<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,66,958,776" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 30 2026 03:40:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261030T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="30102026-CHN-07" position.sequence="07" ex-ref="30102026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">அரசு வழக்கறிஞர் நியமனத்தில் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்ற அமைச்சர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு நெல்லையில் பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Appavu_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்லை, அக். 30 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில் ரூபாய் 15 லட்­சம் லஞ்­சம் பெற்­ற­தாக அமைச்­சர் ஆனந்த் மீது வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்த பின்­ன­ரும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்? தேனி சிறை­யில் இருந்து கைதி­கள் தப்­பித்­தார்­களா,தப்­ப­வி­டப்­பட்­டார்­களா ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என சட்­ட­பே­ரவை முன்­னாள் தலை­வர் 
மு.அப்­பாவு கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­நெல்­வேலி மாவட்ட ஊராட்­சி­கள் மற்­றும் பேரூ­ராட்­சி­க­ளுக்கு குடி­நீர் வழங்­கும் திட்­டம் தற்­போது கிடப்­பில் போடப்­பட்­டது குறித்து மாவட்ட ஆட்­சி­யரை சந்­தித்து மனு அளித்த முன்­னாள் சட்­டப்­பே­ரவை தலை­வர் மு.அப்­பாவு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த திரா­விட மாடல்ஆட்­சி­யில் நெல்லை மா ட்ட­டம் ராதா­பு­ரம்,நாங்­கு­நேரி மற்­றும் களக்­காடு உள்­ளிட்ட 7 பேரூ­ராட்சி களுக்கு குடி­நீர் வழங்­கு­வ­தற்­காக ரூ.423 கோடி நிதி ஒதுக்­கப்­பட்டு பணி­கள் துரி­த­மாக நடை­பெற்று வந்­தன. சேரன்­ம­கா­தேவி தாமி­ர­ப­ரணி ஆற்­றி­லி­ருந்து தண்­ணீர் கொண்டு வந்து சுத்­தி­க­ரித்து,கடந்த ஜூன் மாதத்­திற்­குள் சுமார் 50,000 வீடு­க­ளுக்கு குடி­நீர் இணைப்பு வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்­டும். ஆனால், புதிய அரசு பொறுப்­பேற்ற நாள் முதல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு இத்­திட்­டத்தை முழு­மை­யா­கக் கிடப்­பில் போட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல் முன்­னாள் துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் திறந்து வைத்த வள்­ளி­யூர் மாவட்ட தலைமை மருத்­து­வ­ம­னைக்கு மருத்­து­வர்­கள்,செவி­லி­யர்­கள் என 160-க்கும் மேற்­பட்ட பணி­யி­டங்­களை நிரப்­பா­மல் இந்த அரசு காலி­யாக்கி வைத்­துள்­ளது.சர்­வ­தேச தரத்­தில் இரா­தா­பு­ரம் அருகே ரூ.15 கோடி­யில் அமை­ய­வி­ருந்த விளை­யாட்டு மைதா­னப் பணி­க­ளும் முடக்­கப்­பட்­டுள்­ளன.இந்த மக்­கள் நலத்­திட்­டங்­களை உட­ன­டி­யா­கத் தொடங்­க­வில்லை என்­றால் நெல்­லை­யில் மிகப்­பெ­ரிய மக்­கள் போராட்­டம் வெடிக்­கும் என்று மாவட்ட ஆட்­சி­ய­ரி­டம் எச்­ச­ரித்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேனி சிறை­யி­லி­ருந்து கைதி­கள் தப்பி ஓடி­யது திட்­ட­மிட்ட நாட­க­மா­கவே தெரி­கி­றது.சிறைத்­துறை மற்­றும் மின்­துறை அமைச்­ச­ரான நிர்­மல் குமார், மின் கொள்­மு­த­லில் ஒரு யூனிட்­டுக்கு ரூ.37 முதல் ரூ.41 வரை முறை­கேடு செய்ய முயன்ற மெகா ஊழல் அம்­ப­ல­மா­னது. அதைத் திசை­தி­ருப் ­பவே கைதி­கள் தப்­ப­வி­டப்­பட்­டார்­களா அல்­லது திரைப்­ப­டங்­க­ளில் வரு­வது போல போலீ­ஸாரை அடித்­து­விட்டு தப்­பித்­தார்­களா என்ற சந்­தே­கம் எழு­கி­றது. தமி­ழக மின்­சார வாரி­யத்­திற்கு ரூ.50 லட்­சம் கோடி மதிப்­பி­லான கட்­ட­மைப்பு உள்­ளது.அதில் செயற்­கை­யான மின்­தட்­டுப்­பாட்டை உரு­வாக்கி, நஷ்­டத்­தைக் காட்டி ஒட்­டு­மொத்த மின்­து­றை­யை­யும் அதானி நிறு­வ­னத்­தி­டம் ஒப்­ப­டைப்­பதே அமைச்­சர் நிர்­மல் குமா­ரின் ஒரே திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரூ.4.91 முதல் ரூ.5.50 வரை குறைந்த விலைக்­குக் கிடைக்­கக்­கூ­டிய மின்சா ­ரத்­தையோ அல்­லது ஒப்­பந்­தப்­படி அதானி நிறு­வ­னம் தர­வேண்­டிய முழு மின்­சா­ரத்­தையோ இவர்­கள் பெறு­வ­தில்லை.தி.மு.க. எழுப்­பிய கடும் எதிர்ப்­பின் கார­ண­மா­கவே ரூ.37-க்கு மின் கொள்­மு­தல் செய்­ய­வி­ருந்த டெண்­டர் தற்­போது ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.இது தி.மு.க. வுக்­குக் கிடைத்த வெற்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போது செல்­போன், சுங்­கச்­சா­வடி ரீசார்ஜ் போல முன்­கூட்­டியே ரூ.10,000, ரூ.20,000 பணம் கட்ட வைக்­கும் ‘ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்­டர்’ திட்­டத்தை பொது­மக்­க­ளி­டம் திணிக்­கப் பார்க்­கி­றார்­கள்.மக்­கள் பணத்தை முன்­கூட்­டியே பிடுங்கி தனி­யார் முத­லா­ளி­யி­டம் கொட்­டவே இந்த ஏற்­பாடு, த.வெ.க.அரசு பொறுப்­பேற்­ற­துமே ஆவின் பால் கொள்­மு­தலை கடு­மை­யா­கக் குறைத்­து­விட்­ட­னர். ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்டு, ஆவின் விலையை தொடர்ந்து ஏற்றி மக்­களை தனி­யார் பாலை நோக்­கித் தள்­ளு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல சென்னை விமான நிலை­யத்­தை­யும் தனி­யா­ருக்கு கொடுக்­கும் ஒப்­பந்­தத்­தில் முத­ல­மைச்­ச­ ரி­டம் ரக­சி­ய­மாக கையெ­ழுத்து வாங்­கி­யுள்­ள­னர். ஒரு முத­ல­ மைச்­சர் என்­ப­வர் 24 மணி நேர­மும் விழிப்­பு­டன் இருந்து ஆட்சி நடத்த வேண்­டும்.படப்­பி­டிப்­புக்­குச் சென்­று­விட்டு வந்து வீட்­டில் ஓய்­வெ­டுப்­பது போல் செயல்­ப­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உள­வுத்­துறை கொடுக்­கும் முக்­கி­யத் தக­வல்­கள் எது­வும் முதல்­வ­ரின் கவ­னத்­திற்­குச் செல்­வ­தில்லை.அவ­ரைச் சுற்­றி­யுள்ள குறிப்­பிட்ட ஆந்­திரா கும்­ப­லும், இடைத்­த­ர­கர்­க­ளும்­தான் அரசை இயக்­கு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் கஞ்சா, மெத்­த­பெட்­ட­மைன் உள்­ளிட்ட கொடிய போதைப் பொருட்­கள் தங்­கு­த­டை­யின்றி புழங்­கு­கின்­றன. 2.5 வயது பச்­சி­ளம் குழந்தை மீதான பாலி­யல் வன்­கொ­டுமை உள்­ளிட்ட வழக்­கு­க­ளில் 70 சத­வீ­தத்­துக்­கும் அதி­க­மான குற்­ற­வாளி கள் த.வெ.க. நிர்­வா­கி­க­ளா­கவே உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரா­தா­பு­ரம் கல்­கு­வாரி விவ­கா­ரத்­தில் கேர­ளா­வுக்கு கனி­ம­வ­ளங்­கள் கடத்­தப்­ப­டு­வதை அரசு முழு­மை­யாக, நிரந்­த­ர­மா­கத் தடை செய்ய வேண்­டும். தமி­ழ­கத்­தில் த.வெ.க.என்ற பெய­ரில் பச்­சை­யாக பா.ஜ.க.வின் பினாமி ஆட்­சி­தான் நடக்­கி­றது.காங்­கி­ரஸ்,ராகுல் காந்­தியை நடுத்­தெ­ரு­வில் நிறுத்­தி­விட்டு பா.ஜ.க.வுடன் மறை­மு­கக் கூட்­டணி வைத்­துள்ள இவர்­கள் மக்­களை ஏமாற்ற முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அன்­பில் மகேஷ் கைதில் ஆர்­வம் காட்­டும் ஊழ­லற்ற ஆட்சி’ என்று நாட­க­மா­டும் த.வெ.க.வின் உண்மை முகம் நீதி­மன்­றத்­தில் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. அரசு வழக்­க­றி­ஞர் பத­விக்­காக த.வெ.க. பொதுச்­செ­ய­லா­ளர் மற்­றும் அமைச்­ச­ரு­மான ஆனந்­தி­டம் ரூ.15 லட்­சம் லஞ்­சம் கொடுத்­த­தாக வழக்­க­றி­ஞர் ஒரு­வர் குற்­றம் சாட்­டிய பிற­கும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன்? என கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>