<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 29 2026 16:39:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261030T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="30102026-VLR-03" position.sequence="03" ex-ref="30102026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">SIR நடவடிக்கையை ரத்து செய்து வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருக!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் சட்டப்பூர்வமானதா?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">உச்சநீதிமன்ற கருத்தை பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame953779_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup953921_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup953920_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Thalaivarlatte_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்னை, அக்.30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்றும் “தமிழ்நாட்டில் SIR நடவடிக்கையின்போது 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனது சட்டப்பூர்வமானதா என்பது குறித்து அரசியலமைப்பு சட்டப் பிரிவு 143–இன்படி உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும்!” என்றும் “நாடு முழுவதும் SIR நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்! வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்!” என்றும் வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை (Special Intensive Revision – SIR), தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆகியவை குறித்துக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு நேற்று முன்தினம் (28–10–2026) விரிவான மனுவை அனுப்பியுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த 17–10–2026 அன்று நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ள இந்த மனுவில், 77 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தி.மு.க. மக்களவையில் 22 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களையும் கொண்டிருப்பதுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 59 உறுப்பினர்களுடன் முதன்மை எதிர்க்கட்சியாக விளங்குவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="13">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தேர்தல் ஆணையம் தனிநபரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அதிகாரத்திற்கு உட்பட்ட அமைப்பல்ல!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324, தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் நடத்துதல் தொடர்பான மேற்பார்வை, வழிகாட்டுதல், கட்டுப்பாட்டு அதிகாரங்களை வழங்கு கிறது. 326–ஆவது பிரிவு வயதுவந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்கிறது. தேர்தல் ஆணையம் என்பது தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரின் தனிப்பட்ட அமைப்பல்ல; மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அரசியல மைப்புச் சட்டப்படியான அமைப்பு என்பதை மனு வலியுறுத்துகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">2023–ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் தொடர்பான சட்டத்தின் 18–ஆவது பிரிவின்படி, ஆணையத்தின் நடவடிக்கைகள் இயன்றவரை ஒருமித்த கருத்திலும், கருத்து வேறுபாடு ஏற்படும்போது பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின்படியும் அமைய வேண்டும். டி.என். சேஷன் எதிர் இந்திய ஒன்றியம் (1995), அனூப் பரன்வால் எதிர் இந்திய ஒன்றியம் (2023), மொஹிந்தர் சிங் கில் எதிர் தலைமைத் தேர்தல் ஆணையர் (1978), லால் பாபு ஹுசேன் எதிர் வாக்காளர் பதிவு அலுவலர் (1995) ஆகிய தீர்ப்புகளை மனு மேற்கோள்காட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள ஒருவரின் பெயரை உரிய விசாரணை வாய்ப்பின்றி நீக்கக்கூடாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">1949 ஜூன் 15 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் தேர்தல் நிர்வாகம் ஆட்சியிலிருக்கும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை மனு நினைவூட்டுகிறது. மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் மீறித் தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="13">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">SIR நடவடிக்கையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஆரம்பத்திலிருந்தே எதிர்த்த தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">2025 ஜூலை மாதத்தில் பீகாரில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதே தி.மு.க. அதனை எதிர்த்ததாக மனு குறிப்பிடுகிறது. பீகாரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில்  மு.க.ஸ்டாலின் அவர்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்  தேஜஸ்வி யாதவ், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோருடன் பங்கேற்ற தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">27–10–2025 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு SIR விரிவுபடுத்தப்பட்டபோது, வடகிழக்குப் பருவமழை மற்றும் பண்டிகைக் காலத்தில் இந்நடவடிக்கையை மேற்கொள்வது சாத்தியமற்றது என்றும், இதனால் தகுதியான வாக்காளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தி.மு.க. எதிர்த்தது. 02–11–2025 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தை நாடத் தீர்மானிக்கப்பட்டது. 11–11–2025 அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் கழக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="13">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஏற்பட்ட எண்ணிக்கை மாற்றம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட எண்ணிக்கை களை அடிப்படையாகக் கொண்டு மனுவில் தரப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: –
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">SIR–க்குப் பிந்தைய வரைவுப் பட்டியலில் முந்தைய பட்டியலைவிட 97,37,832 வாக்காளர்கள் குறைவாக இருந்தனர். திருத்த மேல்முறை யீட்டு நடைமுறைகளுக்குப் பிறகும் இறுதிப் பட்டியலில் 74,07,207 பேர் குறைவாக இருந்தனர். 234 தொகுதிகளிலும் சராசரியாகத் தொகுதிக்கு சுமார் 31,655 பேர் நீக்கப்பட்டு இருந்ததாக மனு குறிப்பிடுகிறது. பல தேர்தல்களில் வாக்களித்த நீண்டகாலக் குடியிருப்பாளர்கள் ‘முகவரியில் இல்லை’ அல்லது ‘இடம்பெயர்ந்தவர்’ எனக் குறிக்கப்பட்டு, தனிப்பட்ட அறிவிப்பும் விசாரணை வாய்ப்பும் வழங்கப்படாமல் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கழக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கண்டறிந்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="13">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">2026 தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">23–04–2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 04–05–2026 அன்று அறிவிக்கப்பட்டன. தொகுதிவாரி வாக்காளர் நீக்கங்களையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு 
தி இந்து பிசினஸ்லைன் வெளியிட்ட ஆய்வை மனு மேற்கோள்காட்டி யுள்ளது. மனுவில் இடம்பெற்றுள்ள தொகுதிவாரி விவரங்கள்: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">20 ஆயிரத்துக்கும் குறைவான நீக்கங்கள் ஏற்பட்ட 99 தொகுதி களில் த.வெ.க. 24 இடங்களிலும் தி.மு.க. 27 இடங்களிலும் வென்ற தாகவும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான நீக்கங்கள் ஏற்பட்ட 69 தொகுதிகளில் த.வெ.க. 52 இடங்களிலும் தி.மு.க. 11 இடங்களிலும் வென்றதாகவும் மனு கூறுகிறது. 80 ஆயிரத்துக்கும் அதிகமான நீக்கங்கள் ஏற்பட்ட 10 தொகுதிகளிலும் த.வெ.க. வென்றதாகக் குறிப்பிடுகிறது. 2021–இல் தி.மு.க. வென்ற தொகுதிகளில் சராசரியாக 31 ஆயிரம் பெயர்களும், அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் சுமார் 27ஆயிரம் பெயர்களும் நீக்கப்பட்டதாகக் கூறி, இந்த மாற்றங்கள் தேர்தல்முடிவுகளைப் பாதித்திருக்கக்கூடும் என மனு குற்றஞ்சாட்டுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திருப்பத்தூரில் தி.மு.க. வேட்பாளர் திரு. கே.ஆர். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும், கன்னியா குமரி, போளூர், திருக்கோவிலூர், பரமத்தி வேலூர் தொகுதிகளில் முறையே 214, 227, 285, 308 வாக்குகள் வித்தியாசத்தில் முடிவுகள் அமைந்ததாகவும் மனு எடுத்துக்காட்டியுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கொளத்தூரில் 2021 தேர்தலில், தான் 1,05,522 வாக்குகள் பெற்று 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாகவும், அ.தி.மு.க. வேட்பாளர் திரு. எம். ஆதிராஜாராம் 35,138 வாக்குகள் பெற்றதாகவும் மனு குறிப்பிடுகிறது. அப்போது 2,84,056 வாக்காளர்கள் இருந்த தொகுதியில் 2025 டிசம்பருக்குள் சுமார் 1,03,812 பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறது. 2026–இல் தான் 74,202 வாக்குகளும் வெற்றிபெற்ற த.வெ.க. வேட்பாளர் 82,997 வாக்குகளும் பெற்றதாகவும், வித்தியாசம் 8,795 வாக்குகள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனவே, தனது வெற்றியைத் தடுக்கும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பெருவாரியான அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள னர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="13">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மற்ற மாநிலங்களிலும் வாக்காளர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பட்டியல் குறித்த குற்றச்சாட்டுகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 49 தொகுதிகளில் வாக்காளர் நீக்கங்களின் எண்ணிக்கை வெற்றி வாக்கு வித்தியாசத்தைவிட அதிகமாக இருந்ததாகவும், சுமார் 60 இலட்சம் வாக்காளர்கள் முரண்பாடுகள் இருப்பதாகக் குறியிடப்பட்டு 27 இலட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் மனு குறிப்பிடுகிறது. அங்கு நீக்கப்பட்டவர்களில் 62 விழுக்காட்டினர் பெண்கள் என ஓர் ஆய்வு கூறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பஞ்சாபில் 2026 ஜூன் மாத வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 13–08–2026 அன்று வெளியான வரைவுப் பட்டியலில் 20.66 இலட்சம் பேர் குறைவாக இருந்ததாகவும், மேலும் 12.80 இலட்சம் பேரை 2003 பட்டியலுடன் தொடர்புபடுத்த முடியவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவுப் பட்டியல்களில் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மனு குறிப்பிடுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="13">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இரண்டு தேர்தல் ஆணையர்கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பதிவு செய்த 14 ஆட்சேபனைகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">23–09–2026 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியை மேற்கோள்காட்டி, தேர்தல் ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் குறைந்தது 14 சந்தர்ப்பங்களில் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக மனு குறிப்பிடுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின்றி அதன் பெயரில் உத்தரவுகள் வெளியிடப்பட்டதாகவும், புதிய தகவல் தொழில்நுட்பத் தொகுதிகள், இணையவழி தளங்கள், வெளிநாட்டுப் பயண அனுமதிகள், கூட்ட நிகழ்ச்சி நிரல்கள், வாக்காளர் பட்டியல் தரவுகளின் மையப்படுத்தல், படிவம் 6 மாற்றங்கள், மேற்கு வங்க மேல்முறையீடுகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சேபனைகள் எழுந்ததாகவும் மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை மீறிய நடவடிக்கைகள் “அனுமதியற்றவை; சட்டவிரோத மானவை” என்று டாக்டர் சுக்பீர் சிங் சந்து குறிப்பிட்டதாக மனு கூறுகிறது. ஆணையர்கள் ஒன்றிய அமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டதாகவும், 09–09–2026 அன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆணையத்தின் முழுக் கூட்டம் நடைபெற்றதாக வும் குறிப்பிடுகிறது. 26–09–2026 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட ECI/PN/120/2026 செய்திக்குறிப்பில் இனி நிகழ்ச்சி நிரல்கள் முன்கூட்டியே பகிரப்படும் உள்ளிட்ட நடைமுறைகள் அறிவிக்கப்பட்டதாகவும் மனு எடுத்துரைக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Webdings" fontStyle="Regular" size="13">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">SIR உத்தரவுக்கான ஒப்புதல், படிவம் 6 மாற்றங்கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாடு தழுவிய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) மேற்கொள்வதற்கான முடிவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">28.07.2025 தேதியிட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்ப எண் 30951–க்கு, 27.08.2025 அன்று பதிலளித்த மத்திய பொதுத் தகவல் அலுவலர், 24.06.2025 தேதியிட்ட வெளியிடப்பட்ட உத்தரவைத் தவிர, இது தொடர்பான எந்தத் தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்று தெரிவித்தார் என்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதற்கும் ஒருபடி மேலாக, முதல் மேல்முறையீட்டு அதிகாரி, மேல்முறையீட்டு எண் 2906–இல், “2025–ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) தொடங்குவது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று பதிவு செய்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. ஆனால், 24.06.2025 தேதியிட்ட உத்தரவின் 10–ஆவது பத்தியில், நாடு முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 26.09.2026 தேதியிட்ட செய்திக் குறிப்பில், அந்த உத்தரவு “தேர்தல் ஆணையத்தின் ஒருமனதான ஒப்புதலைப் பெற்றது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>