<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,958,921" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 30 2026 03:48:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261030T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="30102026-MDU-04" position.sequence="04" ex-ref="30102026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">குடியரசுத் தலைவருக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் –   3ஆம் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது என்பது அழுத்தமாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்று, தேர்தல் ஆணையம் எடுத்த முடிவைப் பதிவு செய்த கோப்பு இருக்க வேண்டும். ஆனால், அதை ஆணையம் சமர்ப்பிக்கத் தவறியுள்ளது. அல்லது, தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமலேயே நாடு தழுவிய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்ப எண் 30952–க்கு அளித்த பதிலில், தற்போது நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் ஒப்பிட்டுச் சரிபார்ப்பதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் 2003–ஆம் ஆண்டின் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும்கூட தேர்தல் ஆணையத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை எனும் வாதங்கள் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2026 ஜூலை மாதம் ECINET இணையதளத்தில் இடம்பெற்ற படிவம் 6–இல் விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர்கள் முந்தைய SIR பட்டியலில் இருந்தனவா எனக் கேட்கும் நிபந்தனை சேர்க்கப்பட்டதாக மனு குறிப்பிடுகிறது. இந்த மாற்றத்துக்கு 16–05–2026 அன்று டாக்டர் விவேக் ஜோஷி ஆட்சேபனை தெரிவித்ததாகவும், டாக்டர் சுக்பீர் சிங் சந்து அதனை ஏற்றதாகவும் மனு கூறுகிறது. 05–10–2026 அன்று உச்சநீதிமன்றம் மாற்றப்பட்ட படிவம் 6–க்கு ஒப்புதல் அளித்ததாகக் கருத முடியாது எனத் தெளிவுபடுத்தியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="14">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">ECINET, ERONET:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">மாநில வாரியான மென்பொருள் கட்டுப்பாடுகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வாக்காளர் பட்டியல் தயாரிப்பும் திருத்தமும் அந்தந்தத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரின் சட்டப்பூர்வப் பொறுப்பு என்று மனு வலியுறுத்துகிறது. ஆனால், ECINET மற்றும் ERONET கட்டமைப்புகள் வழியாகத் தரவு அணுகல் மையப்படுத்தப்பட்டு, மாநில மற்றும் தொகுதி அலுவலர்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறது. கோவாவில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 97 தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை மீளச் சேர்க்கத் தொழில்நுட்ப அணுகல் இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">20–10–2026 அன்று தி இந்து வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி, மேற்கு வங்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர்களின் கணக்கெடுப்புப் படிவங்கள், ஆவணங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பரிந்துரைகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட முடியாத வகையில் ECINET மென்பொருளில் மாநிலத்துக்கேற்ப குறியீட்டு அடிப்படையிலான கட்டுப்பாடுகள் இடம்பெற்றிருந்ததாக மனு கூறுகிறது. 02, 06, 07–10–2026 தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும், இந்த வசதி 28–09–2026 முதலே இருந்ததாகவும், 16–10–2026 மென்பொருள் பதிப்பிலும் தொடர்ந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் போன்ற ஓர் அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) அல்லது வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) ஒப்புதல் அளித்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு அதிகாரம் பெற்றிருப்பது சட்டவிரோதமானது. இது 1950 மற்றும் 1951–ஆம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின் விதிகளுக்கு முரணானது என்பதை மனு குறிப்பிட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதனால்தான், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது (SIR), தி.மு.கழகத்தின் BLA–2 முகவர்கள் முனைப்புடன் உதவியபோதிலும், பல ஆண்டுகளாகத் தங்கள் தொகுதியில் வசித்து, முந்தைய பல தேர்தல்களில் வாக்களித்த உண்மையான வாக்காளர்கள் பலரின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குடியரசுத் தலைவருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நீதித்துறை அலுவலர்கள் சேர்த்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்தின் பெயரில் 16.10 இலட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அவற்றைத் தாக்கல் செய்ய யார் அதிகாரம் வழங்கினர் என்று டாக்டர் சுக்பீர் சிங் சந்து கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு இன்று வரை பதில் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="14">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">நாடு முழுவதும் வாக்குரிமைப் போராட்டங்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">24–09–2026 முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களை நடத்தியதாக மனு குறிப்பிடுகிறது. 02–10–2026, 04–10–2026 அன்று டெல்லி மற்றும் மும்பையில் போராட்டங்கள் நடந்ததாகவும், 09–10–2026 அன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்றதாகவும், 10–10–2026 அன்று டெல்லியில் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10.10.2026 அன்று, தில்லி முற்றுகையிடப்பட்டதைப் போன்ற சூழலுக்குத் தள்ளப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன; ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன; போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதையும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்னாள் முதலமைச்சர்களான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், செல்வி மம்தா பானர்ஜி, திரு. பினராயி விஜயன், திரு. மாணிக் சர்க்கார் ஆகியோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதையும், கழகத் தலைவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களைத் த.வெ.க. அரசு தடுப்புக் காவலில் வைத்தது. முன்னாள் அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ. இராசா, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலையிட்ட பிறகே மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமிழக வெற்றிக் கழக அரசால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், முன்னாள் அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ.ராசா மற்றும் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தலையீட்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரும் போராட்டங்கள் நடைபெற்றதாகவும் மனு விவரிக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="14">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் உச்சநீதிமன்ற வழக்குகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தற்போது பொதுவெளியில் வெளியாகியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 324(5)–ஆவது பிரிவை, 124(4)–ஆவது பிரிவுடனும், 2023–ஆம் ஆண்டுச் சட்டத்தின் 11–ஆவது பிரிவுடனும் இணைத்துப் படிப்பதன் அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்குமாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் குடியரசுத் தலைவர் செய்தி அனுப்பலாம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசியலமைப்புச் சட்டத்தின் 324(2)–ஆவது பிரிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு உள்ளதையும், அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் கடமையை நிறைவேற்றுவதற்கு, தற்போதைய சூழலைவிட மிக அவசியமான ஒரு தருணம் வேறெதுவும் இருக்க முடியாது என்பதையும் குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு மனு கொண்டு சென்றுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="14">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">குடியரசுத் தலைவரிடம் முன்வைக்கப்பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">ஒன்பது கோரிக்கைகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">1. அரசியலமைப்பின் 86(2)–ஆவது உறுப்பின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செய்தி அனுப்பி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுவிலும் பொதுவெளியிலும் உள்ள குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து, அரசியலமைப்பின் 324(5)–ஆவது உறுப்பு, 124(4)–ஆவது உறுப்பு மற்றும் 2023–ஆம் ஆண்டு சட்டத்தின் 11–ஆவது பிரிவின்படி பதவிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">2. அரசியலமைப்பின் 78–ஆவது உறுப்பின்படி பிரதமரிடமிருந்து தகவல்களைப் பெற்று, இந்த நாடாளுமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் ஆணையத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தாதிருப்பதையும், ஒவ்வொரு முடிவும் 2023–ஆம் ஆண்டு சட்டத்தின் 18–ஆவது பிரிவின்படி கூட்டு முடிவாக எடுக்கப்பட்டு அதன் கூட்டக் குறிப்புகள் பதிவு செய்யப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">3. 2025 SIR நடவடிக்கையின்போது தமிழ்நாட்டின் வரைவுப் பட்டியலில் இடம்பெறாமல் போன 97,37,832 வாக்காளர்களின் பெயர் நீக்கங்களின் சட்டப்பூர்வத்தன்மை, 23–02–2026 இறுதிப் பட்டியல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மீதான தாக்கம் ஆகியவை குறித்து அரசியலமைப்பின் 143–ஆவது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">4. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட SIR அடிப்படையிலான வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி, SIR–க்கு முந்தைய பட்டியலை மீண்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டப்படி திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">5. அனைத்து மாநிலங்களிலும் SIR நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 ஆகியவற்றின்படி உரிய கால அவகாசம், தனிப்பட்ட அறிவிப்பு, விசாரணை வாய்ப்பு வழங்கி வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">6. ECINET, ERONET தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வெளியிலுள்ள நிபுணர்களால் தடயவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மென்பொருள் கட்டுப்பாடுகள், பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், 24–06–2025 உத்தரவு தொடர்பான கோப்புகள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள், ஆணையர்களின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">7. தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அதன் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகள் 2023–ஆம் ஆண்டு சட்டத்தின் 18–ஆவது பிரிவின்படி செல்லத்தக்கவையா என்பது குறித்து அரசியலமைப்பின் 143–ஆவது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">8. தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்; அதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல்களில் VVPAT ஒப்புகைச் சீட்டுகளை 100 விழுக்காடு எண்ணி ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil015" fontStyle="Regular" size="11">9. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்குரிமையைப் பாதுகாக்கக் குடியரசுத் தலைவர் தமது அரசியலமைப்பு அதிகாரங்களுக்குட்பட்டு தேவையான பிற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="14">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">தேர்தல் ஆணையத்தின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்தியத் தேர்தல் ஆணையம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெற்றுள்ள நற்பெயர் எந்தவொரு தனிநபருக்கும் அல்ல; இந்திய மக்களுக்கே சொந்தமானது என்பதை மனு வலியுறுத்துகிறது. ஆணையத்தின் முடிவுகள் தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதாக அதன் உறுப்பினர்களே பதிவு செய்திருக்கும் ஆட்சேபனைகளைச் சுட்டிக்காட்டி, தேர்தல் நிர்வாகம் ஆட்சியிலிருக்கும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அரசியலமைப்புக் கொள்கையைப் பாதுகாக்க குடியரசுத் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரியுள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>