<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 29 2026 16:52:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261030T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="30102026-VLR-10" position.sequence="10" ex-ref="30102026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">பேரா. கலை­ய­ர­சன் கைது: பாசி­சத்­தின் தமி­ழக முகம் த.வெ.க. அரசு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup954775_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பே</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரா­சி­ரி­யர்  கலை­ய­ர­சன்விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதைதி.மு.க. தலை­வர் கடு­மை­யா­கக் கண்­டித்­துள்­ளார். பாசி­சம் தலை­       வி­ரித்­தா­டும்­போது அதன் முதல் இலக்கு எதிர்க்­கட்­சி­கள்; இரண்­டாம் இலக்கு கல்­வி­யா­ளர்­கள், எழுத்­தா­ளர்­கள், சிந்­த­னை­யா­ளர்­கள், ஊட­க­வி­ய­லா­ளர்­கள்; மூன்­றாம் இலக்கு மக்­க­ளின் அடிப்­படை உரி­மை­கள். இந்த  மூன்­றின்  மீதான  தாக்­கு­தல்­க­ளை­யும் த.வெ.க. அரசு இடை­ய­றாது மேற்­கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எந்த அடிப்­படை உரி­மை­கள்அல்­லது சட்­டங்­கள் குறித்­தும் கவ­லை­யில்­லா­மல் தி.மு.க.வி­னர் மீது மேற்­கொள்­ளப்­ப­டும் கைது நட­வ­டிக்­கை­க­ளில், ஒவ்­வொரு முறை­யும் நீதி­மன்­றத்­தி­டம் குட்டு வாங்­கி­னா­லும், அதைத் துடைத்­துப்­போட்­டு­ விட்டு அதே செய­லைக் காவல்­துறை மீண்­டும் மீண்­டும் செய்­து­ வ­ரு­கி­றது. அர­சி­யல் எதி­ரி­க­ளின் மீதான அரா­ஜ­கம், இப்­போது கல்­வி­யா­ளர்­கள் மீதும் விரி­வ­டை­யத் தொடங்­கி­யுள்­ளது. அதற்­குப் பேரா­சி­ரி­யர்  கலை­ய­ர­சன்  மீதான   காவல்­து­றை­யின் துன்­பு­றுத்­தலே சிறந்த சான்­றா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏ. கலை­ய­ர­சன் ஒரு பொரு­ளா­தார நிபு­ணர்; கேம்­பி­ரிட்ஜ் பல்­க­லைக்­க­ழக அச்­ச­கம் வெளி­யிட்ட 
‘தி திரா­வி­டி­யன் மாடல்’ நூலின்       ஆசி­ரி­யர். அவர் இந்­தி­யா­வி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் பல்­வேறு கல்வி மற்­றும் ஆராய்ச்­சிப் பொறுப்­பு­களை வகித்­துள்­ளார்; மேலும் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி மற்­றும் பொதுக் கொள்­கை­கள் குறித்­துத் தொடர்ச்­சி­யாக எழு­தி­வ­ரு­கி­றார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறு­வ­னத்­தில் (MIDS) பொரு­ளா­தா­ரத் துறை­யின் இணைப் பேரா­சி­ரி­ய­ ரா­கப் பணி­யாற்­றி­வ­ரும் அவர், மிகமுக்­கி­ய­மான திரா­விட ஆய்­வா­ள­ரும்ஆவார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வ­ளவு மதிப்­பு­மிக்க ஒரு­வ­ரைக் காவல்­துறை ஒரு பொய்க்        குற்­றச்­சாட்­டில் எவ்­வாறு நடத்­தி ­யி­ருக்­கி­றது என்­பது அதிர்ச்­சி­ய­ளிப்­பது மட்­டு­மன்றி, பாசி­சத்­தின் கரங்­கள்எவ்­வாறு நீள்­கின்­றன என்­ப­தை­யும் வெளிச்­ச­மிட்­டுக் காட்­டு­கி­றது. காவ­ல்­துறை தலைமை இயக்­கு­ந­ரி­டம்     (டி.ஜி.பி.) தனக்கு நேர்ந்த கொடு­மை­ க­ளைக் குறித்து அவர் பின்­வ­ரு­மாறு விவ­ரிக்­கி­றார்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“இன்று அதி­காலை (அக்­டோ­பர் 28) சுமார் 5 மணி­ய­ள­வில், நான் ஆழ்ந்த உறக்­கத்­தில் இருந்­த­போது, சீருடை அணி­யாத மூன்று காவ­லர்­கள் அடை­யா­றில் உள்ள எனது வீட்­டின் (A7, 4-வது தெரு, நேரு நகர், அடை­யாறு, சென்னை) 
கத­வைத் தட்­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் கத­வைத் திறந்­த­தும், அவர்­கள் என் பெய­ரைக் கேட்­டார்­கள்.  நான்  அதை  உறு­திப்­ப­டுத்­திய உட­னேயே, சமூக ஊட­கப் பதிவு தொடர்­பான விசா­ர­ணைக்­காக என்னை பம்­ம­லில் உள்ள T4 சங்­கர் நகர் காவல் நிலை­யத்­திற்கு அழைத்­துச் செல்ல வந்­தி­ருப்­ப­தா­கக் கூறி, எனது கைபே­சி­யைப் பறித்­துக்­கொண்­ட­னர். அந்த விசா­ர­ணைக்கு அனு­ம­தி­ய­ளிக்­கும் எந்­த­வொரு ஆவ­ணத்­தையோ, புகா­ரின் நக­லையோ அல்­லது முதல் தக­வல் அறிக்­கை­யையோ (FIR) அவர்­கள் காட்­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல்­லா­வ­ரம் த.வெ.க (TVK) சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜே. காமாட்­சிக்கு எதி­ராக, எனக்­குத் தொடர்பே இல்­லாத ஓர் இன்ஸ்­டா­கி­ராம் பக்­கத்­தி­லி­ருந்து அவ­தூ­றான கருத்து பதி­வி­டப்­பட்­ட­தாக அவர்­கள் குற்­றம்­சாட்­டி­னர். எனக்கு அந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரையோ அல்­லது அவ­ரு­டைய    சமூக   ஊட­கப்   பக்­கங்­க­ளையோ தெரி­யாது; உண்­மை­யில், அவ­ரைப் பற்றி நான் கேள்­விப்­பட்­டதே இல்லை. எனக்கு ஓர் இன்ஸ்­டா­கி­ராம் கணக்­குக்­கூட கிடை­யாது என்­பதை அவர்­க­ளுக்குவிளக்க முயன்­றேன். இருப்­பி­னும்,என் பேச்­சைக் கேட்­கா­மல், எனது வீட்­டின் வெளியே         நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு வாடகை காரில் (காவல்­துறை வாக­னம் அல்ல) என்னை 
ஏற்­றிக்­கொண்டு அங்­கி­ருந்து புறப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனது குடும்­பத்­தி­ன­ரி­டம் தெரி­விப்­ப­தற்­கான வாய்ப்­பைக் கூட அவர்­கள் எனக்கு வழங்­க­வில்லை. வாக­னம் கிண்­டி­யைத் தாண்­டி­ய­போது, எனது குடும்­பத்­தி­ன­ரைத் தொடர்­பு­கொள்­வ­தற்­காக எனது கைபே­சி­ யைத் திருப்­பித் தரு­மாறு கேட்­டேன். பல­முறை கோரிக்கை விடுத்த பிறகு, சில நிமி­டங்­கள் மட்­டும்   கைபே­சி­யைப்    பயன்­ப­டுத்த என்னை அனு­ம­தித்­த­னர்;அப்­போது என்ன நடக்­கி­றது என்­பதை எனது நண்­பர்­க­ளி­டம் தெரி­வித்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­குள், அந்த வாக­னம் பல்­லா­வ­ரத்தை அடைந்­து­விட்­டது; அங்கு சாலை­யோ­ர­மா­கச் சுமார் 45 நிமி­டங்­கள் வாக­னத்தை நிறுத்­தி­வைத்­தி­ருந்­த ­னர். அவர்­கள் பல தொலை­பேசிஅழைப்­பு­களை மேற்­கொண்­ட­னர்; பல அழைப்­பு­க­ளை­யும் பெற்­ற­னர். அதைத் தொடர்ந்து, என்னை மீண்­டும் வீட்­டிற்கே கொண்­டு­சென்று விடு­மாறு தங்­க­ளுக்கு உத்­த­ரவு வந்­துள்­ள­தாக என்­னி­டம் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரும்­பும் வழி­யில், ஓர் இன்ஸ்­டா­கி­ராம் பக்­கத்­தில் இருந்து பதி­வி­டப்­பட்ட அவ­தூ­றான  கருத்­தின்  ஸ்கிரீன்­   ஷாட்டை எனக்­குக் காட்­டி­னர். அந்­தக் கணக்­கின் சுய­வி­வ­ரப் பட­மாக (Profile picture) எனது புகைப்­ப­டம் இருந்­தது; ஆனால் அதன் பய­னர் பெயர் வேறொன்­றாக (@youvijayamani) இருந்­தது. அதைப்­பற்றி எனக்கு எது­வும் தெரி­யாது. நான் ஆராய்ச்­சிப் பணி­யா­ள­ராக   (Research             affiliate) இருந்த ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் இணை­ய­ த­ளத்­தில் இருந்து அந்­தக் குற்­ற­வாளி எனது புகைப்­ப­டத்தை எடுத்­தி­ருக்­கக்­கூ­டும் எனத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனது குடி­யி­ருப்­பிற்கு வந்­த­டைந்­த­தும், அந்த இன்ஸ்­டா­ கி­ராம் கணக்­கு­டன் எனக்கு எந்­தத் தொடர்­பும் இல்லை என்று எழுத்­துப்­பூர்­வ­மா­கத் தரு­மாறு என்­னி­டம் கேட்­ட­னர். அந்­தக் கணக்கு என்­னு­டை­யது அல்ல என்­றும், எனது புகைப்­ப­டத் ­தைக் கொண்டு இயங்­கும்       அத்­த­கைய  இன்ஸ்­டா­கி­ராம் ஐ.டி. குறித்து எனக்கு எது­வும் தெரி­யாது  என்­றும்  காவல்  ஆய்­வா­ள­ருக்கு (T4 சங்­கர் நகர்) முக­வ­ரி­யிட்டு ஒரு கடி­தம் எழு­திக் கொடுத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தக் கடி­தத்­தைப் பெற்­றுக் ­கொண்ட பிறகு, அவர்­கள் எனது கைபே­சி­யைத் திருப்­பிக் கொடுத்­த­னர். காலை சுமார் 7:45 மணி­ய­ள­வில் நான் மீண்­டும் வீட்­டில் கொண்­டு­வந்து விடப்­பட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்னை    நானே   நியா­யப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு ஒரு    நியா­ய­மான வாய்ப்­பைக்   கூடத் தரா­மல் அவர்­கள் என்னை நடத்­திய விதம், என்னை ஆழ்ந்த மன உளைச்­ச­லுக்­கும் அவ­மா­னத்­திற்­கும் உள்­ளாக்­கி­யுள்­ளது. மேலும், எனக்­குத் தெரி­யாத ஒரு நப­ருக்கு எதி­ராக அவ­தூ­றான கருத்­து­க­ளைப் பதி­வி­டு­வ­தற்­காக யாரோ ஒரு­வர் எனது புகைப்­ப­டத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­திப் போலி இன்ஸ்­டா­கி­ராம் கணக்கை உரு­வாக்­கி­யுள்ள நிலை­யில், இந்த விவ­கா­ரத்­தில் நான்­தான் பாதிக்­கப்­பட்­ட­ வன். இருப்­பி­னும், அதி­காலை வேளை­யில் காவ­லர்­கள் எனது வீட்டு வாச­லுக்கு வந்து, இரவு உடை­யில் இருந்த என்னை அழைத்­துச் சென்­ற­தன் மூலம் ஒரு குற்­ற­வா­ளி ­யைப் போல நடத்­தப்­பட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஒட்­டு­மொத்த நிகழ்­வும் வெறும் ஓர் இன்ஸ்­டா­கி­ராம் கணக்கு அல்­லது ஒரு போலி ஐ.டி. உரு­வாக்­கப்­பட்­டது சார்ந்­தது மட்­டுமே அல்ல; மக்­களைஅச்­சு­றுத்­து­வ­தற்­கும் அவர்­க­ளின்நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் விளை­விப்­ப­தற்­கு­மா­கப் புனை­யப்­பட்ட ஒரு கணக்­கா­க­வும் இது இருக்­க­லாம் என்று நான் அஞ்­சு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார மற்­றும் அர­சி­யல் வளர்ச்­சி­யைக் கூர்ந்து கவ­னிப்­ப­வன் என்ற வகை­யில், நான் மிகுந்த கவ­லை­ய­டைந்­துள்­ளேன்.      இந்­தச் சட்­ட­வி­ரோ­தக் காவ­லுக்­கும், போலி ஐ.டி. உரு­வாக்­கி­ய­தற்­கும், இழி­வான கருத்­து­ க­ளைப் பதி­விட்டு பொது­வெ­ளி­யில் எனது நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் ஏற்­ப­டுத்­தி­ய­தற்­கும் கார­ண­மா­ன­வர்­கள் மீது தகுந்த நட­வ­டிக்கை  எடுக்­கு­மாறு     கேட்­டுக்­கொள்­கி­றேன்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­தான் கலை­ய­ர­ச­னின் புகார் மனு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அப்­பட்­ட­மான சட்ட மீறல்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தப் புகா­ரில் விவ­ரிக்­கப்­பட்­  டுள்ள நிகழ்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், உச்ச நீதி­மன்­றத்­தின் வழி­காட்­டு­தல்­கள் மற்­றும் குற்­ற­வி­யல் நடை­மு­றைச் சட்­டப் பிரி­வு­க­ளின்­படி (CrPC / BNSS) காவல்­துறை தரப்­பில் கீழ்க்­கண்ட முக்­கிய சட்ட மீறல்­கள் நடை­பெற்­றுள்­ளது தெளி­வா­கி­றது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘டி.கே. பாசு’ (D.K.Basu) வழக்கு வழி­காட்­டு­தல்­கள் மீறல்: உச்ச நீதி­மன்­றம் கைது மற்­றும் விசா­ரணை நடை­மு­றை­கள் குறித்து பிறப்­பித்த உத்­த­ர­வு­கள் அனைத்­தும் மீறப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விசா­ரிக்க வரும் காவ­லர்­கள் முறை­யான சீருடை மற்­றும் பெயர் விவர அட்டை (Name tag) அணிந்­தி­ருக்க வேண்­டும். ஆனால், இங்கு சீருடை அணி­யா­மல் சிவில் உடை­யில் வந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு­வரை விசா­ர­ணைக்கோ அல்­லது காவ­லுக்கோ அழைத்­துச் செல்­லும்­போது முறை­யான ஆவ­ணம் (Memo) தயா­ரிக்­கப்­பட்டு, அதில் நேரம்,  இடம் குறிப்­பி­டப்­பட்டு குடும்­பத்­தி­ன­ரின் கையொப்­பம் பெறப்­பட வேண்­டும். இங்கு எவ்­வித ஆவ­ண­மும் வழங்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">o</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவ­லில் எடுக்­கப்­ப­டும் நபர் தனது குடும்­பத்­தி­ன­ருக்கோ அல்­லது வழக்­க­றி­ஞ­ருக்கோ உட­ன­டி­யா­கத் தக­வல் தெரி­விக்க உரிமை உண்டு. ஆனால், இவ­ரது கைபேசி பறிக்­கப்­பட்டு, குடும்­பத்­தி­ன­ருக்­குத் தெரி­விக்க வாய்ப்பு மறுக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முறை­யான அழைப்­பாணை இன்மை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">7 ஆண்­டு­க­ளுக்­குக் குறை­வான  தண்­ட­னைக்­கு­ரிய குற்­றச்­   சாட்­டு­க­ளுக்கு (குறிப்­பா­கச் சமூக வலை­த­ளக் கருத்­து­கள், அவ­தூறு வழக்­கு­கள்)  ஒரு­வ­ரைக்  கைது செய்­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அதற்­குப் பதி­லாக விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­கக்­கோரி முறை­யான அழைப்­பாணை (Notice under Section 41A CrPC / Sec 35 BNSS) வழங்­கப்­பட வேண்­டும். எந்­த­வித முன் அறி­விப்போ, எழுத்­துப்­பூர்வ சம்­மனோ இன்றி அதி­காலை 5 மணிக்கே வலுக்­கட்­டா­ய­மாக அழைத்­துச் சென்­றது முற்­றி­லும்      சட்­ட­வி­ரோ­த­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அர்­னேஷ் குமார் (Arnesh Kumar) வழக்கு வழி­காட்­டு­தல்­கள் மீறல்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உரிய ஆதா­ரங்­கள் மற்­றும் வலு­வான கார­ணங்­கள் இல்­லா­மல் இயந்­தி­ரத்­த­ன­மா­கக் கைது                செய்­யவோ அல்­லது காவ­லில் வைக்­கவோ கூடாது என்ற உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­புக்கு எதி­ராக இது அமைந்­துள்­ளது. புகா­ரின் உண்­மைத்­தன்­மை­யையோ அல்­லது கணக்­கின் உரி­மை­யா­ள­ரையோ உறு­தி­செய்­யா­மல் நேர­டி­யா­கக் காவ­லில் எடுக்க முயன்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அடிப்­படை உரி­மை­கள் மறுப்பு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு­வரை எந்­தக் குற்­றச்­சாட்­டின்­கீழ் காவல் நிலை­யத்­திற்கு அழைத்­துச் செல்­கி­றார்­கள் என்­ப­தற்­கான முதல் தக­வல் அறிக்கை (FIR) நகலோ  அல்­லது பெறப்­பட்ட புகா­ரின் நகலோ அவ­ரி­டம் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை. இது ஒரு குடி­ம­க­னின் அடிப்­படை உரி­மை­க­ளுக்கு எதி­ரா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தனி­யார் வாக­னப் பயன்­பாடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சுப் பணி நிமித்­த­மா­கவோ        அல்­லது விசா­ர­ணைக்­கா­கவோ ஒரு­வரை அழைத்­துச் செல்­லும்­போது அர­சுக்­குச் சொந்­த­மான காவல் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வதே வழக்­கம். ஆனால், தனி­யார்வாட­கைக் காரைப் (Rented car) பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பது சந்­தே­கத்­திற்­கு­ரிய மற்­றும் விதி­மீ­ற­லான நடை­ மு­றை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­ட­வி­ரோத அடைத்து வைத்தல்(Wrongful Confinement):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முறை­யான கைது நடை­மு­றை­கள் ஏது­மின்றி, ஒரு­வ­ரின் நட­மாட்ட சுதந்­தி­ரத்­தைப் பறித்து, காரி­லேயே 45 நிமி­டங்­க­ளுக்­கும் மேலா­கச்சாலை­யோ­ரம் நிறுத்­தி­வைத்­திருந்­தது இந்­தி­யத் தண்­ட­னைச் சட்­டப்­படி “சட்­ட­வி­ரோ­த­மாக அடைத்து வைத்­தல்” என்ற குற்­றத்­தின்­கீழ் வரக்­கூ­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பறி­மு­தல் மக­ஜர் இன்மை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டிஜிட்­டல் சாத­னங்­கள் அல்­லது கைபே­சி­களை விசா­ர­ணைக்­கா­கப்பறி­மு­தல் செய்­யும்­போது, அதற்­கான முறை­யான “பறி­மு­தல் மக­ஜர்”     (Seizure Mahazar) தயார் செய்­யப்­பட்டு அவ­ரி­டம் கையொப்­பம் பெறப்­பட வேண்­டும். எவ்­வி­தப் பதி­வும் இன்றி கைபே­சி­யைப் பறித்­துக்­கொண்­டது சட்­ட­மீ­ற­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">போலி கணக்­கு­க­ளும் காவல்­துறை அரா­ஜ­க­மும்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு போலி கணக்கை வைத்து ஒரு­வ­ரைக் காவல்­துறை விசா­ரணை என்ற பெய­ரில் துன்­பு­றுத்த முடி­யும் என்­பது மிக ஆபத்­தான போக்­கா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இணை­யத்­தில் ஒரு புகா­ரில் ஒரு­வ­ரின் புகைப்­ப­டம் அல்­லது பெயர் இடம்­பெற்­றி­ருக்­கி­றது என்ற ஒரே கார­ணத்­திற்­காக, அந்த நபரே குற்­ற­வாளி என்ற முடி­வுக்­குக் காவல்­துறை வந்­து­விட முடி­யாது. தக­வல் அறி­யும் நோக்­கில் அல்­லது உண்­மை­        நி­லை­யைக் கண்­ட­றிய CrPC பிரிவு 41A (அல்­லது BNSS பிரிவு 35) கீழ் எழுத்­துப்­பூர்வ சம்­மன்அனுப்பி, விளக்­கம் கேட்க மட்­டுமேகாவல்­து­றைக்கு அதி­கா­ரம் உண்டு. போலி கணக்­கில் உள்ள படத்­தைப் பார்த்த மாத்­தி­ரத்­தி­லேயே ஒரு­வ­ரைக் குற்­ற­வா­ளி ­யா­கக் கருதி, அதி­காலை வேளை­யில் பிடித்­துச் செல்­வதோ அல்­லதுகாவ­லில் வைப்­பதோ சட்­டப்­படி முற்­றி­லும் தவ­றா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சமூக ஊட­கங்­க­ளில் முகப்­புப் படத்தை (Profile Picture) யார் வேண்­டு­மா­னா­லும் பதி­வி­றக்­கம் செய்து மற்­றொரு பெய­ரில் கணக்கு தொடங்க முடி­யும். எனவே, வெறும் ‘ஸ்கிரீன்­ஷாட்’ என்­பது முதற்­கட்­டத் தக­வல் (Lead) மட்­டுமே தவிர, சட்­டத்­தின் முன் அது குற்­றத்தை நிரூ­பிக்­கும் உறு­தி­யான முதன்மை ஆதா­ரம் (Substantive Evidence) அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தக் கணக்குகுறிப்­பிட்ட 
நப­ருக்­குத்­தான் சொந்­த­மா­னது 
என்­பதை நிரூ­பிக்­கக் காவல்­துறை பின்­வ­ரும் தொழில்­நுட்­பத் தர­வு­ க­ளைச் சேக­ரிக்க வேண்­டும்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1. மெட்டா (Meta/Instagram) நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து அந்த குறிப்­பிட்ட கணக்­கைத் தொடங்­கப் பயன்­ப­டுத்­திய ஐ.பி. (IP) முக­வரி, பதிவு செய்­யப்­பட்ட தொலை­பேசி எண், மின்­னஞ்­சல் முக­வரி ஆகி­ய­வற்­றைப் பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2.	பதி­வி­டப்­பட்ட நேரத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட சாத­னம் யாரு­டை­யது என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3. இந்­தி­யச் சாட்­சி­யச் சட்­டத்­தின் கீழ், எந்­த­வொரு மின்­னணு ஆதா­ரத்­தை­யும் நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பிக்க முறை­யான 65B சான்­றி­தழ் (தற்­போது பார­திய சாட்­சிய அதி­நி­யம்  BSA கீழ் தொடர்­பு­டைய பிரிவு) சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொழில்­நுட்ப  ரீதி­யாக  ஐ.பி.         முக­வரி அல்­லது சாத­னத் தொடர்பு அந்த நப­ரு­டன் இணை­யாத வரை, ஒரு போலி கணக்­கையோ அல்­லது அதன் ஸக்க்­ரீன்­ஷாட்­டையோ வைத்து ஒரு­வ­ரைக் குற்­ற­வா­ளி­ யா­கச் சட்­டத்­தின் முன் நிறுத்த        முடி­யாது. இந்த நடை­மு­றை­க­ளைத் தவிர்த்து நேர­டி­யாக நட­வ­டிக்கை எடுப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">‘சில்­லிங் எஃபெக்ட்’ (Chilling Effect) என்­னும் அச்­சு­றுத்­தல் உத்தி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சி­யி­னர்  மற்­றும்  விமர்­ச­கர்­கள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடுப்­ப­தும், ஆளுங்­கட்­சி­ யி­னர் மீதான புகார்­க­ளில் தாம­தம்அல்­லது பாரா­மு­கம் காட்­டு­வ­தும்,அதி­காலை மற்­றும் இர­வோடு இர­வா­கக் கைது­கள் செய்து தூரத்து ஊர்­க­ளுக்கு அழைத்­துச் சென்று மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­து­வ­தும், கடு­மை­யான சட்­டப் பிரி­வு­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தும் த.வெ.க. அர­சின் வழி ­மு­றை­யாக மாறி­யுள்­ளது. ஒன்­றி­யத்­தில் இருக்­கும் பா.ஜ.க. அர­சுக்­கும், தமி­ழ­கத்­தில் இருக்­கும் த.வெ.க. அர­சுக்­கும் இதில் நோக்­கங்­க­ளும் வழி­மு­றை­ க­ளும் ஒன்றே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சி­யி­னர், விமர்­ச­கர் ­கள் அல்­லது பொதுக் குடி­மக்­கள் மீது  அரசு  இயந்­தி­ர­மும் காவல்­து­றை­யும் சட்ட நெறி­மு­றை­ க­ளைத் தாண்­டித் தன்­னிச்­சை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது, ஜன­நா­யக அமைப்­பின் சம­நி­லையை நேர­டி­யா­கக் குலைக்­கக்­கூ­டி­யது. இது திட்­ட­மிட்ட அச்ச உணர்வை உரு­வாக்­கும் நோக்­கத்­தைக் கொண்­டி­ருப்­ப­து­டன், ஆழ­மான அர­சி­யல், சமூக மற்­றும் உள­வி­யல் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. சட்­டத்­து­றை­யி­லும் அர­சி­ய­ல­றி­வி­ய­ லி­லும் இதனை“சில்­லிங் எஃபெக்ட்” (Chilling Effect - அச்­ச­மூட்டி உறை­ய­வைக்­கும் உத்தி) என்­பார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சுயத் தணிக்கை உணர்வு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு குறிப்­பிட்ட நபர் மீது நடத்­தப்­ப­டும் அதி­காலை விசா­ரணை, பொது­         வெ­ளி­யில் கைது அல்­லது சட்­ட­வி­ரோ­ தக் காவல் என்­பது அந்­தத் தனி­ ந­பரை மட்­டும் குறி­வைப்­பது அல்ல. அவ­ரைப் போன்ற பிற விமர்­ச­கர்­  கள், பொதுக் குடி­மக்­கள் மற்­றும்      பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு “எதிர்த்­துப் பேசி­னால் உங்­க­ளுக்­கும் இது­தான்கதி” என்ற மறை­முக எச்­ச­ரிக்­கையைஅனுப்­பு­வதே இதன் முக்­கிய உத்­தி­யா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது. இதன் மூலம் பொது­மக்­கள் அர­சின் குறை­க­ளைச்  சுட்­டிக்­காட்­டத்  தயங்கி, தங்­க­ளைத் தாங்­களே தணிக்கை (Self-Censorship) செய்­து­கொள்­ளும் சூழல் உரு­வா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அதி­கா­ரக் குவிப்­பும் அர­சி­யல் வன்­ம­மும்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆரோக்­கி­ய­மான ஜன­      நா­ய­கத்­தில் எதிர்க்­கட்­சி­க­ளின் பணி ஆளுங்­கட்­சி­யைத் தவ­று­க­ளில் இருந்து தடுத்து நிறுத்­து­வது. எதிர்க்­கட்­சி­கள் மீதான இத்­த­கைய அழுத்­தங்­கள், சட்­ட­மன்­றத்­திற்கு வெளி­யி­லான அர­சி­யல் விவா­தங்­களை முடக்கி, ஒரு­த­லைப்­பட்­ச­மான அதி­கா­ரக் குவிப்­பிற்கு வழி­வ­குக்­கும். அரசு நிர்­வா­கம் நடு­நி­லை­யா­ன­ தா­கப் பார்க்­கப்­ப­டா­மல், பழி­வாங்­கும் கரு­வி­யா­கப் பார்க்­கப்­ப­டும்­போது, கட்­சித் தொண்­டர்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்­வும் அர­சி­யல் வன்­ம­மும் தீவி­ர­ம­டை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முடி­வில்லா நச்­சுச் சுழற்சி (Vicious Cycle):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்று ஆளும் தரப்பு கையா­ளும் தன்­னிச்­சை­யான முறை­கள் ஒரு தவ­றான முன்­னு­தா­ர­ண­மாகி, நாளை ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டும்­போதுஅடுத்த அர­சும் அதே பழி­வாங்­கும் உத்­தி­களை  முந்­தைய  ஆளுங்­கட்­சி­யி­னர் மீது பிர­யோ­கிக்­கும் முடி­வில்லா நச்­சுச் சுழற்­சியை உரு­வாக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மக்­க­ளின் அதி­ருப்­தி­யும் காவல்­துறை மீதான நம்­பிக்கை இழப்­பும்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">குறு­கிய கால நோக்­கில் விமர்­ச­னங்­களை அடக்­கி­னா­லும், நீண்­ட­கால நோக்­கில் அர­சின் மீது மக்­க­ளுக்கு அதி­ருப்­தி­யும், பழி­வாங்­கும் அரசு என்ற பிம்­ப­மும் வலுத்­துத் தேர்­தல் களத்­தில் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும். 
சட்­டம் ஒழுங்­கைப் பாது­காக்கவேண்­டிய காவல்­துறை, அர­சி­யல்­வா­தி­க­ளின்   தனிப்­பட்ட   ஏவ­லர்­க­ளா­கச் செயல்­ப­டு­கி­றார்­கள்என்ற எண்­ணம் சமூ­கத்­தில் பர­வும்­போது, எளிய மக்­க­ளுக்­குக் காவல்­து­றை­யின் மீதுள்ள பாது­காப்பு உணர்­வும் மரி­யா­தை­யும் போய்­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•	</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சமூக மற்­றும் உள­வி­யல் பாதிப்­பு­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சமூ­கப் பிரச்­சி­னை­கள், ஊழல், நிர்­வா­கச் சீர்­கே­டு­கள் குறித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசும் சமூக ஆர்­வ­லர்­கள், கல்­வி­ யா­ளர்­கள் மற்­றும் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அச்­சத்­தின் கார­ண­மாக அமை­தி­யாகி விடு­வர். போலி கணக்­கு­க­ளைத் தொடங்கி யாரை­யும் எளி­தில் வழக்­கு­க­ளில் சிக்­க­வைக்க முடி­யும் என்ற தவ­றான முன்­னு­தா­ர­ணம் சமூ­கத்­திற்­குள் பரவி, இணை­ய­வெளி தனி­ந­பர்  விரோ­தங்­களை  முடித்­துக்­கொள்­ளும் ஆபத்­தான            கள­மாக மாறும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தனி­ந­பர் மற்­றும் குடும்­பத்­தின் மீதான வன்­முறை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதி­காலை வேளை­யில் தூக்­கத்­தில் இருந்து இழுத்­துச்   செல்­லப்­ப­டு­வது,  குடும்­பத் ­தி­னர் முன் குற்­ற­வா­ளி­யா­கக் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வது ஆகி­யவை ஒரு மனி­த­னுக்­குக் கடு­மை­யான மன உளைச்­ச­லை­யும், தன்­மா­னச் சிதை­வை­யும் (Humiliation) ஏற்­ப­டுத்­தும். தமக்­குத் தொடர்பே இல்­லாதகுற்­றத்­திற்­கா­கக் காவல்­து­றை­யால் இழுத்­த­டிக்­கப்­ப­டு­வது ஆழ்ந்த         பாது­காப்­பற்ற உணர்வை உண்­டாக்­கும். சம்­பந்­தப்­பட்ட நபரை விட        அவ­ரது குடும்­பத்­தி­னர், வய­தான பெற்­றோர், குழந்­தை­கள் ஆகி­யோர் தொடர் பதற்­றத்­தி­லும் அச்­சத்­தி­லும் வாழும் நிலைக்­குத் தள்­ளப்­ப­டு­வர். இது குடும்­பத்­திற்­குள் அவரை அர­சி­ய­லில் இருந்தோ அல்­லது சமூ­கக் கருத்து சொல்­வ­தி­லி­ருந்தோ வில­கச் சொல்­லும் அழுத்­தத்தை உரு­வாக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அச்ச மன­நிலை (Paranoia):</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூக வலை­த­ளப் பய­னர்­கள் மற்­றும் பொது­மக்­கள் தாங்­கள் சாதா­ர­ண­மா­கப் பதி­வி­டும் அர­சி­யல் கருத்­து­ க­ளுக்­குக் கூடக் கைது செய்­யப்­ப­ட­லாம் என்ற “அச்ச மன­நி­லைக்கு” ஆளாகி, பொது விவா­தங்­க­ளி ­லி­ருந்து முழு­மை­யாக ஒதுங்­கு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி விமர்­ச­னங்­களை அச்­சு­றுத்­த­லின் மூலம் தற்­கா­லி­க­மாக ஒடுக்க முடிந்­தா­லும், அது நிறு­வ­னங்­க­ளின் நம்­ப­கத்­தன்­மை­யை­யும் ஜன­நா­ய­கத்­தின் அடிப்­ப­டைத் தூண்­க­ளை­யும் உள்­நோக்கி அரித்­துச் சிதைத்­து­ வி­டும் என்­பதே வர­லாற்­றின் பாட­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வல­து­சாரி பா.ஜ.க. அர­சுக்கு எதி­ரா­கப் பேசி­னார்­கள் என்­ப­தற்­காக எழுத்­தா­ளர்­கள், கல்­வி­யா­ளர்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், சமூக செயல்­பாட்­டா­ளர்­கள் என ஸ்டான் சுவாமி, பேரா­சி­ரி­யர் ஆனந்த் டெல்­டும்டே, புகழ்­பெற்ற  மனித   உரிமை   வழக்­க­றி­ஞர் சுதா பரத்­வாஜ், பேரா­சி­ரி­யர் சோமா சென், வெர்­னான் கோன்­சால்வ்ஸ், அருண் ஃபெரீரா, கௌதம் நவ்­லகா, உமர் காலித், ஷர்­ஜீல் இமாம், மீரான் ஹைதர், கலீத் சைஃபி, அதீக் உர்­ரஹ்­மான், சித்­திக் கப்­பான், ஃபஹத் ஷா, சஜித் குல் மற்­றும் பிர­பீர் புர்­க­யஸ்தா எனப் பல­ரும் கொடூ­ர­மான UAPA சட்­டத்­தின் பிரிவு 43D(5) மூலம் பிணை­யில்­லா­மல் நீண்ட காலம் சிறை­வா­சம்  அனு­ப­வித்­தி­ருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. அரசு இப்­போது இந்த வழி­யில்­தான் சென்­று­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>