில் நடந்து வந்­தார். இத­னால், அவ­ரின் செல்­வாக்கு காங்­கி­ரசு கட்­சி­யி­டையே ஓங்கி வளர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அகில இந்­திய அள­வில் காங்­கி­ரசு கட்­சி­யின் செயல்­பா­டு­கள் நேதா­ஜிக்கு அதி­ருப்தி தந்­தன. அத­னால், காங்­கி­ரசு கட்­சிக்­குள்­ளேயே அதி­ருப்­தி­யா­ளர்­க­ளா­ன­வர்­கள் தீவி­ர­வாத கொள்­கையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு முன்­னேற்ற அணி அல்­லது ‘ஃபார்­வார்டு பிளாக்’ என்ற குழுவை உரு­வாக்­கி­னர். பேரா­சி­ரி­யர் என்.ஜி.ரங்கா, கவி­ஷர், நாரி­மன், சேனா­தி­ப­தி­பா­பட் போன்ற தேசி­யத் தலை­வர்­கள் வரி­சை­யில் முத்­து­ரா­ம­ 
லிங்­கத் தேவ­ரும் அதில் இணைந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இதற்­கி­டை­யில் இரண்­டாம் உல­கப்­போர் மூண்­ட­தால் பிற கூட்­டங்­களை நேதாஜி நிறுத்தி வைத்து வெளி­நாடு சென்ற அவர், ஜப்­பா­னில் நடந்த விமான விபத்து ஒன்­றில் இறந்து போன­தாக செய்தி வந்­தது. நேதாஜி உயி­ரு­டன்­தான் உள்­ளார் என்று கூட்­டங்­க­ளில் பேசி வந்­தார் தேவர். 1949இல் மதுரை கூட்­டத்­தில் விளக்க உரை ஆற்றி நாட்­டைப் பர­ப­ரப்­புக்கு உண்­டாக்­கி­னார். அதே ஆண்டு ‘நேதாஜி’ என்­னும் வார ஏட்­டைத் தொடங்கி ஆசி­ரி­யர் பொறுப்பை ஏற்று நடத்தி வந்­தார். அது­போல 1952 முதல் 1963 அவர் மறை­யும்­வரை ‘கண்­ணகி’ என்ற வார ஏட்­டில் சீர்­தி­ருத்­தக் கருத்­துக்­களை தொடர்ந்து எழுதி வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">“தேசி­ய­மும் ஆன்­மீ­க­மும் எனது இரு கண்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கட­மை­யைச் செய்; பயனை ஒரு­போ­தும் எதிர்­பார்க்­காதே.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">(Nationality and Divinity are my two eyes.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">Do your duty. Don’t expect any benefits.) என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முது­கு­ளத்­தூர் கல­வ­ரம் நடந்­த­போது, “எந்த ஒரு சமு­தா­ய­மாக இருந்­தா­லும், அமை­தி­யைக் குலைக்க எண்ணி வன்­மு­றை­யில் ஈடு­பட்­டால்; அது என் இத­யத்­தைப் பிளந்து இரத்­தத்­தைக் குடிப்­ப­தற்கு சமம்” என்று உருக்­க­மாக முழக்­க­மிட்ட அவர்; மக்­க­ளி­டையே ஒற்­றுமை பேண நட­வ­டிக்கை எடுத்து வந்­தார். தன்­னி­ன­மான முக்­கு­லத்­தோ­ராக இருந்­தா­லும், வேறு சமு­தா­ய­மா­க­யி­ருந்­தா­லும் நீதி தவ­றா­மல் முடிவு கண்டு அனை­வ­ரி­டத்­தி­லும் அன்பு பேணி வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கல­வ­ரத்­தில் இரு சமூ­கத்­திற்­கி­டை­யில் ஏற்­பட்ட மோத­லால் 1957 செப்­டம்­ப­ரில் பர­மக்­குடி இமா­னு­வேல் எனும் ஒரு சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர் கொல்­லப்­பட்­டார். அப்­போது மதுரை காங்­கி­ரசு சீர­மைப்பு மாநாட்­டுக் கூட்­டத்­தில் பேசி­விட்­டுத் திரும்­பிய பசும்­பொன் தேவர் தேசிய பாது­காப்­புச் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முத­லில் சென்னை, பின் புதுக்­கோட்­டைச் சிறை­க­ளில் அடைக்­கப்­பட்­டார். இமா­னு­வேல் கொலை வழக்­கில் முதல் எதி­ரி­யாக அவர்­மீது வழக்­கு­கள் புனை­யப்­பட்­டன. விசா­ர­ணை­யில் மதுரை ஆட்­சி­யர் தந்த சாட்­சி­யம்­படி நீதி­பதி எம். அனந்த நாரா­ய­ணன், இமா­னு­வேல் கொலைக்­கும், தேவ­ருக்­கும் எந்­தத் தொடர்­பு­மில்லை எனத் தீர்ப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">விடு­த­லை­யான தேவரை தெய்­வத் திரு­ம­கன் என்று முக்­கு­லத்­தோ­ரும் மற்­ற­வர்­க­ளும்போற்றி வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">‘பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்’ என்ற குறள்­படி சாதிக் கொடு­மை­க­ளைச் சாடி வந்­தார். முரு­கன் பக்­த­ரான அவர் குற­வர் குல வள்­ளியை முரு­கன் மணந்­தது ஏன்? என்று கட­வுளை அடை­யா­ளங்­காட்­டி­னார். “நான் குழந்­தை­யாக பிறந்து 6 மாதத்­தில் அன்னை தவ­றிய நிலை­யில் ஒரு முஸ்­லீம் அன்னை தான் எனக்­குப் பால் புகட்­டி­னார்; எனக்கு கிறித்­துவ ஆசி­ரி­யர்­கள் தான் கல்­வி­யைத் தந்­தார்­கள். என் பெற்­றோர்­கள் இந்­துக்­கள்” இதில் எங்கே சாதி இருக்­கி­றது. நான் தேர்­த­லில் நின்­ற­போது, என் இனத்­தைச் சேர்ந்­த­வர்­கள் 18,000 பேர்­தான். ஆனால் நான் வாங்­கிய வாக்­கு­கள் இதர சமு­தா­யம், நாத்­தி­கர்­கள் எல்­லாம் 2 லட்­சத்­திற்கு மேல் வழங்­கி­யவை ஆகும்.” என்று மதுரை தமுக்­கம் மைதா­னப் பொதுக்­கூட்­டத்­தில் 
(14–1–1962) பேசி வெளிப்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேசத்­திற்­காக எழு­து­கி­றேன்; பேசு­கி­றேன் வெள்­ளை­யர் அரசை வேர­றுக்க வேண்­டும் திபத்­தி­லி­ருந்து வரும் அக­தி­க­ளி­டத்­தில் காட்­டு­கின்ற அக்­க­றையை ஏன் ஒன்­றிய அரசு இலங்­கைத் தமி­ழர்­க­ளி­டம் காட்­ட­வில்லை என்று போர்க்­கு­ரல் எழுப்­பி­னார். நான் வன்­மு­றையை விரும்­பா­த­வன். வாய்ப்­பூட்­டுச் சட்­டம் எதற்கு? என்று பல வினாக்­கள் எழுப்­பி­னார்.வட­பு­லத்­திலே தில­கர் அவர்­க­ளுக்­கும்தென் பகு­தி­யிலே தேவர் அவர்­க­ளுக்­கும்­தான் வாய்ப்­பூட்டு சட்­டம் போடப்­பட்­டது.  உல­கப்­போ­கம், பொருள், புகழ் இவை­ய­னைத்­தை­யும் விட்­டொ­ழித்­த­வ­ராய் பற்­றற்ற வாழ்­வைப் பெரி­தும் விரும்­பிய பண்­பா­ளர் தேவர். அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது, அர­சின் எவ்­வித சலு­கை­களோ, சம்­ப­ளமோ, விமான, இர­யில் பயண அரசு செல­வு­க­ளையோ ஏற்­றுக்­கொண்­ட­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேவர் தனது இறு­திக்­கா­லத்­தில் மதுரை திருப்­ப­ரங் 
குன்­றத்­தில் தங்கி உடல் நலி­வுற்ற நிலை­யில் இருந்து வந்­தார். அவர் ஆங்­கில மருந்­து­களை அறுவை சிகிச்­சையோ விரும்­பா­த­வர். சித்த வைத்­தி­யம் மேல் அவர் பற்று கொண்டு சிகிச்சை பெற்று வந்­தார். வெப்பு நோய் பாதிப்­பால் உடல் நலி­வுற்­றி­ருந்த தேவர் 1963 ஆம் ஆண்டு அக்­டோ­பர் 30இல் தனது 55 ஆவது வய­தில் கால­மா­னார். “அன்­றைய அறம் வளர்த்த பாண்­டிய மன்­னர்­க­ளின் ஒரு­மித்த இன்­றைய மிகப்­பெ­ருந்­த­லை­வர் மறைந்து போனார்” என்று அறி­ஞர் அண்ணா தமது இரங்­கல் அஞ்­ச­லி­யில் புக­ழா­ராம் சூட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் வாழ்ந்த நாட்­கள் – 20.075, சிறை வைக்­கப்­பட்ட நாட்­கள் – 4,000, படிப்­பி­லும் வீட்­டி­லும் இருந்த நாட்­கள் – 3,000, மறைந்த அன்று திரண்ட மக்­கள் – 6 லட்­சம் பேர், கடை­ய­டைப்பு நடந்த நக­ரங்­கள் – 160, கடை­ய­டைப்பு நடந்த கிரா­மங்­கள் – 700, அனு­தாப ஊர்­வ­லங்­கள் – 94, அனு­தாப தந்­தி­கள் – 410. அனு­தா­பக்­க­டி­தங்­கள் – 940, அனு­தா­பக் கவி­தைக்­க­டி­தங்­கள் – 1450, அனு­தா­பக்­கூட்­டங்­கள் – 767, மொட்­டை­யிட்­டோர் மொத்­தம் – 11,860 பேர் என்று பசும்­பொன் தேவர் சரித்­தி­ரக் குறிப்­பு­கள் பேசு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அன்று தேவர் சொன்­னதை திமு­க­ழக ஆட்­சி­யில் முதல்­வ­ராக இருந்த கலை­ஞர் செய்து சாத­னை­க­ளாக்­கி­னார். ஏழை விவ­சா­யி­க­ளுக்கு இரண்டு ஏக்­கர் நிலம் இல­வ­ச­மாக கலை­ஞர் அரசு வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1954, மார்ச் 24 சட்­ட­ச­பை­யில் தேவர் சொன்ன அந்த கருத்து, ‘வீணா­கக் கிடக்­கும் பெரும்­பா­லான நிலங்­களை பெரும் பணக்­கா­ரர்­க­ளுக்கு மீண்­டும் மீண்­டும் கொடுக்க வேண்­டும் என்ற பழக்­கத்தை நிறுத்தி, ஏழை­க­ளுக்கு ஒரு ஏக்­கர், அரை ஏக்­கர் என விவா­ச­யத்­திற்கு லாயக்­காய் புதி­தாக நிலம் வழங்­கப்­ப­டு­மா­னால் அவர்­கள் யாரை­யும் எதிர்­பா­ரா­மல் முயற்சி செய்து வாழ வசதி ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தி.மு.க. தலை­வ­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள், அண்­ணா­விற்­குப் பிறகு அரி­யா­ச­னம் ஏறி­னார். அவர் முதல்­வ­ரா­ன­தும் தேவர் சமா­தி­யில் நினை­வா­ல­யம் கட்ட உதவி புரிந்­தார். கலை­ஞர் ஏற்­பாட்­டில் மதுரை கோரிப்­பா­ளை­யத்­தில் எந்­தத் தலை­வ­ருக்­கும் இல்­லாத அள­வில் ஆசி­யா­வில் மிக உய­ர­மான சிலை தேவர்க்கு எழுப்பி, அதனை இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வ­ராக இருந்த வி.வி.கிரி அவர்­க­ளால் (5.1.1974) திறந்து வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேவ­ரின் நினை­வி­டத்­தைச் சீர்­தி­ருத்­தி­யும், பல்­வேறு வர­லாறு பேச மேம்­ப­டுத்­தி­யும் ஏற்­பா­டு­கள் செய்து தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். தேவ­ரின் பிறந்த நாளை அரசு விழா­வா­கக் கொண்­டாட முதல்­வ­ராக இருந்த கலை­ஞர், கழக அர­சில் ஆணை பிறப்­பித்­தார். தேவர் நூறாண்டு விழா 2007 இல் தி.மு.க. அரசு தான் கொண்­டா­டிச் சிறப்­புச் செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அர­சுக் கலைக் கல்­லூ­ரி­கள் பசும்­பொன் தேவர் பேரி­லேயே நெல்லை மாவட்­டம் மேலை நீலித்த நல்­லூர், இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம், கமுதி, மதுரை மாவட்­டம், உசி­லம்­பட்டி ஆகிய ஊர்­க­ளில் கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. அர­சி­னால் உரு­வாக்­கப்­பட்­டன. உசி­லம்­பட்டி கல்­லூ­ரியை முதல்­வ­ராக இருந்த பேர­றி­ஞர் அண்­ணா­வால் தொடங்கி வைக்­கப்­பட்­டது. இத­னால், கிரா­மப்­பு­றங்­க­ளில் எட்­டாக் கனி­யாக இருந்த கல்­விச் செல்­வத்தை ஏழை, எளிய மக்­க­ளுக்­குக்­கி­டைக்க எளி­தாக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மதுரை ஆண்­டாள்­பு­ரம் பாலத்­திற்கு முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் பாலம் எனப் பெயர் சூட்டி சிறப்­புச் செய்­த­வர் கலை­ஞர். அவ­ரது பிறந்த நாளை அரசு விழா­வா­கக் கொண்­டாடி அகி­லம் அறிய நட­வ­டிக்கை எடுத்­தார். தேவர் நினை­வி­டத்­தில் அணையா விளக்கை அமைத்து அம­ரத்­து­வம் செய்து தந்­துள்­ளார். பசும்­பொன் கிரா­மத்­திற்­குப் பல்­வேறு உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தி வரு­கை­யா­ளர்­க­ளுக்­குப் பெரு­மைப்­ப­டுத்­திய சிறப்பு கலை­ஞ­ரைச் சாரும். காரைக்­குடி அழ­கப்பா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ரூபாய் 25 இலட்­சம் மதிப்­பீட்­டி­லான அறக்­கட்­டளை ஒன்றை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தேவர் நினை­வி­டத்­தில் தற்­போது முதல்­வர் தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளால், பொது­மக்­கள் சிர­மன்றி அஞ்­சலி செலுத்­தும் வகை­யில்  11.5 கோடி  ரூபாய் மதிப்­பில் 2–நிரந்­தர மண்­ட­பங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், சாலை, வாக­னப் போக்­கு­வ­ரத்து, கட்­ட­மைப்பு வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">1973 முதல் கலை­ஞர் முக்­கு­லத்­தோர் இன மக்­க­ளுக்­குக் கல்­வி­யி­லும் வேலை வாய்ப்­பி­லும் மேன்­மை­பெற உத­வி­னார். சீர் மர­பி­னர் என்­ப­வர்­க­ளாக மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் இணைத்­தார். மேலும் தற்­போது முதல்­வர் தள­பதி அவர்­கள் முக்­கு­லத்­தோர் சமு­தா­யத்­திற்­காக கல்வி வேலை­வாய்ப்பு பெறு­வ­தற்­கான பல்­வேறு தொடர் நட­வ­டிக்­கை­கள் எடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சட்­ட­மன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக, அமைச்­சர் பெரு­மக்­க­ளாக வாய்ப்பு தந்து உத­வி­யுள்­ளது தி.மு.க. அது­மட்­டு­மல்­லாது கழ­கத்­தி­லும் முக்­கு­லத்­தோர் சமு­தாய மக்­க­ளுக்கு பல்­வேறு பொறுப்­பு­கள் தந்து சிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்த கலை­ஞர் முதல்­வர் எம்.ஜி.ஆரி­டம் கோரிக்கை வைத்து வலி­யு­றுத்­தி­ய­தால் தேவர் உரு­வப்­ப­டம் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் வைக்­கப்­பட்டு சிறப்­பிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">குரு பூஜை விழா­வில், அப்­ப­குதி மக்­கள் கலந்து கொண்டு பால்­கு­டம் எடுத்­தல், அலகு குத்­து­தல், முளைப்­பாரி குல­வை­யி­டு­தல், முடி காணிக்கை செலுத்­து­தல். பொங்­கல் வைத்­தல், சுட­ரொளி விடும் சோதி ஏந்தி வந்து நீராடி முழுக்­கு­தல் என்­பன போன்ற வழி­பாட்­டுச் செயல்­கள் மூலம் அவரை  வாழ்த்தி வணங்கி வரு­கின்­ற­னர். தென் மாவட்­டங்­க­ளில் உள்­ள­டங்­கிய சிவ­கங்கை, விரு­து­ந­கர், தேனி, மதுரை, திண்­டுக்­கல், இரா­ம­நாத புரம், தூத்­துக்­குடி, திரு­நெல்­வேலி, கன்­னியா குமரி மக்­கள் தேவர் குரு­பூஜை என்­றால்; ஒரு மாபெ­ரும் விழா நடத்தி மனக்­க­ளிப்பு எனும் மகிழ்ச்சி துள்­ள­லில்  குதூ­க­லம் கண்­டு­வ­ரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஆகவே தேவர் பெரு­ம­க­னார் சுத்­தத் தியா­கி­யா­க­வும் தேசி­யத் தலை­வ­ரா­க­வும் அறம் வளர்த்­த­வ­ரா­க­வும், போர்க்­குண உரு­வம் படைத்­த­வ­ரா­க­வும், சாதி, சமய வேறு­பா­டு­கள் அற்­ற­வ­ரா­க­வும், பண்­பும், பாச­மும், அடக்­க­மும் கொண்ட பெருந்­த­லை­வ­ரா­க­வும் விடு­த­லைப் போராட்ட தேச பக்­த­ரா­க­வும், சுத்த பிரம்­மச்­சா­ரி­யா­க­வும், ஒழுக்­கம் வளர்க்­கும் பேச்சு ஞானி­யா­க­வும், சிறந்த மனி­தா­பி­மா­னி­யா­க­வும், சம­தர்ம சிற்­பி­யா­க­வும் நமக்­கெல்­லாம் அடை­யா­ள­மாக இருந்­த­வர்­தான் பசும்­பொன் தேவர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேவர் திரு­ம­க­னார் புகழ் ஓங்­குக!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>